Advertisement

ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடிப்பேன் - சொல்கிறார் இசையமைப்பாளர் அரோல் கொரேலி

சிறுவயது முதலே வயலின் இசையில் ஆர்வம் கொண்டார். விரலின் விளிம்பில் ஒழிந்து சுண்டி இழுக்கும் இசையுடன் பல்வேறு முயற்சிகளுக்கு பின், இயக்குனர் மிஷ்கின் மூலம் சினிமா கனவு பிரபஞ்சத்தில் அறிமுகமாகி 'பசங்க 2' , 'பிசாசு' வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தார் அரோல் கொரேலி. சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட அவர் வரவேற்பு நிகழ்ச்சிக்காக போடி வந்தார்.
'தினமலர்' சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக அளித்த பேட்டி....
* பிறந்தது... வளர்ந்தது...
பூர்வீகம் தேனி மாவட்டம். பிறந்தது, வளர்ந்தது சென்னை
* சினிமா திரைப்பட இசையமைப்பாளரானது எப்படி...
பிளஸ் 2 முடித்த பின் இசைக்கல்லுாரியில் சேர முயன்ற போது, போட்டி நிறைந்த சினிமா துறையில் எப்படி வெற்றி பெற முடியும் என தந்தை கூறியதால் தடை ஏற்பட்டது. அதன்பின் சி.ஏ., படித்து 5 ஆண்டு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தேன். ஆனால் இசையை சுற்றியே நாட்டம் இருந்ததால் பல முறை இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை தேடி வாய்ப்பு கேட்டு அலைந்தேன். நீண்ட முயற்சிக்குப்பின் நண்பர்கள் மூலமாக இயக்குனர் மிஷ்கினை சந்தித்தபோது ஒரு வாய்ப்பு கொடுத்தார். கடினமாக உழைத்து ஒரு 'தீம்' மியூசிக் போட்டு கொடுத்தேன். அதை கேட்டு பாராட்டினார். அதன் தொடர்ச்சியாக பாலா தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் முதல்முதலாக 'பசங்க 2', பின்னர்'பிசாசு' படத்திற்கு இசையமைத்தேன். அதில் வெற்றி கிடைத்தது.

* அருள் முருகன் என்ற உங்கள் பெயரை 'அரோல் கொரேலி' என மாற்ற காரணம்...
சினிமா துறையில் அருள்முருகன் என்ற பெயரில் பலர் உள்ளனர். இயக்குனர் மிஷ்கினை சந்தித்தபோது, 'இத்தாலியன் வயலினிஸ்ட் கொரேலினுவை' நினைவு படுத்தும்வகையில், 'அரோல் கொரேலி' என்ற பெயரை வைத்தார். அதை நான் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன்.
* உங்கள் ரோல் மாடல் யார் ?
பெற்றோர்தான் எனக்கு முதல் ரோல் மாடல். அதன்பின் இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், எம்.எஸ்.வி., ஜான்வில்லியம்ஸ், உள்ளிட்டோரை ரோல் மாடலாக ஏற்றுக்கொண்டேன்.
* எத்தனை படங்கள் கைவசம் உள்ளன...
சவரக்கத்தி, அண்ணனுக்கு ஜே, இணையதளம், துப்பறிவாளன் படங்களில் இசையமைத்துள்ளேன்.
* எதிர்கால லட்சியம்...
இசைமூலம் ரசிகர்கள் இதயங்களில் இடம் பிடித்து, பிரபல இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்பதே லட்சியம்.

தொடர்புக்கு: arrolcorelligmail.com
Advertisement

வாசகர் கருத்து (1)

  • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

    என்னங்க பெயரை பார்த்தாலே குரல்வளையை நெறிக்கிறமாதிரி இருக்கே . வேறு நல்ல ,அர்த்தமுள்ள தமிழ் பெயர் கிடைக்க வில்லையா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement