Advertisement

நடுவானில் தீப்பிடித்த விமான இன்ஜின்

லாகோஸ்: நைஜீரியாவில் பயணிகள் விமானத்தின் இன்ஜினில் பிடித்த தீயால், பயணிகள் அலறி துடித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. நைஜீரியாவை சேர்ந்த விமானம் 53 பயணிகளுடன் நேற்று போர்கார்கோர்ட் நகரில் இருந்து லாகோஸ் விமான நிலையத்திற்கு புறப்பட்டது. 20 நிமிடங்களுக்கு பின், திடீரென விமானத்திற்குள் புகை பரவியது. விமான இன்ஜின்களில் தீப்பிடித்ததால், புகையின் தாக்கம் அதிகரித்தது. விமானத்தில் எச்சரிக்கை அலாரம் எழுப்பப்பட்டதை தொடர்ந்து, பயணிகள் அனைவரும் அலறி துடித்தனர். பின்னர் சில நிமிடங்களில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மற்றொரு விமானத்திற்கு அனுப்பப்பட்டனர்.இந்நிலையில் நடுவானில் விமானத்தில் பயணிகள் அலறி துடித்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement