X
Advertisement

அவகாசம் கோரி தினகரன் மனு

சென்னை : டில்லி போலீசாரிடம் விசாரணைக்கு ஆஜராக, தினகரன், மூன்று நாட்கள் அவகாசம் கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இரட்டை இலை சின்னத்தை மீட்க, தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 60 கோடி ரூபாய் லஞ்சம் தர தினகரன் சம்மதம் தெரிவித்து, சுகேஷ் சந்தர் என்பவன் மூலம், 1.30 கோடி ரூபாயை கொடுக்க முயன்ற வழக்கில் சிக்கி உள்ளார்.இதையடுத்து, வரும், 21ல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, டில்லி போலீசார், தினகரனிடம், நேற்று முன்தினம் இரவு சம்மன் வழங்கினர். ஆனால் அவர், விசாரணைக்கு ஆஜராக மூன்று நாட்கள் அவகாசம் கேட்டு மனு அளித்துள்ளார். இதனால், அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, இது போன்ற முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement