Advertisement

சின்னத்திரையில் மின்னும் பைங்கிளி

வில்லெடுத்த 'வில்லி'; மவுனம் காத்த 'மலர்'. அவர் நடிப்பில் நிலவு. அவள் விழி படபடப்பின் முன்னே அன்னமும் சிறகடிக்கும். 'டிவி' சீரியல் ரசிகைகளை கிறங்க வைக்கும் இன்பநாயகி கிருத்திகா, நம்முடன் அவர் பேசியதில் இருந்து...

* பிறந்தது, வளர்ந்தது, படித்தது...?
எல்லாமே சென்னையில் தான். எம்.பி.ஏ., முடித்து, ஆறு வருஷம் 'ஷிப்பிங்' கம்பெனியில்
எச்.ஆர்., ஆக பணியாற்றினேன்.
* பிறகு எப்படி நடிப்பில்...?
சின்ன வயசுலயே அம்மா கனகவல்லியைப் பார்த்து கலைத் துறையில் ஆர்வம் வந்துச்சு. வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. உடனே நடிப்புக்கு ஓ.கே.,ன்னுட்டாங்க.
* நடிக்க வாய்ப்பு எப்படி?
'டிவி' சீரியலில் நடிக்க வர்றதுக்கு முன்னாடி, 'டிவி' சேனலில் தொகுப்பாளரா இருந்தேன். அதுவும் 'பார்ட் டைம்' தான். அப்புறம் இயக்குனர் திருமுருகன் சார், 'தேன் நிலவு' சீரியலில் என்னை அறிமுகப்படுத்தினார்.
* பிறகு வந்த சீரியல்கள்...?
பொன்னூஞ்சல், வாணி ராணி, கல்யாண பரிசு, ஆண்டாள் அழகர் என தொடர்ச்சியா நிறைய நடித்தேன்.
* சீரியலில் ஓ.கே., நிஜத்தில் எப்படி...?
நிஜத்தில்... குடும்ப பெண் கேரக்டர் தான். எப்பவுமே எதுக்கும் கவலைப்படாத, ஜாலியான ஆளு நான். என்ன சுத்தி இருக்கிறவங்கிட்ட கலகலன்னு பேசி சிரிச்சுட்டே இருப்பேன்.
* எதிர்பார்க்கும் கேரக்டர்?
முழுசா ஒரு லவ் ஸ்டோரி படம் பண்ணனும்னு ஆசை. அந்த மாதிரி சீரியல் வாய்ப்புக்காக
நடிக்க காத்திருக்கிறேன்.
* பிடித்தது சீரியலா? சினிமாவா?
ரெண்டுமே எனக்கு பிடிக்கும். வாய்ப்பு எங்கு கிடைத்தாலும் அதைப் பயன்படுத்திட்டு கலைத்துறையில் சாதிப்பேன்.
* உங்களுக்கு ரோல்மாடல்?
சரண்யா. அவங்க எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசத்துவாங்க.
* நடித்ததில் உங்களுக்கு பிடித்த கேரக்டர்?
குடும்ப பெண், வில்லி மக்கள் மத்தியில்
* உங்களுக்கான ரெஸ்பான்ஸ்?
என்னைக்காட்டிலும் நான் நடிச்ச கேரக்டருக்கு தான் நல்ல 'ரெஸ்பான்ஸ்' கிடைத்தது.
* 'டிவி' சீரியலை அடுத்து சினிமாவா?
'சென்னை 28' பார்ட்- 2, சிவகார்த்திகேயனோட 'ரெமோ' படத்திலும் நடிக்கிறேன்.
* சினிமாவில் யாரோட நடிக்க ஆசை?
உலக நாயகன் கமல், சூப்பர் ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன் என்று லிஸ்ட் பெருசா இருக்கு.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement