Advertisement

டீ கடை பெஞ்ச்

சசி குடும்பத்தை பழி வாங்குகிறதா ஜெ., ஆன்மா?


''பேனர் தயாரிக்கறதுக்குள்ள, தாவு தீர்ந்து போயிடுத்து ஓய்...'' என, பெஞ்சில் இடம் பிடித்தார் குப்பண்ணா.
''என்ன விஷயம் பா...'' என்றார் அன்வர் பாய்.
''மதுரை தமுக்கம் மைதானத்துல, அரசு பொருட்காட்சி நடக்கு... இதுல, அரசு துறைகள் சார்புல, ஸ்டால்கள் அமைச்சிருக்கா ஓய்...
''ஸ்டால்கள்ல, முதல்வர் பழனிசாமி படம் இருக்கோ, இல்லையோ, மாவட்ட அமைச்சர்கள் ராஜு, உதயகுமார் நலத்திட்ட உதவிகள் வழங்கற மாதிரி, பேனர், படங்கள் கண்டிப்பா இருக்கணும்னு உத்தரவு போட்டிருக்கா...
''இவா ரெண்டு பேரும், நலத்திட்ட
உதவிகள் வழங்கற படங்களை எடுத்து, பேனர் தயார் பண்றதுக்குள்ள, அதிகாரிகளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிடுத்து ஓய்...
''போன வருஷம், சட்டசபை தேர்தல் நடந்ததால, அரசியல் தொல்லை இல்லாம, பொருட்காட்சியை நடத்தி முடிச்சோம்... இந்த வருஷம் படுத்தி எடுக்கறாளேன்னு அதிகாரிகள் புலம்பறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''கேமரா பேர்ல வசூல் பண்றாரு பா...'' என, அடுத்த மேட்டருக்கு வந்தார் அன்வர் பாய்.
''யாருங்க...'' என்றார் அந்தோணிசாமி.''சென்னை
பக்கத்துல இருக்கிற இன்ஸ்பெக்டரை தான் சொல்றேன்... 'முக்கியமான இடங்கள்ல, கண்காணிப்பு கேமரா பொருத்த போறோம்'னு, ஏரியாவுல, தீவிரமா வசூல் பண்ணிட்டு இருக்காரு பா...''
என்றார் அன்வர் பாய்.
''அட... போன மாசம் லாரி, ஜே.சி.பி.,க்களை பிடிச்சு, பணம் வாங்கி, உயரதிகாரி, 'டோஸ்' விட்டதும், பணத்தை திரும்ப கொடுத்தாரே, அவராங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''அவரே தான் பா... அப்ப விட்டதை, சீக்கிரமே பிடிச்சுட்டார்... வடபெரும்பாக்கம் குடோன்ல இருந்து போதை பாக்கு கொண்டு போன வேனை பிடிச்சு, கேஸ் போடாம, ஒரு தொகையை
கறந்துட்டாரு பா...''இந்த விஷயம் வெளியில தெரிஞ்சுட்டதால, உதவி அதிகாரி ஒருத்தர், 'மெடிக்கல் லீவு'ல போயிட்டாரு பா...'' என்றார்
அன்வர் பாய்.மொபைல் போனை எடுத்து, ''சண்முகமும், சுரேந்தரும் வந்தா, காப்பி தண்ணி கொடுத்து உக்கார வை... பத்து நிமிஷத்துல வந்துடுதேன்...'' என, உத்தரவிட்டு வைத்த அண்ணாச்சி, ''ஜெயலலிதா
ஆன்மாவை, சாந்திப்
படுத்த போறாவ வே...'' என, கடைசி விஷயத்திற்குள் நுழைந்தார்.''சசிகலா குடும்பமாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''ஆமா... ஜெயலலிதா இறந்ததும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஜெயிலுக்கு போனாங்க... நடராஜனுக்கு உடம்பு சரியில்லாம போயிட்டு... மகாதேவன் திடீர்னு இறந்து போயிட்டார்... தினகரனையும் நட்டாத்துல விட்டுட்டாவ... இப்படி, சசிகலா குடும்பத்துல நிறைய பேருக்கு அடி மேல அடி
விழுதுல்லா வே...''இதுக்கு, 'ஜெயலலிதாவின் இறுதி சடங்குகளை, ரத்த சொந்தங்கள் செய்யாம, சசிகலா செஞ்சது தான் காரணம்... அதுவும் இல்லாம, ஜெயலலிதாவின் ஆன்மா தான், சசி குடும்பத்தை ஆட்டி படைக்குது'ன்னும் சில
ஜோதிடர்கள் சொல்லிஇருக்காவ வே...''அதனால,
ஜெயலலிதாவின் ஆன்மாவை சாந்திப்படுத்த, மலையாள மாந்திரீகர்களை வச்சு, பரிகாரம் செய்ய போறாவ...
திருச்சியில இருக்கிற இளவரசியின் சொந்தக்காரர் ஒருத்தர் மூலமா, இதுக்கான ஏற்பாடுகள் நடக்கு வே...'' என, முடித்துவிட்டு அண்ணாச்சி எழவும், மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

 • A R J U N - ,இந்தியா

  ......சண்முகமும், சுரேந்தரும்...நல்ல கூத்து...இப்படித்தான் ஹன்ஸ்ராஜ் வர்மா ..பத்திரப்பதிவு..இதை எழுதக்கூடாதா...இந்த டி கடை பென்ச்சில்?...எனக்கு நேர்ந்த ஒரு சம்பவம்...சபை மூலம் வீட்டுக்கடன் முடித்து இங்குள்ள சைதாப்பேட்டில்...REGISTRATION DOCUMENT வாங்க போனால் கேட்கப்பட்ட தொகை எத்தனை தெரியுமா...rS 110 பதோளாக ரூ 3000/-கேட்டார்கள்...இதனை cm cell ONLINE எழுதி அப்படி கேட்ட குமாஸ்தாவை இடம் மாற்றினார்...தொடர்புடைய இந்த மூத்த அதிகாரி கோடியில் கொள்ளை அடிக்கிறார்..கண்டுகொள்வதில்லை இந்த அரசு....பின்பு ஒருநாள் எனக்கு சம்மன் வருகிறது..நேரில் வந்து விளக்கம் அளிக்க"உயிருடன் திரும்புவேனா...புகாரில் உண்மை இருப்பதால் யஹானே அந்த குமாஸ்தா மாற்றப்பட்டார்..இந்த IG எப்படி தப்பினார்?..அப்போ இந்த துறை மந்திரியும் உடந்தை?..ஆசிரியர் பார்த்து கொண்டிராமல் செயலில் இறங்கவும்.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  கடப்பாரையை அல்ல , செக்குலக்கையையே விழுங்கிவிட்டு சுக்கு கஷாயம், பெருங்காயப்பொடி சாப்பிட்டால் சரியாகிவிடுமா? ஏதோ நாலு மலையாள மாந்திரீகர்கள் பிழைக்கட்டும். ஆனால் செய்த பாவம் தீரவே தீராது

 • Shree Ramachandran - chennai,இந்தியா

  சசி குடும்பத்தாருக்கு சத்ரு சம்ஹார பூஜை, வனதுர்கா பூஜை, ப்ரத்யங்கிரா அம்மன் பூஜை மட்டுமே தெரியும். சரியானபடி சடங்குகள் செய்யாவிட்டால், அந்த ஆத்ம (ஊழல் ஆத்மா) தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கும்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  அக்னிக்கு தரவேண்டிய உடலை, மண்ணில் புதைத்தது அபசாரம் குலா வளக்கப் படி செய்ய வேண்டியதை செய்திருக்க வேண்டும். மூத்த மகன் அல்லது மருமகன் அல்லது அந்த ஸ்தானத்தில் இருந்து செய்ய வேண்டியதை உடன்பிறவா தங்கை ஸ்தானத்தில் என்று செய்தது தவறுதான். மமதை கண்ணை மாய்த்தது. ஈமக்கி காரியங்கள் செய்து விட்டதும் அம்போ என்று விடக் கூடாது, நிறய இருக்கிறது. முதல் பதினாறு நாட்கள் அதி முக்கியம், அதன் பிறகு பித்துருக்கள் காரியங்கள் நடக்க வேண்டிய திதி naatgla என்று குறைந்தது ஓராண்டுக்கு செய்திருக்க வேண்டியதாய் யார் செய்வது. எல்லாவற்றையும் எதோ நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்ட் போலவும், டாஸ்மாக் என்பது போலவும் நினைத்து கொண்டார்களா.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ///டீ கடை பெஞ்ச்/// டீக்கடைபெஞ்சா? அல்லது டீ, கடை, பெஞ்ச் என தனி தனியாக இருப்பதா எது சரி. நீண்ட நாள் சந்தேகம். பெஞ்சை குறிக்கிறதா அல்லது தனித்தனியாக டீ மற்றும் கடை மற்றும் பெஞ்ச் என்று மூன்றையும் குறிக்கிறதா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement