Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம்: தினகரனால், கட்சிக்கும், ஆட்சிக்கும் பல்வேறு நெருக்கடிகள் வந்தபடியே இருக் கின்றன. எனவே, அவரையும், அவரது குடும்பத்தினரையும் விலக்கி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


டவுட் தனபாலு: சசிகலாவையும் சேர்த்துத்தானே சொல்றீங்க... ஆமா, 'அவர், சின்னம்மா இல்லை... எங்களுடைய அம்மா... சின்னம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட கருங்காலிகள், பச்சை துரோகிகளை, நாங்கள் எந்த காலகட்டத்திலும் ஏற்க மாட்டோம்'ன்னு, ஒரு நள்ளிரவில் கண்கள் சிவக்க பேசினீங்களே... அப்போ நீங்க மயக்கத்தில் இருந்தீங்களா என்ற, 'டவுட்' வலுவாகுதே...!

தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்: விசுவாசத்துக்கு எடுத்துக்காட்டு, பன்னீர்செல்வம். விசுவாசம் என்பதை, அவரைப் பார்த்துத் தான் நாங்கள் கற்றுக் கொண்டோம்.


டவுட் தனபாலு: அந்த விசுவாசத்தால் தானே, ஜெ., அவரை இரு முறை முதல்வராக்கினாரு... மூன்றாவது முறையாக, தனது பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்தாரு... அப்புறம் எதற்கு, சசிகலாவை முதல்வராக்க துடிச்சீங்க... எதையும் நீங்க, தாமதமாகத்தான் கற்றுக் கொள்வீங்களா என்ற, 'டவுட்' வருதே... நீங்க கவனிக்கும் துறையிலும் இதே மந்த நிலை எட்டிப் பார்க்காமல் பார்த்துக் கொண்டால் சரி...!


அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத்: தினகரனை ஒதுக்க, சதி வேலை நடக்கிறது. அதற்காக, தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித் துறையை, பா.ஜ., பயன்படுத்துகிறது.


டவுட் தனபாலு: தினகரன் மீதான அன்னிய செலாவணி வழக்கு விசாரணையும் தீவிரம் அடைஞ்சிருக்கு... ஒருவேளை இதில் தண்டனை உறுதியானால், நீதிமன்ற தீர்ப்பின் மீதும் உள்நோக்கம் கற்பிப்பீங்களோ... அது சரி, கட்சியில் இருந்து தினகரன் ஒதுங்கிட்டாரு... கையில புண் இல்லைன்னா உப்பை அள்ள எதுக்கு பயப்படணும்கறது தான், மக்களின், 'டவுட்'டாக இருக்கு...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

 • kc.ravindran - bangalore,இந்தியா

  ஒரு முக்கியமான கட்சி தலைவரை நீக்க சதி வேலை நடக்கிறது. அந்த பருப்பு இங்கே வேகாது. அவர் கையில் இருக்கும் சதி வேலைகளை அவிழ்த்துவிட்டால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.

 • Ravi . A - Chennai,இந்தியா

  இந்த நாஞ்சில் சம்பத் ஒரு மானம் கெட்டவர். நேற்று ஒரு பேட்டியில் சொல்லும்போது மக்கள் காரி துப்பினால் துடைத்துவிட்டு போவேன் என்று கூறினார். இவரைப்போல் உள்ளவர்களை வைத்துக்கொண்டு கட்சி நடத்தினால் நிலைமை என்னவாகும்.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  இந்த நாடகத்தால் மாநிலத்தின் செயல்பாடுகள் freeze ஆகிக் கிடக்கின்றன . உங்கள் 'பங்காளி ' சண்டையின் நோக்கம் தெரியாத முட்டாள்கள் இல்லை மக்கள்

 • venkat - vellore,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  this will also apply to dmk and media who fooling public.

 • Venkat - vellore,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  அதி்முக இரு அணிகளில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும். நல்லா அடிச்சிக்கிட்டு சாவுங்கடா, உங்களால தமிழகத்தி்ற்கு எவ்வளவு அவமானம் இழப்புனு உங்களுக்கு தெரியுமோ தெரியாதா? ஆனால் நீங்க எல்லாரும் தமிழக மக்களின் கடுமையான சாபத்தி்ற்கு ஆளாகிவிட்டிர்கள், கண்டிப்பா ஒருத்தர் விடாம மொத்தபேருக்கும் இயற்கை தண்டனை கொடுத்தே தீரும்,

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement