Advertisement

அரசியலில் குதிக்க ஆசை - நடிகை சமீரா ஷெரீப்

ஆயிரம் 'வோல்ட்' மின்சாரம் பாயும் கண்கள். மாடர்ன் டிரஸ், ஜீன்ஸ், சுரிதார் என்றில்லாமல் சேலையிலும் மயங்க வைக்கும் செம்மெழுகு சிலை. ஐதராபாத்தில் மையம் கொண்டாலும் தமிழகத்தையே கிறங்கடிக்கும் 'கிளியோபாட்ரா' புயல். புருவ அழகாலும் ரசிகர்களை புளகாங்கிதமடையச் செய்யும் பதுமை. இத்தனையும் சித்திரமாய் சிரிக்கும் சின்னத்திரை நடிகை சமீராஷெரிப். தினமலர் வாசகர்களுக்காக அளித்த பேட்டி

* உங்கள் பிறப்பு, வளர்ப்பு பற்றி...?
பிறந்தது ஆந்திரா மாநிலம் ஐதராபாத். வளர்ந்ததும் படித்ததும் அங்கதான்.
* நடிப்பு ஆர்வம் எப்படி வந்தது?
15 வயதிலேயே ஆர்வம் இருந்ததால் நடிக்க வந்துவிட்டேன். 2006ல் துவங்கியபின், தெலுங்கில் 'அடபில்லா' சீரியலில் முதிர்ச்சி அடைந்தது. 'முத்து பிட்டா'வில் இளைய வயதிலேயே துணிச்சலுடன் அம்மா கேரக்டரில் நடிச்சேன். அதுதான் ஆந்திராவை கடந்து தமிழகத்தில் வாய்ப்பு கிடைக்க உதவியது. அது நடிப்பின் பரிணாமத்தை உணர்த்தியது. தற்போது தமிழில் 'பகல்நிலவு' தொடர் திருப்புமுனையாக உள்ளது.
* நடிப்பில் உங்களுக்கு யார் 'இன்ஸ்பிரேஷன்'?
என்னோடு ஆந்திர சீரியல்களில் நடித்த நடிகர் பிரபாகர் நடிப்பிலும், இயக்குனராகவும் சிறந்தவர். அவரிடம் நடிப்பு குறித்த ஆவர்த்தனம் உண்டு.
* தமிழகம், ஆந்திரா இரண்டிலும் சிறந்த நடிகை, உங்களுக்கு பிடித்த நடிகை யார்?
சந்தேகமே வேண்டாம். இருமாநிலத்திலும் 'நயன்தாரா'தான் என்னோட சாய்ஸ். (சிரித்தபடி) அவங்களோட நடிப்பு, 'பாடி லாங்வேஜ்'... அடடா... பெண்ணான எனக்கே அவரை ரொம்ப பிடிக்கும்.
* அரசியலில் ஆர்வம் உண்டா?
அரசியலில் குதிக்க ஆசைதான். முதல்வராகி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதுவும் ஒரு பெண்ணாக இருந்து, யாருக்கும் அடிபணியாமல் இருந்த முதல்வர் ஜெயலலிதா போல் வர ஆசைதான். வாய்ப்புகள் வந்தால் பயன்படுத்தவும் தயங்க மாட்டேன்.
* அழகுக்கான 'சீக்ரெட்' ஏதும் உண்டா?
இதற்கென தனியாக நான் மெனக்கெடுவதே கிடையாது. அவசியமாக 7 மணி நேர துாக்கம். முகத்தில் மட்டுமின்றி, அகத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது. காலை நேர உணவை தவிர்க்காமல் இருப்பது. அதன் பின், தினசரி யோகா... இதெல்லாம்தான்...
* தொலைக்காட்சி தொடர்களெல்லாம் 'அழுகாச்சி' காவியமாக உள்ளதே?
பிரபல தொலைக்காட்சியில் 'சீரியல் தொடர்' தயாரிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளேன். அதில் முற்றிலும் மாறான கதைக்களத்தை மாற்றியமைத்து, ரசிகர்கள் விரும்பும் வகையில் உயர் தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்ட திரைப்படம் போல தயாரிக்க உள்ளேன்.
* கேரள நடிகை பாவனா சம்பவம் குறித்து?
இதை கேள்விப்பட்டதும் வருத்தமடைந்தேன். இந்தக் கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும்
நடக்கக்கூடாது. நடிகைகள் குறித்த எண்ணங்கள் மாற வேண்டும். நாங்களும் உங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற எண்ணம் ரசிகர்களிடம் மேலோங்க வேண்டும்.
* உங்களின் ரோல் மாடல்?
யாரும் எனது ரோல் மாடல் அல்ல. ஆனால் நயன்தாரா போன்றவர்களின் திறமைகளை
கவனமாக கவனிப்பது உண்டு.
* ஷூட்டிங் 'பிசி'யில் குடும்பத்தினர் - கணவருக்காக எவ்வாறு டைம் ஒதுக்குகிறீர்கள்?
ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் டூ சென்னை அடிக்கடி பற... பறக்கிறேன். கணவர் அன்வர்தான் என் வாழ்க்கையே. அதனால், விடுமுறை என்றால் வீட்டில்தான்.
* பெண்ணியம் குறித்த புரிதல்கள் நம் நாட்டில் இருப்பதாக நினைக்கிறீர்களா?
இப்போ, பெண்கள் தைரியமானவராக, சுயசார்பு மிக்கவர்களாக வளர்கிறார்கள். பாலினம் சார்ந்த புரிதலுக்கு ஆதரவு குரல்கள் இன்னும் தேவை என்றே கருதுகிறேன். இருப்பினும் அதற்கான மாறுதல் சமூகத்தில் தேவையே. தொடர்புக்கு: sameerasherif15gmail.com

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement