Advertisement

92 வயது தி.மு.க., தலைவர் கருணாநிதி சுகவீனம்: கட்சியினர் சந்திக்க வர வேண்டாம் என குடும்பத்தினர் தடை

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, 10 நாட்களாக, காய்ச்சல் மற்றும் ஒவ்வாமை காரணமாக, உடம்பில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனை டாக்டர்கள், வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
92 ஆகும் அவரை, கட்சியினர் யாரும் சந்திக்க வர வேண்டாம் என, குடும்பத்தினர் அறிவுறுத்தி யுள்ளனர்; அறிவாலயத்தில் பிற கட்சி தலைவர் களுடன், பொருளாளர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த ஓரிரு வாரமாக, கருணாநிதி, கட்சி அலுவலகமான அறிவாலயம் செல்லவில்லை. இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்த நேர் காணல் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. மூன்று தொகுதி வேட்பாளர்களும், கருணாநிதி யை சந்திக்க
விருப்பம் தெரிவித்தனர்; அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், காவிரி பிரச்னை தொடர்பாக, அறிவால யத்தில் நடந்த விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டம் மற்றும் நேற்று நடந்த, அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திலும், கருணாநிதி பங்கேற்கவில்லை. இதற்கு காரணம், அவருக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக் குறைவு தான் என்பது, இப்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:

கருணாநிதிக்கு,சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. அது தொடர்பாக, சிகிச்சை பெற்றார். அந்த மருந்தில் ஏற்பட்ட, 'அலர்ஜி' காரணமாக, கை, கால்களில் கொப்பளங்கள் உருவாகியுள்ளன.

கருணாநிதியின் குடும்ப டாக்டர் கோபால் தலைமையில், ரத்த அழுத்தம், இ.சி.ஜி., போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவரது உடல் நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை, ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு, கொப்பளங் களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோபாலபுரம் வீட்டில் உள்ள கருணாநிதியை, அவரது மகள் கனிமொழி கவனித்து வருகிறார்; கட்சி விவகாரங்களை, ஸ்டாலின் கவனித்து வருகிறார்.

யாரும் வராதீர்!தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:கருணாநிதி, வழக்கமாக உட் கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில், ஒவ்வாமை ஏற்பட்டுள் ளது; அதனால், உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவர்கள், மேலும் சில நாட்கள் அவரை ஓய்வெடுக்கு மாறு கேட்டுக் கொண்டுள்ளனர். எனவே, கட்சியினர் கருணாநிதியை காண வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (203)

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  அங்கேயும் சசிகலா இருக்கிறாரா ?

 • X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா

  பார்வையாளர்கள் மூலமாகவும் கிருமிகள் தொற்றக்கூடும். மேலும் ஒய்வு தேவை. நலம்பெற இறைவனை வேண்டுவோம்.

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  aamai

 • RAJAPPA - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  எந்த வேலைக்கு சேர்வதாயினும் உடல் தகுதி பற்றி உறுதிப்படுத்த மெடிக்கல் செக்-அப் அவசியம். கண் பார்வை குறைந்தவன் ஓட்டுநராக இருப்பது விபத்தில் முடியும். நிர்வாகத்தை மேற்பார்வை செய்யும் அளவுக்கு உடல் நலம் இல்லாதபோது ஒதுங்கிக்கொள்வது உத்தமம் அல்லவா.வீட்டில் ஓய்வு எடுக்கலாமல்லவா .

 • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

  சீக்கிரம் நல்ல விஷயங்களை சொல்லுங்க கோபால்

 • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

  இங்கு அனைவருக்கும் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன் அதிமுக ஜானகி அணி ஜெயா அணி என்று பிரிந்து காங்கிரசும் தனித்து நின்று அப்போது திமுக கம்யூனிஸ்டுகள் மற்றும் இதர சாதி மத காட்சிகள் துணையுடன் பெற்ற வாக்குகள் ஜெயா அணியை விட குறைவாக இருந்தாலும் ஜானகி அணி ,காங்கிரஸ் அணியை விட கூடுதலாக பெற்று அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தை கருணை பயன்படுத்தி 1989 ல் வெற்றி பெற்றார். ஆனால் 1991 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இணைந்த அதிமுக ,காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களில் 38 இடங்களில் அமோக வெற்றி பெற்றது .அப்போது ராஜீவ்காந்தி உயிரோடு இருந்தார். திரும்பவும் சொல்கிறேன் அப்போது ராஜீவ்காந்தி உயிரோடு இருந்தார் .ஆனால் ராஜிவ்காந்தியால் அதிமுக வெற்றி பெற்றது என்றால் வடஇந்தியாவில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது யாரால் ? ஏதோ தமிழகத்தில் ராஜீவ்காந்தி செல்வாக்கால் அதிமுக வெற்றி பெற்றது என்றால் 1980 ல் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி காங்கிரஸ் திமுக கூட்டணி புரட்சித்தலைவர் தலைமையில் இருந்த அதிமுகவிடம் தோற்றது ஏன். ? 1971 ல் புரட்சித்தலைவர் தயவால் காங்கிரஸ் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதற்கு பங்களாதேஷை மீட்க பாகிஸ்தான் போர் நடந்து வெற்றி பெற்றதால் இந்திராவின் புகழ் ,புரட்சித்தலைவரின் பிரச்சாரம் உதவி இதன் மூலம் 184 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. எப்போதும் கருணை தன சொந்த பலத்தில் வென்றதுமில்லை ஆட்சியை பிடித்ததுமில்லை. குறுக்குசால் ஒட்டி ,சில கட்சிகளை பிரித்து, அராஜகம் .அடாவடி செய்து,கள்ள வோட்டு போட்டு தான் திமுக எப்போதும் வென்றிருக்கிறது.

 • sakthivel B - Tiruppur,இந்தியா

  மகிழ்ச்சி.....

 • adalarasan - chennai,இந்தியா

  அப்படின்னா இவர் பெயரில் வெளி வந்த அறிக்கைகள் எல்லாம் டூப் தானா?[15naatkkalaaka ]? தனக்கு ஒருஞாயம் பிறருக்கு ஒரு ஞாயம் தான் இவருடைய வாழ்க்கையின் குறிக்கோள்? எதுவாக இருந்தாலும் குணமடைய, "பகுத்தறிவை" வேண்டுகிறேன்

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  கடந்த ஆகஸ்ட் ல் நடந்த குருபெயர்ச்சி கட்டுமரத்திற்கு ஓய்வை கொடுக்கும் என்று குறிப்பிட்டு இருந்தேன். அது வந்து விட்டது போல இருக்கிறது. ஹிந்துக்களை இடிப்பதையே வழக்கமாக கொண்ட ஒரு ஊழல்வாதி ஓய்வெடுப்பது தமிழகத்திற்கு நன்று.

 • Muthuraj Richard - Coimbatore,இந்தியா

  தலைவர் கலைஞர் இன்று நாட்டிற்கு கிடைத்துள்ள முதுபெரும் தலைவர், தலைமுறைகளை கண்டவர், எந்த துறையிலும் யாரும் சந்தர்ப்பம் கிடைத்தபோது பணம் பொருள் சம்பாதிக்காமல் இல்லை, கருத்து தெரிவிப்பது எல்லாருடைய உரிமை ஆனால் மரியாதையை இல்லாமல் ஒரு மாபெரும் தலைவர், வயது மூத்த அரசியல் தலைவர் என்ற மரியாதை கொடுக்க வேண்டியது எல்லாருடைய கடமை, என்ன தான் இருந்தாலும் பொது வாழ்க்கையில் நீண்ட சேவை செய்து நிறைய விமர்சனங்களுக்கும் தண்டனைகளுக்கும், கஷ்டங்களுக்கும் உட்பட்டு வாழ்ந்து காட்டியவர், இன்றும் இனியொரு தலைவரை நாடு பெறுமா என்றால் இல்லை என்பது தான் நிச்சயமான உண்மை, தன்மையோடு கருத்து சொல்லவும், அவர் செய்த நன்மைகளை கொஞ்சம் பட்டியல் இட்டு பாருங்கள் அப்போது தெரியும், அணைத்து சாலைகள், பாலங்கள்,அரசு கட்டிடங்கள், பயனுள்ள திட்டங்கள் கலைஞர் ஆட்சியில் தான் நடைமுறை படுத்த பட்டன என்பதை மறக்க கூடாது, ஆக நோய்வாய் பட்டிருக்கும் இத்தருணத்தில் அவரை தூற்றாமல் இருக்க வேண்டுகிறேன், கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டுமே, வாழ்க இன்னும் பல்லாண்டு.

 • Snake Babu - Salem,இந்தியா

  விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்.......... அரசியல் என்ற ஒன்றுக்கும் அரசியல்வாதி என்ற ஒன்றுக்கும் நல்ல விளக்கமும் நல்ல உதாரணமாவே வாழ்ந்து கொண்டிருக்கும் போது சில வார்த்தைகள் நல்லதாக, நண்பர்கள் நிறைய பேர அடுத்த பகுதியை நல்ல விளக்கமாவே சொல்லியிருக்கிறார்கள். அதில் ஒன்றிரண்டில் கருத்துவேறுபாடு இருந்தாலும் நிறைய விசயங்களில் உங்களுடன் ஒத்துப்போகிறேன். தற்போது அடையார் புற்று நோய் ஆராய்ச்சி மையத்திற்கு சென்று வருகிறேன். அதனுடைய வரலாறை கேட்டதில் கட்டுமரத்தை நினைத்து நிறையவே மரியாதையாக இருந்தது. முதன்முதலில் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக ஒரு அலுவலகம் வேண்டும் என்ற கோரிக்கை ரெட்டி டாக்டரிடம் இருந்து வந்தது. அந்த காலத்தில் யாரும் புற்றுநோய்க்கான வரப்போவதில்லை என்று மற்ற டாக்டர்கள் அனுமதிக்க வில்லை.ஆகையால் ரெட்டி ராஜினாமா செய்தார்.விஷயம் அன்றிருந்த முதல்வர் அண்ணாவுக்கு சென்றது. அவர் ரெட்டி கோரிக்கைக்காக அடையாறில் சிறு அரசாங்க இடத்தை கொடுத்தார். அவரே அதில் அனுமதிக்க பட்டது வேற விஷயம் பின் வெகு நாட்களுக்கு அப்புறம் நோயாளில் அதிகரித்ததால் வேறு இடம் பார்த்தார்கள். அப்போதிருந்த முதலவர் கலைஞ்சர் iit இடத்தை தேர்ந்தெடுத்திட்டார். அப்போதே ராஜ்பவனும் iit யம் இடம் தர மறுத்தனர். அவர்களிடம் சண்டைபோட்டு வாங்கப்பட்ட இடம் தான் தற்போதைய மருத்துவமனை. இதனொடுடைய பாதிப்பை அறிந்து மாத்திரை விலை கணிசமாக குறைக்க வைத்திருக்கிறார். இப்போது மேலும் இடம் வேண்டும் என்று கேட்கிறார்கள். அம்மா இது தாத்தா ஆரம்பித்தது என்பதால் கிடப்பில் போட்டிருக்கிறது. அது வேற விஷயம். இதேபோல அண்ணா அறிவாலயத்தில் அஞ்சுகம் கண்மருத்துவ மனை நிறைய பேருக்கு கண்பார்வை கொடுத்திருக்கிறது. இன்னும் நிறைய பிறகு பேசலாம் நன்றி வாழ்க வளமுடன்

 • karthi - MADURAI,இந்தியா

  அரசியலில் மூத்தவர் 5 முறை முதலமைச்சர் 92 வயதிலும் கட்சி பணியாற்றும் திறமை உடையவர் . இவர் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்..............

 • nimmi - Dindigul,இந்தியா

  தமிழகத்தின் பண்பாடு அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்பதற்ககு, முதல்வர் உடல்நலம் பற்றியும், திமுக தலைவர் பற்றி வாசகர் கடிதத்தில் காணப்படும் சில விமரிசனங்களே சான்று. சகிப்புத் தன்மை, ஒருவருக்கு ஒருவர் காட்டும் வெறுப்புணர்வு, பொறுப்பில் உள்ளோரை / இருந்தவர்களை கிஞ்சித்தும் மதிக்காத ஒரு தன்மை ஆகியவை இன்றைய சமுதாய அமைப்பில் எவ்வாறு வேரூன்றி உள்ளது என்பதற்கு இதுவே சான்று.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  விரைவில் உடல் நலன் தேற வாழ்த்துக்கள்.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  உண்டியலில் பணம் போடுவோர் மட்டும் வரலாமா?

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ஜஸ்ட்டு "( திமுக தலைவர் ) கருணாநிதி சுகவீனம்" - ன்னு தலைப்பு போட்டாக்கூட போதும் ..... ஆனா உரைகல்லு எதையோ நம்ம கிட்டயிருந்து எதிர்பார்க்குது .... அது என்ன ????

 • Chakram - Phily,யூ.எஸ்.ஏ

  தமிழ் நாட்டின் நிகழ்காலம் WHEEL chairylum ஸ்ட்ரெச்சரிலும். எதிர்காலம் எப்படியோ?

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  வட இந்திய உ பி... தென் இந்திய உ பி க்கள்... கலகமும்... கலக்கமும்

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  ஏன் கருணா என்றால் எல்லாரும் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள், ஏன் கருணா ஒரு கேடு கெட்ட பிறவியா

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  அனைவருக்கும் வயோதிகம், மரணம் தவிர்க்க முடியாதது, தடுக்க முடியாதது வந்தே தீரும். திமுகவின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய தருணம் இது. பொதுச்செயலாளரும் செயல்பட முடியாமல் இருக்கிறார். பேரறிஞர் அண்ணா உயிரை கொடுத்து உருவாக்கிய திமுகவுக்கு தகுதியான ஒருவரை அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும். தகுதி, பேச்சுத்திறன், கல்வித்தகுதி, அரசியல் அனுபவம், எதையும் சமாளிக்கும் திறன், மாற்றுக்கட்சிக்காரர்க்கும் மதிக்கும் தன்மை, ஆழ்ந்துப்பட்ட அரசியல் அறிவு என்று பார்த்தால் துரை.முருகன் தலைவரானால் நன்றாக இருக்கும். பொதுச்செயலாளராக டி.ஆர்.பாலு இருந்தால் நன்றாக இருக்கும். டி.கே.எஸ்.இளங்கோவன், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் போனவர்கள் துணைத்தலைவர், துணை பொதுச்செயலாளர் போன்ற பதவிகளில் இருந்தால் நன்றாக இருக்கும்.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  இரண்டு வாரங்களாக உடல் நலக்குறைவு என்று செய்தி. ஆனால், தினமும் சண்முகநாதன் அறிக்கைகளுக்கு குறைவில்லை. எங்கேயோ இடிக்குதே. ஒருவேளை போட்டோ வெளியிட்டாத்தான் உண்மை என்னன்னு தெரியுமோ?

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  ஜெயலலிதா ஏன் அரசு மருத்துவ மனைக்கு செல்லவில்லை என்று கேட்ட பகுத்தறிவு திலகங்கள் இப்போது கட்டுமரத்தாருக்கு ஏன் அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் வைத்தியம் பார்க்காமல் தனியார் மருத்துவமனை நிபுணர்கள் மருத்துவம் பார்க்கிறார்கள் என்பதை கேரளா பணிக்கரிடம் சோழி உருட்டி பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

 • udanpirappu3 - chennai ,இந்தியா

  விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் ..

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  ஒருபுறம் தினமலரின் சிறப்புக் கட்டுரை, மறுபுறம் கருணை மழை பொழியும் வாசகர்களின் கடிதங்கள் படித்துக்கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது. நம்மால்தான் எதுவுமே செய்ய முடியாதே. எனவே இந்த கடிகங்களையாவது படித்து படித்து பூரித்து போகிறோம். தினமலர் மட்டும் சென்சார் செய்யாமல் அனைத்து வாசகர்களின் கருத்துகளையும் பிரசுரத்தில் இணையதளத்தில் இடமே இருக்காது போல் இருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்றபோது கூட இப்படி ஒரு நிலை இருந்திருக்குமா என்று தோன்றுகிறது. ஒரு புறம் ஒரு வாசகர் இவருக்கு கடவுள் பிடிக்காது எனவே கடவுளிடம் பிரார்திக்க வேண்டாம் என்கிறார், பலர் இயற்கையை வேண்டுகின்றனர். குடும்ப உறுப்பினர்களே யாரும் பார்க்க வரவேண்டாம் என்று கூறிவிட்டனர், இதைவிட வாட்சப்பில் "தாத்தா தாத்தா என்ற தலைப்பில் மிக மிக அருமையாக உலகமே வியக்கும்வண்ணம் செய்திகள்.. இவர் நினைத்தது நடக்காமல் போனதால் இவருக்கு இந்த நிலை? வந்தே மாதரம்

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  அகிலேஷ், முலாயம், அமர்சிங், அமலாபால், அகிலேஷின் சித்தி, சூனியம், சூழ்ச்சி, இந்த கலாச்சாரம் நாடு பூராவும் பரவினால், நாட்டிற்கு நல்லது, குடும்ப ஆட்சி போய் மன்னராட்சி போய் ஜனநாயகம் மலரும் அல்லவா.? அமித் ஷாவிற்கு இரட்டை அதிர்ஷ்ட்டம் எந்த இடத்திற்கும் வரமுடியும், எங்கு கால் வைத்தாலும் அதே மக்கள் பிரதிநிதிகள் ஆனால் கட்சி மட்டும் மாறும் நிலை, சூப்பர் நேரம் வந்தே மாதரம்

 • murugesan s - Pune,இந்தியா

  இது உண்மையா இல்ல வதந்தியா ????

 • S Bala Subramanian - New Delhi,இந்தியா

  எஸ் பாலசுப்ரமணியன் நியூ டெல்லி ஐ pray தி god for speedy ரெகவரி

 • Jaya Ram - madurai,இந்தியா

  நலம் பெறவேண்டும் இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டியதிருக்கிறது, மேலும் கடந்த 10 நாட்களாக அவர்க்கு காய்ச்சல், உடலில் கொப்புளங்கள் யாரையும் சந்திக்க மறுக்கும் நிலை. ஆனால் அவரால் அறிக்கை மட்டும் வெளியிடப்படுகிறது. இது எப்படி நான் கேட்கவில்லை மக்கள் கேட்கிறார்கள். எதையும் சிந்தித்து செயல் படவேண்டும், முற்பகல் செயின் பிற்பகல் விளையும். இப்போதெரிகிறதா நம்மளுடைய அறிக்கைகளே நம்மை பூமராங் ஆக தாக்குகிறது

 • vigneshh - chennai,இந்தியா

  பொதுவாக செய்த கொள்ளை, கொலைக்காக சட்டம் தண்டிக்கும். ஆனால் அதிலிருந்து தப்பித்தால் கடவுள் தண்டிப்பார். அந்த தண்டிப்புக்காக காத்திருந்தார். நான் நினைக்கிறேன் அந்த தண்டிப்பு தொடங்கி விட்டது என்று. ஆனால் நான் எல்லாம் வல்ல கடவுளை வேண்டுகிறேன் இவருக்கு நல்ல சுகத்தை கொடுத்து விடுங்கள் கடவுளே.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  அப்போலோவுல இருந்து வீடியோ / போட்டோ வரல்லியே -ன்ற கவலைதான் காரணம் ..... கவலை வேண்டாம் என்று சொல்லித் தேற்ற வாரிசுகள் இருக்கிறார்கள் (சீரியஸாகத்தான் சொல்கிறேன்) ....

 • சத்தியநாராயணன் (சத்தி) - Bangalore,இந்தியா

  பெரியவர் ஆட்சி அதிகாரத்தில் இல்லை, மற்றும் அவர் பலநாள் அப்போல்லோவில் படுத்த படுக்கையாய் கிடைக்க வில்லை. ஒவ்வாமை என்று அவர்களே கூறிவிட்டனர். அடிமைகள் அவரை போட்டோ போட சொல்லி கேட்பது மடத்தனம்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  தமிழ்நாட்டின் காலக்கொடுமையை பார்த்தீர்களா ? ICU வில் இருந்து ஆட்சி நடைபெறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் உடல்நிலை சரியில்லை என்றால் பதவிக்கு மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்று பயபடுகிறார்கள் ( சமீபத்தில் கூட ஹிலாரிக்கு காய்ச்சல் வந்தபோது சிகிச்சைக்கு பிறகு அவர் பதவி ஏற்க உடல் தகுதியுடன் இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது ) தமிழ்நாட்டில் என்னவென்றால் ஐயோ பாவம் என்று ஒட்டு போட்டுவிடுகிறார்கள். என்ன ஒரு அறிவு?

 • $$$$ - $$$$,இந்தியா

  ஆர்யன் கண்ட்ரோல்டு திராவிடமும் ....திராவிடன் கண்ட்ரோல்டு திராவிடமும்....ரொம்ப கெட்ட நேரத்தில இருக்குது போல....ரெண்டு கட்சியும் திருநள்ளாறு போனா சரியாகிவிடும்........திருநள்ளாரையும் திராவிடத்தையும் குழப்பினா அதுக்கு நான் பொறுப்பு கிடையாது ஆமா..

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  அப்போலோ ஆஸ்பத்திரிதான் இப்பொழுது சிறந்தது. இரண்டு நாள் என்று சொல்லி இரண்டு மாதங்கள் பண்ணி விடுவார்கள்.

 • krishnamoorthy - chennai,இந்தியா

  இவரது வலிமையே வலிமையான எதிராளியின் வலிமையை வைத்துதான். தற்போது அந்த எதிராளி செயல்படமுடியாத நிலையில் இவரது வலிமையையும் குன்றிவிட்டது. ஒரு விதத்தில் இவர் அரசியலில் இருந்து விலகி ஒரு அரசியல் விமர்சகராக நேரம் வந்து விட்டது. ஏனெனில் அடுத்த தலைமுறையினரின் ஆடசி நடக்கும் காலம் வந்துவிட்டது. அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை கடசிகளுக்கு அப்பாற்பட்டு ஒரு விமசகராக செய்யலாம்.அது இவருக்கு மேலும் புகழ் தரும்.

 • Vel - Chennai,இந்தியா

  தான் எதிர்க்கட்சியாக இருக்கும் போது எந்த முதல்வர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் குதர்க்கமான, குசும்பு பண்ண தாத்தா (உதாரணம், காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா) இப்போ உடல்நிலை தனக்கு சரியில்லாதபோது என்ன சொல்வார்? தன வினை தன்னை சுடும். ஓட்டப்பம் வீடடை சுடும். சென்ற மாதம் அந்தம்மா உடல்நிலை சரியில்லைன்னு ரெண்டே நாளில் அப்போல்லோவில் சேர்ந்தார் சரி. இவர் 10 நாட்களாக உடல்நிலை சரியில்லை என்று இப்போ தகவல் வருகிறது.? வேட்பாளர் மனு தாக்கல் தொடங்குகிறது. இவர் உடல்நிலைக்கு, எலக்சனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அப்புடியதானே?

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இவருக்குப் பிடிக்காது யாரும் பிரார்த்தனை செய்யவேண்டாம் ஆண்டவனுக்கு பிடிக்காது எனவே எல்லோரும் நலம்வாழ பிரார்த்தியுங்கள்

 • laxmanaperumal - sulabiya,குவைத்

  விரைவில் நலம் பெற என் பிராத்தனைகள்

 • Balaji - Khaithan,குவைத்

  கலைஞர் அவர்கள் விரைந்து நலம்பெற பிராத்திக்கிறேன்..... ஜெ விசயத்துக்கு புகைப்படம் என்று கேட்கும் திமுகவினர் இவரின் புகைப்படத்தை வெளியிட்டு சாதாரண பிரச்சனைதான் என்று சொல்லியிருக்க வேண்டும்...... எதனால் செய்யவில்லை என்று தெரியவில்லை..... இனி அவர்கள் ஜெ வின் புகைப்படம் வெளியிட வேண்டும் என்று கேட்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டனர்........

 • tamilarasan k - madurai,இந்தியா

  தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து கருணாநிதி விமர்சித்தார் என்பதற்காக அவர் உடல்நிலையை இப்பொழுது விமர்சிப்பது நல்லதல்ல..மூத்த தலைவர் உடல் நலம் பெற பிரார்த்திப்போம்..அவர் உடல் நலம் தெரிவித்து முதல்வர் உடல்நலம் குறித்து தான் விமர்சித்தது எவ்வளவு தவறு என்று உணர்வார் என்று நம்புகின்றேன்

 • Ram - Chennai,இந்தியா

  தமிழகத்தின் அரசியலில் முக்கிய பங்குடைய தலைவர். அவர் 92 வயதிலும் அறிவுஆற்றல் மிக்கவர். தள்ளாமை என்பது சகஜமான ஒன்று. வயதுக்கும் அனுபவத்துக்கும் மரியாதையை கொடுக்கவேண்டும். அவரின் உடல்நிலை தேறி நல்லமுறையில் திரும்ப பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு இறைஅருள் வேண்டுகிறேன்.

 • Muthu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இடைத்தேர்தல் நாடகம் ஆரம்பம்.......

 • siva - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இங்கு சில மனிதாபமற்ற அறிவிலிகள், அதிமுக அடிமைகள், மற்றவர் வலியில் சுகம் காணும் பண்பற்றவர்களின் கருத்துக்கள் மிகவும் வேதனைக்கு உரியது.....முதல்வர் சுகவீனப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அரசியலில் வேறுபட்டு நின்றாலும் அவர் நலத்துடன் விரைவில் குணமடைய வேண்டும் என அறிக்கை விட்டவர் கலைஞர். இன்று அவர் சுகவீனத்தில் இருக்கும் போது அதிமுக தரப்பிலிருந்து ஒருவருக்கும் வாய் வரவில்லை.... 92 வயது வயது வரை இங்கு கருத்து கூறுபவர்கள் இருப்பார்களா என்று நினைத்து பார்க்கவேண்டும்....கருத்துக்களில் கண்ணியத்தையும், மனிதாபமானத்தையும் கடைபிடியுங்கள்.... இதில் சிலர் போட்டோ போடு, வீடியோ போடு என்று..... உண்மையில் நீங்கள் ஆண்மை மிக்கவராக இருந்தால் அப்பல்லோ வாசலில் போய் நின்று கூறுங்கள் பாப்போம்....

 • Jagadeesan V - chennai,இந்தியா

  அம்மாவை பற்றி தினம் ஒரு அறிக்கை விட்டவர் நிலை இன்று என்ன? சுவற்றில் அடித்த பந்து, சேற்றில் எறிந்த கல்- இவை இரண்டும் அந்த செயலை செய்தவர்க்கே வந்து அடையும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இருந்தாலும் வயதில் பெரியவர்-உடல் உபாதை என்பது சகஜம்தான். குணமடைய (ஆண்டவனை) வேண்டுகிறேன்.

 • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

  அவர் வயதுதான் அனைவருக்குமே தெரியுமே, அவர் வயதை போட்டால்தான் சற்று பீதியை கூட்டி செய்தியை மெருகேற்றிக்கொள்ளமுடியுமோ?.நல்லவேளை எப்போதும்போல " தமிழகத்தில் ஜெயயலலிதா தலைமையில் ஆட்சி நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், கருணாநிதிக்கு .... " என்று துவக்கம் போடாமல் விட்டீர்களே.

 • siva - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  விரைவில் நலம் பெற்று இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனை வேண்டுவோம்....

 • D.RAMIAH - RAIPUR,இந்தியா

  LET OUR GREAT LEADER SRI. MU.KA. GET CURED FROM ALLERGY AND FEVER - LET US PRAY TO THE ALMIGHTY TO GIVE HIM LONG LIFE TO SERVE THE NATION - INDIA - TAMILS AND TAMILNADU

 • Karthik Raj - Cyberjaya,மலேஷியா

  அம்மாவை அவர் கேட்ட அத்தனை கேள்விகளையும் அவரிடமே திரும்பிக் கேட்கும் தருணம் இது. கர்மா வருது தாத்தா....

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். இவரை பற்றி கடுமையான கருத்துக்களை பதிவு செய்து உள்ளேன் இந்த பகுதியில். இவரின் தமிழ் பற்று , இலக்கிய பேச்சாற்றல் , நாவன்மை தற்போது உள்ளவர்களிடம் மிகவும் குறைவு . குணமடைந்து தமிழை வளர்க்க வேண்டும் .

 • Paranthaman - kadappa,இந்தியா

  எப்படி எப்படியோ அறிக்கை விட்டு பார்த்தார் ஒன்றுமே நடக்கவில்லை.விரைவாக குணமடைய இறைவனை பிரார்த்திப்போம்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இவரது வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதலாமே, இவர் எந்த ஆண்டு எங்கே பிறந்தார், எப்படியெல்லாம் வளர்ந்தார் போன்ற பரிணாம வளர்ச்சிகள் நாட்டு மக்களுக்கு குறிப்பாக அனைத்துக் கட்சிக்காரர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும், மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு இவர் எப்படியெல்லாம் பாடுபட்டார், போன்ற செய்திகளை வெளியிடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம், வந்தே மாதரம்

 • PENPOINT,INKLAND - ZEN EYE,இந்தியா

  அம்மாவின் உடல்நலம் சீர் ஆவதற்காக அவரது கட்சி தொண்டர்கள் திருக்கோவில்களில் ,தேவாலயங்களில் மசூதிகளில் பிரார்த்தனை செய்து தங்கள் விசுவாசத்தை காட்டிக்கொண்டார்கள் ,காத்துக்கொண்டார்கள் .இவரது தொண்டர்கள் என்ன செய்யப்போகிறார்களோ ? எப்படி தங்கள் விசுவாசத்தை காட்டப்போகிறார்களோ ? இவர் இந்த வகையில் வீட்டிலே எலியாகவும் வெளியிலே புலியாகவும் நடித்ததால் வந்தவினை ."PRAYER DO ANYTHING " என்பார்கள் .அந்த கொடுப்பினை இவரது கட்சிக்காரர்களுக்கு இல்லாது போயிற்று .பாவம்

 • karthick - qatar,கத்தார்

  3 தொகுதி தேர்தலை வைத்தே இவருக்கு சுகவீனம் வந்தது என்று இந்த தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்...ஏன் என்றால் இது போன்ற நாடகங்கள் நெறய பார்த்து விட்டார்கள் மக்கள்...இவரை போன்ற தலைவன் இந்த அரசியலுக்கு திருஷ்டி பொட்டு....உண்மையாக சொல்ல போனால் உண்மையான தீபாவளியை மக்கள் ஆவலுடன் எதிர் பார்க்கிறர்கள்.....

 • PENPOINT,INKLAND - ZEN EYE,இந்தியா

  "மனிதாபிமானம் "-பாத்திரம் அறிந்து பிச்சை இடு " என்றாள் நம் அவ்வை பாட்டி. இந்த PARTY க்கு பொருத்தமான வார்த்தைகள்..தமிழகத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்த பிரபாகரனின் தாயார் வந்த விமானத்தை தரை இறங்கவே விடாத தயாள குணம் படைத்த புண்ணியவான் இந்த தயாளுவின் கணவர் .

 • PENPOINT,INKLAND - ZEN EYE,இந்தியா

  "மறந்தும் பிறன்கேடு சூழற்க ,சூழின் தன்கேடு தன்முந்துரும் "என்கிறது குறளோவியம்

 • nallavan - tiruchy,இந்தியா

  குடும்பத்தினர் தடை என்று குறிப்பிட்டுள்ளதை குடும்பத்தினர் வேண்டுகோள் என்று தினமலர் எழுதி இருந்தால் மலரின் வாசனை தூக்கலாக இருந்திருக்கும்.

 • PENPOINT,INKLAND - ZEN EYE,இந்தியா

  அதிரடிக்கு எதிரடி கொடுக்க ஆளில்லாததால் எத்தனை நாளுக்குத்தான் தனியாக ஆடுவது ? இந்த மன ஒவ்வாமையே இவருக்கு உடல் ஒவ்வாமையை ஏற்படுத்திவிட்டது ,

 • nallavan - tiruchy,இந்தியா

  வயதிற்கென்று ஒரு மரியாதை இருக்கிறது.இவரை விமர்சனம் செய்கிறேன் என்ற கோணத்தில் ஒரு நல்ல பன்பாட்டை தவறவிடாதீர்கள்.இவருக்கு இறைவன் நல் சுகத்தை கொடுப்பதோடு செய்த பாவங்களுக்கு பிராயசித்தம் தேடிக்கொள்ளவும் இவருக்கு இறைவன் அருள்பாலிப்பானாக .

 • Ibnusalih - Thaif.ksa.,சவுதி அரேபியா

  எல்லோருக்கும் நோயும் வரும் , சுகமும் வரும் . எல்லாமே இறைவனின் செயல்களாகும் . நமக்கும் நோய்கள் வரும் , சுகமும் வரும் என்பதை கருத்தில் கொண்டு எல்லோரின் விஷயத்திலும் மனிதாபிமான முறையில் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுவதே நம் அனைவருக்கும் சிறந்ததாகும் .

 • Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்

  அவர் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ இயற்கையை வேண்டுகிறேன். எங்கள் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு துரோகத்தை பற்றி புரியவைக்க எங்களுக்கு அவர் தேவை.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  விரைவில் குணம் பெற்று வரட்டும். குடும்பத்தினர் அனைவரும் வைத்தீஸ்வரன் கோவிலில் பிரார்த்தனைக்கு செல்லட்டும். மருமகள் மாங்காடு கோவிலுக்கும் பிரசாந்தி நிலையத்துக்கும் பகுத்தறிவு பிரார்த்தனை செய்யட்டும். அதே நேரம் சென்ற மாதம் ஜெயலலிதா அவர்கள் செப்சிஸ் தொற்றினால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்ந்த போது திமுகவினர் ( உச்ச நீதி மன்ற தீர்ப்பு, சசிகலாவுடன் மோதல், காவிரி பிரச்சினையில் இருந்து எஸ்கேப், கண்டெய்னர் கேசு, இப்படியெல்லாம்) இதே தினமலரில் எழுதிய கருத்துக்களை இப்போது அதே திமுகவினர் திரும்ப படித்து பார்க்கட்டும்.

 • jay - toronto,கனடா

  பாரிஸ் தமிழச்சி என்ன அறிக்கை விடப்போகிறார் இந்த முறை

 • Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ

  ஏன்யா..ஒரு போட்டோ புடிச்சி போட்டா என்ன கொறஞ்சா போயிடுவீங்க..என்று அதிமுகவினர் கேட்க மாட்டார்கள்.. அதுதான் 'பெரியவருக்கும்' மற்றவர்க்கும் உள்ள வித்தியாசம்

 • swami - houston,யூ.எஸ்.ஏ

  a very good time for him to retire from active politics.when alaghiri went out of d.m.k. "7 1/2" entered into d.m.k.unmhai.

 • Thiyaagi Raamasaamy - Chennai,இந்தியா

  ஆமாம் இந்த தியாகி ட்ராபிக் ராமசாமி எங்கே காணோம் ? ஒரு பொதுநல வழக்கு போடலாம்னு பாத்தா, சரியான நேரத்துக்கு ஆள காணுமே

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  கலைஞர், ஜெயா, சுடாலின், விஜயகாந்த்.....இந்த நால்வர்தான் மக்கள் மன்றத்தில் பிரபலமான தலைவர்கள்....நால்வரின் உடல் நிலையும் கேள்விக்குறிதான்.....ஒரு அளவுக்கு மேல் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றால், முழுநேர அரசியலில் இருந்து ஒதுங்கிவிடனும்....இவர்கள் உடல்நிலையும் சரியில்லை, இவர்களின் அரசியலும் சலித்துவிட்டது...புதுசா யாராவது வரட்டும்....

 • Nagarajan S - Chennai,இந்தியா

  என்னே தமிழகத்திற்கு வந்த சோதனை ? சொல்லிவைத்தாற்போல இரு முக்கிய கட்சிகளின் தலைவர்களும் நோய்வாய் பட்டுளார்கள்களே இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து அரசியலில் ஈடுபட இறைவன் அருள் புரிய வேண்டும்

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  பெரியவர் குணமாகட்டும்....உங்க மருமகள் கிட்டே சொல்லி வைத்திஸ்வரன் கோவிலில் வேணடிக்கச்சொல்லுங்க....

 • thiru - Chennai,இந்தியா

  தமிழகத்துக்கு நல்லது நடந்தால் சரி...மக்களே இரைவணை வேண்டுங்கள்...

 • manivannan - chennai,இந்தியா

  ஒரு 92 வயது ஆனவர், அவருக்கு கொப்புளங்கள் என்று சொல்லி இருப்பதால் யாருக்கும் தொற்ற வேண்டாம் என்று இருக்கலாம். . எதுவானாலும் நாம் வயதுக்கும் நிலைக்கும் தர வேண்டிய மரியாதையை தந்து அவர் சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுவோம். (நமக்கு நம்பிக்கை இருக்கிறது அல்லவா) (நான் தி மு க இல்லை ஆனால் மனுஷி)

 • Raghu Subramanian - toronto,கனடா

  தமிழனுக்கு மனித நேயம் மறந்து விட்டதா அல்லது மனித நேயமே கிடையாதா ? யார் துன்பத்திலும் இன்பம் காணும் கீழ் புத்தி மாறாத? Let's Pray for his good health. Though he may not like it

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சீக்கிரம் குணமாகி மறுபடியும் கட்சியில் குழப்பங்களை ஏற்படுத்தி தமிழனை எப்டியாவது காப்பாற்ற வேண்டும்...

 • moahmed - nagai ,இந்தியா

  ஏட்டிக்கு போட்டியா ? மலச்சிக்கலா அல்லது வயிற்று போக்கா அல்லது வாயு தொல்லையா ?

 • VSK - CARY,யூ.எஸ்.ஏ

  சபாஷ் சரியான போட்டி 1 இவரையும் பார்க்க முடியாது அவரையும் பார்க்க முடியாது 1 நல்லதே நடக்கட்டும் 1

 • Baskar - Paris,பிரான்ஸ்

  நலம் பெற நாள் வாழ்த்துக்கள் .

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  இந்த சுகவீனம் தானே 1996 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை பர்கூரில் தோற்கடித்தது ?

 • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

  வழக்கமாக உட்கொண்டுவரும் மருந்தினால் எப்படி ஒவ்வாமை ஏற்படும்? சற்றே இடிக்கின்றதே..ஒவ்வாமை என்றால் புதிதாக எடுத்துக்கொள்ளும் மருந்தின் தன்மை உடல் ஏற்றுக்கொள்ள இயலாமல் ஏற்படுகின்றதற்கு பெயர்தான் ஒவ்வாமை ஆகும். வயதின் தன்மையை கணக்கில் கொண்டுதான் மருந்தின் வீரியத்தை கணித்து கொடுப்பார்கள். எனக்கு பின்னர் ஸ்டாலின்தான் கட்சி தலைமையை ஏற்பார் என்று அவராக எங்குமே சொல்லாத நேரத்தில்..இது திணிக்கப்பட்ட செய்திபோன்றே தெரிகின்றது. கட்சியின் பொருளாளரை விட கட்சியின் பொதுச்செயலாளர் பதவி குறைவானது? அன்பழகன் வாய் திறக்கவே இல்லை..ஆனால் சில நாட்களாக ஸ்டாலினின் செயல்பாடுகளில் ஒவ்வாமை பின்னணி தெரிகின்றது..அதாவது கட்சிக்கு ஒவ்வாமை என்கிறேன். ஆரம்பம் முதல் சிந்தித்து பார்த்தால்..கட்சி சொத்துக்குலு உறுப்பினர்களில் ஸ்டாலினின் திணிப்பு கட்சி சீனியர் பலரையும் அதிரவைத்தது..தினமலர் கூட கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் மனக்கசப்பு என்று சொல்லி வந்துள்ளது.. அறிக்கைகளின் பின்னணியில் காலாவதி மருந்து புகழ் சபரீசனின் மொகலாய அறிவு சுடர்விடுகின்றதை அரசியல் அறிந்தோர் அறிவார்கள். ஓரிரு மாதங்களில் நல்ல செய்தியை நான் சொல்வேன் என்று ஸ்டாலின் சொன்னதை இந்த செய்தியோடு ஒப்பிடுகையில்..கருணாநிதி அவர்களுக்கு மருத்துவ குழு பாதுகாப்பினை ஏற்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும். அமைச்சர்கள் சென்று அவரை மருத்துவ குழுவினரோடு சென்று பார்த்து அவர் உடல் நிலையை பற்றி அறிந்தவரை முன்வரவேண்டும். தமிழகத்தில் வயதான அரசியல் கட்சி தலைவர் என்கிற முறையில் அவரை அரசாங்கமே கவனித்துவர ஏற்பாடு செய்யவேண்டும். விமர்சனங்கள் எவ்வளவு இருந்துவிட்டு போகட்டும்..ஆனால் மனிதாபிமான முறை என்று ஒன்று உண்டல்லவா? கட்சியை கைப்பற்ற..ஏகப்பட்ட சொத்துக்களை லவட்டிட எந்த சதியின் தாக்கமும் இருப்பதாக என்போன்ற அபிமானிகளுக்கு சிறு சந்தேகம் கூட வந்துவிட கூடாதல்லவா? நல்ல முறையில் அவரது உடல் நலன்பெற்று தீர்காயுளோடு நீடு வாழ வாழ்த்துவோம். அண்ணன் அழகிரி அவர்கள் மனஸ்தாபங்களை மறந்து தந்தையை உடனே வந்து பார்த்து அவர் காத்துவந்த கட்சியை தலைமை ஏற்று நடத்த முன்வரவேண்டும்..இதுவே நமது இன்றைய செய்தியாக இருக்கும். பலருக்கும் எனது கருத்து புருவத்தை உயர்த்திவைக்க இருந்தாலும்..நாமும் மனிதர்கள்தான்..வயது மூப்பின் காரணமாக இப்படிப்பட்ட அசவுரியங்கள் ஏற்படுவது பற்றி விமர்சிக்கவே கூடாது..நலன் பெற வாழ்த்துகின்ற பக்குவத்தை நமது அம்மா அவர்கள் சொல்லி கொடுத்திருக்கின்றார்கள்..தலைவா எழுந்துவா..

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  solipred கேட்டு வாங்கி சாப்புடுங்க தாத்தா.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  போட்டியா தாத்தா .... ?

 • Kattumaram - Ohio,யூ.எஸ்.ஏ

  அடுத்த நொடி அடுத்த நிமிடம் யாருக்கு என்ன நடக்கும் என்று தெரியாமல் ஜெயாவின் நிலைமைக்கு ஒரு பெரிய விதண்டாவாதம் செய்தீர்களே கருணா இப்பொழுது பார்த்தீர்களா உங்களின் நிலைமை this is just the ning of karma வினை பலன் you have to wait n see history repeats itself முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

 • usman - riyath,சவுதி அரேபியா

  .....இன்னைக்கு ஸ்டாலின் பிற கட்சிதலைவர்களுடன் காவிரி பிரச்னை சம்பந்தாமாக பேசினார், கலைஞரின் சுவீனம் குறித்து அல்ல...

 • தீயசக்தி - Richmond,யூ.எஸ்.ஏ

  காவேரி மருத்துவமனை ஆட்கள் உஷாரா இருக்கோணும்...கொஞ்ச அசந்தா எழுதி வாங்கிப்புடுவாங்க கோபாலபுர குறுப்பு SRM குரூப்பை யே மிராட்டியவர் தான் கருணாவிற்கு காவலாய் பக்கத்தில் இருந்து பார்த்து கொள்கிறார்

 • தீயசக்தி - Richmond,யூ.எஸ்.ஏ

  CBI இயக்குனரையே வீட்டிற்கு வரவழைத்தவர்கள் ஆயிற்றே...காவேரி ஆஸ்பிடலையே வீட்டிற்கு கொண்டு வரும் அளவிற்கு பணம் படைத்தவர்கள்

 • தீயசக்தி - Richmond,யூ.எஸ்.ஏ

  ஒண்ணுமே புரியல உலகத்திலே...என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

 • தீயசக்தி - Richmond,யூ.எஸ்.ஏ

  இவர் ஒரு MLA மக்களுக்காக பணியாற்ற மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவர் இவரின் உடல்நிலை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் குறைந்த பட்சம் ஒரு போட்டோ , இல்லை ஒரு வீடியோ ஆகிலும் வேண்டும் எப்படி நம்புவது

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  இப்படியே கருணாநிதி இருப்பது சாலச்சிறந்தது .கொஞ்சநாள் நாம மஞ்சள்துன்டின் போலி அறிக்கைகளை பத்திரிகையில் வெளி வராது

 • Sekar KR - Chennai,இந்தியா

  தளபதிக்கு பார்க்க அனுமதி உண்டா? இங்கும் ஏதாவது வியாதி தொத்திக்கொள்ளப்போகுது. தளபதியாரே உஷார்.

 • Dharani Vasan B S - Mel arasampattu,Vellore-Dt,இந்தியா

  தமிழின தலைவர் பூரண நலம் பெற்று 100 ஆண்டுகள் மேல் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  டாஸ்மார்க்கும் மணல் கொள்ளையும் தமிழகத்தை சீரழித்தது போதும். தமிழர்கள் இனியாவது பிற தலைவர்களான விஜயகாந்த் போன்றவர்களை சிந்தித்து பார்கட்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement