Advertisement

எனக்கு கடலை போட தெரியாது : மா.கா.பா.ஆனந்த்

“வாய் ஓயாமல் பேச்சு, நக்கல், நையாண்டி என நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை ஒரு வழி ஆக்காமல் விடமாட்டார். 'எப்.எம்'., 'சின்னத்திரை', இப்போ 'பெரிய திரை' என ரவுண்ட் அடிக்கும் மா.கா.பா.ஆனந்த். ஜாலி மூடில் 'நம்ம' வாசகர்களுக்காக பேசியது:

* மா.கா.பா.,ங்கறவரைப் பற்றி என்ன சொல்றது?
பிறந்தது வளர்ந்தது புதுச்சேரி. படிப்பு எம்.பி.ஏ., 'அட்வர்டைசிங்' துறையில் காப்பி ரைட்டர் ஆகிடணும்னுதான் ஆசை. வேலை எதுவும் கிடைக்கல. நல்லா பேசுவேன். நண்பர்களெல்லாம் 'ஆர்.ஜே.,' (ரேடியோ ஜாக்கி) ஆகிடுனு சொன்னாங்க. 'லக்' அடித்தது எட்டு வருஷம் எப்.எம்.,ல் ஆர்.ஜே., ஆக வேலை.
* 'டிவி' வாய்ப்பு...?
விஜய் 'டிவி.,யில் 'டைம் பாஸ்' ஷோ -வுக்கு தொகுப்பாளரா செலக்ட் ஆனேன். அப்ப இருந்து 'டிவி'ல காலத்தை ஓட்டிட்டு இருக்கேன். இப்பதான் உங்களுக்கே தெரியுமே.
* நல்லாவே தெரியுங்க.. 'டி.வி'., 'சினிமா' உங்களுக்கு..
'டிவி'யில இருந்து சினிமாவுக்கு வரும் போது பயம் இருந்துச்சு. மக்கள் நம்மள எப்டி ஏத்துப்பாங்கன்னு? ஆனா, ரசிகர்கள் என்னைய கை விட்டுடல.
* முதல் படம் 'வானவராயன் வல்லவராயன்'தானே...?
நான் அதில் 'வல்லவராயன்'. என்னை சின்னத்திரையில் ரசித்தவர்கள் பெரிய திரையிலும் ரசித்தனர். அது தான் என்னைய 'பூஸ்ட்' பண்ணுச்சு.
* நடித்த படங்கள்...?
வானவராயன் வல்லவராயன், அட்டி, நவரச திலகம், பஞ்சு மிட்டாய், இப்ப 'கடலை'.
* கதையை எப்படி செலக்ட் பண்ணுறீங்க...?
காமெடி கதையான்னு பார்ப்பேன். காமெடின்னா உடனே ஓ.கே., சொல்லிடுவேன். படம் பார்க்க வர்ற ரசிகர்கள் அந்த ரெண்டரை மணி நேரம் சந்தோஷமா இருக்கணும்...
அவ்வளவுதாங்க.
* உங்கள் படங்கள்ல டப்பிங்...
ஏங்க... என்னைய பார்த்து இப்டி கேக்குறீங்களே. நானே 'டப்பிங்' பேசிடுவேங்க...
* ஹலோ பிரதர், உங்களுக்கு யாரு 'மா.கா.பா.,'ன்னு பேரு வச்சது?
அது நம்ம 'சரவணன் மீனாட்சி', செந்தில் தான். 'எப்.எம்'.,ல வேலை செய்யும்போது
வச்சாங்க.
* ஹீரோ... வீட்ல எப்டியோ...?
வீட்ல ஹீரோவும் இல்ல, ஜீரோவும் இல்ல. நல்ல கணவர், குழந்தைகளுக்கு நல்ல அப்பா.
* 'கடலை' போடுறது... ஸாரி... படம் பற்றி...
'எனக்கு கடலை போடத் தெரியாது. ஆனால், கடலை படம் நல்லாவே வந்திருக்கு. சீக்கிரமா ரிலீஸாக போகுது. அந்த படத்துல 5 பாட்டுமே 'ஹிட்'.
* பேச்சாளரான நீங்க கூட, இப்ப பாட ஆரம்பிச்சிட்டீங்களாமே...?
ஆமா பிரதர். 'ஆயாவ காணோம்'னு ஒரு பாட்டு நானே பாடிருக்கேன். குழந்தைகளுக்கு ரொம்ப புடிச்சுருக்கு. நீங்களும் கேளுங்க.
* படத்துல உங்களுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ரொமன்ஸ் சீன்...?
அட நீங்க வேற. படத்தை பார்த்துட்டு என் மனைவி என்னைய என்ன பண்ண போறாங்களோ.
* மா.கா.பா., வின் இன்னொரு முகம்...?
நல்ல போட்டோகிராபர். படம் வரைவேன். ப்ரீ டைம்ல புல்லா இதான் வேலை. பாஸ்
ஒங்கள படம் புடிக்கணுமா, வரையணுமா, சொல்லுங்க?
* நம்ம ரசிகருங்களுக்கு எதுனாச்சும் சொல்லுங்களேன்...?
நம்ம பசங்களுக்கு தானே, சொல்லிட்டா போச்சு. எந்தத் துறைல என்ன வேலை
கிடைச்சாலும் அதை 'மிஸ் பண்ணாம கிஸ்' பண்ணுங்க. அது ஒரு நாள் நிச்சயம்
புகழையும், நல்ல வாழ்க்கையையும் கொடுக்கும். வர்றேங்க...
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Jeya Veera Pandian - madurai,இந்தியா

    வாழ்க வளமுடன்

  • ravi - chennai,இந்தியா

    நீர் போடுவது தான் உலக மஹா கடலை என்பதை அறியாத பாலகனா நீ - நம்பிட்டோம் - அண்ணன் கடலை போட்டு கடலை போட்டு உயர்ந்துவிட்டார்

  • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

    கடலை போடவேண்டுமெனில் நீ ஒரு விவசாயியாக இருந்திருக்க வேண்டும். அது இது எது வில் நின்று கொண்டு பேசுவதல்ல

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement