Advertisement

சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் இன்று நிர்வாக கூட்டம்

சென்னை : சென்னையில் மேற்கொள்ளப்படும் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள், நில பயன்பாட்டு மாற்றங்கள் தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்ய, பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் நிர்வாக கூட்டம், இன்று நடக்க உள்ளது.திட்ட அனுமதி வழங்குவது, பணியாளர் நிர்வாகம், அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான நிர்வாக முடிவுகள், சி.எம்.டி.ஏ., குழும கூட்டத்தில் எடுக்கப்படும். சி.எம்.டி.ஏ.,வின் நிர்வாக நடைமுறைபடி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, இக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். 2016 நவம்பருக்கு பின், பல்வேறு காரணங்களால் கூட்டம் நடத்தப்படவில்லை.இந்நிலையில், சி.எம்.டி.ஏ., குழும கூட்டம், எழும்பூரில் உள்ள, சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில், இன்று நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement