X
Advertisement

தொடரும் அதிகார வர்க்கம்: பிரதமர் மோடி கவலை

புதுடில்லி: ஆங்கிலேயே ஆட்சி காலத்திலிருந்து அதிகார வர்க்க முறை பிரச்னையாக நீடித்து வருகிறது என பிரதமர் மோடி பேசினார்.

பொது சேவை விழாவை முன்னிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: விதிமுறைகளை மற்றவர்கள் பின்பற்றுகின்றனரா என பார்க்காமல், மக்களை உயர்வடைய செய்ய வேண்டும். நமது அனுபவமானது, பெரும் சுமையாக மாறக்கூடாது. ஆங்கிலேய ஆட்சி காலத்திலிருந்து அதிகார வர்க்க முறையை கடைபிடித்து வருகிறோம். அப்போது முதல் இது பிரச்னையாக நீடித்து வருகிறது. சமூக வலைதளங்களின் சக்தியை நான் புரிந்து கொண்டுள்ளேன். இதனை மக்கள் நலனுக்கு பயன்படுத்த வேண்டும். அதிகாரிகளின் ஆலோசனைகளை, எந்த சீர்திருத்த கமிஷன் அறிக்கையும் மாற்றாது. சீர்திருத்தம் செய்ய அரசியல் தேவைப்படுகிறது. இதற்கு தடையாக நான் இருக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (42)

  • Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    IAS அதிகாரிகள் தனது வரம்பிற்குள் உள்ள அதிகாரத்தை துணிந்து செய்வதில்லை.அமைச்சர்களின் விருப்பத்திற்காக தங்கள் அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்து மக்கள் நலப்பணிக்கு பதிலாக அரசியல் ஆட்சியாளர்களின் ஆணைகளை பிரதிபலித்து இருக்கிறார்கள். Modi can not change 80% of such people unless they change themselves. Why not Mr. Modi imposes'Emergency Rule' at least for two years for tem correction as done by Indira Ghandhi. Also repeal many laws under which corruptible people has shelter. Also implement Single window tem for business through on line. File movement through video conference for taking decision to avoid delay.Delay is the cause of corruption

  • Venkataraman Sekkar - Trivandrum,இந்தியா

    Bureaucracy is fundamentally is not a bad word. In fact this IAS/ICS tem is one of very few boons left behind the British tem. Politicians can make policy decisions but the fruits of such go to people only through bureaucracy. Just blindly bashing them is correct. Still a lot of sincere IAS officers are around us. Good officers were made bad ones by the corrupt political masters. Modi should not be seen bashing IAS cadres.

    • Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா

      வருத்தம் வாய் அளவில் இருக்க கூடாது செயலில் இருக்கனும் ஆகையால் முதலில் லோகிபோல் லோக் அயுக்த மாநிலத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுங்கள் அப்பாஸுது தான் தங்கள் வருத்தத்திற்கு தீர்வு கிடைக்கும்

  • MANI DELHI - Delhi,இந்தியா

    ஒரு நண்பர் அழகாக எழுதியுள்ளார். தினமலரின் இந்த வாசகர் விமர்சன வாய்ப்பை நல்ல கருத்துகளை வாசகர்கள் கொடுக்க வேண்டும். நன்று நண்பரே. இன்று நடந்த மோடிஜியின் பேச்சு அரசு IAS அதிகாரிகளின் அணுகுமுறைகளை குறித்தானது. ஆங்கிலேய ஆட்சியில் இந்த அதிகார முறை வந்து இன்றும் அதை நாம் கடைபிடடிக்கிறார்கள் என்று அவர் வருத்தப்பட்டாலும் உண்மையிலேயே இந்த முறையால் மக்களின் தரம் மேம்பட்டுள்ளதா என்பது தான் கேள்வி. 1. IAS அதிகாரிகள் தனது வரம்பிற்குள் உள்ள அதிகாரத்தை துணிந்து செய்வதில்லை. 2. அமைச்சர்களின் விருப்பத்திற்காக தங்கள் அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்து மக்கள் நலப்பணிக்கு பதிலாக அரசியல் ஆட்சியாளர்களின் ஆணைகளை பிரதிபலித்து இருக்கிறார்கள். Example Recent former Chief Secretary of Tamil Nadu. 3. அதே சமயத்தில் நல்ல அதிகாரிகள் தைரியமாக முடிவெடுத்தால் எவ்வளவு இடைஞ்சல்களை கொடுக்க வேண்டுமோ கொடுத்து மக்களுக்கு நல்லதை செய்ய விடமாட்டார்கள். Good example is Mr.Sahayam IAS who has taken stubborn action against Mineral and Sand மாபியா என்னை பொறுத்தவரை அதிகாரிகளின் பண பேராசை தான் மக்கள் நலப்பணிகளுக்கு முட்டுக்கட்டை. மோடிஜி அணைத்து அதிகாரிகளுக்கும் தைரியத்துடன் மக்கள் சேவை செய்ய அறிவுறுத்தி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

  • kuppuswamykesavan - chennai,இந்தியா

    அரசு திட்டங்களில், 1% 2% என்று ஒரு காலத்தில் வாங்கப்பட்ட கமிசன் பணம் இன்றைக்கு 45% ஆக உயர்ந்துவிட்டதாக மீடியாக்களில் கூறப்படுகிறது. அதேபோல 5ரூபா 10ரூபா என்று இருந்த ஓர் ஓட்டுக்கு லஞ்சம் என்பது இப்போ 2000ரூபா என்றாகிவிட்டது. இந்த நிலமை மாறி, எங்கும் எதிலும் எவரிடமும் நேர்மை நியாயம் கறைபடியா கரங்கள்(ஊழலின்றி) என்று எப்போது ஒவ்வொரு இந்தியனும் இருக்கிறானோ, அப்போதுதான் இந்தியா பல விதங்களிலும் முன்னேற்றங்கள் காணும். நிழல் மறைவில் பல பல முறைகேடுகள் செய்பவர்கள் தன் சுயநலமிகுதியால், தனக்கு ஏதுவாக இருக்கும் ஒரு கட்சியை மற்றும் இயக்கத்தை தன் மனசாட்சியை அடகு வைத்து வக்காலத்து வாங்குகிறார்களே, இப்படிபட்ட வக்காலத்துகள் சரியா?.

  • ராம.ராசு - கரூர்,இந்தியா

    உண்மைதான்... "ஆங்கிலேய ஆட்சி காலத்திலிருந்து அதிகார வர்க்க முறையை கடைபிடித்து வருகிறோம். " என்பது உண்மைதான். ஆனால் நிர்வாகத்தில் வரம்பு மீறல் இல்லாத அதிகாரம் என்பது அவசியமே. ஆனால் நமது பிரதமர் சமுதாயத்தில் இருக்கின்ற அடக்கு முறையோடு கூடிய... சாதிய அதிகாரத்தப்பற்றி எதுவும் சொல்லுவது இல்லை. நேரமையான அரசும்..., அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் இருந்தால்... நிர்வாகத்தில் வரம்பு மீறிய அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால் அதிகாரிகளை, ஊழியர்களைக் கட்டுப்படுத்துவது என்பது மிக எளிதானது. ஆள்பவர்கள் தங்களது சுய நலத்திற்க்காக... பதவி ஆசிகளுக்காக அதிகாரிகளை பயன்படுத்தினால், அதிகாரிகளும் தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மீது அதிகாரம் செய்வது என்பது இயல்பாகிப்போகும். விமான ஊழியர்களை, சுங்கச் சாவடி ஊழியர்களை வரம்பு மீறிய அதிகாரத்தில் அடிக்கின்ற அரசியல்வாதிகள் உண்டு. தாங்கள் புனிதம் என்று சொல்லுவதை மற்றவர்கள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும்.... தங்களுக்கான உணவைக்கூட அரசியல்வாதிகள் நிர்மாணிக்கும் போக்கு... இதைப்பற்றியெல்லாம் நமது பிரதமர் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவே தெரிகிறது. இன்றைய சூழலில் உடனடியாக, மிக அதிகமாகத் தேவைப்படுவது "சமுதாய சீர்திருத்தம்". சகிப்புத் தன்மை இல்லாமல் சக உயிரான மனிதர்களையே அடிக்கும்போக்கும்... கொல்லுகின்ற போக்கும் அதிகரித்துள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது. விலங்குகளுக்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் கூட சக மனிதர்களுக்குக் கொடுக்கப்படுவது இல்லை என்பது வேதனையானது. அவரவர் விரும்புவதை மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் பயன்படுத்தும் அரசியல் அமைப்புச் சட்டம் இருந்தும்.. விரும்பி உண்ணும் உணவைக் கூட உண்பதற்கு கட்டுப்பாடுகள். மிகப்பெரிய பலம் உள்ளது என்பதால் எதையும் நடைமுறைப்படுத்தும் முயற்சி. என்ன சொல்ல... .

  • vedru.varada - vannarapettai.. ,பெலாரஸ்

    சரி சரி உடுங்க அவர் என்ன தெரிஞ்சா பேசுறார்? அவர் இன்னமும் பிரதமர் என்பதை அவரே உறுதிப்படுத்திக்க எதாவது உளறுவார்.. மங்கி பாத், சங்கி பாத், அப்புறம் இந்த மாதிரி நிகழ்ச்சிகள்.. பேசிட்டு போகட்டும் உடுங்க.. இன்னும் கொஞ்சம் நாள் தானே

    • sankaseshan - mumbai,இந்தியா

      அவர் உளறுகிறார் நீங்கள் எல்லாம் தெரிந்த புத்திசாலி .இது போன்ற செறிவுள்ள கருத்துக்களை சொல்ல முடிகிறது.

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    CBI யை சுதந்திரமாக செயல்பட விடுங்கள். பிறகு பாருங்கள் BJP யிலேயே எத்தனை கருப்பு ஆடுகள் வெளியில் வரும்.

  • K.Sugavanam - Salem,இந்தியா

    அரசியலாலும் அராஜகத்தாலும் சீர்திருத்தங்களை கொண்டுவந்ததாய் சரித்திரமே கிடையாது.

    • Krishnan - Coimbatore,இந்தியா

      ஆமாம் சுகவனம் சார், பாவாடை கும்பலின் ஆள் பிடிக்கும் அலைதல்களால் தான் சீர்திருத்தங்கள் வர முடியும்.

  • ganapati sb - coimbatore,இந்தியா

    காமராஜர் சாஸ்திரி மொராஜி வாஜ்பாய் மோடி யோகி போன்ற நேர்மையான அரசியல்வாதிகள் திட்டங்கள் எண்ணங்கள்கூட அதிகாரிகள் வழியே மக்களுக்காக செயல்படுத்தப்படுவதால் அதன் பலன் மக்களுக்கு குறையில்லாமல் சென்று சேர அதிகாரிகளின் அக்கறையான நேர்மையான செயல் திறன் மிக முக்கியம்

    • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

      சாஸ்திரி அவர்கள் ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்று முழக்கமிட்டார்கள். ஆனால் இன்று தமிழக விவசாயிகளின் டில்லி போர்ராட்டதை மத்திய அரசும் குறிப்பாக பிரதமர் மிடி அவர்களும் கண்டுகொள்வதில்லை. மோடி அவர்களின் ஜெய் டிஜிட்டல் இந்தியா ஸ்லோகனால் மக்களுக்கு பசி நீக்கும் தரமான உணவு கிடைக்குமா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். ஓன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும். அதாவது தொடர்ந்து பிஜேபி அரசு விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்காமலிருந்தால், இன்னும் 10 ஆண்டுகளில் இந்தையாவில் கண்டிப்பாக உணவும் பஞ்சம் (1960 இல் ஏற்பட்ட மாதிரி) ஏற்படும்.

  • vnatarajan - chennai,இந்தியா

    தினமலர் நேயர்களுக்கு கருத்துக்களை சொல்ல ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதனாலே இந்த வாய்ப்பை நல்லமுறையில் எடுத்துச்சொல்ல பயன்படுத்துங்க . சாணியை கரைத்து கொட்டினால் பரவாயில்லைப ஆனால் தயவு செய்து வேறு எதையும் கரைத்து கொட்டி நாற்றத்தை உண்டுபண்ணாதீங்க

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    பேசுகிறாரே மோதி ..... அரசு அதிகாரிகளை சுதந்திரமாகச் செயல்பட விடுமா பாஜக அரசு ???? குறிப்பாக அமலாக்கத் துறை அதிகாரிகளை ????

    • vedru.varada - vannarapettai.. ,பெலாரஸ்

      ஊருக்கு மட்டுமே உபதேசம்

    • sankaseshan - mumbai,இந்தியா

      உங்களை போன்றோரை திருப்பதி படுத்துவது கடினம் .இப்போதும் காங்கிரஸ் ஆட்சி காலத்து அதிகாரிகள் தான் குட்டையை குழப்பி கொண்டிருக்கிறார்கள் .

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    என்னைப்போன்ற சாதாரண மனிதர்கள் தினம் தினம் இதைப்பற்றி யோசிக்கின்றோம்? அதனால் ஒரு பயனும் இல்லை? நீங்கள் வானளாவிய அதிகாரத்தை கொண்டவர் பிரதம மந்திரி என்பதால்? சிவப்பு சுழல் விளக்கை நீக்கிய மாதிரி இன்னும் அதிரடி மாற்றம் கொண்டு வாருங்கள். 1 ) முதல் மந்திரியோ, முட்டாள் மந்திரியோ அவன் பின்னேயும் முன்னேயும் யாரும் செல்ல வேண்டிய அவசியமில்லை. 2 ) அரசியல் மக்கள் சேவை ஆனால் இப்பொழுது பண மூட்டை அடிக்கும் தொழிலாக மாறி இருக்கின்றது. இதை தடை செய்யுங்கள். அதாவது ஒரு தலையாட்டலில் ரூ.1000 கோடி டெண்டர் பாஸ் என்பதை நீக்கி ஒரு கமிட்டி அதில் கையொப்பம் இட்டு அதில் மந்திரி கையொப்பமிடவேண்டும் என்று சொல்லுங்கள். 3 ) சேவைக்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு என்றால் முட்டாள்தனமாக இல்லை?இந்த மாதிரி ஆங்கிலேயர் இந்தியரிடம் பயந்ததனால் எடுத்த எல்லா ஆடமபர விளம்பரங்களையும் தடை செய்யுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.

  • Valliappan - Chennai,இந்தியா

    கொஞ்சம் தமிழகத்தையும் குஜராத் போல முக்கியத்துவம் கொடுத்து நெடுவாசல், போன்றவற்றை நிறுத்துங்கள் தயவு செய்து..

  • Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்

    இதற்க்கு முன் எல்லாம் நல்லவிதமாக நடந்து இன்று மோடி வந்து கெடுத்து விட்டார் என நினைப்பார்கள் அடிமைத்தனம் ஒழியவில்லை என்பதற்கு சான்று ..மாறவே மாட்டோம் என்பவர்களை என்ன செய்ய .....??

  • sundaram - Kuwait,குவைத்

    ஆங்கிலேயே ஆட்சி காலத்திலிருந்து சில நல்ல முறைகள் பின்பற்றப்[பட்டன. அவற்றை உதாரணமாக ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது? இதற்கு முன்னர் பிரதமர்கள் இந்தியாவில் இருந்து ராஜ பரிபாலனம் செய்வார்கள். ஆனால், நமது பிரதமரோ வெளிநாட்டுக்கு செல்லும் ஆர்வத்தில் ஒரு துளியை கூட உள் நாட்டில் காட்டவில்லை. ரயில்வே கக்கூஸ் கூட கொரியா நாட்டில் இருந்து டாலர்களை கொடுத்து வாங்கவேண்டும் என்கிறார், அவை உள்ளூரில் கிடைக்கிறது என்பது தெரிந்தும். முன்பெல்லாம் பிரதமர் பாராளுமன்றத்தில் கொள்கை முடிவுகளை அறிவிப்பார்கள். அவை விவாதிக்கப்படும். தேவைப்பட்டால் மாற்றங்களுடன் அவை செயல்படுத்தப்படும். ஆனால்இன்றைய பிரதமரோ ரேடியோ நாடகத்தில் ஊமை வேஷம் போடுகிறார். முந்தைய பிரதமர்கள் விலைவாசியை குறைக்க முயற்சிப்பார்கள். ஆனால் இன்றைய பிரதமர் எப்படியெல்லாம் பெட்ரோல் டீசல் விலையை ஒரு நாளைக்கு மூன்று வேளை உயர்த்தி மற்ற விலைவாசியை உயர்த்தலாம் என்று கணக்கிடுகிறார். முந்தைய பிரதமர்கள் தன கட்சி உறுப்பினர்களை அடக்கி வாசிக்க வைத்திருந்தார்கள். ஆனால் இன்றைய பிரதமரின் கட்சி உறுப்பினர்கள் மாற்றுக்கட்சி தலைவர்களின் உடல் உறுப்புக்களுக்கு பகிரங்கமாக விலை நிர்ணயம் செய்கிறார்கள். அதை பிரதமரும் கண்டிப்பது இல்லை.

  • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

    ஒழிவு மறைவு இல்லாமல் ஆட்சி நடத்த தகவல் உரிமை சட்டம் காங்கிரஸ் அரசு கொண்டுவந்து , அதிகாரக்குவியலை தடுத்து ,அரசு துறையை மக்களிடம் கொண்டுவந்தது . இதில் லோக் பால் சட்டம் அதை செயல்படுத்த அமைப்பு வேண்டும் . மோடி இதை இன்னும் நடைமுறை படுத்தவில்லை . இதுல பிரதமரை கூட கேள்வி கேட்டு சிறை அனுப்பும் வாய்ப்பு இருக்கு . இதனால் மோடி அஞ்சி நடுங்குகிறார் . வாயில வடைசுட்டு இந்தியருக்கு அல்வா கொடுத்துட்டு இருக்கார் . வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சேர்த்து அனுப்பும் பணத்தில் அன்னியசெலவாணி குவிந்த காலம் மாறிக்கிட்டு இருக்கு . இங்கு வேலைதேடி வரும் இந்தியர்கள் அதிகமாக போகிறார்கள் . அவர்கள் இன்னொரு சூழலிலிருந்து இங்கு கிளம்பி வரவிருக்கிறார்கள் . அவர்கள் மோடியை தோலுரித்து காட்டுவார்கள் . வெளிப்படைத்தன்மை மறைக்கும் மோடி யார் என்பது , மோடி குவித்து வைத்திருக்கும் அதிகாரம் சீக்கிரம் தெரியவரும். இதுவரை சும்மா இருந்துவிட்டு , இவரு புதுசா எல்லாத்தையும் கொண்டுவரப்போவதாக , பதவிக்கு காத்திருப்பதாக பேசுவது , இனி எடுபடாது . ஒரு மாதத்தில் யோகி உ பி இல் ஏதோதோ செய்கிறார் . மோடி மூன்று வருடம் வெளிநாட்டு சுற்றுலா என்று இப்போதுதான் ஊர் திரும்பி இருக்கார் . இதுவரை IAS , IPS ,IFS ,IRS என்ன வேலை செய்கிறார்கள் எவ்வளவு காசு கொள்ளையாடுகிறார்கள் என்று இவருக்கு தெரியாது . கூட்டம் ,மேடை ,மைக் இருந்தால்தான் மோடிக்கு இது தெரியும் . எப்போ விடுதலை கிடைக்குமோ இந்தியாவுக்கு மோடி கூட்டத்திடமிருந்து

    • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

      வாக்குக்காக அராபிகளை காங்கிரஸ் ரொம்பவே கீழான நிலையில் வைத்துள்ளது... இவரது கருத்து அதற்க்கு நல்ல உதாரணம்... இவர் போன்றவர்கள் எதார்த்தை புரிந்துகொண்ட வளர வேண்டும்...

  • தமிழன் - SWISS,சுவிட்சர்லாந்து

    பிரதமர் பதவியேற்று 3 வருடம் ஆகிவிட்டது...அனைத்து மாநில முதல்வர்களை என்றாவது ஒருங்கிணைத்து, ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி பற்றி பேசியது உண்டா?.. இவருக்கு தான் வானளாவிய அதிகாரம் உள்ளது என்ற மமதை...

    • Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா

      ஐயா அனைத்து மாநில முதல்வர் கூட்டம் அடிக்கடி நடக்கிறது . தயவு கூர்ந்து இன்று இந்தியாவை வலி நடத்த உங்களுக்கு பிடித்த தலைவரை சொல்லுங்க ? 25 % மோடி செய்வது சரியில்லை என்றாலும் இன்றைய நிலையில் அவரை விட்டால் வேறு யாரும் இந்தியாவை வழிநடத்த இல்லை என்பது என் கருத்து.

    • Rajasekar - trichy,இந்தியா

      உன் கருத்துல சாணியை கரைச்சி ஊத்த.

    • vedru.varada - vannarapettai.. ,பெலாரஸ்

      கேட்ட கேள்விக்கு இதுவரை ஒழுங்கான பதில் மஸ்தான் கோஷ்டியிடம் கிடையாது.. அதன் சொம்புகளிடம் இருந்தும் கிடைக்காது

    • Krishnan - Coimbatore,இந்தியா

      இதை பார்றா, தமிழன் பச்சையும் வெத்து பாயும் பிரதமர் பெயரை கேட்ட உடனேயே செய்யுறதுக்கு பெயர் கேள்வி கேக்கிறதாம்? இங்குள்ள வாசகர்களுக்கு நன்றாக தெரியுமே இந்த இரண்டும் செய்வதெல்லாம் கருத்துங்கிற பெயரிலே உளறிக் கொட்டுவதுதான் என்று...

    • Indian - Bangalore,இந்தியா

      மோடி, PMO , நிதி ஆயோக் இணைந்து பிரகதி மெக்கானிசம் மூலமாக இரு வாரங்களுக்கு ஒருமுறை மத்திய, மாநில திட்டங்களை ஆய்வு, கண்காணிப்பு, சீரமைப்பு, வேகப்படுத்துகிறார்கள். அது போலவே வருடாவருடம் முதல்வர்கள் கூட்டம் நடத்துகிறார்கள்.

  • kumar - chennai,இந்தியா

    மோடி HATERS லாம் இப்ப இங்க வந்து கதறுவானுங்க....எங்கப்பா இருக்கீங்க எல்லாம் ?

    • nijan - chennai,இந்தியா

      மோடி சொம்புகள் எங்கு இருக்கிறார்களோ அங்கு நிச்சயம் மோடி haters இருப்பார்கள்.. ஏனென்றால் அவர்களுக்கு உண்மையை புரிய வைப்பதற்கு...

    • nijan - chennai,இந்தியா

      ஆங்கிலேயன் இருந்திருந்தா பாபர் மசூதியை எவனாவது இடிக்க புறப்பட்டிருப்பானா ???

    • Krishnan - Coimbatore,இந்தியா

      Nijan, நாட்டுக்கு வெளியே இருந்து வந்த மொகலாயன், பிரிட்டிஷ் இப்படி எவன் காலையாவது பிடிச்சு நக்குறதுதான் உங்க பிழைப்பா?

    • kumar - chennai,இந்தியா

      nijan..நாங்களாவது இந்தியனுக்கு ஆதரவு அளிக்குறோம் ..அனால் நீங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு ஆங்கிலேயன் கு சொம்பு அடிக்கிறீர்கள் ..இந்தியன் ஒற்றுமையாக இருந்திருந்தால் பாபர் மசூதி இங்கு கட்டி இருக்கு முடியாது ...

    • N.K - bochum,ஜெர்மனி

      மொகலாயருக்கு முன் ஆங்கிலேயன் இருந்திருந்தால் பாபரை மசூதியே கட்ட விட்டிருக்க மாட்டான்

    • K.Sugavanam - Salem,இந்தியா

      எல்லோரும்எதையாவது நக்கி கொண்டுதான் இருக்கிறார்கள்..கிருஷ்ணன் ஜி..நேற்று எதிரியை நக்கினவர்,இன்று நம்மையும் நக்க வருகிறார் என்றால் எல்லாம் பதவி ஆசை தானே.

  • Senguttuvan - Tamil,இந்தியா

    திருவனந்தபுரத்தில் நடந்த மத்திய, மாநில உறவுகள் பற்றிய கருத்தரங்கில் பேசிய பினராய் விஜயன் கூறியதாவது:- ஒரு முதல்-அமைச்சர் பிரதமரை அனுகி மாநிலத்தின் தேவைகளை எடுத்துக் கூறினால் அதை கேட்டு நிறைவேற்றிக் கொடுப்பது பிரதமரின் கடமை. ஆனால் மாநில விஷயத்தில் மத்திய அரசுடன் மோசமான அனுபவங்களே ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசு பலமாகவும், மாநில அரசு வளமாகவும் இருந்தால்தான் கூட்டாட்சி முறை நிலைக்கும். ஆனால் மத்திய அரசு மாநில அரசுகளின் அதிகாரங்களை பறித்து வருகிறது. மாநிலங்களின் நலன்களை கருதாமல் சார்க் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களில் மத்திய அரசு கையெழுத்து போட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்ததுபோல மாநிலங்களை காலனி போல பிரதமர் மோடி நடத்துகிறார். மாநிலங்கள் நிறைவேற்றிய பல்வேறு சட்ட விதிகளை கவர்னர்களும், ஜனாதிபதியும் நிராகரிக்கும் நிகழ்வுகளும் அதிகரித்து விட்டது. பல்வேறு வகையான விதிமுறைகளை மத்திய அரசு மாநிலங்கள் மீது திணிக்கிறது. மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ். போன்று செயல்படுகிறது. மாநிலங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு அதை செயல் படுத்தாமல் அதிகாரங்களை குவித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    • sundaram - Kuwait,குவைத்

      பினராய் விஜயன் பேசிட்டாரா, நாளைக்கே அவரு தலைக்கும் ஒரு பத்து லட்சம் வெலை வச்சுடலாம்.

    • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

      மாநில அரசுகளின் சுயநலப்போக்கு மிகவும் அதிகரித்துள்ளது என்பதும் உண்மையே .. தனது கட்சி அல்லது தனது விருப்ப அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தால் மாநிலஅரசுகள் நிறைய சாதிக்கலாம் என்பது மிகவும் தவறானது.. அப்படியென்றால் திமுக காங்கிரஸ் கூட்டணிபத்து ஆண்டுகள் என்ன செய்ய முடிந்தது.. மத்திய -மாநில அரசு உறவுகள் மம்தா, கெஜ்ரிவால் போன்ற முதல்வர்களை வைத்துக்கொண்டு எப்படிமேம்படுத்த படமுடியும்... இங்கும் மோடி எதிர்ப்பாளர்கள் மோடி தான் காரணம் என்று கூறுவார்கள்.. மத்திய அரசு சமீப காலத்தில் என்ன என்ன அதிகாரங்களை மாநில அரசுகளிடமிருந்து பறித்துள்ளது ? ஜிஸ்டி, ஆதார் பண மதிப்பிழப்பு போன்றவை முழுக்கவும் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டே நடந்துள்ளன .. மாநில அரசுகள் செயல்படாமல் மத்திய அரசின் மீது குற்றம் சுமத்துவது குறிப்பாக தமிழகத்தில் .. சாதாரணமாக நடந்து வரும் விஷயம்.. கம்யூனிஸ்டுகளை பற்றி சொல்லவே தேவை இல்லை .. சண்டை போடுவது தான் அவர்களின் சித்தாந்தத்தில் வலியுறுத்த படாமல் பின்பற்ற பட்டுவருகிற முக்கிய அம்சம்.. உலகில் உள்ள கம்யூனிச நாடுகள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளனரா ? பிரனாயி விஜயன் பேசிவிட்டால் மட்டுமே அது உண்மையாகி விடுமா என்ன ? ஏன் அவரது ஆட்சி ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது அவரது கட்சியினர் செய்து வரும் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை ?

    • Selvam Chennai - Chennai28,இந்தியா

      நீட் தேர்வு, நெடுவாசல், மீத்தேன் என அடுக்கிகொண்டே போகலாம்

    • Pasupathi Subbian - trichi,இந்தியா

      இப்படி எதையோ சொல்லி, அதில ஆபத்து இருக்கும்,இதில ஆபத்து இருக்கும் என்று பயமுறுத்துவதே பல பிற்போக்குவாதிகளின் வழக்கம். இதில் மயங்கி நவீனத்தை மறந்துவிடுகிறோம் நாம். உண்மை பொய் என்ற விபரங்களை ஆராய்வதே கிடையாது. மூர்க்கத்தனமாக தாங்கள் எடுத்த முடிவுகளை பரிசீலனை செய்தால் மட்டுமே நாமும் மேம்பட முடியும்.

    • Indian - Bangalore,இந்தியா

      நீட் தேர்வு உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி நடக்கிறது. இதையாது தெரிந்து கொள்ளுங்கள். Methane திட்டத்தில் எப்படி மாநிலஅரசின் அதிகாரம் பறிக்கப்பட்டது?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement