Advertisement

பம்மல், அனகாபுத்தூருக்கு பாலாறு குடிநீர்

பம்மல் : நமது நாளிதழ் செய்தியின் எதிரொலியாக, பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க, பாலாறு குடிநீர் திட்டத்தின் மூலம், தினசரி, 16 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கும் பணி, நேற்று துவங்கியது.பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகளின், குடிநீர் ஆதாரம் என்பது, மெட்ரோ வாட்டர் மட்டுமே. சமீபகாலமாக, மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திடம் இருந்து, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, குறைவான அளவு தண்ணீர் கிடைப்பதால், அவற்றை கொண்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.கூட்டுக்குடிநீர் திட்டம்இதனால், 10 முதல், 15 நாட்களுக்கு ஒரு முறை, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதை சமாளிக்க, தனியார் கிணற்று நீரை வாங்கி, குளோரின் செய்து வினியோகிக்கின்றனர். அப்படியிருந்தும் பிரச்னை முழுமையாக தீரவில்லை.இதனால், பாலாறு குடிநீர் வழங்குமாறு, இவ்விரு நகராட்சி களும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். தற்போது, தாம்பரம்- - பல்லாவரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், பாலாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்திய போது, பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகளிலும், குழாய் பதிக்கப்பட்டது. ஆனால், பாலாறு குடிநீர் வினியோகிக்கப்படாமல் இருந்தது.8 லட்சம் லிட்டர் இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பாலாறு குடிநீர் திட்டத்தில் இருந்து, பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்நகராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் பணி, நேற்று துவங்கியது. இதன்மூலம், தினசரி, தலா, 8 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும். அவற்றை, மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகளில் நிரப்பி வினியோகம் செய்யப்படும். இதன்மூலம், குடிநீர் பிரச்னை தீரும் என்று தெரிகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement