Advertisement

பொன்மேனி உருகுதே...! அதுல்யா 'கிளு...கிளு'...

இவள் ஒரு அழகிய தேவதை... அதனால், இவளது பூ முகம் காண ஆயுள் தான் போதுமோ? அழகாய் பூக்கும் பூக்களும் இவளிடம் தான் யோசனை கேட்குமோ? நெற்றியில் ஆடும் கற்றை முடி... காளையர் நெஞ்சை கனவில் சாய்க்குதே. மின்னல் வெட்டும் பார்வை இனிப்பை காட்டுதே... காதல் ரசம் சொட்டும் கன்னி அதுல்யா, 'காதல் கண் கட்டுதே' படத்தில் அறிமுகமாகி, ரசிகர்களை ரங்கராட்டினத்தில் சுற்றி கிறங்கடிக்கிறார்.

தினமலர் வாசகர்களுக்காக மனம் திறக்கிறார்...
'திவ்யா'வைப் பற்றி?
'திவ்யா'வா... அய்யோ, கண்டு புடிச்சிட்டீங்களா எப்டிப்பா இப்டி. என்னோட உண்மையான பெயர் அதுதான். சினிமாவுக்காக 'அதுல்யா' ன்னு மாத்தினேன். சொந்த ஊர் கோவை. படிப்பு எம்.டெக்.,
சினிமாவில் எப்படி?
என்னோட பிரெண்ட்ஸ் குறும்படங்கள் இயக்கினாங்க. அப்புறம் பெரிய படமா இயக்கும் போது என்னை ஹீரோயினா நடிக்க வச்சிட்டாங்க. முதல்ல யோசிச்சேன். பிரெண்ட்ஸ் தானேன்னு, அப்புறமா ஓ.கே., சொல்லிட்டேன்.
நடிகைகள் எல்லாம் பெயரை ஏன் மாத்துறீங்க?
நம்ம பெயரை சொன்னதும் மக்களுக்கு ஞாபகம் வரவேணாமா? மத்தவங்ககிட்ட இருந்து வித்தியாசம் காட்ட வேணாமா? மக்கள் மனசுல நிக்க வேணாமா? அதுனால தான் மாத்திக்கிறோம். வீட்ல வைக்கிற பெயரையே வச்சா, ரொம்ப சாதாரணமா இருக்கும்? அது தான் திவ்யாவை, அதுல்யாவா மாத்தினேன்.
என்னென்ன படங்கள் நடிக்கிறீங்க?
'காதல் கண் கட்டுதே' படம் ரீலீஸ் ஆயிடுச்சு. புது படங்களுக்கு கதை கேட்டுட்டு இருக்கேன்.
படம் பார்த்தவங்க ரெஸ்பான்ஸ்?
'சிம்பிள்... பட், பெர்பெக்ட் லவ் ஸ்டோரி. போர் அடிக்காம இருக்கும். படத்துக்கு எல்லார்கிட்டயும் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு.
ரிப்போர்ட்டரா நடிச்ச அனுபவம் உண்டா?
உண்மையாவே ரிப்போர்ட்டர்சை பாராட்டணும். சந்தோஷம், துக்கம், துாக்கம்னு பார்க்காம, உலக விஷயங்களை மக்களுக்கு சொல்றாங்க. ரிப்போர்ட்டரா நடிச்சது பெருமையா இருந்துச்சு.
உங்களுக்கு ரசிகர் மன்றம் வேற இருக்குதாமே?
'அதுல்யா நற்பணி மன்றம்' நம்ம ஊரு பொண்ணு... படத்துல நடிக்குதாம்னு ஆரம்பிச்சுருக்காங்க.
காதல் அனுபவம் நிஜத்துல எதுவும்..?
நிஜத்துல காதல் அனுபவம் இல்லீங்க.
ஆண்களுக்கு பிடிக்கும் பெண்கள் பற்றி...?
சாதாரண குடும்ப பெண்களை பெரும்பாலான ஆண்களுக்கு பிடிக்குது. மாடல் பெண்களையும் பிடிக்கும்...
சினிமாவுக்கு கவர்ச்சி தேவையா?
இப்ப கவர்ச்சியை பெரிசா எதிர்பார்க்குறது இல்லை. கவர்ச்சி காட்டாம கீர்த்தி சுரேஷ் நடிக்கலையா. கவர்ச்சி இல்லாமலும் ரசிசகர்கள் மனசுல இடம் பிடிக்கலாம்.
நடிக்க விரும்பும் கேரக்டர்?
'மொழி' படத்தில் நடிகை ஜோதிகா நடிச்ச கேரக்டர் ரொம்ப பிடிக்கும். 'பொன்மேனி உருகுதே...' பாடலுக்கு சில்க் ஸ்மிதாவின் டான்ஸ் சூப்பர்.
பெண்களுக்கு எது அவசியம்?
பெண்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் ரொம்பவே அவசியம். கூடவே திறமையும் இருந்தா பெண்கள் எதுல வேணும்னாலும் ஜெயிச்சு, சாதிக்கலாம்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Jayaraman Sekar - Bangalore,இந்தியா

    இணையத்தில் 'செக்ஸ்' வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது' அதேபோல நடிகைகள் பத்தி எழுதாமலும் இருக்க முடியாது.... அஞ்சலி தேவி சாவித்ரி சரோஜா தேவி பற்றி எழுத முடியுமா? யார் படிப்பா என்ற சந்தேகம் இதை மட்டும் யார் படிப்பா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement