Advertisement

500 ஆண்டு பழமையான கல் மண்டபம் இடமாற்றம்: சாலை விரிவாக்கத்தால் சீரமைக்கப்பட்டது

பராமரிப்பின்றி சேதமடைந்து இருந்த மன்னர் காலத்துகல் மண்டபம், மாநகராட்சி சாலை விரிவாக்கத்தால்தொல்லியல் துறை பொறியாளர்கள் மூலம் பாதுகாப்பாக அகற்றி, வேறு இடத்தில்அமைக்கப்பட்டுசீரமைக்கப்பட்டது.
சென்னை, மாதவரம் பால் பண்ணை, குமரப்பபுரம் முதல், 200 அடி சாலை சந்திப்பு வரையிலான, 2.5 கி.மீ., துாரம், 30 அடி அகலம் கொண்ட மஞ்சம்பாக்கம் இணைப்பு சாலை, போக்குவரத்து வசதிக்காக, 45 அடி அகலமாக, மாநகராட்சியால் விரிவாக்கம் செய்யப்பட்டது.கடந்த, 2015 அக்டோபரில் துவங்கிய விரிவாக்கப் பணிக்காக, மாதவரம் பால் பண்ணை நிர்வாகத்திடம் இருந்து, தேவையான இடம் பெறப்பட்டது. அந்த இடத்தில் இருந்த, 100க்கும் அதிகமான மாமரம், புளியமரம், பனை மரம் ஆகியவை வெட்டி அகற்றப்பட்டன.தொல்லியல் துறைஅங்கிருந்த, வழிப்போக்கர்களுக்கான, நாயக்கர் கால, 11 கால் கல் மண்டபத்தையும் அகற்ற, மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால், பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைபாதுகாக்க வேண்டும் என, கோரினர்.இதையடுத்து, அவர்களது கோரிக்கையை, மாதவரம் மண்டல அதிகாரிகள், மாநகராட்சிக்கு பரிந்துரை செய்தனர். அப்போது, தொல்லியல் துறையில் அனுபவமிக்க, ஓய்வு பெற்ற, இந்திய தொல்லியல் துறை உதவி பராமரிப்பு பொறியாளர் மணி மூலம், கல் மண்டபத்தை பாதுகாப்பாக அகற்ற முடிவு செய்யப்பட்டது.கி.பி., 15 - 16ம் நுாற்றாண்டில், நாயக்கர் மன்னர் காலத்தில், இந்த கல் மண்டபம் கட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஓரிடத்தில் இருந்து மற்ற பகுதிக்கு சென்று வரும் படை வீரர்கள் ஓய்வெடுக்க, இந்த மண்டபம் பயன்பட்டிருக்கிறது.

மருத்துவ உதவி:பின், திருவிழா காலத்தில், திருவீதி உலா வரும் சுவாமியை, அங்கு வைத்து மக்கள் தரிசனம் செய்வதும் வழக்கமானது. மேலும், கால்நடையாக, நீண்ட துாரம் பயணம் மேற்கொள்ளும்பக்தர் மற்றும் வழிப்போக்கர் ஓய்வெடுப்பது, அவர்களுக்கான அன்னதானம், மருத்துவ உதவி ஆகியவை வழங்குவது உள்ளிட்ட பொது நல உதவிகள் வழங்கும் மையமாகவும், இந்த மண்டபம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

நன்னீர் குளம்இங்கு தங்குவோரின் குடிநீர் வசதிக்காக, மண்டபத்திற்கு பின்புறம், பெரிய நன்னீர் குளம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. நாளடைவில், பராமரிப்பின்றியும், இயற்கை சீற்றங்கள், கனரக வாகனங்களின் அதிர்வு போன்ற சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் மண்டபம் இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டது; குளமும் வற்றி வறண்டது.இந்த நிலையில் மாநகராட்சியின் சாலை விரிவாக்கப் பணியால், பழமையான இந்த மண்டபம் பாதுகாப்பாக அகற்றப்பட்டு, சாலையில் இருந்து, 40 அடி துாரத்தில், உட்புறமாக அமைக்கப்பட்டு உள்ளது.

மகாதேவபுரம்பழமையான இந்த மண்டபம் அமைந்துள்ள இடம், அங்குள்ள விநாயகர் கோவில் கல்வெட்டில், மகாதேவபுரம் என, குறிப்பிடப்பட்டுள்ளது. அதை பாதுகாப்பாக அகற்றி, 25 லட்சம் ரூபாய் செலவில், 10க்கும் அதிகமான ஸ்த்பதிகள், கொத்தனார் என, குழுவாக செயல்பட்டு, ஆறு மாதங்களாக சீரமைத்தோம். மண்டபத்தின், 11 கல் துாண்களில் முருகன், விநாயகர், ஆஞ்சநேயர் என, பல்வேறு சிற்பங்கள் இடம்பெ ற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆர்.மணி, ஓய்வுபெற்ற உதவி பராமரிப்பு பொறியாளர்,இந்திய தொல்லியல் துறை, சென்னை - நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

 • poongothaikannammal - chennai 61,இந்தியா

  மிக மிக அருமையான நல்ல காரியம். பாரம்பரிய கல் மண்டபத்தினை செம்மையாக வேறு இடத்தில் மாற்றி அமைத்து தங்கள் பெருமையைக் காப்பாற்றிய தொல்லியல் துறையினரின் இந்தச் பெருமைமிகு செயலுக்காவது இறைவன் மனம் இறங்கி மழை வளத்தை நமக்கு அருளுவாரா?

 • nalavirumbi - SGP,சிங்கப்பூர்

  அப்போ மரங்களை மட்டும் ஏன் வெட்டினீர்கள் மடையர்கள் போன்ற செயல் ,எவனோ கட்டுன கருங் கல் கட்டிடத்திற்கு மதிப்பு கொடுத்து எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மரங்களை வெட்டும் பொழுது ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை மரங்களை வேறு இடங்களில் இடம் மாற்றி இருக்கலாமேன் ? எங்கே இவர்கலால் 30 40 வருட மரங்களை உருவாக்க முடியுமா ? மக்கள் மடமை எனும் அறியாமையில் மூழ்கிய தால் தான் இன்று மழை இல்லை குடிநீர் ,விவசாய பிரச்சனை ,ஏன் மரம் இல்லை மழை இல்லை மூடர்களே மக்களும் அதிகாரிகளும் தான்

 • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

  நன்று செய்தீர்கள் வாழ்க வளமுடன்

 • P.Narasimhan - Tirupattur,Vellore Dist,இந்தியா

  பெரிய நன்னீர் குளம் என்னவாயிற்று?

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  சபாக்ஷ் அற்புதமான பணி? வாழ்த்துக்கள்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement