Advertisement

தூங்க விடாத சினிமா கனவு - குறும்பட இயக்குனர் கமல் பிரகாஷ்

சமீப காலமாக தமிழ் சினிமாவில் குறும்பட இயக்குனர்களின் வருகையால் தான் புதிய முயற்சிகளும், புதிய படைப்புகளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது. அந்த வரிசையில் கல்லுாரி காலம் முதல் தற்போது வரை வித்தியாசமான குறும்படங்கள் எடுத்து வருபவர் கமல் பிரகாஷ்.
சமீபத்தில் 'ஹைவே காதலி' என்ற 30 நிமிட குறும்படத்தால் பேஸ்புக் , யூ டியுப் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.
பேன்டஸி கதைகள் மூலம் ஒவ்வொரு குறும்படத்திலும் புகுந்து விளையாடும் இவர், தன் 'ஹைவே காதலி' குறும்படத்தை வெள்ளித்திரையில் மின்ன வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நேரத்திலும் 'தினமலர்' வாசகர்களுக்காக மனம் திறக்கிறார்.
பள்ளி, கல்லுாரி எல்லாமே சென்னை தான். இன்ஜினியரிங் படித்தேன். படிக்கிற காலத்திலே சினிமா தான் என முடிவு பண்ணிட்டேன். அப்பவே கேமராவை கையில் எடுத்தாச்சு. ஆரம்ப காலங்களில் கல்லுாரியில் நடக்கும் விழாக்களை 'ஷூட்' செய்தேன்.
இறுதியாண்டு முடிக்கும் போது தெய்வமே , நினைவுரைன்னு இரண்டு குறும்படங்களை
இயக்கிட்டேன். படிப்பு முடிச்சிட்டு சில ஆண்டுகள் தனியார் கம்பெனியில் வேலை பார்த்தேன்.
அந்த காலகட்டத்திலும் எனக்குள் இருந்த சினிமா கனவு என்னை துாங்க விடவில்லை. அப்போதும் 'இருமுகம்', 'ஹோம் டெலிவரி'ன்னு இரண்டு குறும்படங்களை இயக்கி
வெளியிட்டேன். இதற்கு நண்பர்கள் மத்தியிலும் இணையதளத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இனி எல்லாம் சினிமா தான் என முடிவு செய்து என்னுடைய வேலையை உதறிவிட்டு,
கேமராவை எடுத்து என்மேல் உடுத்தி கொண்டேன்.
பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு 2.5 லட்சம் ரூபாய் செலவில் 'ஹைவே காதலி' குறும்படத்தை எடுத்தேன். இதுவும் ஒரு பேன்டஸி கதை தான். காரில் பயணிக்கும் காதல் கதை. ஆனால் அதில்
வித்தியாசமான சுவாரஸ்யம் இருக்கும். ப்ரீவியூ ஷோவிற்கு 450 பேர் வந்ததால், பாதிபேர் தரையில் உட்கார்ந்து தான் படம் பார்த்தனர்.
அனைவரும் பாராட்டினர். சென்னையில் வர்தா புயல் வந்த நேரத்தில் தான் இதற்கான டிரெய்லர் மற்றும் டீசரை யூடியுப்பில் வெளியிட்டோம். புயலிலும் என் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த
அங்கீகாரம் அளவற்றது. பேஸ்புக்கில் பார்த்து, ரசித்து, லைக் கொடுத்த ரசிகர்கள் 2 லட்சத்தையும் தாண்டியது. குறும்படத்தில் ஜெயித்த என் 'ஹைவே காதலி' வெள்ளித்திரையில் விரைவில் உங்களை வந்தடைவாள், என்றார்.
இவரை வாழ்த்த pkamalssngmail.com

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement