Advertisement

750 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது

சென்னை : சிந்தாதிரிபேட்டையில் நடந்த வாகன சோதனையில், 750 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை, வெளி மாநிலத்தில் இருந்து ஆம்னி பேருந்தில் கொண்டு வரப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.சிந்தாதிரிபேட்டையில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த, 'டாடா ஏஸ்' வாகனத்தை மறித்து சோதனையிட்டதில், 30 மூட்டை பான்பராக் பாக்கெட்டுகள் இருந்தன; அவற்றின் மொத்த எடை, 750 கிலோ.போலீசார், அவற்றை பறிமுதல் செய்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து, இந்த புகையிலை பொருட்களை அழிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, எங்கிருந்து புகையிலை பொருள் கொண்டு வரப்பட்டது என, போலீசார் விசாரணை நடத்தினர்.ஆம்னி பேருந்துகள் மூலம் பெங்களூரில் இருந்து கொண்டுவரப்படும் பான்பராக் பாக்கெட்டுகள், மின்வாரிய அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள சாலையில், பேருந்தில் இருந்து மினி வேன்களுக்கு மாற்றப்படும்; பின், பாரிமுனையில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லப்படும் என்பது தெரியவந்தது. இது குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement