Load Image
Advertisement

மெகாலி... ஒரு ரங்கோலி !

  மெகாலி... ஒரு ரங்கோலி !
ADVERTISEMENT
வந்தாரை வாழ்த்தும் தமிழ் ரசிகர்களை, வங்க கரையோர 'வர்தா' புயலாய் கிறங்கடிப்பவர். 'அகற்றவே முடியாது' என அத்தனை கண்களையும் தன்மேல் முடக்கி வைத்த
மெழுகுச் சிலை...'காளை'யர்களின் கல் மனதையும் கற்கண்டாய் மாற்றி கவிதை பாடச் செய்யும் சொற்பதம்... துடுக்கு பார்வையால் துாண்டில் போடும் 'பெங்காலி' ரங்கோலி; அவர் தான் கவிஞர் பா.விஜய்யின் 'ஆருத்ரா' படத்தின் ஆதர்ஷ நாயகி மெகாலி.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக இங்கே பேசுகிறார்...
* மெகாலி பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?
ஓ... கொஞ்சமென்ன... நெறையவே தெரிஞ்சிக்கோங்க... பிறப்பு, வளர்ப்பெல்லாம் கோல்கட்டா. குழந்தை பருவத்திலேயே பள்ளி நாடகத்தில் நடித்த அனுபவம் உண்டு. எனது குடும்பம்
இசைக்குடும்பம் என்பதால் 'கதக்' நடனம் வசமானது. பரதமும் தற்போது கற்றுக் கொண்டேன்.
*'ஆருத்ரா'வில் உங்களின் ஹீரோ பா.விஜய் எப்படி?
ஆருத்ராவில் ஹீரோ, டைரக்டர் என 2 பணிகளையும் அவரே செய்கிறார். நடிக்கும் போது டைரக்டர் மறைந்து விடுவார். டைரக்டர் என்கிறபோது நடிகர் காணாமல் போய் விடுவார். நடிப்பு திறன்களை வெளிக்கொணர்வதில் அவர் சூப்பர் இயக்குனர். அவரோடு நடிப்பது எளிதாக, ஈசியாக இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் நேரம் போவதே தெரியாது.
* உங்களுக்கு பிடித்தவர்?
சந்தேகமே வேண்டாம் ஸ்ரீதேவிக்கு பிறகு நயன்தாரா தான். 'எவர்கிரீன் க்யூட் நயன்'. நான் ஏதாச்சும் ஹீரோ பத்தி சொல்வேனு நினைச்சீங்களோ!
* உங்கள் 'பிட்னெஸ்' சீக்ரெட்?
ரகசியமெல்லாம் ஒண்ணுமில்லை. எப்போதும் சுற்றுப்புறம் துாய்மையாக இருக்க விரும்புவேன். அதிக நீர், பழங்கள் எடுத்துக் கொள்வேன். 'கெமிக்கல்' பொருட்களை அனுமதிப்பதே இல்லை.
*'ஆருத்ரா'வில் மலையாளி பெண் கேரக்டர் எப்படி?
இதற்காகவே மலையாளம் கற்றேன். தற்போது தமிழையும் கற்று வருகிறேன். ரசிகர்களின் இதயங்களை தொடும் கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை.
* பேஸ்புக், டுவிட்டர் என்றால் ஓட்டம் பிடிக்கிறீர்களாமே?
எனக்கு அதில் அதிக ஆர்வம் கிடையாது. சில நேரங்களில் சினிமா குறித்த 'அப்டேட்ஸ்'க்கு அவை உதவும் என்பதை மறுக்க முடியாது.
* நடிப்பில் ரோல்மாடல்?
ஐஸ்வர்யா ராய்
* வியந்த நடிகர்?
சிறுவயதில் இந்தி 'ரீமேக்' படமான 'சத்மா' (மூன்றாம் பிறை) பார்த்தது முதல், கமல் படங்கள் என்றால் எனக்கு உயிர். அந்தப் படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். கமல், ஸ்ரீதேவி மீது
அளவு கடந்த மரியாதை வந்தது. விஜய், அஜித்தும் ரொம்ப பிடிக்கும்.
* தமிழ்நாட்டு உணவுக்கு நீங்க ரசிகையாமே?
தெரிஞ்சு போச்சா... அடிக்கடி 'பொடி தோசையை' தேங்காய் சட்னியுடன் ருசித்து சாப்பிடுவேன்.
பிரியாணியும் 'பேவரைட் புட்' தான்.
* தமிழ் படம் பார்ப்பதுண்டா?
தமிழ் படங்கள் தான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். சமீபத்தில் 'குற்றம் 23' பார்த்தேன்.
* இப்போ என்னென்ன படங்கள் நடித்து கொண்டிருக்கிறீர்கள்?
கைவசம் பல படங்கள் இருக்கு.
meghali.dey01india@gmail.com


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement