Advertisement

சினிமா என்னை கைவிடாது- நடிகர் ராஜா நம்பிக்கை

தாடியும், மீசையும் வளர்த்து சினிமாவிற்காக தன் தோற்றத்தையே மாற்றி கொண்டிருக்கிறார்
25 வயதான ராஜா. மதுரையைச் சேர்ந்த இவருக்கு, சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
பதினெட்டு வயதிலேயே வாய்ப்பு தேடி சென்னை சென்று பல கம்பெனிகளில் ஏறி, இறங்கினார். இவரின் விடாமுயற்சியும், நடிப்பிற்கான தோரணையும் இருந்ததால் இயக்குனர்கள் சிலர் வாய்ப்பளித்தனர். இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா' படத்தில் நடிக்க இவருக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இப் படத்தில் என்கவுன்டர் சீனிலும், பண்ணையாரும் பத்மினியும் படத்தில் கதாநாயகனுக்கு தம்பியாகவும், சேதுபூமி படத்தில் மாப்பிள்ளை வேடத்தில் நடித்திருக்கிறார். பல படங்களில் துணை நடிகர், சிறு வேடங்களிலும், சின்னத் திரை சீரியலிலும் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு இல்லாத நாட்களில் குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
''சினிமாவில் நானும் முத்திரை பதிக்க வேண்டும் என்ற லட்சியம் எனக்குள் இருக்கிறது. தென்மாவட்டங்களில் சினிமா ஷூட்டிங் நடந்தால், தேடிச்சென்று அந்த பட இயக்குனரிடம் அறிமுகமாகி வாய்ப்பு கேட்டு, நடித்து விடுவேன்.
18 வயதில் 'மதுரை சம்பவம்' படத்தில் நடிகர் ராதாரவியுடன் சேர்ந்து நடித்தேன். அதன்பின் சினிமா ஆர்வம் விடவில்லை. என்னை போன்ற பல இளைஞர்கள் சினிமாவில் விடைதெரியாமலே வலம் வருகின்றனர். நானும் சிறந்த நடிகராவேன். சினிமா என்னை கைவிடாது என்ற நம்பிக்கையில் எனது பயணத்தை தொடர்கிறேன்.
ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல் சினிமாவில் சாதிக்க முடியும்,” என்றார்.
இவரை பாராட்ட 72002 11167
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • SENTHIL - dammam,சவுதி அரேபியா

    இதில் என்ன பாராட்டப்படுவற்கு இருக்கின்றது சினிமாவில் நடித்தால் விரைவில் பணம் சம்பாதிக்கலாம் என்று பேராசை பட்டு வருகின்றார்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement