Advertisement

கனவுகளைக் கைப்பற்றுவோம்- 37

அன்பு தோழமைகளே நலமா, இந்த வாரம் மிக முக்கியமாக தன்னிலை ஏற்று , இரட்டை மனநிலையை கலைந்து ,பிறரை மதித்து, "முடியும்" என்கின்ற கொள்கையில், நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும் என்பது குறித்து காணப்போகின்றோம்.


இருவர் போதையை மறக்க மறுவாழ்வு மையத்திற்கு சென்றார்கள் "நான் ஒருகுடிநோயாளி " என்பதை திறந்த மனதோடு ஏற்றுக் கொண்டவரின் வாழ்விலோபுத்தெழுச்சி ஏற்பட்டது , ஏற்றுக் கொள்ள மறுத்தவரோ குடி நோயாளியாகவே வாழ்ந்துமடிந்தார்..


வாழ்க்கை தளத்திலும் ஒருவரின் தன்னிலை ஏற்பும் , விழிப்புணர்வு நிலையும் தான்அவருள் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது மறக்க இயலா உண்மையாகும். தன்னிலையைபுரிந்து கொள்வது பலவீனத்திலிருந்து நம்மை விடுவித்து புதிய வாழ்வுக்கானநம்பிக்கையை தருகின்றது...


ஆணவம், சமய/சாதி வெறி இவை எதிர்மறை எண்ணங்களே... நம் உள்மனம் பிம்பப்படிபிறரை ஒப்பிட்டு பார்ப்பது முறையானதல்ல . இது நம் சுயமதிப்பின் மீது பாதகத்தைஏற்படுத்தும். நாம் எந்த லென்ஸ் வழியாக உலகை பார்க்கின்றோம் என்பதைஆய்வுக்குட்படுத்தி அதில் தெளிவை பெற்ற பின்பு தான் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்....


இரட்டை மனநிலையை தவிர்ப்போம்:


தொடர் கடின உழைப்பினால் 98 மதிப்பெண்கள் வாங்கி துள்ளிக் குதித்து ஓடி வந்தமகளை பாராட்டாமல் பெற்றோர் திட்டினர் இன்னும் 2 மார்க் எங்க போச்சு? என்றவார்த்தையில் மகளது மகிழ்ச்சியைச் சுக்கு நூறாக்கியது சோர்ந்து போன மகள்சென்றதும் பாராட்டினால் தலைக்கனம் வந்து விடும் என்று பெற்றோர் தங்கள்சொல்லுக்கு சப்பைக்கட்டு காட்டினர்..


வாழ்வை வசப்படுத்தும் செயல்பாடுகள் எங்கு எப்படி நடந்தாலும் அவற்றை நாம்பாராட்டிக் கொண்டாடுவோம் . துள்ளிப் பாயும் ஆற்று நீரானது பாயும் இடமெல்லாம்வாழ்வளித்துக் கொண்டே செல்வது போல் நமது வாழ்வு எல்லோருக்கும் எல்லாமுமாகஇருக்கட்டும் குற்றம் கண்டுபிடித்தல் மற்றும் சாக்குபோக்கு சொல்தல் போன்றஅணைகளைக் கட்டி நீதியை கட்டிப் போட வேண்டாமே ...வாழ்வோம்...வாழவிடுவோம்....வாழ வைப்போம்...


அருமையான ஓவியம் ஒன்றை வரைந்த ஓவியர் மக்களின் பார்வைக்கு வைத்து அதைமெருகேற்றக் கருத்து கணிப்பு நடத்தினார்..குறைகளை அடுக்கினார்கள். ஓவியத்தில்நீங்களே மாற்றங்கள் செய்யலாம் என்று ஓவியர் தூரிகையை அவர்களிடமே தந்தார். யாரும் சரிசெய்ய முன் வரவில்லை . இன்றைய உலக போக்கின் பிரதிபலிப்புகளில்இதுவும் ஒன்று. நன்மைத்தனங்கள் அரங்கேறும் பொழுது பாராட்டாமல் குறைகளைமட்டும் பெரிதுபடுத்தி மகிழ்ப்பவர்கள் பலர் உள்ளனர்..


தனக்கென்றால் ஒரு நியாயம் ஊராருக்கோ வேறொரு நியாயம் என்பது பலரின்அன்றாட வாழ்க்கை முறையாகி விட்டது..இது இரட்டை நிலைப்பாடு மனநிலையைபடம்பிடித்து காட்டுகின்றது .இந்த மனநிலை தான் நமக்குள் பல முரண்பாடுகளைபதியவிட்டு தன்னில் நிறைவையும் பிறரின் குறைகளையும் காண வைக்கின்றது ..வாழ்த்திபேச முடியாவிட்டாலும் தாழ்த்திப் பேசுவதை குறைப்போம்..


பிறரை மதித்து வாழ்தல்.:


சமுதாயத்தில் வாழ்கின்ற போது மற்றவர்களோடு சார்ந்து வாழ்தல் அவசியமாகின்றது. யாரை சார்ந்து வாழ்கின்றோமோ , யாரை முன் மாதிரியாக கொள்கின்றோமோஅவர்களின் மதிப்பீடுகளை நாமும் உள்வாங்கி கொள்கின்றோம் .எனக்குள்ள உணர்வுகள்உரிமைகள் எல்லோருக்கும் உண்டு என்ற மனநிலையில் அனைவரையும் மதித்துவாழ்வதே உண்மையான அன்பின் வெளிப்பாடாகும் . பிறரை மதிக்க வேண்டும்யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது , துன்புறுவோருக்கு இரக்கம் காட்ட வேண்டும்போன்றவை இயற்கையாகவே உள்ளத்தில் இருப்பவை .இவற்றை யாரும்பல்கலைக்கழகத்தில் சென்று கற்க வேண்டியதில்லை இந்த குணங்கள் ஒருவரிடம்காணப்படவில்லை என்றால் இயற்கையாகவே இருக்கின்ற ஒன்று காணாமல் போய்விட்டது என்று பொருள். சூரியன் என்றால் ஒளி தர வேண்டும்..அது போல் மனிதன்என்றால் மனிதர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும்..


முடியும் என்பது நமது தாரக மந்திரமாகட்டும்:..


வாழ்வில் உயர நம்மை நாமே அடிக்கடி உற்றுப் பார்க்க வேண்டும். நாம் நேர்மையோடுஇருக்கின்றோமோ, நம் செயல்களில் பொதுநலம் பிரதிபலிக்கின்றதா? அதில்உண்மையான அன்பு கலந்துள்ளதா பயமே வேண்டாம் எத்தகைய சக்தியும் நம்மைஒன்றும் செய்து விட முடியாது...* நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். நம்பிக்கையின் லட்சணம் என்பது நம்மிடமுள்ள விடாமுயற்சி என்ற அருங்குணம்இருப்பதே. ஊக்கத்தோடு முயற்சி செய்வோம் அச்செயலில் வெற்றி பெறுவதற்கானவழியை தெய்வமே காட்டும். வாழ்வில் உயர்ந்தவர்களையும் அவ்வப்போது உற்றுப் பார்த்து நம் முயற்சிகளைக் கூர்மைப்படுத்த வேண்டும் எதுவும் நம்மை தோற்கடிக்க கூடாது என்கின்ற வைராக்கியத்துடன் பாதகமான குறைகளை சாதகமான நிறைகளால் வாழ்வை சரிசெய்ய வேண்டும்


ஒரு விஷயத்தைப் பற்றி நாம் திரும்பத் திரும்ப எண்ணும்போதுதான், அதற்கு ஒரு சக்திகிடைக்கிறது. அது நம் ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது. ஆழ்மனத்தில் போடப்பட்டவிசயங்களை நமது ஆழ் மனமே நிறைவேற்றி வைக்கிறது. முடியும் என்று துணிந்துசொல்லி பாருங்கள் அப்பொழுது நாம் ஒரு அர்த்தமுள்ள மனுஷ. மனுஷியாகதெரிவோம்..மீண்டும் மீண்டும் முடியும் என்று சொல்ல அப்பொழுது எல்லாமேஅர்த்தமுள்ளதாகி விடும்..எல்லாமும் அர்த்தமாகி விட்ட பின்பு நம்மால் முடியாதது ஒன்றுஇல்லாமல் போகும்.. உயர்ந்த எண்ணங்கள் உள்ளவர்கள் உயர்வதை யாராலும் தடுக்கமுடியாது...


வெற்றி என்பது முடிவல்ல. அது ஒரு அழகிய பயணம்”:


வெள்ளத்தோடு போகிறவர்களை கண்டு பரிதாப்படும் மக்கள் எதிர்நீச்சல் போடுபவர்களை கண்டு கை கொடுக்க முன் வருகின்றனர்...வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட மனத்துணிவுடன் முன் வர வேண்டும் . கண்ணீர் துன்பத்தை தீர்க்காது நாம் சிந்தும் ஒவ்வொரு சொட்டு வியர்வையும் நம் உயர்வுக்கான ஏணிப்படிகளே...ஆகவே நம் வாழ்நாள் முழுவதும் வசந்தம் வீச தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும்... முயற்சிகள் வலிமை மிக்கதாகவும், அறிவுப்பூர்வமாகவும் அமைவதற்கு நம்முடைய அறிவின் பலம் அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும்...அதற்கு கற்பதைநிறுத்துவது என்பது நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவதாகும்.


கற்பது வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துவதற்கே தவிர பட்டம் பெறுவதற்கு மட்டும்அல்ல என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்...அதே போல் தொடர்பயிற்சிகள் நமக்கு கைகொடுக்கும் . அதே போல் நம் வாழ்வுக்கு நாம் கொடுக்கும்அர்த்தத்தில் தான் நம் வாழ்வும் , வாழ்வின் செயல்களும் உற்சாகம் மிகுந்ததாகஇருக்கும்.


சாண்டர் பெட்டாபி என்பவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் . ஒருமுறை அவர் ஒரு நதியின் அக்கரைக்கு செல்ல வேண்டியிருந்தது .படகுக்காரனுக்குகொடுக்க பணமில்லை எனினும் படகுக்காரனிடம் தம்பி தற்போது உனக்குகொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை அக்கரையில் விட்டு விடுகின்றாயா எனக்கேட்டார் .படகுக்காரன் யோசிக்கவே, தம்பி என்னை இலவசமாக அக்கரையில்கொண்டு போய் விட்டால் நீ பணக்காரனாக நான் ஒரு யோசனை கூறுவேன் என்றார்.


அந்த படகுக்காரனும் ஆர்வத்துடன் தலை அசைத்தான் . வழக்கத்தை விட மிகவேகமாக உற்சாகத்துடன் துடுப்பு வலித்து அக்கரையில் கொண்டு போய் விட்டான். விட்டதும் "பணக்காரனாகும் யோசனையைக் கூறுங்கள் .." என அவசர அவசரமாகக்கேட்டான் . சாண்டர் பெட்டாபி நமட்டுச் சிரிப்புடன் "இனி மேல் இப்படி யாரையும்இலவசமாக அக்கரைக்கு அழைத்துச் செல்லாமல் இருந்தால் நீ சீக்கிரம்பணக்காரனாகி விடுவாய் " என்றார்.


சுயநல எதிர்பார்ப்புகளால் நம் வாழ்வின் செயல்பாடுகளை ஆர்வமுள்ளதாக்க முடியாது. நீ மகத்தான காரியங்களை செய்யப் பிறந்திருக்கிறாய் உன் சுயநலுனுக்காகவும், பணத்திற்காகவும் சாதாரண செயல்களிலே உன் வாழ்க்கையை வீணாக்க வேண்டாம்என்ற சுவாமி விவேகானந்தரின் வாக்கிற்கேற்ப நம் செயல்பாடுகள் இருக்கவேண்டும்..பொக்கிஷமாக கிடைத்த இந்த வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்க்காமல்வேரோட்டமாகப் பார்க்க பழகிக்கொண்டால் , வாழ்ந்தால் நம்மாலும் தடயங்களைவிட்டுச் செல்ல முடியும்.


A.ரோஸ்லின்


9842073219


aaroselinegmail.com
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Arumugam Palani - SALEM,இந்தியா

    அருமையான பதிப்பு

  • sickanther - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    Good message,

  • selvaraj t - pudukkottai varikkappallam mirattunilai (po)

    நன்றி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement