Advertisement

அரசியலில் குதிக்கிறார் நடிகர் கமல்?

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்திய, நடிகர் கமலஹாசன்,
அரசியலில் குதிப்பது குறித்து விவாதித்துள்ளார். 'நான் செய்யும் அரசியல், ஓட்டு வாங்குவதற் காக அல்ல; மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் அரசியல்' என, கமல் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெ., மறைவை தொடர்ந்து, டுவிட்டரில், அதிரடி கருத்துகளை வெளியிட்டு வரும் கமல், மக்கள் பிரச்னைகள் குறித்தும் பேசி வருகிறார். இந்தச் சூழலில், கமல் ரசிகர் மன்ற புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகி, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதற்கு, கண்டனம் தெரிவித்த கமல், அவரை விடுவிக்கக்கோரி எச்சரிக்கையும் விடுத்தார்.
இந்நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் அலுவலகத்தில், ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் நேற்று கமல் ஆலோசனை நடத்தினார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, இந்த ஆலோசனை நடைபெற்றது.

ஆலோசனையின் போது, கமல் பேசியதாக, அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:
கச்சேரியில் பாட்டு சரியில்லை என, குறை கூறுவதால், மேடைக்கு வந்து, என்னை பாடச் சொல்லக்கூடாது.

நான் அறிக்கை விடுவது புதிதல்ல; 30 ஆண்டுக ளுக்கு முன்பிருந்தே, கருத்து கூறி வருகிறேன். இலங்கை பிரச்னைக்கு முதல் ஆளாக குரல் கொடுத்தவன் நான்.இப்போது தான் நான் கூறு வது, அவர்கள் காதில் விழ தொடங்கி உள்ளது.

நான் அரசியலில் இல்லை என்றுயார் சொன்னது. நான் செய்யும் அரசியல், ஓட்டு வாங்கும் அரசியல் அல்ல; மக்கள் பிரச்னை களை தீர்க்கும் அரசியல். யார் தவறு செய்தா லும், நாகரிகமான முறையில், அவர்களுக்கு கண்டனத்தை பதிவு செய்யுங்கள். 30 ஆண்டுகளாக எவ்வித இடையூறு இன்றி நடைபெற்ற ரசிகர் மன்ற பணி, இன்னும் சிறப்பாக, பெரிய அளவில் நடைபெற வேண்டும்; நான் துணை யிருப்பேன்.இவ்வாறு கமல் பேசியதாக நிர்வாகிகள் கூறினர்.

அவர்கள் கூறுகையில், 'ஜெ., மறைவின் போது, சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என, கமல் கூறினார். அது, எவ்வளவு உண்மை என, இப்போது தெரிந்திருக்கும். கமலின் இந்த அதிரடி நடவடிக்கை, அவர் அரசியலுக்கு வருவ தற்கான அஸ்திவாரம் தான். இது, ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் அளிக்கும்' என்றனர்.

- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (204)

 • bairava - madurai,இந்தியா

  வரவேற்போம் உண்மையான மண்ணுக்கும் மக்களுக்குமான சேவை தொடர வாழ்த்துக்கள்

 • Venkataraman Sekkar - Trivandrum,இந்தியா

  இனியாவது எல்லோருக்கும் புரியும்படி பேச கமல் கற்றுக்கொள்ளவேண்டும்.

 • மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா

  அடிமுட்டாள்களை அரசியல்வாதி தம்முடன் சேர்த்துக்கொள்வர்.படிக்காத முட்டாள்களையும் படித்த முட்டாள்களையும் தம்முடன் சேர்த்துக்கொள்வர். ஏன் சிற்சில நேரங்களில் மேதாவிகளைக்கூட சேர்த்துக்கொள்கின்றனர். கமல், நீங்கள் அதிமேதாவியாக இருப்பதால் அரசியலில் ஒரு பயலும் உங்களை தன்னருகில் வைத்துக்கொள்ளமாட்டான். தமிழக அரசியல் நிலைமை தற்சமயம், "எழுதியவன் ஏட்டை கெடுத்தான் படித்தவன் பாட்டை கெடுத்தான்" எனும் அளவில் உள்ளது. சமயோசிதமாக செயல்பட வேண்டியது மிக மிக முக்கியம்.

 • Krish Sami - Trivandrum,இந்தியா

  கமல் சினிமாவில் ஹீரோ தான் ஐயம் இல்லை. அரசியல் களத்தில் அவர் ஒரு கோமாளி என காலம் காட்டும். இது அவருக்கும் தெரியும். தனி இயக்கம் காணும் அளவு அவர் முட்டாளும் அல்ல. ஆனானப்பட்ட அமிதாப் பச்சன் சிரஞ்சீவி பட்ட பாடு புரியாதவரா என்ன? அவர் சினிமாக்காரர். அதிலிருந்தே ஒரு எடுத்துக்காட்டு. வண்டு முருகனா அவர்?

 • mindum vasantham - madurai,இந்தியா

  நான் ஒன்று சொல்கிறேன் பேசாமல் வைகோவை ஆதரித்தால் என்ன , திமுகவை எதிர்ப்பதில் சுட்டி அவர் , ஹிந்து எதிர்ப்போ முஸ்லீம் எதிர்ப்போ செய்யாதவர், இலங்கை பிரச்னையில் உண்மையாக உதவியவர் ,சீமான் போன்று கிராபிக்ஸ் மூலம் போட்டோ படம் பிடிக்கவில்லை ,தமிழகத்தின் பல பிரச்னையில் குரல் கொடுத்தவர் ஹிந்து மதத்தை பற்றி பேசுவார் அதே நேரம் கம்யூனிசமும் பேசுவார் ............... இவருக்கு மறுவாழ்வு அளித்தால் என்ன ,திமுக தான் இவரை பற்றி மேமே புரளிகள் கிளப்புகிறார்கள் , ஸ்டாலின் ஊழலில் நெருப்பு என்றும் ,கருணாநிதியிடம் கார் இல்லை என்றும் சொல்கிறார்கள் தி முகவை எவ்வளவு நம்பலாம் என்று யோசித்து பாருங்கள் ..

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  பச்சை தமிழன் கமல். அவர் தமிழக அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. கமல் ஒன்றும் அரைவேக்காடு கிடையாது, அறிவுஜீவி. ரியாலிட்டி தெரிந்தவர். கமல் வரலாம். ஒய்வு பெற்ற நேர்மையான அதிகாரிகள், சமூகத்தில் நேர்மையான மனிதர்கள் என்ற பெயரெடுத்தவர்கள், நீதிபதிகள், கட்சி சாராமல் இருக்கும் வழக்கறிஞர்கள், இளைஞர்கள், அனைத்து சமூகத்தினரையும் இணைத்துக் கொண்டு ஏன் திரையுலகை சேர்ந்தவர்களை கூட இணைத்துக்கொண்டு கமல் அரசியலில் இறங்கலாம். அவருக்கு ஆதரவாக அவர் நண்பர் ரஜினியும் இறங்கினால் இங்குள்ள அரசியல் வியாதிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்கும். குடும்ப அரசியல், வாரிசு சாக்கடை அரசியலை பார்த்து பார்த்து நொந்து கிடக்கும் மக்கள் தாராளமாக கமலை வரவேற்கலாம். மன்னார்குடி மாஃபியாவும் வேண்டாம், கோபாலபுர மாஃபியாவும் வேண்டாம், ஜாதியை வைத்து பிழைப்பு நடத்தும் ஈன பிறவிகளும் வேண்டாம். மைனாரிட்டி வாக்குகளை அண்டி பிழைப்பு நடத்தும் மொள்ளமாரிகளும் வேண்டாம். ஒரு தமிழன், புதிய தலைவன் வரட்டுமே, அது கமலாக இருந்தால் என்ன.

 • Suresh Ulaganathan - Bangalore,இந்தியா

  அது என்ன நடிகர்களை விட்டால் வேறு ஆட்கள் இல்லையா தமிழ் நாட்டில். இன்று தமிழகம் முன்னேற்றம் அடையாமல் போனதற்கு காரணம் நடிகர்கள் , நடிகைகள் ஆண்டதினால் தான் காமராஜருக்கு பிறகு தமிழ் நாட்டை நடிகர்கள் தான் தமிழ்நாட்டை முன்னேற விடாமல் செய்தது. தமிழர்களை இந்த நடிகர்கள் தான் சினிமா மோகத்தில் தள்ளியது. ஆனால் நடிகர்கள் , நடிகைகளோ கோடி கணக்கில் சம்பாதித்து விட்டனர். 58 வயதை கடந்த இவர்கள் அரசையிலில் ஈடுபடுகிறார்கள். காரணம் அரசியலுக்கு retirement கிடையாது. ஒரு வேலை வந்தால் கர்நாடக அரசு தண்ணீர் விட்டு விடுவார்களா ? தமிழ் நாட்டில் அணைகள் கட்டப்படுமா தண்ணீரை சேமிக்க ? இவர்கள் வந்தால் நடிகர் சங்கம் தான் கட்டப்படும்.அதுவும் மக்களின் வரி பணத்தில்.

 • Sridhar S - Chennai,இந்தியா

  கமல் அரசியலுக்கு வராமல் தன் கலை பயணத்தை தொடர வேண்டும்

 • Sridhar S - Chennai,இந்தியா

  கமல் அரசியலுக்கு வராமல் தன் கலைப்பணியை தொடரவேண்டும்

 • Karthik - chennai,இந்தியா

  வீட்ல வேலை இல்லாம யாரும் துணைக்கு இல்லாம இருந்தால் இப்படிலாம் தோணும் ,சீக்கிரம் யாரையாவது சேர்த்துக்கங்க .

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இவராவது, அரசியலில் வெற்றி பெறுவதாவது. ஒரு தொகுதிக்கு 100 ஓட்டுக்கள்? ம்ம்ம்ம் அதுவும் தேறாது. ஆனால் ரஜினிகாந்திற்கு கிராமம் வரை பெயர் இருக்கிறது. ரஜினி அரசியலில் வருவது ஒரு புயலை தோற்றுவிக்கும். தமிழ்நாட்டில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவிக்கும். இந்தியாவிற்கு ஒரு முக்கிய செய்தியாக இருக்கும். உலக அளவில் சிறிய அளவில் அது பேசப்படும். ரஜினியின் வாய்ஸ் இந்த சவுத் ஆப்பிரிக்காவிலும் கேட்கிறது. இங்கு கூட ரஜினிக்கு என்று ஆட்கள் இருக்கிறார்கள்.

 • மோகன் - லண்டன்,யுனைடெட் கிங்டம்

  கமல் என்ற நடிகரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் ஆராயசிலில் குதிப்பது என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை... இவர் மறைமுகமாக அரசியல் விமர்சகராக இருப்பதுதான் மக்களுக்கு உபயோகமாக இருக்கும்..

 • Sundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்

  Honest people do not enter in the plitics. It is understood like all well wishers for Tamil Nadu Kamal is also aggrieved against the act of all politicians.

 • ஹிந்து தேசியவாதி - Bangalore,இந்தியா

  தங்களை அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லவில்லை, ஆனால் தாங்கள் அரசியலுக்கு வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மட்டும் கூறுகிறேன்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  கமல் எல்லாவித தகுதியும் உள்ளவர் அடுத்த முதன் மந்திரி பதவிக்கு, 1967 க்குப்பிறகு வந்த முதன் மந்திரிகள் எந்த ஒழுக்க சீடராக இருந்தார்களோ அது அப்படியே இருக்கின்றது இவரிடம். நடிகன், தனி மனித ஒழுக்கம் இல்லாதவன், குடும்பம் ஒரு கேலிக்கூத்து?,கோக்குமாக்குத்தனம் பேச்சுக்களில், இந்துக்களை குறை கூறுவது, இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  அரிதரம் பூசியவர்கள்தான் தமிழக அரசியலில் புகுந்து இதுவரை தில்லுமுல்லு செய்து சிறை சென்று , தமிழகத்தை மீண்டும் மீண்டும் சூறையாடி உள்ளார்கள் . அந்த குறை கமல் வரவால் நீங்கும் . வாங்கோ சூறையாடுங்கோ . கூட கவுதமி , சுருதி இருவரையும் கூட்டிகிட்டு வாங்கோ .கூட்டம் சேரும் . இருவரும் குத்தாட்டம் போட்டால் ஒட்டு சேரும் . நீங்கதான் அடுத்த முதல்வர் . எல்லா தகுதியும் இருக்கு . மனைவிகள் வேறு இரண்டு அது பிளஸ் பாயிண்ட் . AIADMK விற்கு மாற்று கமல் கவுதமி சுருதி பேரவைத்தான் . (ககசுபே ). அதை உங்கள் மொழியில் சொன்னால் கட்சி அதுக்கு முன்னால் வெள்ளோட்டம் , தள்ளாட்டம் . கன்னியும் கிழவனும் கிழவியும் அதுதான் தமிழன் விடிவு .

 • நான் தமிழன் - Zurich,சுவிட்சர்லாந்து

  ரஜினியை விட நீங்க எவ்வளவோ பெட்டர் ... ஆனா எப்போ, எங்க, எவ்வளவு உயரத்திலிருந்து குதிப்பீங்கன்னு மட்டும் சொல்லிடுங்க......

 • kmish - trichy,இந்தியா

  படத்தை ரிலீஸ் பண்ண உடலேன்னா நாட்டை விட்டே ஓடிருவேன் சொன்ன மாதிரியா, சுயநலவாதிகள் வருவத்திற்கு அரசியல் ஏற்ற இடம், அதே போல் நீங்கள் இருப்பதற்கு ஏற்ற இடம் , விஜய காந்திற்கு பிறகு டிபாசிட் காலி க்கான வேட்பாளர் கமல், வாழ்த்துக்கள்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இருக்கிறவர்களை விட்டு விட்டு புதியவர்களை தேடுவது ஏன் ? திறமையான மக்கள் தலைவர்கள் இருந்தும் அவர்களை புறம் தள்ளிவிட்டு புதியவர்களை தேடுவது ஏன் ? 1 பா ம க 1991 தேர்தலில் இரண்டு கழகத்திற்கு மாற்றாக போட்டி இட்டது வென்ற இடம் ஒன்று மட்டும் . 2. 1996 தேர்தலில் மதிமுக தனியாக போட்டி இட்டது ஒரு இடமும் கிடைக்கவில்லை கூட்டணி கம்யூனிஸ்ட்க்கு மட்டும் ஒரு தொகுதி. 3 2006 தேர்தலில் தேமுதிக மாற்றாக போட்டி இட்டது கேப்டன் மட்டும் ஒரு இடம் பெற்றார். 4 , 2016 தேர்தலில் நாம் தமிழர் , ம நல கூட்டணி , பாமக, பாஜக தனித்து காலம் இறங்கியது ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை . இப்படி மக்கள் மாற்று சக்திக்கு ஆதரவு தராமல் இரண்டு கழகத்தை மட்டும் மாற்றி மாற்றி தேர்ந்தெடுக்கின்றனர் , இந்த நிலை மாறவேண்டும் இந்த இரண்டு ஊழல் கலகங்களையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

 • murumaha - madurai,இந்தியா

  சம்பாதித்த காசுல மக்கள் பேசுற அளவுக்கு ஏதாவது செஞ்சிருந்தா மக்கள் ஏறெடுத்து பார்ப்பாங்க. ஜனநாயகத்தில் கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு.

 • Tamilnesan - Muscat,ஓமன்

  கவுதமி தான் மகளிரணி தலைவி, இல்லை கொள்கை பரப்பு செயலாளர்....என்று ஒரு நண்பர் கூறுகிறார்.............கொள்கை என்னவோ? தெருவுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் நண்பிகளை வைத்துக்கொள்வதா? வேணாம்..........நான் அழுதுருவேன் நாடு தாங்காது சாமி

 • Balaji - Khaithan,குவைத்

  கமல் அவர்கள் மிகப்பெரிய கலைஞர்..... கலைத்துறையில் என்றும் மங்காமல் இருக்கு இவரது புகழ்...... எதையும் முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவார்......... ஆனால் இவர் அரசியலுக்கெல்லாம் வரவேண்டிய தேவையில்லை...... வந்தால் நன்றாகவும் இருக்காது...... அதனால் அவரது பணியையே செய்தால் போதும்........

 • Tamilnesan - Muscat,ஓமன்

  அரசியலில் ஈடுபட ஏற்கனவே இவர் முழு தகுதி பெற்றுவிட்டார். மனைவி, இணைவி, துணைவி, தோழி என்று "ஊருக்கு ஒன்று" ஏராளம் தமிழக மக்கள் இவரது கூத்தையும் பார்க்கத்தான் போகிறார்கள். இறுதியில் புனிதமான அரசியல் "அயோக்கியர்களின் இறுதி புகலிடமாக" போய் விட்டதே

 • BHAVANI - Chennai,இந்தியா

  வேண்டாம் சாமி இந்த மூன்று மாத அறிக்கையிலேயே ஒரு நல்ல கருத்துக்கே உங்கள் பேச்சில் இல்லை. போதும் நீங்கள் தமிழ் நாட்டை தவிர எங்கு வேண்டுமானாலும் போய் அரசியல் பேசி குழப்புங்கள். இங்கிலாந்து மஹாராணி கூட உங்களை வரவேற்பார். ஏனெனில் அவருக்கு தமிழ் பண்பு கலாச்சாரம் சொல்லி தர ஆல் தேவை படுகிறதாம். உங்களால் மட்டும் தன் எல்லாவற்றையும் புரிய வைக்க முடியும். உங்கள் தொடர்பை சினிமாவுடன் நிறுத்தி கொள்ளவும்.

 • Dhanraj Jayachandren - Madurai,இந்தியா

  ஒன்னு மட்டும் சொல்வேன், ரஜினி, விஜயகாந்துக்கு, கமல் பல மடங்கு அரசியலுக்கு தகுதியானவர்

 • R.சுதாகர் - Jeddah,சவுதி அரேபியா

  அரசியலுக்கு வருவது அப்படி ஒன்றும் கெட்ட காரியம் அல்ல... நல்லவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பதால் தான் அரசியல் இப்படி சாக்கடையானது. அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும்.. சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ய யார் துணிந்தாலும் அதனை வரவேற்று, துணை நிற்போம்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அரசியலில் குதிக்க வாய்ப்பில்லை. வேண்டுமானால் தன்னுடைய அடுத்த படம் வெற்றியடைய செய்யும் நாடகமாக இருக்கலாம். கமலுக்கு மக்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பில்லை.

 • A. Sivakumar. - Chennai,இந்தியா

  கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர, அநேகமாக எல்லாக் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு நடத்தும் முன்பே சீட்களை நல்ல விலையில் விற்று விடுகின்றன. சீட்டை விலைக்கு வாங்கும் வேட்பாளரும் தான் ஜெயிப்பதற்காக எவ்வளவு வேணாலும் செலவு செய்யறார் இப்படி சீட்டை விலைக்கு வாங்கி, வீடு காடு கரை எல்லாத்தையும் அடமானம் வெச்சோ அல்லது வித்தோ ஜெயிச்சு வர்றவன்/வர்றவள் தொகுதிக்கோ அல்லது மக்களுக்கோ நல்லது செய்வாங்க என்று எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம்? இது ஒரு ஒட்டுமொத்த சிஸ்டம் ஃபெயிலியர். உங்க வசூல்ராஜா எம்பிபிஎஸ் பாணியில் சொல்லணும்ன்னா, இது ஹார்ட் அட்டாக் இல்லே, கார்டியாக் அரெஸ்ட். கடவுளாலும் ஒண்ணும் பண்ண முடியாது. தேர்தல் கமிஷன் தற்போதைய மாநிலத் தேர்தல்களில் ஒரு வேட்பாளர் செய்யக்கூடிய அதிகபட்ச செலவுத் தொகையாக இருபது முதல் இருபத்தெட்டு லட்சம் வரைக்கும் நிர்ணயித்திருக்கு. இதில் டெபாஸிட் தொகை பத்தாயிரம் ரூபாய் மட்டுமே. மீதி எல்லாம் நடைமுறைச் செலவுக்கு. இந்தக் கணக்கு ஒன்றே சொல்லும் நாடு எங்கே போயிட்டிருக்கு என்று. கமல்ஜி, உங்களை ஒன்று கேட்கிறேன். உங்க சக கலைஞர் ஒருத்தரே, மக்கள்கிட்டே கெஞ்சிக் கூத்தாடி பிச்சைக்காரன் ரேஞ்சுக்குப் போய்க் கதறி, ஓட்டை வாங்கிட்டு, கூவத்தூரில் வாங்க வேண்டியதை வாங்கிட்டு, இப்ப மக்களுக்கு எதிரான அரசியல் பண்ணிக்கிட்டு, மக்கள்கிட்டே வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்காருன்னு பத்திரிகை செய்திகள் படிக்கிறோம். நடிகர் சங்கத் தேர்தலில் அவர் ஜெயிக்க நீங்க ரொம்ப பாடுபட்டீங்கன்னு சொன்னாங்க, உங்களால அவரை மாற்ற முடியுமா? அதனாலதான் சொல்றேன், இது ஒட்டுமொத்த சிஸ்டம் ஃபெயிலியர். சாக்கடையை சுத்தம் பண்ணனும்ன்னா, நீங்க அதில் இறங்கிக்கூட சுத்தம் செய்யத் தேவையில்லை. ஒண்ணே ஒண்ணு செய்யுங்க. இருநூற்று முப்பத்து நான்கு தொகுதிகளிலும், வரும் சட்ட மன்றத் தேர்தலில், இன்றைய கச்சடா சமூகத்திலும்கூட நியாயமான மனுஷங்கன்னு பெயர் எடுத்திருக்கிற மனுஷங்களைப் போட்டியிட ஊக்குவிங்க. எந்த ஆடம்பரமும் இல்லாமல், வீண்செலவு ஏதும் செய்யாமல், அந்தந்த தொகுதி மக்கள் அனைவரையும் இந்த வேட்பாளர்கள் நேரடியாக சந்தித்து வாக்கு கேட்பதற்கு மட்டும் ஒரு பொது நிதியிலிருந்து செலவு செய்யும் வகையில் செஞ்சிட்டு, ஊடகங்கள் மற்றும் பசங்க மூலம் நீங்க ஆதரவு கொடுங்க. என் பங்குக்கு, நான் சார்ந்திருக்கும் தொகுதியில் நிற்கும் நியாயமான ஒரு வேட்பாளருக்கு டெபாஸிட் தொகையை நான் தர்றேன். என்னை மாதிரி வெளிநாட்டில் வேலை செய்யும் ஒத்த சிந்தனை உள்ளவர்களும் இந்தப் பொதுக் காரியத்துக்கு முடிஞ்ச அளவு கட்டாயம் உதவி செய்வாங்க. தேர்தல் சமயத்தில், வாய்ப்புக் கிடைத்தால், நாங்களும் வந்து இவங்களோட பிரச்சாரத்தில் கலந்து ஒத்தாசை செய்யறோம். (ஆம் ஆத்மியின் பஞ்சாப் தேர்தலுக்காக பஞ்சாபி என்ஆர்ஐக்கள் வந்து கலந்துக்கிட்டே மாதிரி). சென்னையில் அடிச்ச பேய் மழையில் கூவம் மற்றும் சென்னையின் அசுத்தங்கள் காலியான மாதிரி, நல்ல மனுஷங்க அரசியல் அதிகாரத்தில் இருந்தால் சாக்கடை சுத்தமாகும், மக்களுக்கும் நல்லது நடக்கும்.

 • ganapathy - khartoum,சூடான்

  இவர் காவிரி நீர் பிரச்சனையில் ரஜினி நாகரிகமான முறையில் தனி ஆளாக உண்ணாவிரதம் இருந்து தன்னுடைய கவலையை தெரிவித்துட்டார். மற்றவர்கள் நெய்வேலிக்கு சென்று மின்சாரத்தை நிறுத்துவோம் என்று முதலில் கூப்பாடு போட்டனர். (நடிகர்கள் தான்..) இவர் ரஜினி உண்ணாவிரதம் இருந்த பொழுது தெரிவித்த கருத்து என்ன?

 • Snake Babu - Salem,இந்தியா

  //எனக்கு தெரிந்த வரையில் கமல் ஒரு திறமையான மனிதர். அவரது ஆங்கில மற்றும் தமிழ் அறிவு மற்ற தமிழ் நடிகரை விட சிறந்தது. மற்றும் மற்ற நடிகர்களை விட உலக மற்றும் அரசியல் ஞானம் உடையவர். ஆனால் தற்பொழுது உள்ள அரசியலில் அவரால் ஜெயிக்க முடியுமா என்றால் சந்தேகமே. காரணம் நீச்சல் திறமை உடையவர் நீந்தலாம், எவ்வளவு பெரிய நீச்சல் அடிப்பவரும் சுனாமி இல் நீச்சல் அடிக்க முடியாது. கடைசியில் பிணம் தான் கரையில் ஒதுங்கும். இதை நான் அவரது திறமையை குறைத்து மதிப்பிடவில்லை. உண்மையிலேயே யாரோ ஒருவர் தன் சொந்த அரசியல் லாபத்திற்காக கமலை அரசியலுக்கு இழுக்கிறார்கள். அவர் லாபம் அடைந்த பிறகு கமலை குப்பையில் போடுவார்கள். சிறந்த எடுத்துக்காட்டு. கடந்த தேர்தலில் விஜயகாந்த். தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் சிறந்த மனிதர். அவரது செல்வாக்கை எப்படி அழித்தனர் எனபது நாம் கண் கூட பார்த்தோம். அது போல் தான் கமலுக்கும் நேரும். கமல் சார் ஒன்று நினைக்கவும், அவர் எதிரே நிற்பது ஸ்டாலின் மற்றும் மோடி டீம். இவர்கள் இரண்டு பேரும் அரசியல் சதுரங்கம் செய்வதில் கில்லாடிகள். எனக்கு தெரிந்த வரையில் இப்பொழுது நடக்கும் அனைத்து அரசியல் பிரச்சினைக்கும் காரணம் இந்த இருவரின் சதுரங்கம் தான். நான் கமலை மிகவும் நேசிப்பவன். தயவு செய்து அரசியலில் வராதீர்கள். வருவதாக முடிவு செய்தால் தனியாக ஒரு சமூக சேவை செய்வது போல் செய்யுங்கள். மக்கள் உங்களை எப்பொழுது தேர்வு செய்வார்களோ அப்பபொழுது பெரியவராக வாருங்கள். அவசரப்பட்டு இந்த மோடி கோ அல்லது இப்பொழுது இருக்கும் எந்த அரசியல்வாதிகளின் பின்னாடி போகாதீர்கள்.// அப்படியே ஒத்துப்போகிறேன் நன்றி வாழ்க வளமுடன்

 • praj - Melbourn,ஆஸ்திரேலியா

  அரசியலில் வரலாம் ஆனால் சினிமாவில் இனி நடிக்கக்கூடாது.... சினிமாவில் மேற்கொண்டு நடிப்பதாக இருந்தால் தயவு செய்து வராதீர்கள்.... தமிழ் நாடு அரசியல் இவ்வளவு கீழ்தரமானது சினிமாக்காரர்களால் தான்... அரசியல் வேறு சினிமா வேறு....

 • kuppuswamykesavan - chennai,இந்தியா

  முதலமைச்சர் பதவிக்கு எல்லா கட்சித் தொண்டர்களும் கியூ கட்டி நிக்கிறாங்களேப்பா. தந்தை பெரியார் போன்ற பதவிக்குத்தான் தொண்டர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அதை கமல்ஜி செய்யலாமே? .

 • பஞ்ச்மணி - கோவை,இந்தியா

  இவரு அரயில் பன்றது மக்கள் பிரச்சனையை தீர்க்கவாம் இதுவரைக்கும் அவர் அரிசயல் செஞ்சு எத்தனை பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கார் யாராவது சொன்னா நல்லா இருக்கும, முதல்ல நாம திருந்தனும் எதுக்கு முக்கிகயதுவம் தரனும் தரக்கூடாதுன்னு தெரியனும்

 • Bava Husain - riyad,சவுதி அரேபியா

  அரசியலில் குதிக்கிறார் நடிகர் கமல்........... சார் பார்த்து குதிங்க...அடிபட்டுறப்போகுது.....

 • Thamizhan - Pondy,இந்தியா

  அபிராமி , அபிராமி ........மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித ஆசை அல்ல . அதையும் தாண்டி புதினமானது

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  சில நாட்களுக்கு முன், நடிக்கும்பொழுது கால் உடைந்து விட்டது. இப்போது மீண்டும் அரசியலில் குதிக்க முயலுகிறாரோ? ஜாக்கிரதை.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இவன் அரசியல்ல குதிச்சா சினிமா பிழைச்சுது -ன்னு ஆறுதல் அடையலாம் ..... ஆனா இவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான் ......

 • நரி - Chennai,இந்தியா

  இயேசு கிறிஸ்து சொன்னார் : " உங்களில் தவறு செய்யாதவர்கள் அந்த பெண் (விபச்சார ஸ்திரி) மீது கல் எறியுங்கள்" ...... ஆக ரெண்டாயிரம் வருடத்துக்கு முன்பே மனிதன் இப்படித்தான் இருந்திருக்கிறான் ..... கமல் சார் நீங்க ஒன்றும் மனது வருத்தப்படாதீர்கள்..... இவர்கள் மூடர்கள் ..... அரசியல் சரியான விஷயமா ........ சகோதரர், ரஜினி, மணிரத்னம் மற்றும் மகேந்திரன் இவர்களிடம் கலந்து பேசி முடிவெடுங்கள்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இவன் அரசியல்ல குதிச்சா சினிமா பிழைச்சுது -ன்னு ஆறுதல் அடையலாம் ..... ஆனா இவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான் ......

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  கழுதை கெட்டால் குட்டிச்சுவரு...

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  நான் செய்யும் அரசியல்..... கமல் . நான் சமூக சேவை செய்ய தான் சினிமாவில் நடிக்கிறேன்....காசு சம்பாதிக்க அல்ல...

 • Raj - bangalore,இந்தியா

  கமல் தனி கட்சி ஆரம்பிப்பதை விட பிஜேபியில் சேரலாம்.

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  சில மாதங்களுக்கு முன் "அரசியல் ஒரு சாக்கடை அதற்கு என்னை அழைக்காதீர்கள்" அப்படின்னு சொன்ன கமலா இது. இப்போ இவ்வளவு ஆர்வத்தோட பேசறார். இவரை இப்பொழுது அரசியலுக்கு வர தூண்டுவது எது? மூன்று மாதத்தில் பேச்ச மாத்திர இவரு அரசியலுக்கு சரியான ஆள்தான்... மருத நாயகம் வெளில வரதுக்கு வழி பாத்துட்டார்... தமிழர்கள் கிறுக்கர்கள்.. யார வேணாலும் ஆளலாம்..

 • santha kumar - ruwi,ஓமன்

  எனக்கு தெரிந்த வரையில் கமல் ஒரு திறமையான மனிதர். அவரது ஆங்கில மற்றும் தமிழ் அறிவு மற்ற தமிழ் நடிகரை விட சிறந்தது. மற்றும் மற்ற நடிகர்களை விட உலக மற்றும் அரசியல் ஞானம் உடையவர். ஆனால் தற்பொழுது உள்ள அரசியலில் அவரால் ஜெயிக்க முடியுமா என்றால் சந்தேகமே. காரணம் நீச்சல் திறமை உடையவர் நீந்தலாம், எவ்வளவு பெரிய நீச்சல் அடிப்பவரும் சுனாமி இல் நீச்சல் அடிக்க முடியாது. கடைசியில் பிணம் தான் கரையில் ஒதுங்கும். இதை நான் அவரது திறமையை குறைத்து மதிப்பிடவில்லை. உண்மையிலேயே யாரோ ஒருவர் தன் சொந்த அரசியல் லாபத்திற்காக கமலை அரசியலுக்கு இழுக்கிறார்கள். அவர் லாபம் அடைந்த பிறகு கமலை குப்பையில் போடுவார்கள். சிறந்த எடுத்துக்காட்டு. கடந்த தேர்தலில் விஜயகாந்த். தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் சிறந்த மனிதர். அவரது செல்வாக்கை எப்படி அழித்தனர் எனபது நாம் கண் கூட பார்த்தோம். அது போல் தான் கமலுக்கும் நேரும். கமல் சார் ஒன்று நினைக்கவும், அவர் எதிரே நிற்பது ஸ்டாலின் மற்றும் மோடி டீம். இவர்கள் இரண்டு பேரும் அரசியல் சதுரங்கம் செய்வதில் கில்லாடிகள். எனக்கு தெரிந்த வரையில் இப்பொழுது நடக்கும் அனைத்து அரசியல் பிரச்சினைக்கும் காரணம் இந்த இருவரின் சதுரங்கம் தான். நான் கமலை மிகவும் நேசிப்பவன். தயவு செய்து அரசியலில் வராதீர்கள். வருவதாக முடிவு செய்தால் தனியாக ஒரு சமூக சேவை செய்வது போல் செய்யுங்கள். மக்கள் உங்களை எப்பொழுது தேர்வு செய்வார்களோ அப்பபொழுது பெரியவராக வாருங்கள். அவசரப்பட்டு இந்த மோடி கோ அல்லது இப்பொழுது இருக்கும் எந்த அரசியல்வாதிகளின் பின்னாடி போகாதீர்கள்.

 • Thamizhan - Pondy,இந்தியா

  "ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் " வரலாமே . அவருக்காவது ஒரு நாள் முதலமைச்சராக நடித்த அனுபவம் இருக்கிறதே

 • Zacharias Rosario - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

  சுப்ரமணிய சாமி சென்னைக்கு நேற்றுகூட வந்து போயிருக்கிறான்.

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  Living together பார்ட்னர் இல்லாமல் அவரால் அரசியலில் குதிக்க முடியாது ...

 • Thamizhan - Pondy,இந்தியா

  ""நான் செய்யும் அரசியல் ஓட்டு வாங்குவதற்கு அல்ல" என்கிறார் . ஓட்டு வாங்காமல் எப்படி அரசியல் செய்வார்? டெபாசிட் போய் விடுமே? தேர்தல் ஆணையம் கட்சியை அங்கீகாரம் கூட செய்யாதே?? என்ன பேசுகிறோம் என்ற தெளிவு கூட இல்லையே ???

 • Meenatchi Sundaram - Chennai,இந்தியா

  இப்ப பாருங்களேன் எதிர் கட்சி, ஆளும் கட்சி எல்லாம் ஒண்ணா சேருவங்க

 • Meenatchi Sundaram - Chennai,இந்தியா

  கமல் அரசியலுக்கு வருவது தவறில்லை

 • Balaji - Bangalore,இந்தியா

  ஆம். கமலுக்கு வயதாகிவிட்டது. அரசியல் நல்ல வசூல் தரும்.

 • Prakash - Cuddalore,இந்தியா

  நல்ல தைரியமான மனிதர், தமிழர் கண்டிப்பாக வரணும் . தமிழர்களின் உரிமையை மீட்டு எடுக்க.............

 • ganapati sb - coimbatore,இந்தியா

  கமல் உழைத்து சம்பாத்தித்து நேர்மையாக வருமானவரி கட்டுபவர்களில் முதன்மையானவர். மனம் ஒத்துபோகவில்லையென்றால் அதனோடு மல்லுக்கட்டாமல் விவாகரத்து வாங்கி மறுமணம் புரிந்து வெளிப்படையாக செயல்படுபவர். 5 வயது முதல் இப்போது வரை தான் இருக்கும் திரை துறையில் அனைத்து நுணக்கங்களையும் அர்ப்பணிப்போடு அறிந்து புதிய தொழில் நுட்பங்களை தமிழ் ரசிகர்களுக்கு கொண்டு வருபவர்.நாயகன் அவ்வைசண்முகி தசாவதாரம் என நடிப்பில் விஸ்வரூபம் கொண்டவர்.நம்மவர் மகாநதி சத்யா உன்னைப்போல் ஒருவன் வசூல்ராஜா குருதிப்புனல் அன்பேசிவம் போல சமூக சிந்தனை கொண்ட படங்களை கொடுத்தவர் தேவர் மகன் விருமாண்டி பாபநாசம் என கிராமத்து சூழலை கண்முன் கொண்டு வந்தவர். இடையே பஞ்சதந்திரம் பம்மல் சம்பந்தம் மைக்கேல் மதன காமராஜன் தெனாலி போன்ற நிகரில்லா நகைச்சுவை படங்களையும் தந்தவர் . தன தொழிலில் அர்ப்பணிப்போடு நேர்மையோடு பணிபுரியும் எவரும் அரசியலிலும் அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையாக பணிபுரிவார்கள் என நம்புவோம். உலகநாயகன் அரசியலுக்கு வருவாரா என தெரியவில்லை வந்தால் என் ஆதரவு அவருக்கு உண்டு ஆனால் அவர் நிறுத்தும் வேட்பாளர் அவரை போல நேர்மையாளராக இருத்தல் வேண்டும் அப்போது தான் எனது வோட்டு அவர் கட்சிக்கு கிடைக்கும். இல்லையேல் யார் நல்ல வேட்பாளரோ அவருக்கே கட்சி பேதமின்றி என வோட்டு செல்லும்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  நல்லா உருப்படும்.....தமிழ்நாடு...

 • raghavan mageswary - chennai,இந்தியா

  கமல் எடுத்துக்கொண்ட துறைக்காக லாப நஷ்ட கணக்கு பார்க்காமல் உழைக்க கூடியவர். எடுத்துக்கொண்ட துறையை உயர்த்துவதற்காக வெறித்தனமாக பாடுபடக்கூடியவர். தன்னை உயர்த்துவதற்க்காக மட்டும் உழைத்திருந்தால் வணிக ரீதியில் வெற்றியடையக்கூடிய படங்களை மட்டும் கொடுத்துக்கொண்டே போயிருக்கலாம். துறை சார்ந்த நுட்பங்களையும் அறிவையும் பெருக்கி கொண்டு அந்த துறைக்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு துறையில் நிற்பவர் . அவர் அரசியலுக்கு வரமாட்டார். வந்தாலும் அதற்கான அறிவை நிச்சயம் வளர்த்துக்கொள்வார். என்ன இடர் வந்தாலும் அதில் உழைப்பதை நிறுத்த மாட்டார். பொதுநலமும் தேசிய பற்றும் இவரிடம் உண்டு. சில அரசியல் நுணுக்கங்கள் கற்றுக்கொண்டால் இவராலும் நன்மையை செய்ய முடியும். இவரின் தனிப்பட்ட வாழ்க்கையை காரணம் காட்டி இவர் அரசியலுக்கு தகுதியில்லாதவர் என்று சொல்வது தவறு. இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாக வைத்துள்ளார். அதனால் நாம் குறை கூறுகிறோம்.

 • Stalin - Kovilpatti,இந்தியா

  நாம் தமிழருக்கு எங்களது பகுதி மக்கள் வாக்களிக்க கூடி பேசி முடிவு செய்துள்ளோம் ..... அவர்களின் ஆட்சி வரையறை எங்களுக்கு முழு திருப்தியை கொடுக்கிறது ... மண்டியிட்டது போதும் ... இனி மக்கள் திலகம், அண்ணா அவர்களை எங்கள் மனதில் மட்டும் இருக்கட்டும் ...அவர்களை காட்டி எங்களை அடிமை படுத்தியது போதும் ...

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  கௌதமி எதிர்கட்சி ஆகும் போது கமல் ஆளும் கட்சி ஆவதில் ஒன்றும் தவறில்லையே............

 • Kalyani S - Ranipet,இந்தியா

  "கச்சேரியில் பாட்டு சரியில்லை என, குறை கூறுவதால், மேடைக்கு வந்து, என்னை பாடச் சொல்லக்கூடாது"............... ஏனென்றால் நான் பாடினாலும் பாட்டு நன்றாக இருக்காது. எனவே இன்றைய அரசியல் சூழலில் நன்றாக பாடக்கூடிய ஒருவரை அடையாளம் காட்டுங்கள். உங்களுக்கான அவரது ஆதரவை வெளிப்படையாக தெரிவியுங்கள். அப்போது தான் மேலே கூறிய உங்கள் கூற்று உண்மையானதாக இருக்கும்.

 • Thamarai Moorthy.C.V. - Pattukkottai,இந்தியா

  ஐயா கமல் நீங்கள் நல்லவராக அதாவது மக்கள் பிரச்சனை களை தீர்ப்பதற்கு அரசியலில் குதிக்கீறீர்கள் எத்தனை அடி உயரத்திலிருந்து (வடிவேலு காமடி) முப்பது ஆண்டுகாலமாக உங்களால் பாலபிஷகத்தை தடுக்க முடியவில்லை? என்ன செய்வது உங்கள் உரிமை இது எங்கள் உரிமை (அரசியலில் குதித்து பிறகு மூத்திர சந்தில் தான் அடிவாங்கவேண்டும்)

 • Jayasankar. v - Mumbai,இந்தியா

  கமலு தமிழக முதல்வராக வர வேண்டும் என்று கனவு காணும் உரிமை அவருக்கு நிச்சயம் உண்டு. ஆனால் அவர் தமிழக முதல்வராக வர வேண்டும் என்றால் ராகுவும் சனியும் சேர்ந்தால் தான் நடக்கும் . அவரும் ஒரு நமக்கு நாமமே பேர்வழி என்பதை கூடிய விரைவில் நிரூபிப்பார்

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  மகிழ்ச்சி

 • நரி - Chennai,இந்தியா

  விடுங்கப்பா .... பல் இருக்கிறவன் பட்டாணி சாப்பிடுறான்

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  கமல் அரசியலுக்கு வரமாட்டார்னு சொல்லல.. வந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்.. வாருங்கள் கமல் அவர்களே.. தனி மனித ஒழுக்கம் பற்றி பேசும் வாசகர்களே திரு கமல் எதையும் ஒளித்து மறைத்து பிறருக்கு பயந்து வாழ்ந்ததில்லை.. பத்திரிகைகள் அவரது தனி வாழ்க்கையை தங்களது வியாபாரத்திற்கு பயன்படுத்தி கொண்டது.. ஒருவரை பற்றி பத்திரிகைகளில் அப்படி செய்திகள் வரவில்லை என்பதற்காக ஒருவர் உத்தம சீலர் ஆகிவிடமுடியாது.. அனைவரும் யோக்கியர்கள்தான் - மாட்டிக்கொள்ளாதவரை தற்போதுள்ள நிலைமையில் கமல் போன்றவர்கள் தமிழக அரசியலுக்கு வருவது நல்லது.. திமுக மேல் கோபம் எனில் அதிமுக.. அதிமுக மேல் கோபம் எனில் திமுக.. இது எத்தனை காலத்திற்கு? அவர்கள் கடந்த 50 வருடங்களாக தமிழகத்தை ஏமாற்றுகின்றனர்.. கேட்டால் திராவிடம் என்பர்.. வாருங்கள் திரு கமல் அவர்களே.. தைரியமாக வாருங்கள்.. நிச்சயம் தமிழக இளைஞர்கள் உங்களை ஆதரிப்பர்.. தைரியமாக வாருங்கள் ............

 • காளை -

  Kamal, you are not only a common man but a right man at right time to enter into Tamilnadu politics! Tamilnadu needs "Unnaipol Oruvan" at this time of hitorical crisis! Let it be true you are entering into politics! Arise, awake and stop not till the goal is reached as Swamy Vivekananda said! Good luck Kamal!

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  கமல் "அவாள்...." ஆச்சே.... கீரமணி, கருணாஸ், சீமான், குருமா, இன்னபிற இத்யாதிகளுக்கு ஓகேவா....?

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ரஜினியை விட இவர் எவ்வளவோ பெட்டர். வித்தியாசமாக சிந்திப்பவர்.

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  மக்கள் நலன் குறித்த கமலின் விருப்பம் அரசியல் பிரவேசம் என்றால் அவர் கம்யூனிஸ்ட் கடசியில் சேர்ந்து அதை தொடருவதே சரியான செய்கையாக இருக்கும்.

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  அரசியல் என்றாலே தொண்டர் பலம் அவசியம். ரசிங்கர்கள் தொண்டர்களாவது எம்.ஜி.ஆர் அக்காலந்தொட்டே நடைபெற்று வரும் ஒன்று ஆனால் இன்றைய தினம் அரசியல் என்பது ஆதாயம் தரும் ஒரு தொழில் . இதை நடத்தும் ஒரு கட்சி என்பது ஒரு தனியார் நிறுவனம். இதில் பங்கேற்க ஆர்வமுடன் வருகிறவர்கள் எல்லோருமே ஏதவாது ஒருவகையில் ஆதாயம் பார்க்கவே. சேவை மனப்பான்மையுடன் வருகிறவர்கள் குறைவு. ஆதாயமும் இல்லாமல் கமல் பேசும் புரியாத தமிழை காலம் பூராவும் அவர்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் என்று கமல் நினைததால் அது தவறு.

 • suresh - chennai,இந்தியா

  கலைஞானி போன்றவர்கள் அரசியலில் இறங்கினால் சசி, தினகரன் போன்ற அசுத்தங்கள் நீங்கி சாக்கடை சுத்தமாகும்.

 • raja - tamilnadu,இந்தியா

  இப்போது தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களைவிட லட்சம் மடங்கு தகுதியானவர் மக்களை கவரும் இடத்தில இருப்பவர் ,ஆனால் அரசியலுக்கு வரமாட்டார் ,வந்தால் நிச்சயம் வரவேற்கலாம்.

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  மூழ்கிப்போகும் தமிழ்நாட்டை காப்பாற்றுவார் என்பது திண்ணம். ஆனால் ஒருவித பலவீனத்தால் அமைச்சகத்தில் பில் கிளின்டன் போல் நடந்துவிடுவாரோ என்ற பீதி உண்டு.

 • mindum vasantham - madurai,இந்தியா

  திரும்பி கமல் கௌதமி ,குஷ்பூனு தமிழன் விழ போறானா

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  கமல் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. தனிக்கட்சி தொடங்கி வந்தால், அவர் முதல்வர் ஆவது சந்தர்ப்பங்கள் உள்ளன. இதுநாள் வரை, எந்த நடிகரும் அரசியலுக்கு வரக்கூடாது என்று தான் சொல்லி வந்தேன். ஆனால், இன்றைய சூழ்நிலையில், சகாயம் போன்ற பரிச்சயமான நல்லவர்கள் அரசியலுக்கு வர தயங்குகிறபோது, கமல் வருவது தமிழகத்திற்கு நிச்சயம் நல்லது பயக்கும். விஜயகாந்தை இப்படித்தான் ஆரம்பித்தில் மக்கள் வரவேற்றார்கள். ஆனால் அவர் கடைசியில் காமெடியன் ஆகிவிட்டதால், கட்சியை குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டதால், வேறொரு நல்ல பிரபலமான அரசியல்வாதியை மக்கள் தேடுகிறார்கள்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கூட அரசியலில் குதிக்கக்கூடிய அம்மணி யாரு ......அப்பதான் கமலுக்கு உற்ச்சாகம் கரை புரண்டு ஓடும்......அரசியலுக்கு தனி மனித ஒழுக்கம் தேவை இல்லை என்று ஆகிவிட்டது...

 • siva - bangalore,இந்தியா

  வாழ்த்துக்கள் ................ஒரு தமிழன் வரட்டும்...தமிழன் தமிழனை ஆளட்டும் ....பல மொழி தெரிந்தவர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு தேவை ....மத்தியிலும் மாநிலங்களிலும் நல்லுறவு பேண மொழி அறிவு மிக அவசியம் ......ஆனால் இப்போ உள்ள ஆளுக்கு ???/

 • Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Kamal entering politics is a good move to settle his debts.

 • Shankar G - kuwait,குவைத்

  எம்ஜிர்,ஜெயா லலிதா சிவாஜி,விஜய் காந்த் ஒரு கூத்தாடிகள் கீழ் தமிழ் நாடு போனது போறும் இன்னும் ஏன் கூத்தாடிகள் பின்னாடி போகணும் இந்த ஆளுக்கு நடிக்கவும் வராது, பேசவும் வராது, முத்தம் கொடுக்கத்தான் வரும் கடவுள் தான் தமிழ் நாடா காப்பாத்தணும்

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  களம்புகுந்தோர் களமறியார்.. களமறிந்தோர் களமிறங்கார்.. களமிறங்கார் கோழையலர்.. களத்திரந்தோர் வீரரலர்...... அவரு வர மாட்டார்னு யாரும் சொல்லல, வந்தா நல்லாருக்கும்னு தான் சொல்றாங்க..

 • vinoth - puducherry,இந்தியா

  வரவேற்கிறோம் கமல் சார்

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  அரசியலுக்கு அடிப்படை தெளிவாக பேசுவது.. கமலுக்கு அது கொஞ்சம் கஷ்டமான விஷயம்.. தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் மீண்டும் மீண்டும் சறுக்கியிருக்கிறார்... மேலும் அவருக்கே அரசியலுக்கு வர ஆர்வம் இருப்பதுபோல தெரியவில்லை.. அவரால் குற்றம், குறைகளை சுட்டி காட்ட மட்டும் தான் முடியும் அதற்கு ஒரு தீர்வு காண களத்தில் இறங்க மாட்டார்.. ஆதலால் நிச்சயம் வர மாட்டார்..

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  சூப்பரு.... ஏற்கனவே தமிழக அரசியல் சூழ்நிலை குழம்பி கெடக்கு, நீரும் வாரும் , இன்னும் கொஞ்சம் குழப்பும்.....

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  இந்நாட்டின் பிரஜை, யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம் அரசியலுக்கும் வரலாம். வரவேற்போம். தனிக்கட்சி தொடங்கி நாசமா போறதுன்னா அது அவங்கவங்க இஷ்டம்.

 • Thamizhan - Tamizhnadu,இந்தியா

  இவருக்கு அரசியலில் குதிக்க உரிமை இருக்கிறது ஆனால் எங்களுக்கும் இவருக்கு வோட்டு போடக்கூடாது என்பதற்கு உரிமை இருக்கிறதென்பதை தெரியப்படுத்த விரும்புகிறோம் . எவன் தனது வாழ்வை சரியாக வழி நடத்திச் செல்ல முடியவில்லையோ அவன் எப்படி மற்றவர்களை வழிநடத்த தகுதியுடையவனாவான். இவர் ஐந்து மனைவியை வைத்திருந்தாலும் தவறில்லை ஏனென்றால் எல்லோரையும் வாழவைக்கிறார் என்று பொருள் கொள்ளலாம் ஆனால் ஒரு பெண்ணைக்கூட வாழவிடவில்லை .இவர் அரசியலுக்கு வந்தால் இவரை நம்பி களத்தில் இறங்கும் மக்களை மடையர்கள் என்றே சொல்ல வேண்டும் ஏனென்றால் அவர்கள் தங்களையும் குட்டிச்சுவராக்கி மக்களையும் பல இன்னல்களுக்கு ஆளாக்கி விடுவார்கள் ., .

 • Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ

  இவரை போன்ற சாக்கடைகள் கண்டிப்பாக வரவேண்டும் ... 6 படத்தில் 4 படம் பப்படம் ஆகியதால் பிழைக்க வழி தேடுகிறார் ... ஒலக நாயகன்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  MGR (பிறகு NTR )படங்கள் தொடர்ந்து வசூலில் சுமார் என ஆனபோது அவருக்கு 1977 தேர்தல் கைகொடுத்தது ஆனால் இப்போதிருக்கும் ஒரே ஒரு எம் எல் ஏ வுக்குக்கூட இடைத் தேர்தலை சந்திக்க விருப்பமில்லை எப்படியாவது சட்டசபை தொடரவேண்டும் எனநினைக்கிறார்கள் இன்னும் நாலரை ஆண்டுகள் புதுக் கட்சிகள் தேர்தலின்றி தாக்குப்பிடிக்கவே முடியாது

 • Sri Nallam - Sydney,ஆஸ்திரேலியா

  Hi, It is pretty shame for Tamil nation in all over the world to see what happening in Tamilnadu politics which is the only government established for Tamils. Tamilnadu doesn't have a good governance and politicians are corrupted and political slave for their party leaders. Don't spent your time to continuously blame these dirty politicians and they are not our representatives. This should be changed. You good and educated people come forward to take part in politics. Somebody like Kamal, Sagayam (IAS) or Seeman need to come forward to govern the Tamilnadu. I knew it is a difficult task but use all social media to educate Tamil population and eradicate “free” from political scenario. Bring a good governance in Tamilnadu and be a proud Tamils

 • Ramesh - Sydney,ஆஸ்திரேலியா

  நேர்மையான தைரியமான கருத்து. எதிலும் நேரடியாக தெளிவான சிந்தனை. நேர்மையான வருவாய். இந்த நிலைப்பாடே உங்களை நல்ல தலைவன் என்று எங்களை சிந்திக்க வைக்கிறது. அரசியலுக்கு வாருங்கள். நல்ல தமிழ்நாடு பிறக்கும்.

 • K,kittu.MA. - Anna Nagar,இந்தியா

  செங்கோட்டையன் ஒன்றும் இன்னாரை போல தறிகெட்டு பேசும் ஆள் இல்லை.கட்சிக்காக உழைத்தவர்..படிப்படியாக முன்னுக்கு வந்தவர் ஒரேய தொகுதில ஏழு முறை வென்றவர்..கமல் ஆ ர்.கே. நகரில் நிற்கட்டும்..அப்போ பார்க்கலாம்.

 • மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா

  வருக.. வருக... வருக...

 • K,kittu.MA. - Anna Nagar,இந்தியா

  இவர் மகளை பொதுச்செயலர் ஆகலாம்..தீபா அவரது ஓட்டுனரை ஆகியது போல...அரசியல் இப்படி நாறுதே..கடவுள் தான் மக்களை காக்கணும்..

 • K,kittu.MA. - Anna Nagar,இந்தியா

  கண்டவன் பொண்டாட்டி யோடு குடும்பம் நடத்தி கிழவி ஆனவளை கழட்டி விட்டவன் என்ன சமுதாயத்துக்கு செய்வார்..முட்டாள் மக்கள்.

 • RAMAN R - BANGALORE - MADURAI,இந்தியா

  நல்ல ஒரு தலைவன் வரமாட்டானா என்று மக்கள் ஏங்குகிறார்கள். கமல் தனது கருத்துக்களை சொல்லிவந்தாலே நல்லது. ரஜினி எனோ வாயை திறக்கமாட்டேன் என்று உள்ளார்.

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  கமல் அரசியலுக்கு வந்தால் இளம்பெண்களுக்கு தான் ஆபத்து ...ஆரத்தி தட்டுடன் வரும் பெண்களுக்கு உதட்டு முத்தம் நிச்சயம்.........எனவே அவர் விலகி நிற்பதே நல்லது...........

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  நடிப்புத்தொழில் மந்தமாகி விட்டதால் இது போன்ற வேலையில் இறங்கி விட்டார் என்று நினைக்கிறேன்.. சக பெண் அமைச்சர்கள் கவனமாக இருக்கவேண்டிய நிலை உருவாகலாம்...

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  இப்பொது மக்கள் தம்மை காக்கும் மீட்பர் யார் என ஏங்கி உள்ளனர். திமுகவும் வேண்டாம் அண்ணா திமுகவும் வேண்டாம் காங்கிரஸும் வேண்டாம் பிஜேபியும் வேண்டாம் எனும் மன நிலையில் உள்ளவர் அனைவரும் உங்களை ஆதரிக்கலாம். ஆனால் நீங்கள் பதவிகளுக்கு தேர்வு செய்பவர்கள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். இங்கே தினமலரில் அரசியல் விமர்சனம் செய்பவர்களும் உங்கள் கூற்றுப்படி அரசியல்வாதிகளே. அரசியல் சாக்கடையாக இருந்தாலும் அதில் இறங்கினால் தான் சுத்தம் செய்ய இயலும். நேரடியாக அரசியலுக்கு வர வாழ்த்துக்கள்.

 • ஜெயாமாலன்.டெக்ஸாஸ். -

  அரசியல் ஒரு சாக்கடை கமல் வராதீர்ள்

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  காலில் அடிபட்டிருப்பதால் குதிக்க மாட்டார் நடிகர் கமல்......

 • K.Sugavanam - Salem,இந்தியா

  யாரோட காவடியை தூக்க போறாரு..படம் நாயுண்டு ரிலீஸ் எப்ப..

 • Ragavan - Kanchipuram,இந்தியா

  திரு கமல்ஹசன் அவர்கள் அரசியலுக்கு கண்டிப்பாக வரவேண்டிய நேரமிது.... ஏனென்றால் செங்கோட்டையன் போன்ற சுயநலவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும். பாரதி எப்படி சுதந்திர வேட்கையை மக்களிடத்தில் தன புரட்சி கவிதைகளின் வழியாக கொண்டுசென்றாரோ அதுபோல் தங்கள் ஒரு அரசியல் புரட்சி செய்ய வேண்டும் . சிங்கப்பூருக்கு லீ குவான் போல தமிழகத்தை தலை நிமிரச்செய்யவேண்டு .

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  கமல் முதலில் உங்கள் மனைவிகளுடன் ஒழுங்காக வாழ கற்றுக்கொள் பின்புதான் அரசியல் கமல் ,எந்த மனைவியுடனும் ஒழுங்காக நீங்கள் குடும்பம்நடத்தவில்லை ,பின் அரசியலிலும் ஒழுக்கம்வராது உமக்கு , தெரியாமல் மாட்டிக்கொள்ளாதே அரசியலில்

 • Rajan - chennai,இந்தியா

  இவருக்கே வாழ்க்கையில் ஒழுக்கம் கிடையாது... இவர் எப்படி.... பொது வாழ்க்கையில்... கஷ்டம்...

 • Ayathuray Rajasingam - Scarborough ,கனடா

  கட்சியின் பெயரைக் குறிப்பிடவும். திராவிட என்னும் மாந்த்ரீக சொல்லை, ஒன்றில் ஜனநாயக கட்சி அல்லது குடியரசு கட்சி அல்லது லிபெரல் கட்சி என்று பெயர் வைத்தால் தமிழ் நாடு உருப்படும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement