Advertisement

மந்திரிகளின் ஊழல்: ஸ்டாலின் ஆவல்

சென்னை: 'அமைச்சர்களின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் புனிதப் பணியில், வருமான வரித் துறை, அமலாக்கத் துறை அதிகாரிகள், சுதந்திரமாக செயல்பட வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:அ.தி.மு.க.,வில் ஒவ்வொரு நாளும்,
வெவ்வேறு அரிதாரம் பூசிஅரங்கேறும் நாடகங்கள் நடக்கின்றன. நேற்றுவரை பரம விரோதிகள், முதல் குற்றவாளிகள், ஊழல் பெருச்சாளிகள், இன்று கைகோர்த்து, ஊரை ஏமாற்றும் இன்னொரு அவதாரத்தை எடுத்திருக்கின்றனர்.

தமிழக மக்களை ஏமாற்றி, மாநிலத்தை மேலும் சுரண்டி,தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்த நினைக்கின்றனர். எனவே, ஒட்டுமொத்த அ.தி. மு.க., அமைச்சர்களின் ஊழல்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.அந்த புனித பணியில், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட, மத்திய அரசு உறுதுணையாக நிற்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (32)

 • adalarasan - chennai,இந்தியா

  உங்க பக்கம் பாஞ்சுட போறாங்க? கொஞ்சம் அடக்கி பேசுங்க?அறிவாலயம் ரைட் போது அவகாசம் கொடுத்த மாதிரி, இப்ப உள்ள அரசாங்கம் கொடுக்காது? முதல்ல 2ஜி கேஸிலிருந்து வெளிய வாங்க? பிறகு மார் தட்டிக்கலாம்?

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  அவன் கிடக்கிறான் குடிகாரன், எனக்கு ஒரு மொந்தை ஊத்து என்று சொல்லலாம். இல்லை சாத்தான் வேதம் ஓதுகிறது என்றும் சொல்லலாம். ஒருவிரலை வைத்து அடுத்தவனை சுட்டி காட்டும் பொழுது மற்ற விரல்கள் உங்களை சுட்டி காட்டும் என்பது வழக்கம். மீதி நான்கு விரல்கள் உங்களை சுட்டிக்காட்டுகிறது. எதற்கும் ஒரு யோகியதை வேண்டும். இந்த விஷயத்தில் அது உங்களுக்கு கிடையாதே.

 • hasan - Chennai,இந்தியா

  இவன் என்னவோ தமிழகத்துக்கு எல்லாம் நல்லதே செய்த மாதிரி நல்ல பிள்ளைபோல் நடிக்கிறான். இவனும் மலைமுழுங்கிதான். திராவிட கூட்டமே திருட்டு கூட்டங்கள்தான்.

 • bala - PARAMAKUDI,இந்தியா

  ஸ்டாலின் NOT BAD

 • ASDSSN - sss,கனடா

  உத்தமர் குடும்பத்தில் வந்தவர் பேசுகின்றார்

 • ASDSSN - sss,கனடா

  உத்தமர் குடும்பத்தில் வந்தவர் பேசுகின்றார்

 • Meenu - Chennai,இந்தியா

  ஒரு திருடன் இன்னொரு திருடனை பார்த்து "நீ ஒரு திருடன்" என்று சொல்வது போல் இருக்கு. தமிழ் நாட்டை ஆண்ட உங்க இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் தான். இரு கட்சிகளிலும் உள்ள மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம் எல் ஏக்கள், மந்திரிகள் ஆகியோரது சொத்துக்கள் பல கோடிகள். அவுங்க அவுங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க பார்ப்போம். இதுக்காக தானே கட்சி நடத்துறது, கட்சியில் சேர்றதும்.

 • Chidambaranathan Ramaiah - usilampatti,இந்தியா

  மனித புனிதர் நடமாடும் புத்தர் சுடாலின் சொல்றபடி செயல்படுங்கள் வருமான வரி மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளே

 • rajan - kerala,இந்தியா

  இந்த மவன் ஒரு ஊழல் பெருச்சாளியின் மவன் என்பதை என்னமா மறந்து இப்படி உதார் உடுறான்.

 • A shanmugam - VELLORE,இந்தியா

  அதே போல் உங்க அப்பா ஆறுமுறை முதல்வராக இருந்தபோது சேர்த்துக்குவித்து வைத்துள்ள கோடானகோடி சொத்துக்களுக்கும், பினாமி பேரில் உள்ள உள் நாடு, வெளிநாடு மற்றும் 2ஜி ஊழலில் லட்சோப லட்ச கோடி சொத்துக்களை எல்லாம் வருமானவரித்துறை சோதனை செய்யவேண்டும். மேலும் முன்னாள் திமுக அமைச்சர் வீடுகளையும் வருமான வரி துறை பகிரங்கமாக சோதனை செய்யவேண்டும். ஆகவே மற்றவரை ஒரு விரல் காட்டினாள் மற்ற நான்கு விரல் உங்களை காட்டுது என்பதை மறந்துவிடக்கூடாது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஊழல் செய்யாதவன் தான் ஊழல் செய்தவனை பற்றிய பேசமுடியும்...

 • Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா

  மங்கை திரண்டால் கங்கையில் குளிப்பாள்.... கங்கை திரண்டால் எங்கே குளிப்பாள் ... விடை எல்லாம் கேள்வியாகிறது....

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  சாதாரண சாக்கடையைப் பற்றி கூவம் பேசுகிறது

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  பக்கத்துக்கு இலைக்கு பாயாசம்? இவரு குடும்பமே பெரிய ஊழல் குடும்பம்.... இவருகிட்ட எப்படி இவ்வளவு பென்ஸ், ஹம்மர் கார்கள் வந்தன? இவரோட மகன் எப்படி அம்பது கோடி அறுபது கோடிகளில் படம் எடுக்கிறார்? சேட்டு வீட்டை ஆட்டைய போட்ட ஆள் அல்லவா இவர்? குளத்தூரில் ஒரு கோடிக்கு மேல் செலவு செய்துவிட்டு தேர்தல் கமிஷனுக்கு பதில் கடிதம் அனுப்பி கொண்டு இருப்பது யார்? திருடன் திருடன் திருடன்னு கத்திகிட்டே ஓடுவது போல உள்ளது இவரின் அறிக்கை..............

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் நூறு அதிமுகவுக்கு ஒரு திமுக சமம்... ஆகவே முதலில் திமுகவினருக்கு செக் வைத்து விட்டு அடுத்து அதிமுகவுக்கு செக் வைக்கலாம்... கூட்டுக்கள்ளர்களை ஒழித்தால் தமிழன் வாழ்வான்...

 • LAX - Trichy,இந்தியா

  தானை & கோ. வின் விஞ்ஞான ரீதியிலான ஊழல்களில் தொங்கிய தமிழ்நாட்டின் தலை நிமிரவதற்கு, இந்த ஜன்மத்தில் வாய்ப்பே கிடையாதாம்.. இந்த லட்சணத்தில், விஞ்ஞான ரீதியில் ஊழல் புரியும் குடும்ப உறுப்பினரான தொளபதி யோக்கியன் மாதிரியே வேஷம் கட்ட நினைக்கிறாரு.. ஹையோ.. ஹையோ.. நீங்கள்லாம் யாருன்னு ஊர் உலகத்துக்கே தெரியும்டியோய்..

 • naankabali - kovai,இந்தியா

  அதே போன்று தயாநிதி, கனி,ராசா , ஹம்மர் கார் வழக்கு என்று அணைத்து வழக்குகளின் தீர்ப்பையும் உடனடியாக கொடுக்க மத்தியஅரசு உதவ வேண்டும் என்று சொல்லலாமே. அதிருக்கட்டும்..அப்படியே அதிமுக மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தாலும் திமுக வரும் என்ற சூழல் உள்ளதா? தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடந்தால் பன்னீர் மீண்டும் மக்கள் ஆதரவோடு முதல்வரை வருவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் உள்ளது.

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  தி மு க செய்யாத ஊழல் எந்தநாட்டிலும் நடக்கவில்லை.அப்பனும் குடும்பமும் செய்த ஊழல்களை சர்க்காரியா கமிஷனிடம் கேட்டால் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement