Advertisement

தினகரன் மீதான டில்லி வழக்கு; வலை விரிக்கிறது வருமான வரித்துறை

இரட்டை இலை சின்னத்தை மீட்க, 60 கோடி ரூபாய் லஞ்சம் கொடுப்பதாக பேரம் பேசிய வழக்கில், வருமான வரித்துறை யும் மூக்கை நுழைக்கிறது.

இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் வழங்கியதற்கான ஆவணங்கள், அமைச்சர் வீட்டில் நடந்த சோதனையில் சிக்கின. அதில், மற்ற அமைச்சர்கள் பெயர்கள் இருந்தன. அவர்களது பங்களிப்பாக, அந்த தொகையை தந்துள்ளனர். விஜயபாஸ்கர், அதற்கு ஒருங்கிணைப்பாளர் போல செயல் பட்டுள்ளார். இதற்கெல்லாம், மூளையாக செயல்பட்டவர் தினகரன். ஆனாலும், அவர் தனிப்பட்ட முறையில் பணம் கொடுத்ததற்கான ஆதாரம் இல்லை. அது, அமைச்சர்கள் வழியாக வந்த தொகை என்பதால், விசாரணை வளையத் தில், தினகரன் வரவில்லை.
இதற்கிடையில், இரட்டை இலை சின்னத்தை
தக்கவைப்பதற்காக, சுகேஷ் சந்தர் என்ற இடைத்தரகருக்கு, 60 கோடி ரூபாய் பேரம் பேசிய விவகாரம் வெளிவந்துள்ளது. அதில், 1.30 கோடி ரூபாயை முன்பணமாக, தினகரன் தந்திருப்பதாக, டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இடைத்தேர்தல் வேட்புமனு வில், தன் சொத்து மதிப்பை, 70 லட்சம் ரூபாய்க்கு குறைவாகவே, தினகரன் காட்டியுள்ளார். ஆனால், 60 கோடி ரூபாய்க்கு தரகரிடம் பேரம் பேசி, 1.30 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.எனவே, அந்த விசா ரணையின் போக்கை கவனித்து வருகிறோம். அதன்பின், 60 கோடி ரூபாய் தொடர்பாக, தின கரனிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (16)

 • rama - johor,மலேஷியா

  இந்தியாவில் பிடிக்காதவரை ஊழல் என்று சிறையில் அடைப்பது கை வந்த கலை தினகரன் அரசியல் இருந்து வெளியேறுகிறார் உழலும் இருக்காது ஒரு மன்னா கட்டியும் இருக்காது அதே வேலையில் அரசிலில் மீண்டும் இறங்கினால் ஊழல் என்று குறி சிறையில் அடைப்பார்கள்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  மில்லியன் டாலர் கேள்வி என்பது போல இப்பொழுது இவர்கள் விளையாட்டு மில்லியன் டாலரில் தான் (ரூ.6 .764 கோடி) தான் இருக்கின்றது, அந்த அளவுக்கு நாடு முன்னேறி விட்டதா என்ன, சாதாரணன் இன்றும் சாதாரணனாகத்தான் இருக்கின்றான்.

 • எல்.கே.மதி - Lalgudy,இந்தியா

  ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் வழங்கியதற்கான ஆவணங்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் சிக்கின. அதில், மற்ற அமைச்சர்கள் பங்களிப்பாக, அந்த தொகையை தந்துள்ளனர். விஜயபாஸ்கர், அதற்கு ஒருங்கிணைப்பாளர் போல செயல் பட்டுள்ளார். ஏன் இவ்வளவு தெரிந்தும் அவனை இன்னும் கைது செய்யாமல் வெளியில் திரிய விட்டிருப்பதன் மர்மம் என்ன?

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  அஞ்சு பத்து போய், அஞ்சு கோடி பத்து கோடிகள் என அந்நிய நாடுகளைப்போல் கோடிகள் என்ற அடைமொழிகளுடன் தமிழகம் அபாரமாக முன்னேறியிருப்பது விஞ்சான உலகில் வரவேற்கவேண்டிய ஒன்றுதான். மோடி அரசின் கொள்கையும் இப்படி உலக நாடுகளுடன் ஒத்துப்போவதுதான் என்பது மட்டுமல்ல. மோடி பெயரை சொல்லி ஒரு சில கும்பல்கள் உலகையும் மிஞ்ச முயற்சிசெய்துகொண்டிருக்கின்றன. உலகமே கோடிகளில் ஊறிப்போயிருக்கும்போது இப்படி ஒரு சிலரை மட்டும் பிடிப்பதால் என்ன பயன்?.

 • Arivu Nambi - madurai,இந்தியா

  திருட்டு அரசியல்வாதிகளின் வலையில் விழுந்து மாட்டிக்கொண்டு முழிப்பதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது. உங்களை ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்.

 • Rameeparithi - Bangalore,இந்தியா

  ரொம்ப லேட்டா வலை விரிச்சா எப்படி ? கொள்ளை கூட்டம் நழுவிடுமே...

 • A shanmugam - VELLORE,இந்தியா

  தமிழக மக்களின் ஓட்டை விலைக்கொடுத்து வாங்கியாச்சு பின்பு தேர்தல் ஆணையத்திடம் பேரம் பேசியாச்சு இப்போ தினகரன் பேரம்பேசி வேண்டியது டெல்லி வருமான வரித்துறைத்தான் பாக்கி. கவலைப்படாதீங்க இந்தியாவில் கோடாந கோடி பணத்துக்கும், அழகிய பெண்ணுக்கும் அடிமைஆவதவரே எவரும் இல்லை. ஆகவே, ஜெயா சேர்த்து குவித்துள்ள சொத்துக்களை கொண்டு இந்தியாவே விலைக்கு வாங்கிடலாம்.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இதையெல்லாம் இப்படி விலாவரியாக சொன்னா எப்பிடி பிடிக்கிறது ?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எல்லாம் இது மாதிரி பீதி காட்டி விட்டு கறந்து கொண்ட பின்னே விட்டுவிடுவார்களா...

 • Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  BJP is playing the dirty game. By hook or crook BJP wanted to rule TN.

 • ganesha - tamilnadu,இந்தியா

  தினமலரில் கருத்து தெரிவிப்பதில் உண்மையான ஜனநாயகம் உள்ளது என்பது நிரூபணமானது.. அதுவே இன்று வென்றது. இதில் கருத்துக்கள் பதிவு செய்பவர்கள் படித்தவர்கள் மட்டுமே என்பதில் சந்தேகமே இல்லை . எண்பது சதவிகிதத்துக்கு மேல் அனைவரும் மன்னார்குடி மாபியா வுக்கு ஆரம்பத்திலிருந்தே தைரியமாக எதிர்த்து வந்துள்ளார்கள். ஆனால் இருபது சதவிகித மக்கள் இந்த கேடு கெட்ட கும்பலுக்கு சப்போர்ட் செய்து எழுதினாலும் அவர்களின் கருத்துக்கு பலர் மோசம் என்று தைரியமாகவே தெரிவித்துள்ளார்கள். அதை பொருட்படுத்தாது சிலர் இந்த கும்பலுக்கு கடைசி வரை சப்போர்ட் செய்து வந்தனர். கடைசியில் அதிக மக்களின் கருத்து தான் உண்மையானது. இனியாவது இவர்கள் திருந்துவார்கள் என்று நம்புவோம். இப்பொழுதாவது திருந்துங்கள். பலர் நம் கருத்தத்துக்கு தொடர்ந்து மோசம் என்று பதிவு செய்தால் தயவு செய்து நன்கு சிந்திக்கவும். நீங்கள் மாறுங்கள். இனிமேல் சிந்தித்து கருத்து கூறுங்கள்.

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  அதிமுக என்னும் மாஃபியா இயக்கத்தின் வாராது வந்த மாமணி இந்த JJTV தினகரன்.. 'ஜெயிலில் வைத்து' பொக்கிஷமாக பாதுகாக்க பட வேண்டியவர்..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பதவியில் விட்டுவைத்தால் இந்தக்கூட்டம் இளித்தவாய் தமிழர்களிடம் இருந்து பணத்தை அள்ளிக்கொண்டுதான் இருக்கும். தமிழக அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு மொத்தமாக லாடம் கட்டவேண்டும்...

 • PENPOINT,INKLAND - ZEN EYE,இந்தியா

  70 லட்ச ரூபாய்க்கு குறைவான சொத்துள்ளவருக்கு 28 கோடி அபராதம் விதித்ததே நீதிமன்றம் .அவர் எப்படி கட்டுவார் ? இந்த அநியாயத்துக்காகத்தான் நாட்டில் மழை இல்லை .வறட்சி வாட்டுகிறது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement