Advertisement

கோரிக்கைகள் நிறைவேற்றினால் மட்டுமே பேச்சு: மாபா உறுதி

சென்னை: எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்போம் என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: அதிமுகவிலிருந்து சசிகலா, தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும். சசிகலாவுக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை திரும்ப பெற்று கொள்ள வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்படும். எங்களது கோரிக்கைகள் ஒன்றுகூட நிறைவேற்றவில்லை.
அதிமுக அம்மா அணி சார்பில் பல குரலில் பேசி கொண்டிருக்கின்றனர். எம்.பி., வைத்திலிங்கம் பேச்சு நியாயமாக இருப்பதாக கருதுகிறோம். ஜெயக்குமார் பேசியதை சீரியசாக எடுக்க வேண்டாம் என வைத்திலிங்கம் கூறியுள்ளார். மறைமுக பேச்சுவார்த்தை மற்றும் பேரம் எதுவும் நடத்தவில்லை. நேற்று ஒரே நாளில் 150 நிர்வாகிகளை ஓ.பி.எஸ்., சந்தித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (40)

 • Girija - Chennai,இந்தியா

  அண்ணே முடிவா சொல்லிட்டேன் என்னை (பாலகிரியை ) கவர்னர் ஆக்கணும்னு நிபந்தனை வைக்கல்லீன்னா, நேரா பொது தேர்தல் தான், அம்புட்டு எம் எல் எ வையும் வட நாட்டுக்கு தள்ளிக்கிட்டு போய்டுவேன், சட்டு புட்டுன்னு பேசி முடிவெடுங்க , அப்புறம் பின்னால வருத்தப்படாதீங்க, சூதனமா பொழச்சுக்குங்க

 • adalarasan - chennai,இந்தியா

  பேசாம விட்டுட்டாங்க சார்? மிரட்டல் எல்லாம் எதற்கு. அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளுங்கள்? அதுவராய் அரசாங்கத்தை நடத்த விடுங்கள்? இல்லை என்றால் ஸ்டாளின் அவர்கள், காத்துகொண்டு இருக்கிறார்?

 • Girija - Chennai,இந்தியா

  இன்னாபா இது அநியாயம்? என்னைய கவர்னர் ஆக்கம்னுன்னு பேசினோம்ல? அதை சொல்லவே இல்ல? பேச்சு பேச்சாகத்தான் இருக்கணும் மாறப்படாது

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இவங்கஇப்பிடி சொல்லறீங்க..ஓய்வு பெற்ற தேர்தல் கமிஷனர் ஒருவர் சகட்டு மேனிக்கு கழுவி ஊத்துர்ரார் ஒரு பேட்டீல R K நகர் தேர்தல் மற்றும் இவர்களை குறித்து..நாக்கை புடிங்கிக்கிட்டு நாண்டுக்கிற மாதிரி..ஓட்டுக்கு காசு வாங்கினவங்களை கூட விட்டு வைக்கல.பிச்சைக்காரர்களின் விளாசுறாரே..காது குளிர்ந்து போச்சு..கோபாலா ,சாமீ நீதான் எங்களை காப்பாத்தணும்..

 • E. Manikandan - villupuram,இந்தியா

  தயவு செய்து ஆட்சியை கலைக்க வேண்டும் அப்போதுதான் இந்த சிக்கல் எல்லாம் தீரும். இது மக்களின் எதிர்பார்ப்பு.

 • krishna - cbe,இந்தியா

  அனைவருமே ஊழல் செய்தவர்கள், ops சேகர் ரெட்டி கூட்டணி பல கோடி ஊழல் செய்தது வெளிச்சத்துக்கு வந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.ராம் மோகன் ராவ் வீட்டில் ரெய்டு நடந்தது,ஆனால் இப்போது எந்த நடவடிக்கையும் இல்லையே.தினகரன் மீது மட்டும் ஏன் நடவடிக்கைகள் பாய்கிறது.பன்னீர் ஊழல் கறை படியாதவரா???

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  இந்தியாவில் உள்ள 90 % மான அரசியல்வாதிகள் எல்லோரும் மாபியாக்கள் என்பதை ஒருவரும் மறக்க கூடாது. இவர்கள் கட்சிகளின் செல்வாக்கால் தப்பி இருக்கிறார்கள். பன்னீர்செல்வம் செய்த பெரிய ஊழலை அம்மா கண்டுபிடித்ததால்தான் இவரை கடந்த தேர்தலில் வீட்டுக் காவலில் வைத்தார். இப்ப பிஜேபி இந்த திருவிளையாடல்தான் தமிழ்நாட்டில் குழப்பத்திட்கு காரணம் .மக்கள் விழிப்பாக இருந்து அம்மாவின் ஆட்சியை காப்பாற்றவேண்டும்

 • vnatarajan - chennai,இந்தியா

  OPS போட்ட இரண்டு கண்டிஷன்களையும் கட்சியின் நன்மையைக்கருதி EPS ஏற்கவேண்டும் மக்கள் மனதில் ஜேயின் இறப்பில் சந்தேகம் உள்ளது அந்த சந்தேகத்தை போக்குவதற்கு இரண்டு அணிகளும் சிபிஐ கொண்டு விசாரிக்க சொல்லவேண்டும் மேலும் இந்த மாபியா கும்பல் கட்சியிலிருந்து வெளியேறுவதைத்தான் பெரும்பான்மை தொண்டர்களும் விரும்புகிறார்கள் கட்சி தலைமைக்கு தேர்தல் வைத்தால் கண்டிப்பாக பெரும்பாலான தொண்டர்கள் OPS தலைமையைத்தான் விரும்புவார்கள்

 • skandh - chennai,இந்தியா

  பிச்சைக்காரர்கள் ஓ பீ எஸ் thalaimaiyil குதிப்பதை எல்லாரும் வேடிக்கை பார்க்கலாம்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  ஒன்னு பண்ணலாம்.. OPS , EPS , ஜெயக்குமார், தம்பிதுரை, தங்கமணி, வீரமணி, முத்துமணி, வைரமணி, இப்படி எல்லார் பெயரையும் எழுதி சீட்டு குலுக்கி போடுங்க...யாரு பேரு வருகிறதோ, அவரை முதல்வராக்கிடுங்க... ஒருவேளை கவனருக்கு இதுல உடன்பாடு இல்லைனா, வெங்கய்யா, தமிழிசை, பேரையும் சேர்த்து எழுதி சீட்டு குலுக்க சொல்லுங்க... சந்தோசமா குலுக்கி ஒரு பெயரை தேர்ந்தெடுப்பார்...[அட போங்கப்பா...நீங்களும் உங்க தப்பாட்டமும் ]

 • மணிமாறன் - chennai,இந்தியா

  ops அணியின் எல்லா நிபந்தனை களையும் EPS அணி ஏற்றுக்கொண்டு, OPS தவிர மற்ற எல்லோரையும் சேர்த்துக்கொள்ளலாம்.. OPS ஐ ஒதுக்கிவிட்டு மற்றவர்கள் கண்டிப்பாக வருவார்கள்.. பிறகு OPS பிஜேபி யில் சேந்து கொள்ளலாம்...

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  யப்பா...தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில் இந்த மாபா வை தூக்கி உள்ளே போடுங்கள் முதலில் ...

 • Dv Nanru - mumbai,இந்தியா

  பாண்டியராஜன் நீங்கள் என்ன அமெரிக்கா செனட் உறுப்பினரா என்ன கோட் சூட் எல்லாம் சென்னையில் அடிக்கிற வெய்யிலில் உங்க இம்சை தாங்க முடியல அப்பா...உங்க அலப்பறை..எதாவது தேறுமா ...???

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு முன் தேனை குடித்துவிட துடிக்கும் தேனீக்கள் போல் இந்த ஆட்சி முடிவதற்குள் சொத்துக்களை சேர்க்க அதிமுக மந்திரிகள் துடிக்கின்றனர்...

 • kurinjikilan - Madurai,இந்தியா

  மாபியாவின் எடுபிடிகள் புறவாசல் வழியாக நுழையபார்க்கிறார்கள்..RK நகரில் திட்டமிட்டே பணம் விநியோகம் நடத்தி தேர்தலை நிறுத்தியுள்ளார்கள்..பெங்களூரு சிறைக்குத்தான் இன்னும் பல அடிவருடிகள் விசுவாசமாக இருக்கிறார்கள்..பன்னீர் களங்கமில்லாதவர் அல்ல..ஆனால் மரியாதை தெரிந்தவர்..ADMK தொண்டர்களும் நடுநிலையாளர்களும் OPS ஐயே ஆதரிப்பார்கள்..சட்டசபையை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்துவதே சாலா சிறந்தது..பன்னீர் தான் வெற்றிவாகை சூடுவார்..EPS MLA க்கள் அவரவர் தொகுதிக்குள் நுழைவது சிரமம்..

 • Arivu Nambi - madurai,இந்தியா

  30 வருடத்திற்கு மேலாக ஜெயாவுடன் இருந்த சசியை நேற்று கட்சிக்கு வந்த பச்சோந்தி(மாபா) குழுவினர் மிரட்டுகின்றனர் ,உங்களுக்கெல்லாம் நேரம்டா.முட்டாள் மக்கள் நிறைந்துள்ளதால் உங்களால் ஆடமுடிகிறது, ஆடுங்கள் அதையும் பார்க்கலாம்.

 • MOHANARENGAN SRINIVASAN - Tiruchirappalli,இந்தியா

  இப்போதைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் எலெக்ஷன் மட்டுமே ஒரே தீர்வாக இருக்கமுடியும். தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள் . மக்கள் பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய ஒரு அரசாங்கம் அமைய வேண்டும். கலகத்திலேயே காலத்தை கழித்து மக்களை கலக்கத்தில் ஆழ்த்த வேண்டாம் .

 • Senguttuvan - Tamil,இந்தியா

  முதலில் டாஸ்மாக்கை மூடச்சொல்லுங்கள்.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  OPS அணியினரின் உறுதி பாராட்டத்தக்கது eps அணி குடும்ப ஆதிக்கத்தை முற்றிலும் நீக்கி உண்மையாக முனைந்தால் இணைப்பு சாத்தியமே

 • Rathinamoorthy - Palani,இந்தியா

  ஓபிஎஸ் தான் முதல்வர் அவர்தான் பொதுச்செயலாளரும்.இதைக்கேட்டுப்பெற வேண்டிய அவசியம் ஓபிஎஸ்கு இல்லை. துணைமுதல்வர் வழக்கம் தமிழ்நாட்டில் இல்லை. அப்பனும் மகனும் பதவிக்கு அடிச்ச போதே அது விமர்சனத்துக்குள்ளானது. அதிமுகவுக்கு அது அவசியமில்லை. இப்போதுல்ல அமைச்சரவையில் நிறைய புல்லுருவிகளை காலி செய்ய வேண்டிய கடமை ஓபிஎஸ்க்கு உள்ளது. ஆகவே இந்த வெத்திப்பயலுகளோட பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய அவசியம் ஓபிஎஸ்க்கு இல்லை. அவர் பேச்சைக்கேட்டு நடப்பதாக இருந்தால் 122பிச்சைக்காரனுகளும் தானாக வந்து இணையலாம். இல்லையெனில் களத்தில் சந்திக்கலாம் ஓபிஎஸ் தலைமைக்கு ஓட்டளிக்க நாலுகோடி மக்களுக்கும் மேல் தயார். கமிசன் குறைஞ்சதால புத்திவந்த மாதிரி நடிக்கறவனுகளுக்கு எவ்ளோ திமிரு

 • Paran Nathan - Edmonton,கனடா

  அரசியல் அனாதைகளுக்கெல்லாம் விமர்சனம் எழுதும் நிலையை ஏன் வைத்தாய் இறைவா?

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  விடாதீங்க...இதுதான் சமயம்..மாபியா கும்பலை ஒழிக்க இதுதான் சமயம்....ஒற்றை தலைமை அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கணும்...ஒற்றை தலைமையில் ஜனநாயகம் இருப்பதில்லை.....

 • GOPALSABAPATHY - chennai,இந்தியா

  அம்மாவின் மரணத்துக்கு காரணமான சதிகார (சசி) கும்பலிடம் இருந்து ஆட்சியும் கட்சியும் முதலில் பறிக்கப்பட வேண்டும். இந்த முடிவில் உறுதியாக இருங்கள், தொண்டர்கள் ஒருபோதும் உங்களை கைவிட மாட்டார்கள். ஒபிஸ் ஐயா தலைமையில் மீண்டும் நல் ஆட்சி தொடரும் அம்மாவின் உண்மை தொண்டர்கள் உங்கள் பக்கம் இருக்கும் வரை அதை யாராலும் தடுக்க முடியாது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement