X
Advertisement

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் முதல்வர்

சென்னை: பரபரப்பான சூழலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.இவருடன் அமைச்சர்கள் தங்கமணி, சம்பத், சி.வி.,சண்முகம் ஆகியோரும் வந்துள்ளனர். இங்கு அவசர ஆலோசனையில், கட்சியில் பிளவு பட்டுள்ள இரு அணிகளை இணைப்பது தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்படும் என தெரிகிறது. தினகரல் கட்சியில் இருந்து ஒதுங்கி கொண்ட பிறகு அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (8)

  • ezhumalaiyaan - Chennai,இந்தியா

    அதுசரி அந்தஅடிமைகள் 122 பேர் கூவத்தூரில் பெற்ற பணத்தை கட்சி நிதிக்கோ அல்லது அரசின் நிவாரண நிதிக்கோ கொடுத்து பாவத்தை கழுவிக்கொள்ளுவார்களா.

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    அதிமுக தலைமை அலுவலகம் காற்று வாங்குவதாக மக்கள் யாரும் வராததினால் (3 நாட்களுக்கு முன் தினமலர் செய்தி போட்டோவுடன்), இது இப்படியே போனால் எங்கே தேர்தல் கமிஷன் இந்த அலுவலகத்தை ஜப்தி செய்து விடுமோ, மூடி விடுவார்களோ என்று பயந்து தான் இந்த நடவடிக்கை.

  • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

    சின்ன பன்னீர் அணியை தூக்கி எறிந்துவிட்டு உங்கள் ஆட்சியை திறம்பட நடத்துங்கள். பிஜேபி இன் சங்கீதத்திட்கு பன்னீர் கூட்டம் ஆடுகிறது.இந்த தூசுகளை தட்டிவிட்டு நல்லாட்சியை நடத்தி மக்களின் ஆதரவை பெறுங்கள்

  • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

    சரி இவங்க ஏன் அந்த குச்சி மிட்டாயோடு சேர துடிக்கிறாங்க....

  • Arivu Nambi - madurai,இந்தியா

    கூன் பாண்டியர்களா இருந்த அனைவரும் தலை நிமிர்ந்து நில்லுங்கடான்னு தலைல அடிச்சு சொன்னோம் கேக்கல, இப்ப ஆளாளுக்கு ரொம்பவே நிமிந்துட்டிங்களேப்பா ....... உருப்படவா..?

    • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

      கொஞ்சம் பொறுங்க இப்பதான் முக்கா கிணறு தாண்டியிருக்கிறாங்க....

  • Maverick - Kanniyakumari,இந்தியா

    இன்னும் சசி குடும்பம் தான் திரை மறைவில் தமிழ் நாடு அரசை கன்ரோல் செய்யுது....இவனுங்க அடிபுடி..எல்லாம் பயங்கரமான ஒரு செயல் திட்டத்துடன் கூடிய நாடகம்......இபோது இந்த கூவத்தூர் கோமான்களுக்கு தேவை சின்னம்...அது மட்டுமே...வேற மக்கள் நலன் ..எல்லாம் ஒன்னும் கிடையாது...

  • jey - Bangalore,இந்தியா

    டிவி சீரியல் மாதிரி இழுத்துட்டு இருக்காம ஒரு முடிவுக்கு வாங்க...... நீங்க ஆலோசனை நடத்துறீங்க நடத்துறீங்கன்னு கேட்டு கேட்டு சலிச்சு போச்சு..........

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement