Advertisement

ஸ்டான்லியில் 7 பேருக்கு மறுவாழ்வு

சென்னை : பிறவியிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழு பேருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள், அறுவை சிகிச்சையின்றி, நவீன முறையில் சிகிச்சை அளித்து, மறு வாழ்வு கொடுத்துள்ளனர்.இது குறித்து, மருத்துவமனை முதல்வர் பொன்னம்பல நமச்சிவாயம், இதயவியல் துறை தலைவர் கண்ணன் ஆகியோர் கூறியதாவது:நெல்லையைச் சேர்ந்த, இரண்டரை வயது சிறுவன், இம்மானுவேல் ராஜா உள்ளிட்ட, ஏழு பேர், பிறவி இதய நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் இதயத்தின் வலது பகுதியில், ஓட்டை இருந்தது. இதை, மார்பை பிளந்து, அறுவை சிகிச்சை மூலமே சரி செய்வது பொதுவான நடைமுறை.ஆனால், அவ்வாறு அறுவை சிகிச்சை செய்யாமல், தொடையின் ரத்தநாளம் வழியாக, 'டிவைசர்' ஒன்றை, மெல்லிய கம்பி வழியாக, இதயத்தின் ஓட்டை உள்ள பகுதிக்கு செலுத்தி, விரிவடைய செய்தோம். அது, இதய துவாரத்தை அடைத்து, பாதிப்பை நீக்கியது. இதை, 'கத்தீட்ரல்' முறை என்கிறோம். ஏப்., ௧௦ல், இந்த நவீன சிகிச்சை முறை வெற்றிகரமாக நடந்தது.தனியார் மருத்துவமனையில், இந்த சிகிச்சைக்கு, மூன்று லட்சம் ரூபாய் செலவாகும். இங்கு, முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், இலவசமாக செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement