Advertisement

தமிழ்நாட்டிற்கென தனிக்கொடியை உருவாக்கிய சமூக விரோதிகள் - மாணவர்களை உசுப்பேற்றி கோட்டையில் கொடியேற்ற திட்டம்

சென்னை : மாணவர்கள் போர்வையில், மெரினாவில் கூடியிருந்த சமூக விரோத கும்பல், தேசிய கொடியை அகற்றி விட்டு, தனித்தமிழ்நாடு கோஷத்துடன், புதிய கொடியை, போர் நினைவு சின்னம் மற்றும் கோட்டையில் பறக்க விட, திட்டம் தீட்டியது அம்பலமாகிஉள்ளது.

சென்னை, மெரினாவில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் வன்முறையின்றி, கட்டுக்கோப்பாக இருந்த மாணவர்களுடன், மாணவியரும் போராட்டத்தில் இறங்கினர்.
இதையெல்லாம், பார்த்த பொதுமக்கள், அறவழி போராட்டத்திற்கு, அவர்களாகவே முன்வந்து ஆதரவையும், போராட்ட களத்தில் பங்கேற்றும் வந்தனர்.
ஜல்லிக்கட்டை நோக்கி சென்ற மாணவர்கள் போராட்டம், சில நாட்களில் திசை மாறியது. அவசர சட்டம் இயற்றிய பின்பும், அதில் உள்ள ஷரத்துக்களை, மாணவர்களுக்கு தெரியப்படுத்திய பின்பும், போராட்டம் கைவிடப்படவில்லை. தமிழக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும், போராட்ட களத்தில் எதிர்ப்புகள் வலுத்தன.

மத்திய அரசு 'அலர்ட்'



போராட்டத்தில் மாணவர்களுடன், மதவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவியிருப்பதாக, மத்திய அரசு, தமிழக அரசுக்கு, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை தகவலை அனுப்பியது.
அவற்றின் விவரம்:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, மெரினாவில் கூடிய, மாணவர்களின் போராட்டம், ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்தது.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஒரு சில போலீசாரே கூட்டத்தில், 'மைக்' பிடித்து பேச ஆரம்பித்ததால், ஆயிரக்கணக்கில் இருந்த மாணவர்கள் கூட்டம், லட்சக்கணக்கில் கூட துவங்கியது.
தமிழ் ஆதரவாளர்கள் என கூறிக் கொள்ளும், பல்வேறு அமைப்புகள், கூட்டத்தில் புகுந்தன.
அந்த அமைப்புகள், சமீப காலமாக, போராட்டத்தை நடத்த போதிய களம் இல்லாமலும், அவற்றிற்கு நிதி திரட்ட முடியாமலும், தடுமாறி வந்தன.
இந்த அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும், ஒரு சினிமா இயக்குனர், கடந்த சில மாதங்களாக, சென்னையில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு வாடகை கூட கொடுக்க முடியாமல் திண்டாடி வந்தார். அவரிடம், சில நாட்களாக லட்சக்கணக்கில் பணம் புழக்கத்தில் இருக்கிறது. இத்தகவலை, மத்திய உளவுத்துறை விசாரித்து, அதை உறுதி செய்துள்ளது.
இதே பின்னணியில், மதுரையைச் சேர்ந்த, மதவாத சிந்தனை கொண்ட, சினிமா இயக்குனரும் இருக்கிறார். இவர்களை போலவே, சினிமா இயக்குனராக இருந்து, தற்போது, ஒரு கட்சியின் பெயரில் வலம் வரும் நபர், தன்னை புலி அமைப்பின் பிரதிநிதியாக பறைசாற்றிக் கொள்பவர், உண்மையிலேயே, கிறிஸ்தவ பின்புலத்தை கொண்டவர்.
அவருக்கு, தமிழகத்தில் ஒரு சில கிறிஸ்தவ கல்லுாரிகள் மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள், பணத்தை வாரி இறைத்துள்ளன. இதை தவிர, மாற்று மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மீனவர்கள் அமைப்பிற்கும், சமூக விரோத கும்பல் லட்சங்களையும், கோடிகளையும் வாரி இறைத்துள்ளது.
இவர்களுடன், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய, ஒரு கும்பலும் இணைந்து கொண்டது. இவர்களுக்கு, தென் மாவட்டத்தில் உள்ள, தாது மணல் மாபியா கும்பல் நிதியுதவி அளித்துள்ளது.
இந்த கும்பலின் பின்னணியில், தமிழகத்தில் அதிகார மையமாக விளங்கும், ஒரு நபரும் இணைந்துள்ளார். அவர், பிரதமர் மற்றும் முதல்வர், பன்னீர்செல்வத்திற்கு எதிராக, மாணவர்களை திசை திருப்பி வருகிறார்.
இந்த அமைப்புகளின் தலைவர்கள், களத்தில் இறங்காமல், அவர்களது இயக்கத்தில் உள்ள இளைஞர்களை களத்தில் இறக்கி, மாணவர்களுடன் இணைத்துள்ளனர். இவர்கள் தான், தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக, பல்வேறு பிரசாரங்களை செய்து வருகின்றனர்.
இந்த இயக்கங்களுடன் அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வரும் நக்சல் பாரி, மாவோயிஸ்ட், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புகளின் ஆதரவாளர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் அல்லாது, மாணவர்களை மூளைச்சலவை செய்யும், பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களும், மாணவர்கள் போர்வையில், கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்துள்ளனர்.
இவர்களில் சிலர், 'தனித்தமிழ்நாடு வேண்டும்' என்ற கோஷத்தை எழுப்பியதோடு, தேசிய கொடியை அகற்றி விட்டு, தனித்தமிழ் நாட்டிற்கென, புதிய கொடியை உருவாக்கி, சென்னை போர் நினைவுச் சின்னம் மற்றும் கோட்டையில் ஏற்ற திட்டமிட்டுள்ளனர்.
உடனடியாக போராடும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அவர்களின் போராட்டத்தை கைவிட செய்ய வேண்டும்.
அத்துடன், போராட்ட களத்தில் இருக்கிற சமூக விரோத கும்பலை, தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் எச்சரிக்கையை அப்படியே, போராட்ட களத்தில் இருக்கும் மாணவர்களிடம் தெரிவிக்க இயலாத நிலையில், சென்னை போலீசார் ஒலிபெருக்கியில், 'ஜல்லிக்கட்டிற்கான அவசர சட்டம், சட்டசபையில் முழுமையான சட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், மாணவர்கள் கலைந்து செல்ல வேண்டும்' என எச்சரித்தனர்.
அதை ஏற்றுக் கொண்ட, உண்மையான மாணவர்கள் சிலர் கலைந்து சென்றனர். மாணவர்கள் போர்வையில் இருந்த இளைஞர்கள், போலீசாரிடம் வம்பிழுத்தனர்.
அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்; போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இருந்தாலும், அந்த கும்பல், தயாராக வைத்திருந்த, பெட்ரோல் குண்டுகளை வீசி, ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையத்தை எரிக்க முயன்றனர்.
அங்கு துவங்கிய வன்முறை, ஏறக்குறைய, சென்னை முழுவதும் பரவியது. கண்ணீர் புகை குண்டு மற்றும் துப்பாக்கி சூடு நடத்தி, கலவரத்தை போலீசார் அடக்கினர்.

சுதாரிக்காத மாணவர்கள் தடியடியில் சிக்கி காயம்



மாணவர்களுடன் இணைந்து போராடிய நடிகர் லாரன்ஸ், காங்கேயம் காளைகளை அழிவில் இருந்து காத்து வரும், ஈரோட்டைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாதிபதி, ஜல்லிக்கட்டு நடத்த பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வரும், மதுரையைச் சேர்ந்த ராஜசேகர், ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆகியோர், டில்லிக்கு சென்று, உள்துறை செயலரை சந்தித்தனர்.
அவர்களிடம், மாணவர்களுடன், மதவாதிகள், பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கும் தகவல் ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பயங்கரவாத குழுக்கள் ஊடுருவியிருக்கிறது என்பதை, இவர்களால் வெளிப்படையாக தெரிவிக்க இயலாத அளவுக்கு, அச்சுறுத்தல் இருந்தது.
அதனால், பொத்தாம் பொதுவாக, 'மாணவர்களுடன், சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கின்றனர்; மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்' என்ற கருத்தை மட்டும் தெரிவித்து விட்டு, போராட்டத்தில் இருந்து விலகிக் கொண்டனர். அதை நம்ப மறுத்த அப்பாவி இளைஞர்கள் பலர், போலீசாரின் தடியடியில் சிக்கி காயமடைந்திருக்கின்றனர்.
தென் மாவட்டத்திற்கு 'டிரான்ஸ்பர்'
சென்னை கலவரத்திற்கு காரணமான, ரவுடிகள் லிஸ்டில் உள்ள மீனவர்கள் மற்றும் அரசியல் பின்னணியில் இருப்பவர்களை கைது செய்யவில்லை. சென்னை கலவரத்திற்கு கைது எண்ணிக்கை, 200 தாண்டவில்லை. இது, 500ஐ தாண்ட வேண்டும்.
சென்னையில் குற்ற பின்னணி உடையவர்களுடன், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், உதவி கமிஷனர்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், கலவர கைது எண்ணிக்கை மிகவும் குறைவு. சில மாதங்களுக்கு முன், வேலுார், ஆம்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் ஒரே நாளில், 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில், சசிகுமார் கொலை செய்யப்பட்டதில் நடந்த இறுதி ஊர்வலத்தில், பயங்கர கலவரம் வெடித்தது. அதில் ஏறக்குறைய, 700க்கும் மேற்பட்டவர்களை, போலீசார் கைது செய்தனர். அந்த கலவரத்தை ஒப்பிடுகையில் சென்னையில் அதிகம். ஆனால், கைது எண்ணிக்கை குறைவு.
சென்னையில், ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய, சமூக விரோத கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கும் அதிகாரிகளை, நகரை விட்டு, தென் மாவட்டத்திற்கு துாக்கி அடிக்க வேண்டும்.
தென் மாவட்டத்தைச் சேர்ந்த எத்தனையோ அதிகாரிகள், நகரில் பணியாற்ற காத்துக் கிடக்கின்றனர். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும். இந்த விஷயத்தில், முதல்வர் பன்னீர்செல்வம், உறுதியான நடவடிக்கை எடுத்தால், சென்னை காவல் துறையைச் சீரமைக்கலாம்.
ஜாம்பவான் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தென் மாவட்டத்தில், 1980ல் நடந்த கலவரத்தை ஒடுக்கியதில் முக்கிய பங்காற்றியவர், ஐ.பி.எஸ்., தேவாரம். 90களில் நடந்த ஜாதிக்கலவரத்தில், விஜயகுமார், ஜாங்கிட் போன்ற ஜம்பவான்கள் இருந்தனர். 'எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., போன்ற அதிகாரிகள், இன ரீதியாக பிரிந்து கிடப்பதால், கலவரம் கட்டுக்குள் வரவில்லை' என
அரசுக்கு, 'ரிப்போர்ட்' அனுப்பினர்.
கோவையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டலத்தில் பணியாற்றிய இளம் போலீஸ் அதிகாரிகள், தென் மாவட்டத்திற்கும், அங்கிருந்தவர்கள் மேற்கு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டு, கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை, முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று, சென்னை போலீசையும் சீரமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

Advertisement
 

வாசகர் கருத்து (257)

  • Shiva Kannan - Chennai,இந்தியா

    இந்திய அரசாங்கம் தமிழனின் கோபத்தையும் விடாது. இன்னும் இந்தியாவுடன் இணைந்து இருந்து என்ன சாதிக்க போகின்றீர்கள்? தமிழ் நாட்டிற்கு சொந்தமான தீவை இழந்தோம், கடல் வளத்தை இழந்தோம், 250000 க்கும் மேற்பட்ட தமிழர்களை இழந்தோம், அணு கதிவீச்சை சுமக்க வைக்கப்பட்டிருக்கின்றோம் ...நம்முடைய தமிழ் மொழியும் புறக்கணித்து ஹிந்தி திணிப்பு எல்லாவகையிலும் ஜோராக அரங்கேறுகிறது, சிந்திப்பீர் இளைஞர்களே ...தமிழனின் பழைய தலை முறையை மீட்டெடுப்போம் ..

  • Young Prince - Bangalore,இந்தியா

    ethuellam antha kulla potta pasanga panra velayathan irukkum

  • நிலா - மதுரை,இந்தியா

    ஜல்லிக்கட்டு காக தன் சொத்தையே இழந்த ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் சசியின் காலாடியில் இப்போது இழந்து சொத்தை மீட்டு விட்டார் சசி கும்பல் இருக்கும் வரை தமிழகத்தில் வன்முறைகள் தான் தலைதூக்கி நிற்கும் மாணவர்களே நீங்கள் இனி யாருக்காவும் போராட வேண்டாம் போராட்டத்தை தூண்டிவிட்டு விட்டு ஒதுங்கி போய்விடுவார்கள் யாவரும் விலைக்கு போய்விடுவார்கள் நீங்கள் அமைதியான முறையில் உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள் தேர்தலில் யாருக்கும் ஓட்டு போட வேண்டாம் உரிமையாம் மண்ணாங்கட்டியாம் நம் மக்கள் சக்தியை அரசியல்வாதிகளிடம் அமைதியான முறையில் காட்டுவோம் உங்கள் உயிர் எங்களுக்கு முக்கியம் கடவுள் இருக்கிறார் நமக்கு

  • Vaidhyanathan Sankar - chennai,இந்தியா

    இச்செயல்கள் குறித்த அரசின் நடவடிக்கைகள்மீது தமிழ் ஊடகங்கள் விவாதம் என்ற பெயரில் கட்ட பஞ்சாயத்து நடத்துவதும் தேச துரோகமே

  • கார்த்திக் -

    இத்தகைய தெளிவான தகவல்களுக்கு நன்றி..இதன் மூலம் அரசை தவராக சித்தரிக்கும் ஒரு சில வலைதள நபர்களிடம் இருந்து மாணவர்கள் விலகி இருப்பதே நம் தமிழினத்திற்கும் நாட்டிற்கும் நல்லது.

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

    இதை உண்மையாய் சொன்னீர்கள் என்றால் தினமலர் நீங்களும் ஒரு தவறான கும்பலால் மூர்க்கத்தனமான தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும், ஸ்டெப்பான் கணாப் என்றொரு இந்துவாய் மதம் மாறிய நபர் வெளியிட்ட தகவலை நான் பகிர்ந்தேன் என்பதாலேயே தமிழக கிருத்தவர்கள் பெயர்களதுயோர் அசிங்கமாய் திட்டி எழுதினார், எவ்ளோ பேர்தான் நான் பிளாக் செய்ய முடியும் ?

  • Orion - Mount Shasta, California ,யூ.எஸ்.ஏ

    அன்பு நண்பர்களே - இங்கு நான் சில விஷயங்களை பகிர போகிறேன் - இது நல்லோர்களுக்கு உதவியாகவும் வழி காட்டியாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை - அதே சமயம் வழி தவறி போனவர்களுக்கு மருந்தாகவும், பிடிவாதமாக மூர்க்கமாய் இருப்போர்க்கு மற்ற உலக வழி காட்டியாகவும் இருக்கும் - இன்று அமாவாசை - நன்னாள் - பொன்னாள் - நல்லோர்க்கு நன்னாளும் பொன்னாளும் வேறுபாடு தெரியும் - மற்றோர்க்கு இருட்டு ஒன்றே வெளிச்சம் - மூர்க்கம் என்பது கொடிய விஷ மற்றும் எல்லை தாண்டி முற்றி போன மன மற்றும் சமுதாய புற்று ( வெள்ளை நாடுகள் டிபென்ஸ் இவ்வாறு தான் சொல்கிறது) நோய் - இதற்கு சில மருந்துகள் சரித்தில் இருந்து பார்க்கலாம் - மூர்க்கம் - லேசர் மூளை சிகிச்சை - குரங்கு வால் - சில மூர்க்க மன்னர்களின் ஆட்சி பிடிக்க கடைபிடித்து தன் ஐந்து சகோதரர்களை வீழ்த்திய மூர்க்க வீர தீர செயல்கள் - ஜார்ஜ் புஷ் - இந்திய பாரம்பரிய கலைகள் - உடும்பு நாக்கு மற்றும் நாக பாம்பு - இது இயற்கை மற்றும் செயற்கை மருத்துவ முறைகள் - இன்னொன்று நாட்டாமை தீர்ப்பு - உங்கள் பொன்னான நேரங்களை மூர்க்க அறிவாளிகளுடன் தர்க்கம் பண்ணி வீண் செய்யாதீர்கள் - அது குப்பையில் எறியப்பட்ட நல்லதோர் வீணை போன்றாகும் -

  • Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா

    நல்ல கதை, நீங்க வாழனும் அதற்கு முதல் ஆளா பிரிவினை வாதத்தை ஆரம்பிச்சிட்டீங்களா , மகிழ்ச்சி

  • Gnanam - Nagercoil,இந்தியா

    தினமலர் தரும் விவரங்களுக்கு நன்றி. மாணவ மாணவியர்களும், பொதுமக்களும் கயவர்களின் தந்திரங்களில் சிக்காமல் தமிழ்நாட்டின் பெருமையை பாதுகாக்கவேண்டும். போகிற போக்கை பார்த்தல், கூடியவிரைவில் ஜனாதிபதி ஆட்சி தமிழ்நாட்டிற்கு தேவைப்படும்.

  • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

    தேர்தல் களம் தேறுதல் தரும்.. காலம் பதில் சொல்லும் காவிகளின் பொய், ஊழல் அடிமை மாநில அரசின் பொய் எப்படிப்பட்ட ஏமாற்று என்று. அன்று ஏறப் போகும் ஆப்பு தான் தமிழனின் பதில்.

  • Panni Moonji Vaayan - chennai,இந்தியா

    ange maanavargal otrumaiyaaga poraadinaargal, jaathi, inam kadanthu..inge pathintha karuthukkal ellam padikkum pothu kumattik kondu varugirathu jaathiyin peetra naathathaal..

  • murugu - paris,பிரான்ஸ்

    இங்கே எங்கள் மோடியையும் ,மோடி அரசையும் விமர்சிப்பவர்கள் அனைவரும் ""தேச துரோகிகள் "

  • murugu - paris,பிரான்ஸ்

    கோட்டையில் கொடியேற்ற திட்டம் கற்பனைக்கு எல்லை இல்லை என்பதையே இது காட்டுகிறது

  • murasu - madurai,இந்தியா

    தமிழகத்திற்கு வரும் தண்ணீரை கேட்டால், தமிழ்நாட்டை மட்டும் பிரித்து பார்க்கிறார். அணுவுலை, மீத்தேன், கெயில், ஜல்லிக்கட்டு, நானோ, எய்ம்ஸ் என அனைத்திலும் தமிழகத்தை பிரித்து ஆளும் நீண்ட நாள் மத்திய அரசுகளின் போக்கே இந்த பிரிவினை வாத கோஷத்துக்கு அடிப்படை காரணம். நீயும் தரமாட்ட , கேட்டாலும் கொடுக்க மாட்ட. போராட்டம் பண்ணினாள் அதையும் வாரக்கணக்கில் நடத்த விடுவ . தப்பி தவறி கோர்ட் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு சொன்னால் அதையும் தடுப்பாய் . அனைத்து பிரிவினை தனத்தையும் ஆளும் பிரிவினை மத்திய அரசுகள் செய்து ஜனநாயக முறையில் குரல் கொடுத்தால் அதற்க்கு பிரிவினை வாத சாயம் பூசுவது . ஏன் ஆறு நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தவிட்டிர்கள். இந்த போராட்டமே உங்கள் கையாலாகாத தனத்தினால் என்று ஏன் உணர மறுக்கிறது உங்கள் பதவி போதை. இந்த அடக்குமுறை , உங்கள் பிரிவினை போக்கும் தொடர்ந்தால் இந்த பிரிவினை குரல் தமிழகத்தின் அனைத்து மூலை முடுக்கிலிருந்தும் வெளிப்படும் .

  • A.Balasubramanian -

    செய்தியே பொய்

  • Sivapathasekaran - Tiruchirappalli,இந்தியா

    காமராசர் காலத்தில் சட்டமன்றத்தில் ஏற்றப்பட்டது.

  • Sivapathasekaran - Tiruchirappalli,இந்தியா

    காமராசர் காலத்தில் சட்டமன்றத்தில் ஏற்றப்பட்டது.

  • murasu - madurai,இந்தியா

    நமது மத நல்லிணக்கத்திற்கு இவர்களால் ஆபத்து. இந்தியா ஒருமை பாட்டுக்கு மிக பெரிய ஆபத்து

  • vjMalaysia -

    ithu ummai endru nangal epadi nambuvathu? poi sollathinga Samy kannakuthidum.

  • Kumar - Chennai,இந்தியா

    நக்கல், நையாண்டி, காமெடி போன்ற கருத்துகள் எப்போதும் நல்லது. உறவு வளர்க்கும் தினமலர் வளரட்டும்.

  • S.J.ANANTH - Nagercoil,இந்தியா

    அட போங்கப்பா போலீசு நினச்சா என்ன வேணும்னாலும் செய்யலாமுங்கோ சாமி... அதுக்கு அவரவர் வசதிக்கேற்றார் போல எப்படி வேணும்னாலும் கருத்துக்கு போடலாம் சாமி ...

  • Malini - Banglore ,இந்தியா

    நைஸ் நியூஸ் ....வெற்றி அண்ட் பிக் சலூட் ....தேச கடமை நிறைந்த முற்றிலும் இந்தியா செய்தி தாள் ....

  • Santharam Bollu - MADURAI,இந்தியா

    மத துவேஷம் இல்லாதவர்கள் திராவிட அரசியல்வாதிகள் ...ஏன் என்றால் பிரியாணி கிடைக்கும் இடத்தில் குல்லா போட்டு கொள்வார்கள். பன்றி கரி கிடைத்தால் ஆமின் சொல்ல போயிடுவார்கள் . மானம் கெட்ட பிழைப்பு .. சமஸ்க்ருதம் செத்த மொழியாக இருந்தாலும் உயிரோட்டம் உள்ளதாகும் .தமிழோடு ஒன்றி போவது .மசூதியில் அரபி மொழியில் ஒலி பெருக்கி வைத்து எதையோ கத்துகிறான் .தமிழனுக்கு அந்நிய அரபு மொழி என்ன எழவு புரிகிறதோ?

  • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

    தினமலரை திட்டுவதற்கு முன்னாள், முகநூல் வாட்ஸாப் போன்ற சமூக வலைத்தளங்களில் பாருங்கள். தமிழக பிரிவினையை முன்வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கோஷங்கள் எழுகின்றன. இணையம் என்பதால், செலவு குறைவு மற்றும் பார்ப்பவர்கள் அதிகம். இங்குள்ள ஹிந்துக்கள் அனைவருக்கும் கோரிக்கை வைக்கிறேன், இந்தியாவை பிரிக்கவேண்டும் என்று நினைக்கும் அணைத்து தளங்களிலும் தயங்காமல் உங்கள் கருத்தை முன்வையுங்கள். இணையத்தில் பல பக்கங்களை உருவாக்கி, ஆதரவை திரட்டுங்கள். உறவினர்களோ, நண்பர்களோ என்ன நினைப்பார்கள் என்று பார்க்காதீர்கள். நம் நாட்டையும் ஹிந்து மதத்தையும் காக்கவேண்டியது நம் கடமை. தமிழகம் பிரிந்தால், அண்டை மாநிலங்களில் இருந்து தண்ணீர் கிடைக்கப்பெறாமல், இருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழக விவசாயிகளும் தற்கொலை செய்துகொள்வார்கள். பிரிவினைவாதிகளுக்கு அதைப்பற்றி எந்த கவலையும் இல்லை. கடைசியில் பாதிக்கப்படப்போவது நாம் தான்..

  • john - chennai,இந்தியா

    World seen students won. This report is utter lie, published as per instruction from central. state supported the students eventhough it was against them, since it was ahimsa

  • john - chennai,இந்தியா

    காவிகளின் விளையாட்டு சக்ஸஸ்

  • நிலா - மதுரை,இந்தியா

    நாடு நாசமா போச்சு யாரையும் குறை சொல்ல முடியவில்லை நம்மளை தான் நாமே அடித்துக் கொள்ள வேண்டும்

  • oliver - karimun,இந்தோனேசியா

    RSS SPENT 250 CRORES FOR THIS PROTEST IF YOU WANT DETAILS YOU CAN ASK H.RAJA OF BJP , DON'T SPREAD FALSE NEWS WITHOUT ANY PROOF

  • Indian - India,இந்தியா

    முக்கிய கருத்து, அதனால் தான் கீழே உள்ள இந்த கருத்தை மீண்டும் நிறைய பேர் படிக்க போஸ்ட் செய்கிறேன்….. karupanasamy - queenstown, சிங்கப்பூர்….. சைமன் போன்ற அந்தர் பல்டி அயோக்கியர்கள் திராவிடர் கழகத்தின் தயாரிப்புகள். கடவுளை நம்பிக்கை இல்லையாம் முருகன் கடவுளாம். மக்கள் நாட்டு நாய் மட்டுமே வளர்க்க வேண்டுமாம் இவர் ஜெர்மன் ஷெப்பர்ட், அல்சேஷன், லாப்ரடர் வகை நாய்களை வளர்ப்பாராம். பாவம் புலம் பெயர்ந்த ஈழத்து தமிழர்கள் அவர்களிடமிருந்து நிதியுதவி பெற்று இஸுஸு மியூ எக்ஸ் எஸ் யு வீ யில் அன்னாடங் காய்ச்சிகளை ஏமாற்றி கிடைக்கும் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்துகிறார்.

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

    தமிழ்நாட்டில் பொதுவாகவே நமது தேசியக்கொடிக்கு மரியாதை குறைவுதான். இதற்கு முக்கிய காரணம் திகவும் பெரியாரும் தான். இன்று தீவிரவாத தேச விரோத கும்பல்கள் காஷ்மீருக்கு பிறகு இங்கு தான் அதிகம். கேரளாவும் இதற்கு விதிவிலக்கில்லை. அதற்கு காரணம் தேசப்பற்று அற்ற கம்யூனிஸ்டுகள். இவர்கள் அனைவரையும் விரட்டி விட்டு இந்திய தேசியம் மேலே வரவேண்டும், வரும்.

  • Thiru Gnanam - viana,அங்கோலா

    Dont hide the truth, the protest was peacefully done but police did all criminal things, by firing and beating innocent peoples lot of videos have for evidence...but police acted well earlier we are also tamilan we have feelings and we respect ur feelings..this is 101% political and police show only...finally the innocent students and youth public and elders also wounded..sure the result will come while election comes.. this is only trailer by younsters..main flim will be relased soon .. wait and see politicians and police

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    பின் லாடன் போட்டோ வைத்து இருந்தது RSS காரர்கள். பழியை மற்றவர்கள் மீது போடுவதில் கில்லாடிகள்

  • Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்

    அப்போ போலீஸ் துறையில் இருக்கும் சமூக விரோதிகளை கண்டு முதலில் களைந்து எடுங்கள்.அதை செய்தாலே தமிழ் நாடு அமைதி பூங்காவாகிவிடும்.

  • Mahendra Babu R - Chennai,இந்தியா

    அதெல்லாம் இருக்கட்டும். இனி எம் விவசாயிகள் வாழ வேண்டும். அதுதான் ஒரே நோக்கம்.

  • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

    தினமலர் பிஜேபி இதழா, ஆர்எஸ்எஸ் இதழா என்ற சந்தேகம் வருகிறது.

  • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

    இதெல்லாம் ஆரெசெஸ்ஸின் பித்தலாட்டம் என்பது ஊருக்கே தெரியும்

  • Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்

    சீமான்,, கவுதமன் இயக்குனர் , போன்றோரையும் ,, தீவிரவாத கும்பலிடம் ,மதமாற்ற கும்பலிடம் ,, இருக்கும் பணம் ,,பல சிறுபான்மை கல்வி ,மற்றும் வெளிநாட்டு உதவி பெரும் சமூக நிறுவனம் , உடனடியாக கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ...

  • suman - Bangalore,இந்தியா

    மெரினா பீச் படத்தையே காணோம்?

  • Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்

    நூற்றுக்கு உண்மை ,,,,,,, சீமான் , மற்றும் பல சினிமா இயக்குனர்கள் ,, நாட்டு நலனில் ,அதாவது தமிழர்கள் மீது பற்று கொண்டு பேசுபவர்கள் ,, அதிகார வர்க்கத்தில் உள்ள கருப்பு ஆடுகள் ,, உடனடியாக அரசின் கண்காணிக்க படும் வளையத்துக்குள் கொண்டுவந்து ,, செமையாக கண்காணிக்க வேண்டும் ,,,, ஒட்டு மொத்த மத மாற்ற கும்பல் , தமிழர் நலன் பாடும் போலிகள் ,, நக்சலைட்டுகள் , தீவிரவாதிகள் , கருப்பு அதிகாரிகள் ,, சினிமாவில் உள்ள கயவர்கள் ,அனைவரையும் சப்தமில்லாமல் போட்டு தள்ளவேண்டும் ,,,மீடியாக்களில் பல நிருபர்கள் , எழுத்தர்கள் , செய்தி சேகரிப்பவர் ,கள நிலவரம் சொல்பவர் ,,, இவர்களிலும் பல வன்முறை சிந்தனையாளர்கள் கலந்துள்ளது கண்டு அவர்களை மீடியாக்கள் களைய வேண்டும் ,,,, சினிமாக்காரனில் பலர் மாணவர்களின் எதிர் காலத்தை கெடுப்பவர்களாகவே உள்ளனர் ,,, அரசு எல்லா பள்ளி ,கல்லூரிகளுக்கும் ,,,உடனடியாக எச்சரிக்கை விடுத்து,,மாணவர்களுக்கு அறிவுரை வழங்க பல ஆனமீக பிரதிநிதிகளை அனுப்பவேண்டும் ,,,

  • Vinod K - London,யுனைடெட் கிங்டம்

    '''''''' சென்னையில், ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய, சமூக விரோத கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கும் அதிகாரிகளை, நகரை விட்டு, தென் மாவட்டத்திற்கு துாக்கி அடிக்க வேண்டும். தென் மாவட்டத்தைச் சேர்ந்த எத்தனையோ அதிகாரிகள், நகரில் பணியாற்ற காத்துக் கிடக்கின்றனர். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும்.'''''''' அதென்ன தென்மாவட்டங்களுக்கு சமூகவிரோத கும்பலுடன் தொடர்பில் இருக்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது? தென்மாவட்டங்கள் என்றால் என்ன இளக்காரமா? அங்கு சட்டம் ஒழுங்கு தேவையில்லையா, இல்லை, என்ன நடந்தாலும் கண்டுகொள்ள தேவையில்லையா. அங்கிருக்கிறவனெல்லாம் மனுஷன் இல்லை? சென்னையின் முக்கியத்துவம் புரிகிறது, மாநில தலைநகரம், மாநகரம், பெருநகரம் என்றெல்லாம். அதனால் நேர்த்தியான அதிகாரிகள் தேவை. புதிதாக நேர்மையான அதிகாரிகளை தேர்ந்தெடுங்கள். சமூகவிரோதிகளுடன் தொடர்பில் இருக்கும் அதிகாரியை காத்திருப்போர் பட்டியலில் வையுங்கள்.. நேர்மையான சகாயத்தை காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடியும் ஆனால் நேர்மையற்ற அதிகாரிகளை வைக்கமாட்டீர்களா?.

  • Narayanan - India,இந்தியா

    அக்னி புராணத்தில், கலியுக முடிவில் ஹிந்துக்கள் பலவித துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். கல்கி அவதாரம் நிகழ்ந்து மீண்டும் க்ருத யுகம் தொடங்கும். மீண்டும் தர்மம் நிலைநாட்டப்படும். இது அக்னி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • NeesamanidhanBharatham -

    பிரிவனைவாதம், சமூகவிரோதிகளை கண்டறிந்து முளையிலேயே கிள்ளியெறி யப்பட வேண்டும், அதற்கு வக்காலத்துப்பேசி திசை திருப்பும் கும்பலையும் சேர்த்து.

  • Thamizhan - Tamizhnadu,இந்தியா

    முதலில் நீங்கள் பாகிஸ்தானையும் ,பங்களாதேஷையும் இந்தியாவோடு மீண்டும் இணையுங்கள். அதுதான் எங்களின் உண்மையான இந்தியா .எப்படி ஒரு நாட்டை தனி தனியாக பிரித்து வந்தேறிகளுக்கு கொடுத்துவிட்டு ,வெட்கம் இல்லாமல் மண்ணிற்கு சொந்தக்காரனை பிரிவினைவாதி என்று சொல்கிறாய் .முஸ்லிம்கள் தனிநாடு கேட்கும் போது பிரிவினைவாதம் என்று சொல்லி தனி நாடு கொடுக்காமல் தடுத்திருந்தால் சொல்லலாம். ஆனால் வந்தேறிகளான பிராமணர்களும்,முஸ்லிம்களோடு கூட்டுசேர்ந்துகொண்டு இந்தியாவை பிரித்து ,இரண்டுபேரும் இங்கும் அங்குமாக நாடகம் ஆடிக்கொண்டு ஆட்சி நடத்துகிர்கள் . அறவழியில் போராடுபவர்களை இப்படி கதை கட்டி எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வழி தேடுவது நன்றாக தெரிகிறது .காலம் எல்லாவற்றையும் சாட்சியாக பார்த்துக்கொண்டு செல்கின்றது ,காந்தியை கொன்றவனும் இந்தியன் என்றுதான் சொன்னான் .இந்தியா என்பது எல்லா இன மக்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு களமே ஒழிய, ஹிந்திக்காரன் மட்டும் சொந்தம் கொண்டாடும் நாடு அல்ல .என் மாநிலம் என் உரிமை ,எப்போது நான் என் அடையாளத்தை இழக்கின்றேனோ அப்பொழுது என் நாட்டின் அடையாளமும் அழிந்துபோகும் என்பதுதான் உண்மை . நாங்கள் தமிழர்களாக இருக்கும்வரையில்தான் இந்தியர்கள் என்பதை உணர்த்துவது தான். தமிழர்களின் இதுபோன்ற போராட்டங்கள் என்பதை எல்லோரும் உணர்ந்து இருப்பார்கள்.தமிழக மக்கள் ஒருபோதும் தாய்நாட்டிற்கு கெடுதல் நினைப்பவர்கள் அல்ல .

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

    மோதியை எதிர்க்க பல அமைப்புகள் (மதம், சாதி, மொழி அமைப்புகளே...ஆனால், தமிழனுக்கு நல்லது செய்கிறோம் என்று வெளியில் புரட்டான காரணம் சொல்லிக்கொண்டு) ஏதோ ஒரு பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டு தமிழகத்தில் அமைதியை குலைக்க முயலுகின்றனர்.

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

    மாணவர்களின் அறவழி போராட்டத்தில், மாணவர்கள் அல்லாதவர்கள் உள்ளே வரவிட்டது மாணவர்கள் செய்த தவறு. முப்பது, நாப்பது வயசு ஆட்கள் என்று தெளிவாக தெரிகிறது.இவர்கள் மாணவர்களோ?அப்புறம், நாலு அடி நீள கத்தி வைத்துக்கொண்டு சொர்ணாக்கா உலா வராங்க... காவல்துறை வேடிக்கை பார்க்கணுமா?சொல்லப்போனால், காவல்துறை இன்னும் கடுமையாக நடந்திருக்க வேண்டும்.

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

    சினிமாவில் மார்க்கெட் இழந்த மூன்று பேர் இவ்வளவு பிரச்னைக்கும் காரணம்.இவர்களுக்கு துணை போனது மோகன்தாஸ் கரம் சந்தின் இறுதிப் பெயரை தன்னுள்ளே கொண்ட இன்னொரு செல்லாக்காசு.இவர்கள் நால்வரையும் கைது செய்து லாடம் கட்டினால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்.

  • skandh - chennai,இந்தியா

    சுத்தி வளைக்காதீர்கள். தீ முல்லை வால்தான் வந்தது இந்த கலவரம்.பாதிக்க பட்டவருக்கு ஆதரவு தர ஸ்டாலின் போக வில்லை. பாதிக்க பட்டயாரோவுக்காக போராடும் மாணவர்களுக்கு ஆதரவு என்ற போர்வையில் துாண்ட சென்றார் ஸ்டாலினும், கே என் நேருவும், தர்மபுரி சுகவனமும், மதுரை மூர்த்தியும். அவர்கள் மாணவர்களால் துரத்தி அடிக்க பட்டர்கள். கவுன்சிலரையும் , வக்கீல் அங்கயற்கண்ணியும் மேலும் 1000 தீ முல்லை காவினரும் உள்ளே ஊடுருவவிட்டது ஏன் ? இந்த சமுக விரோதிகள் அப்படியே தங்களை அறிமுகம் செலுத்துள்ளனர்.iorpaarththaarபோலீசார், நன்கு விசாரணை செய்து தண்டனை வாங்கி தரவேண்டும், , இவர்களை ஊடுருவவிட்ட அரசியல் வாதிகளையும் உள்ளே தள்ள வேண்டும். இதைத்தான் எதிர்பார்த்தார் ஸ்டாலின். இன்னும் ரெண்டு மாதத்தில் ஆட்சிமாற்றம் வரும் என்றாரே, அது இது தானோ. 1967 போன்று மாணவர்களை துாண்டி விட்டு செய்யப்படும் ஆட்சி மாற்றமா? மக்கள் தீ முல்லை காவை குப்பையில் வீசிவிட்டனர். ஆதலால் குறுக்கு வழியை தேடு கின்றனர் ஆட்சிக்கு வர.

  • PRABAKARAN - ABU DHABI,ஐக்கிய அரபு நாடுகள்

    நல்ல திரைக்கதை , வசனம் , இயக்கம் தினமலர் சினிமா

  • mindum vasantham - madurai,இந்தியா

    இன்னிக்கு ஸ்டாலின் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டார் அந்த படத்தை போடுங்கள்.அவர் செயலில் நேர்த்தி கருப்பு தினம் இல்லை republic டே

  • A. Sivakumar. - Chennai,இந்தியா

    அறவழியில் அருமையாகப் போய்க்கொண்டிருந்த இந்தப் போராட்டம், ரயில் மறியல், பீட்டாவின் அமைப்பில் உள்ள தனிநபர்களை டார்கெட் செய்தது மற்றும் டார்ச்சர் செய்யத் துவங்கியது, தனிநாடு கோஷம், தனிக்கொடி, மற்றும் அரசியல் தலைவர்களை நாகரிகமின்றி விமர்சித்தது, தேசியக் கொடியை அவமதித்தது என்றெல்லாம் தடம் மாறி, கடைசியில் பெட்ரோல் கேன் எடுத்து வரும் வரைக்கும் போனதுக்கு, தீவிரவாத எண்ணங்களைக் கொண்ட தனி நபர்களையும், அமைப்புக்களையும் உள்ளே விட்டதுதான். எது சரி எது தப்புன்னு பசங்க இப்போ நல்லாத் தெரிஞ்சிருப்பாங்க. காவல்துறை எச்சரித்திருப்பதுகூட இந்தப் போராட்டத்தின் மூலம் கிடைத்த புதிய நண்பர்களைப் பத்தி மட்டுமே. உங்களோட பழைய கட்டமைப்பை இன்னும் மேம்படுத்தி, அடுத்து வரும் மாற்றங்களை ஏற்படுத்தி சாதிச்சுக் காட்டுவீங்க என்று நம்பறோம் உங்களை.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    சூழ்நிலைகளை புரிந்து கொள்ளும் திறனை அதிகம் போதிக்க வேண்டும் மாணவர்களுக்கு, குறிப்பாக கல்லூரி மாணவிகளுக்கு. நம் கல்லூரி பாடத்திட்டத்தில் CASE STUDIES இல்லை என்பது வேதனை.

  • zinnah - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்

    தேச விரோத சக்திகள் ஊடுருவிட்டது அதனாலதான் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தார்கள் என சொல்வது நம்பமுடியவில்லை, காரணம் பிரிவினைவாதம் செய்ய தூண்டுபவர்களை இனம் கண்டு நடவடிக்கை எடுக்கவேண்டியதுதானே ஏன் தாமதம் , யார் உங்களை தடுப்பது , அவர்கள் எந்த மதத்தை சேர்த்தவரானாலும் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை, இங்கு கருது எழுதும் காவி சிந்தனை உள்ளவர்களை பார்த்து கேட்கிறேன் , கலவரத்தின் ஊற்றுக்கண் பிஜேபி RSS வகைறாதான் எடுத்துக்காட்டு குஜராத் கலவரம் , சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, கோவை கலவரம் , தென்காசி பிஜேபி ஆபீஸ் குண்டு வெடிப்பு, இவை அனைத்தும் இவர்களின் காரியமே இதை யாராலும் மறுக்கமுடியாது , போராட்டத்தை ஒடுக்க முக்கிய காரணம் மோடி அரசே , எதை வைத்து சொல்கிறேன் என்றால் பண மதிப்பு நடவடியால் மொத்த தமிழ்நாட்டின் மக்களின் நம்பிக்கையே இழந்துவிட்டார் ,அதன் பிறகு காவேரி பிரச்சனை , சமஸ்கிருதம் திணிப்பு என அனைத்திலும் தமிழ் மக்களிடத்தில் செல்வாக்கை இழந்துவிட்டார். இதன் உச்சக்கட்டம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மோடியின் எதிர்ப்பு அலை மக்களிடம் எரிமலையா வெடித்து சிதறியது, இதில் உஷாரான மத்திய அரசு, போராட்டத்தை எல்லை விரித்துக்கொண்டேபோனால் நாம் வாங்கும் நூறு ஓட்டும் குறைந்துவிடும் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிப்பதும் கேள்விக்குறியாகிவிடும் அதன் விளைவு காவல்துறையின் சில கறுப்பாடுகளை வைத்துக்கொண்டு தடியடி பிரயோகம் . இது முழுக்க முழுக்க தினமலரின் கட்டுக்கதை .

  • மனிதன் - தஞ்சை,இந்தியா

    தமிழகம் கலவரம் இல்லாத பூமியா இருக்கணும்னா காவல்துறை இல்லாம இருக்கணும்.... சிறப்பா இருக்கும்...இதுக்கும் நாலுபேரு இருப்பான் இது தப்புனு சொல்ல

  • மனிதன் - தஞ்சை,இந்தியா

    அடப்பாவிங்களா... இங்க சொல்லி இருக்குற கருத்துக்கு ரேட்டிங் போட்றாங்களா இல்ல பெயரை பாத்து போட்றாங்களானு தெரியலடா ஓரவஞ்சனையாவே ரேட்டிங் போட்ருக்கானுங்க யப்பா சாமிங்களா திரும்பவும் மனசுனா மாறுங்கடா....

  • Muthuraj Richard - Coimbatore,இந்தியா

    தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இத்தகைய திட்டங்கள் வேரறுக்கபட வேண்டும், பிரிவினை வாதிகள் கண்டெடுக்கப்பட்டு நடவடிக்கைகள் திட்டம் தீட்டும் முன் நிறுத்தப்படவேண்டும், தமிழகத்தின் ஒற்றுமைக்கு எதிராக நிற்கும் எவரையும் விடக்கூடாது, தனிப்படை, நுண்ணறிவுப்பிரிவு, காவல்துறைக்கு உட்சபட்ச அதிகாரம், பணபலம்.....மக்களிடம் விழிப்புணர்வு எது...... எது...... எது ..... எல்லாம் தேவையோ அத்தனை நடவடிக்கையும் உடனே எடுக்கப்படவேண்டும், மாணவர்களிடம் குறிப்பாக இத்தகையவர்கள் அணுகினால் உடனே அடையாளம் காட்ட அறிவுறுத்த வேண்டும், இவ்விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் - விஷமிகள் அழிக்கப்படவேண்டும் - வாழ்க தமிழகம்

  • PANNEER - chennai,இந்தியா

    இது அப்பட்டமான கட்டு கதை.......... அரசியல்வாதிகள் மற்றும் போலீசாரின் வன்முறையால் ஏற்பட்ட விளைவு.. மாணவர்களை எப்படி கையாள வேண்டும் என்ற சுய அறிவு இல்லாத மூடர்களால் ஏற்பட்ட விளைவு......சமூக விரோதிகளின் பெயரை சொல்லி மாணவர்கள் மற்றும் மக்கள் மீதும் கலவரத்தை நிகழ்த்திய அரசாங்கத்தால் ஏற்பட்ட விளைவு ............... எங்களின் உரிமை பறிக்கப்பட்டால் அரசாங்கத்தை புறக்கணிப்பதை தவிர வேறு வழி இல்லை ........2021 இல் தமிழக இளைஞர்கள் தேர்தலில் நிற்பார்கள், வெல்வார்கள் ...........

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    எங்களுக்கென்று ஒரு நாடு, எம் மக்கள், எம் வீடு. இதில் பாதிப்பு தமிழக மக்களுக்கு. தமிழகத்தை நாசம் செய்ய திட்டம். தமிழகத்தை ஏற்கனவே பிஜேபி அரசு கண்டுகொள்வது இல்லை . இந்த லட்சணத்தில் சிலர் ஒன்று கூடி செய்யும் சதி , தமிழக மக்களின் எதிர்காலத்தையே கெடுக்கும். .

  • தரணிகுமரன் -

    அய்யா போதும் சில காவலர்கள் செய்த தவறை மறைக்க இப்படி எல்லாம் பேசக்கூடாது ... இது மக்கள் புரட்சி, வெற்றியும் கிட்டியது... வாழ்க பாரதம் .... வாழ்க தமிழ் ...

  • jay - toronto,கனடா

    ஹவாலா பணம் , ரூபாய் நோட்டு வாபஸால் இழந்தவர்கள் , இதுவே தருணம் என்று ,,

  • Mohan Nadar - Mumbai,இந்தியா

    எதுவரைக்கும் பிஜேபி யை எதிர்பவர்களுக்குத்தான் இந்த பட்டம் கொடுக்கப்பட்டது. இப்ப தமிழ் விரும்பிகளுக்கும் ... இன்னும் கொஞ்ச நாளில் 90 % இந்தியர்களையும் அந்த பட்டியலில் சேர்க்க வேண்டியதான்

  • jay - toronto,கனடா

    சீமான் ,,, அமீர்

  • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

    கண்டிக்கத்தக்கே செயல்.. அனுமதிக்கக்கூடாது. வந்தே மாதரம் . ஜெய் ஹிந்தி.

  • makkal neethi - TVL,இந்தியா

    மக்கள் முட்டாள்கள் இல்லை ....அரசியல் வாதிகள் நினைப்பதுபோல் ...மக்கள் முட்டாளாக்கப் படுகிறார்கள் ..விவசாயத்தை அழித்து இந்திய பொருளாதாரம் சீரழிக்கப்படுகிறது ..சோற்றுக்கு வெளிநாட்டு உணவுப்பொருளை நம்பி அடிமையாகும் காலம் வந்துகொண்டே இருக்கிறது.....8 ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவிலிருந்த மக்களும் சுவிஸ் நெதெர்லான்ஸ் போன்ற இன்றய ஐரோப்பிய மக்களும் அடாவடி செய்து அடுத்தவர்களின் உடமைகளை தன்னாக்கிக் கொண்டு உயிர் வாழ்ந்தவர்கள் பின்னர் மொத்த ஐரோப்பா வரைக்கும் ஆக்கிரமித்து குடி பெயர்ந்தவர்கள்தான் இன்றய நாகரிக கூட்டமான வெள்ளைக்காரர்கள்..அவர்களது அன்றயே குணாதியேஷன்களை நம்மிடம் நிலை நாட்டத்தான் ஒவ்வொரு நாட்டிலும் அங்குள்ளே இயற்க்கை வளத்தை அழித்து அடிமையாக்கி நம் மக்களையும் கொள்ளைக்கும்பலாக ஆக்கவே இந்த திட்டம்..விரைவில் அடுத்தவனிடம் அடித்து பிடுங்கி உயிர் வாழும் 8 ஆம் நூற்றாண்டு வெள்ளைக்கார கலாச்சராம் நம் நாட்டிலும் அரங்கேறிவிடுமோ என்று பயமாக உள்ளது

  • krishna - cbe,இந்தியா

    என்ன நடந்தாலும் மாணவர்களின் ஒற்றுமை குலைந்து விட கூடாது.நியாயமான எந்த ஒரு மக்கள் பிரச்சினையிலும் மாணவர்களும், மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.இந்த சிறு சலசலப்பிற்கு எல்லாம் அஞ்சி ஒதுக்கிவிட கூடாது.இன்னொரு கோணத்திலும் இந்த கலவரம் ஏற்பட காரணம் உள்ளது.அரசியல் வாதிகளுக்கு மாணவர்களின் ஒற்றுமை பயத்தை ஏற்படுத்தி இருக்க கூடும்.அதனால் கூட இந்த கலவரம் ஏற்பட்டு இருக்கலாம்.

  • JAY JAY - CHENNAI,இந்தியா

    தினமலரின் இந்த கட்டுரை ஒரு MUCH NEEDED கட்டுரை தான்... முதலிலேயே எச்சரிக்கை செய்வது நல்லது... பிரிவினைவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்றலாகாது என்றாலும் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடக்க கூடாது... காவேரி பிரச்சினை, நதிநீர் பங்கீடு, NEET தேர்வுகள் , சமஸ்கிருதம் திணிப்பு ஆகிய பிரச்சினைகளில் மத்திய அரசு இனிவரும் காலங்களில் அதிகம் விமர்சனத்தை சந்திக்க நேரிடும்... பிரிவினைவாதம் பேசுகிறவர்களுக்கு, இந்த பிரச்சினைகள் எல்லாம் அல்வா சாப்பிடுவது போன்றது... உச்சநீதி மன்றத்தின் , தீர்ப்பான NEET ஐ அமுல்படுத்துவதில் உறுதியாக இருக்கும் மத்திய அரசு, அதே உச்சநீதிமன்றம் அமைக்க சொன்ன காவேரி ஆணையம் அமைப்பதில் சுணக்கம் காட்டுவதும் , காவேரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக காங் அரசை வற்புறுத்தாதும், தேசியக்கட்சிகளின் முகத்திரையை கிழிப்பதால், தேசியம் தமிழகத்தில் பேசமுடியாது என்ற என்னத்துக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல....

  • Rajathiraja - Coimbatore,இந்தியா

    இன்று தனி தமிழ்நாடு என்பான், நாளை தனி சென்னை, தனி சைதாப்பேட்டை, தனி சித்தரிப்பேட்டை என்பான். மாணவர்கள் இதுபோன்று முட்டாள் முழக்கங்களிடம் இருந்து ஒதுங்கிநிற்க வேண்டும். அரசும் மீடியாவை பயன்படுத்தி மாணவர்களை காப்பாற்றவேண்டும். JAIHIND .

  • krishna - cbe,இந்தியா

    ஒரு குறிப்பிட்ட மத வெறி கும்பல் மாணவர்கள் அற போராட்டத்தில் ஊடுருவி குழப்பத்தை விளைவித்ததுதான் கலவரம் நடக்க காரணம் என்பது உண்மை. அதே போல் ஒரு சில காவல் துறை ஆட்களும் குழப்பம் நடக்க காரணம்.இன்னொரு முக்கியமான தமிழா கட்சியும் இதற்கு காரணம் என்கிறார்கள்.

  • Selvarajan Singaram - Cuddalore,இந்தியா

    // இந்த இயக்கங்களுடன் அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வரும் நக்சல் பாரி, மாவோயிஸ்ட், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புகளின் ஆதரவாளர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் அல்லாது, மாணவர்களை மூளைச்சலவை செய்யும், பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களும், மாணவர்கள் போர்வையில், கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்துள்ளனர்.// இவ்வளவு தூரம் விலாவாரியா லிஸ்ட் போட்டு அனுப்பும் மத்திய உளவுத்துறை அவர்களை உடனே அப்புறப்படுத்தி அரெஸ்ட் செய்யுங்கள் என்று கூற தயங்கியது ஏன் ... ? விஞ்ஞான உலகத்தில் அவர்களை எளிதாத அடையாளம் காட்டி ஊடகங்களுக்கு தெரிவிக்காதது ஏன் ... ? பல கேள்விகள் .. கற்பனையா எழுதுவதற்கும் ஒரு திறமை வேண்டுமல்லவா ...?

  • Naveen Kumar - Penang,மலேஷியா

    தனி தமிழ்நாடு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை, தமிழ்நாட்டிற்கு தனி கொடி என்பதில் தவறும் இல்லை நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கும் கேரளத்திற்கும் தனி கொடி உள்ளது..

  • Mohan Nadar - Mumbai,இந்தியா

    தமிழ்நாடு எப்பவும் தன் நியாய மான உரிமைக்காக சண்டை போடும் நிலையில் வைக்கும் மத்திய அரசு சிந்திக்கவேண்டும்.. மக்களை போராட்டக்களத்தில் வைப்பதே அரசு தான். காவேரி மேலாண்மை வாரியத்தை தடுத்து விவசாயிகளை கொல்வது யார்??

  • Amanullah - Riyadh,சவுதி அரேபியா

    அருமையான திரைக்கதையாக இருக்கிறதே...

  • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

    மீனவ குடியிருப்புகளில் ரசாயன பொடியை தூவி தீ வைத்தது காவல் துறை, அந்த பகுதி மக்களே சொல்கிறார்கள் நாளை தொலைக்காட்சி செய்தியை போய் பாருங்கள் இது ஒரு சமூக விரோதிகளின் செயல் என்று வரும், மக்களும் அதை நம்பித்தான் ஆக வேண்டும். காரணத்தை உருவாக்கி கலவரம் செய்வது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கைவந்த கலை. அதிகாரத்தில் உள்ளவர்களிடம் நேர்மை இல்லையென்றால் அதன் கீழ் செயல்படும் காவல்துறை மற்றும் நீதித்துறை நேர்மையின் பக்கம் நிற்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம்...............

  • JOY - Chennai,இந்தியா

    ஆதாரம் இல்லாமல் ஒரு செய்தியை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது..அமைதியான மற்றும் அன்பை போதிக்கும் ஒரு மதத்தை நீங்கள் வேண்டும் என்றே பலித்திருப்பது கண்டனத்துக்குரியது .

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    பிரிவினைவாதம் பேசும் கூட்டத்தை கருணை காட்டாமல் துடைத்து ஒழிக்கவேண்டும்..

  • சிவ.இளங்கோவன் . - Kuwait ,குவைத்

    நண்பர்களே தினமலர் கூறுவதில் 50 சதவிகிதம் நான் உடன்படுகிறேன் ...ஏனென்றால் ஒரு வாட்ஸ் அப் குழுவில் ஒருமதத்தை சார்ந்த நண்பர் ...அனுப்பியிருந்த செய்தியை பதிவிடுகிறேன் ...''நண்பர்களே நாம் மாட்டுக்கறியை உணவாக உண்பவர்கள் மட்டுமே அதை வணங்குவது நாம் மார்க்கத்தில் இல்லை ...எனவே நீங்கள் கூட்டத்தில் சேர்ந்து இந்த பைத்தியக்காரர்களுடன் போராடுவதுபோல மோடி (காவிகளுக்கு ) எதிரான வாசகங்களையும் எடுத்துக்கொண்டு கூட்டத்தில் புகுந்து அங்கேயே தனது மாதத்திற்கான சிறப்பு prayarkalum செய்யுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தான் '' இதுதான் அந்த வாட்ஸ் up தகவல் ...அவர்களை இனம் கண்டுகொள்ளாத போலீசார் உண்மையாக போராடியவர்களையும் அடித்து துவம்சம் செய்தது மன்னிக்க முடியாத ஒன்று ...நாம் எதற்காக வந்தோம் என்று போராடியிருந்தால் நமக்கு இப்படி ஒரு துன்பமும் கயவனின் கசையடியும் கிடைத்திருக்காது ...

  • பிரசன்னா - Salem,இந்தியா

    தமிழ் நாடு ஒரு கண், இந்தியா ஒரு கண். இரண்டு கண்களும் வேண்டும். வாழ்க பாரதம், வளர்க தமிழ்.

  • John I - Yanbu,சவுதி அரேபியா

    தினமலருக்கு மக்களின் மறதிமேல் அபார நம்பிக்கை. நாளாக ஆக பழைய மறந்துபோவது இயற்கையே, இல்லாவிட்டால் வாழ்வில் ஏற்படும் கசப்பான சம்பவங்களை மறப்பதென்பது இயலாத காரியம். சரியாக 15 வருடங்களுக்குமுன் வங்காள விரிகுடாவில் சுடப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளாலே சுடப்பட்டனர். இன்றும் அவர்களாலே சுடப்படுகின்றனர். 2010 முதல் கூடங்குளம் அணுவுலைக்கெதிராய் போராடின போராட்டக்காரர்களுக்கு கோடிக்கனக்கான பணம் வெளிநாட்டினர் கொடுத்தனர், இன்றும் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்றுவரை ஒரு பைசாவுக்கும் எதிராக ஒரு வழக்கேனும் காங் மற்றும் பிஜேபி மத்திய அரசுகள் தொடுக்கவில்லை. இந்த செய்தியும் அந்த வரிசையிலே சேரும். ஜெய்ஹிந்த்.

  • jayapandian - Kovai,இந்தியா

    வர வர தினமலர் ரொம்போ தான் ஆளும் கட்சிகளுக்கு அடிமையாகி விட்டதைத்தான் காட்டுகிறது

  • Balu - Ernakulam,இந்தியா

    தமிழன் கு எதிரி வேற எங்கும் தேட வேண்டாம் .. தமிழனே தான் .. அதுவும் உள்ளுக்குள்ளேயே அடிச்சுக்குவான் ..

  • Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா

    தினமலர் இப்படி உயிரில்லாத அறிக்கை விடுகிஞ்சதே போலீஸ் இப்படி புப்ளிக் ஆட்டோ பைக்கே வீடுகளை தீ யெட்டு கொளுத்தினார்களே உலகமே பார்த்து வெஃகி தலைகுனிகிறது ,

  • kulandhaikannan -

    It is the handiwork of biryani and pizza thugs

  • nadodi - Kuwait,குவைத்

    100% உண்மை

  • மனிதன் - தஞ்சை,இந்தியா

    காவல் தீவிரவாதிகள் நடத்திய கலவரத்துக்கு பழிபோடுவதற்கு ஆதாரம் தயார் செய்துகொண்டு இருக்கிறார்கள் வழக்கு நீதிமன்றத்துக்கு வரும்பொழுது இந்த கட்டுரையை மிக முக்கிய ஆதாரமா காவல்துறை கொண்டுவருவார்கள்....

  • குத்தாலம்.அ.ஜாகிர் உசேன். (ராஜா) - AJMAN,ஐக்கிய அரபு நாடுகள்

    எப்புடிடா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க....இங்க உள்ள தமிழன் சமூக விரோதின்னு டெல்லியிலிருந்து ரிப்போட்டு வருது. மதவாதத்தை உள்ளே விடாம இருக்கோம் பாரு நீ இன்னமும் சொல்லுவா இதுக்கு மேலேயும் சொல்லுவ.. இந்த கதை எழுதுனவனனுக்கு பத்ம பூஷன் விருது .பரிந்துரை செய்யலாம் .இதுக்குதான் மாணவரா இருந்தாலும் அரசியல் சப்போர்ட் வேணும்க்க்கறது..

  • மனிதன் - தஞ்சை,இந்தியா

    இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள யாரும் மத வாதியோ, தீவிரவாதியா இல்லை, இதில் நீங்கள் குறிப்பிடாத அரசியல் வாதிகளும் அவர்களின் அரசாங்க அடியாட்களும் தான் தீயவாதிகள்.....

  • abu lukmaan - trichy,இந்தியா

    மாணவர்களை தடி அடி நடத்தி கலைத்ததிற்கு பதில் சுனாமி எச்சரிக்கை விட்டு இருந்தால் எல்லோருமே கடற்கரையை விட்டு தானாக ஓடி இருப்பார்கள்.போலீஸ்க்கும் , அரசுக்கும் நல்ல பெயராவது மிஞ்சி இருக்கும் . மக்கள் நலன் காக்க பொய் சொல்லுவதில் தவறு இல்லை . போலீஸ் உங்கள் நண்பன் என்பதை போலீஸ் உங்கள் எதிரி ஆக்கி விட்டனர் . போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் செர்டிபிகேட் சரி பார்க்க பட வேண்டும் .

  • Sampath Kumar - chennai,இந்தியா

    குஜராத்தி மீனவனை பாகிஸ்தான் காரன் புடிச்சுட்டு பூனா இந்தியா மீனவன் கடத்தல் என்று செய்தி போடுகிறீர்கள் அதை சமயம் தமிழ் மீனவர்கள் இலங்கை பிடித்தால் தமிழ் மீனவர்கள் கைது என்று செய்தி போடுகிறீரிகள் இந்த பிரிவினை சொல் எதற்கு ? ஏன் ? அப்புறம் நாட்டில் பிரிவினை வியதிகள் ஏன் வராது ???

  • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

    மாநில அரசின் உளவுத்துறையுடைய செயல்பாட்டை சீர்செய்ய துணிவு வேண்டும்,, கருணா ஜெ போன்றவர்கள் அதை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும்,, கட்சியின் கட்டுப்பாட்டை உறுதி செய்யவும் பயன்படுத்தி,, அரசியல் துணை அமைப்பாகவே பலவருடங்களாக இயக்கிவந்துள்ளனர்.. போராட்டத்தை முறியடிக்க உளவுத்துறை செயல்பாடு அவசியம்.. மத்திய அரசின் ரெட்அலர்ட் என்பது மாநிலம் தாண்டிய சட்டவிரோத செயல்களுக்கு மட்டுமே தேவைப்படுபவை... கட்டுரை உறுதிசெய்யப்படாத தகவல்கள் அடிப்படையில் எழுதியிருந்தாலும்,, தினமலரின் விருப்பத்தை விளக்கியிருந்தாலும் எச்சரிக்கையை ஆராய்வது அரசின் கடமை என்பதில் சந்தேகமில்லை...

  • பக்கிரி - tamilnadu,இந்தியா

    தமிழ்நாட்டில் ஜல்லி கட்டு பெயரில் நடந்த தேச விரோதிகளை நார் நாராக கிழிகிறது இந்த கட்டுரை.. நீங்கள் மறைமுகமாக குறிப்பிட்டாலும் இதை செய்த சீமான் அமீர் உட்பட தேச விரோதிகளை மக்களுக்கு தெரியும்.. SALUTE தினமலர்.

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

    நடந்த உண்மைகள் இவைகள் தான். ஒரு கலாசார அடையாளமாக இருந்த ஜல்லிக்கட்டு என்று ஒரு நல்ல எண்ணத்திற்க்காக கூடியிருந்த தமிழக இளைஞர்களை அப்படியே சிறிது சிறிதாக திசைதிருப்பி அவர்களிடம் 'மோடி தான் ஜல்லிக்கட்டு தடை மற்றும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்' என்று நாள் முழுக்க கோயாபல்ஸ் கதைகள் சொல்லி அதையே திரும்ப திரும்ப சொல்லி அங்கு கூடி இருந்த மக்களை இந்திய இறையாண்மைக்கு எதிராக மாற்றி திருப்பி, தமிழகத்தின் முதலமைச்சர் பிரதமருக்கு இணக்கமாக இருப்பதால் அவரையும் எதிரியாக சித்தரித்து தனி தமிழ் நாடு ஆதரவும், மோடிக்கு எதிராக அத்தனை இளைஞர்களும் மக்களும் அணி திரள செய்ய வேண்டும் என்று ஒரு பெரும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. மோடி அரசின் அதிரடி நடவடிக்கையால் தடை செய்யப்பட்டு பணவரத்தை இழந்துள்ள தேசவிரோத NGO களும், இந்தியாவில் எப்படியாவது கலவரத்தை உருவாக்க வேண்டும் என்று பெட்ரோல் பணத்தில் இயங்கும் மூர்க்க பயங்கரவாத இயக்கங்களும், இவர்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவாகவும், மோடிக்கு எதிராகவும் தனி தமிழ்நாடு கேட்க்கும் திராவிட கழகம் மற்றும் அதன் அடிப்பொடி தனி நபர் இயக்கங்களும், மத்திய அரசின் அதிரடிகளால் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்ட மாவோஸ்டுகளும், மத்திய அரசின் கள்ளப்பண மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட கொள்ளைக்காரர்களும் தான் இந்த போராட்டத்திற்கு பொருளுதவி செய்தவர்கள். இவர்களின் பொருளுதவியினால் உணவையும். வசதிகளையும், தண்ணீரையும் பெற்று தமிழக இளைஞர்களும், மக்களும் ஒரு பெரும் தவறை செய்திருக்கிறார்கள். யாரை எதிர்த்து நிற்கவேண்டுமோ அவர்களிடமிருந்தே தங்களை அறியாமல் உதவிகளை பெற்று தங்களுக்கு தாங்களே அறியாமல் தவறு இளைத்து இருக்கிறார்கள். நடந்தவைகள் நடந்ததாக இருக்கட்டும். இனியாவது கவனமாக - எச்சரிக்கையாக இருங்கள். உங்களின் உணர்ச்சிகளை அப்படியே மோடி மீதும் மத்திய அரசின் மீது திருப்பி விட்டு நாட்டில் கலவரமும், முன்னேற்றத்திற்கு தடை செய்வதும் தான் இந்த இயக்கங்கள் மற்றும் இந்த தேசத்துரோகிகள் நோக்கம். தண்ணீர், பிரியாணி, கைபிரசுரம் , Whatsapp , facebook என்று பல்வேறு உருவங்களில் பல்வேறு இயங்கங்களின் பெயரில் வரும் இந்த நாசகார சக்திகளின் வலையில் இனியாவது விழுந்து விடாமல் இருங்கள். பிரதமருக்கு எதிராக, நாட்டிற்கு எதிராக, இன உணர்ச்சிகளை தூண்டி வரும் செய்திகளை மற்றும் தகவல்களை மத்திய புலனாய்வுக்கு அனுப்புங்கள். நாட்டை காப்பாற்றும் பொறுப்பு ஒவ்வொரு இளைஞர்களுக்கும் தனி மனிதனுக்கும் இருக்கிறது.

  • Palanisamy Murugesan - tiruppur,இந்தியா

    கதை வசனம் டிரெக்ஷன் அருமை - தினமலர்

  • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

    அது எப்படிங்க? ஒரு விஷயத்தின் கருவைப்பற்றி பேசினால் அது சமூக விரோதியாக முடியும்? இதில் யாரெல்லாம் எங்கெங்கே இருந்தெல்லாம் அழுத்தமும் அச்சுறுத்தலும் வந்ததால் அவர்கள் எல்லாருமே திசை மாறி மற்றவர்களையும் குழப்பி உள்ளனர்.போராட்டம் ஜல்லிக்கட்டை மட்டுமே பேசணும் ன்னு சொல்றதே கேலிக்கூத்து அதன் கரு விவசாயம் விவசாயி அதற்கான அரசின் கொள்கையில் மாற்றம் வேண்டும் என்பதை சொன்னவனெல்லாம் தேச விரோதிகளா?சரி மத்த விசங்களுக்கு இந்த மாசம்,அடுத்த விஷயங்களுக்கு இன்னொரு மாசம் ன்னு time போட்டா போராட முடியும்? மக்களுக்கான காலம் கிடைச்சது எல்லா மன குரல்களையும் கொட்டி தீர்த்தான்.அதிலே தவறு இருக்கும் பட்சத்தில் அவர்களை மட்டும் இனம் கண்டு திருத்தலாம்/தண்டிக்கலாம் அதுக்காக முழு போராட்டத்தையும் வேற கலர் கொண்டு மொளுகாதீங்க.அப்புறம் coke pesi பத்தி கொலை நடுக்கத்தில் ஆதி சொன்னது ரசிக்கும் படியாவே இல்லை அதிலே அவர் உண்மை முகம் வெளியே வந்திருச்சு,இவரும் ஒரு சினிமா காரனே என்பதை வெளிக்கொணர்ந்தது.சும்மா மத்தவங்களை குறை சொல்றதை விட்டுட்டு அரசு தன் அதோக/அடக்குமுறை போக்கை மாத்திக்கணும்.

  • gmk1959 - chennai,இந்தியா

    இந்த கட்டுரைக்கு எதிராக கருத்து போடும் கருங்காலிகளையும் இந்த லிஸ்ட்டில் முதலில் சேர்க்க வேண்டும்

  • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    இப்பிடி பட்ட கேவலமான எழுத்தாளர்களையும் ,பத்திரிகையாளர்களையும் ஊக்குவிக்காதீர்கள் தினமலர் அவர்களே.....

  • sasi - New York,யூ.எஸ்.ஏ

    இந்தியா வே பேட்டா கையில் இருக்கிறது இதில் தமிழகம் மட்டும் பிரிந்து என்ன ஆஹா போகிறது? எந்த அரசியல்வாத்தியாவது 'பீட்டா ' வை எதிர்த்து பேசி இருக்கிறானா?

  • selvaraja -

    it is nice story d by whom uraikal please give correct news and cook up stories and support any nonsense news and make split in people in Tamil nadu may be there are people like H Raja every where please avoid this kind of people

  • mindum vasantham - madurai,இந்தியா

    தாது மணல் மாபியா என்பது நியூஸ் 7 டிவி யின் வுணர் தான் ,இவர் மீது விஜயகாந்த் பாய்ந்த போது சாதி ரீதியாக தாக்க பட்டார்

  • mindum vasantham - madurai,இந்தியா

    விடுதலை புலிக்கு உண்மையிலே உதவிய வைகோவை காமெடி பொருள் ஆக்கி , பிரபாகரனையே சந்திக்காத சீமானை தூக்கி பிடிக்கும் போதே தெரியவில்லையா யார் பின்னாடி இருக்காங்க என்று ?

  • Dr. S. மணிவண்ணன் - Incheon,தென் கொரியா

    மிக மிக எச்சரிக்கையோடு வேண்டியவர்களுக்கு ஆதரவான கருத்துருவாக்கத்தோடு எழுதப்பட்டிருக்கும் கதை. எங்குதான் பயிற்சி பெற்றனரோ

  • antony - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    நிஜமா கேவலமான ஒரு அறிக்கை .... அது என்ன தென் மாவட்டத்துக்கு மாத்தணும்? அங்க இருக்கவங்க மனுஷன் இல்லையா ?

  • karupanasamy - chennai,இந்தியா

    சைமன் போன்ற அந்தர் பல்டி அயோக்கிரகள் திராவிடர் கழகத்தின் தயாரிப்புகள். கடவுளை நம்பிக்கை இல்லையாம் முருகன் கடவுளாம். மக்கள் நாட்டு நாய் மட்டுமே வளர்க்க வேண்டுமாம் இவர் ஜெர்மன் ஷெப்பர்ட், அல்சேஷன், லாப்ரடர் வகை நாய்களை வளர்ப்பாராம். பாவம் புலம் பெயர்ந்த ஈழத்து தமிழர்கள் அவர்களிடமிருந்து நிதியுதவி பெற்று இஸுஸு மியூ எக்ஸ் எஸ் யு வீ யில் அன்னாடங் காய்ச்சிகளை ஏமாற்றி கிடைக்கும் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்துகிறான்.

  • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    தீவிர வாதம், மத வாதம், பிரிவினைவாதம் இவைகள் வேரோடு அறுக்க பட வேண்டும் என்பதில் தமிழக மக்களுக்கும் குறிப்பாக மாணவர்களுக்கும் எந்த வித மாற்று கருத்துக்களும் இல்லை ஆனாலும் அவைகள் எப்போது தலை தூக்குகின்றன என்பதை அரசு நன்கு கவனிக்க வேண்டும் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும்போது (காவேரி பிரச்னை, முல்லை பெரியார், ஜல்லிக்கட்டு போன்ற பல) அவர்கள் தாம் இந்த சமுதாயத்திலிருந்து தனிமை படுத்த படுவதாக உணர தோண்டும்போது மேற்குறிப்பிட்ட தீய சக்திகள் தலை தூக்கி தன ஆதிக்கம் செய்ய முயரிசிக்கின்றன எனவே சட்டத்தின் படியும் தர்மத்தின் படியும் ஆட்சி செய்வோம் என்று உறுதி எடுத்துக்கொண்ட மத்திய மாநில அரசுகள் தங்கள் கடமையை ஏன் செய்வதில்லை பழியை ஏன் அடுத்தவர்கள் மீது போடுகிறார்கள்

  • Uthiran - chennai,இந்தியா

    இதையும் கதை என்று சொல்லும் வலைதள போராளிகளை பார்த்து பரிதாபப்படத்தான் முடியும்..

  • muthuselvan -

    தமிழுக்கு போராடுறேன் , தமிழர்களுக்கு போராடுறேன் என்று சொல்லும் அமைப்புகள் சில தேச துரோக அமைப்புகளாகவே செயல்படுகின்றன . அதே போல் மூன்று சினிமா இயக்குனர்கள் சினிமாவில் சம்பாதிப்பதைவிட தமிழர் என்று பேசியும் நடித்தும் நிரைய கல்லா கட்டத் துவங்கியவுடன் சினிமா தொழிலே வேண்டாம் . இதுதான் பெரிய தொழில் என அரசியல் செய்யவும் பிரிவினைவாதம் பேசினால் வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து பணம் வரும் என திட்டமிட்டு தங்களை பெரிய புரட்சியாளர்கள் போல காட்டிக்கொண்டு இளைஞர்களையும் மக்களையும் ஏமாற்றி வருகின்றனர் . அந்த தேச துரோகிகளை அடித்து விரட்டவேண்டியது இளைஞர்கள் மற்றும் அரசின் கடமை ஆகும் ஆனால் தமிழ் தமிழ் என்று தூண்டியவுடன் அவர்களை சிலர் நம்பிவிடுகின்றனர். தமிழ் தமிழன் என்று பேசும் எந்த அமைப்பையும் தயவுசெய்து நம்பாதீர்கள் . அவர்களின் தமிழ் பேச்சுக்கு பின்னால் தனிநாடு என்ற தேச விரோத விஷவித்து இருக்கும் . ஒற்றுமையே பலம் . தமிழன் நாம் என்பது ஒரு கண்ணென்றால், இந்தியன் என்பது இன்னொரு கண் . இனியாவது போராட்டங்களை முன் எடுக்கும்போது தமிழனாக மட்டும் முன்னெடுக்காமல் இந்தியனாகவும் முன்னெடுங்கள் இளைஞர்களே!

  • ரங்கன் -

    அத்தையும் போலீஸ்காரங்கதான்பண்ணிணாங்கன்னு ஒரு வழக்கு பதிஞ்சுருங்க...

  • udayanan - Cuddalore,இந்தியா

    கதை அருமை, திரைப்படம் தயாரிக்கலாம்

  • சுரேந்தர் -

    கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்...அருமை!!!

  • R.Subramanian - Chennai,இந்தியா

    இதையெல்லாம் ஆரம்ப நிலையிலேயே தடுத்து இருக்க வேண்டும் விடுதலை புலி ஆதரவாளர்களை வளர்த்து விட்டு இப்போது இந்த நிலையை கொண்டு வந்து இருக்கிறார்கள், தவறு ஆட்சியாளர்கள் மீது இருக்கிறது.

  • balakrishnan - coimbatore,இந்தியா

    இதெல்லாம் திட்டமிட்டு காவல்துறை செய்யும் விஷம பிரச்சாரம் தான், அப்படி இது உண்மை என்றால், ஏன் அவர்களை இத்தனை நாட்களாக விட்டு வைத்தார்கள், மேலும் தீவிரவாத குழுக்களை பிடிக்காமல் மாணவர்களை அடித்து நொறுக்கியது ஏன், தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கிறார்கள் என்றால் அவர்கள் யார், தீவிரவாதிகள் என்று கண்டுபிடிக்க தெரிந்த காவல் துறையினருக்கு அவர்களை பிடித்து சட்டத்தின் முன் ஏன் நிறுத்தவில்லை, அந்த குழுக்களின் பெயரை ஏன் சொல்லவில்லை, இதெல்லாம் திசை திருப்பும் செயலோ என்று தான் தோன்றுகிறது

  • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    இந்த கூட்டத்தை துரத்தி விரட்ட காவல்துறைக்கு நன்றி, மீண்டும் வளராமல் பார்த்து கொள்ளவும்,

  • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    தேசத்திற்கு எதிராக செயல் படும் இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும், புலி அமைப்பின் பிரதிநிதியாக பறைசாற்றிக் கொள்பவர், உண்மையிலேயே, கிறிஸ்தவ பின்புலத்தை கொண்டவர். அவருக்கு, தமிழகத்தில் ஒரு சில கிறிஸ்தவ கல்லுாரிகள் மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள், பணத்தை வாரி இறைத்துள்ளன. இதை தவிர, மாற்று மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மீனவர்கள் அமைப்பிற்கும், சமூக விரோத கும்பல் லட்சங்களையும், கோடிகளையும் வாரி இறைத்துள்ளது. இவர்களுடன், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய, ஒரு கும்பலும் இணைந்து கொண்டது. இவர்களுக்கு, தென் மாவட்டத்தில் உள்ள, தாது மணல் மாபியா கும்பல் நிதியுதவி அளித்துள்ளது. இந்த கும்பலின் பின்னணியில், தமிழகத்தில் அதிகார மையமாக விளங்கும், ஒரு நபரும் இணைந்துள்ளார். அவர், பிரதமர் மற்றும் முதல்வர், பன்னீர்செல்வத்திற்கு எதிராக, மாணவர்களை திசை திருப்பி வருகிறார். இந்த அமைப்புகளின் தலைவர்கள், களத்தில் இறங்காமல், அவர்களது இயக்கத்தில் உள்ள இளைஞர்களை களத்தில் இறக்கி, மாணவர்களுடன் இணைத்துள்ளனர். இவர்கள் தான், தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக, பல்வேறு பிரசாரங்களை செய்து வருகின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement