Advertisement

சசிகலாவை விரும்பாத 40 எம்.எல்.ஏ.,க்களால் அ.தி.மு.க., உடையும்!:தனி அணியாக செயல்பட்டு தி.மு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு :நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது ஆட்சியை கவிழ்க்க திட்டம் :வாய்ப்பை சாதகமாக்க மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

முதல்வராக சசிகலாவை விரும்பாத, 40 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் தனி அணியாக செயல்பட்டு, திமு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளனர். 'இந்த வாய்ப்பை சாதகமாக்கி, நிலையான ஆட்சியை அமைக்க, கவர்னரிடம் அனுமதி கேட்க தயாரா வோம்' என, தி.மு.க., மாவட்ட செயலர்களுக்கு, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவை அடுத்து, பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். எளிமையான முதல்வராக, மக்கள் விரும்பும் வகையில், செயல்பட்டு வந்தார். அவரே, முதல்வராக தொடர்வார் என்ற எதிர்பார்ப்பு, கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் இருந்தது.

பன்னீருக்கு நற்பெயர் கிடைப்பதை விரும்பாத சசிகலா, முதல்வராக துடித்தார். முதல்வரை மிரட்டி, ராஜினாமா கடிதம் பெற்றதோடு, எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை குழு தலைவராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.இதை தொடர்ந்து, முதல்வர் பதவியை, பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். சொந்த காரணத் துக்கான பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

அன்புமணி கோரிக்கை




'சசிகலா மீதான, சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, ஒரு வாரத்தில் வெளியாக உள்ளது. அது வரை, அவருக்கு முதல்வர் பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது' என, பா.ம.க., முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி,
கவர் னருக்கு கோரிக்கை வைத்துள்ளார். முன்னாள் அமைச்சர் நேருவின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க, திருச்சி சென்ற, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், 'விரைவில், தி.மு.க., ஆட்சி அமைக்கும்' என, கூறியுள்ளார்.

பொதுமக்களும், அரசியல் கட்சி தலைவர் களும், சசிகலா, முதல்வராக பதவி ஏற்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர உள்ளதையும், இதை காரணம் காட்டி, 'இப்போதைக்கு முதல் வர் பதவிஏற்க வேண்டாம்' என, சசிகலாவுக்கு, கவர்னர் அறிவுறுத்த வாய்ப்புள்ளது.அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், தி.மு.க., ஆட்சி அமைக்க தயார் என்றும், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை, கவர்னரிடம் வழங்க, தி.மு.க., தயாராகி உள்ளது.

தி.மு.க., திட்டம்




தி.மு.க., தலைமை திட்டப்படி, மாவட்ட வாரி யாக, எம்.எல்.ஏ.,க் களை இழுக்கும் பொறுப்பு, முக்கிய நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு, சாத்துார் ராமச்சந்திரன்; வட மாவட்டங்களுக்கு, எ.வ. வேலு; மேற்கு மாவட்டங்களுக்கு, பொங்கலுார் பழனிசாமி, முத்துசாமி, என்.கே.கே.பெரியசாமி, என்.கே.கே.பி.ராஜா;சென்னை மாவட்டங் களுக்கு, மா.சுப்பிரமணியன்; டெல்டா மாவட் டங்களுக்கு, நேரு, டி.ஆர்.பாலுபோன்றோருக்கு, இந்த பொறுப்பு தரப்பட்டுள்ளது.

கட்சியின் சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வானதும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களிடம், தி.மு.க., துாதர்கள் நடத்திய பேச்சில், 38 பேர், வெளியில் இருந்து தி.மு.க.,வுக்கு ஆதரவு தரமுன் வந்துள்ளனர்.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை வளைத்தால்
மட்டும் போதாது, மத்திய அரசின் முழு ஆதரவும் தேவை என்பதை, தி.மு.க., நன்கு உணர்ந்துள்ளது. இதையடுத்து, மும்பையைச் சேர்ந்த, பா.ஜ., தலைவர் ஒருவரிடம், மத்திய அரசிடம், 'கிரீன் சிக்னல்' பெற்றுத் தர வேண்டும் என, தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், ரகசிய பேச்சு நடத்தி முடித்துள்ளார்.

ஆளுங்கட்சியை உடைக்கும் வேலை வெற்றி கரமாக முடிந்தால், மத்திய அரசு ஆதரவுடன், தி.மு.க., ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. தனித்து ஆட்சி அமைக்க, 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை.

அதில், தற்போது, தி.மு.க.,விடம், 89 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். கூட்டணி கட்சி யான, காங்கிரஸ் கட்சியில், எட்டு எம்.எல்.ஏ.,க் கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியி டம், ஒரு எம்.எல்.ஏ.,வும், உள்ளனர்.

எனவே, ஆட்சி அமைக்க இன்னும், 20 பேர் மட் டும் தேவை. அதை, எளிதாக பெற்று விடலாம் என்று, தி.மு.க., கணக்கு போட்டு, களத்தில் குதித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'மர்மம் அம்பலமாகும்'




சென்னை விமான நிலையத்தில், ஸ்டாலின் அளித்த பேட்டி:

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை; அவரது மரணம், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வர் அலுவலக செயலர் வெங்கட ரமணன் ஆகியோர் பதவி விலகியது, சட்டசபை கட்சி தலைவராக சசிகலா தேர் வானது என, அனைத்துமே மர்மமாகவே உள்ளது. இந்த மர்மங்கள் எல்லாம், விரைவில் வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

- நமது நிருபர் குழு -

Advertisement
 

வாசகர் கருத்து (247)

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    தீர்ப்பை வாசிப்பதற்கு மாதக் கணக்கில் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்தையும் முடித்து விட்டு சிந்து பாத் கதையாக இழு இழு என்று இழுத்துக் கொண்டே போவது ஏன்?. இது ஒரு விதத்தில் அநீதி என்று கூறத்தக்கதாகுமா? ஒரு முடிவை அறிவிக்க காலதாமதம் படுத்துவதால் தொடர் வினையாக எத்தனையோ நடக்கின்றன. இது தவறு என்று தான் என்னத் தோன்றும். விதி என்பதா?

  • Chandramani.N - Virudunagar

    பன்னீர் அன்ணன் தான் முதல்வராக வர வேண்டும்

  • m.viswanathan - chennai,இந்தியா

    இது போன்ற தலைமை தான் தமிழனுக்கு தேவை , நமக்கு வாய்த்த அடிமைகள் , திறம்பட நம்மை வாழ வைத்து கொண்டே இருப்பார்கள் என்ற அசத்திய நம்பிக்கையை அல்லவா விதைத்து விட்டு போய் விட்டனர்

  • SSTHUGLAK - DELTA,இந்தியா

    ellaam saridhaan aanaal indha panneer surrender aagittare

  • Raja segaran - bhopal, madhya pradesh.,இந்தியா

    This ACT is expected rather DECIDED on the verge of JAYALALITHA's illness. However, proof of STRENGTH has to be DEDICATED in the Assembly. Sorry, it is must for SASIKALA to book a Special Room in NIMHANS, BANGALORE in advance. Time will tell the stories.

  • S Rama(samy)murthy - karaikudi,இந்தியா

    மீண்டும் குள்ளநரி சூழ்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டது .தமிழர்களே ஜாக்கிரதை .சுபராம காரைக்குடி

  • T.Palani - Panruti,இந்தியா

    ஒண்ணுமே புரியவில்லை ...

  • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

    சந்துல சிந்து பாட நினைக்கும் ஸ்டாலின் குள்ள நரி புத்தி.

  • Saarai Paambu - Al Hudaydah,ஏமன்

    சசிகலாவின் இந்த முயற்சியை பாராட்டாமல் இருக்க இயலவில்லை ... அருமையான பிளான் , அருமையான எக்சிகியூசன் .. நிறைய உழைத்திருப்பார்கள் .. ஒன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியை கலைக்கலாம் ... இல்லையெனில் மக்கள் சசிகலா எங்கு நின்றாலும் எலெக்ஷன் ல தோற்கடிக்கலாம் ..பட் சசிகலா இவ்ளோ பண்ணிட்டு RK நகர் ல நிக்காம வேற எங்கையாவது நின்னா அவமானம் ... ஆனா தேனீ பக்கம் நிக்குறது தான் புத்திசாலி தனமான முடிவு , அங்கு நின்றால் திமுக விற்கு அழகிரி யின் தயவு தேவை ..

  • Ram - Bangalore,இந்தியா

    Y‌aravathu sollunga.... naan solrathu க‌ர‌க்டா இல்லையா???? MGR சின்ன‌ வ‌ய‌சுல‌ சாப்பாட்டுக்கே க‌ஷ்ட்ட‌ப்ப‌ட்டவ‌ர், க‌ருணாநிதி ர‌யிலுக்கு ticket எடுக்க‌கூட‌ ப‌ண‌மில்லாம‌ல் இருந்த‌வ‌ர், ஜெய‌லலிதா குடும்ப‌ க‌ஷ்ட‌த்தை போக்க‌ ந‌டிக்க‌ வ‌ந்த‌வ‌ர். இவ‌ர்க‌ளின் ஆர‌ம்ப‌ கால‌ நில‌மையிலேயே இருந்திருந்தால் CM ஆகிருக்க‌ முடியுமா? ம‌க்க‌ள் ம‌ன‌தில் இட‌ம் பிடித்திருக்க‌ முடியுமா? MGR ம‌றைந்த‌ போது ஜெய‌ல‌லிதாவை அடுத்த‌ CM ஆக‌ எத்த‌னை பேர் ஏற்றுக்கொண்டார்க‌ள்? MGR இட‌த்தில் இவ‌ரா என்று வ‌சைபாடிய‌வர்க‌ளே அதிக‌ம். ஆனால் அதையெல்லாம் உடைத்தெறிந்து ஜெய‌ல‌லிதா சிற‌ப்பாக‌ செய‌ல்ப‌ட‌வில்லையா? அதைபோல் ச‌சிக‌லா செய‌ல்ப‌டுவார் க‌ன்டிப்பாக‌ என்று நான் சொல்ல‌வில்லை, ஆனால் அவர் ஏன் செய‌ல்ப‌ட‌ முடியாது என்ப‌தே என் கேள்வி. அவ‌ருக்கான‌ வாய்ப்பு இது, ச‌ரியாக‌ செய‌ல்பட்டால் அரசிய‌லில் நீடிக்க‌லாம், இல்லையென்றால் சும்மா ப‌த‌வியில் ஒட்டிக்கொண்டிருக்க‌ முடியாது. ஜெய‌ல‌லிதாவுடன் 30 ஆண்டு கால‌ம் இருந்த‌வர் என்பதால் ச‌சிக‌லா ஜெய‌ல‌லிதா ஆகிவிட‌ முடியாது... உண்மை ஆனால் ஜெய‌ல‌லிதா ம‌ன‌ ஓட்டத்தை நிச்சய‌ம் அறிந்திருப்பார் என்றே நான் நினைக்கிறேன் மற்றும் சிறப்பாக செய‌ல்ப‌டுவார் என்று ந‌ம்புகிறேன். இல்லையென்றால் க‌ட்சியிலிருந்து ம‌ட்டும‌ல்ல‌ அர‌சியிலிலேயே இருக்க‌ முடியாது. ஆனால் அவ‌ருக்கான‌ வாய்ப்பை நாம் மறுப்ப‌து நியாமாகாது என்பதே என் க‌ருத்து. இப்படி சொல்வ‌தால் நான் ச‌சிகலாவின் ஆதர‌வாள‌ன் என்று நினைத்துவிட‌ வேண்டாம். இது என்னுடைய‌ பொதுவான‌ க‌ருத்து. க‌டைசியாக‌ ஒன்று.... ச‌சிக‌லா CM ப‌த‌விக்கு த‌குதியான‌வ‌ர் என்று நான் சொல்லவில்லை, அதைபோல் அவ‌ர் த‌குதிய‌ற்‌றவ‌ர் என்று சொல்ல‌ என்னிட‌ம் எந்த‌ கார‌ண‌மும் இல்லை.

  • Thamizh - Chennai,இந்தியா

    'சகிக்கல'வை தடுக்க திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா என்ற செய்தி இணையத்தில் உலா வருகிறதே...உண்மை ஆகுமா???

  • கோபி -

    இவர் பதவி ஆசை கொண்ட மனிதர்

  • Ramesh Kumar - coimbatore,இந்தியா

    தைரியமுள்ள ஒரே ஒரு எம் எல் ஏ, பதவியை இழக்க தயாராகி வெளியே வந்தால் போதும்..... அதிருப்தியாளர்கள் ஒவ்வொருவராக வெளியே வர தொடங்கி விடுவார்கள் ....

  • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

    பாவம் இவர், இப்போது எல்லாம் கூடி வந்தாலும், படுத்துக்கொண்டே நகரும் பெட்டில் இருந்து கூட ஆட்சி செய்வேன் என இவர் வீட்டிலேயே இவருக்கு ஒரு வில்லன் உள்ளார்.

  • varun -

    நேற்று நம்ப 200 பேரு கருத்து தெரிவிச்சதுல ஒரே ஒரு கருத்து மட்டும் தான் சதிகலாவுக்கு ஆதரவாக இருக்கு அது அந்த மண்டு JAY JAY மட்டும் தான். இனிமேல் தேசத் துரோகிகள் மட்டுமே அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள்.

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    மன்னார்குடி மாஃபியா ஆபத்தானவர்கள் தான். அவர்களை விட மிகவும் ஆபத்தானவர்கள் கோபாலபுர மாஃபியாக்கள். மன்னார்குடி மாஃபியா மொத்த குடும்பமும் கொள்ளையடிக்கும். கோபாலபுர மாஃபியா குடும்பம் குடும்பமாக மொத்தமாக தமிழ்நாட்டை மட்டுமல்ல பதவியிலிருந்தால் இந்தியாவையே கொள்ளையடிக்கும். 2006 - 2011 ஆட்சியை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். அப்பாவி மக்களின் நிலஅபகரிப்புகள், கட்டப்பஞ்சாயத்துகள், கிரானைட்டு கொள்ளை, கனிமவள கொள்ளை, மணல் கொள்ளை எதையும் மறக்கவில்லை. ராசாவ வச்சி கொள்ளையடித்த ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் கோடி ரூபாய் உலக மகா மெகா கொள்ளையை மறக்கமுடியுமா. பிக்பாக்கெட்டுக்கு பயந்து கொள்ளைக்கூட்டத்திடம் லாக்கர் சாவியை கொடுக்கமுடியுமா. கோபாலபுர மாஃபியாவுக்கு மன்னார்குடி மாஃபியா லட்சம் மடங்கு மேல். ஒரு வாட்ஸ் அப், ஒரு எஸ்.எம்.எஸ் ல் மாட்டுக்காக வெகுண்டெழுந்த மாணவர்களே, இளைஞர்களே, மக்களே, நாட்டுக்காக வெகுண்டு எழவேண்டாமா? குடும்ப அரசியலை வாரிசு அரசியலை தமிழ்நாட்டை விட்டு வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கவேண்டிய காலம் வந்துவிட்டது. இனி அரசியல்வாதி ஒருத்தன் இருந்தால் அவன் வாரிசுக்கு அரசியல் எண்ணமே வரக்கூடாது.

  • Raj - bangalore,இந்தியா

    கனிமொழி தலைமையில் 50 திமுக எம்எல்லேக்கள் தனியாக பிரிந்து அதிமுகவை ஆதரிக்க போவதாக கழுகு சொல்கிறது

  • Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா

    எப்படியும் அடுத்த முறை ஸ்டாலின்தான் ஆட்சியை பிடிக்க போகிறார் அதற்கு இப்பமே பிடித்தால் என்ன. ஸ்டாலின் மீது எந்த ஊழல் புகாரும் இருந்த மாதிரி தெரியவில்லை இவர்களை விட ஸ்டாலின் பெட்டரா தெரியுறாரு. மக்களுக்காக கொஞ்சம் செயல்படுற ஒரு ஆட்சி அமையனும். மொதல்ல இந்த அடிமைகள் கூட்டம் ஒழியனும்

  • Mahendran TC - Lusaka,ஜாம்பியா

    மன்னார்குடி மாபியா கும்பலும் , கோபாலபுரம் கொள்ளைக்கார கூட்டமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இதற்க்கு பன்னீரே முதல்வராக தொடரலாம்.

  • nimmi - Dindigul,இந்தியா

    சில தினங்களுக்குமுன்பு வாசகர் கருத்தில் தெரிவித்திருந்தேன்"Hidden agenda" ஏதோ இருக்கிறது என்று. தங்கள் செய்தி அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

  • K.Ravi - kalpakkam,இந்தியா

    தி.மு.க ஆட்சியா...தலைவலி போய் திருகுவலி வந்த கதை தான்...

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    இன்றைய நிலையில் எனக்கு ஸ்டாலின் தலைமை தான் சரியான ஏற்பாடகத் தெரிகிறது.'' SOMETHING IS BETTER தன NOTHING, NOTHING IS BETTER THAN NONSENSE என்பார்கள். LET US ACCEPT SOMETHING IS BETTER THAN NON SENSE. எதையும் வருமுன் தடுக்க வேண்டும். தீய பழக்கங்கள் ஒருமுறை ஆரம்பித்து விட்டால் அது சகஜமாகி அது தவறில்லை என்றாகி விடும். புகை பிடிப்பது ஒன்றும் தவறில்லை என்றாகி விட்டது, மது பழக்கம் ஒரு விதத்தில் சரிதான் என்று கூற ஆரம்பித்து விட்டார்கள். இளம் பிராயத்தில் இவைகள் திருட்டை விட கேவலமாக பார்க்கப் பட்டதுண்டு. ஆகையால் தீயவர்கள் வருவதை தடிக்க வேண்டும். பூளன் தேவிகள் திருந்தினாலும் அவர்கள் ஆட்சிக்கு வராகி கூடாது என்றிருக்கையில், திருந்தாத பூளன் தேவி எந்த தேசத்திற்கும் வேண்டாம்.

  • VOICE - CHENNAI,இந்தியா

    பலர் பேசிக்கொள்வது என்னவென்றால், கடந்த தேர்தலில் கூட மத்திய அரசு உதவி இல்லாவிட்டால் அதிமுக ஆட்சி வந்திருக்கமுடியாது இதற்கு திரைமறைவில் நடந்தேறிய காட்சிகள் ஏராளம் என்றும், இப்பொழுது கூட சுப்ரமணிய ஸ்வாமி பேசுவதை பார்த்தால் மத்திய அரசு மறைமுக உதவி சசிகலாவுக்கு உள்ளது போல தான் தெரிகிறது ஆனால் அவர்கள் அஞ்சுவது சசிகலாவை பதவி ஏற்க அனுமதித்தால் தமிழக மக்கள் கோபம் அனைத்தும் மத்திய அரசு மீது திரும்பும் என்ற ஒன்றை தவிர வேறொன்றும் இல்லை. ஜல்லிக்கட்டு முடிவு நாளில் சென்னை போலீஸ் கமிசனெர் கூறிய வார்த்தை உளவுத்துத்துறை கொடுத்த தகவல் தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆனால் உளவுத்துறை பொறுப்பில் உள்ளவர் சசி உறவினர் ஒருவர் தான் பணியமர்த்த பட்டுள்ளார் என்று பேசப்படுகிறது . அப்படிஎன்றல் ஆட்சி கலைக்கப்படும் என்ற பயம் மூலம் மாணவர்களை அடித்து விரட்ட சொன்னது மத்திய அரசா? அதற்காக என்றோ செத்துப்போன பின்லேடன் படத்தை வைத்திருந்தார் என்பது அடித்து விரட்டுவதற்கு சொல்லப்பட்ட காரணமா ? அதை இவர்கள் செயல்படுத்தினரா என்றும் மக்கள் மத்தியில் பெருத்த கேள்வி உள்ளது அதை நிரூபிக்கும் வகையில் தான் சுப்ரமணிய ஸ்வாமி பொறுக்கி என்ற பேச்சு இருந்தது. தமிழ்நாட்டில் ஆயுதம் தாங்கி போராடும் எந்த அமைப்புக்கும் தமிழகமக்கள் ஆதரவு தந்தது இல்லை, அது அவருக்கு தெரியும் இருந்தும் இது போன்ற நடவடிக்கை அவரின் மேல் உள்ள மதிப்பு மரியாதையை இனி இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. .இவர் தமிழகத்தை பற்றி எவ்வளவு கீழ் பேசினாலும் இவருக்கு மத்திய நிதி அமைச்சர் பதவி கிடைக்காது மற்றும் நாணலும் தன் நாவால் கெடும் என்பது இவருக்கு சரியாக பொருந்தும்.இவரை இன்னும் மத்திய அரசு தன் பக்கத்தில் வைத்து கொண்டு இருப்பது தனக்கு தானே சவக்குழி வெட்டுவதற்கு சமன். தற்போது இருக்கும் மாபியா கும்பல் ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்றல் தமிழனாகிய இவர்களே ஜல்லிக்கட்டில் சென்னை மதுரை கோவை போன்ற இடங்களில் தமிழ் மக்களை அடித்து விரட்டும் அளவுக்கு செல்வார்கள் எனில் தமிழகத்துக்கு நன்மை எப்படி கிடைக்கும்? தமிழக மக்கள் அனைவரும் உறுப்பினராக கொண்ட புதிய கட்சி உருவாகினால் மட்டுமே மக்களுக்கு நன்மை இல்லை என்றல் எந்த அரசியல்வாதி வந்தாலும் தமிழகதற்கு காப்பாற்றமாட்டார்கள் அவர்கள் தமிழனாக இருந்தாலும் என்று பலதரப்பு மக்கள் பேசுவது கேட்கமுடிகிறது

  • S.L.Narasimman - Madurai,இந்தியா

    Gopalapura kumbalum Mannarkudi kumbalum ore kollaikara kumbalgal.

  • Madhavan Parthasarathy - Chennai,இந்தியா

    அனைத்து ஜாதீய தலைவர்களும் ரொம்ப பிஸி இவர்களின் புது கணக்கில் புது கட்சிகள் உதயமாகும்

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    சசி ஆட்சியை நினைக்கும் போது, இது பரவாயில்லை என்றே தோணுதே

  • gsik - Chennai,ஐஸ்லாந்து

    சசி முதல்வராக வர வேண்டும். அப்பொழுது தான் இவரின் லட்சணம் மக்களுக்கு தெரியும். MGR ஆல் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சி சசியால் முடிவுக்கு வரும். தமிழன் எப்பொழுதும் தலை குனிந்து தான் இருக்கு வேண்டும் என்பது தலை எழுத்து. இதை தான் நமது அமைச்சர்களும் symbolicகாக தலை குனிந்து சசியை வரவேற்றார்கள். மரியாதையில் அல்ல.

  • Hariganesan Sm - uthamapalayam,இந்தியா

    எப்படியோ தமிழ் நாட்டிற்கு வந்த சோதனையா இது..

  • GOPALSABAPATHY - chennai,இந்தியா

    மிக விரைவில் இது நடக்க வேண்டும், நாங்கள் ஓட்டு போட்டது அம்மா மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்று தான். அனால் இப்போ அந்த பதவிக்கு கண்டவர்கள் வர துடிக்கிறது.இதை இப்போதே களை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற முடியாது.

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    அது உடைய கூடிய கட்சிதான், யார் தலைமை ஏற்பது என்ற நிலையில், தீபா தயாராகி விட்டார்கள். தி மு க உடைக்க முற்படாது இதுவரை ஓ பி எஸ் அவர்களுக்கு ஆதரவாக தான் கருத்து தெரிவித்தார்கள். அவரை மிரட்டி பணிய வைத்துள்ளார்கள் என்றே நினைக்கின்றேன்.

  • வாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    திரு.விஜயகாந்த் தான் அடுத்த முதல்வர். திருமதி பிரேமலதா பிரத்தியேக பேட்டி. நடிகர் சங்க பிரதிநிதிகள் அமைச்சராக பதவியேற்பு. இப்படி ஒரு செய்தி வந்தாலும் ஒன்னும் ஆச்சர்யமில்லை.

  • K.Sugavanam - Salem,இந்தியா

    அப்புடியே நடந்தாலும் தலீவர் கம்பீரமா வந்துடுவார் முதல்வர் நாக்காலியில் ஒக்கார..மீண்டும் "துணை" முதல்வர் பதவிதான் கிட்டும் "செயல்" தலைக்கு..பாவம்ப்பா..இன்னா கஷ்டப்பட்டு இன்னா பலன் வரப்போகுது..யாரு டப்புக்கு ஏற்பாடு செய்யப்போறாங்க ? தூண்டில்ல சொருகி வைக்க?

  • Paranthaman - kadappa,இந்தியா

    எம்ஜிஆருக்கு பிறகு 87-88 அதிமுக ஜானகி அணி. 89-91 திமுக 91-96 அதிமுக 96-2001 திமுக 2001-2006 அதிமுக 2006-2011 திமுக 2011.2016 அதிமுக இப்படி மாறி மாறி ஆட்சி செய்தனர். அதன் படி திமுக ஆட்சிக்கு வரவேண்டிய முறையாக 2016-2021 திமுகவுக்கு தான் கிடைக்கும் அவர்கள் திடமாக நம்பி எதிர்ப்பார்த்தனர். ஜெயலலிதாவின் கடுமையான உழைப்பால் 2016-2021 அதிமுக தக்க வைத்துக் கொண்டது. அதிமுக மீது கடுங்கோபத்தில் இருந்த அக்கட்சி தலைமை அநிர்ச்சியில் உறைந்து இப்போது அரசு சம்பளத்திற்கு கூட தொகுதியை சுற்றி பார்க்க முடியாமல் செயலற்று விட்டது. இதை உணர்ந்து திடுக்கிட்டு திமுக அனுதாபி சசி கம்பெனி ஜெயா மரணதின் அடிப்படையில் சசியை உசுப்பி விரைவாக அதிமுக பொது செயலாளராக்கியதுடன் ஏற்கனவே உள்ள திமுக மீதான பரிவு பாசத்தினால் தமிழக மக்களுக்கு நல்லாட்சி தந்து வந்த தமிழக தலைமகன் மாண்புமிகு பன்னீர் அவர்களை மிரட்டி வெளியேற்றி விட்டு சசியை முதல்வராக்கி இன்னும் இரண்டொரு நாளில் அதிமுகவை அழித்து குப்பை தொட்டியில் போட்டு விட்டு அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் திரட்டி சசிகும்பல் தலைவர் நடராஐன் என்பவர் திமுக பக்கம் சாய்து விடுவார். திமுக தலைமைக்கு நன்றி விசுவாசமாக வாக்களித்தபடி திமுக ஆட்சி அமைக்க வழிவிட்டுள்ளார். ஆக எப்படியோ கலைஞரின் எண்ணம் ஈடேறி விட்டது. அவர் நினைத்து ஏமாந்த திட்டம் மீண்டும் அவர் கைக்கு கிடைக்கப் போகிறது. சுய நினைவும் திரும்பி விடும். அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார்.அவருக்கு நமது வாழ்த்துகள். அவர் எண்ணம் ஈடேறிவிட்டது. ஆனால் அடுத்த அதிமுக ஆட்சி வேறொரு வடிவில் ஜெயாவின் பாரம்பரிய வழி திருமதி ஜெய தீபாவின் கரங்களுக்குள் நிச்சயம் போகும் வாய்ப்பு நெருங்கியுள்ளது.

  • K.Sugavanam - Salem,இந்தியா

    நேத்து சொன்ன "குட்டி" கதைகளைவிட இந்த நெடுங்கதை நால்லாவே இருக்கு "செயல்" ஜி..

  • Balaji - Khaithan,குவைத்

    நேற்றுதான் சசி முதல்வராக வர மக்கள் வாக்களிக்கவில்லை என்று சொன்னார்..... ஆனால் இப்போது மக்கள் இவர்களை ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்காததை இவர் மறந்துவிட்டு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க மறைமுக நடவடிக்கையில் ஈடுபடுவது என்ன நியாயம் என்று தெரியவில்லை..... இவருக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு என்றால் தக்காளி சட்னி என்று நினைத்திருக்கொண்டார் போல

  • SUPPU - Chennai,இந்தியா

    எல்லாம் அரசியல் சதுரங்கம்......

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

    அப்படி வெளியே வந்தால் பன்னீருக்கு ஆதரவு தரவேண்டும், இல்லையே ஒரே வேலை மாபா பாண்டியராஜன் வெளியே வந்தால், அவருக்கு ஆதரவளிக்கலாம், ஆட்சியை நடத்த. ஆனால் ஒருபோதும் சசி ஆட்சியில் அமர வாய்ப்பளிக்க கூடாது.

  • Meenu - Chennai,இந்தியா

    என்னமோ இவுக கட்சி ரொம்ப தூய்மையான கட்சி மாதிரியும் இத விட்ட அந்த நாற்பது பேருக்கும் வழி இல்லாதது மாதிரியும். சசியை வெறுப்பது மாதிரிதான் தங்களையும் மக்கள் வெறுக்கிறார்கள் என்பது புரிவில்லை போலும்.

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

    திமுக ஆட்சி அமையக்கூடாது, பன்னீர் தைரியத்தோடு வெளியே வந்தால்(வந்தால் பார்க்கலாம்) நிச்சயம் அவரை முதல்வராக திமுக ஆதரவு தரவேண்டும்... எப்படியாகினும் சசி அங்கே ஆட்சியில் அமர்வதை தடுத்தல் வேண்டும், துரை முருகன் சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும்..

  • kumar -

    பன்னீர் வீட்டு கொல்ல புர கதவு தட்ட திமுக திட்டம் .

  • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    ஸ்டாலுனுக்கு கோட்டை.... மேட்டர் ஓவர் . அரசியல் அதிகமா ஆசைப்படுற எந்த பெண்ணும் உருப்பத்ததா சரித்திரம் இல்லை.

  • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

    போற போக்கிலே நீங்களே ADMK யை உடைச்சு CM ஆகிக்குங்க, கட்சி உடைக்கிறதென்ன உங்களுக்கு என்ன புதுசா? எனக்கு DMK புடிக்காது ஆனால் இப்போ உள்ள நிலைமையில் DMK ஆளும் கட்சியாக வருவதில் மகிழ்ச்சியே.

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    We don't want again such uncertain government of so many political parties combined Koottatchi and we were all already suffered heavily under this family DMK rule in Tamil nadu in the past.Let us go for a fresh state assemply election again and and elect a good political party under an able,strong and experienced person for the benefits of our people of our state.May God show such a sui person to our people in coming days and we all surely and definitely press the button in Electronic Voting Machine for tthat person very soon.

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

    தடயமின்றி அழித்திடுவோம் அடிமைகளின் கூட்டம் கண்டேன் அகமகிழ்ந்து பேச கேட்டேன் ஆயாவை தலைவியாக்கிவிட்டு ஆனந்த கூத்தாட கண்டேன் வேட்டிக்கட்டிய ஆண்கள் எல்லாம் வெட்கத்தை தொலைக்க கண்டேன் மூத்தோரென்று சொல்லப்பட்டோர் முட்டாள்களாய் நிற்க கண்டேன் களவு செய்யும் வாய்ப்பிற்காக கைகூப்பி நிற்க கண்டேன் பெண்ணின் காலில் விழுவதனை பெருமையாக நினைக்க கண்டேன் பணமொன்றே நோக்கமென்று பல்லிளித்து சிரிக்க கண்டேன் பச்சோந்தியும் தோற்றுப்போகும் பகல்வேஷ நடிப்பு கண்டேன் காசு பணம் சுருட்டிடவே காலில் விழும் கூட்டத்திற்கு ஈனம் மானம் எதுவுமில்லை என்பதையும் அறிந்து கொண்டேன் எதிர்ப்பு சொல்ல ஒருவருக்கும் ஏன் தோன்றவில்லை என்றால் கைமாறிய பண கட்டிற்காக கட்டுகோப்பை காட்டுகின்றார் உங்களின் திருட்டு எண்ணம் ஒருபோதும் நிறைவேறிடாது அடிமட்ட தொண்டனெல்லாம் அனலெனவே கொதிக்க கண்டேன் இனியும் உங்கள் மாய்மாலம் இங்கு பலிக்காது சொல்வேன் தடயமின்றி அழித்தொழிக்க தயாராகவே மக்கள் உள்ளார் தங்கர்பச்சன் ஒளிப்பதிவாளர், திரைப்பட இயக்குனர்

  • Rajan - chennai,இந்தியா

    நம்முடைய அடுக்குமாடி குடியிருப்பில் விழா இல்லை வேற ஏதாவது ஒரு ஒன்று கூடும் நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் மியூசிக்கல் சாரு (musical chair)....அது போல் ஆகிவிட்டது நம் தமிழ்நாட்டின் முதல்வர் நாற்காலி... வேறு என்ன பிரச்சனை என்றால் வெறும் முதல்வர் மட்டும் மாறவில்லை... ஒட்டு மொத்த அமைச்சரவையும் மாற்றப்படுகிறது (சட்டமும் அதுதான் என்றாலும்)...சசிகலா வருவதற்கு ஸ்டாலின் பரவாயில்லை... அவரும் தான் 89 சீட் வாங்கியிருக்காருல .... ஆனால் நிலையான ஆட்சி தரமுடியுமா? இந்த 40 ஜீவன்களை நம்பி அவரு களமிறங்கலாமா இல்லை சட்டசபையை கலைத்துவிட்டு புது தேர்தலை சந்திக்கலாம் என்று யோசிக்க வேணும் ஸ்டாலின் அவர்களே...என்னக்கு என்னமோ புது தேர்தல் தான் சரி யென்று படுகிறது...

  • நிலா - மதுரை,இந்தியா

    குடியரக ஆட்சி வரப்போகிறது எல்லா கட்சிக்கும் ஆப்பு தயார்

  • rmr - chennai,இந்தியா

    அதிமுகவும் திமுகவும் ஒன்னு அதை அறியாதவன் வாயில மண்ணு. ஊழல் கழகம் வேண்டாம், தமிழ்நாட்டை அழித்து விடுவார். இந்த திராவிட ஊழல் பெருச்சாளிகள். சினிமா துறை இல்லாதவர்கள் ஆட்சி செய்ய வேண்டும். நல்ல படித்தவர்கள் ஆட்சி செய்ய வேண்டும். தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆட்சி செய்ய வேண்டும் .

  • JVKumar - Chennai,இந்தியா

    Now ADMK will break and join with PMK after Supreme Court Verdict against Sasikala. Then DMK will break and join PMK after Supreme Court verdict in 2G Scam. PMK will form government Under Dr.Anbumani for better management of Tamilnadu affairs with his down to earth approach and plan for development of each district in Tamilnadu by active support our PM Modi for active development of Tamilnadu as Tamilnadu BJP has no effective leader like Dr.Anbumani.

  • Ramesh Kumar - coimbatore,இந்தியா

    ஒன்று அதிமுக உடைந்து பன்னீர் தலைமையில் திமுக ஆதரவுடன் புதிய ஆட்சி அமைய வேண்டும்... அல்லது திமுக ஆட்சி அமைக்க வேண்டும்....ஆனால் இரண்டுக்குமே ஆயுள் கம்மிதான்.....தமிழகம் விரைவில் பொது தேர்தலை சந்திக்கும்......

  • Appan - London,யுனைடெட் கிங்டம்

    அதிமுகவில் இது நாள் வரை ஒரு எம்.எல் ஏ கூட சசிகலா பற்றி பேசவில்லை... அவ்வளவு பக்தியா பயமா தெரியவில்லை.. ஆனால் உண்மை நிலை என்ன என்றால் எல்லோரும் கைகட்டி வாய் பொத்தி காலில் விழுகிறார்கள்.. அதிமுகவிற்கு என்று பெரிய கொள்கை என்று ஏதும் இல்லை... அப்போ இவர்களின் எண்ணம். ஏன்னா? கூட்டாக கொள்ளை அடிக்கத்தான் இவர்கள் அரசியல் செய்கிறார்கள். அதுவும் ஜெயாவின் மறைவிற்கு பின் கட்சி இருக்குமா என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் உள்ளது. ஏனென்றால் கொள்கை என்று ஒன்னு இல்லாமல் அரசியல் இருக்க முடியாது அதனால் இருக்கும் வரை அரசு சொத்தை கொள்ளை அடிக்க இவர்கள் ஒற்றுமையாக உள்ளார்கள். இதற்கு சசிகலா ஒரு வடிகாலாக இருக்கலாம். ஓபிஎஸ் இப்படி பட்டவர் எப்படி ஒரு நாட்டை ஆள முடியும். தனக்கென்று ஒரு கொள்கை இல்லை. இவர் சசிகலாவை விட மோசமானவர். அது சரி இந்த சந்தடி சாக்கில் திமுக அதிமுகவை பிளந்து ஆட்சியை பிடிக்குமா? இது நடக்காதுபோல் தெரிகிறது. ஏனென்றால் அதிமுகவின் எம்.எல் ஏ க்கள் எல்லோரும் இருக்கிற 4 ஆண்டில் எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு சுருட்ட பார்க்கிறார்கள். இதை எந்த கட்சியில் இருந்தால் செய்யலாம்? கட்டாயம் திமுவில் இல்லை. ஏனென்றால் திமுகவில் முக குடும்பம் தான் இப்படி கொள்ளை அடிக்கலாம். மற்றவர்கள் கைகட்டி நிற்க வேண்டும். பின் எதற்கு இவர்கள் திமுகவிற்கு வருவார்கள் அல்லது ஆதரிப்பார்கள்? இப்போ கிராமத்திலும் எல்லோரும் படிக்கிறார்கள். அதனால் தமிழகத்தில் படித்தவர்கள் அதிகம் உள்ளார்கள். இவர்களின் மத்தியில் தற்குறி சசிகலா சி.எம் கேட்கவே என்னவோ போல் உள்ளது. அப்படி இருந்தும் சசிகலா சி.எம் ஆகலாம். இது தான் தமிழினத்தின் பெருமை. அடிமை இனம் ஆகி பெருமை பட ஏதும் இல்லை..

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    நல்ல வேள, " உடையும்" என்ற சிகப்பு நிறத்தில் இருந்த தலைப்பைப் பார்த்தவுடன் எனக்கு பழைய நினைவுகள் வந்து விட்டன, "யாருடீ நீ மோகினி." பாடல் நினைவிற்கு வருகிறது. இனி நாம் இந்த இரு குடும்பத்தாரின் நடனங்களை பார்க்கலாம், ஜனநாயகத்தில் நமக்கு அளிக்கப்பட பங்கு இது போன்ற நாடகங்கள், மற்றும் படங்களை பார்க்க மட்டுமே அனுமதி, வந்தே மாதரம்

  • Pandiyan - Chennai,இந்தியா

    மன்னார்குடி கும்பலை விட மோசமான கும்பல் கோபாலபுரம் வகையறாக்கள் ... உஷாரு உடன்பிறப்புகள் ..பன்னீர் எவ்வளவோ மேல்

  • Alexander -

    eduku mixer sapadava, Stalin is already different from Thatha..He is straight forward. He will do well

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

    சசிகலா முதல்வர் என்பதை பொது மக்களும் ஏற்க தயாராக இல்லை...அவர்கள் கட்சிக்காரர்களும் தயாராக இல்லை.... அந்த வகையில் கட்சி உடைந்து திமுக ஆட்சி வருவதை நானும் வரவேற்பேன்... அடிமைகள் ஆட்சி நமக்கு வேண்டாம்.... இத்தோடு அண்ணா திமுக வை ஒழிப்போம்....

  • ARUN - coimbatore,இந்தியா

    மக்கள் ஜெயாவிற்கும்,ஸ்டாலினுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். ஜெயாவின் மறைவிற்கு பிறகு ,ஜெயா சார்பாக பன்னீரும், தி.மு.க சார்பாக ஸ்டாலினும் உள்ளனர். இவர்களை தவிர்த்து ,தேர்தலை சந்திக்காத,கட்சியில் இடை நீக்கம் செய்யப்பட்ட சசியை எப்படி ஏற்று கொள்ள முடியும்.

  • Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ

    பகல் கனவு ... ஆதரவு தருகிறோம் என்று பிட்டு போட்டு பார்த்த திரைமுருகனுக்கும் சேர்த்து சொல்கிறேன் .. ரரக்கள் ஒருவரும் வரமாட்டார்கள் ...

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    வழக்கம் போல இதுவும் ஊகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. திமுக பதவிக்காக அலையும் கட்சியாக இருந்திருந்தால் இதை முன்பே செய்திருக்கலாம். தமிழகத்தில் நல்லாட்சி நிலைக்க வேண்டும். புதிய தேர்தலை கொண்டு வந்து மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கக்கூடாது என்பதற்காகவே பன்னீருக்கு முழு ஒத்துழைப்பும் தந்தது. அவரால் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலையில் எவ்வித நிர்வாக அனுபவமும் இல்லாத ஒருவரிடம் தமிழகத்தின் நலன் பாழ் பட்டு விடக்கூடாது என்பதற்காக திமுக ஆட்சியை பிடிக்க நினைப்பதில் தவறில்லை. பேரத்தின் அடிப்படையில் இல்லாது மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆதரவளிக்கும் மாற்று கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைப்பது அவசியம்.

  • Nagarajan S - Chennai,இந்தியா

    அப்படி நாற்பது அதிமுக எம் எல் ஏ க்கள் ஆதரவளித்தால் திமுகவால் நிச்சயம் ஆட்சி அமைக்க முடியும் ஆனால் போயஸ் கார்டனை ஆக்ரமித்துள்ளவர்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்களே? எப்படியும் சின்னம்மாவை முதல்வராக அமர்த்திவிட்டு தான் மறுகாரியம் பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்போர்கள் அந்த நாற்பது அதிருப்தி எம் எல் ஏ க்களை சூட்கேஸ் கொடுத்து விலைக்கு வாங்கி விடுவார்களே ? அதற்கு என்ன செய்ய போகிறீர்கள்? அவர்கள் கொடுக்கும் சூட்கேஸை விட பெரிதாக கொடுக்கப்போகிறீர்களா என்ன ?

  • Vaduvooraan - Chennai ,இந்தியா

    சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக போனால் அடுத்த முதல்வர் தம்பிதுரைதான். பன்னீர் செல்வம் அவ்ளோதான்

  • Natarajan Attianna - Coimbatore,இந்தியா

    ராசாத்தி யின் விசிட் டு சசி, சசி விசிட் டு ராசாத்தி, இப்போ புரிகிறதா எல்லாம் திட்டமிட்ட செயல். நாடகம் அன்றே ஆர்மபித்துவிட்டது, சசிக்கு தெரியும் தான் பதவி ஏற்றால் கச்சி உடையும் என்று, ஆனால் இவ்வளவு வேகம் எதற்கு, தமிழனா துரோகி படுக்கையில், அது போய் சேர்வதட்க்கு முதலிலேயே மகன் மகுடம் சூட்ட வேண்டும், அதட்க்காக அதிமுகவை உடைக்க வேண்டும், அதுவும் சசியை வைத்தே பாழே பிளான். சசிக்கு பணம் மட்டும் தான். ஆக மொத்தம் சுடாலின் நாடகம் நன்றாகவே அரங்கேற்றப்படுகிறது,

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    கடந்த ஐம்பது ஆண்டுங்களாக மக்கள்தொகையில் சிறுபான்மை சாதியினர் முதல்வராக இருந்ததால்தான் அமைதி எந்த அதிக எண்ணிக்கை சாதியினர் முதல்வராக முயன்றாலும் மற்ற மேஜர் சாதியினர் விரும்புவதில்லை கவிழ்ப்பதிலேயே குறியாக உள்னனர் ஒரு வன்னியர் தென்மாவட்டங்களில் வெல்லமுடியாது மேற்குப் பகுதியிலோ தனித்தொகுதி தவிர வேறெங்கும் தலித்துக்கள் பிரச்சாரம் செய்வதுகூட கடினம் இதுதான் பெரியாரின் சிஷ்யர்கள் சாதனை இந்த அழகில் பெரிய ஆதிக்க சாதியை சேர்ந்த சசி முதல்வராக முயற்சித்தது அறிவீனம் வன்கொடுமை வழக்குக்களில் அதிகம் சம்பந்தப்பட்டிருக்கும் சாதிகளை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிப்பது நன்மையில் முடியாது அமைதியின்மை நமக்கு வேண்டாம்

  • Vaduvooraan - Chennai ,இந்தியா

    இன்றைய சூழலில் இது மாதிரி நடப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் வெளியே வர தயாராக இருப்பதாக சொல்லும் அதிமுகவின் அந்த நாற்பது உறுப்பினர்கள் என்ன காரணத்தினால் சசிகலாவை ஏகமனதாக தேர்ந்தெடுக்க துணை போனார்கள் என்பது புதிராக இருக்கிறது.

  • Saravanan,Salem -

    ஸ்டாலின் முதல்வராக வந்து தொழில்த்துரையில் நாட்டின் வருமானத்தைப் பெருக்கி மருபடியும் தமிழகத்தை முதல் மாநிலமாகக் கொண்டு வரணும்.

  • Vaduvooraan - Chennai ,இந்தியா

    ஒரு சிக்கலான காலகட்டம் தமிழக அரசியலுக்கு எப்படியும் ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்ற நிலையை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டிருக்கிறது- அதாவது மன்னார்குடிக்கு திருக்குவளையே பரவாயில்லை என்கிற விரக்தியினால் தேர்ந்தெடுக்க நல்ல மாற்று அரசியல் தலைமை இல்லாது போனது ஒட்டு மொத்த தமிழகத்தின் துரதிருஷ்டம். என்னவோ தெரியவில்லை 1967 தொடங்கி மாற்றி மாற்றி எதிர்மறையாக மட்டுமே வாக்களித்து வந்திருக்கிறோம். அதாவது காங்கிரஸ் மீது இருந்த கோபத்தினால் திமுகவுக்கு..பிறகு திமுக மீதிருந்த கோபத்தினால் அதிமுகவுக்கு என்று ..யாரை நாம் ஆட்சியில் அமர்த்தினாலும் அவர்கள் நமக்கு தொடர்ந்து நம்பிக்கை துரோகம்தான் செய்திருக்கிறார்கள். ஒரே ஒரு முறை 77 இல் இவர் நமக்கு நல்லது செய்வார் என்று நம்பி எம்ஜியாரை தேர்ந்தெடுத்தோம். அவர் ஒரு மூன்று வருடம் ஒழுங்காக ஆட்சி செய்துவிட்டு அது சரிப்பட்டு வராது என்று 80 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்து திமுகவுக்கும் தனக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்று காட்டிவிட்டார். ஆக இன்று வரை அதற்கு இது பரவாயில்லை என்று தாற்காலிக நிவாரணத்துக்காக மாற்றி மாற்றி இரு வேறு கொள்ளிக்கட்டைகளால் தலையை சொரிந்து கொண்டு வந்திருக்கிறோம் என்று நினைக்கும்போது மனது கனக்கிறது. தேசிய கட்சிகள் இன்னும் சவலை பிள்ளைகளாக இருப்பதுடன் மாநில கட்சிகளை விடவும் படு மோசமான தலைமையை கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் வெயில் மழை பொருட்படுத்தாது ஜெமினி மேம்பாலத்தை ஒட்டி அமெரிக்க தூதரக வாசலில் விசாவுக்காக நிற்பவர்களை ஏளனமாக பார்த்து இங்கு என்ன இல்லை என்று இவர்கள் அங்கு ஓடுகிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன். இப்போது நடப்பதை பார்த்தால் அவர்கள் புத்திசாலிகள் என்று படுகிறது.

  • singaivendan - Singapore,சிங்கப்பூர்

    கேக்குறதுக்கு என்னமோ ரொம்ப நல்லாத்தான் இருக்கு...ஆனா இந்த கேப்பையில் அந்த நெய் வடியனுமே...??? வடியுதா... வடியலையான்னு பொறுத்திருந்து பாப்போம்???

  • Sankar Venugopal - Singapore,சிங்கப்பூர்

    It is right time play Mr.Stalin, if u don't play now. Your oppurnity for four years is closed. Vetrri pera vazthukkal.

  • நிலா - மதுரை,இந்தியா

    மறுபடியும் பன்னீர் முதல்வர் ஆவார் ஸ்டாலின் கனவு பலிக்காது

  • Ganesan - Bangalore,இந்தியா

    நிச்சயம் சதிகலா முதலமைச்சர் ஆனால் முதல்வர் பதவிக்கே களங்கம். தமிழனுக்கு களங்கம். தமிழ் இனத்துக்கே களங்கம். அதைத் துடைக்க யார் முன்வந்தாலும் வரவேற்கலாம். ஒரு கவுன்சிலர் கூட இல்லாமல் நேரடியாக முதல்வர் ஆக சர்வாதிகார முறையில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் சசி கலா எந்த காலத்திலும் முதல்வர் ஆக கூடாது. அதிமுக எம்.எல்.ஏக்கள் இனியாவது புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டும். நாட்டை கொள்ளையடிக்கும் கும்பல் சசி கோஷ்டியை தமிழ்நாட்டை விட்டே ஓட ஓட விரட்ட வேண்டும். ஸ்டாலின் முதல்வரானால் நிச்சயம் நாட்டுக்கு நல்லது.

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

    அதிமுக எம்.எல்.ஏக்கள் உடைத்து கொண்டு வந்து பன்னீர் தலைமையில் ஆட்சி அமைக்கிறோம் திமுக முழுசாக ஆதரிக்க வேண்டும் என்று சுடாலினை சந்தித்து பேசுங்கள்...அதுதான் சரியாக இருக்கும்.......திமுக ஆட்சி அமைப்பது சரியாக இருக்காது...அதிமுக முழு மெஜாரிட்டியாக வென்றது ஜெயா தலைமையில்....திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் நினைக்கவில்லை...........எனவே திமுக கவுரமாக பன்னீரை அழைத்து பேசி அதிருப்தி எம்.எல்.ஏக்களை முழுசாக வெளியில் வர வச்சு பண்ணீரையே முதல்வராக முன் மொழிந்து புதிய புரட்சியை உருவாக்க வேண்டும்......இது திமுக மீது நன்மதிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்...திமுக மீதான மக்களின் கோபமும் குறையும்............

  • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

    கண்டிப்பாக இதை செய்வதில் தவறவில்லை சொந்த கட்சியினரே வெறுக்கும் ஒரு முதல்வர் சசி மட்டும் தான்

  • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

    ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் ..

  • balasubramanian - coimbatore,இந்தியா

    தமிழக மக்களைப்பற்றி கவலைப்படும் y

  • Pannadai Pandian - wuxi,சீனா

    ஸ்தாலின் தலைமையில் கலைஞரின் 2006 -2011 காட்டாச்சி வர போகிறது. எல்லாரும் ரெடி ஆவுங்க.....ஆள் கடத்தல், சொத்து புடுங்குதல், தொழிலை எழுதி வாங்குவது, விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் பூமியாக்குவது, ரேஷன் பொருட்கள் கடத்தல், கர்நாடகா, ஆந்திரா, கேரளா அரசுகளுக்கு கண்ணும் கண்ணும் வைத்தல் போல் விட்டுக்கொடுப்பது.......இன்னும் பல. விவரம் உள்ளவங்க பொழைச்சுக்கோங்க.......அதாவது சொத்தை ஏழை எளிய மக்களே காப்பாத்திக்கோங்க, திருடர்கள் அடிச்சி புடுங்கிக்கோங்க...அரசு உங்களுடையது.

  • Natarajan Ramanathan - chennai,இந்தியா

    நான் இதுவரை திமுகவுக்கு வாக்கு அளித்ததே இல்லை. ஆனால் சதிகாரி சசிகலா எல்லாம் முதல்வர் என்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அதற்கு சுடாலினே பரவாயில்லை.

  • sankar - Nellai,இந்தியா

    கனவு காணும் வாழ்க்கை யாவும் - கலைந்து போகும் மேகங்கள்

  • balakrishnan - coimbatore,இந்தியா

    வாய்ப்பே இல்லை, முதுகெலும்பே இல்லாதவர்கள் தான், அ.தி.மு.க வில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள், எந்த ஒரு பெரிய தலைவரும் இதுவரை எந்த ஒரு எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை, சசி பேரை சொல்லி ஒட்டு வாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட பிறகு தான் மாற்றம் ஏற்பட வாய்ப்பு

  • P.Srinivasan - kancheepuram,இந்தியா

    அப்படி செய்தால் திமுக மற்றும் ஸ்டாலின் எதிர்காலம் பூஜ்ஜியம்.இதை யும் மக்கள் பார்த்துக் கொண்டு பின் தங்களுக்கு பூஜ்ஜியம் இடங்களை வழங்குவார்கள்.

  • dpsivaa - gangavalli,இந்தியா

    Sathikalaa vuku vatha velai....Amma athma summa vidathu

  • vijayadhiraaj - chennai,இந்தியா

    தி.மு.க நினைத்திருந்தால் இந்த அரசாங்கத்தை எப்போதோ கவிழ்த்திருக்கலாம். ஜெயா மருத்துவமனையில் இருந்தபோதே செய்திருக்கலாம் ஆனால் அவரை மருத்துவமனையில் வைத்துக்கொண்டு ஆட்சியை கவிழித்திருந்தால் மக்கள் மத்தியில் கேட்ட பெயர் வந்திருக்கும் என்ற ஒரே காரணத்தினால்தான் விட்டு வைத்தனர். 30 வருடம் ஜெயாவின் உதவியாளர்க மட்டுமே இருந்த குட்டியம்மாவால் இவ்வளவு செய்யும்போது, MLA , மேயர், துணை முதல்வர், அமைச்சர் என்று 35 வருடங்களுக்கு மேல் கலைஞரிடம் அரிச்சுவடியை பாலபாடமாக கற்ற ஸ்டாலினிடம் கண்டிப்பாக அவரை விட அதிகமாகவே இருக்கும். பன்னீர் செல்வத்துக்காகவும், மத்திய அரசுக்காகவும்தான் அவர்கள் அமைதி காத்தார்கள். கண்டிப்பாக இனி அப்படி இருக்க வாய்ப்பில்லை. இந்த அரசாங்கத்தை கவிழ்த்து தி.மு.க வருவதில் பெரிய தவறில்லை. அவர்கள் ஒன்றும் கடந்த தேர்தலில் மோசமாக தோற்கவில்லை. பல இடங்களில் சில நூறு ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றனர். ஆளும் கட்சியின் பணம் விலையாடியது. அதனால் இதை பெரிய தோல்வியாக பார்க்க முடியாது. மத்திய அரசாங்கம் நல்லது செய்ய நினைத்தால் இந்த அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு மறு தேர்தல் நடத்த வேண்டாம். அம்மா என்ற ஒரு வார்த்தைக்குத்தான் வோட்டு போட்டனர். அடிமைகளுக்கு இல்லை. அவரே அவர்களை அப்படிதான் நடத்தினார். பெயருக்குத்தான் அமைச்சர்கள். ஒரு ஏறி கால்வாயை திறப்பதற்கு கூட முதலமைச்சர்தான் அனுமதி வழங்கினார்.தன் கட்சி MLA க்களை தானே ஒரு டம்மி பீஸாக நடத்திய அவர் இப்போது இல்லாத நேரத்தில் அவர்களை கலைப்பது நல்லது

  • P.Srinivasan - kancheepuram,இந்தியா

    ஸ்டாலின் பகல் கனவு கண்டு விழித்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏ க்கள் யாரும் அது போல் இல்லை.அனைவரும் ஐந்து ஆண்டு பதவியை அதிமுக வில் முடிப்பர்.பகல் கனவு பலிக்காது ஸ்டாலின்.

  • K,kittu.MA. - Anna Nagar,இந்தியா

    தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க மத்திய அரசு தயவு கேட்டு காவடி தூக்குவது இப்போ புதுசு...மக்கள் இதை வேடிக்கை பார்க்கிறார்கள்..திமுக வைக்கட்டும் சசி ஆகட்டும் தன்மானத்துடன் நடந்து கொள்வது நல்லது..தீபாவை கட்சி பொது செயலர் ஆக்கி சசி அரசாங்கத்தை நடத்துவதை கூட அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள்...பிஜேபி தயவு தேவை இல்லை..இதில் பிஜேபி கை சுட்டுக்கொள்ளும்..பிஜேபி வேஷம் கலைய போகுது..

  • sugumaran - chennai,இந்தியா

    சாணக்கிய சூது அரசியல் என்றால் கலைஞர் இந்த நேரத்தில் 40 MLA களை லகுவாக வளைத்திருப்பார்.ஸ்டாலினால் இதை செய்து முடித்தால் புலிக்கு பிறந்தது புலிதான் என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

  • Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா

    ஜெயலலிதாவின் இறப்பு முதல் ...சசிகலா முதல்வராக தேர்வு வரை...எல்லாமே நாடகமாக நடத்தப்பட்டு இப்போது ..மேடை ஏறவுள்ளது போலத்தான் தோன்றுகிறது...(ஜெயலலிதா இறப்புஅறிக்கை இப்போது வெளியிடும் வரை)...கூட்டு சதிபோலத்தான் காட்சி அமைந்துள்ளது ...இன்னும் சில நாட்களில் நிலுவையில் இருக்கும் ...அனைவரும் எதிர்பார்க்கும் வழக்கின் முடிவு தெரியும் என்பது தெரியாமலா...முதல்வராக பதவி ஏற்கவுள்ளார் ...அ.தி.மு.க. தோற்றம் நாள்....மறைவுநாள்...விரைவில் குறிப்பிடப்படும்

  • Naren - Trichy,இந்தியா

    அய்யா புண்ணியவான் ஸ் டாலின் , இந்தம்மா புராணத்தையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு ஏரி குளங்கள் தூர் வார போர்க்கால அடிப்படையில் போராடு . இந்த வருடம் எல்லாம் சாவப்போறோம் .

  • Raham - Melbourne,ஆஸ்திரேலியா

    ஸ்டாலின் இதை அவசியம் செய்ய வேண்டும், தி மு க விற்காக இல்லாவிடினும் தமிழக மக்களுக்காக செய்ய வேண்டும். அப்போதுதான் 6 மாதமாக அவஸ்தை பட்ட மக்கள் நிம்மதியாக இருக்க முடியும்.

  • K,kittu.MA. - Anna Nagar,இந்தியா

    இது சசியை விட மோசம் துரோகம்..மக்கள் ஜெயா வீட்டு வேலைக்காரிக்கு வாக்களிக்க வில்லை என்பது எப்ப்டி உண்மையோ அத்தகு போல திமுக வுக்கும் வாக்களிக்கவில்லை என்பது உண்மை.எனவேய மறுபடியும் தேர்தல் வரவேண்டும் அது தான் நியாயம்.

  • ஙே.கரன் - Jurong-West,சிங்கப்பூர்

    சான்ஸே இல்லை.... நடக்கிற காரியமா இதெல்லாம்? எங்க புரட்சி தலைவி காலத்துல பதவிக்காகவும், செல்வாக்குக்காகவும் கூனி, குறுகி, ஒரு புழுவை போல் வளைந்து நெளிந்து, சொம்படித்து சேவகம் செய்தே பழக்கப்பட்ட அந்த 40 பேரால.. நிமிர்ந்து நின்னு முழு மனிதனா ஒரு நொடி கூட வாழ முடியாதுன்றேன்.... பார்க்கலாமா? எங்க சசி மேடத்துகிட்ட தான் அவங்க கடைசி வரைக்கும் இருப்பாங்க, அதாவது அதிமுக என்கிற கட்சி அழியிற வரைக்கும் சசி மேடத்துக்கூட தான் இருப்பாங்க, அது ரெண்டு மாசமானாலும் சரி, மூணு மாசமானாலும் சரி.

  • G.Prabakaran - Chennai,இந்தியா

    தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப் பட்டு ஆட்சி அமைப்பதே நல்லது. இவ்வாறு MLA க்களை இழுத்து ஆட்சி அமைவது நல்லதல்ல.ஸ்டாலின் சிந்திக்க வேண்டும்.

  • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

    ஸ்டாலின் அவர்களின் கனவோ அல்லது கணக்கோ, இரண்டுமே ஆராயத்தக்கவை. கனவு விடிந்தால் போச்சு.கனவு முடிந்ததை பார்த்தால் ஆட்சியை கை பற்றுவதாக தெரிகிறது. இது முட்டைகளை விற்கச்சென்றவன் சுமைதாங்கியில் படுத்துறங்கி,முட்டைகளை விற்று கோடீஸ்வரனாகி, பணத்தை எண்ணும்போது மனைவிவர,அவளும் பணத்தை எண்ண நினைக்க, கனவில் கோபப்பட்டு அவளை உதைப்பதாக நினைத்து முட்டைக்கூடையை உடைத்து எண்ணங்களில் இடிவிழுந்தவன் போன்றது ஸ்டாலின் அவர்களின் கனவு. கணக்கு தப்பு, ஏன் எனில் மந்திரிகளை மட்டுமில்லாது, பல அரசு சார்த்த கழகங்களிலும் பல பதவிகளில் அமர முடியும் அதிமுக வில் தொடர்ந்து இருந்தால். அரசியல் வானில் சூழும் மேகங்கள் சசிகலாவை தவிர்த்து பன்னீர்செல்வம் அவர்களே தொடரக்கூடிய நிலையில் அவர் காட்டிலேதான் பெய்யும் மழை.அம்மாவின் ஆசியால் பெற்றதை, விட்டுவிலகி செல்வதைவிட, தங்கள் அரசே அரியணையில் இருப்பதைத்தானே அதிமுக வினர் விரும்பக்கூடும்.கண்ணோட்டத்தினால் மட்டுமே உலக நடைமுறையை உணரமுடியும் என்பதை நான்சொல்லியா ஸ்டாலின் அவர்கள் அறியவேண்டும்.

  • Yogiyan - Connecticut,யூ.எஸ்.ஏ

    நெருப்புல உட்கருறதுக்கு தோசை சட்டியில் உட்கரலாம் - சசிகலா வை விட ஸ்டாலின் பெட்டர்

  • Yogiyan - Connecticut,யூ.எஸ்.ஏ

    Excellent

  • Yogiyan - Connecticut,யூ.எஸ்.ஏ

    இதை நான் வரவேற்கிறேன். நான் தி மு க வை சேர்த்தவன் இல்லை, இருந்தாலும் சசிகலாவுக்கு பதில் ஸ்டாலின் வருவதை விரும்புகிறேன்

  • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

    தினமலருக்கு ஏன் இல்லாத வேலை என்று தெரியவில்லை. பிஜேபி க்கு இவ்ளோ சப்போர்ட் பண்ணுதுனு தெரியல.

  • Joseph - Maywood,யூ.எஸ்.ஏ

    இவ்வளவு அட்வான்சாக ஸ்டாலின் போவாரேன்னு தேரியல்ல. நல்லது நடந்தால் சரி

  • Suresh - Nagercoil,இந்தியா

    ஸ்டாலின் கண்டிப்பாக இதை செய்யவேண்டும் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவு உண்டு. அரசியலுக்கு வருவதற்கு முன்பே சசிகலா கும்பல்கள் பல 1000 கோடிகளை கொள்ளை அடித்துவிட்டு மக்களையும் அடித்து மிரட்டி சொத்துக்களையும் சேர்த்துவிட்டு இப்பொழுது முதல்வர் பதவி வேணுமாம், தமிழக மக்கள் என்ன அவ்ளவு முட்டாளா? பிரதமர் தலையிட்டு இதில் நல்ல முடிவை எடுக்க வேண்டும். கவர்னர் கொள்ளைக்காரிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும் அதை மீறி செய்தால் வாக்களித்த தமிழக மக்களுக்கு செய்யும் விருப்பமில்லாத செயலாக கருதநேரிடும். கூடவே இருந்துக்கொண்டு குரல்வளையை நெரிக்கும் கொள்ளை கூட்டம். ஸ்டாலினால் முடியவில்லையெண்டால் பன்னீர்செல்வம் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர் அவரே தொடரட்டும்..

  • jay - toronto,கனடா

    சின்னம்மாவின் பேராசையால் ,, இப்போ ஸ்டாலின் முதல்வரா வரப்போகிறார் ,

  • C Suresh - Charlotte,இந்தியா

    திமுகாவின் குடும்ப ஆட்சி, மந்திரிகளின் குறுநில ஆட்சி பயமுறுத்துகிறது.. ஆனால் சசிகலா குடும்ப கொள்ளை ஆட்சிக்கு இவர்களே பரவாயில்லை... ஸ்டாலின் கனிமொழி, மாறன் என்று குடும்பத்தை தள்ளிவெய்தால் நல்ல பெயர் எடுக்கலாம்..

  • jay - toronto,கனடா

    சின்னமாவுக்கு இதுவும் வேணும் இனமும் வேணும்

  • shame on you - Chennai,இந்தியா

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா , இவர் ஒரு காமடி பிசு :)

  • Mohamed Ibrahim - Coimbatore,இந்தியா

    இந்த செய்தியில் ஒரு தவறு உள்ளது.. அதாவது இப்போது அதிமுக விற்கு 135 MLA கள் உள்ளனர், அதில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 45 பேர் கட்சியை விட்டு வெளியேறி திமுக விற்கு ஆதரவு தெரிவித்தால் மட்டுமே ஆட்சி நிலைக்கும். அவ்வாறு இல்லாமல், மூன்றில் ஒரு பங்கிற்கு குறைவாக MLA கள் வெளியேறினால் Anti- Defection Law (Schedule 10 of the Indian Constitution) அவர்கள் மேல் பாயும்.. வெளியேறிய MLA கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு அதிமுக ஆட்சியே தொடரும்.. இது போன்று சமீபத்தில் உத்தர்காண்டில் கூட நடைபெற்றது

  • chails ahamad - doha,கத்தார்

    அதிமுக வின் தொண்டர்களும் , அந்த கட்சியின் எம் எல் ஏக்களில் பலரும் திருமதி. சசிகலா நடராசன் அவர்கள் முதல்வர் ஆகுவதை விரும்பாது உள்ளார்கள் என்பதை பல தரப்பிலும் அறிய முடிகின்றது , இருப்பினும் இன்றைய நிலையில் மக்களின் மனதுக்கு ஒவ்வாத கும்பல் ஆட்சியில் கோலோச்ச விரும்புவதை தகர்த்திட அதிமுக எம் எல் ஏக்கள் பலரும் தனி அணியாக செயல்படுவது காலத்தின் கட்டாயம் என்ற நிலையில் திமுக வை தவிர வேறு எந்த கட்சிகளும் ஆட்சி அமைக்கும் தகுதியில் இல்லாததால் , திமுக ஆட்சி அமைக்கும் உரிமையை கோரும் நிலையில் தார்மீகமாக ஆதரவை அளித்திட அதிமுக வின் பல எம் எல் ஏக்கள் தயாராக உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது என்பது உண்மையே , தற்போதைய நிலையில் தமிழகத்தை காப்பாற்றிட திமுக ஆட்சிக்கு வருவது அவசியமும் அவசரமும் ஆகும் , சிந்தை மிகுந்த அதிமுக வின் தன்மானமுள்ள எம் எல் ஏக்கள் திமுக செயல் தலைவர் திரு . ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்திட பக்கபலமாக இருந்திடுவதே சிறப்புக்கு உரியதாகவும் இருக்கும் .

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    உங்களுக்கு ஆளும் உரிமையை கடந்த தேர்தலில் மக்கள் அளிக்கவில்லையே....... சசிகலாவை விரும்பாத, 40 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆட்சியை கொடுத்து தி.மு.க வெளியிலிருந்து ஆதரவு தந்தால் என்ன?.....

  • R Sanjay - Chennai,இந்தியா

    "சூட்சிகள் செய்து ஆட்சியை பிடிக்க நினைத்தால், தோற்றுப்போவாய் உன் ஆட்சியிலும், வாழ்க்கையிலும்.", " உன்னை நல்லவனாக கட்டிக்கொள்ள அடுத்தவரை கெட்டவனாக சித்தரிக்கும் யாரும் நீண்டநாள் நல்லவர் வேடத்தில் வாழமுடியாது." "தோல்வியோ வெற்றியோ நேர்மையாக வந்தால் அதை ஏற்றுக்கொள் உலகம் உன்னை ஏற்கும்", குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகம் இனியும் உமக்கு வேண்டாம்.

  • Mahendra Babu R - Chennai,இந்தியா

    என்னாதிது? முதல்வர் நாற்காலில musical chair வெளையாடறீங்க?

  • P Mahendiran - Nagpur,இந்தியா

    "சோழியன் குடுமி சும்மா ஆடாது " என்பதை உமது சமீபத்திய செயல்பாடுகள் மூலம் மக்கள் உணர்ந்து விட்டார்கள் ஸ்டாலின். அரசியல்வியாதிகளின், அரசியல் நாடகங்களைப் புரிந்துகொள்ள இயலாத அளவிற்கு மக்கள் முட்டாள்கள் இல்லை. மக்கள், தங்கள் கையில் ஒட்டுப் போடும் அதிகாரத்தைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதால் பல்லைக் கடித்து கொண்டு மெளனம் காக்கிறார்கள். பொதுவாக, அரசியல்வாதிகள் யாரையும் எனக்குப் பிடிக்காது. யாரும் நாடு முன்னேற பாடுபடலை... சுயநலவாதிகள்... குறிப்பாக என் தலைமுறை அரசியல்வாதிகள். எது எப்படி. இருந்தாலும்... "கட்டுமரம்" அளவிற்கு ராஜதந்திரம் உமக்கு கிடையாது. கவர்னர் ஐயா, இந்த அரசியல்வியாதிகளை எல்லாம் நம்பி, நம்பி நாங்கள் ஏமாந்தது போதும். கடைசியா உங்களை நம்புகிறோம். தயவுசெய்து தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விடுங்கள். இந்த முறை மக்களுக்காகப் பணிபுரிய காத்திருக்கும் நல்லவர்களை, மக்கள் நலனுக்காக உயிரையும் கொடுக்க தயங்காத தலைவரை, மக்களாகிய நாங்கள் இனம் கண்டு தேர்ந்தெடுத்து, தமிழகத்தை உலகமே வியந்து பார்க்கும் அளவு முன்னேற்றுகிறோம். முடியவில்லை எனில், நாங்க எல்லோரும், அரசியல்வியாதிகளின் கொத்தடிமைகள் தான், எதிர்காலத்தில் ஐந்தறிவு உள்ள ஒரு விலங்கு நாட்டை ஆண்டாலும் ஏற்றுக் கொள்கிறோம் என உறுதி கூறுகிறோம். என்ன மக்களே, சரிதானே???.....இதற்கு ஆதரவு கிடைத்தால், இது மக்கள் கருத்து. இல்லை எனில் இது என் தனிப்பட்ட கருத்து .

  • sankar - trichy,இந்தியா

    இவரு மாநகர தந்தாய் ஆகும்போது என்ன தகுதி இருந்தது அதே நிலைமை தான் சசிக்கும்..

  • sankar - trichy,இந்தியா

    அண்ணா துறை இறந்தது பிபரவரி ரெண்டு நெடுஞ்செழியன் முதல்வரானது பிப்ரவரி மூணு இரு அப்பா முதலைவரானது பிப்ரவரி பாத்து .இவரு அப்பா போட்ட பாதையில் இவரு அப்பாவால் ஆசி பெட்ரா சதிகளா செல்கிறார்

  • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

    20 MLA க்களை இழுத்துவிடலாம் என்று சொல்லுறார் அத்தனைப்பேருக்கும் முக்கிய கான்ட்ராக்ட் கொடுக்க வேண்டியிருக்கும் அதனை ஏற்றுக்கொள்வார்களா? இதனால் என்ன மாற்றம் வந்திடப்போவுது அதே திருட்டு மணல் தொடங்கி நில அபகரிப்பு வரை கொள்ளை தொடரும். 20 பேரும் மிரட்டலில் ஆட்சி நடத்தினால் எந்த திட்டமும் நிறைவேறாது மறு தேர்தல் வரும்வரை கவர்னர் ஆட்சியே தொடர வேண்டும்.

  • Mahendra Babu R - Chennai,இந்தியா

    இப்போ ராணுவக் கட்டுப்பாடு எவ்வளவு தூரம் வேலை செய்துன்னு பார்ப்போம்.

  • Mahendra Babu R - Chennai,இந்தியா

    இவங்களையும் உள்ள விடக்கூடாது. மறுபடியும் OPS வரட்டும். அதுதான் ஜெயிச்ச கட்சி. கடந்த தேர்தலில் மக்கள் நம்பிக்கை பெற்றவர்கள் ஜெயலலிதா அப்புறம் OPS.

  • ramasamy naicken - Hamilton,பெர்முடா

    கவுண்டர்களை சின்னம்மா கிள்ளுக்கீரையாக நினைக்கின்றார். செங்கோட்டையனுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால்தான் கோங்கு மண்டலத்தில் மறுபடியும் ஜெயிக்க முடியும். இல்லையென்றால் சின்னமா நெற்றியில் போட்டு இருக்கும் நாமத்தை பெரிதாகி விடுவார்கள்.

  • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

    இப்போதைய தலைமுறைக்கு, 1985 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் நினைவிருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் ஸ்டாலின் நல்லவர் என்பதை போல நினைக்கிறார்கள்..

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    ஸ்டாலின் தமிழகத்தின் பிரதமராவதை ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது - இப்படிக்கு செயல்படாத நினைவை இழந்த ஸ்டாலினின் தந்தை....

  • கட்டுமரம் - Camden, NJ,யூ.எஸ்.ஏ

    கருணாநிதி போனால் திமுக பதினாறாக இல்லையென்றால் சுக்குநூறாக உடையும் அதையும் பார்க்க தானே போறோம்

  • கட்டுமரம் - Camden, NJ,யூ.எஸ்.ஏ

    உதவாக்கரைக்கும் முதல்வர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்று ஆசை வந்து விட்டது மதுர முனியாண்டி விலாஸ் ஓனரு அழகிரி விட்டு விடுவாரா சும்மா....

  • கட்டுமரம் - Camden, NJ,யூ.எஸ்.ஏ

    தில்லு இருந்தா மக்களின் செல்வாக்கை பெற்று ஆட்சிக்கு வாங்க டா அதை விட்டு விட்டு கோழைகள் மாதிரி MLA க்களை விலைக்கு வாங்கி...தூ..தூ..

  • கட்டுமரம் - Camden, NJ,யூ.எஸ்.ஏ

    கருணாநிதி குடும்பம் சசிகலா குடும்பம் இரண்டையுமே ஒரே கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறார்கள் மக்கள் ரெண்டுமே மாபியா கும்பல்

  • கட்டுமரம் - Camden, NJ,யூ.எஸ்.ஏ

    பிணத்திலும் அரசியல் செய்வான் திமுக காரன் என்பது மறுபடியும் நிரூபணம் ஜெயாவின் மரணத்தில் ஆதாயம்

  • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

    நடந்தால் நல்லது. மன்னார்குடி மாபியா மொத்தத்தையும் உள்ள தள்ள வேண்டும்.

  • JAY JAY - CHENNAI,இந்தியா

    தளபதிக்கு எல்லாம் இனிமேல் பெரிய கமெண்ட் போடும் அளவுக்கு ஒர்த் இல்லை... ஷாக் கொடுப்பது போல, சின்ன சின்ன கமெண்ட் போட்டால் போதும் என்று நினைக்கிறேன்... கீழே அவற்றில் சில...

  • JAY JAY - CHENNAI,இந்தியா

    பினாமி மதுபான ஆலைகள்????

  • JAY JAY - CHENNAI,இந்தியா

    அதுசரி பாத்திமா பாபு, உங்கள் ஆட்சி நடைபெற்றபோது எதுக்கு அதிமுகவில் சேர்ந்தார்???

  • JAY JAY - CHENNAI,இந்தியா

    2G ??...சாதிக் பாஷா மர்மம் மரணம்???

  • JAY JAY - CHENNAI,இந்தியா

    மேயராக இருந்தபோது நடந்த ஊழல்????.. அண்ணா நகர மர்ம மரணங்கள்???

  • JAY JAY - CHENNAI,இந்தியா

    20 MLA க்கள் பதவி விலகட்டும்...திமுகவுக்கு ஆதரவு அளிக்கட்டும்... ஆனால் கட்சிமாறினால் பதவி பறிக்கப்படும்.... மீண்டும் தேர்தல்.... ரஜினி - தீபா - பாஜக கூட்டணி திமுகவை 3 வது இடத்துக்கு தள்ளும்... பரவாயில்லையா தளபதியாரே ????

  • JAY JAY - CHENNAI,இந்தியா

    மர்மம் ???

  • JAY JAY - CHENNAI,இந்தியா

    அண்ணாநகர் ரமேஷ் , மனைவி, மற்றும் 3 பெண் குழநதைகள் ??

  • JAY JAY - CHENNAI,இந்தியா

    சாதிக் பாஷா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement