Advertisement

அரசு பதவிகள் ரூ.30 லட்சம் வரை ஏலம்? அமைச்சர் பெயரில் நடந்தது அம்பலம்

கோவை: தமிழக பதிவுத் துறையில், சார் - பதிவாளர்களுக்கு, 'டிரான்ஸ்பர்' வழங்குவதாக கூறி, அமைச்சர் பெயரில், 10 முதல், 30 லட்சம் ரூபாய் வரை, பேரம் பேசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வர், நடவடிக்கை எடுக்காவிடில், பேரம் பேசிய தொலைபேசி உரையாடலை வெளியிடுவோம் எனவும், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இடமாறுதல்
தமிழக பதிவுத் துறையின், ஒன்பது மண்டலங் களில், 50 மாவட்ட நிர்வாக பதிவாளர்கள், 50 மாவட்ட தணிக்கை பதிவாளர்கள், 572 சார் - பதிவாளர்கள் பணியாற்றுகின்றனர்.இவர்களில், மூன்றாண்டு பணி முடித்தோர், ஆண்டு தோறும், மே மாதத்தில், பொது இடமாறுதல் செய்யப்படுவது வழக்கம். இதன்படி, அடுத்த மாதத்தில், இடமாறுதல் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில், தமிழக வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர், வீரமணியின் உதவியாளர் எனக் கூறி, ஒன்பது மண்டல அலுவலகங்களையும் போனில் தொடர்பு கொண்டு, ஒருவர் பேசியுள்ளார்.

அப்போது, 'உங்கள் எல்லைக்குள் பணியாற்றும், சார் - பதிவாளர்களின் பெயர், அவர்கள் பணியில் சேர்ந்த தேதி, தொலைபேசி எண் களை, மாவட்ட வாரியாக தயாரித்து, எனக்கு, இ - மெயில் மூலம் அனுப்பி வையுங்கள்' என, கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இதன்படி அனைத்து சார் - பதிவாளர்களின் பட்டியலும், அந் நபரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து, இரு நாட்களுக்கு முன், சென்னை யில் இருந்து, சார் - பதிவாளர்கள் சிலரை போனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர், 'உங்களை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவு தயாராகிறது; உங்களுக்கான மாற்று இடத்தைதேர்வு செய்து விட்டு, என்னை தொடர்பு கொள்ளுங்கள்' என கூறியிருந்தார். மேலும், 'விருப்பமான இடமாக இருப்பின், அதற்கு இவ்வளவு லட்சம் ரூபாய் தர வேண்டும்' என, நேரடியாகவே பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பதிவுத்துறை ஐ.ஜி., அலுவலகத் தில், சார் - பதிவாளர்கள் விசாரித்த போது, 'நேர்மை யான முறையில் மட்டுமே, இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும்; லஞ்சம் கொடுத்தால், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, கடுமையான எச்சரிக்கையுடன் பதில் வந்துள்ளது. இதனால், என்ன செய்வது என தெரியாமல், சம்பந்தப்பட்டவர் கள் புலம்பி வருகின்றனர்.
மாவட்ட தணிக்கை பதிவாளர் ஒருவர் கூறியதாவது:

பதிவுத் துறையில் சமீபகாலமாக லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது. உதவியாளர்களுக்கு, சார் - பதிவாளர் பதவி உயர்வு அளிப்பது தொடர்பான பட்டியல், கடந்த ஆண்டே தயாரான போதிலும், அரசியல் அழுத்தம் காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கில் பேரம்தற்போது, சார் - பதிவாளர்கள் இடமாற்றத்திலும், கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுகிறது. தமிழக அளவில், தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களிலுள்ள, சார் - பதிவாளர் பதவிகளுக்கு, 30 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்படுகிறது.கோவை, திருப்பூர், மதுரை மற்றும் சேலத்தில், சார் - பதிவாளர் பதவிகள், 20 - 30 லட்சம் வரையும், பிற இடங்களில் உள்ள பதவி கள் அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய் வரையும் பேசப்படுகின்றன.
யார், அதிக தொகை கொடுக்கின்றனரோ, அவர்களுக்கே இடமாறுதல் கிடைக்கும் என்ற நிலை, சில ஆண்டுகளாகவே உள்ளது. லட்சக்கணக்கில் பணம் கொடுத்து இடத்தைப் பிடிக்கும் சார் - பதிவாளர்கள், ஓராண்டிற்குள், இரு மடங்கு சம்பாதிக்க முனைகின்றனர். இதனால், மக்களை பிழிந்து, பணம் சம்பாதிக்க பலரும் துணிகின்றனர்.

டிரான்ஸ்பருக்கு லஞ்சம் தராவிடில், 'வருமான மற்ற' ராமநாதபுரம், அரியலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு துாக்கி அடித்து விடுவர்; இதற்கு பயந்தே, சிலர் அரசியல் அழுத் தங்களுக்கு பணிந்து, பணம் தருகின்றனர். இந் நிலையில், அமைச்சரின் உதவியாளர் என கூறிய நபர், சார் - பதிவாளர் களிடம் பேரம் பேசியுள்ளார்.
இதை போனில் பதிவு செய்த அதிகாரி ஒருவர், முதல்வர் அலுவலகத்திற்கு, ஒரு சங்கத்தின் மூலமாக புகார் அனுப்பினாார். அதில், உரிய நடவடிக்கை எடுக்காவிடில், 'பேரம் பேசிய ஆடியோ'வை வெளியிடுவதாக, அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (27)

 • AM FAROOK - chennai,இந்தியா

  தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் தலை விரித்தாடுகிறது. வாக்களித்த மக்களோ செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். அரசு வேலைக்கு மற்றும் இடமாற்றம் செய்வதற்கு லஞ்சம் கொடுத்து சேர்வதால் தான் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமானதாக இருக்கிறது. முதலில் அரசியல்வாதிகள் மற்றும் IAS அதிகாரிகள் மற்றும் அரசுகடை நிலை ஊழியர்கள் வரை நேர்மையை கடைபிடிக்க கடுமையான சட்டங்கள் ஏற்றி நேர்மையற்றவர்களை உடன் நிரந்தர பணி நீக்கம் செய்யவேண்டும் அப்படி செய்தால் தான் நாடு முன்னற்றம் அடையும். யார் இதை செய்வார்கள் என மக்கள் மனவேதனையுடன் இருக்கிறார்கள்

 • bairava - madurai,இந்தியா

  இது போன்ற செய்திகளை படிக்கவே அசிங்கமாக இருக்கிறது இதை எப்புடிதான் ....? இப்போதுள்ள தமிழர் நாட்டில் மாபியாவும் ,,பாசிசமும் ஆட்சி செய்தால் அரசு வேலை எப்புடி திறமையானவர்களுக்கு கிடைக்கும் குண்டர்களுக்கும் ரௌடிகளுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டுமே கிடைக்கும் அப்போ அரசு வேலை வாய்ப்பு அமைப்பு எதற்கு அத மூடிவிட்டு எல்லாத்தையும் ஏலம் விட்டே பொழப்பு நடத்தலாமே..விளங்கும் .இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போவது உறுதி

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஒரு சாதாரண இட மாற்றத்திற்கு 30 லட்சம் கொடுக்கும் ஒருவன், அதற்கப்புறம் சும்மா இருப்பானா, இந்த 30 லட்சம் அவனை 30 லட்சம் இடங்களில் உடலில் அரித்தெடுக்க ஊழல் செய்வான் 30 கோடி வருமானம் வருவதற்காக, இப்படித்தான் நாசமாகின்றது நமது சிஸ்டெம்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இன்றைக்கு அரசு ஊழியர்கள் கட்சிக்காரர்களின் வாயிலாக மட்டுமே வேலைக்கு சேர்க்கப்படுகின்றன என்பது 1957 முதல் அமுல்படுத்திக்கொண்டு வரும் எழுதாத சட்டம், பணம் ஒன்றே தகுதி, பத்திரிக்கை, ஊடகங்கள் மற்றும் கொடுப்பவர்கள், கொடுத்து ஏமாந்தவர்கள் சாட்சி, வந்தே மாதரம்

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  ஆட்சி என்று ஒன்று நடக்கும்போதே வசூல் களைகட்டும். இப்போது சொல்லவேண்டாம் எப்படியெல்லாம் புரளி கிளப்பி விட்டு வருமானம் பார்க்கலாம் என்று திருட்டு கூட்டம் திட்டம் போட்டு திருடும்

 • ravi - chennai,இந்தியா

  எல்லா லஞ்ச ஊழல் சொரிப்பசங்களும் ஒழியுங்கப்பா - நீங்க அடங்கமாட்டீங்க ரௌடி கூட்டங்களா

 • Roopa Malikasd - Trichy,இந்தியா

  'நேர்மை யான முறையில் மட்டுமே, இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும் லஞ்சம் கொடுத்தால், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' - நேர்மையை பத்தி இவனுங்க பேசனாருவோ. சமீபத்துல நான் வாங்கிய நிலத்தை பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன் . அங்க இருக்குற பதிவாளர் (இந்த லட்சணத்துல ஏன் பள்ளியில் சக வகுப்பு மாணவன் ) லஞ்சத்தை மறைமுகமாக பெற்றுக்கொண்டதோடு அல்லாமல் , உங்கள எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே என்று கபட வேடமும் போட்டான். இவனுங்களுக்கு எல்லாம் மிகவும் தைரியம், யார் என்ன செய்துவிடுவார்கள் என்று.

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  ஊழல் ஆரம்பமானது அரசியல் வாதிகளிடமிருந்து தான். திராவிட கட்சிகளின் 50 ஆண்டு சாதனை இது தான். அரசு அதிகாரிகள் அதற்கு உடந்தை. நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் வழி பிறக்கும். ஆதியநாத் யோகி மாதிரி நல்ல அரசியல் வாதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்

 • chinnamanibalan - Thoothukudi,இந்தியா

  பத்திர பதிவு துறையில் மட்டுமல்ல தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் இதே நிலைதான்.தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் தலை விரித்தாடுகிறது.வாக்களித்த மக்களோ செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  தமிழகம் தான், திருட்டு முன்னேற்ற கழகங்களிடம் ஐம்பது ஆண்டு குத்தகைக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டு உள்ளதே. மட்டுமின்றி ஒவ்வொரு தமிழனுக்கும் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை 500 ரூபாயும், ஒரு பொட்டலம் பிரியாணியும், ஒரு குவாட்டர் பாட்டிலும் கொடுக்கிறார்களே.பின் ஏன் இந்த கொதிப்பு? ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த நடைமுறையை மாற்றுவதற்கு யார் முயன்றாலும் தமிழர்கள் ஒன்றுபட்டு அதை முறியடிப்பார்கள். இதை தடுக்க மத்திய அரசு முயன்றால் தலைநகரிலேயே நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

 • kurinjikilan - Madurai,இந்தியா

  அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதால் லஞ்சம் கொடுக்கமுடிகிறது..அரசியல்வாதிகள் எப்படி இருந்தாலும் அதிகாரிகள் நியாயமாகப்போனால் லஞ்சலாவண்யங்கள் குறைய வாய்ப்புண்டு..துரதிருஷ்டவசமாக தமிழ்நாட்டில் திராவிட கட்சிமந்திரிகளுக்கு பணம் சம்பாதித்து தரும் கருவிகளாக அதிகாரிகள் இருக்கிறார்கள்..இனிமேலாவது திருந்தவேண்டும்..சிபிஐ/அமலாக்கத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு இத்தகைய செய்திகளை எடுத்து செல்லவேண்டும் ..தவறு செய்யும் ....கள் தண்டிக்கப்படவேண்டும்..லஞ்சம் வாங்கி பிழைப்பதை அதிகாரிகள் கேவலமானதாக நினைக்கவேண்டும் ..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இது மாதிரி வாங்கன காசில் அமைச்சர்கள் என்ன தமக்கு கல்லறை கட்டிக்கொள்ள போகிறாரா.... ஏற்கனவே ஜெ தானும் வாங்கி சசியையும் வாங்க வைத்து கல்லறைக்குள் ஐக்கியமாகி விட்டாங்க...

 • Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா

  கொஞ்சாமாகவா விலை வாசி உள்ளது....தண்ணீர் முதல் காற்று வரை எல்லாமே விலை கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது....இதில் ஓட்டு உள்பட ..என்ன செய்வது.... கவு ன்சிலர் முதல் மந்திரிவரை யாரும் வண்டி இழுத்தோ ...மூட்டை தூக்கியோ ...கலப்பை பிடித்து வாழவில்லை...கோடிக்கணக்கில் பணமூட்டையில் புரளுகிறார்கள் ...அப்போ தான் தூக்கம் வருகிறது....சொல்லி என்ன பயன் சட்டம் இருந்து என்ன பயன்...எல்லாம் "அவன்" செயல் ...என்று இருக்கவேண்டியது சாதாரண மக்கள்....கடல் வற்றப்போவதுமில்லை...மீன் பிடிக்காமல் இருக்கவும் போவது இல்லை....வெந்ததை தின்று விதி வந்தால் போய் சேர வேண்டியது தான் மக்கள் தலை எழுத்து.....

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  இவுங்க கிட்ட வாங்கறது எல்லாம் தப்பு இல்லிங்க? இவுங்க கையில இருந்தா அதை கொடுக்குறாங்க எல்லாம் ரியலெஸ்டேட் காரங்கிட்ட கொள்ளை அடிச்சது தானே? அதனால இன்னும் சேர்த்து கூட புடுங்கலாம் தப்பே இல்லை? புடுங்குங்க சாமி? நல்லா புடுங்குங்க?

 • K,kittu.MA. - Anna Nagar,இந்தியா

  பதிவாளர் அலுவலகத்தில் எந்த ஊரிலும் காசு இல்லாமல் வேலை நடப்பதில்லை.. தரகர்கள் சாம்ராஜ்யம் தான் தட்டி கேட்டால் பத்திரம் பதிவதில் சிக்கலை கொண்டு வருகிறார்கள் இதை ஆண்டவன் கூட தீர்க்க முடியாது..

 • Munish - Bangalore ,இந்தியா

  ஓட்டு போடும் போது ஆரம்பித்தது, இந்த ஆட்சி முடியும் வரை தொடரும்.

 • ARUN - coimbatore,இந்தியா

  தமிழினமே ,,அப்துல்கலாம் பிறந்த தமிழ் மண்ணே சற்று சிந்தித்திடு .நாம் கலாமிற்கு பெருமை சேர்க்க வேண்டியவர்களா? அல்லது சாக்கடைகளுக்கு சலாம் போட வேண்டியவர்களா? என்று. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலடியும் தமிழ் மண்ணில் எடுத்துவைக்கும்போது கலாமையாவது நினைத்து கொள்ளுங்கள். இந்த தமிழ் மண்ணாவது அடுத்த தலைமுறையில் கலாம்களை கொடுக்கட்டும்.

 • ARUN - coimbatore,இந்தியா

  பேர தொகையை குறைப்பதற்கு ஒரே வழி அரசு ஊழியரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாக குறைப்பது.10 ஆண்டில் அவர் எவ்வளவு சம்பாரிக்க முடியும் என்று கணக்கு போட்டு அந்த லிமிட்டில் அவர் பேரத்தை முடித்து கொள்ள முடியும்.மேலும் 10 ஆண்டிற்கு பிறகு வேறு ஒரு நபர் சம்பாரிக்க வாய்ப்பு கிடைக்கும்.

 • ARUN - coimbatore,இந்தியா

  இப்போது பதிவுத்துறையில் ஆடியோ ஒலிப்பதிவாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இன்னும் எந்தெந்த துறையிலிருந்து ஆடியோ ஒலிப்பதிவாளர்கள் உருவாக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 • ARUN - coimbatore,இந்தியா

  ஜெயா ஆட்சியில் அமைச்சர் பதவி என்பது ஒரு மியூசிக்கல் சேர். அதனால் காற்றுள்ளபோதே தூற்றி கொள்ளவேண்டும் எனும் உயர்ந்த கொள்கையின் படி குறுகியகால பேரம் பேசப்போய் , அது நீண்ட கால முதலீட்டாளர்களை (சார் பதிவாளர்கள் என்று பொருள் கொள்க) அதிகம் பாதித்ததால் அவர்கள் எல்லோரும் ஆடியோ ஒலிப்பதிவாளர்களாக மாறிவிட்டார்கள்.

 • ARUN - coimbatore,இந்தியா

  இதற்கு தான் தி.மு.க வில் நிரந்தர அமைச்சர்களை வைத்துள்ளார்கள். தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஒரே நபர் தான் அந்த துறைக்கு அமைச்சராக நியமிக்கப்படுவார். அந்த நபர் இறந்தால் வேறு நபரை தேடுவார்கள். இதனால் பேர தொகை அதிகரிக்காது. ஜெயா அவர்கள் அமைச்சர் பதவியை மியூஸிகல் சேர் ரேஞ்சிற்கு எடுத்து சென்றதால் இந்த பேர தொகையும் உயர்ந்து விட்டது.

 • ARUN - coimbatore,இந்தியா

  தமிழக வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர், வீரமணியின் பதவியை தக்க வைத்துக்கொள்ள அதிக பேரத்தொகை கேட்கப்படுகிறது.அந்த தொகையை அவர் என்ன வானத்தில் இருந்தா கொண்டு வரமுடியும். சரியான விவஸ்தை கெட்ட சார்பதிவாளர்கள்.

 • ARUN - coimbatore,இந்தியா

  //////உரிய நடவடிக்கை எடுக்காவிடில், 'பேரம் பேசிய ஆடியோ'வை வெளியிடுவதாக, அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.///////இதனால் சகலருக்கும் அறிவிக்கப்படுவது என்னெவென்றால் பேர தொகை அதிகமானால் அதை நாங்கள் மக்கள் தலையில் தானே கட்டவேண்டும்.மக்கள் பாதிக்கப்படக்கூடாது எனும் உயர்ந்த எண்ணத்தில் தான் ஆடியோவை வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளோம்.

 • ARUN - coimbatore,இந்தியா

  பேர தொகை அதிகம் என்பதால் ஒரு அதிகாரி அந்த பேரத்தை போனில் பதிவு செய்து முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார்.இத போய் பெரிது படுத்தி கொண்டு.........,,,

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  ஆதாரம் இருந்தால் வழக்கு தொடரலாமே. தன் தேவைக்கு பணம்கொடுத்தவன் கோர்ட்டுக்கு வருவானா>>>> ஒரு ரூபாய் கொடுத்து சேவை பெற்றாலும் ஒரு கோடி கொடுத்து பெற்றாலும் குற்றம் குற்றமே. லஞ்சம் இல்லாத ஊர் பஞ்சம்னு யாரும் சும்மா சொல்லலிங்க>>>>>>>>>>>>>

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  உரையாடல்களை வெளியிட்டு என்ன பயன்? சம்பந்தப்பட்டவர்களை சோதனைக்கு உட்படுத்தவேண்டும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement