Advertisement

சசி குடும்பத்தை மொத்தமாக நீக்க வேண்டும் என பன்னீர் அணி...திட்டவட்டம்!:தேர்தல் கமிஷனில் கொடுத்த பத்திரத்தை வாபஸ் பெற வலியுறுத்தல்

சென்னை:'அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு துவங்க வேண்டுமானால், ஜெ., மர்ம மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு, அரசு பரிந்துரை செய்ய வேண்டும். சசிகலா, தினகரன் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தையும், கட்சியை விட்டு நீக்க வேண்டும்; அவர்களது நியமனம் தொடர்பாக, தேர்தல் கமிஷனில் கொடுத்த பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற வேண்டும்' என, பன்னீர் அணியினர் திட்டவட்டமாக அறிவித்து உள்ளனர்.
இதையெல்லாம் செய்ய முன்வராமல், பழனிசாமி அணியினர் நாடகம் ஆடுவதாகவும், பன்னீர் அணியினர் பகிரங்க புகார் தெரிவித்து உள்ளனர். அ.தி.மு.க., அணிகளை இணைப்பதற் கான நடவடிக்கைகளை, இருதரப்பினரும் துவக்கி உள்ளனர். இது தொடர்பாக, நேற்று, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலை மையில், அவரது அணியினர் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பின், முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி கூறியதாவது:

ஜெ., மரணத்தில் உள்ள மர்மம் விலக, சி.பி.ஐ., விசாரணை வேண்டும். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும், கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பது தான், எங்கள் கோரிக்கை.அதன் அடிப் படையில், ஆட்சியில் உள்ளவர்கள், 'தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறோம்' என, கூறினர்; அதை நம்ப முடியவில்லை. ஆட்சி யில் இருப்பவர்கள், சசிகலா பொதுச் செயலர் எனக்கூறி, தேர்தல் கமிஷனில் பிரமாண பத்திரம் கொடுத்துள்ளனர். அதே போல, துணை பொதுச் செயலர் தினகரன் என்றும், பிரமாண பத்திரம் தந்துள்ளனர்.

அந்த பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற வேண்டும். அதன்பின், சசிகலா, தினகரன்
ஆகியோரிடம், ராஜினாமா கடிதம் பெற வேண்டும். பின், ஜெ., செய்வதை போல, சசிகலா, தினகரன் குடும்பத்தினரை வெளி யேற்றுவதாக, அறிக்கை வெளியிட வேண்டும்.

முதல்வராக உள்ள பழனி சாமி, ஜெ., மர்ம மரணத்திற்கு, சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என, மாநில அரசு சார்பில், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இந்த இரு கோரிக்கைகளையும், முதலில் நிறைவேற்ற வேண்டும். ஆனால்,அவர்கள் தரப்பில், தான்
தோன்றித்தனமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மூத்த அரசியல் வாதியான தம்பிதுரை, 'முதல்வராக பழனிசாமி தான் இருப்பார்' என்கிறார். நாங்கள் முதல்வர் பதவி, பொதுச்செயலர் பதவிகேட்கவில்லை.நாங்கள், கோடிக் கணக்கான மக்களின், தொண்டர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, சி.பி.ஐ., விசாரணை கேட்டோம். கட்சியை அழிக்கும் நிலையில் உள்ள, சசிகலா குடும்பத்தை வெளி யேற்ற வேண்டும் என்று தான் கேட்டோம். தம்பிதுரை, எதற்கு இப்படி கூறுகிறார் என, தெரியவில்லை.

கிண்டலடிக்கிறார்
தினகரன், பல்வேறு வழக்குகளில் சிக்கி இருப்ப தால், அவரை காப்பாற்ற, சசிகலா குடும்பம், இவர்களை பயன்படுத்துவதாக தகவல் வருகி றது. தினகரன் விலகுவதாக அறிவித்தது, எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என, கூறி னோம். அதை, அமைச்சர் ஜெயகுமார் கிண்டல டிக்கிறார். 'அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றதும், நான் சொன்னதால் தான் என கூட, பன்னீர்கூறுவார்'என்கிறார்.

பக்குவமில்லாதவராக பேசுகிறார். இப்படி அவ மானப்படுத்திவிட்டு, எப்படி பேச்சுக்கு கூப்பிட முடியும்? மூன்றாம் தர அரசியல்வாதி போல, ஜெயகுமார் பேசுகிறார். பேச்சுக்கு தயார் எனக் கூறி, மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களாக உள்ளவர்கள், தொண்டர்களை இழுக்க முயற்சிக்கின்றனர்.

'ஏற்கனவே ஊழலில் மலிந்துள்ள, அவர்களோடு சேர்ந்து விடாதீர்கள்' என, எங்களிடம் தொண்டர் கள் கூறுகின்றனர். தற்போது, ஜெ., இல்லை. கருணாநிதி, வயது முதிர்ச்சி காரணமாக, அரசியல் ஈடுபாடு இல்லாமல் உள்ளார்.

இத்தகைய சூழலில், தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவி வருகிறது. வெற்றிடத்தை நிறைவேற்றக் கூடிய நிலையில், பன்னீர் செல் வம் வந்து கொண்டிருக்கிறார். அதனால், ஊழல் சாம்ராஜ்யத்தோடு பேச்சு நடத்த வேண்டாம் என, தொண்டர்கள் வற்புறுத்துகின்றனர்.

பழனிசாமி, சசிகலா தயவால் முதல்வரானார். சசிகலா குடும்பத்தின் முதல்வராகவே உள்ளார். எங்களுக்கு எழும் சந்தேகம், சசிகலா குடும்பத்திற்குள் உள்ள குடுமிப்பிடி சண்டை யில், தினகரன் முதலாவதாக வந்தார். அவரை வெளியேற்ற, சசிகலா, அவரது கணவர் நடராஜன், தம்பி திவாகரன் ஆகியோர் கூட்டு சேர்ந்து, இவர்களை பகடை காயாக்கி, நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.

பேச்சு நடக்காதுஇந்த அரங்கேற்றம் மூலம், அ.தி.மு.க., தொண்டர்கள் முதுகில், சசிகலா குடும்பம்
குத்துவதற்கு, பழனிசாமி உறுதுணையாக இருந்துவிடக் கூடாது. நாங்கள், மக்களை சந்திக்க தயாராக உள்ளோம். மக்கள், எப்போது தேர்தல் நடந்தாலும், முதல்வராக, பன்னீர் செல்வத்திற்கு ஓட்டளிக்க தயாராகிவிட்டனர்.

எனவே, கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், பேச்சு நடைபெறாது. அவர்களுக்கு பயம் வந்து விட்டது. பேச்சு நடத்தினால், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாரும், 'பன்னீர்செல்வம் தான் முதல்வராக வேண்டும்' எனக்கூறி விடுவர்; அனைத்து, எம்.எல்.ஏ.,க்களும் இங்கு வந்துவிடுவர். ஜெய குமார், முதல் நாளில் கூறும் போது, தினகரன் குடும்பத்தை நீக்கி வைப்பதாகக் கூறினார். ஆனால், சசிகலா பெயரை கூறவில்லை. எங்க ளுக்கு வரும் செய்திகள், தற்போது நடப்பது நாடக மாக இருக்குமோ என்றசந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

வாய்ப்பை இழக்கின்றனர்தர்ம யுத்தம் துவங்கிய போது வைத்த கோரிக் கைகளை நிறைவேற்றினால், இருதரப்பு பேச்சு உறுதியாக நடைபெறும். இல்லையென்றால், அவர்கள் தான் வாய்ப்பை இழக்கின்றனர். கோரிக்கை நிறைவேற்றப்படாத போது, குழு அமைக்க முடியாது.வருமான வரி சோதனை காரணமாக, அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அவர் மீது, முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். யாரோ ஒருவர், இவர்களை இயக்கிக் கொண்டி ருக்கிறார். அதனால், முதல்வரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

'எந்த நிபந்தனையும் நாங்கள் விதிக்கவில்லை!'பன்னீர் அணி நிபந்தனைகள் குறித்து, மூத்த அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நேற்று, சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமிதலைமையில் ஆலோசனை நடத்தினர். அதன்பின், எம்.பி., வைத்திலிங்கம் கூறியதாவது: எங்கள் தரப்பில், பேச்சு நடத்த குழு அமைக்கப் பட்டு உள்ளது. பேச்சுக்கு தயாராக உள்ளோம். நாங்கள், எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எங்களுடைய ஒரே எண்ணம், அனைவரும் ஒன்றிணைந்து, ஜெ., ஆட்சியை, நான்கு ஆண்டுகள் தொடர வேண்டும்; கட்சியின் சின்ன மான, இரட்டை இலையை திரும்பப் பெற வேண்டும்.

ஒன்றுபட்டு செயல்பட, பேச்சுக்கு தயாராக உள்ளோம். ஜெ., மரணத்தின் போது, பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தார். அவர் நினைத் திருந்தால்,விசாரணை கமிஷன் அமைத்தி ருக்கலாம்.இது தொடர்பான, பொது நல வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வந்த தும், அதை செயல்படுத் துவோம். எங்கள் மத்தி யில், எந்த குழப்பமும் இல்லை. சிலர் பேசும் போது, சில வார்த்தைகள் தவறாக வந்திருக் கலாம்; அதை யாரும் பெரிதுபடுத்தக் கூடாது.

தேர்தல் கமிஷனில், முதலில் வழக்கு போட்டது அவர்கள் தான். எனவே, அவர்கள் தான் வாபஸ் பெற வேண்டும். எந்த நாடகமும் இல்லை. அவர்களை விலகும்படி வற்புறுத்தி னோம். மகிழ்ச்சியோடு ஒதுங்கிக் கொள்வதாக, தினகரன் அறிவித்துவிட்டார். பொதுச் செயலர், துணை பொதுச் செயலர் நியமனம்தொடர்பான, அத்தனை கேள்வி களும், தேர்தல் கமிஷனில் நிலுவை யில் உள்ளன. தேர்தல் கமிஷனில் முடிவு காணப்பட்டதும், அனைத்து நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (59)

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  அணிகள் ஒன்று பட்டு வராது. ஆளுநரிடம் ஆட்சியை ஒப்டைக்கனும்.

 • SANKAR - calgary,கனடா

  "TOO MANY COOKS SPOIL THE SOUP" என்று சொல்வார்கள்.. அது போல OPS அணியில் ஆகட்டும் அம்மா அ தி மு க கட்சியின் தரப்பில் இருந்து ஆகட்டும் ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லி கொண்டிருக்கிறார்கள்...தலை இருக்க வால் ஆடுவதை பார்த்தால் பன்னீரின் கட்டுப்பாட்டில் அவர் கட்சி இல்லை என்று தெரிகிறது...

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  The EPS side won't accept the demands of OPS at any cost and they need the support of Sasikala and her family for their survival in the party and remain in posts and power for another 4 years without any problem. This woman Sasikala won't resign or leave the party along with her family members like" Rushi Kanda Cat "who runs around the Uri. She has enjoyed her whole life like a VVIP during the tenure of Jayalalithaa and now she won't sacrifice all those enjoyments and privileges for the sake of the Katchi and Aatchi. The EPS side MPs,Ministers and MLAs are only acting drama daily in order to get the Symbol of Two Leaves by such union drama and dialogues with OPS side.Finally both the side won't and never come into understanding and get United and the party will be vanished and disappeared from Tamil nadu politics once for all.The names of MGR and Jayalalithaa are also forgotten by our people gradually in future. Any time the present government will be collapsed and in next assemply election one great,strong,Dianamic, able and well experienced, humble and noble person will become as our CM from any other political parties other than DMK and AIADMK parties to take our state towards various development fields near future. Now the God is in search of such person and definitely and surely He will send him or provide him to our state in coming days.

 • s t rajan - chennai,இந்தியா

  குடும்பக் கொள்ளைக்கு வித்திட்ட கட்சி காங்ரஸ். அதில் முங்கித் திளைப்பது தி(ரு).மு.க. தென்னகத்தில், முலயாமின் சுயநல பார்ட்டி (SP) வடக்கில். கொள்ளைக் குற்றவாளி லல்லு முட்டாள் மனைவியை முதல்வராக்கி பள்ளி செல்லா மகன்களை மந்தி(ரி)யாக்கிய சாணக் கொள்ளை மஹான். ஏன் எற்காக நம் "உச்ச" நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கொரு நிரந்தர முடிவு காண வேண்டாமா?

 • Thamizhan - Tamizhnadu,இந்தியா

  அதிமுக பன்னீர் அணியில் ஒருத்தனாவது ஆம்பளையா இருந்த தனியா தேர்தலில் போட்டியிட்டு முதலில் வெற்றி பெறுங்கள் பிறகு கட்சியை இணைப்பது பற்றி பேசலாம் .ஜெயலலிதாவின் கால் செருப்பை நக்கிய நக்கிகள் என்பது உலகிற்க்கே தெரியும் போங்கடா டேய் .எனக்கு தனிப்பட்ட முறையில் இப்படி பேசி மக்களை முட்டாள் ஆக்க நினைக்கும் ம பா பாண்டியராஜன் மற்றும் கே பி முனுசாமி என்கிற உருப்படாக்கூடி போதும் இந்த அணியை வெட்டி சாய்க்க .எப்படி வெட்டி வேத்தா பேசுறாங்கய்யா .பழனிசாமி அணி சசிகலா மற்றும் அவரது குடும்பம் இல்லாமல் தேர்தலில் போட்டி இட்டால் வெற்றிக்கனி நிச்சயம் .பன்னீர் அணி ஒரு கூமுட்டை மடையர்கள் அடங்கிய மக்களையோ ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் .என் நேரத்தை வீணாக்கிவிட்டதாக எண்ணுகிறேன் .

 • skandh - chennai,இந்தியா

  எடப்பாடி அணியினர் தெளிவாக சசிகலா, தினகரனை ஒதுக்கியாச்சு. ராஜினாமாவை வாங்குன்னா என்ன? ராஜினாமாவை கேபீ முனுசாமியை அனுப்புங்கள் வாங்கி வரட்டும். சசிகலாவை யார் நீக்குவது. இடப்படியா? ஜெயகுமாரா? செங்கோட்டையனா? யாருக்கு அந்த அதிகாரமிருக்கு, யாரிடமிருக்கோ அவரிடம் போய் கேட்க சொல்லு அர்த்தமில்லாமல் பேசும் கே பீ முனுசாமியை...கே பீ முனுசாமியை எல்லாம் பேச சொன்னாள் அடாவடித்தனம் தான் அதிகரிக்கும். இந்த ஜாதி வெறிநாய் கட்சியை விட்டே வெளியேற்றமும்.

 • Rajasekar K D - Kudanthai,இந்தியா

  இதுவரை நடந்த ஊழல் அரசியல் போதும். இனிமேல் அமைச்சர்கள், MLA , கௌன்சிலோர் உள்பட யாரும் ஊழல் செய்ய விட கூடாது. அப்படி நடந்தால் பொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்து நாக்க பிடுங்கிறமாதிரி கேள்வி கேட்ட வேண்டும். அதெற்கு பொதுமக்கள் ஒன்று சேர வேண்டும். கோர்ட் அப்புறம் கேட்கட்டும்.

 • Meenu - Chennai,இந்தியா

  இந்த கூட்டத்தில் இருப்பவர்கள் எவரும் எந்த பதவிக்கும் ஆசைப்படுபவராக தெரியவில்லை

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  சொந்தமாக யோசிக்க அனுமதிக்காமல் கூனர்களாக வைத்திருந்தார் ஜெயா இந்த இரு அணிகளை சேர்ந்தவர்களை . அவர் போய் சேர்ந்தபிறகு ,சசி இவர்களை கூனர்களாக வைத்திருந்தார் . இவர்கள் நல்லநேரம் சசி ஜெயா சமாதி போனதிலிருந்து சனி பிடித்து , கவர்நர், மோடி , உச்சநீதிமன்ற தீர்ப்பு என்று சசியை தூக்கிப்போட்டது . இப்போது இந்த பொம்மைகளை ஆட்டுவித்த இரு கொள்ளையர்கள் இல்லாததால் , கொள்ளைப்பங்கு கொடுக்காமல் அள்ளிக்கொள்ள ஆட்சியை பிடித்து வைத்துள்ளார்கள் . கேவலம் , ஆள்வது உலகநாடுகளிலில் ஓட்டுபோட்டவர்களுக்கு தொண்டு செய்திட .இங்குமட்டும் ஆள்வது கொள்ளையடிக்க என்று , போட்டி பலமாக இருக்கு . இவர்கள் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் . எல்லோரும் சொல்வார்கள் AIADMK வில் அடிமட்ட தொண்டன் அமைச்சர் ஆவான் என்று . இப்போது தெரிகிறதா அடிமட்ட தொண்டன் அமைச்சர் ஆகி திருடுவான் , தலைமை கொள்ளையர் இல்லாவிட்டால் திமிறுவான் என்று . இவர்கள் ஊறிய குட்டை உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி , கொள்ளைக்கு வடிவமிக்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் .

 • kumar - chennai,இந்தியா

  திரு OPS அவர்கள் தற்பொழுது எடுக்கும் தர்மம் யுத்தம் போற்ற தக்கதே. அதிமுகவின் வரலாறை சுமார் 40 வருடங்களாக கொன்று கவனித்து வருகிறேன். 1977 முதல் 1987 வரை திரு MGR அவர்கள் இந்திரா காந்தியின் தலைமையோடும் மொரார்ஜி தேசாய் தலைமையோடும் நல்ல உறவை கொண்டிருந்தார் மத்திய அரசோடு அனாவசியமாக மோதியதே இல்லை. தமிழ்நாட்டுக்கு ஒரு குறையும் இல்லை. மேடம் ஜ்ஜ் வந்தபிறகுதாஹ்ன் தான்தோன்றி தனமாக மத்திய அரசோடு மோத ஆரம்பித்தார். ஆனால் ஒன்றும் கிழிக்க முடியவில்லை, எல்லோரிடம் பகைமைதான்.ஆதலால் திரு OPS அவர்கள் , திரு MGR அவர்கள் வழி சென்று பிஜேபி யை ஆதரித்து ஒரு நல்ல அதிமுக வகை இருக்க வேண்டும் சசிகலா என்ற நச்சு பாம்பு ஆதரிக்கும் எடப்பாடி அதிமுக தமிழ்நாட்டுக்கு வேண்டவே வேண்டாம்

 • kc.ravindran - bangalore,இந்தியா

  பிஜேபி தமிழ் நாட்டில் வராது.... எடுபடாது .....வரவிடமாட்டோம் ......டெபாசிட் கூட கிடைக்காது...... எல்லாம் சரி. அகில இந்தியாவும் மோடியை ஆதரிக்கும்போது அத்துணை கோடி வோட்டர் மடையர்களாக இருக்க வாய்ப்பில்லை. இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இதைவிட தமிழகத்தை சுரண்டிய சாராய முன்னேற்ற கழகங்கள் தான் வேண்டும் என்றால் தமிழ் நாட்டின் தலை எழுத்தை யாராலும் தலையை சொறிந்து அழித்துவிடமுடியாது. இளைய சமுதாயத்தினர் சிந்தித்து செயல் பட்டு இப்போதுள்ள நடந்த நடந்துகொண்டிருக்கின்ற நடக்கபோகின்ற அசிங்கங்களை துடைத்தெறிய முன்வரவேண்டும்.

 • pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா

  தனியா வருணும் பன்னீரு, நீங்க வேணாப் பாருங்க , இந்தெ ஆர் கே நகர் இடைத்தேர்தல் போய், அடுத்த பொதுத்தேர்தல் வந்தா இவரு டாப்புல வந்து அடுத்த முதலமைச்சரா வந்திடுவாரு. நீங்க வேணாப் பாருங்களேன்.ஆனா அதுக்கு இந்த, எடப்பட்ட, ஆத்தாடி, இந்த இடைப்படடி பயலோட சேரப்படாது . அதான் நான் சொல்லுறேன். யாரு, இவரை, இந்த ============ பய ஓ பி எஸ் aa? அடியேய், இவரு இப்பெடியெ பதறாம இருந்து சிதறாம காரியஞ்செஞ்சாதான் முதல்வாரா வருவாரு. அப்படி வந்துட்ட நா வேணா அடுத்த பாரதராதனாவுக்கு சிபாரிசு பன்றேன், போதுமா? எப்பூடி?

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  ஜெ வால் ஓரங்கட்டப்பட்டவர்களில் இந்த முனிசாமியும் ஒருவர்...

 • Laser Eyes - Chennai,இந்தியா

  ஊழல் செய்த அமைச்சர்கள் இரு தரப்பிலும் இருப்பதால், இன்ஸ்டாகிராம் மஸ்தான் இரு அணியையும் IT கிராபிக்ஸ் மூலம் தன வலைக்குள் கொண்டுவர திட்டமிடலாம். பிரிவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பதவி ருசி கண்ட பூனை. எந்த சூழ்நிலையிலும் முதல்வர் பதவி எனக்கு மட்டும் என்று திட்டவட்டமாக இருப்பவர். அரிது அரிது இரு அணிகளும் இணைவதரிது, இணைவதாயினும் மத்திய அரசுக்கு ஜால்ரா, காவடி தூக்காமல் இருப்பதரிது. மத்திய அரசின் ஒற்றர்கள் இரு அணியிலும் இருக்கிறார்கள். பிரிவதிலும், இணைவதிலும் முக்கிய பங்கு வகுக்கிறார்கள். உண்மையான அ தி மு க அம்மாவோடு முடிந்துவிட்டது.என்பதை உண்மையான தொண்டன் நன்கு அறிவான், சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு முடிவு கட்டுவான்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  நல்ல வேளை. இது சதிகலா போட்ட நாடகம் நாடகம் என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்டதற்கு. மோடி அரசு OPS அவர்களுக்கு முழு பக்க பலமாக இருப்பதால் OPS அணி எந்த விதத்திலும் சதிகலா அணியோடு எந்த வித நெருக்கடிக்கும் உட்படாது. சதிகலா அணி அறிந்து கொண்ட ஒரு உண்மை இது ஆகவே தான் இந்த தினகரன் வெளியேற்றம் மற்றும் இணைப்பு நாடகங்கள்.

 • Rajasekar K D - Kudanthai,இந்தியா

  நீ இவர்களுடன் ஒன்று சேராதே. அம்மா அவர்களின் MLA 122 பேர் ஒரு பக்கம் இருக்கும் போது நீ கட்சியை உடைக்காமல், இரட்டை இலையை கேட்காமல் தமிழ்மக்களின் நலனுக்ககாக ஒடுங்கியிரு பார்ப்போம்.

 • Larson - Nagercoil,இந்தியா

  இந்த ஆட்சியை கலைத்து விடுவதே நல்லது.. சசி குடும்பம் கட்சியை அழித்தால் பரவாயில்லை.. தமிழ்நாட்டு மக்களையும் சேர்த்து அழித்து கொண்டிருக்கிறார்கள்..

 • பாரதி - Chennai ,இந்தியா

  பன்னிரு செல்வம் சசிகலாவை எதிர்த்தபோது அவருக்கு இருந்த ஆதரவு வரவேற்பு தற்போது ஜெய்குமாருக்கோ அல்லது பழனிசாமிக்கோ இல்லை . ஏனெனில் கூவத்தூர் கரையை துடைக்க முடியாது . பன்னிருக்கு அதிமுக தொண்டர்கள் ஆதரவு உள்ளது .

 • Pandiyan - Chennai,இந்தியா

  நீங்க ரெண்டு அணிகளும் சண்டைபோட்டு மக்கள் மத்தியில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது ..இரண்டு அணிகளிலும் உள்ளவர்கள் ஊழல்வாதிகள்தானே என்று பேச துவங்கிவிட்டார்கள் ...இப்பொழுது மக்கள் கவலை தமிழ்நாட்டு உரிமைகளை பெற்றுத்தர அதிகாரத்தில் உள்ள எந்தத்தலைவரும் இல்லையே என்பதுதான் ..ஏற்பட்டிருக்கிற வெற்றிடத்தை நிரப்புவது யார் என்பதுதான் ..

 • raja - tamilnadu,இந்தியா

  தினகரன் சசிகலா மன்னார்குடி கூட்டம் என்ன முட்டாளுங்களா கோடி கோடி செலவு செய்து அதிமுக விலைக்கு வாங்கப்பட்டது.. சசிகலாவின் பினாமி ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது . ஜெயலலிதாவால் சசிகலாவை குடும்பத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை ,இப்பொது நடப்பது எல்லாம் தெருக்கூத்து ,பிஜேபி உண்மையாக இருக்குமானால் இவர்களாட்சி கலைக்கப்படவேண்டும் தவறான வழியில் பணம் சேர்த்தவர்கள் பணம் பறிமுதல் செய்யப்படவேண்டும் சிறையில் தண்டனை அனுபவிக்கவேண்டும்

 • Paradesi - Mumbai,இந்தியா

  இப்படியே பேசி மக்களை இம்சை பண்ணாதீங்க , ஒன்னு சேருங்க , இல்லாட்டி வேற வேல இருந்தா பாருங்க ..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அய்யா ..உங்க இவருடைய பஞ்சாயத்தை சீக்கிரம் முடித்து கொண்டு ஸ்தம்பித்து விட்ட தமிழக அரசு இயந்திரத்தை ஓட்ட பாருங்கள்..இல்லை என்றால் ஆட்சியை கலைக்க ஆளுநரிடம் சொல்லுங்கள்... இழுத்து கொண்டே போனால் உங்களுக்கு வாக்கு அளித்தவன் கெதி என்னா ஆவது...

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இணையவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டு சூழலில் இரு பக்கமும் சற்று அமைதி காக்க வேண்டும், தேவையற்ற, சர்ச்சைக்குரிய வார்த்தைகளை தவிர்க்க வேண்டும், அதை மீறி பேசும்போது வாத, பிரதிவாதங்கள் தோன்றும், விரிசல் அதிகமாகும், நோக்கம் வீணாகும், இவர்களின் இந்த செயல் சசி கூட்டத்திற்கு சாதகமாகவே முடியும், இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பேசி ஒரு முடிவு எடுப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றே தோன்றுகிறது

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  'அதிமுக என்னும் மாஃபியா இயக்கம்,' A2 குற்றவாளி சசிகலா அவர்களை நிர்வாக இயக்குனராக கொண்ட 'மன்னார்குடி மாஃபியா' மற்றும் 'திடீர் புனிதர்' OPS அவர்களை நிர்வாக இயக்குனராக கொண்ட 'மணல் மாஃபியா' என்னும் இரு கிளை மாஃபியாக்களை கொண்டிருந்தது.ஒருங்கிணைந்த இந்த 'அதிமுக என்னும் மாஃபியா இயக்கத்தின்' ஏகபோக உரிமையாளர், இந்தியாவின் A1 குற்றவாளியென அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா அவர்கள்.. நடராஜன், திவாகரன், விவேக் போன்றோர் மன்னார்குடி மாஃபியாவின் ஒற்றர் படை தளபதிகள்...... நாத்தம் விச்சு, ராமமோகன் ராவ் போன்றோர் மணல் மாஃபியாவின் தளபதிகள்... OPS, சேகர் ரெட்டி, கரூர் அன்புநாதன் போன்றோர் கஜானாவை கையாளும் கணக்கர்கள்.... அனைத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும், கவுன்சிலர்களும் ஒன்றிணைந்த அதிமுக மாஃபியாவின் களப்பணியாளர்கள்.... இந்த இரு மாஃபியாக்களை வைத்து கொண்டு A1 குற்றவாளி ஜெயா கருணையற்ற முறையில் தமிழகத்தையே சூறையாடி வந்தார்.. பல பல ஆயிரம் ஆயிரம் கோடி திட்டங்கள் என்று 110-விதியில் மட்டுமின்றி, அவ்வப்போது விஷன், மிஷன், குஷன் என்று வாய் வந்ததையெல்லாம் திட்டங்கள் என்ற பெயரில் அறிவித்து விட்டு சுமார் 50% முதல் 60% திட்ட தொகையை மனசாட்சியற்ற மாஃபியாக்கள் மூலம் சுருட்டி வந்தார்... இதனால் ஏறக்குறைய திட்டங்களும் நிறைவேற்ற முடியாமல் அல்லது துவக்க நிலையிலேயே மூடுவிழா கண்டன... மாஃபியாக்கள் கடும் உழைப்பின் மூலம் இப்படி கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணம் மலையென குவிந்தது.. இந்த பணத்தை வைத்து, அனைத்து தேர்தல்களிலும் மாஃபியாவின் ஒற்றர் படை மற்றும் தரகர்களின் மூலம் தரங்கெட்ட தேர்தல் கமிஷனை பல ஆயிரம் கோடிகள் கொட்டி விலைக்கு வாங்கி, போலி வாக்காளர்களை சேர்ப்பது, ஒவ்வொரு ஓட்டுக்கும் சில பல ஆயிரங்கள் என்று விலை போன தேர்தல் கமிஷனின் துணையுடன் பண விநியோகம் செய்வது.. அதன் மூலம் தேர்தலில் வெற்றியை விலை கொடுத்து வாங்கினார்.. இயற்கையிலேயே அடிமைத்தனம் கொண்ட அதிமுக தொண்டர்கள் இந்த வெற்றியை பார்த்து வியந்து ஜெயாவை கடவுளாகவே கருதத் தொடங்கிவிட்டனர்.. தங்கள் வாழ்க்கை சூறையாடப்படுகிறது என்பதையே அறியாமல் 'அம்மா அம்மா' என உருகி கதறத் தொடங்கினர்.. சில அடிமைகள் ஜெயாவின் குற்றங்களை சுட்டி காட்டும் நபர்களை கடித்து குதறவும் ஆரம்பித்தனர்.. இதையே ஜெயா அவர்கள் தனக்கான பாதுகாப்பு கவசமாக்கிக் கொண்டார்.... தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெறுவது ஒன்றே அரசியல் என்று நினைத்து கொண்டார்.. கொள்ளைகள் தொடர்ந்தன.. சூறையாடப்பட்ட தமிழகம் தொழில், விவசாயம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, மின்சாரம் என அனைத்து துறைகளிலும் பின் தங்கியது... பொதுத்துறைகள் அனைத்தும் வரலாறு காணாத நஷ்டத்தில் தள்ளப்பட்டன.. பட்ஜெட்டில் பற்றாக்குறை அதிகரித்தது, அதற்கு ஈடாக உலக வாங்கி முதல் கொண்டு, உள்ளூர் கூட்டுறவு வாங்கி வரை கடன் லட்சம் கோடிகளில் வாங்கப்பட்டது.... மறுபுறம் தேர்தல் மேடைகளில் 'மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்' 'அமைதி வளம் வளர்ச்சி' என்று சினிமா பஞ்ச் வசனங்கள் பேசியும், இட்லி, தோசை, சால்னா, ஆடு, மாடு, கோழி என்று இலவசங்களை காட்டியும் தன் கட்சியின் கொத்தடிமைகளையும் அப்பாவி பொது மக்களையும் ஏமாற்றி வந்தார்.......... இன்று தமிழகத்தின் மொத்த கடன் தொகை நாலரை லட்சம் கோடிகளை தாண்டி சென்றுவிட்டது.. அந்த கடன்களுக்கு வட்டி கட்டி மாளவில்லை.. விவசாயிகள் தற்கொலை, வேலை வாய்ப்பு அறவே இல்லாத நிலையில் இளைஞர்கள், குடி நீருக்காகவும், ரேஷன் பொருட்களுக்காகவும் அப்பாவி பொது மக்கள் நடு ரோட்டில் நின்று போராடி கொண்டும் வாழ்க்கையை ஒட்டி கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் இவை எதை பற்றியும் துளி கூட கவலை கொள்ளாமல், அல்லது மக்களை திசை திருப்ப ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்தி கொண்டு, இரண்டு மாஃபியாக்கள் தங்களுக்குள் அதிகார போட்டியை நிகழ்த்தி கொண்டிருக்கிறார்கள்..என்னவோ இவனுங்களுக்கு மானம் மரியாதை, சத்தியம், வாக்கு இதெல்லாம் தான் முக்கியம் என்பது போல இன்று டயலாக் விட்டுகிட்டு இருக்கானுங்க. ஒரு A1 குற்றவாளியின் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்யும் கயவர்கள்... பணத்திற்காகவும், பதவிக்காகவும் எவன் காலிலும் விழாத தயங்காத மானங்கெட்ட அடிமைகள்..

 • K,kittu.MA. - Anna Nagar,இந்தியா

  இந்த முனுசாமி இப்படி பட்ட ஆள் என்பதால் தான் மந்திரி பதவி தராமல் அம்மா ஒதுக்கினார்.. குழப்ப வாதி.. பழனிசாமியை சசி கலா ஆள் என்கிறார்..பின்னர் நடராஜன் பகடைக்காய் ஆக பார்க்கிறார் என்கிறார்.. சசி கூட்டம் வேறு நடராஜன் கூட்டம் வேறு.. முனுசாமி கீழ்பாக்கம் போகவேண்டிய ஆள்.

 • Suresh - Nagercoil,இந்தியா

  பொதுச்செயலாளர் தேர்தல் 15 நாட்களுக்குள் நடத்தவேண்டும் என்ற ஒரே நிபந்தனை மட்டுமே போதுமானது, பன்னீர் தரப்பு நிபந்தனைகளை அடுக்கிக் கொண்டு போவது விடை காண முடியாத கணக்காகிவிடும். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் என்று நிபந்தனை விதிப்பது யாரிடம் யார் நிபந்தனை விதிப்பது எண்று தெரியாமல் பேசும் செயல். தற்போது பன்னீர் முதல்வர் பதவியை குறிவைப்பதை விட பொதுச்செயலாளர் பதவியே நம்பகத்தன்மையுடையது, முக்கியத்துவம் வாய்ந்தது, வீட்டிற்குள் குடியேறின பிறகு தேவைக்கேற்ப பொருட்களை படிப்படியாக வாங்க நினைப்பதே சிறந்த செயல்...

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  சசிகலா பக்கம் இருக்கறவன் எல்லாம் ஊழல்வாதின்னா அப்போ ரெண்டு பேரும் இணைஞ்சிட்டா ஊழல் கூட்டணி ஆயிடுமே? பன்னீர் அணி இப்போது சொன்ன கோரிக்கைகளில் உறுதியாக இருந்தால் அது நடந்த பின்னரே இணைப்பு நடவடிக்கையில் இறங்கினால் நல்லது....................... இல்லையென்றால் அவர்கள் தனித்தே செயல்படலாம்....... எப்படி இருந்தாலும் இடை தேர்தல் வரும் அதன் பின்னர் உள்ளாட்சி தேர்தல் வரும்........... எனவே அவர்கள் மிகவும் ஸ்ட்ராங்கா செயல்படனும்...ஏன்னா சசிகலா கோஷ்டி என்ற பெயருடன் களம் இறங்கினால் எடப்பாடி கோஷ்டி உள்ளாட்சி தேர்தலில் மண்ணை கவ்வும் இடை தேர்தலிலும் மண்ணை கவ்வும்.... ரெட்டை இலை சின்னம் கூட அவர்களுக்கு கிடைக்காது............. அதனால் பயத்தில் பேதி ஆகி பன்னீர் செல்வம் பக்கம் சில பேர் ஓடி வந்து விடுவார்............

 • Prem Kumar - Bangalore,இந்தியா

  அண்ணா தி.மு.கவின் இரண்டு பிரிவினரும் ஒன்று சேர்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக செய்திகள் வருகின்றன. ஆர்.கே.நகர் தேர்தலில் எண்பத்தொன்பது கோடி பணம் புழக்கத்தில் தினகரன் தவறு செய்திருக்கிறார் என்பதை நாம் நம்புகிறோம் என்றால்- இந்த தண்டிக்கப்பட கூடிய தவறுக்கு முதல் நபராக இருந்தவர் விஜயபாஸ்கர் என்பதையும் நாம் நம்பினால், அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட குறிப்பில் காணப்பட்ட அணைத்து அமைச்சர்களும் - முதலமைச்சர் உள்பட அனைவரையுமே ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்று தான் நாம் முடிவெடுக்க வேண்டும். இவர்களை அரவணைத்து கொண்டு சமரசம் அல்லது ஒன்று சேர்வது என நிலைப்பாட்டை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். எனவே, ஆர்.கே.நகர் தேர்தலில் பண புழக்கத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட அனைவரையும் ஆட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கும் நிலையிலிருந்து தான் சமரச பேச்சு தொடங்கப்பட வேண்டும், அப்போது தான் மக்கள் நான்காண்டுகள் தூய்மையான அரசு நமக்கு கிடைத்துள்ளது என உணர்வார்கள்.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  சசி குரூப் ஆட்சியை பிடிக்க காய் நகர்த்தியதே அதிகாரத்தில் இருந்தால் தங்கள் குற்றங்களிலிருந்து தப்பித்துவிடலாம் என்பதே. உண்மையாக ஒன்றிணைக்கும் எண்ணம் இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே பன்னீர் அணியுடன் பேசியிருக்கலாமே. பொது செயலர், துணை பொது செயலர், நியமனம்( தங்களுக்குள் தீர்மானித்து), மற்றும் ஆர் கே நகர் தேர்தலில் தனித்து நின்றது, பன்னீர் அணிக்கு எதிராக பிரச்சாரம் செய்தது, பணத்துக்கு ஓட்டுக்கள் வாங்க முயற்சித்தது, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமையுடன் விண்ணப்பித்தது பிறகு பணம் கொடுத்தாவது அடைந்துவிடுவது எல்லாம் கட்சியை ஒன்றிணைப்பதின் செயல்களா. மக்கள் இவைகளை எல்லாம் கேட்டு ஏமாறுவார்கள் என்று எதிர்பார்கிறார்களா. குற்றங்களிலிருந்து தப்பிக்க முயலும் உத்திகள் போலல்லவா தோன்றுகிறது. இவர்களை நம்பி இணைந்தால் நாளை என்பது கேள்விக்குறி ஆகிவிடும். காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்த மாநில கட்சிகளின் நிலை தான் அ தி மு க வுக்கும் ஏற்படும். இது நிதர்சனம் - தி மு க மற்றும் சமாஜவாதி கட்சிகளே நல்ல உதாரணம். தன் பலவீனம் வெளி வந்தவுடன் சமரசம் - அரசியல் சாணக்கியம். இதை பன்னீர் அணி உணர்வார்களா. மிகவும் யோசித்து, தன் நல விரும்பிகளின் எண்ணம் கேட்டு பன்னீர் அணி தீர்மானிப்பது, செயல் படவோ வேண்டும். கூட இருந்து குழி பறிக்கப்படலாம் அதிலிருந்தும் இன்றே தற்காப்பு நிலையை எடுக்கவேண்டும் பன்னீர் அணி. பின்னால் முடியாமலேயே போய் விடும். ஜெயலலிதா நிலை கடைசியில் எல்லோரும் அறிந்ததே. மக்களுக்கு வெளிப்படையாக நல்லது செய்தவர் கதி. பன்னீர் அணியே உஷார்.

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  எல்லோரும் இந்நாட்டு மன்னரே>>>>>>>>>>> தான் மட்டுமே வாழ வேண்டும் என நினைப்பது சுயநலமே. >>>>வாழனும் வாழவிடனும். அதுதான் நன்மையை பயக்கும். நாட்டில் அரிச்சந்திரன் ஒருவன் தான் >>>>>>>>>>>>>>>

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஊழலில் இரண்டு கோஷ்டிக்கும் பங்கு உண்டு... இருந்தாலும் ஒருவர் யோக்கியன் என்ற ஒரு மாயையை ஏற்படுத்துவது தவறு... நான்கு ஆண்டுகள் ஜனாதிபதி ஆட்சியை நடத்தி அதன் பின்னர் தேர்தல் வைக்கலாம்... உடனே தேர்தல் நடத்தினால் குழப்பம்தான் மிஞ்சும்... 4 ஆண்டுகளில் நிர்வாகத்தை சரி செய்து அதிகாரிகளுக்கு அடிப்படை நெறிமுறைகளை ஏற்படுத்தலாம்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement