Advertisement

கோகுலம் சிட்ஸ் நிறுவனம்: ரூ.13 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு

கோகுலம் சிட்ஸ் நிறுவனங்களில் நடந்த, முதல் நாள் சோதனையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இரண்டாவது நாளில், பல நுாறு கோடி ரூபாய் பரிவர்த்த னைகள், கணக்கில் காட்டப்படாமல் இருந்தது தெரிய வந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, தமிழக வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: கோகுலம் குழுமத்தின் உரிமையாளர், கோகுலம் கோபாலன், சிட் பண்ட் தவிர்த்து, சினிமா, கல்வி என, பல துறைகளில் முதலீடு செய்துள்ளார். நேற்று முன்தினம் காலை, சோதனை துவங்கிய போது, கோபாலனும், அவரது மகனும், நிர்வாக இயக்குனருமான பைஜு மற்றும் செயல்பாடுகள் பிரிவு மேலாண் இயக்குனரும், மருமகனுமான பிரவீண்
ஆகியோர், கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள, பூர்வீக கிராமமான வடகராவில் தங்கியிருந்தனர்.

அவர்களை, சென்னைக்கு வரவழைத்து, மாலை யில் விசாரணையை துவக்கினோம். கர்நாடகத்தில் மட்டும் சோதனை முடிந்தது. எனினும், சென்னை மற்றும் கேரளாவில், சில இடங்களில் சோதனை தொடர்கிறது. நேற்று வரை, 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.

இந்நிறுவனத்தின் சீட்டுத் தொகை திட்டத்தில் சேர்ந்து, தேவை காரணமாக, பாதியிலேயே தொகையை எடுக்கும் வாடிக்கையாளர்கள், அதை திரும்பிச் செலுத்துவர். அதற்காக, வாடிக்கை யாளர்கள் செலுத்தும் வட்டித்தொகை முழுவதுமாக மறைக்கப்பட்டு உள்ளது. அவ்வாறாக கிடைத்த பெருந்தொகையை, பைனான்ஸ் தொழிலில் முதலீடு செய்துள்ளனர்.

இவர்களிடம் ஏற்கனவே, 2004ல் வருமான வரி சோதனைநடந்தது குறிப்பிடத்தக்கது. கோகுலம் சிட்ஸ் குழுமத்திற்கு, துபாயில் பெரிய ஓட்டல் உள்ளிட்ட சில சொத்துகள் உள்ளன. அவற்றின் பரிவர்த்தனையில், சில குளறுபடிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், திருவனந்தபுரத்தில், கோகுலம் மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆய்வு நிறுவனமும் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு, மாணவர்களிடம் அதிக நன்கொடை பெறப்பட்டு உள்ளது. அதற்கு, உரிய கணக்குகள் இல்லை. அவற்றை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது.

செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தின் போது, வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை, கத்தோலிக்க சிரியன் வங்கியில் செலுத்தி உள்ளனர். அதில், சட்ட விரோதமாக ஏதேனும் நடந்துள்ளதா என்பதை, அவ்வங்கியின் சென்னை கிளையில் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (8)

 • POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ

  வழக்கம் போல இந்த செய்தியும் பரபரப்பாக பேசப்பட்டு வெகு சீக்கிரம் நம் மக்களுக்கு மறந்து போய் விடும் .ஏனெனில் இந்தியாவின் ஆட்சியாளர்களும் ,அதிகாரிகளும் ,சட்டங்களும் பெரும் பணமுதலைகளுக்கே சலாம் போடும் சாபக்கேடு தொடர்கிறது .இளிச்சவாய இந்தியர்கள் இருக்கும்வரை ஒரு மாறுதலும் வரப்போவதில்லை என்பதை மிகவும் வருத்தத்தோடு இங்கே பதிவு செய்கிறேன் .

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  இந்த மாதிரியான பிளேடு கம்பனிகளெல்லாம் 90% கேரளாவை தலை இடமாக கொண்டு நடத்தப்படுபவை. இந்த சீட்டிங் சீட் கம்பெனிகளுக்கு தில்லி வரை சப்போர்ட் உள்ளதால், கோல்ட் லோன், சீட்டு என்று பாமர மக்களிடம் கொள்ளை அடிப்பதுமில்லாமல், அரசு வரி ஏய்ப்பும் செய்வதும் உண்டு.

 • Meenu - Chennai,இந்தியா

  கட்சி நிர்வாகிகள், மாதிரிகள், ஆஸ்பத்திரி டாக்டர்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் அதிபர்கள், டிரஸ்ட், சினிமா துறை போன்றவற்றை ரெய்டு செய்து பார்த்தாலே தெரியும் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்திருப்பார்கள் என்று. இவர்களை விட்டு விட்டு, அப்பாவி பொது மக்களை, சம்பளம் வாங்குறவங்களை தான் நோண்டுவார்கள்.

 • Rajinikanth - Chennai,இந்தியா

  அப்படியே ஸ்ரீராம் சீட்ஸ் ஐயும் சோதனை போட்டா நல்லது ....இதுலயும் நிறைய கோல்மால் இருக்கும்னு நினைக்கிறோம்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமல் இந்த அளவுக்கு ஏமாற்றினால் - மக்களை எந்த அளவுக்கு ஏமாற்றி இருப்பார்கள்?

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  முதலில் தமிழக முந்திரிகளை பிடித்து உலுக்குங்கள். தமிழகத்தின் பட்ஜெட் பிரட்சனை தீர்ந்துவிடும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement