Advertisement

சசி குடும்பம் நாடகம்: இ.பி.எஸ்., தந்திரம்! இரட்டை இலை சின்னத்திற்கான ஏமாற்று வேலை

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற, இடைத் தரகர் மூலம் மேற்கொண்ட முயற்சி, தோல்வி அடைந்ததால், சசிகலா குடும்பம் கட்சியை விட்டு விலகுவது போல நடித்து, அ.தி.மு.க.,வினரையும், மக்களையும் ஏமாற்ற, இ.பி.எஸ்., தரப்பினர் போட்ட தந்திரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தேர்தல் அறிவிப்பு
அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரி, பன்னீர் அணி சார்பில், தேர்தல் கமிஷனில், மனு கொடுக்கப்பட்டது. இம்மனு மீதான விசாரணை துவங்கும் முன், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரு அணியினரும், இரட்டை இலை சின்னம் கேட்டதால், அது முடக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்ற மனுவை விசாரிக்கும்படி, பன்னீர்
அணியினர் வலியுறுத்தினர்.

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக, தேர்தல் கமிஷனர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, இடைத்தரகர் சுகேஷ் சந்தர் என்பவனை, டில்லி போலீசார் கைது செய்தனர்.அவன் கூறிய தகவல்படி, லஞ்சம் கொடுக்க முயன்றதாக, தினகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கால், இரட்டை இலை சின்னம், சசிகலா அணிக்கு கிடைப்பது சிக்கலாகி உள்ளது.
அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, சசிகலா பொதுச் செயலராக தேர்வு செய்யப்படவில்லை. எனவே, அவரது தேர்வும் செல்லாது என, அறிவிக்க வாய்ப் புள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால், பன்னீர் அணி கை ஓங்கும். பன்னீர் அணி கை ஓங்கினால், சசிகலா குடும்பம் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். இதை தவிர்க்க,தேர்தல் கமிஷன் முடிவை அறிவிப்பதற்கு முன், இணைப்பு நாடகத்தை அரங்கேற்ற பார்க்கின்றனர்.

சின்னம் கிடைத்த பின், தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.,க் கள் உதவியுடன், மீண்டும் கட்சியை கைப்பற்ற லாம் என, சசிகலா குடும்பத்தினர் திட்டமிட்டுள்ள னர். எனவே, சசிகலா குடும்பத்தினர் சொல்லி தந்த படி, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செயல்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை உறுதிப் படுத்தும் வகையில், தினகரன் குடும்பத்தை, கட்சி யில் இருந்து நீக்குவதாக அறிவித்த னர். ஆனால், சசிகலா குறித்து, வாய் திறக்க வில்லை. அமைச்சர் கள் ஒதுங்கும்படி கூறியதால், கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக, தினகரன் கூறினார். ஆனால், துணை பொதுச் செயலர் பதவியை, ராஜினாமா செய்ய மறுத்து விட்டார்.
சசிகலா, தினகரன் ஆகியோர், தங்களுடைய பதவி யில் தொடரும் நிலையில், அவர்களை ஒதுக்கி விட்டோம் எனக் கூறி, பன்னீர் அணி யினரை பேச்சுக்கு அழைப்பது, ஏமாற்று வேலை என்பது உறுதியாகி உள்ளது. மேலும், முதல்வர் பழனி சாமிக்குஆதரவு அளிப்பதாகக் கூறும் எம்.எல்.ஏ.,க் கள் தொடர்ந்து, தினகரனை சந்தித்து வருகின்றனர்.

நிதி நிலைமை மோசம்
சசிகலா தம்பி திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், 'நாங்கள் கூறியதைத் தான், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செய்துள்ளனர்; சற்று தாமதமாக செய்துள்ளனர்' எனக் கூறியிருப்பதும், சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. தற்போதைய சூழலில், அரசு செயலிழந்து உள்ளது. 'டாஸ்மாக்' மூடலால், வருவாய் கணிசமாக குறைந்துள்ளது. அதை சரிக்கட்ட, அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இன்னொரு பக்கத்தில், அமைச்சர்கள் மீது வழக்குகள் பாய்ந்தபடி உள்ளன. வருமான வரி சோதனைக்குள்ளான, அமைச்சர் விஜய பாஸ்கர், பதவியை ராஜினாமா செய்ய மாட் டேன் என்கிறார். அவரை விலக்க, முதல்வரால் முடியவில்லை. அவருக்கு, தினகரன் ஆதரவாக உள்ளார்.

அரசின் நிதி நிலைமை மிகவும் மோச மடைந்துள்ளது. வருவாயை பெருக்க, அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. கட்சி பிரச்னைகளை தீர்ப்பதற்கே, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நேரம் போத வில்லை.
இந்நிலையில், கட்சி இணைப்பு நாடகத்தின் பின்னணியில், சசிகலா குடும்பம் இருப்பதை அம்பலப்படுத்தி, பழனிசாமி தந்திரத்தை, பன்னீர் அணியினர் முறியடித்துள்ளனர். இதனால், இணைப்பு சாத்தியமா என்றும் தெரியவில்லை. இதே நிலை நீடித்தால், ஆட்சி கவிழும் வாய்ப்புள்ளதாக, அ.தி.மு.க., வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-நமது நிருபர்-

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (64)

 • bairava - madurai,இந்தியா

  இது போன்ற துரோக நாடகத்திற்கு பரம ரசிகர்கள் தமிழக மக்கள் மட்டுமே ஆகவே இவனுங்க எல்லாம் இன்னும் தமிழர்களை ஏமாற்றி பட்ட நாமம் போட நடிக்குறானுங்க,,,மக்கள் பிரச்சினையை தீர்க்க இங்கு ஒரு அரசு இல்லை ஆட்சி இல்லை இது ஒரு வெட்கக்கேடு ஆட்சியை காப்பாற்றவும் கட்சியை காப்பாற்றவும் சின்னத்தை காப்பாத்தறவனும் போராடுருவனும் இருக்குறானுங்க

 • baskeran - london,யுனைடெட் கிங்டம்

  ஜெயலலிதாவே சசிகலா& குடும்பம்பத்தை முழுமையாக விலக்கிவைக்கவில்லை . காரணம் அவர்கள் பக்கபலமாகவும் அதிரடிஅரசியலுக்கு துருப்புசீட்டாகவும் பயன்பட்டார்கள் . அதற்கான லாபத்தை அனுபவித்தார்கள் இன்று கஷ்டத்தையும் அனுபவிக்கிறார்கள் . அவர்கள் அதிமுக வுக்கு தேவையா இல்லயா என்பதை அதிமுகவின் கடைசி தொண்டந்தான் முடிவு செய்ய வேண்டும் பதவி வெறிபிடித்த பண்ணீரோ அல்லது பழனியோ அல்ல

 • Suresh Ulaganathan - Bangalore,இந்தியா

  ஏன் டாஸ்மாக் கடைகளை ஒவ்வவாறு M L A வீட்டுஅருகில் வைக்க வேண்டியது தானே. ஏன் மக்கள் வசிக்கும் இடத்தில வைக்கிறார்கள். 122 M L A க்கள் இன்னும் சசிகலாவுக்கு தான் ஆதரவு தருகிறார்கள். உதாரணமாக டாஸ்மாக் கொள்முதல் சசிகலா குடும்பம் தான் வணிகம் நடத்துகிறார்கள். உண்மையாக இவர்கள் சசிகலாவை நீக்கிவிட்டதாக என்று சொன்னால் டாஸ்மாக் கடைகளை நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றிவிட்டு ஏன் மீண்டும் ஊருக்குள்ளே ஏன் துவங்கவேண்டும்.? சசிக்கு இன்னும் இவர்கள் பணத்தை கோடி கோடியாக சம்பாதித்து கொடுக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.

 • Suresh Ulaganathan - Bangalore,இந்தியா

  ஜெயலலிதா யாரை எங்கே வைக்க வேண்டும் என்று நன்றாக தெரியும். அதனால் தான் அவர் பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவியை தந்தார் உயிரோடு இருக்கும்போதே . முன்னர் சசிகலாவின் ஆதரவு 122 பேர் தற்போது மனம் மாறினார்கள் என்றால் நம்ப முடிய வில்லை. கூவத்தூரில் ஆட்டம் போடும்போது தெரிய வில்லையா ? தற்போது பதவி என்றவுடன் ஏதோ யேசுநாதரை போல் நடிக்கிறார்கள். இந்த 122 பேரும் மக்களால் நிராகரிப்பு படுவார்கள் ஒருவேளை நகராட்சி தேர்தல் நடந்தால். அதனால் தான் இவர்கள் ஒபிஸ் பக்கம் பேச துவங்கி உள்ளனர். இதில் சின்னம் ஒன்றும் இல்லை. விஜயபாஸ்கர் கதை என்ன ஆனது. மேலும் 3 அமைச்சர்கள் என்ன ஆனார்கள் 85 கோடி விஷயத்தில் .இவர்கள் அனைவரும் 10 தினத்திற்கு முன்பு தினகரனை அண்டி உள்ளனர். தற்போது எங்கே தாங்களும் சோதனை வந்து விடுமோ என்று பயந்து கொண்டு ஓர் அணி என்று கோஷம் போடுகிறார்கள்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  ஜெ ஆட்சி செய்ய ஆரம்பித்த பிறகு. இந்த மறைமுக ஊடுருவல் ஆரம்பித்து விட்டது. ஜெ பெயரால் இந்த கொள்ளைக்காரர்கள் தமிழகத்தை சுருட்ட ஆரம்பித்தனர். எங்கும் நீக்கமற இவர்கள் நிறைந்து , அட்டைகள் போல ரத்தத்தை உறிஞ்ச ஆரம்பித்துவிட்டனர். ஒரு சமயம் இவர்கள் செய்த அதிகப்படி கலாட்டாவால் , ஊழல் புகாரில் சிக்கி, ஜெ சிறை செல்ல நேர்ந்தது. அப்பொழுதும் அடங்காமல் இவர்கள் சுற்றி சுற்றி வந்து இயற்க்கை வளங்களை கொள்ளையடிப்பது என்பது முதல். சாராய வியாபாரம் வரை அனைத்திலும் வியாபித்தனர். ஜெயின் மறைவு இவர்களுக்கு இருந்த ஒரே திரையையும் நீக்கி, இப்பொழுது முழு மூச்சுடன், உத்வேகத்துடன் , தமிழக அரசின் ஒரே அங்கீகரிக்கப்பட்ட கொள்ளைக்காரர்கள் என்று வர துடிக்கின்றனர். மத்தியை ஆளும் பி ஜெ பி அரசு , தனது முயற்சியை தமிழகம் பக்கம் திருப்பவே இல்லை. அதற்க்கான சூழ்நிலை இல்லை, சந்தர்ப்பமும் இல்லை என்று தெரிந்ததும், தமிழகம் என்று ஒன்று உண்டு என்பதையே மறந்துவிட்டனர். பாவம் மக்கள் இலவசங்களுக்கு, எம்ஜிஆர் அவர்கள் மேல் இருக்கும் பற்றுதலும், கருணாநிதி அவர்கள் மேல் வந்த வெறுப்பாலும், கிடைத்த ஒரு சில காசுக்காகவும் , ஜெயலலிதா அவர்கள் மட்டுமே தமிழகத்தை காப்பாற்ற வந்த தேவதை என்ற உருவாக்கத்திலும் , நடந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக குத்தி தீர்த்துவிட்டனர். பாவம் பி ஜெ பி அது இருந்த இடம் கூட புல் விளையாமல் போயிற்று. இப்போது அதே கொள்ளையர்கள் , தங்களின் பண பலத்தை வைத்துக்கொண்டு , அரசு அதிகாரிகளை வளைத்தும், பதவியில் இருப்பவர்களை வளைத்தும் , ஆட்சியை கைப்பற்ற துடிக்கின்றனர். ஓட்டு போட்ட நமக்கோ , நாம் செய்த தவறை பற்றிய கவலையோ, அல்லது பொறுப்போ இல்லாமல், விரட்டி விட்டோமே அந்த பி ஜெ பி இந்த கூக்குறையை செய்கிறது என்று நமக்கு நாமே ஆறுதலை தேடிக்கொள்கிறோம். நமது தவறை என்றுமே நாம் ஒத்துக்கொள்வது இல்லை என்பதே உண்மை.. நினைத்து திருந்தப்போவதும் இல்லை. அன்று மொழி உணர்வில் ஒரு கொள்ளை கும்பல், அடுத்து வீர வசந்தத்தில் வேறு ஒரு கொள்ளை கும்பலை ஆட்சிக்கு கொண்டுவந்தோம், தவறு நம்முடையதே. இதில் அடுத்தவரை குறை கூற நமக்கு யோகியதை கிடையாது.

 • krishna - cbe,இந்தியா

  ஆக மொத்தத்தில் இந்த இரு அணிகளின் குடுமி பிடி சண்டையில் பாதிக்க படுவது தமிழக மக்கள் மட்டுமே.அதிகாரத்தை யார் கைபற்றுவது என்பதில் குறியாக உள்ளனர்.மக்களின் பாடு திண்டாட்டம் தான்.இவர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் தயவில் பதவிக்கு வந்து இப்போது கோடிகளில் புரள்கின்றனர்.கூவத்தூரில் கும்மாளம் அடித்தனர்.

 • manivannan - chennai,இந்தியா

  இந்தியா என்ன உலகமே தமிழ்நாட்டு அரசியலை பார்த்து சிரிக்கிறது... இவர்களோ யாரோ எக்கேடு கேட்டு போங்கடா,, என்று தாங்கள் செய்வதை மட்டுமே செய்கிறார்கள். ஆனால் அரசு செயல் படாமல் செக்ரட்டரியாட்டில் அவரவர் சீட்டில் உட்கார்ந்து பேசிவிட்டு அதோடு நாள் முடிந்துவிடுகிறது.

 • Kalyani S - Ranipet,இந்தியா

  இதே நிலை நீடித்தால், ஆட்சி கவிழும் வாய்ப்புள்ளதாக, அ.தி.மு.க., வட்டாரத்தில் பேசப்படுகிறது............... அப்படீன்னா ஓபிஎஸ் முதல்வர் கனவு டமாலா....................

 • karunchilai - vallam,இந்தியா

  குடும்பத்திலில் பல புற்றீசல்கள் உள்ளன. ஒன்று மாற்றி ஒன்று தலைமை ஏற்கத் தலைத்தூக்கும், உதாரணமாக, வெங்கடேஷ்,ராவணன்,திவாகரன், .... நீ... ண்டு கொண்டே... போகும்

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  தேச நேசன் அவர்களே, உங்களுக்கு அரசியல் புரியவில்லை. அதாவது 122 MLA க்கள், 30 க்கும் மேற்பட்ட MP க்கள், 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கட்சி குழு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தும் ஏன் 12 MLA க்கள் வைத்துள்ள OPS காலில் விழுகிறார்கள் என்று உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. EPS க்கு இத்தனை பேர் ஆதரவு இருந்தும் இரட்டை இலையை முடக்கினார்கள். சொல்ல போனால் EPS க்கு தான் இரட்டை இலை கொடுத்திருக்க வேண்டும் ஆனால் பாஜக வின் நிர்பந்தத்தால் தேர்தல் கமிஷன் இலையை முடக்கியது. இனிமேலும் 122 MLA க்கள், 30 MP க்கள் 80 சதவிகிதம் உறுப்பினர்கள் ஆதரவு இருந்தும் மத்திய அரசு கொடுக்கும் நிர்பந்தம் காரணமாக தேர்தல் கமிஷன் இரட்டை இலையை மீண்டும் முடக்கலாம் என்ற காரணத்தால் இரு அணிகளும் இணைந்தால் தான் மீண்டும் இரட்டை இலை கிடைக்கும் என்பதால் தான் இணைய பேச்சுவார்த்தை. மேலும் இப்போது OPS பாஜக வின் கட்டுப்பாட்டில் உள்ளார், அதனால் இரட்டை இலை சின்னம் EPS க்கு கிடைப்பது மிகவும் கடினம் தான் என்பதால் தான் இத்தனை பேச்சுவார்த்தைகளும். நீங்கள் தொலைகாட்சிகளில் விவாத மேடைகளை பாருங்கள், அதில் தான் இந்த விவரத்தை நான் தெரிந்து கொண்டேன்.

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  'டாஸ்மாக்' மூடலால், வருவாய் கணிசமாக குறைந்துள்ளது. அதை சரிக்கட்ட, அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதைச்சொல்ல வெட்கமாயில்லை ? இப்படி ஊற்றிக்கொடுத்து மக்களை குடிகாரனாக்கி அந்த வருமானத்தில் அரசு நடத்த வேண்டுமா? நாசகார கும்பல்

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  சசி குடும்பம் நாடகம்: இ.பி.எஸ்., தந்திரம் இரட்டை இலை சின்னத்திற்கான ஏமாற்று வேலை...இது உண்மை போல் தான் தெரிகிறது....சசிகலா, தினகரன் இவர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தால் மட்டுமே அவர்கள் கட்சியில் இல்லை என்று அர்த்தம்..இல்லை என்றால் எல்லாம் நாடகம் தான்...அதிமுக இவ்வளவு மோசமாக இருக்குமா..?

 • raja - tamilnadu,இந்தியா

  நாடகம் உச்சக்காட்சி நடக்குது வேடம் களையும் நேரம்வந்தது . பிஜேபி தாமதப்படுத்தாமல் ஜனாதிபதி,ஆட்சிக்கு உத்தரவு கொடுக்கவேண்டும்

 • rajan - kerala,இந்தியா

  இன்றைய இலை விலை பட்டியல்... வாழை இலை - ₹4 வெற்றிலை - ₹1 கறிவேப்பிலை - ₹5 இரட்டை இலை - ₹60 கோடி

 • பாரதி - Chennai ,இந்தியா

  பன்னிரு செல்வம் சசிகலாவை எதிர்த்தபோது அவருக்கு இருந்த ஆதரவு வரவேற்பு தற்போது ஜெய்குமாருக்கோ அல்லது பழனிசாமிக்கோ இல்லை . ஏனெனில் கூவத்தூர் கரையை துடைக்க முடியாது . பன்னிருக்கு அதிமுக தொண்டர்கள் ஆதரவு உள்ளது .

 • dinesh - pune,இந்தியா

  இல்ல, தெரியாமத்தான் கேட்குறேன். உங்களுக்கு மத்தவங்கள ஏமாத்துறத தவிர வேற ஒண்ணுமே தெரியாதா?

 • K.Sugavanam - Salem,இந்தியா

  பவர் ஏஜென்ட் காணவே காணோம்? எங்க போயிட்டாரோ?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அரசின் அன்றே கொல்லுவான்... தெய்வம் நின்று கொல்லும்... ஆனால் இங்கே அரசனும் சரி இல்லை... ஆண்டவனையும் காண வில்லை...

 • dharma - nagpur,இந்தியா

  முடியல........................ கிராண்ட்மாஸ்டர் ஆட்சியை கலைச்சுருங்க

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  அவனுகளை அப்படியே சாக விடுங்க... எப்படியும் மக்களை சந்தித்து அவர்களால் ஓட்டு கேக்க முடியாது.....பன்னீர் அணி ஒழுங்கா தனித்து செயல்பட்டு ஒரிஜினல் அதிமுக என்று நிரூபிக்க பார்க்கலாம் ............முடிஞ்சா இந்த ஆட்சியை கவிழ்த்து விட்டு மறு தேர்தல் கொண்டு வர பார்க்கலாம்...அப்போது மக்கள் தெளிவாக தங்களுக்கு யார் வேண்டும் என்று முடிவு செய்ய வசதியாக இருக்கும்.............

 • sugumaran - chennai,இந்தியா

  அது எனோ தெரியவில்லை சசிகலா குடும்பம் எதை செய்தாலும் அதில் எதோ ஒரு வில்லங்கம் வருகிறது.காரணம் ரொம்ப அதிமாக சூது,இப்படி அரசியல் செய்தால் அதில் சிக்கலில் தான் முடியும் என்பதை நாம் பார்க்க முடிகிறது.அரசியலில் சூது இருக்க வேண்டியது தான் ஆனால் சூதே அரசியல் ஆகா முடியாது அது நிலைக்காது.

 • Gnanam - Nagercoil,இந்தியா

  தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய சோதனை. அரசு இருந்தும் ஆட்சி இல்லை. ஆளுநரும் இல்லை. கூடவே கடன்தொல்லை வேறு. மத்திய அரசும், குடியரசு தலைவரும் நிலைமையை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்களா? தயவுசெய்து கவனிக்கவும்.

 • Anandan - chennai,இந்தியா

  மொத்தத்தில் களவாணி கோட்டம். இதற்க்கு தலைவியாய் இருந்தவர் எப்படி இருந்து இருப்பார்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தந்திரம் செய்யும் திறமை இல்லாமலா அம்மாஜியையே வளைத்துப்போட்டு தமிழகத்தை கொள்ளை அடித்து இருப்பார்கள்?

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  நடக்க முடியாமல் ஒட்டு கேட்டு வந்த ஜெயாவுக்கு ஒட்டு போட்டு மாபெரும் தவறு செய்தவர்கள் தமிழர்கள். அந்த தவறை சரி செய்ய மீண்டும் விரைவில் தேர்தல் வர வேண்டும்.

 • PENPOINT,INKLAND - ZEN EYE,இந்தியா

  மோடியும் ,பா ஜக வும் தமிழகத்தில் ஏன் செல்வாக்கு பெறமுடியவில்லை ? அவர்களது பேச்சையும் செயலையும் தமிழர்கள் விரும்புவதுபோல் இல்லையே ? ஏன் ?//தாழ்த்தப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிய ஆரம்பித்ததால்தான் துணிவிலை கூடியது என்று ஈ.வெ,ரா .வைபோல் சொல்லியிருந்தால் ,திருமவளவனே ஆதரித்திருப்பார் அது இல்லை .போகட்டும் அந்த நடிகை படிதாண்டா பத்தினியும் அல்ல நான் முற்றும் துறந்த முனிவரும் அல்ல என்று அண்ணாதுரை இலக்கியநயத்தோடு சொன்னதுபோல் சொல்லியிருந்தால் சத்தியராஜ் போன்ற நடிகர்கள் பாராட்டியிருப்பார்கள் .அதுவும் இல்லை . மதுரையில் திமுகவினரால் தாக்கப்பட்ட இந்திராவுக்கு சேலை முழுவதும் இரத்தம் தெறித்தது .அப்பொழுது கருணாநிதி ,"இந்திராவின் சேலை இரத்தம் அடிபட்டதால் அல்ல ,அவர் பெண் என்பதால்" என்று சொன்னார் [கருணாநிதி கீழ்த்தரமாக சொன்னார் ,நான் நாகரிகமாக எழுதியுள்ளேன் -கருத்து ஒன்றுதான் ]அப்படி மோடியும் சொல்லியிருந்தால் பெண்ணுரிமைவாதிகள் புகழ் பதிகம் பாடியிருப்பார்கள் .இதுவும் மைனஸ் .அடுத்து ,கட்சியைவிட்டு சென்ற மூத்த தலைவர்களை "உதிர்ந்த உரோமம் " என்றார் ஜெயலலிதா .அப்படியாவது பேசி மக்கள் காதுகளை குளிரவைத்து இருக்க வேண்டும் .அந்த எண்ணமே இல்லை சரி இந்தமாதிரி தமிழக அரசியல்வாதிகள் போல் மோடி இல்லாவிடினும் , ஊராருக்கு கெடுதல் ,துன்பம் வந்தபோது எதுகை மோனையில் கவிதை வாசித்துவிட்டு ,தனக்கு என்று ஒன்று வரும்போது பாமர தமிழில் பரிதவித்து அறிக்கை விடுகிறாரே வைரமுத்து அதுபோல் இருந்தாலாவது தமிழ் ஆர்வலராக தங்களை சொல்லிக்கொள்வோர் பா ஜ .க வை ஆதரிப்பார்கள் .இது எதுவுமே செய்யாமல் பா ஜ க வை ஆதரிக்க தமிழர்கள் என்ன மடையர்களா ?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அதே, அதே.

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  தினகரன் லஞ்சம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை .அவரிடம்தான் அதிகமான சட்டசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் .அவர் லஞ்சம் கொடுக்க முயற்சித்து இருந்திருந்தால் கட்சியின் மீது இருக்கும் விசுவாசம்தான் .பன்னீர் கூத்துக்கு விசுவாசம் என்றால் வரவிலகினம் தெரியாது .இன்னும் கொஞ்சநாளில் எல்லாம் அடங்கிவிடும் .தம்பிதுரையை பொதுச்செயலாராக ஆக்கவேண்டும் .

 • Mohan D - Boston,யூ.எஸ்.ஏ

  எப்போதும் போல நாடகம் போட்டாங்க , எல்லோரும் நம்பிட்டீங்கனு நினைச்சா, இப்படி ஒரு செய்தி போடுறீங்க. கழுதை போடுற விட்டைல முன் விட்டை என்ன, பின் விட்டை என்ன???

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  இன்று அம்மா சாவில் மர்மம் இருக்கு, அதற்கு விசாரணை தேவை என்று கூறுகிறார்கள், ஆனால் OPS முதல்வராக இருந்த போது, காவல் துறை மற்றும் உள் துறையை கையில் வைத்து என்ன செய்து கொண்டிருந்தார்? அம்மாவை கடைசி வரையில் பார்க்கவில்லை என்று கூறும் OPS , டிசம்பர் 5 தேதி யார் சொல்லி முதல்வராக பொறுப்பேற்றார்? இவர் உண்மையான விசுவாசி என்றால், அம்மா என்னிடம் நேரில் சொல்லட்டும் நான் முதல்வராக பதவி ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்ல வேண்டியது தானே. ஒருவேளை முதல்வராக தொடர்ந்திருந்தால் இவற்றை எல்லாம் மறைத்திருப்பார், EPS கூட பதவி ஏற்றது முதல் நல்லது சிலவற்றை செய்துள்ளார், நிச்சயம் EPS OPS ஐ விட நன்றாக ஆட்சி செய்வார். மேலும் EPS ஒன்றும் இன்று வந்தவர் அல்ல, அவர் OPS ஐ விட மிகவும் சீனியர். MGR காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவர், சேவல் சின்னத்தை எதிர்த்து ஜானகி அணியில் OPS ஐ போல எதிர்த்து போட்டியிட்டனர் அல்ல. ஏன் கட்சியில் OPS ஐ தவிர வேறு யாரும் முதல்வர் ஆகா கூடாதா? ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மிக்ச்சர் சாப்பிடுபவர் என்று பலராலும் கிண்டல் செய்யப்பட்டவர் என்பதை மறக்க வேண்டாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement