X
Advertisement

ஆய்வக உதவியாளர் பணிக்கு நாளை சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை : 'அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, எம்.சி.சி., பள்ளியில், நாளை நடத்தப்படும்' என, கல்வித்துறை அறிவித்து உள்ளது.தமிழகம் முழுவதும் அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு, தேர்வுத்துறை மூலம் எழுத்து தேர்வு நடந்தது. மார்ச்சில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, ஏப்., 9 முதல், 11 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. தேர்வானோருக்கு, ஒரு வாரத்திற்கு முன், பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலால், சென்னை மாவட்டத்தில், நிறுத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, நாளை நடத்தப்படுகிறது.இதுகுறித்து, சென்னை மாவட்ட, சி.இ.ஓ., அனிதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம்; சைதாப்பேட்டை, மத்திய சென்னை மாவட்ட கல்வி அலுவலகம்; எழும்பூரில் உள்ள வட சென்னை, தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலகங்கள்; சூளைமேட்டில் உள்ள கிழக்கு சென்னை மாவட்ட கல்வி அலுவலகம் ஆகியவற்றில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோர் பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது.மேலும், ceomadras கூகுள் இணைய பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி, ஏப்., 22, காலை, 9:30 மணிக்கு, சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள, எம்.சி.சி., பள்ளியில் நடக்கும். பள்ளி வளாகத்தில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோரின் பட்டியலை, தேர்வர்கள் பார்த்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement