Advertisement

ஓ.பி.எஸ்.,உடன் பேச குழு அமைப்பு

சென்னை: ஓ.பி.எஸ்., அணியுடன் பேச வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி கூறினார்.

ஆலோசனை:முதல்வர் பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக ஆலோசனை நடந்ததது.

ஒற்றுமைபின்னர் அமைச்சர் வேலுமணி கூறுகையில், அதிமுக இரு அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பி.எஸ்., அணியுடன் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா எம்.பி., வைத்திலிங்கம் தலைமையிலான இந்த குழுவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஓ.பி.எஸ்., அணியினர் இன்றே பேச்சுவார்த்தைக்கு வந்தாலும் தயாராக உள்ளோம். தேவையின்றி பேட்டி கொடுக்க வேண்டாம் என முதல்வர் கூறியுள்ளார். அனைவரும் ஒற்றுமையாக இருந்து, இரட்டை இலை சின்னம் மீட்கப்பட வேண்டும். அதிமுக ஆட்சி மற்றும் கட்சி நீடிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (39)

 • kumar - chennai,இந்தியா

  ஒரு கற்பனையான ஐடியா தோன்றுகிறது. புரிந்தவர் எடுத்து கொள்ளட்டும். தற்பொழுது இணைப்பை தள்ளி போடுங்கள். பஞ்சாயத் தேர்தலை இணைப்பின்றி சந்தியுங்கள் (தொப்பி மற்றும் இரட்டை மின் கம்பம் சின்னத்தில்) சசி மற்றும் தினகரனை முழுவதும் தள்ளி வையுங்கள். எந்த அணி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறதோ அந்த அணிக்கு ஒரு கவுரவம் கிடைக்கும்.

 • நரி - Chennai,இந்தியா

  அட போங்கப்பா ...சிந்துபாத் கதை மாதிரி இழுத்துகிட்டே போறீங்களே ...சுப மங்களம் பாடுங்கோ

 • kuppuswamykesavan - chennai,இந்தியா

  ஒரு அணி பிரதிநிதி: ஏங்க பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?........... இன்னோரு அணி பிரதிநிதி: ஏங்க ஒரு வாழப்பழம் இங்கே இருக்கு இன்னொன்னு (வாழப்பழம்) எங்கங்க?......./// இதன் உள் அர்த்தம் வாசகருக்கு புரியும்.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  கன்னாபின்னான்னு நேத்து ஆளாளுக்கு "சந்தனம்" பூசிட்டு இன்னிக்கி கூடிப் பேசுறாங்களாம்? யாரை ஏமாத்துறீங்க.. மொதல்ல மன்னார்குடி மாபியாவை தூக்கி எறிஞ்சிட்டு அப்பால உக்கார்ந்து பேசுங்க..

 • Soosaa - CHENNAI,இந்தியா

  Ennappa idhu ru masathula ru ani sera ithanai prachinaiya..Padhavi panam aasai yarai vittadhu. Ippadi ore katchiyin ru ani serave ippadi yral ru country Yoda varappu prachinai eppadi agum.

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  சென்னையை சுற்றி இருக்கும் நீர் தேக்கங்களில் இருக்கும் இருப்பு அடுத்த 25 நாட்களுக்கு மேல் வராது என்கிறார்கள். கூவத்தூர் வீரர்களும் ,தியான தலைவரின்குழுவும் என்னவோ தென் கொரியாவுக்கு வட கொரியாவுக்கும் நடக்கும் பேச்சு வார்த்தைகள் போல நீண்டுகொண்டே உள்ளது.பரஸ்பர நம்பிக்கை இன்மை,தேவையற்ற பேச்சுக்கள். பாதிப்பு பொது மக்களுக்குத்தான். பொதுமக்களும்பொறுமை இழந்து வருகிறார்கள்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஒருவருக்கொருவர் சகதியை அள்ளி பூசிக்கொண்டே பேசபோகிறார்களாம். மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

 • Maverick - Kanniyakumari,இந்தியா

  திருதராஷ்ட்ர ஆலிங்கனம்...நடக்க போவுது...சிவாஜி கையில சிக்கின அப்சல் கான் மாதிரி நம்ம பன்னீர் ஆயிர போறாரு...சூதனம்...

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  பன்னீர்செல்வம் பிஜேபி இன் ஆலோசனைப்படி தான் நடப்பார். இந்த பன்னீரில் உள்ள சிறிய ஊழல் கூட்டத்திடம் பேச வேண்டியதில்லை. இவர்களை அழைக்கும்போது எல்லாம் பேரம்பேசுவார்கள் .இவர்களை இனி அண்ணா தி மு க தொண்டர்கள் நம்பக்கூடாது.122 MLA களுடன் இருக்கும் கட்சிக்கு மக்கள் ஆதரவு உண்டு. பிஜேபி முடக்கி வைத்துள்ள இரட்டை இலையை பற்றி கவலைப்பட வேண்டாம். முதலில் கிராமம் கிராமம் ஆக சென்று உங்கள் நிலையை மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். MGR ஆல் உருவாக்கப் பட்ட கட்சியை பன்னீர்கொ டுத்தால் ஒன்று செய்ய முடியாது.

  • Maverick - Kanniyakumari,இந்தியா

   கர்த்தரே...இந்த ஜான் பைய்யனுக்கு பிஜேபி மேல ஏன் காண்டுன்னு தெரியலை...

 • Anand K - chennai,இந்தியா

  வேண்டாம் அரசு மற்றும் அரசு ஊழியர்கள் இவர்கள் சம்பளம் எல்லாம் நமது பணம் இவர்களுக்கு பல ஆயிரம் கோடி சம்பளம் நமது பணம் இவர்கள் மக்களுக்கு என்ன செய்கிறார்கள் உதாரணமாக தமிழ்நாடு அரசு மற்றும் உதவி பெரும் பள்ளிக்குள் படிக்கும் சில நூறு மாணவருக்கு மாதம் தோறும் பல லட்ச ரூபாய் சம்பளம் அதற்கு மாறாக அரசு ஒவ்வரு மாணவருக்கு அவரது அக்கௌன்ட் பணத்தை போட்டால் அவன் நல்ல பள்ளியுள் படித்து கொள்ளுவான் . அரசு பள்ளியுள் சரியாக பாடம் எடுப்பதில்லை என்னால் எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க முடியும் தனியார் பள்ளியுள் ஆசிரியர் சம்பளம் 4000 மட்டும் தான் அவர்கள் அளிக்கும் கல்வியியை அரசு ஆசிரியர் 1 PERCENT தருவதில்லை அரசு ஆசிரியர் சம்பளம் மாதம் 65000

 • Anand K - chennai,இந்தியா

  ஸ்ட்

 • kumar - chennai,இந்தியா

  இப்பொழுது நடக்கும் அதிமுக அரசியல் விளையாட்டு காலத்தின் கட்டாயம்.இரு அணிகளுமே ஒன்றை நினைவில் கொள்ளட்டும். இரட்டை இல்லை ஒன்று மட்டுமே வெற்றி கிடைக்க உத்தரவாதம் அல்ல. அந்த சின்னத்தை மறந்து, புரட்சி தலைவரை நினைத்து தேர்தலை சந்தியுங்கள். வெற்றி தோல்வியை மக்கள் தீர்மானிக்கட்டும் ,

  • ezhumalaiyaan - Chennai,இந்தியா

   மக்கள் நலனை மறந்தபிறகு வெறும் சின்னம் கைகொடுக்காது. தற்போது உள்ளவர்கள் நேற்று ஒரு ஆப் அறிமுகம் ஆனால் இன்றே அதை செயல்படுத்துபவர்கள். எந்த சின்னமாக இருந்தாலும் சின்னத்திற்கு மட்டும் மதிப்பு கிடையாது அந்த காலத்தில்.. MGR வயதான பாட்டி ஒருவரை அணைத்து ஆறுதல் சொல்லுவார். இந்த காலம் மாறிவிட்டது. வட்டத்திற்கு வெளியே வாருங்கள் அரசியல் வ்யாதிகளே.

  • Senthil - Chennai,இந்தியா

   நீங்கள் டெக்னாலஜிங்கிற வட்டத்தை விட்டு வெளியே வாங்க முதலில். எத்தனை பேர் App use பண்றங்க தமிழ்நாட்டில்? mgr காலத்து மாடல் vote தான் இன்றும் 90 % இருக்கிறது. உங்களுடைய வாட்ஸாப்ப் vote எல்லாம் எலெக்ஷன்ல்ல negligible

 • pandian k - Chennai,இந்தியா

  கூட்டு சேர்ந்து தமிழ்நாட்டை கொள்ளை அடிங்க

 • vikneshkv - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  புரியும் ஆனா புரியாது

 • vikneshkv - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  HAHAHAHAHAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHAAAAAAAAAAAAAAAAAAAAAAHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHQ

 • vikneshkv - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அடுத்த ரைட் மாபியா கும்பல் தலைவன் ஜெயக்குமார் நியூ தலைவர்

 • vikneshkv - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மண்டலம் என்பது முக்கியம் இல்லை இங்க

 • kumar - chennai,இந்தியா

  IPPOZHUDU

 • தமிழன் - SWISS,சுவிட்சர்லாந்து

  பேசாம ஒபாமா வ முதல்வராகிடுங்க... பாவம் சும்மா தான் இருக்கிறார்... அப்புறம் நம்ம ஊரு ஆளுங்க மாதிரி தான் இருக்கிறார்... இன பிரச்சினையும் வராது...

  • Maverick - Kanniyakumari,இந்தியா

   அடேய் பருப்பானவன்...மத பிரச்சினை வரும்.....

 • Balagiri - Chennai,இந்தியா

  துரை பெயர் மிஸ்ஸிங் , தம்பி துரைக்கும் டெல்லி போலீஸ் விருந்து அழைப்பிதழ் அனுப்புமோ? எங்கடா அந்த நாஞ்சில் சம்பத்? கள்ளு குடித்த குரங்கிற்கு தேள் கொட்டியது போல் உளறுவதற்கு

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

   சம்பத் வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் உழைக்கிறார் , சசி அண்ட் குரூப் நன்றாக கவனித்து விட்டார்கள் , ஓபிஸ் அவர்களை அவன், இவன் என்று மரியாதை இல்லாமல் தீட்டுவதில் இருந்தே தெரிய வருகிறது.

 • ARUN.POINT.BLANK -

  perfect example of RED TAPE is kuzhu amaithal 😂😂

 • தமிழன் - SWISS,சுவிட்சர்லாந்து

  சுடன் ஆ ? உடன் ஆ ?

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  @Kalyani if it is so these 122 MLAs can as well join OPS faction.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  முன்பு விஸ்க்கி காந்துக்கும் இதேபோல் கிராக்கி இருந்தது...

 • kurinjikilan - Madurai,இந்தியா

  வேலைக்காகாது.. முதலில் மாபியாவை ஓரங்கட்ட பாருங்கள்..உங்கள் பிரிவில் மாபியாவின் விசுவாசிகள் இன்னும் இருக்கிறார்கள் .. அவர்கள் நீங்கள் ஒன்று சேர்வதை விரும்பமாட்டார்கள்..நாட்டை ஏமாற்ற எதோ குழு என்பதை அமைப்பதை விட்டுவிட்டு முதலில் மாபியா கூட்டத்தை விரட்டுங்கள்..நீங்கள் சசி யை தவறுதலாக தேர்வு செய்தீர்கள்..சசியும் EPS ஐ தவறுதலாக தற்காலிகமாக தேர்வு செய்தார்..நீங்கள் இருவர் செய்ததற்கும் சட்ட அங்கீகாரம் இல்லை..நாளை சசி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என வரும்..பன்னீர் அணி மிகவும் சூதானமாக REACT பண்ணனும்..முதலைக்கண்ணீரை நம்புவதை விட்டுவிட்டு மக்களை நேரில் சந்திக்கவும்..இப்போதைய நிலைமையில் DMK யை விடவும் பன்னீருக்கு மக்களிடையே செல்வாக்கு உள்ளது..அவைத்தலைவர் மது சூதனனை விட்டு பொது செயலாளர் தேர்வுக்கு தேர்தல் நடக்கட்டும்..நிச்சயம் பன்னீர் தான் ஜெயிப்பார்..ஜெயக்குமார் மற்றும் சண்முகம் போன்றோர் தான்தோன்றித்தனமாக பேசுவர் / அறிக்கை விடுவர்..நேரம் கடத்த வேண்டாம்..கொள்ளையடித்தவரெல்லாம் அதன் பலனை அனுபவிக்கும் நேரம் வந்து விட்டது..

  • SANKAR - calgary,கனடா

   ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரையாம் ... எம் ஜி ஆர் ..ஜெயலலிதா போன்ற வானளாவிய தலைவர்கள் இருந்த இடத்தில் பன்னீர்....? நினைத்தாலே சிரிப்பு வருகிறது...

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  என்ன பேச போறீங்க? யாருக்கெல்லாம் மந்திரி பதவி, யாருக்கு வெறும் பெட்டி மட்டும் என்று தானே?

  • Maverick - Kanniyakumari,இந்தியா

   யாரை காவு குடுத்து ரெட்டை இலை சின்னத்தை வாங்கலாம் ன்னு பார்க்கிறானுங்க....."பிள்ளை முழிக்கிற முழிய பார்த்தே தாய் கண்டு புடிச்சிருவாள் அது ஆய் போவத்தான்" ன்னு ....இவனுங்க அவ்வளவு பேரும் மலை முழுங்கிகள்...மக்களுக்கு தெரியாதா..ஏன் ரெண்டு கும்பலும் ஒண்ணா சேர முயற்சிக்கிறானுங்க ன்னு...

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

   இரட்டை இலை பெற்றாலும் இனி வெற்றியை பறிக்க முடியாது. அதிமுக முடித்து போன ஓன்று, இனிமேல் தளிர்க்காது.

  • Maverick - Kanniyakumari,இந்தியா

   அதிமுக வை குழிக்குள் இறக்கினால்...அந்த குழியில் தி மு க காரன் தலை தெரியுதே...அவன் வெளிய வந்திரப்பிடாதே. அதான் பிரச்சினையே...

  • ezhumalaiyaan - Chennai,இந்தியா

   மரமே பட்டுப்போச்சு இலையை பற்றி பேசிக்கோண்டிருக்கிறார்கள்

 • Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்

  லோக்சபா துணை சபாநாயகர் தம்பி துரையை ஏம்பா கழட்டி விட்டுடீங்க.?..

 • Kalyani S - Ranipet,இந்தியா

  குழு வெல்லாம் தேவையில்லை. ஓபிஎஸ்ஸை முதல்வராக அறிவியுங்கள் இரண்டு அணியும் ஒன்றாகிவிடும்.

  • dinesh - ,

   yes

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement