X
Advertisement

டி.ஆர்.பி., விதிகளை மீறினால் தேர்வாளருக்கு நிரந்தர தடை

சென்னை : விதிமுறைகளை மீறும் தேர்வர்கள், தேர்வு எழுத, டி.ஆர்.பி., நிரந்தர தடை விதிக்கும் என, சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:டி.ஆர்.பி.,யால் நடத்தப்படும், டி.இ.டி., தேர்வு, வரும், 29, 30ம் தேதிகளில் நடக்கிறது. 29ம் தேதி நடக்கும் தேர்வை, சென்னை மாவட்டங்களில் உள்ள, 27 தேர்வு மையங்களில், 10,147 பேரும்; 30ம் தேதி நடக்கும் தேர்வை, 88 தேர்வு மையங்களில், 31,235 பேரும் எழுத உள்ளனர்.தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு, காலை, 8:30 மணிக்குள் வர வேண்டும். தேர்வு அறையில், நுழைவுச் சீட்டு, நீலம், கறுப்பு பேனா மட்டுமே கொண்டு வர அனுமதிப்பட்டுள்ளனர். மொபைல்போன், லேப் டாப், கால்குலேட்டர் உள்ளிட்ட உபகரணங்களுக்கு, தேர்வறைக்குள் அனுமதி இல்லை. தேர்வு அறைக்குள், கண்காணிப்பாளர் அல்லது சக தேர்வர் ஆகியோருடன், முறைதவறி நடப்பவர் மீது, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அறிவுரைகளை பின்பற்ற தவறும் தேர்வாளர், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை, தொடர்ந்து எழுத, நிரந்தர தடை விதிக்கப்படுவதுடன், காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement