Advertisement

அரசு போக்குவரத்து இணையதளத்தில் இப்போதும் முதல்வர் ஜெ., தான்!

கோவை: அரசு விரைவு போக்குவரத்து கழக இணையதளத்தில் தொடர்ந்து முதல்வராக ஜெ., பெயர் இடம்பெற்றிருப்பது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் எட்டு பிரிவுகளில், அதிதுார பஸ் சேவையான அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் ஒன்று. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இத்துறையில், 300 கி.மீ-.,க்கு அதிக மான துாரமுள்ள வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், அல்ட்ரா டீலக்ஸ், வால்வோ, 'ஏசி' பஸ்கள் என நெடுந்துார விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதற்கானஆன்லைன் டிக்கெட் புக்கிங் வசதிக்கு, www.tnstc.in எனும் அரசு விரைவு போக்குவத்து கழக, அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்படுகிறது. இதில், டிக்கெட் முன்பதிவு, இதர சேவை பிரிவுகள், திட்டங்கள், துறை சார்ந்த அறிவிப்புகள், விதிமுறை கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.

சமீபகாலமாக இந்த இணையதளத்தில் உள்ள தக வல்கள் எதுவும்புதுப்பிக்கப்படாமல் உள்ளன. குறிப் பாக, இணையதளத்தின் முகப்பில், தமிழக முதல்வ ருக்கான இடத்தில், மறைந்த ஜெயலலிதாவின் பெயர், படம் தொடர்ந்து நீடிக்கிறது.

ஜெ.,மறைவுக்கு பிறகு, பன்னீர் செல்வம், தொடர்ந்து இடைப்பாடி பழனிசாமி என, இருவர் பதவிக்கு வந்துள்ளனர். கடந்த பிப்., மாதம் முதல்வராக இடைப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். ஆனால், இருமாதங்களாகி யும் அவரது பெயர், அரசு விரைவு போக்கு வரத்து கழக இணைய தளத்தில் மாற்றப்பட வில்லை. அடிக்கடி முதல்வர் மாறுவதால் தான், அதிகாரிகளுக்கு இந்த அலட்சியமோ?

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (17)

 • SK2011 - Sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்

  தப்பு kanakku

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அ.தி.மு.க. எம்.எல்.ஏ. /தொண்டர்கள் கூமூட்டை கூட்டம் 1 .5 கோடி பேர் அம்மாவுக்கு "என்றும் முதல்வர்" என்ற பட்டத்தை கொடுத்ததினால் அதை நினைவூட்ட இப்படி நடந்து கொள்கின்றார்கள் அவ்வளவே.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இந்தச் செய்தியைப் படித்து விட்டு வலைப்பக்கத்தைப் பார்வையிட்டேன் ..... குறிப்பிட்ட வலைப்பக்கம் மாற்றப்படவில்லை .....

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  முன்ன பின்ன செத்தாதான் சுடுகாட்டுக்கு வழி தெரியும் என்று சொல்வார்கள், அது போல முன்ன பின்ன வேலை செய்தால் தானே இந்த மடையர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியும். இதை மற்றவர்கள் பார்த்து இவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் , அப்போதும் உடனே சரியாகாது / சரி செய்ய தெரியாது , யாரையாவது கூப்பிட்டு தான் பார்க்கணும்.

 • Oru Indiyan - Chennai,இந்தியா

  ://aiadmk.com/ - அவர்களது வெப்சைட்-ஏ உருப்படியா இல்லே...

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  இந்த விஷயத்தை சில வாரம் முன் ஒரு கருத்தில் பதிவு செய்திருந்தேன்... பாமரன் சொன்னால் எங்க கேக்கராய்ங்க..???

 • Rajathiraja - Coimbatore,இந்தியா

  அட பாவமே அரசு அதிகாரிகளுக்கே முதல்வர் யார்னு தெரியலை போலும்.

 • MUTHU - chennai,இந்தியா

  private as well as neighbour state buses d like Volvo , multi axle, with many facilities but I am not sure why our state buses are slow in terms speed as well as , simply they should not say we are in loss, first remove all useless unions inside, think like serving customer as equivalent to Private sector, this picture is one of the example to say they have long way to go in terms of customer service.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மாண்டார் மீண்டு வருவதில்லை என்பது அவர்களுக்கு தெரியாதோ என்னவோ...

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  காலாவதியான ஜெயலலிதாவை மாற்றவே அரசு போக்குவரத்து நிறுவனத்துக்கு நேரமில்லை . இவர்களா காலாவதியான பேருந்துகளை மாற்றப்போகிறார்கள்?

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  A1 குற்றவாளி என்பதால் பஸ் ஸ்டாண்டில் வைக்கலாம்.. அதுக்காக இன்டர்நெட்டிலும் வைக்கணுமா என்ன?

 • ரங்கன் -

  அடிக்கறதை அம்மா பேரில் அடிக்கிறாங்க....

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமும் தமிழகத்தில் கொள்ளை அடிப்பதில் அதிக நேரத்தை செலவு செய்கிறது... இது போன்ற 'சாதாரண' விஷயங்களுக்கு எப்படி நேரம் இருக்கும்? ஒருவேளை தினகரனுக்கு காத்திருக்கிறார்களோ என்னவோ...

 • LAX - Trichy,இந்தியா

  இதில் மக்களுக்கு எங்கே\என்ன குழப்பம் வந்தது..?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அவரில்லாட்டியும் அவரோட ஆவி இருக்குதுங்க.

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  ஒரு நாள் எல்லாம் முடிவுக்கு வரும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement