Advertisement

இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை

சென்னை: அமெரிக்காவில் இசைநிகழ்ச்சி நடத்தும் திரைப்பட பின்னணி பாடகர்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது என திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேஸ்புக்கில் வெளியிட்ட செய்தி: கடந்த வாரம் அமெரிக்காவின் சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்தன. ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்தனர். எங்கள் மீது அன்பு காட்டிய ரசிகர்கள் குறித்து பெருமைப்படுகிறோம்.

சட்ட நடவடிக்கைகள் :சில நாட்களுக்கு முன், இளையராஜா வழக்கறிஞர் சார்பில் எனக்கும், என்மகன் சரண், பாடகி சித்ராவுக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் வந்தது. அதில், அமெரிக்காவில்பல இடங்களில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிகளில், இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதி பெறாமல் நாங்கள் பாடக்கூடாது. தடையை மீறி பாடினால், அதிக அபராதம் கட்ட வேண்டியதுடன் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் சட்ட விதிகள் உள்ளது எனக்கு தெரியாது.

‛எஸ்பிபி 50' என்ற இசை நிகழ்ச்சியை எனது மகன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பாடு செய்தார். டோரன்டோ நகர், ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியாவின் பல நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். அப்போது இளையராஜா தரப்பிலிருந்து எந்த தகவலும் வரவில்லை. முன்னர் நான் கூறியது போல், இது பற்றிய சட்டம் எனக்கு தெரியாவிட்டாலும் சட்டத்தை மதிக்க வேண்டும். கீழ்படிய வேண்டும்.

ரசிகர்களுக்கு வேண்டுகோள்:இதுபோன்ற சூழ்நிலையில், இளையராஜா இசையமைத்த பாடல்களை எங்களது குழுவால் இனிமேல் பாட முடியாது. ஆனால், இசை நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும். கடவுள் அருளால், மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளேன். அவற்றை பாடுவேன். வழக்கம்போல் இசை நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் ரசிகர்கள் எந்த விவாதமும் நடத்த வேண்டாம். மோசமான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம். இதனை கடவுள் திட்டமிட்டிருந்தால் அதற்கு நான் அடிபணிய வேண்டும்.
இவ்வாறு எஸ்பிபி கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (198)

 • Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் தெரிந்தவன் தான் மனிதன். அதை விட்டு விட்டு ஏன் இப்படி பணத்தாசைப் பிடித்து அலைகிறாய்?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  பாடலைப் "இன்னொருவர்" அமைத்த இசையை "வேறொருவரை" வைத்து பாடலாம். அதனால், பலன் பெறலாம். ஆனால், இசையமைப்பாளர், அல்லது கவிதையை எழுதியவர் அதை பாட முடியாது பலனடைய முடியாது. இன்னொன்று " இசையால் வசமாகா இதயம் எது ....."

 • p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா

  அப்பா இளையராஜாவுக்கு வணக்கம். நீங்கள் போட்ட பிச்சை தான் இவளவு பாடல்கள் யார் பாடினால் என்ன பொறுத்து கொள்ளுங்கள்.

 • Nagercoil Suresh - India,இந்தியா

  இளையராஜா ஒரு சிறப்பான இசையமைப்பாளர் அதில் மாற்று கருத்து இல்லை. படத்திற்கு இசையமைக்க வாய்ப்புக்கொடுத்தால் இவரே ஒரு படத்திற்கு ஒரு பாடலையும் வாசித்து தன்னுடைய குரலின் கண்றாவியை மக்களை கேட்க வைப்பார் அதிலும் இவர் சிறந்தவர். தற்போது எழுந்திருக்கும் பிரச்சினையை கோர்ட் தலையிட்டு உடனே முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் இல்லையெண்டால் இறந்த இசையமைப்பாளர்கள் கூட இதேபோல் நோட்டீஸ் அனுப்புவார்கள். அடித்த இசைக்கு நல்ல துட்டும் வாங்கி விட்டு தன்னுடைய பின் புத்தியை காட்டிவிட்டார்....

 • RamRV -

  இளையராஜா தன்னுடைய தொழிலில் நிலைபெற்ற பிறகு தயாரிப்பாளர்களுடன் ராயல்டி ஒப்பந்தம் செய்து கொள்ளத் துவங்கினார். இந்த விஷயத்தில் அவர்தான் தமிழ்த் திரை உலகின் முன்னோடி. அதன்படி அவர் அமைத்த இசையை அந்தப் படத்துக்கு தவிர வேறெதற்காவது லாப நோக்கில் பயன்படுத்தினால் அதற்கு உரிய தொகையை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று சட்டபூர்வமான உரிமையை அவர் வைத்திருக்கிறார். இசையமைப்பதற்காக அவர் போடும் ஒப்பந்தத்தில் இது ஒரு முக்கிய பகுதியாகும். மேலும் பல லட்சங்கள் தருகிறோம் ராயல்டி எதற்கு என்று பட முதலாளிகள் கேட்டாலும் அதை ஒப்புக் கொள்ளாமல் தனது நிலையிலிருந்து சற்றும் மாறாமல் இருந்தார். மேலை நாடுகளில் இவை மிகவும் கடுமையாக மதிக்கப் படுகிறது மற்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இந்தியர்கள் இது போன்ற சட்டங்களை அவ்வளவாக மதிப்பதில்லை. எஸ்பிபி, தான தர்மத்துக்காகப் பாடவில்லை. அவருடைய மகனால் நடத்தப் படும் வணிக ரீதியான ஒரு நிகழ்ச்சியில் பணம் சம்பாதிப்பதற்காகத் தான் பாடுகிறார். அதில் அவர் உபயோகப் படுத்தும் மற்றவர்களுடைய பொருட்களுக்கு அதற்கான பங்கைக் கொடுக்க வேண்டியது நியாயமான கடமையாகும். இளையராஜா இந்தப் பாடல்களுக்கு உரிமையுள்ளவர். அந்த உரிமையை தனது சம்பளத்தின் ஒரு பகுதியாக சட்டபூர்வமாக வாங்கியுள்ளவர். தயவு செய்து நாம் இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  காசேதான் கடவுளடா...

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  SPB Oru aayiram nilavu...MGR கண்ட vaanathu விண்ணிலவு... இளையவர் வெறும் மச்சானை பாத்திங்களா...டும் டும் டும்... அம்மா இருந்தவரை வாலை சுருட்டி வைத்துக்கொண்டு இப்போ என்ன தாம் தூம் என்று ஆட்டம் ...

 • K.Sugavanam - Salem,இந்தியா

  உயர்உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது..ஊர்க்குருவிதான்..

 • jagan - Chennai,இந்தியா

  இளையராஜா மற்றவர் பாட்டை பாடி முன்னேறியவர் என்று கூறும் அறிவு ஜீவிகளுக்கு...இப்பவும் ராஜா தெருவில், கல்யாணத்தில், கோவிலில் பாடி சம்பாதிக்கும் சாதாரண மக்களை குறிவைக்கவில்லை...SPB /சித்ரா மாதிரி டிக்கெட் விலை $75,100,150 (எல்லாம் அமெரிக்க டாலர்) என்று ஊரு ஊராய் போய் மில்லியன் கணக்கில் கல்லா கட்டுபவர்களை தான்....Let them cough up the royalty money....No pity for these guys.

 • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

  இதுல பெரிசா ஒண்ணுமேயில்ல இத போய் பெரிசாக்குறீங்களே .... என்ன இனிமேல் எஸ் பி பி ,ஜேசுதாஸ் ஜானகி ஆகியோர் இளைய ராஜா இசை இல்ல்லாமல் அவர்களது பாடலை பாடினால் மக்கள் ரசிப்பார் எனவே இனி மேல் இளைய ராஜ தனது இசையை மட்டுமே பயன் படுத்தவோ விற்கவோ உரிமை உள்ளது அதில் வரும் பிணணிப்பாடகரின் குரலையே பாட்டையோ உரிமை கொண்டாட ராய்லட்டி கொடுக்கவேண்டும் அவ்வளவுதான்

 • Gnanam - Nagercoil,இந்தியா

  அப்படியென்றால், இளையராஜாவின் இசையை அவர் மட்டுமே ரசிக்கநேரிடும். பாடுகிறவர்கள் பாட்டை புறக்கணித்தால் அந்த பாட்டிற்கோ, அல்லது இசைக்கோ என்ன மதிப்பு?

 • muthu Rajendran - chennai,இந்தியா

  காப்புரிமை சட்டத்தின்படி இளையராஜா உரிமை பெற்றிருக்கலாம் சட்டத்தின்படி அது சரியாக இருக்கலாம் ஒரு படம் ஒரு பாடல் என்றைக்கு மக்களின் மடியில் வந்து விழுந்துவிடுகிறது என்றால் அதன்பிறகு அது எல்லோருக்கும், சொந்தம் என்பதே நியதி. சட்டம் வேறு நியாயம் வேறு . சட்டத்தால் எல்லாவற்றையும் தடுக்க முடியாது உதாரணம் இன்றைக்கு இணைய தளம் வந்த பிறகு எந்த அளவிற்கு அதில் ஒரு விஷயத்தை தடுக்க முடிகிறது. இசை அமைத்தற்கு இவர் காப்புரிமை கேட்டு வாங்கி விட்டார். எழுதிய கவிஞனுக்கு அதில் ராயலிட்டி இல்லையா. இல்லை ஒரு கட்டத்தில் கண்ணதாசன் பாடல் இல்லாத படம் கிடையாது அவர் தத்துவப்பாடல்கள் இன்னும் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. படைத்தவன் தனது பொருளை பிறர்க்கு பருக கொடுத்துவிட்டு அவன் பருக முயலும்போது தட்டி பறிப்பது போல இருக்கிறது இந்த ஏற்பாடு. மிகச் சிறந்த இசை ஞானி விரைவில் தனது கனமழையை அடைத்து வைக்காது எல்லோருக்கும் பொழிய அனுமதிக்கட்டும் .உமக்கு பிறகும் எமக்கு பிறகும் இசை எங்கும் பரவட்டும் கைக்குள் அடங்காது கங்கை

 • jagan - Chennai,இந்தியா

  $79 ,$99 , $129 (எல்லாம் அமெரிக்க டாலர்) அப்பிடின்னு ஊர் ஊரா கல்லா காட்டும் ராஜாவுக்கும் உரிய பங்கை குடுக்க வேண்டும். அவர் போட்ட மெட்டை போட்டு காசு பார்க்கும் SPB இந்த மாதிரி அப்பாவி வேஷம் போட்டு யாரையும் ஏமாற்ற தேவையில்லை...காப்பி ரைட் யாரிடம் (ராஜாவோ இல்லை பட தயாரிப்பாளோரோ) இருக்கோ அவருக்கு நியாயமான பங்கை கொடுக்கவேண்டும்.....அனுமதி இல்லாமல் பாடி காசு பார்ப்பது ஒரு வகை திருட்டே...

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  சாப்ட்வெர் நிறுவனங்களில் நாம் எழுதும் கோடுகள் அந்த நிறுவனத்துக்கே சொந்தம், ஆனால் அது ஜாப் கான்டராக்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அது நமக்கே சொந்தம். பல கோடிகள் சம்பளம் கொடுத்தேன் என்றெல்லாம் அந்த நிறுவனம் சொல்ல முடியாது, உரிமை கோர முடியாது. அதுவே சட்டம். சட்டப்படி ராஜா அவர்கள் செய்வது சரியே.

 • Ayathuray Rajasingam - Scarborough ,கனடா

  இளையராஜாவுக்கு ஆணவம் கூடிவிட்ட்து. இது நல்லதல்ல.

 • vinaikumar - Kansas city,யூ.எஸ்.ஏ

  SP Balu , சித்ரா ஜானகி அல்லது இனிய குரல் வளம் இல்லாத வேறு யாரேனும் பாடியிருந்தால் இளையராஜாவின் டப்பா சத்தம் தான் கேட்டிருக்கும். இளையராஜாவே பாட ஆரம்பித்தபிறகே அவரை பெரிய ஹீரோக்கள் நிராகரித்தனர். பாலு பாடிய பாடல்களையும் இளையராஜா பாடிய பாடல்களையும் ஒப்பிட்டு பாருங்கள். இளையராஜா ஒன்றும் இலவசமாக இசையமைக்கவில்லை. தயாரிப்பாளர்களிடம் கோடிக்கணக்கில் பெற்றுக்கொண்டு தான் இசையமைத்தார். தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே முழு உரிமை உண்டு. பல வாத்திய கலைஞர்களை கொண்டே இவர் இசைமைத்தார். இவர் ஒன்றும் தனியாக இசைக்கவில்லை. பாடல் வரிகளும் பாடல் வெற்றி பெற முக்கிய காரணம். பாடல் ஆசிரியர்களுக்கு இவர் என்ன கொடுக்கிறார்? . இளையராஜா = திறமை - கர்வம் = 0

 • Krishnarao Vasudevan - COIMBATORE,இந்தியா

  PRODUCER OF THE FILM PAYS MONEY BOTH FOR MUSIC COMPOSER AND SINGER. MUSIC COMPOSER DID COMPOSING FOR MONEY. LOGICALLY SPEAKING THE PRODUCER SHOULD GET ROYALTY FOR SONGS RATHER THAN COMPOSER.

 • bathassarady krichena - paris,பிரான்ஸ்

  தவறு ஒரு தடவை அந்த பாட்டுக்கு அல்லது அந்த படத்துக்கு காசு வாங்கிட்ட பிறகு எல்லாத்துக்கும் அது_ பொது

 • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

  இளையராஜா கேட்குற இந்த “ராயல்டி”க்கு பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்கு... தமிழ்த் திரையுலகம் கிட்டதட்ட நூற்றாண்டு சாதனை புரிந்திருக்கிறது.. இதுல... இளையராஜா மாதிரி... ஏன்..? இளையராஜாவவிட பெரிய பெரிய ஜாம்பவான்கள்... இசை மேதைகள்... கர்நாடக இசை மேதைகள்... எல்லாம் கோலோச்சிய துறை இந்த திரைப்படத்துறை...? இளையராஜா தேனி மாவட்டத்தில் சாலை வசதியே இல்லாத பண்ணைபுரம் கிராமத்தில் பிறந்து.. தன்னுடைய அண்ணன் பெரிய நாட்டிசை பாடகர்... அதிலும் அந்த மதுரை சுற்று வட்டாரத்தில் அந்தகாலத்தில் கம்யூனிச கொள்கைகளை பரப்பிய பெரிய பாடகர்...அந்த பாவேந்தரின் தம்பிதான் இந்த இளையராஜா... இவர்கள் ஒவ்வொரு ஊராகச் சென்று... அன்றைய திரைப்பட இசை ஜாம்பவன்களாகிய விஸ்வநாதன்/ராமமூர்த்தி, ஏ.எம்.ராஜா, கே.வி.மகாதேவன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, ராமனாதன் போன்றோரின் திரைப்படப் பாடல்களையும், அந்த திரைப்பட பாடல் மெட்டில் தாங்கள் எழுதிய பாடலையும் பாடி வந்தனர்... இப்ப இவர் ராயல்டி கேட்குறாரே...? இந்த திரைஇசை ஜாம்பவான்களுக்கு எவ்வளவு ரூபாய் ராயல்டி கொடுத்தாரு... அன்னைக்கு பாடுனதுக்கு...? அதை விட்டுவிடுவோம்... இளையராஜாவின் “ராயல்டி” கதைக்கு வருகிறேன்... பஞ்சு அருணாசலத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இளையராஜா... டப்பாக்குத்து மற்றும் கிராமத்து இசை மூலம் பிரபலமாகி தமிழக மக்களின் மனதில் இடம் பிடிக்க துவங்கிய நாட்களில்... குறிப்பாக... இவரது பாடல்களால்தான் படமே ஓடுகிறது என்கிற நிலை வந்தபோது... அதாவது 1985களில்... தான் இசையமைக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா ஒரு கண்டீஷன் போட்டார்... அது என்னவென்றால்...? “தான் இசையமைக்கும் படத்தின் அனைத்து பாடல்களின் “ராயல்டி” ரைட்ஸ் முழுவதும் தனக்கு தந்தால்தான்... தான் இசையமைப்பேன்” என்பது அந்த கண்டீஷன்... அப்போது... பெரிய, பெரிய பழைய தயாரிப்பு நிறுவனங்கள் இதற்கு உடன்படாமல்.. குறிப்பாக, ஏவிஎம் போன்ற நிறுவனங்கள் சந்திரபோஸ், சங்கர்கணேஷ் போன்ற இசையமைப்பாளர்களை வைத்து தங்கள் படத்திற்கு இசையமைத்தனர்... பெரியபெரிய இயக்குநராகவும்... தயாரிப்பாளராகவும் இருந்த... “பில்லா” பாலாஜி... பாரதிராஜா... பாலச்சந்தர் போன்றவர்கள் இவரின் கண்டீஷனுக்கு அடிபணியாமல்... வேறு இசையமைப்பாளரை போட்டு படம் எடுத்தனர்... இதில் பிரச்சினை என்னவென்றால்.... தமிழ்த் திரைப்படத்துறை ஆரம்பம் முதலே... தயாரிப்பாளருக்குத்தான் திரைப்படத்தின் அனைத்து உரிமைகளும்.... ரைட்சும்... ராயல்டியும்... இது தொன்று தொட்டு வந்த நடைமுறை... இதனை ஏற்காத இளையராஜா... தன்னால்தான்... தன் இசையால்தான் படம் ஓடுகிறது என்ற ஆணவமும், அகந்தையும் தலைக்கேறி... ராயல்டி கொடுத்தால்தான் இசையமைப்பேன் என்று கண்டீஷன் போட்டார் அனைத்து தயாரிப்பாளருக்கும்... அதிலும் ஏவிஎம்... பாலாஜி.... கவிதாலயா போன்ற பெரிய பெரிய நிறுவனங்களுக்கும்... கவியரசு கண்ணதாசன் “ஆண்டவன் கட்டளை” படத்தில் எழுதிய பாடல் வரிகளால் சொல்ல வேண்டுமானால்... “நிலை உயரும் போது பணிவு கொண்டால்... உலகம் உன்னை வணங்கும்” என்பதை மறந்தார் இளையராஜா... அதனால்தான்... அவர் தொடர்ந்து திரைஇசை சக்கரவர்த்தியாக இருக்க வேண்டியவர்... இதுபோன்று ஆணவப் போக்கினால்... ஏ.ஆர்.ரஹ்மான், தேவா என்கிற சிறிய சிறிய இசையமைப்பாளர்களால் திரைத்துறையில் தோற்கடிக்கப்பட்டார்... அதன்பிறகு எழவே இல்லை.. அதற்கு பிறகு 21ஆம் நூற்றாண்டில்... அதாவது 2000க்குப் பிறகு... பொடிப் பசங்களெல்லாம் மேலே வந்துட்டாங்க.. (அனிருத்... அப்புறம் வாய்ல நுழையாத பெயர்களை கொண்ட பொடீஸ் இசையமைப்பாளர்கள்)... இளையராஜாவின் ஆணவப் போக்கினால்... இந்திய திரை இசையுலகிலேயே... இசை சாம்ராஜ்யமாக... சக்கரவர்த்தியாக இருக்க வேண்டிய அவர் மண்ணைக் கவ்வினார்.. வெறும் ஆயிரம் பாடல்களுடன் நின்று போனது அவரது இசை சாம்ராஜ்யம்..... காரணம்... அவரின் ஆணவப் போக்கு... இன்னைக்குத்தான் அவர் சாமியார்... அவர் அறிமுகமான அந்த நாட்களில்... குறிப்பாக 1976லிருந்து 1980 வரை அவரின் ஆட்டங்களையெல்லாம் அன்று இளைஞர்களாய் இருந்த எங்களுக்குத்தான் தெரியும்... இளையராஜாவின் வாழ்க்கையை நினைக்கும்போது.... காலக் கவிஞன்... தீர்க்கதரிசி... வாழ்க்கையை வரிகளாய் வடித்து மறைந்த கவியரசர் கண்ணதாசன் வடித்த வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வரும்.. “நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்”... அப்படீன்னு முடிச்சுட்டார்... அப்படி பணிவு இல்லையென்றால்.... அழிந்துபோய்விடுவாய்னு அவர் சொல்லாத வார்த்தைகள் அந்த வரிகளின் தொடர்ச்சி... சரி.. இந்த நண்பர்களை கேட்கிறேன்.... ஒரு படத்த கஷ்பட்டு.. பத்து வட்டி, இருபது வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி, சேட்டு வட்டின்னு அவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுக்குற தயாரிப்பாளருக்கு அந்த படத்தின் உரிமை, ராயல்டி போய் சேர வேண்டுமா...? இல்லை... அந்த தயாரிப்பாளர் கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கும் படத்தில் வேலைக்காரனாய்... அதாவது “இசையமைப்பாளர்” எனும் வேலைக்காரன் பணியை செய்யும் இளையராஜா... அந்த ராயல்டி எனக்கு வேணும்னு கேட்டா என்ன அர்த்தம்...? இது நியாயமா...? ஒன்ன கேட்காம விட்டுட்டுடார்... இளையராஜா... அதாவது கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுத்த தயாரிப்பாளரின் படம் நல்லா ஓடுனா... அந்த படத்தின் லாபம், ராயல்டி, ரைட்ஸ் எல்லாமும் தனக்கே சொந்தம்னு கேட்காம விட்டுட்டாரே..? அதுவரைக்கும் சந்தோஷம்.... கேட்டா உடனே நீங்க என்ன சொல்வீங்க... அந்த படம் ஓடுறதே இளையராஜாவுக்காகத்தான்....அப்படீம்பீங்க... அப்ப அந்த படத்துல நடிக்குற ரஜினி,கமல்,விஜய், தல போன்ற ஹீரோவாலேயும்... இயக்குநராலேயும் ஓடாத படம்... இவர் இசைல மட்டும் ஓடுதுன்னு சொல்றது...அகந்தையின், ஆணவத்தின் உச்சம் அல்லவா...? சற்றே சிந்தியுங்கள்...?

 • Velsoud - Pondicherry ,இந்தியா

  SPB அவர்கள் சமீபத்தில் அடுத்த பிறவியில் தான் ஒரு கன்னடனாக பிறக்க வேண்டும் என்று கூறியவர், ஆனால் அவர் செல்லும் ஊர்கள், நாடுகள் எல்லாம் தமிழர்கள் வசிக்கும் இடங்களே, வெளிநாடுகளில் அவரது கச்சேரிகளுக்கு வருபவர்களும் பெரும்பாலும் தமிழர்களே. அவர் அடுத்த பிறவி வரை காத்திருக்க வேண்டியதில்லை இந்த பிறவியிலேயே கன்னட இசையமைப்பாளர்கள் இசையமைத்த கன்னட பாடல்களையும் அல்லது தன் தாய் மொழியான தெலுங்கிலேயும் பாடலாமே, பிறக்க ஆசை படுவது கன்னடனாக அனால் ஆட்டையை போட துடிப்பது தமிழனின் காசையும் இசையையும். நல்லா இருக்கு உங்க நியாயம். இளையராஜா செய்தது சிறப்பான செயல்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பிறவி புத்தி.... இனிமேவா மாறப்போவுது.... ராசய்யா எப்போவுமே ஒரு saddist தான்........,.....

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பிறவி புத்தி.... இனிமேவா மாறப்போவுது.... ராசய்யா எப்போவுமே ஒரு saddist தான்.....

 • Siva Kamaraj - Muscat,ஓமன்

  During early stages of Ilayaraja which song did he sung to gain a place in Tamil Film Industry? He himself was singing M S Viswananthan Songs, Thiyagaraja Keerthanas, Muthuswamy Dheekshidhar Keerthanas to earn his food. Did he pay any CopyRight Fees to them? Because, they have some dispute within themselves, he must not forget the past and throw mud on other's face.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  சசிகலாவை ஆதரிப்பவன் எப்படி , இளையராஜாவை ஆதரிக்கிறான் என்று இங்கு பலர் நினைக்க கூடும்... இதிலிருந்தே தெரியவில்லையா?,, நான் ஜாதி பாராமல் கருத்து எழுதுகிறவன் என்று.... சசிகலாவை ஆதரிக்க அவர் சார்ந்த முக்குலத்தோர் ஜாதியை சேர்ந்தவன் அல்ல, நான்.... ஆனால் இப்போது தான் தேர்தல் நடந்து முடிந்துள்ளது..ஆறாவது மாதத்தில் மீண்டும் தேர்தல் வரக்கூடாது... அதிமுக அழிக்கப்பட்டுவிட கூடாது... என்பதற்காக தான்.... சசிகலாவை பிடிக்காதவர்கள், அடுத்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அவரை தோற்கடித்து காட்டுங்கள்... அதுபோல, இளையராஜா வை ஆதரிக்க, நான் அவர் சார்ந்த தலித் ஜாதியை சேர்ந்தவன் அல்ல...ஆனாலும் இளையராஜா, ஒரு தெய்வீக கலைஞன்... அவருடைய பாடல்களை பாடாத, தமிழ் நாக்குகள் கிடையாது... அப்படிப்பட்ட ஒருவரின் பாடல்களை , அவரின் சம்மதம் பெற்று, காப்புரிமை தொகை கொடுத்து, பாடுவதில், SPB போன்ற தெலுங்கர்களுக்கு என்ன குறைச்சல்?.... நான் தமிழன்.... எனது அடையாளம் தமிழ் மட்டுமே.... ஆனால் இங்கு எழுதும் பலரும் ஜாதி, மதம், இனம் , மொழி பார்த்து கருத்து எழுதுவது வேதனையான விஷயம்... நல்லவை என்றால் யாரையும் பாராட்டலாம்... சுவாமி விவேகானந்தரை பாராட்டலாம்... முன்னாள் காஞ்சி பீடாதிபதி சந்திரசேகர சுவாமிகளை பாராட்டலாம்... அப்துல் கலாம் அய்யாவை பாராட்டலாம்..தனது நாட்டு பிரஜைகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று நினைக்கும் டிரம்பை கூட பாராட்டுவேன்...... நல்லவற்றை பாராட்ட, அல்லது தீயவற்றில் குறைந்த தீங்கு விளைவிப்பதை ஆதரிப்பதில், அல்லது பாராட்டுவதில் எனக்கு தயக்கமும் இல்லை...மயக்கமும் இல்லை....

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  எல்லாம் பணம் படுத்தும் பாடுதான்?

 • Rajasekharan - Chennai,இந்தியா

  இதுதான் சாக்கு என்று ரஹ்மான் ரசிகர்கள் ராஜா மீது பாய்ந்து பிறாண்டுவதைப்பார்த்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது... தமிழ் சினிமாவில் இந்த காப்பிரைட் என்ற சமாச்சாரத்தை ஆரம்பித்து வைத்ததே ஏ.ஆர்.ர‌ஹ்மான் தான்..இளையராஜா ரொம்ப தாமதமாகத்தான் விழித்துக்கொண்டார்... .இப்போது எதுவுமே தெரியாதமாதிரி சீன் போடும் எஸ்.பி.பி , இந்த நிகழ்ச்சியில் ரகுமான் பாடல்களைப்பாட , அவருக்கு ராயல்டி கொடுத்திருக்கிறாரா , இல்லையா என்று கேட்டுப்பாருங்கள்...அப்போது விஷயம் வெட்ட வெளிச்சமாகிவிடும்... தன் பாடல்களை பயன்படுத்துபவர்கள் , தனக்கு ராயல்டி தரவேண்டும் என்று ராஜா வழக்கு தொடுத்தபோது , சிறிய இசைக்குழு நடத்துபவர்கள் எல்லாம் ராஜாவை சந்தித்தனர்...உங்கள் பாடலை இசைத்துத்தான் பிழைப்பு நடத்துகிறோம்... எங்களுக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்று கேட்டபோது , அதற்கு பெருந்தன்மையோடு ஒத்துக்கொண்டவர் ராஜா... இதே எஸ்.பி.பி சிறிய‌ இசைக்குழுக்களில் ராஜாவின் பாடல்களைப்பாடியபோது , அவர் அதற்கு ராயல்டி தரவேண்டும் என்று ராஜா கேட்கவில்லை...இப்போது எஸ்.பி.பி தன் மகன் , சித்ரா மற்றும் பலரோடு சென்று உலகின் பல நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்...அங்கெல்லாம் தேங்காய் மூடிக்கா கச்சேரி செய்கிறார்? பல லட்சம் சம்பாதிக்கத்தானே போகிறார்? அதில் தனக்கான ராயல்டியை கொடுங்கள் என்றுதானே ராஜா கேட்கிறார்? அதைக்கொடுத்துவிட்டால் என்ன? தவறு நடந்துவிட்டது...இனி ராஜாவுக்கான ராயல்டியை கொடுத்துவிடுகிறேன் என்று எஸ்.பி.பி சொல்லவேண்டியதுதானே? இனி ராஜா பாடல்களை பாடமாட்டேன் என்றால் என்ன அர்த்தம்? தனக்குச்சேரவேண்டிய ராயல்டி விஷயமாக ராஜா நீண்ட காலமாக போராடி வருகிறார்..இதெல்லாம் எஸ்.பி.பிக்கு எதுவுமே தெரியாதா என்ன? நன்றி ..தமிழ் சமுதாயம்.

 • Madhu - Trichy,இந்தியா

  ஐயா, எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ஐயா திரு. இளையராஜா அவர்களும், அவருடைய சகோதரர் & குழுவினரும் திறைத் துறைக்கு வருமுன்னர், விஸ்வநாதன்/ராமமூர்த்தி, ஏ.எம்.ராஜா, கே.வி.மகாதேவன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, ராமனாதன் ஐயர் போன்றோரின் இசையமைப்பில் வெளியான பாடல்களைப் பாடித்தானே தங்கள் பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தார்கள் ? குறிப்பாக 'பா' வரிசை, 'தா' வரிசைப் படங்கள், மற்றும் ஸ்ரீதரின் படங்களில் இடம் பெற்ற பிரபல பாடல்களைப் பாடிக் காட்டினார்களே அப்போது இவர்கள் மற்ற இசையமைப்பாளர்களுக்கும், பின்னணி இசைக் கலைஞர்களுக்கும் கொடுத்த 'ராயல்டி' தொகை எவ்வளவு? அப்போதெல்லாம், பாடல்கள் பெரும்பாலும் 'கொலம்பியா', 'எரிக்கோ" போன்ற நிறுவனங்களின் இசைத்தட்டுகள் மூலமாகவே வந்தன என்பதை இப்போது கூடப் பழைய படங்களின் 'டைட்டில்'களில் காணலாமே. மேடைக் கச்சேரிகளில், ஏ.எம். ராஜாவின் பாடல்களை இவர் பாடிக் காட்டிப் பிரபலமடைந்ததால்தானே இவர் தனது பெயரையே 'இளையராஜா' என்று வைத்துக் கொண்டார். இதற்காக இவர் ஏ.எம். ராஜாவுக்கு ஏதாவது 'ராயல்டி' கொடுத்திருப்பாரோ? இவர் திறமையை மதித்து அரசாங்கம் இவருக்கு 'தாரை தப்பட்டை' என்ற படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதை அளித்தது. நமது ஜனாதிபதி விருது வழங்கும் அந்த நிகழ்ச்சியைத் தனது அகம்பாவத்தின் காரணமாகப் புறக்கணித்தார். இது குறித்து, தகவல் சேகரிக்க முயன்ற நிருபரிடம், 'என்னிடம் கேள்வி கேட்க உனக்கு என்ன யோக்யதை உள்ளது?' என்று கேள்வி கேட்டவர். அன்றே இவரது சுய ரூபம் வெளிப்பட்டு விட்டது. ஞானம் விடை பெற்றுக் கொண்டு விட்டது.

 • karthi - kasol,இந்தியா

  இங்கு நிறையபேர் முழு விவரம் தெரியாமல் பதிவு போட்டுள்ளார்கள் , உண்மையில் ஒரு பாடலின் முழு உரிமையும் அதை கம்போஸ் செய்த இசை அமைப்பாளருக்கே ஆகும், அந்த பாடலை எழுதியவர்க்கோ , பாடியர்வக்கோ, தயாரிப்பாளருக்கோ உரிமை கிடையாது. அந்த வகையில் இளையராஜா அவர்களின் பாடல் களுக்கு முழு உரிமை அவருக்கு மட்டுமே ஆகும், இன்று உலகில் தமிழர்கள் வாழும் இடங்களில் இளையராஜா அவர்களின் பாடல் ஒலிக்காமல் ஒருநாளும் இருக்காது , அந்த அளவுக்கு சரித்திர சாதனையாளர் இளையராஜா அவர்கள். அதே நேரம் திரு spb அவர்களின் குரல்வளம் பற்றி யாருக்கும் சொல்லி தெரியவேண்டியதில்லை , இளையராஜா அவர்களின் படைப்புகளை வைத்து இன்று பல FM , டிவி சேனல்கள் பிழைப்பு நடத்தி வருகின்றன. அவைகள் எல்லாம் சரியான ராயல்டி urivargalukku tharukiradha என்றால் இல்லை,மேற்சொன்ன SPB அவர்களின் இசைநிகழ்ச்சியும் வெளிநாடுகளில் பல கோடி காலெக்ஷன் செய்து தொடர்ந்து நடந்து வருகிறது. ராயல்டி விஷயத்தில் ஆரம்ப காலங்களில் இளையராஜா அவர்கள் பெரிய கவனம் செலுத்தியதில்லை , ஆனால் இன்று வரும் புதிய இசையமைப்பாளர்கள் ராயல்டி விஷயத்தில் செய்யும் கெடுபிடிகளை பார்த்த பிறகுதான், இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்துகிறார், முதலில் இருந்து ராயல்டி சரியாக சென்றிக்குமே ஆனால் இன்று உலக பணக்காரர்களில் இளையராஜாவும் ஒருவராக இருப்பார். so இது அவருடைய உழைப்பு, அதை நாம் கடுமையாக விமரிசிக்க வேண்டாம்,

 • உண்மை விளம்பி - சிங்கப்பூர்,சிங்கப்பூர்

  அறிவுசார் சொத்து உரிமை ஆங்கிலத்தில் Intellectual Property (IP) இளையராஜாவுக்கே சொந்தம். முழு உரிமையும் அவருக்கே. இளையராஜா அவர்களின் அனுமதியுடன் மட்டுமே அவரது பாட்டை உபயோகிக்க முடியும்.

 • X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா

  இந்த வழக்கு ரொம்ப நாள் நிற்காது. இளையராஜாவின் சொந்தப்பட பாடல்களுக்கு அவர் முழு உரிமைக் கொண்டாடலாம், மற்றபடி ஒரு பாடல் அதன் தயாரிப்பாளருக்குத்தான் முழு உரிமை கொடுக்கும். ரசிகர்களின் சிறு அறிவுக்குப்பட்டது.

 • நரி - Chennai,இந்தியா

  அது ஓன்று இல்லை ..... அவருடைய பிள்ளைகள் எதிர்காலத்தில் கை வைத்துவிட்டார் .... ராஜா கையவச்ச அது றாங்க போவதில்லை ..... அவர் தவறாக கைவச்சிட்டார்

 • spr - chennai,இந்தியா

  உண்மையில் இந்தப் பாடல்களுக்குச் சொந்தக்காரர் அந்தப் பாடல் வந்த படத்தை எடுத்தவர் மட்டுமே இளையராஜா மற்றும் பாலசுபரமண்யம் ஆகிய இருவருக்குமே இல்லை இருவருமே கூலி வாங்கிக்கொண்டுதான் அவரவர் தொழிலை செய்தனர் எனவே இளையராஜாவிற்கே இப்பாடல்கள் மேல் உரிமையில்லை மேலும் இவர் இசையமைத்த பாட்டுக்களை பலர் பாடினால் அது இவருக்கு கிடைக்கும் விளம்பரம் "யானை தன் தலை மேல் மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும் முயற்சி போன்றது" ஏற்கனவே இளையராஜாவின் வாய்ப்புக்கள் குறைந்து வருகிறது உலகளவில் ஒரு விருது வாங்கும் தகுதி இல்லை எனவே எஸ் பி பி இது குறித்து யோசிக்க வேண்டாம் பிறர் பாடல்களை பாடட்டும் இவர் தானே அழிந்து போவார்

 • Sundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்

  Some vested interest people misguided and misleading Ilayaraja. This issue is damaging his image. People ad Ilayaraja is paid for his composing. He does not have the right to tell like this. Only producer can claim. It is shameful n the part of him.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  இங்கு இளையராஜாவின் காப்புரிமை பற்றி பினாத்தும் SPB ரசிக யோக்கிய சிகாமணிகளே, SPB ஒன்னும் இசையை வளர்க்க கச்சேரி செய்யவில்லை...காசு பணம் துட்டு மணி மணி க்காக தான்... வெளிநாடுகளில் காப்புரிமை பிரசித்தம்... காப்புரிமை இல்லாமல், எதுவும் செய்ய இயலாது...அத்தகைய வெளிநாடுகளில், போயி காப்புரிமை இல்லாமல் இளையராஜாவின் பாடல்களை பாடி, சம்பாரித்து சட்டப்படி குற்றம்.... இளையராஜாவிடம் காப்புரிமை வாங்கி , SPB பாடிக்கொள்ளட்டும்...அதனை கவரவ குறைச்சல், என்று SPB நினைப்பாரேயானால், இனி SPB க்கு எப்படி, கச்சேரி க்கு ஆள் சேருகிறார்கள் என்று பார்க்கலாம்... இளையராஜா பாடல்கள் இல்லாத கச்சேரிகளை மக்கள் விரும்ப மாட்டார்கள்...

 • Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா

  பாடல் எழுதியவர், பாடியவர், படம் எடுத்து அந்த பாடலை பிரபலப்படுத்தியவர், நடிப்பினால் நினைவில் நிற்கச்செய்தவர் ஆயிரக்கணக்கான வாத்திய கலைஞர்கள் இவர்கள் எல்லாம் விரல் சூப்ப வேண்டியது தானா? இசை அமைப்பாளர் மட்டுமே காப்புரிமை பெறுவாரா?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வாடா போடா என்ற நிலை மாறி வா ஒரு கை பார்ப்போம் என்று வந்து விட்டார்களே... உயிர் காப்பான் தோழன் என்ற வரி பொய்யாகிப் போனதே...

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  தினமலர் ஆசிரியர் பல தனது பாதிப்புக்களை தாராளமாக அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் தாம்பிரவருணி பற்றி ஆய்ந்து கொண்டிருக்கும் போதே தனது ஆராய்ச்சிகளை தன காலத்திலேயே அனைவருக்கும் தாரை வார்த்தவர் அந்த தமிழ் உத்தமன். . அறிவு சார் சொத்துரிமை என்பது நம் நாட்டில் பெயர்கள் தான் உள்ளது. அதை பொதுமக்களுக்கு நன்கு தெரிய படுத்தவே வேண்டும் என்பதையும் பள்ளி கல்லூரிகளில் புகுத்த வேண்டும் என்பதையும் செய்யாமல், வெளி நட்டு கம்பனிகளுக்கு, பணக்கார கம்பனிகளுக்கு உதவுவதற்காகத் தான் உள்ளனர். நாட்டில் நான்கு இடங்களில் அறிவு சார் சொத்துரிமை நிறுவனங்கள் உள்ளன. கிண்டியில் தென் மாநிலத்திற்கான தலைமை அகம் உள்ளது. அவர்களுக்கு தெரியாதா எனா. மற்றபடி ஒவ்வொரு பல்க்லையிலும் ஒரு நிறுவனம் வைத்திருக்கிறார்கள் அரசின் திட்டங்களுக்காக ஏட்டளவில். அதில் பனி புரியும் சில இயக்குனர்களுக்கு அதன் தன்மை தெரியவில்லை. சகட்டு மேனிக்கு திருடுகிறார்கள். சந்தானம் தான் முதலில் இதில் பிரச்சினையில் சிக்கியது அதன் பிறகே அவர் அந்த தோலை காட்டிச்சி சன் இருந்து விலகி தனியாக நடிகரானார். அவன் தொலைக்காட்சி தொடர் முழுவதுமே அறிவு சார் சொத்துரிமை திருடல்கள் தான். காப்புரிமை பெறவேண்டிய அவசியமே இல்லை, ஓவியனும், கலைஞனும், எழுத்தாளனும். பிரசுரமான அனைத்தும் தானாகவே காப்புரிமை பெற்றவை தான் அவர்கள் காலம் முழுதும் உடைந்த பிறகு அம்பது வருடங்கள் வரை செல்லுபடியாகும். அதில் உள்ள கருத்துக்களை வேண்டுமானால் எடுத்தாளலாமே தவிர அனைத்தையும் அப்படியே லவட்டிக் கொள்வது தவறு. இதில் நல்லவர் போல தெரியும் பாடகர்கள் சுத்த மோசம். அமைதியாக அன்பாக ரசிகர்கள் மத்தியில் நெஞ்சுருக பேசி படைப்பாளியை ஏமாற்றும் கயமை தானம் கொண்டோர் பாடகர்கள். சுயமாக பாடல் அமைத்தும் இசைத்தும் பாடுவோர் இன்னிசை கச்சேரிகள் செய்வோராக தியாகராஜர் பாகவதர் காலத்திலேயே முடிந்து விட்டார்களா என்ன? எஸ் பி பி சொல்வதை தனக்கு காப்புரிமை என்பது பற்றி தெரியாது என்பது சுத்த பொய். பிராட். ஏற்கவே முடியாது. தார்மீகம் பற்றி பேசும் இவர் வாங்கிய சம்பளத்தில் எழுபது சதவீதத்தை படைப்பாளிக்கு தர வேண்டும் அப்போது தான் இவரை சரி என்பேன். செட்டப் அப்டி சன்னதிதால் மொத்த பணத்தையும் தந்து அபராதமும் தர வேண்டும். திருட்டு வ சி டி கு குரல் கொடுக்கும் இவருக்கு காப்புரிமை பற்றி தெரியாத என்ன? எல்லோரும் வாட்ஸ் ஆப் மூலம் எத்தனையோ புத்தகங்களை தைரியமாக மாணவர்களும் இளைஞர்களும் ஷேர் செய்கிறார்கள். ஏமாற்று பேர்வழிகள். அவர்கள் ஒரு வெப்சைட் உருவாக்கி அதில் பல புத்தகங்களை இலவசமாக வெளியிடுகிறார்கள். எந்த புத்தகம் கிடைத்தாலும் அதை ஓ சி இல் பெற்று அதை வெளி இட்டு விடுகிறார்கள். இப்பெடி போனால் எந்த ஆசிரியர் தான் பாட புத்தகங்களை எழுதுவார், எந்த பதிப்பகத்தார் வெளியிட முன்வருவார்கள். இதற்கெல்லாம் கைது செய்ய மாட்டார்கள். காரணம் தனிப்பட்டவர்களுக்கு பாதிப்பு என்பதால். இதே அம்மா செய்தியை அரசு சொல்லாத உண்மை தகவலை வெளியிட்டாலும் கைது செய்வார்கள். ஒரு புத்தகம் வெளியான அடுத்த நாளே அதை ஈமெயில் மூலமாகவும், கூகிள் டிரைவ், கிளவுட் என்று அனைத்து முறைகளிலும் வெளி இட்டு விடுகிறார்கள். சில புத்தங்கள், டிஜிட்டல் முரையில் இல்லை என்றாலும் கூட அதை பற்றி கவலை படாமல் அதை ஸ்கேன் செய்து pdf ஆகா மாற்றி வெளி இட்டு விடுகிறார்கள். பொழுது போக்கிற்கும் திருடுவதிலும், படைப்பாளியை ஏமாற்றுவதிலுமே ஆர்வம் காட்டுகிறார்கள். வாட்ஸ் ஆப் குரூப்பில் கேட்டகிறார்கள் இந்த பாட புத்தகத்தை யாரவது வைத்திருந்தாள் ஷேர் செய்யுங்கள் என்று அடுத்த நிமிடமே ஒருவர் அதை ஷேர் செய்து டன் என்கிறார். கல்லூரி நூலகங்கள் அதை வாங்கி வைப்பதில்லை. பல்லில்லா பல்கலைகளும், ஏ ஐ சி டி யும் அமைதியாக இருக்கும். கவர்ச்சி காம இச்சை வீடியோக்கள் சாதாரணமாக கேவலமாக பெண்களுக்கு கூட ஷேர் செய்யப் படுகிறது. நமது அரசு இதை அனுமதிக்கிறது என்ற சந்தேகம் பொய் இப்போது அதை ஊக்கு விக்கிறதோ என்ற பயம் வருகிறது. வெளி நாட்டு அரசுகள் சாப்ட் பவர் என்றார் முரையில் மறைமுகமாக சாப்ட் யுத்தம் செய்கின்றன. இளைஞர்களின் மூளை மழுங்க செய்யப் படுகின்றன. பொழுது போக்கிலும் காம இச்சையிலும் கல்லூரி பள்ளி மாணவர்கள் தூக்கி எரிய பட்டிருக்கிறார்கள். சாராயத்தை விட கொடூர அரக்கன். போதை பொருளை விட மோசமானது அது. வெளி நாட்டு மோகத்திற்கு பின்னால் காமத்தின் ஈர்ப்பு இருந்ததாக பலர் எழுதியிருக்கிறார்கள் நாற்பது அம்பது வருடங்களுக்கு முன்பே. இன்றோ அது மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. என் செய்ய.

 • suresh - chennai,இந்தியா

  இது நேரிடையாக பேசி தீர்க்க வேண்டிய விஷயம்.வக்கீல் நோட்டீஸ் மூலமாக அல்ல.மெரினாவில் உறங்கி தன் சென்னை வாழ்க்கையை துவங்கிய ராஜா தன் இசையால் உலகமெங்கும் உள்ள தமிழர்களை உறங்க வைத்தாலும்,ரசிகர்கள் அவருக்கு அளித்த வாழ்க்கையை கருத்தில் கொண்டு,இத்தகைய கீழ்த்தரமான முடிவை கை விட வேண்டும்.இல்லேயேல், அவரின் பாடலை மேடையில் கேட்கும் போது, அவரின் இனிமையான இசைக்கு பின்னால் அவரின் வக்கீல் நோட்டீஸ் கண்முன் வந்தாடும்.

 • Gnanam - Nagercoil,இந்தியா

  வேடிக்கையாக இருக்கிறது. இளையராஜா இசை அமைத்தால் அதற்குரிய காசு வாங்கியிருப்பார். அந்த பாட்டு அவருக்கு எந்த விதத்தில் சொந்தம். வெளியுலகிற்கு பதிவானபின்பு யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பாடலாம்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  SPB யே, மகான் இளையராஜா, உன்னை திருடாதே என்று தானே சொல்கிறார்....அது தப்பா?.. ரசிகனிடம் , யோக்கியன் போல நியாயம் கேட்க வந்துவிட்டாய்...இளையாஜாவின் கம்போஸிங்கை , காப்புரிமை பெறாமல் திருடி , பாடி பணம் சம்பாதிக்க உனக்கு வெட்கமே இல்லையா?....அப்படி உனது மகனுக்கு சொத்து சேர்க்கவேண்டுமா என்ன?...

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  ராஜா இல்லைனா, SPB க்கு முகவரி கிடையாது... SPB ,ராஜா சார் மீது உள்ள மனஸ்தாபத்தில், 80 களில் ஒருமுறை ரஜினிகாந்த் படத்துக்கு [துடிக்கும் கரங்கள் ] இசை அமைத்தார்...அந்த பாடல்களை காதுகொடுத்து கூட கேட்கமுடியாது...ஆனால் இளையராஜா க்கு SPB எல்லாம் தேவையே இல்லை... மலேசியா வாசுதேவன் , சுரேந்தர் போன்ற ஆளுங்களை வைத்து கூட ஹிட் கொடுத்துவிடுவார்..... நம்ம தமிழ் சினிமாவின் 75 வருட காலத்தில் ஒரே ஒரு பொக்கிஷம் இளையராஜா மட்டுமே... பல லட்சம் இசை விரும்பிகளுக்கு இன்றும் TV சேனல் மூலம் வாழ்வு கொடுத்து வரும் இளையராஜா என்ற கம்போஸர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட உண்மையான ஆன்மீகவாதி.... ஆன்மிகம் என்ற வார்த்தைக்கு தமிழில் அர்த்தமே , இந்த இளையராஜா என்று சொன்னால் மிகையல்ல.... அம்மா என்றழைக்காத உயிரில்லையே ...அம்மாவை வணங்காது உயர்வில்லையே, ....என்று ஒவ்வொரு மகனுக்கும் பாடலை எடுத்துக்கொடுத்த இளையராஜாவை பழிப்பவர்கள், சாத்தான்கள் ]

 • SHANMUGM - Chennai,இந்தியா

  உள்ளே என்ன என்பது தெரியவில்லை , ஆனால் இளையராஜாவின் மேல் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம் . கலைஞர்களுக்குள் சண்டை சச்சரவுகள் கலைக்கு அழிவு என்பதை திருவாசக ஞானிக்கு நாங்கள் சொல்லத்தேவையில்லை.

 • Raja - Bangalore,இந்தியா

  ஒரு திரைப் பாடலின் உரிமை யாருக்கு சொந்தம்? படத்திற்கு இசை அமைத்தவருக்கா? பாடலை பாடியவர்களுக்கா? பாடலை எழுதியவருக்கா? அல்லது படத்தை எடுத்தவருக்கா?

 • s t rajan - chennai,இந்தியா

  இளையராஜாவின் தலைக்கனம் அவரை அந்தத் துறையிலிருந்து கூண்டோடு ஒழித்துவிடும். பாலுவின் குரல் உதவி இல்லையேல் இந்தக் கிழராஜா என்றோ தூக்கி எறியப்பட்டிருப்பார். அவருக்குப் பி வந்த ரெஹ்மான் தன் பணிவினால் இமயத்தைத் தொட்டுவிட்டார். இந்தக் கிழ ராஜா பரங்கிமலையே ஏறமுடியாமல் திக்கித் திண்டாடுகிறார்.

 • BalajiPadmanabhan -

  Raja sir is great composer. He rights to claim about his product. He given life for SPB... selfish SPB!!!

 • sridar - chennai

  ilaya raja when taken money and played music he has no claim on the sold product. he has pulled down his immage.

 • Perambur Annan - Chennai,இந்தியா

  இளையராஜா ஒரு ....

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  போனால், போகுது என்று அந்த ராயல்டி என்ற பிச்சைக்காசை தூக்கி எறியுங்க பாலு சார். அந்த பணத்தை விழா ஏற்பாட்டாளர் டிக்கெட் விலையை உயர்த்தி நம்ம தலையிலே போடுவாங்க. அப்பவாது அவருக்கு புத்தி வருமா என்று பார்க்கலாம்.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  மக்கள் திலகம், நடிகர் திலகம் இருவருமே நடிப்பில் மெருகூடியது, TMS அய்யாவின் குரலே, இளையராஜாவின் இசைக்கு ஆரம்ப காலத்தில் இருந்தது பாலு தான், பாலு சார் தாக்கு டிராக்கிங் பாடியவர்களுக்கு அந்த பாடல் நல்லாக இருக்கு என்று தனது வாய்ப்பை பலருக்கு விட்டு கொடுத்த மனிதர். மனோ சாரும் இன்று உயர்ந்தது பாலு சாரினால் தான். இனிமேல் இளைய ராஜாவின் இசையில் பாடும் பாடகர்கள் கவனமாக இருக்கணும்.

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  Who is wrong? I don't know. But ilaiyaraja sounds to be reflecting cheap mentality.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  இசையும் சேர்ந்தால்தான் பாடலை, கவிதைகளை முழுமையாக ரசிக்க முடியும். அவரிடம் அனுமதி கேட்டிருக்கலாம். வருமானத்தில் ஒரு பங்குதருவதில் என்ன சிரமம் ? சென்றவருடம் ஐயா இளையராஜாவுடன் விமானத்தில் பயணித்தேன். போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதித்தார். ஆனால் கையெழுத்து போடுவதற்கு அவர் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனாலும், அவர் செய்தது சரியானதே.

 • Rengasamy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ""தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறு"" என்று ஒரு பழமொழி உண்டு. வாடா போடா என்ற அளவிற்கு நண்பர்களான இருவரும் பணம் என்ற ஒன்று வந்த பின் இப்படி செயல்படுவதில் தவறேதும் இல்லை. உலகமே இப்படித்தான் உள்ளது. ஆனால் வெளித்தோற்றம் வேறு உள்தோற்றம் வேறு என்பதற்கு இந்த இசை அமைப்பாளர் ஒரு உதாரணம். பணம் பணம் எல்லாம் பணம் மயம். இதில் யாரையும் குறை சொல்ல முடியாது என்பதுதான் உண்மை.

 • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

  இளையராஜாவின் இத்தகைய கருகிய எண்ணத்தால்தான் திறமையிருந்தும் தமிழ்நாட்டைத்தாண்டி செல்ல முடியவில்லை. பெருந்தன்மையான குணம் இருந்திருந்தால் இசையால் உலக அளவில் பேசப்பட்டிருப்பார். பிறவிக்குணம் மாறாது.

 • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

  அவர் உன்னுடைய இசையை விற்றால் உனக்கு ராயல்டி தரலாம். அவர் தன்னுடைய குரலைத்தானே விற்கிறார். உனக்கு ஏன் ராயல்டி தரவேண்டும்?.

 • Rajkumar - Dammam,சவுதி அரேபியா

  க்ரீக்ட்டு தல.. அப்படியே இனிமே நான் பாடிய பாடலை யாரும் கேட்கக்கூடாது அல்லது பாடக்கூடாது என்று காப்பிரைட் வைங்க - ஜிகர்தண்டா டிங் டாங் பாடல் பாடிய குரூப்பின் வாய்ஸில் இனி மன்றம் வந்த வென்றலுக்கு பாடலை பாடுவதாக நாங்கள் நினைத்து கொள்கிறோம். சரி தயாரிப்பாளர்களாம் என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க.

 • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

  டியூனை சற்று மாற்றி பாடினால் ? பாடல் வாலி கண்ணதாசன் வைரமுத்துவுக்கு சொந்தம். கொஞ்சம் இழுத்திட்டு பாடினால் , இது அவர் இசை இல்லை என சொல்லி விடலாம்.

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இளையராஜாவின் இந்த நடவடிக்கை சரியானதுதான், இளையராஜா அவர்களின் பாடல்கள் எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது ஆனால் அதற்கான லாயல்டி அவருக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை இளையராஜாவின் பாடல்களுக்கு சரியான லாயல்டியை கொடுத்துவிட்டு பாடலாமே திரு SBP ...?

 • A. Sivakumar. - Chennai,இந்தியா

  இயற்கை தந்த மழை நீரைத் தர மறுக்கும் கர்நாடகாவுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம் ராஜா சார்? சென்னை பெருமழையின் போது அங்கே உள்ள ஒரு பார்வையற்ற, வாய் பேச முடியாத,காது கேளாத குழந்தைகளுக்கான லிட்டில் பிளவர் பள்ளியில் 250 குழந்தைகளுக்கு பசியைப் போக்கி ஆறுதல் தந்த நீங்க, உங்க உன்னதமான இசையை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதிப்பது எந்த விதத்தில் நியாயம்? என்னை மாதிரி நாட்டை விட்டுப் போய் அனாதை வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தும், உங்க இசையைத் தொடர்ந்த் ரசிப்பவர்களுக்கும், தலைமுறை வேறுபாடுகளைத் தாண்டிய உங்க தெய்வீகக் கலை எவ்வளவு ஆறுதலையும், நம்பிக்கையையும் தருது என்பது உங்களுக்குத் தெரியாதா? ஒருவேளை பொருளாதாரக் காரணம்தான் உங்க முடிவுக்கு அடிப்படை என்றால், இப்படி சேர்க்கிற சொத்தை உங்க பிள்ளைங்க வேண்டாம் என்று சொல்லி விட்டால் அதை என்ன செய்வீங்க? ஒரு பெரிய மனுஷர், ஒரு பகுதியில் இருந்த விவசாயத்துக்கான நீரையெல்லாம் உறிஞ்சி உறிஞ்சி எடுத்து, அங்கிருக்கும் விவசாயிகளை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்து, இன்னும் பணக்காரன் ஆனார், ஆனா இன்னிக்கு அவரொட ரெண்டு பொண்ணுங்க கண்ணீர் வடிச்சுக் கொண்டி இருக்காங்க, அவர் விழுந்தடித்து சேர்த்த காசினால் என்ன பயன்? எதோ பார்த்து செய்யுங்க.

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  இளைய ராஜ நீங்கள் சென்னையில் நடையாய் நடந்து வாய்ப்புகளை பெற முயன்றபோது கை கொடுத்தவர்கள் தயாரிப்பாளர்கள் இன்னும் பாடகர் பலரும் என்பதை அறியவேண்டும் இசை நன்றாக அமைந்தது என்பதற்காக இறுமாப்பு கொள்வது தகாது, கர்நாடக சங்கீதத்தின் ஆர்மோனிய பேட்டி வீணை வயலின் போன்ற தேவ சாதனங்கள் நீங்கள் கண்டுபிடித்தவை இல்லை அதை உபயோகிக்க நீர் யாருக்கு காப்புரிமை கொடுக்கீறீர் சங்கீதம் பாடல் இல்லையென்றால் இபோதுதும் கட்சிக்காரர்களுக்ககாக ரோட்டில் தான் இசைஅமைத்துஇருப்பீர்கள். படுவது ஸ் பி பி யோ அல்லது சாதாரண பாடகனோ இது இளையராஜாவின் இசை என பெருமையோடு சொல்லக்கேட்டுஇருக்கோம் இது போதாதா. பணம் போட்டு படம் எடுத்த முதலாளிக்குத்தான் உண்மையில் பாடல் சம்மந்தப்பட்ட அனைத்தும் சொந்தம் நீங்கள் காப்புரிமை என்று பினாத்துவது சரியில்லை. காசு வாங்காமல் ஓசிக்கு இசையமைத்தால் சொல்லலாம் டிமாண்ட் பண்ணி வாங்கிவிட்டு காப்புரிமையும் உமது என்பது காவலித்தனம். இசை கேட்பது எங்கள் உரிமை அத்தனைக்கும் எங்கள் வரி பணமே ஊற்றுக்கண் பாடல் எங்களுக்கே சொந்தம் நாங்கள் படுவோம் நீர் வேண்டுமானால் இனி இசை அமைக்க வேண்டாம் எம் எஸ் வி, விட ஆர் தி பரமனை விட பெரிய அப்பாடக்கர் ஒன்றும் இல்லை ஓவரா சீன போடா வேண்டாம். உமது இசையால் எஸ் பி பி கு பெயரில்லை அவர் குரல்தான் அவருக்கான அடையாளம், இசையமைப்பாளர்களை போல் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களின் திறனை தன்னுடையது என்று மார்தட்டிக்கொள்வது இல்லை படுவது. உங்கள் மதிப்பை இதற்குமேல் கெடுத்துக்கொள்ளவேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  So sad....

 • santha kumar - ruwi,ஓமன்

  நியாயப்படி பார்த்தால், இளையராஜா பக்கம் தான் தவறு உள்ளது. எப்பொழுது இளையராஜா producer இடம் அவர் இசைத்த பாட்டிற்கு காசு வாங்கினாரோ, அப்பொழுதே அந்த பாடல் அவருக்கு சொந்தம் இல்லை. சொல்லப்போனால் அந்த தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். அவருடைய திறமைக்கு மற்றும் உழைப்பிற்கும் பணம் வாங்கினார். இக்கருத்தை மறுப்பவர், உங்கள் பதிலை சொல்லவும். எடுத்துக்காட்டு. ஒரு சைக்கிள் முதலாளி சைக்கிள் ஐ விற்ற பிறகு, அந்த சைக்கிள் ஐ யார் ஓட்டினாலும் அதற்கு அவர் சொந்தம் கொண்டாட முடியாது. பாடலுக்கென்று எதாவது சட்டம் என்று உள்ளதா என தெரிய வில்லை. அப்படி இருந்தால் அது தவறாகவே இருக்கும். எதுவாக இருந்தாலும் இளையராஜா காரணம் சொன்னால் நன்றாக இருக்கும்

 • Manoj -

  balu Sir,,,, நீங்களும் உங்களுடைய குரல் க்கு தடை வாங்குங்கள்......எவனூம் பாட்டே கேட்க கூடாது .......

 • கொடுக்கு - Singapore,சிங்கப்பூர்

  மதிப்பிற்கும் , போற்றுதலுக்கும் உரிய அய்யா இளையராஜா அவர்களே..... உங்களுக்கு உலகில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு , தயவுசெய்து உங்களை நீங்களே .......

 • கொடுக்கு - Singapore,சிங்கப்பூர்

  ஒரு குழந்தையை பூவுலகிற்கு கொண்டுவர , கணவன் ,மனைவி , மருத்துவர்,நர்ஸ் உறவினர்கள் ஓட்டுநர் என்று பலருடைய பங்களிப்பு உண்டு

 • praj - Melbourn,ஆஸ்திரேலியா

  வயதான காலத்தில் ராஜாவிற்கு ஏன் இந்த புத்தி...எல்லோரிடமும் ராஜாவின் இசையை பெருமையாக பேசும் என்முகத்தில் கரி பூசிவிடடார். பாலாவின் குரல் ராஜாவின் இசைக்கு மகுடம்.இளைய ராஜாவிற்கு நல்மணம் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்..

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இசையமைப்பளாராவதற்குமுன் இளையராஜாவும் பழைய இசையமைப்பாளர்களின் பாடல்களை வைத்து கச்சேரி பண்ணிதான் ஒருவேளை சாப்பாடாவது சாப்பிட்டு உயிர்வாழ்ந்தார். அவர்களுக்கு அப்போது இளையராஜா என்ன கட்டணம்  கொடுத்தார்?( அப்போதே பல பழைய இசையமைப்பாளர்கள் பசியால் வாடிக்கொண்டுதான் இருந்தனர்) இன்று இளையராஜா பாலு இருவரின் நிதிநிலையுமே சரியில்லை அதற்கு ரசிகர்கள் காரணமில்லை 

 • Modify India - Calgary,கனடா

  இது என்னடா கூத்து? இப்படியே போனா பாட்டு எழுதியவன் copyright கேப்பான், தம்பூரா வாசிச்சவன் கூட copyright கேப்பானே? விட்டா என் பாட்ட நீ ரோடு ல போகும் பொழுது கேக்க கூடாது - காத பொத்திக்கோ னு சொல்லுவாங்க போல? இளையராஜா பத்தி நேத்துதான் பேசிட்டு இருந்தோம் இன்னிக்கி இந்த லக்ஷணம்

 • LAX - Trichy,இந்தியா

  செய்தியின் தலைப்பைப் படித்தவுடன் ஆர்.கே. நகர் எலக்ஷன் சம்பந்தப்பட்டது என்று நினைத்தேன்..

 • Ponnuchamy -

  இது copy right சட்டத்தின் கீழ் வருகிறது. எனக்கு தெரிந்த வரையில், சினிமா பாடல்களுக்கு உரிமை கொண்டாட, அந்த பாடல்களை கொண்டுள்ள படங்களின் தயாரிப்பாளர்களுக்கே உள்ளது, இசையமைப்பாளர்களுக்கு அல்ல. சினிமாவில் வராத இளையராஜவின் தனிப்பாடல்களுக்கு மட்டுமே இளையராஜவிற்கு copy right உரிமை உண்டு. மேலும் அதிக தகவல்களுக்கு Intellectual property right -> copy right சட்டத்தினை google பண்ணி படித்து பார்க்கவும். நன்றி.

 • Sundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்

  Why this dispute?

 • Ramani T S - chennai,இந்தியா

  இளையராஜா தன் தரம் என்ன என்பதை நிரூபித்துவிட்டார்.

 • Senthilkumar Kumar - Kanchipuram,இந்தியா

  போன ஆண்டு ஜேம்ஸ் வசந்தன் சொன்ன கருத்து சரிதான். என்ன இருந்து என்ன பிரயோஜனம்? நல்ல மனுசனா இருக்க தெரியலையே

 • Indhiyan - Chennai,இந்தியா

  அப்படி பார்த்தால், பாடல்கள் தயாரிப்பாளருக்கு தான் சொந்தம். இளையராஜா காசு வாங்காமல் சும்மா இசை அமைத்தாரா? அவரும் SPB மாதிரி காசு வாங்கிதானே இசை அமைத்தார்?

 • Meenu - Chennai,இந்தியா

  இது என்ன அறிவுகெட்ட தனமான மிரட்டல். ஒரு பாடல் உருவாக, அது ஹிட் ஆக இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இசையை வாசிக்கும் ஒவ்வொருவரது பங்களிப்பு, என்று கூட்டாக இருக்கையில், இசையமைப்பாளர் மட்டும் தனக்கு மட்டும் உரிமை என்று எதை வைத்து பேசுகிறார். இது முட்டாள்தனமான முடிவு, தனக்கு உண்டான மரியாதையை பொது மக்கள் மத்தியில் இசையமைப்பாளர் கெடுத்துக்கொள்கிறார்.

 • kurinjikilan - Madurai,இந்தியா

  இது உண்மை என்றால் இளையராஜா பக்கம் நியாயம் இல்லை..இளையராஜா பாடல்கள் என்று ஒன்றுமில்லை..கண்ணதாசன் எழுதினார்..தயாரிப்பாளர் பணம் தந்தார்..ராஜாவும் பாலுவும் பணம்வாங்கிய பின்னரே மெட்டுப் போட்டு பாட்டுபாடினர்..சொல்லப்போனால் தயாரிப்பாளரே அனைத்துக்கும் செட்டில் பண்ணியபின் இவருக்கு ஏன் இந்த சின்னப்புத்தி?..இளையராஜாவே தன்னை ஒட்டுமொத்த உரிமையாளராக நினைப்பது பேதமை..

 • kuppuswamykesavan - chennai,இந்தியா

  " வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர் நீச்சல், சரிதான் போடா தலைவிதி என்பது பெரும் கூச்சல், .........". (சினிமா பாடல்). ஒரு பாடல் முழுமை பெற, சினிமா தயாரிப்பாளர் முதல் எலக்ட்ரீஸ்யன் வரை ஒரு 100 பேராவது உழைப்பை பங்களித்திருப்பார்கள். எல்லோருமே இசைஞானி போல நோட்டீஸ் விட்டால் என்னாவது? .

 • பாலமுருகன் -

  ஒரு பாடல் உருவாவது பல இசைகலைஞரின் கூட்டு முயற்சியே இதற்கு இளையராஜா மட்டும் சொந்தகொண்டாட முடியாது.. பாடல் எழுதிய பாடலாசிரியர் எனது அனுமதியின்றி இளையராஜாவின் இசையில் வரும் பாடல்களை ஔிபரப்பகூடாது என்றாலோ...பாடலை பாடியவர்களும் இதே கருத்தை முன் வைத்தாலோ ஆரோக்கியமாக இருக்காது.இசை என்பது யார் ஒருவருக்கும் சொந்தமானது கிடையாது..உரிமை கொண்டாட ... பணத்திற்காக இசையை வியாபாரமாக்கிய இளையராஜா தற்போது வியாபாரம் இல்லாததால் பசியினால் வாடுகிறார் போலும் இனி அவரது பாடலை கேட்கும் நாம் அனைவரும் அவரின் இசை காப்புரிமைக்கு அவருக்கு ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் மணியார்டர் செய்யவும்.நீங்கள் இதனை பிச்சை என்று நினைத்துவிடாதீர்கள். அவர் கேட்கும் ராயல்டிக்கான பணம். இளையராஜாவின் இச்செயல் மிக மிக கேவலமாக இருக்கிறது.

 • Srivatsan Krishnamachari - Hyderabad,இந்தியா

  எஸ் பி பா கண்ணியமான முறையில் விடை கொடுத்து இருக்கிறார். வாழ்த்துக்கள். இளையராஜா தன குரலில் பாடினால் குயிலாக ஒலிக்காது மயிலின் குரலை ஒத்திருக்கும். தமிழரின் உச்சரிப்ப்பை விட சுசிலா அம்மா எஸ் பி பா தமிழ் உச்சரிப்பு இனிது.

 • makkal neethi - TVL,இந்தியா

  எஸ் பி பி யோ அல்லது இலையே ராஜாவோ மக்கள் பாட சொன்னால் பாடவேண்டும் உரிமை கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை

 • gopal - SINGAPORE,சிங்கப்பூர்

  சரஸ்வதி பாத்திரம் அறியாமல் பிட்சை இட்டுவிட்டாள்

 • HBA - trichy,இந்தியா

  இவர் ஒன்றும் பிரைவேட் ஆல்பம் காப்புரிமையோடு வெளியிடவில்லை. இவர் போட்ட இசைக்கு தயாரிப்பாளரிடம் விற்று காசை வாங்கிக் கொண்டார். அவரும் அதை திரையில் வெளியிட்டார். மக்ககளும் வரி செலுத்தி அதை கேட்டுள்ளனர். இதில் எங்கிருந்து இளைய ராஜவிற்கு உரிமை வருகிறது? இவைகள் பொது சொத்து என்று இளயராஜா ஒப்புக் கொள்ளவேண்டும்.

 • FAZAL RAHMAN - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்

  இளையராஜா ஒன்றும் ஓசியில் இசை அமைத்து கொடுக்கவில்லை. பணத்தை வாங்கித்தான் செய்து கொடுத்தார். அப்படி இருக்க, பாலு அவர்களை "பாடக்கூடாது" என சொல்ல அவர்க்கு அருகதை இல்லை.

 • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  தன் சொந்த மகனே வேறு மதத்திற்கு மாறி விட்டான், இவர் இன்னமும் தன்னை ஞானி என்று அழைக்கிறார்

 • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  SPB நல்ல மனிதர்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும். ராஜா சாரும் மார்க்கெட் அவுட்டான பின்னாடி உலக முழுக்க கச்சேரி பண்ணிதான் வயித்தக் கழுவறாரு.(ரஹ்மான் கச்சேரி வரும்படிய அறக்கட்டளைகளுக்கே கொடுத்திடறாரு). அந்தப் பாட்டையெல்லாம் எழுதின  கவிஞரு புரடியூசரு ரெக்கார்டிங் எஞ்சினீரு வாத்தியம் வாசிச்சவங்கன்னு பல பேர் அந்தபாட்டெல்லாம் உருவானத்துக்குக் காரணம்தானே? கச்சேரி வருமானத்துல இளையராஜா அவங்களுக்கு பங்கோ ராயல்ட்டியோ கொடுத்ததா சரித்திரமுண்டா? எனக்கு அந்த உண்ம தெரிஞ்சாகணும். தனக்கொரு நியாயம் ஊருக்கொரு நியாயம் சரியாங்கோ? 

 • Raja Seb - Chennai,இந்தியா

  இன்னா சார்... இப்படிபண்றீங்களே சார்....

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அதே போல இளையராஜாவுடன் SPB யும் தான் பாடிய பாடல்களை ஒலிபரப்பக்கூடாது என்று கூட நோட்டிஸ் அனுப்பலாமே?

 • Ganapathy - Bangalore,இந்தியா

  இது காப்பு உரிமை சட்டம் சம்பந்த பட்ட விஷயம் ஆகும் . ஒரு கவிஞர் பாடலை எழுதுகிறார், பின்னர் அது இசை மற்றும் குரல் மூலம் ஒரு வியாபார பொருளாக மற்ற படுகிறது . இந்த அறிவுசார்ந்த உரிமைக்கு யார் சொந்தம் என்பதில் தான் தர்க்கம் . ஒரு புறம் பார்த்தால் தயாரிப்பாளர் தான் இதற்கு பணம் செலவிட்டு ஒரு விற்பனை பொருளாக பொதுவில் கொண்டு வைக்கிறார் ஆனால் மேலே குறிப்பிட்ட கலைஞர்களிடத்தல் எந்த மாதிரியான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று தெரிந்தால் இந்த பிரச்சனை தீர்வுக்கு வந்துவிடும். இது ஒரு பொருளாதார பிரச்சனை . சோத்துக்கு வழில்லாமல் கஷ்டப்பட்டு திறமையை வளர்த்துக்கொண்டு, பல போட்டிகளுக்கு நடுவில் ஒருவன் திரை துறையில் காலடி எடுத்து வைக்கிறான் . ஒரு பாட்டிற்கு வயலின் வாசித்தல் அந்த நாளில் எத்தனை கிடைத்துவிடும் . ஆனால் அதே டியூனை பயன்படுத்தி பின்னல் வருபவர்கள் கார், பிளாட் என்று பரிசு பெறும்போது, மேலே குறிப்பிட்ட கலைஞனுக்கும் அதில் பங்கு உள்ளது என்று உணரவேண்டும் . இல்லாவிட்டால் கால் வயிறு கஞ்சி குடித்து எழுதிய பட்டு யாரோ ஒருவன் படி அவன் ஒரு கோடி பணம் சம்பாதித்தால் என்பது அறிவுசார்ந்த கொள்ளை . இதில் இளையராஜாவின் நோக்கம் என்ன என்று நமக்கு தெரியாது ஆனால் இப்படி ஏதாவது செய்தால் தான் ஒரு ராயல்டி கிடைக்கும் அதன் மூலம் தன்னை சார்ந்து இருந்த கலைஞர்களு உதவி முடியும் என்றல் அது மிக மிக நல்ல விஷயமே

 • Jahubar Ali - Doha,கத்தார்

  திரு இளையராஜாவின் இத்தகைய மனோபாவத்தால் தான் அவர் தென் இந்தியாவில் மட்டும் புகழ் பெற முடிந்தது. இந்தியா அளவிலோ அல்லது உலக அளவிலோ புகழ் பெறமுடியவில்லை.

 • Sundar - Chennai,இந்தியா

  தியாகையர், ஷ்யாமா சாஸ்திரி, முத்துஸ்வாமி தீக்ஷ்தர் காப்புரிமை கேட்டிருந்தால் இன்று ஒரு பயல் இசை அமைக்க முடியாது. இளையராஜா இன்னும் இளையவராகவே இருக்கிறார். முதிர்ச்சி அடையவில்லை என்றே தோன்றுகிறது

 • Nagarajan S - Chennai,இந்தியா

  ஒரு சாமியார் போல அனைத்தையும் துறந்தவர் போல உள்ள இளையராஜாவா இப்படி எஸ் பி பி க்கு அவர் இசையமைத்த பாடல்களை பாட தடைவிதித்துள்ளார்? இதுதான் அவரின் இன்னொரு முகமா? நம்ப முடியவில்லையே இதற்குப்பின் யாருடைய துர்போதனையோ உள்ளது போல இருக்கிறதே இதற்கு எஸ் பி பி இன் நயமான, யார் மனத்தையும் புண்படுத்தாத பண்பான பதில், அவரின் உயர்ந்த சிந்தனைகளையும், பண்பட்ட மனத்தையும் காட்டுகிறது இந்த பதிலை பார்த்தாவது, இளைய ராஜா தன்முடிவை மாற்றி அவரையும், சித்ராவையும் அவரின் இசை அமைத்த பாடல்களை பாட அனுமதிக்க வேண்டும்.

 • Kumudren saami - Doha,கத்தார்

  நட்பு ரீதியாக நேரிலோ இல்லை அலைபேசியிலோ சொல்லி இருக்கலாம், நோட்டீஸ் அனுப்பி கொச்சை படுத்தி இருக்கக் கூடாது.

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  ஒரு சினிமா பாடல் என்பது அதை எழுதியவர், அதற்கு இசை அமைத்தவர், அதை பாடியவர் என்று இருக்கும்போது அப்பாடல் எப்படி இசை அமைப்பாளருக்கு மட்டும் சொந்தமாக இருக்க முடியும். பட்டி தொட்டிகளில் மட்டுமின்றி நகரங்களில் கூட இந்த மூன்றையும் தாண்டி எம்.ஜி.ஆர்.பாட்டு என்று இன்றும் சொல்வதை பார்க்கிறோம். அப்படியானால் குறிப்பிட்ட பாட்டுக்கு நடிகரும் சொந்தம் கொண்டாடலாமே

 • VOICE - CHENNAI,இந்தியா

  SpB தான் நடத்தும் பாட்டு கச்சேரிகளில் நன்கொடையாகவோ டிக்கெட் போடாமல் நடத்தினால் இளையராஜா தடுப்பது தவறு. ஆனால் பொருளாதார நோக்குடன் SpB செய்யல்பட்டிருந்தால் இளையராஜா செய்தது சரிதான். இளையராஜா இசை அமைப்பு குழுவை அவர் பங்குபெறும் நிகழ்ச்சியில் அனுமதிப்பது மூலம் இது போன்றவை முடிவுக்கு வரும் அல்லது இளையராஜாவிடம் அவர் பாடலை பாட copy ரைட்ஸ் உரிமை பெற்று பாடலாம். இருவரும் சேர்ந்தால் லாபம் இல்லை என்றால் இருவருக்குமே நஷ்டம்.

 • sing venky - Stanford University, Melnopark,யூ.எஸ்.ஏ

  இந்த புத்தி முன்னாடியே வந்திருந்தால் அரைத்த மாவையே (தமிழர் அல்லாத எஸ். பி. பி, ஜானகி, ஜேசுதாஸ், மனோ..) அரைத்த இளையராஜா தன் வாழ்க்கையில் முன்னேறி இருப்பார். தற்போது பாருங்கள் ஏ. ஆர். ரகுமான் எண்ணிலடங்கா பாடகர்களை அறிமுகம் செய்யது, புது புது இசை நுற்பங்களை புகுத்தி (தபேலா மட்டும் பயன்படுத்தாமல்) அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். இளையராஜாவால் அறிமுகம் செய்யப்பட அயிட்டம் பாடகி ஜானகியை ஆகா ஓகோ என்று தலையில் தூக்கி வைத்து ஆடுகிற கூட்டமும் இருக்கிறது. பாவம் இளையராஜாவும் அவரின் (கிட்டத்தட்ட ) அனைத்து பாடல்களுக்கும் தபேலா (மட்டும்) வாசித்து செத்துபோன அந்த தபேலா கலைஞர்களும். இளையராஜா - (எஸ்.பி.பி/தபேலா/ஜானகி ) = ஸிரோ.

 • ARULARASAN - chennai,இந்தியா

  எப்போது இளையராஜா, வைரமுத்துவோடு இணைய மறுத்தாரோ, அன்றைக்கே புரிந்து கொண்டோம், இளையராஜாவுக்கு தலைக்கனம் என்று. அதை மீண்டும் இளையராஜா நிரூபித்துள்ளார்.

 • spr - chennai,இந்தியா

  ஒரு பாடல் பிரபலமாவதற்கு பாடல் எழுதியவர் இசையமைப்பாளர் பாடியவர் என இருந்தாலும், அதில் முதன்மையான இடம் பிடிப்பவர் பாடியவரே நிகழ்ச்சியினால் சம்பாதித்த பணத்தில் பங்கு தரவேண்டுமென எதிர்பார்ப்பதில் தவறில்லை அப்படி ஒரு நிலை எடுத்தால் பாடலை எழுதியவரோடு குழுவில் இசைத்த அனைவருக்குமே பங்கு தர வேண்டுமே அதுதானே நியாயம் அதனை இருவரும் விவாதித்து முடிவுக்கு வந்திருக்கலாம் ஆனால் இது தவறான முன்னுதாரணம் வேண்டாத ஒரு செயல். இனி கேப்போரையும் வழக்கில் சேர்ப்பார்களோ அமேரிக்கா போகுமுன் ராஜாவை அழைக்கவில்லையோ இனி இவர் இசைஞானியல்ல. ஞானிக்கு இந்த மாதிரி புத்தியிருக்காது இவரும் ஒரு சாதாரண இசையமைப்பாளர் அவ்வளவே

 • arabuthamilan - Manama,பஹ்ரைன்

  கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே... இளையராஜாவுக்கு புத்தி சரியில்லை. இருதயம் பணக் கொழுப்பு, திமிறினால் நிறைந்திருக்கிறது. இவரா இப்படி நம்பவே முடியவில்லை. இவரு இசை ஞானியா? ஞான சூன்யம்.

 • Raja - Doha-Qatar,இந்தியா

  ஆணவத்தின் உச்சக்கட்டம்....ரத்தத்திலேயே ஊறியது மாற்ற முடியாது ..நானும் இளையராஜாவின் தீவிர ரசிகன் தான் என்ன செய்வது...எஸ் பி பி எவ்வளவு பண்பாக பதிலளித்திருக்கிறார்......இருவரும் கூடி பேசி சரி செய்ய வேண்டும்...

 • baski - Chennai,இந்தியா

  பஸ் பயணமா இருந்தாலும், பாட்டு கச்சேரியா இருந்தாலும் ராஜா சார் தான் பெஸ்ட்.. ஆனா இது போன்ற செயலால் நல்ல பெயரை இழக்கிறார் ராஜா...

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  இல்லாதவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்று தன் இசையை காப்பி அடிப்பவர்களிடம் கூட பரிவு காட்டிய இல்லையராஜாவா இப்படி செய்திருக்கிறார். அவர் தரப்பையும் கொஞ்சம் விசாரித்து செய்தி வெளியிட்டிருக்கலாமே.

 • Vandhe Madaram - Karur,இந்தியா

  ___________ ன் பாடல்கள் இல்லாமல் முழு கச்சேரியை எஸ் பி பி ஆல் நடத்த முடியும். ஆனால் ___________ ஆல் எஸ் பி பி பாடல்கள் இல்லாமல் முழு கச்சேரியை நடத்த முடியாது என்பதுதான் இதில் வேடிக்கை. எஸ் பி பி ன் லைட் மியூசிக் திரூப்ல ஹார்மோனியம் வாசித்தது, வேலை முடித்து வரும் அவருடைய ஸ்கூட்டர் ல் ஓசி சவாரி செய்து நிகழ்ச்சிக்கு போனது ஆகியவற்றை மறந்ததால் வந்த நிலை. இனி தமிழ் நாட்டில் முன்னணி பாடகர்கள் ____________ ன் பாடல்கள் இல்லாமல் இசை நிகழ்ச்சிகள் நடத்தினால்தான் இதற்கு முடிவு கட்ட முடியும்

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  திறமை உள்ள இடத்தில்தான் கர்வமும் இருக்கும்..... புரிகிறது.... இவர்களுக்குள் ஏதோ ஒரு பனி போர்.... (இளையராஜாவுக்கு இது ஒன்னும் புதுதல்ல ... அவர் நிறைய பேரை முறைத்திருக்கார்).... ஆனால் அதையும் மீறி அவர் திறமையை குறை கூற முடியாது.... முடியவில்லை.... இன்றும் அவர் ஜீனியஸ்தான் .... TMS சை ஒதுக்கி பாலாவை வளர்த்தது அவர்தான்.... உங்கள் நட்பு மீண்டும் வளர வாழ்த்துக்கள்......

 • jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்

  வருத்தமளிக்கிறது..பாடல் வெளி வந்த பின் அது பொது சொத்து என்றாகிவிடுகிறது. அதுவும் ராஜாவின் பாடல்கள் பொக்கிஷம் போல. யார் பாடினாலும் கேட்டாலும் ராஜா வுக்குத்தானே பெருமை. பாடலில் SPB யின் குரல் இருக்கிறதே? .அது சரி..ராஜா சார்..கேட்டாலும் கேஸ் போடுவீங்களோ?.

 • R.Selvaperumal - kuwait,குவைத்

  அண்ணனோட தம்பி இப்போ அரசியல்ல இருக்காருல அதான் இனிமேல் எல்லாம் இப்படித்தான்........

 • chidambarAnathan -

  why is Ilayaraja stooping to such a low level SPS was his friend once,

 • Larson - Nagercoil,இந்தியா

  என்னதான் இளையராஜா இசை அமைத்திருந்தாலும், இவருடைய குரல்தானே பாடலை பாடியது.. இளையராஜாவுக்கு நெறயவே தலைக்கனம்... SPB யும் பதிலுக்கு தான் பாடிய பாடலுக்கு இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்த கூடாது என நோட்டீஸ் அனுப்பலாம்...

 • balakrishnan - coimbatore,இந்தியா

  யாராக இருந்தாலும் அனைவரின் மனதிலும் ஒரு வக்கிர புத்தி இருக்குது, அது எப்போது வெளிவரும் என்று யாருக்கும் தெரியாது, சரி இவர் இசை அமைத்தார் பாடக்கூடாது, அந்த பாட்டை எழுதியவர் இளையராஜாவுக்கு உத்தரவு போட்டால் அப்ப என்ன செய்வார்,

 • Jayadev - CHENNAI,இந்தியா

  தலைக்கனம் என்பது இது தான்

 • Shanu - Mumbai,இந்தியா

  எஸ்பி பாலசுப்பிரமணியம் நல்ல மனிதர். அவர் மனதை இந்த இளையராஜா புண்படுத்துகிறார்.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  எஸ் பி பி க்கு வக்கீல் நோடீஸ் அனுப்பியது போன்று கங்கை பாமரனுக்கும் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தன் பெயரையோ தான் இசையமைத்த பாடல்களை ஒலிபரப்புவதோ கூடாது என்று நோட்டீஸ் அனுப்புவாரா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement