Advertisement

'நீரா' உற்பத்திக்கு அனுமதியால் மகிழ்ச்சி: தென்னை விவசாயிகளுக்கு ஆறுதல்

உடுமலை :தென்னை விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான 'நீரா' பானம் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தேங்காய் மற்றும் கொப்பரையின் விலையும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது.கேரளாவில், தென்னை மரங்களிலிருந்து, பல்வேறு வைட்டமின்கள் மற்றும் சத்துகள் அடங்கியுள்ள, இயற்கை பானமான 'நீரா' உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனையாகி வருகிறது.தமிழகத்திலும் 'நீரா' விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், போராடியும் வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தமிழக அரசினால் அனுமதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் 'நீரா' உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது விவசாயிகளிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
நீரா உற்பத்தி
தென்னை மரத்திலுள்ள மலராத பாளையில் இருந்து வடித்தெடுக்கப்படும் இயற்கை பானம் தான் 'நீரா'. பாளையை நன்கு சீவி அதில் பானையை கட்டிவிட்டு இறக்கப்படும். நீரா வடிவதற்காக தினமும் காலை மற்றும் மாலையில் இரண்டு முறை பாளையை தட்டிவிட வேண்டும்.சராசரியாக ஒரு மரத்தில் இருந்து, 2 முதல், 3 லிட்டர் வரை குறைந்தபட்சம், 6 மாத காலம் வரை 'நீரா' இறக்கப்படும்.மதிப்புக்கூட்டு பொருட்கள்'நீரா' பானத்தை பயன்படுத்தி தென்னை சர்க்கரை, வெல்லம், தேன் உட்பட பல்வேறு மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க முடியும். தேங்காய் உற்பத்தியை விட, நீரா உற்பத்தியில் ஆண்டுக்கு பத்து சதவீதம் வரை அதிகமான வருவாய் ஈட்டலாம் என்கின்றனர் தென்னை விவசாயிகள்.
'நீரா' உற்பத்தி செய்யப்படுவதால் உற்பத்தி குறைந்து ஆண்டுதோறும் தேங்காய்க்கு நிலையான விலை கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. இதனால், விவசாயிகளுக்கு எந்தவிதத்திலும் நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.தமிழக அரசின் 'நீரா' விற்பனை அனுமதி உத்தரவையடுத்து விவசாயிகள், தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் அதற்கான வேலைகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
மகேஷ் பிரபு, (விவசாயி)வறட்சியினால் வாடியிருந்த தென்னை விவசாயிகளுக்கு தமிழக அரசின் நீரா பானம் விற்பனைக்கான அனுமதி அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்தேங்காய் உற்பத்தியில் ஒரு மரத்துக்கு ஆண்டுக்கு, ஆயிரம் ரூபாய் வருமானம் பெறமுடியும் என்றால் நீரா உற்பத்தியில் அதனை ஒரு மாதத்திலேயே ஈட்டி விட முடியும். இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • Rams - Bangalore,கொளடிலவ்ப்

    இது விவசாயிக்கு நல்ல செய்தி. நன்றி தமிழக அரசு

  • Rams - Bangalore,கொளடிலவ்ப்

    மிகவும் நன்றி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement