Advertisement

செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் மோடி

புதுடில்லி: அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள, உலகின், 100 மிகுந்த செல்வாக்கு உள்ளவர்கள் பட்டியலில், இந்தியாவில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும், 'பேடிஎம்' நிறுவனர் விஜய் சேகர் சர்மா இடம் பெற்று உள்ளனர்.

டைம் இதழ் ஒவ்வொரு ஆண்டும், உலகின், செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதற்காக, இதழின் ஆசிரியர்கள் குழு, மிகப் பெரிய பட்டியலை வெளியிடும். வாசகர்கள் அளிக்கும் ஓட்டு களின்அடிப்படையில், 100 பேர் பட்டியலை ஆசிரியர் குழு இறுதி செய்யும்.கடந்த, 2015ல் வெளியான பட்டியலில் பிரதமர் மோடியின் பெயர் இடம்பெற்றது. அவர் குறித்த குறிப்பை அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதி யிருந்தார். கடந்த, 2016ல், ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தக ரகுராம் ராஜன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, நடிகை பிரியங்கா சோப்ரா, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி
சுந்தர் பிச்சை, மின்னணு வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனர்கள் பின்னி பன்சால், சச்சின் பன்சால்ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்த நிலையில், 2017ம் ஆண்டுக்கான, 100 செல் வாக்கு உள்ளோர் பட்டியலை, டைம் பத்திரிகை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் இருந்து, பிரதமர் மோடி மற்றும், மின்னணு முறையில் பணம் செலுத்தும் 'மொபைல் ஆப்'பான'பேடிஎம்' நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மகளும், ஆலோசகருமான இவான்கா டிரம்ப், அவருடைய கணவர் ஜாரெட் குஷ்னர், சீன அதிபர் ஜி ஜின்பிங், வடகொரிய தலைவர் கிம் ஜாங்க் உன் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (33)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  அட்டையை தூக்கி மெத்தையில் போட்டால் . நாயை குளிப்பாட்டி நடுவில் வைத்தால் ..குறங்குகையில் பூமாலை ..அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம் .. போன்ற பழமொழிகளையும் வாசகர்கள் மட்டும் நினைவு கொள்ளலாம் ..

 • Rajasekar K D - Kudanthai,இந்தியா

  மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் இதுதான். இன்னும் நிறைய சொல்லுவாங்க

 • Kumar - chennai

  Pls do read the comment in Time magazine about Modi...Yes..He s part of top 100 most influential person...not the positive influence.... whoever's proud about this achievement..pls do read the Time magazine message about Modi ACH to get in to that list

 • K.Sugavanam - Salem,இந்தியா

  சேனா அதிபர் ஜின் பின்.வடகொரியாவின் கிம் ஜோங் உன் னுடன் அந்த பட்டியலில் மோடி ஜி..வேணுமா இது...

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  தனது முடிவுகளால் எத்தனை பேரின் தலையெழுத்தை மாற்றி விடுகிறார் அதற்காக அதிக அதிகாரம் படைத்தவர் என்பதால் பெயர் வந்திருக்கிறது ....

 • raja - nagercoil,இந்தியா

  Nomination is 100. He is one of the nominee. Out of 100, he is the least popular (zero vote)

 • Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்

  நேற்றுவரை மோடி பெயர் இந்த லிஸ்ட்ல இல்லை என்பதே பிற பத்திரிக்கைகள் தந்த தகவல்.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  ஒரு சாதாரண டீ கடையில் துவங்கி இன்று.......அப்பப்பா இது மிகப் பெரிய சாதனைதான்....

 • rajarajan - bangalore,இந்தியா

  மோடி பிரபலமானவர்தான் எதில் என்றால் நடிகைகளை மட்டுமே பார்க்கும், செல்பி மோகம் உள்ள, விவசாயிகளை பார்க்க மறுக்கும், ஏழைகளை கண்டால் முகத்தை மறைக்கும், முன்னுக்கு பின் முரணாக பேசும், அதிகாரிகளை வைத்து எதிர்கட்சிகளை பயமுறுத்தும் வகையில் .

 • Victor - Chennai,இந்தியா

  இப்படி பேசி பேசியே பத்திரிக்கைகள் நாட்டை அழிப்பதும் தீவிரவாதமே.

 • Noordin - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  மோடி பெரு இந்த லிஸ்டில் இல்லை சுத்த பொய்

 • Visu Iyer - chennai,இந்தியா

  ஓட்டு பெட்டியை வாங்குவது போல இதையும் பணம் கொடுத்து வாங்க முடியுமா?

 • A shanmugam - VELLORE,இந்தியா

  இதுவரை பிரதமர் பதவியில் இருக்கும் மோடிஜியும் அவரது குடும்ப உறுப்பினர்களும் மறைமுகமாக சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை இந்தியாவிலும், அயல்நாட்டிலும் பட்டியல் போட முடியுமா? வருமான வரி துறை, சுங்கத்துறை, நீதி துறை எல்லாமே பிரதமர் கைப்பிடியில். ஆகவே வானளாவிய அதிகாரத்தையும், செல்வாக்கையும் கொண்ட பிரதமர் பதவி இருக்கும்வரை யாரும் கிட்ட நெருங்கவே முடியாது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வெளிநாடுகளை சுத்துவதே தொழிலாக கொண்ட மோடிக்கு இப்பிடி ஒரு பேரா... இன்னும் ஏதாவது மக்களுக்கு உருப்படியா செய்தா...

 • puthiyavan - new york,யூ.எஸ்.ஏ

  Mr Modi is very simple and good man.

 • Arumugam Thiyagarajan - Singapore,சிங்கப்பூர்

  Nomination is 100. He is one of the nominee. Out of 100, he is the least popular (zero vote)

 • Anandan - chennai,இந்தியா

  இது வடிகட்டின பொய். இந்தியர்களில் ரகுராம் ராஜன் பெயர் மட்டுமே உள்ளது. எதுக்கு இப்படி?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  மோடி பிரபலமானவர்தான்.. அதில் என்ன சந்தேகம்.. மணிமேகலை, பசி மற்றும் காங்கிரஸ் ஊழல் மன்னர்களை சிறைக்கு அனுப்பினால் இன்னும் பிரகாசமாக பிரபலமாகலாம்...

 • PENPOINT,INKLAND - ZEN EYE,இந்தியா

  ஆனந்த விகடன் என்னும் பத்திரிக்கை தன வலைதள பக்கத்தில் ,மோடிக்கு ஆன்லைன் ஒட்டு ஒன்றுகூட விழவில்லையென்றும் ,அமெரிக்காவாழ் இந்தியர்கள்கூட அவருக்கு வாக்களிக்கவில்லை என்றும் ஒரு செய்தியை நேற்று பதிவிட்டு தன ஆனந்தத்தை வெளிப்படுத்தியிருந்தது .[சிறிது நேரத்தில் அந்த பதிவை நீக்கிவிட்டது ] இந்திய நண்டுகளை பற்றி ஒரு கதை உண்டு .அதனை அனைவரும் அறிவோம் என்று நினைக்கிறேன் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement