Advertisement

இந்தி, சமஸ்கிருதத்திற்கு அனுமதியில்லை: தமிழக அரசு

சென்னை: இந்தி, சமஸ்கிருதம் தமிழகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து தனி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், புதிய கல்வி கொள்கை குறித்து தி.மு.க., நேற்று தான் தீர்மானம் அளித்தது. இது தனது பரிசீலனையில் உள்ளது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும் எனக்கூறினார்.

இதனையடுத்து உயர்கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது தி.மு.க.,வின் தங்கம் தென்னரசு, மத்திய அரசு புதிய கல்வி குறித்து அமைத்த குழுவில் அதிகாரிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். கல்வியாளர்கள் யாரும் இல்லை. இந்த கல்வி கொள்கை மாநில அரசின் நிலை என்ன என கேள்வி எழுப்பினார்.

இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பதிலளித்து பேசியதாவது: புதிய கல்வி கொள்கை குறித்து மத்திய அரசு, மாநில அரசிடம் கருத்து கேட்டுள்ளது. தமிழகத்தின் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து பதில் அளிக்கப்படும்.
தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் எந்த வகையிலும் அனுமதிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் அனுமதிக்கப்பட மாட்டாது. இதற்கு எந்த வகையிலும் உதவி செய்யப்படாது. புதிய கல்வி கொள்கை வரைவின் சில உள்ளீடுகளை மட்டுமே மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதற்கு விரைவில் பதில் அனுப்பப்படும். மாநில அரசின் நலன், கல்வி,, கலாசாரம், உரிமைகள் பாதிக்காத வகையில் மத்திய அரசுக்கு பதில் அனுப்பப்படும். சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்படும் எனக்கூறினார். இந்த கருத்தை தானும் ஏற்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறினார்.

இதனை வரவேற்பதாக கூறிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து தனி தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் எனக்கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (219)

 • M Radhakrishnan - Bangalore,இந்தியா

  வெளிநாட்டுக்காரன் சொன்னாதான் நாங்க நம்புவோம். அது வரை சமஸ்க்ரிதம் செத்த மொழிதான். என் அன்பு தமிழ் மக்களே தயவு செய்து எதை படியுங்கள் s://www.linkedin.com/pulse/nasa-scientists-hail-sanskrit-only-perfect-language-sethuraman

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  1. தமிழ் ஒரு இனிமையான மொழியென்ற பேச்சுக்கே இங்கே இடமில்லை இது இங்கே விவாதப் பொருளுமில்லை. தமிழை வெறும் இனிமையான மொழியென்று மட்டும் குறிப்பிடுவது நம் அறியாமையின் வெளிப்பாடே. தமிழன் பிற மொழியைப் புறக்கணித்தான் என்றப் பேச்சுக்கும் இங்கேயும் இடமில்லை இதுநாள் வரைக்கும் இப்படிப் பட்ட நிலைப் பாடு நம்மிடம் இருப்பதாகத் தெரியவில்லை. உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தன் தாய் மொழியை மறக்காமல் நேசித்து வாழவேண்டும் என் அன்புத் தமிழர்களிடம் இதுதான் கோரிக்கை. 2. அன்று 1965-ல் சென்னை மாநிலமாக இருந்த தமிழகத்தில் கட்டாய இந்தி மொழித் திணிப்பை தமிழர்கள் எதிர்த்தார்கள் பலர் உயிர் நீத்தார்கள். இன்றும் அந்த வடு தமிழர் நெஞ்சங்களிலிருந்து இன்னும் நீங்கவில்லை. தமிழ் நாட்டில் வட மொழியின் ஆக்கிரமிப்பால் தமிழர்கள் நிறைய பாதிக்கப் பட்டுள்ளார்கள் நிறையவும் இழந்துள்ளார்கள். இந்த மொழியின் ஆக்கிரமிப்பால் நம் மொழி சிதைந்ததும் உண்மை. இதை பற்றி விரிவாக பேசமுடியாது. மறை மொழி அடியார்களின் ஆய்வு நூட்களை கொஞ்சம் படித்துப் பார்த்தால் நமக்கு பல உண்மைகள் தெரிய வரும். 3. காலஞ்சென்ற குன்றக் குடி அடிகளார் காவேரி விவகாரம் தொடர்பாக முன்பு தமிழர்களிடம் ஒன்றைச் சொன்னார். - “தமிழர்களிடம் மொழிப பற்று என்றவொன்று இருந்திருந்தால் காவேரி விவகாரம் எழுந்திருக்குமா?” என்றும் கேட்டார். காவேரி ஆற்றுக்கும் மொழிப பற்றுக்கும் அப்படி என்ன சம்பந்தம்? அன்று பலக் காலத்திற்கு முன்பு, இன்றையத் தென் மாநிலங்களைத் தழுவிய அகன்றத் தமிழகம் இன்று பிற மொழிகளின் சிதைவால் நம் மொழியும் சிதைந்துப் போய்விட்டது. தமிழர்களும் சிதைந்து பிரிந்துப் போய் விட்டார்கள். காவேரியும் பறிப் போய்விட்டது. இதைத்தான் அடிகளாரும் மறைமுகமாகக் குறிப்பிட்டார். சுதந்திர இந்தியாவில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப் படும் போது தமிழகம் எவ்வளவோப் பகுதிகளை இழந்தது. இது வரலாறு. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் நாம் பேச வேண்டும். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கேரளாவென்ற மாநிலம் இல்லை. இன்று இருக்கின்றது. ஏனென்று சிந்தித்தால் விடைக் கிடைக்கும். நாம் சிந்திக்க வேண்டும். 4. நீங்கள் சமஸ்கிருதத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். இங்கிலாந்தில் ஏற்பட்டத் தொழில் புரட்சியால் ஆங்கிலம் விஞ்ஞானத் துறையில் மிகக் குறுகியக் காலத்தில் வெகுவளர்ச்சிப் பெரும் போது, என்றோ மருத்துவம், வான சாஸ்திரம், கணிதம் இவற்றில் வளர்ச்சிக் கண்ட வடமொழி மட்டும் ஏன் இன்றைக்கும் அப்படியேயுள்ளது? உங்களை போன்றுதான் முன்பு வடமொழியில் ஆர்வமாகியிருந்தேன். வடமொழியைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப் பட்ட பல நூட்களைப் படித்தேன். ஆனால்,இன்று நம் தாய் மொழியை, தமிழை சைவமாகக் கண்டபின், சைவ சித்தாந்த உருவமாகவும் கோட்ப்பாடுகளாக கண்டபின்பு வடமொழியின் மேலிருந்த நாட்டம் என்றோப் போய் விட்டது. 5. மேலும் திருக்குறளை சைவ சித்தாந்த நூலாக போற்றிப் படியுங்கள். குறள் மெய்ஞ்ஞான நூல் குறளில் பொதிந்துள்ள பல அரிய உண்மைகள் நமக்குத் தெரிய வரும். தமிழ் படித்தால் வாழ்ந்திட முடியுமாவென்று சுயமரியாதைக் கெட்டு பலர் இன்றுக் கேட்கின்றார்கள். திருவள்ளுவரின் பதில், "அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவில்லார் என்னுடைய ரேனும் இலர்". நாமெல்லோரும் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் அறிவு தன்னாலே வளரும்

 • Nila Sakthi - Coimbatore,இந்தியா

  தமிழக கட்சிகளின் முடிவு வரவேற்க்க வேண்டும். இந்தியா முழுவதும் எல்லோரும் ஆங்கிலம் கற்கின்றனர். அதையே அனைவரும் தொடர்பு மொழியாக பயன் படுத்தலாமே? பிற மாநிலங்களுக்கு இடம் பெயரும் தமிழர்கள் அந்த மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் தமிழ் கற்கலாம். மற்ற மாநிலத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு இடம் பெயர்பவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் அவர்கள் மொழியை கற்கலாம். இவ்வாறு மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்பவர்கள் 5% தான். மற்ற 95% மக்கள், அவர்கள் மாநில மொழி மற்றும் ஆங்கிலம் என்று நிம்மதியாக வாழலாம். ஹிந்தி மற்ற மாநில மொழியை தள்ளி விடுகிறது. ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்குளுக்கு சலுகை தருவதாக அமைகிறது. இவர்களின் போராட்டம் மற்றும் கொள்கை மற்ற மாநிலங்களுக்கும் போய் சேர வேண்டும்.

 • Subramaniya prabu.G - (sivagangai ) Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த இரண்டு மொழிகளையும் கற்று/புரிந்து கொண்டால் தேசிய மற்றும் மற்ற மாநில கட்சிகள் உள்ளே புகுந்து விடும் என்ற பயம் இருக்கத்தானே செய்யும். அப்புறம் நாம யார்கிட்ட போய் தமிழ் ஒன்றே எங்கள் மூச்சு தமிழ் ஒன்றே எங்கள் பேச்சுன்னு அரசியல் பண்றது...

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஹாஹ் ,ஹாஹ்,ஹாஹ்,(கபாலி ஸ்டைல் )தமிழன் வாயில சமஸ்க்ரிதம் நுழையாது.ஹிந்தியும் அப்படியே.இதை நாங்க ஒத்துக்குவோமா?ஆனா ஒன்னு வயித்து பசின்னா போதும் நாங்க குவைட்த்துல போயி அரபியும் பேசுவோம் கக்கூஸும் கழுவுவோம்.எங்க கலாச்சாரத்தை என்னானு நினைசீங்க?செம்மொழி இல்ல நாங்க பேசுறோம்?(இது எப்படி இருக்கு?)

 • Kunjumani - Chennai.,இந்தியா

  மறத்தமிழன் ஹிந்தி, ஆரிய மொழி சமஸ்கிருதம் படிக்கக்கூடாது. ஆனால் கட்டாயம் அரபி மொழி உருது படிக்கவேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உருதை ஆட்சிமொழியாக அறிவிப்போம் என்ற ஒட்டு பொறுக்கிகளும், அதிமுக திருடர்களும் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழிகளை எதிர்ப்பது ஏனோ?

 • Krishna - Dindigul,இந்தியா

  தமிழ் நாட்டில் எந்தெந்த நாயெல்லாம் ஜெர்மன் பிரெஞ்சு மொழி படிச்சா ஒண்ணுமில்ல... ஆனா ஹிந்தி படிச்சா தமிழ் அழிஞ்சுடும் னு ஒளருதோ.... அந்த நாயிங்க சாவுற வரைக்கும் தமிழும் தமிழனும் வளரவே மாட்டான்..... கடைசி வர ஒன்னு அடிமை வேலை... இல்ல ஆத்தா குடுக்குற ஓசி கஞ்சி குடிச்சே நாசமா போகவேண்டியதுதான்.... ஏன்டா ஹிந்தி சமஸ்க்ருதம் உங்கள விருப்ப பாடமா தானடா எடுத்து படிக்க சொல்லறானுங்க....நீ படி இல்ல படிக்காம நாசமா போ... ஏன் மத்த படிக்கிறவன் குடிய கெடுக்குறீங்க...

 • Rajesh - Kolkata,இந்தியா

  இவை எல்லாம் அரசியல்வாதிகளின் கண்துடைப்பு செயல்கள். ஹிந்தி படித்தால் தமிழை ஒதுக்கிவிடுவார்களோ மக்கள் என்ற பயத்தின் வெளிப்பாடு. தமிழ் மொழியை தொழில் ரீதியாக மற்றும் விஞ்ஞான ரீதியாக முன்னேற்ற தகுந்த முயற்சி எடுக்கப்படவில்லை. தமிழன் வேறு மாநிலம் போய் பிழைக்க வழி இல்லாமல் செய்வது தான் இதனால் ஆகும் ஒரே பலன். பிற மாநிலத்தவர் 3 - 4 மொழிகளில் சரளமாக பேச கூடிய திறமை படைத்தவர்களாக திகழ்கின்றனர். ஆனால் தமிழனுக்கோ தமிழ் மற்றும் ஆங்கிலம் தான் பெரும்பாலும் தெரியும். இதனால் பிற மாநிலத்தவர்களை விட இந்த விஷயத்தில் பின் தங்கி இருக்கின்றனர். இனிமேலாவது தமிழர்கள் விழித்து எழுந்து இப்படிப்பட்ட பிற்போக்கான கொள்கைகளை உதறி தள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

 • ராம.ராசு - கரூர்,இந்தியா

  விருப்பம் உள்ளவர்கள் ஹிந்தி, சமஸ்கிருதம் மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் கற்பதற்கு எந்த அரசியல் தலைவரும் தடுக்க முடியாது, தடுத்தது இல்லை. தொன்மையான தமிழ் மொழியை, தமிழ் நாட்டிலேயே தவிர்த்து, ஹிந்தி, சமஸ்கிருதத்தை வேண்டாம் என்றுதான் சொன்னார்கள்... சொல்லுகிறார்கள். எதையாவது சொல்லி திமுக போன்ற கட்சிகளை குறை சொல்லவேண்டும் என்பதற்காக, ஊடகங்கள் தமிழ் ஆர்வலர்களைக் கிண்டல் செய்கிறார்கள். ஒரு நாடு வளர்ச்சி பெற வேண்டுமானால் தமிழ் மொழியில் படிப்பது மிக அவசியம். ஏதோ தமிழ் படிப்பதால் வேலை வாய்ப்பு இல்லை என்றும், ஹிந்தி படித்தால் வேலை வாய்ப்பு உண்டு என்பது போல பரப்புரை செய்யப்படுகிறது. கரூர், திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், ஹிந்தி மட்டுமே தெரிந்தவர்கள், குடும்பம் குடும்பமாக வேலை செய்து பிழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்... இங்கேயே நிரந்தரமாக வாழ்ந்தும் வருகிறார்கள். 2014-15 ஆண்டு இந்திய அளவில் "மொத்த உள்நாட்டு உற்பத்தி" என்று எடுத்துக்கொண்டால் மஹாராஷ்டிராவிற்கு அடுத்து இரண்டாவதாக இருப்பது தமிழ் நாடு. 2001-02 லிருந்து எடுத்துக்கொண்டால் அது 148,861 கோடியிலிருந்து 2015-16 ல் 850,319 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் ஊடகங்கள் ஆகா ஓகோ என்று புகழுகின்ற குஜராத்தில் அது 123,573 லிருந்து 765,638 கோடியாகவே உள்ளது. இதற்க்கு முந்தைய காலகட்டங்களிலும் இதே போன்ற வளர்ச்சியையே தமிழ் பெற்று வந்துள்ளது. அப்போதெல்லாம் இங்கு ஆட்சி செய்த கட்சியில் திமுகவிற்கு மிக முக்கியப் பங்குண்டு. அவசியம், தேவை என்று வரும்போது எவரும் எந்த மொழியையும் கற்றுக்கொள்வார்கள். வட கிழக்கு மாநிலங்களில் எத்தனையோ தமிழர்கள் வேலை செய்பவர்களாக, தொழில் அதிபர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் அங்குள்ள மொழியை அங்கு சென்ற பிறகுதான் கற்றுக்கொண்டார்கள் தவிர அந்த மொழியைக் கற்றுக்கொண்டு அங்கு செல்லவில்லை. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த, எழுதப் படிக்காத தெரியாதவர்கள் பிற மாநிலங்களில் பெரிய அளவில் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்துகொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் தமிழ் நாடு கண்டிப்பாக இடம் பெறும்.

 • kvRavikumar - tiruchengode

  முத்தமிழ் காவலர் மகள் பெயர் ஜெயஸ்ரீ. தாத்தா, அம்மா பெயர்கள் சுத்தமான சமஸ்கிருத பெயர் தானே! தமிழை வேற மொழி காரன் படித்தால் நமக்கு என்ன பயன்? எவன் படிக்கறானோ அவனுக்கு தானே பயன். இதுதான்டா அரசியல்! நாங்கள் மட்டுமே தேவையான மொழி படிப்போம். எல்லாம் படிக்காதே! படித்தால் தமிழ் அழிந்துவிடும். ஆமாம்.

 • santanam - chennai,இந்தியா

  I was thinking, still thinking, Jaya would be pragmatical in Educational policy in Tamil Nadu. Should she not think about the future of the younger generation? Should she not take the correct steps to promote the youth in Tamil Nadu shine everywhere in the world? DMK Partymen and other politicians do not care for the future of the Tamil Youth. My humble request to the Tamil Nadu CM is to ignore these fanatics. and take correct steps to join in the National interest.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  எப்படியும் தமிழ்நாட்டை உருப்பட விடமாட்டோம் என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு ஓட்டு போட்டதற்கு, ஊரில் பிச்சை எடுத்து, அம்மா உணவகத்தில் உண்டு, இலவச அரிசியை வித்து, டாஸ்மாக் குடித்து, கும்மாளம் போட்டுக்கொண்டு, தமிழ்நாட்டுக்குளேயே இருப்போம். வெளி இடங்களுக்கு போனால் இந்த அளவு இன்பம் எங்களுக்கு கிடைக்குமா?

 • m.viswanathan - chennai,இந்தியா

  ஏற்கனவே விரிந்து பறந்து கிடந்த தமிழகம் கடற்கோள் விழுங்கி குமரி கண்டம் என பேச படுகிறது . தற்போதைய தமிழகமும் ,இங்குள்ள அரசியல் வியாதிகளால் , ஈன மான தலைவர்களால் , விரைவில் கடல் கொண்டு போகும்

 • Madhu - Trichy,இந்தியா

  'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' இது ஔவையின் வாக்கு. இதைத்தான் கற்க வேண்டும் இதைக் கற்கக் கூடாது என எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. 'களவும் கற்று மற' என்று கூடத் தமிழில் சொல்லப் பட்டிருக்கிறது. களவைக் கற்றுக் கொண்டாலும் அற வழியில் நட என்பதுதான் இதன் பொருள். நுட்பமாகக் கவனித்தால் ஒன்று புரியும். திருடுபவன், திருட்டைக் கண்டு பிடிப்பவன் இருவருக்குமே மற்றவரது வழி முறைகள் தெரிந்து இருக்கும். திருடன் எப்படி மாட்டிக் கொள்ளாமல் திருடுவது எனக் கற்கிறான் கண்டு பிடிப்பவனோ எப்படித் திருடியிருக்க முடியும் என்பதைத் தடயங்கள் அடிப்படையிலும், அனுபவத்தின் மூலம் கற்று அறிந்து திருட்டைக் கண்டு பிடிக்கிறான். எனவே, அறிவுக்கு எல்லை இல்லை. அறிவு வேண்டுமெனில் கற்க வேண்டும் மொழியோ, கலையோ, கணிதமோ, சங்கீதமோ, கணினியோ கற்றால்தான் அது உங்கள் வசப்படும். இதற்கு மாணவப் பருவமே ஏற்றது.5,6 வருடமாகத்தான் எனக்கு கணினியில் தமிழை எப்படிக் கையாள்வது எனத் தெரியும். பலருக்கு இன்னமும் தெரியாமல் இருக்கலாம். கற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடாமல் இருக்கலாம். ஆனால் இப்போது எனக்கு இந்த அனுகூலம் கிட்டியுள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஒருமுறை நான் ஹாங்காங் சென்ற போது, விமானத்தில் என்னுடன் பயணம் செயத இந்தியர் ஒருவர் சீன நாளிதழை நம்மூர் தினமலர் பேப்பரைப் படிப்பது போல் மிக மும்முரமாகப் படித்துக் கொண்டு வந்ததைக் காண நேரிட்டது. எனக்குப் பொறாமையாகத்தான் இருந்தது. என்ன செய்ய? நான் சீன மொழியோ, மாண்டரினோ கற்றுக் கொள்ளவில்லையே?

 • SiVAN Balan - Chennai,இந்தியா

  என்ன சாப்டுறதுனு முடிவு செய்றதுக்கு எப்படி ஒவ்வரு தனி மனிதக்கும் உரிமை இருக்கிறதோ அதே மாதிரி என்னென்ன மொழி படிக்கிறதான்னு முடிவு பண்றதுக்கு அரசியல் வாதிகளுக்கு யாரு அதிகாரம் கொடுத்தது? குறிப்பா இந்த திராவிட காட்சிகள் மாட்டு உணவு விஷயத்திலே தனி மனித உரிமை பத்தி வாய் கிழிய பேசி விட்டு இப்ப மொழி விஷயத்திலே தனி மனிதன் உரிமையை காலால மிதிக்குறங்கே உங்கள விட எங்களுக்கு தமிழ் மேல பற்று இருக்கு அதே நேரத்திலே இந்தியா உள்ள அனைவரும் ஒரு மொழியை தெரிஞ்சுகிறதுலே ஒண்ணும் தப்பு இல்லை

 • Suresh Yesubalan - coimbatore,இந்தியா

  விரும்பிய உணவு நா சுவை அறியும் .திணிக்கும் உணவு குமட்டலை கொடுக்கும் .மொழிதான் இனத்தின் அடையாளம்

 • Stalin - Chennai,இந்தியா

  சான்ஸ்க்ரிட் அனுமதிக்க படாதது சந்தோசம் தான், ஆனால் ஹிந்தி அனுமதிக்கப்படாதது முட்டாள் தனம்

 • mohan - chennai,இந்தியா

  மக்களை தெளிவாக புரிந்து கொண்டு உள்ளனர், தமிழக அரசியல்வாதிகள். இப்பொழுது எதிர் கட்சி வாயை மூடி கொண்டு இருக்கும். 90% மக்கள் முழிப்பர். என்னடா... இது.. என்று... ரெண்டு கட்சியும் வேண்டாம் என்று சொல்றாங்க ... எதை வைத்து வேண்டாம் என்று சொல்றாங்க... என்று தெரியாமல்....நம்ம முட்டாளா இருக்கோம், நாம் இந்தி வேண்டாம் என்று சொல்லும் ஆட்களுடன் சேர்ந்து மக்கள் போராடினால், ஒட்டு எதிர்கட்சிக்கு போய்விடும். அதனால் எதிர் கட்சிக்கு முன் நாமளே வேண்டாம் என்று சொல்லிவிட்டால்... என்ற விஷயம் தெரிந்து மக்கள் என்ன முன்னேற போகிறார்களா.... இல்லை... அது தான் தமிழ் நாடு...இப்பொழுது இருக்கு ஆளும் கட்சி நல்ல கட்சிதான்... ஆனால் மக்கள் சரியில்லையே... என்ன செய்வது...நாட்டின் எதிர்கால முன்னேற்ற நலன் கருதி இந்தி சமஸ்கிருதம் கொண்டு வந்தால், அடுத்த தேர்தலில் ஒட்டு கிடைக்காது...பின் என்ன செய்வது...

 • Tamilan - Doha,கத்தார்

  ஹிந்தி, சமஸ்க்ரிதம் படிச்சா உருப்படுவோம் என்று எந்த அறிவாளி சொன்னது. ஹிந்தி படிச்சவனை விட தமிழ் படிச்ச நாம் நல்லா உருப்பட்டுத்தான் இருக்கிறோம். இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் தமிழகமும் ஓன்று. ஹிந்தி படிச்சவன் தினமும் 1000. பேர் வேலை தேடி சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஹிந்தியையும், சமஸ்கரித்ததையும் ஏற்று கொண்டால் வடநாட்டு ஆதிக்கத்தையும், சாதி ஆதிக்கதையும், வர்ணாசிரமத்தையும், பிராமணியத்தையும் ஏற்பதாகி விடும்.

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  ஹிந்தி மொழியையே அனுமதித்தால் தமிழ் தொன்மை கெட்டுவிடும் மற்றும் தமிழ் மொழி அழிந்துவிடும் என்றெல்லாம் சொல்லி 1960h /1970 வருடங்களில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் விளைவாக அப்போ இருந்த பிரதம மந்திரி நேரு அவர்களின் அறிவிப்பின் படி ஹிந்தி எதிரிப்பு போராட்டம் நின்றது.. சுமார் 55 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் மொழி வளர்ந்திருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்று தான் பெரும்பாலான தமிழறிஞர்கள் சொல்லுவார்கள். தமிழை பேசுவதையே கேவலமாக நினைப்பவர்கள் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. எனவே ஹிந்தி யாவது ஒருவிதத்தில் வட இந்தியாவில் செல்பவர்களுக்கு உபயோக ப்படும். ஆனால் இந்த சமஸ்கிருதம் மொழி அழிந்துவிட்ட மொழி அதை மாணவர்களிடம் திணிப்பதால் எந்த பயனுமில்லை. உதாரணமாக சமஸ்கிருதத்தை தன்னுடைய பெயரில் தமிழ் பெருமையாய் கண்டு " சூர்ய நாராயண சாஸ்திரி" அவர்கள் "பரிதிமாற் கலைஞர்" என்று தன பெயரை மாற்றி கொண்டார். நிலைமை அந்த காலத்திலே அப்படியிருக்க, இந்த காலத்தில் சமஸ்கிருதத்தை படி என்று மாணவர்களிடம் சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  தமிழகத்தில் ஒரு ஆயிரம் நபர்கள் மட்டுமே சமஸ்கிருதத்தை ஆதரிக்கிறார்கள் என்பதுமட்டும் உண்மை..

 • Paranthaman - kadappa,இந்தியா

  இந்தி பேசும் வட இந்திய கடசிகளின் மைய ஆடசியில் தேயும்தெற்கிலிருந்து செல்லும் தமிழன் அமைச்சராகி பதவி சுகம் காணலாம். பணம் பண்ணலாம். ஆனால் அவர்கள் பேசும் மொழிகளை தமிழர் பேசக்கூடாது என்பது என்ன ஞாயம்..

 • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

  இங்கே ஹிந்தி வேணும்ன்னு சொல்ற யாருமே எந்த ஒரு போராட்ட காலத்துக்கும் போறவங்க இல்லை,ஆனால் வேண்டாம் ன்னு சொல்ல பல கோஷ்டி ரெடியா இருக்கங்க(எல்லா கடசியிலுமே கொத்தடிமைகள் உள்ளனர்)ஆக ஹிந்தி வராது, "மகிழ்சசி"

 • Santhosh Kumar - Chennai,இந்தியா

  ஹிந்தி ஸம்ஸ்க்ருதத்திற்கு அனுமதியில்லை, நாடும் உற்ப்படப் போவதில்லை.

 • Paranthaman - kadappa,இந்தியா

  வடக்கே வாழுது தெற்க்கே தேயுது. என்ற திமுகவின் இந்த பொறாமை உணர்வால் இந்திய அரசினர் தமிழர்களை கேவலமாக எண்ணுகிறார்கள்.

 • Santhosh Kumar - Chennai,இந்தியா

  தமிழ் நாடு உருப்பட்டாற்போலத்தான். தமிழக மக்களுக்கு சுரணை என்று ஒன்று உண்டென்றால், தமிழ் நாட்டில் உள்ள ஆறு கோடி பெரும் NOTA எனப்படும் ஒருவரும் தகுதி இல்லாதவர் என்று அடுத்த தேர்தலில் போடா வேண்டும். இன்று சட்டசபையில் ஹிந்தி சம்ஸ்க்ருதம் கற்றுக்கொள்ள கூடாது என்று சொல்லும் ஒவ்வொரு அரசியல் வியாதிகளின் பிள்ளைகளும் இந்த மொழிகளில் படித்து முன்னேறுகின்றன. தமிழ் நாட்டின் சாபக்கேடு திராவிட கட்சிகள். எனக்கு அதிமுகவை பிடிக்கும், ஆனாலும் இந்த விஷயத்தில் தமிழக கட்சிகள் எல்லாமே தருதலைகள்தான். நாட்டை கெடுக்க வந்த கழிசடைகள்தான்.

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  GOOD ...HINDI & SANSKRIT ARE LIKE EXTRA LUGGAGE ....ENGLISH & தமிழ் ARE MORE THAN ENOUGH ,....[ மாங்கல்யம் தந்துனானே நமக்கு தேவையில்லை அண்ணே..]

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  மத்திய அரசின் முட்டாள்தனமான முயற்சி, சமஸ்கிருதத்தை வளர்க்க வேண்டும் என்றால் எல்லா இந்துக்களையும் கோவிலுக்குள் நுழைய அனுமதியுங்கள், அவர்கள் தாமாகவே சமஸ்கிருதத்தை படிப்பார்கள். இந்து ஆராதனைகள் சமஸ்கிருதத்தி சொல்லப்படுகிறது, எங்கே மந்திரங்கள் சொல்லப்படுகிறது அங்கே தலித் களுக்கு அனுமதி கிடையாது, பிறகு ஏன் அவன் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்?

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  விருப்பம் உள்ளவர் ஹிந்தி சமஸ்கிருதம், அரபி, ஜெர்மனி, பெங்காலி உருது என்று எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் படிக்கட்டும், ஒரு மொழியை படிப்பது என்பது just matter of 3 months time. ஆனால் கண்டிப்பாக படிக்க வேண்டும் ஏற்று சொல்வது சரியல்ல. அதுவும் ஒரு குறிப்பிட்ட மொழியை (சமஸ்கிருதம்) படிக்க வேண்டும் என்று ஏன் எல்லோருக்கும் பொதுவான ஒரு அரசு சொல்கிறது.....? இதே அரசு தமிழை எல்லா இந்தியர்களும் படிக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா....? முடியாது. ஏனென்றால் தமிழ் திராவிட மொழி, சமஸ்கிருதம் பார்ப்பன மொழி. அது சரி சமஸ்கிருதம் படிப்பதனால் எந்த கோட்டையை ஒருவன் பிடிக்க முடியும்....? கோவிலில் மணி அபிப்பதற்குத்தான் இந்த மொழி உதவும். சமஸ்கிருதத்தில் விலை மதிப்பில்லா நூல்கள் இருக்கிறதென்றால் அதை மக்கள் பயன்பாட்டில் உள்ள பிற மொழிகளில் மொழி பெயர்த்து மக்களுக்கு வழங்கினால் போதுமே.....?

 • surath - sohar,ஓமன்

  தமிழ் நாட்டை விட்டு வெளில வேலை செய்கிற 95% பேருக்கு ஹிந்தி பேச தெரியும் என்பதே உண்மை ....

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  ஹிந்தி, சமஸ்கிருதம் அனுமதிக்கப்படாது, சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்படும். இந்த படித்த முட்டாள்களுக்கு தெரியாது, முஸ்லிம்களில் 90 சதவீதம் பேருக்கு ஹிந்தி தெரியும், வீட்டில் ஹிந்திதான் பேசுவார்கள் என்று.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  திராவிட ஆட்சியில் நடந்தது இது ஒன்றே “டாஸ்மாக்னாடு ஆகியது தமிழ்னாடு”. இந்தி, சம்ஸ்க்ரிதம், ஃப்ரெஞ்சு, ஜெர்மன் விருப்பப்பாடம், இஷ்டமிருந்தால் கற்றுக்கொள்ளுங்கள் இல்லையென்றால் விட்டு விடுங்கள், இதை விடுத்து இது திணிப்பு என்று கூறுவது முட்டாள்தனமானது. இதைச்சொல்லித்தான் தமிழில் பொறியியல்என்று சொல்லி அதில் யாரும் சேராமல் அது பொறியல் ஆகி விட்டது இப்போது. ஜப்பானில்/சீனாவில் ஜப்பானிய/சீன மொழியில் பொறியியல் கற்றால் இங்கும் அப்படிக்கற்க வேண்டும் என்று எவனடா நினைத்தது? அவன்/அவன் சுற்றத்தார் குழந்தைகளை அதை எடுத்துக்கொள்ள வலியுறுத்தவேண்டும் முதலில்.

 • K.Palanivelu - Toronto,கனடா

  அக்காலத்திலிருந்து தமிழக அரசின் இந்தி,சமஸ்க்கருத மொழி துவேஷத்தால் விளைந்த மொழிக்கொள்கையால் பாதிக்கப்பட்டது தமிழ்நாட்டு மக்களே தவிர அரசியவாதிகளின் குழந்தைகள் அல்ல.

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  எந்த அந்நிய மொழிக்காரனும் தமிழனை தமிழ் கலாச்சாரத்தை _________ படுத்தவில்லை அவர்களை போன்று ...மன்னர்களை கைக்குள் போட்டு மூளை சலவை செய்து அவர்கள் வளர்ந்த கதை ஊரறியும் 100 -200 வருடங்களுக்கு முன் இவர்கள் என்ன செய்தார்கள் என்பது நாடறியும் .இன்று திராவிட இல்லை தமிழ் கலாச்சாரம் சமஸ்கிருதம் என்று ஆகிவிட்டது .நாம் செய்யும் ஒவொரு செயலிலும் நம்மை அறியாமல் உள்நுழைக்கப்பட்டுவிட்டது . '

 • RP Iyer - Bengaluru,இந்தியா

  பிற்போக்குத்தனமான கொள்கை. தமிழர்கள் உருப்படக்கூடாது என்று முடிவு எடுத்துவிட்டார்கள்,

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  தமிழகத்தில் மாயக்கல்வி. குரு மீது தொடர்ந்து தாக்குதல் .தமிழகத்தில் கல்வி என்பது ஒரு தொலைநோக்குடனோ, மாணவர்களிடம் மனித மதிப்பீடுகளை உருவாக்கி , உண்டாக்கி, தேசத்தை , உலகத்தை நிர்மாணிக்கவோ என்றில்லாமல் ஒரு தொழிலாக நடத்தப்பட்டு வருகிறது. அரசு நடத்தும் கல்வி கூடங்கள் , அரசு நிதியில் நடத்தும் கல்வி கூடங்கள் , அரசு நிதியில் நடத்தப்படும் சிறுபாண்மை கல்வி நிறுவனங்கள், மற்றும் சுரண்ட நடத்தப்படும் தனியார் கல்வி நிறுவனங்கள், சந்துபொந்து என ஐந்து வகை அமைப்பு ரீதியான கொள்ளை நடக்கிறது . மாயாஜாலம், விளம்பரம் , மினுமினுக்கும் சீருடை , ஆடம்பரத்துடன் உலா வரும் பேருந்துகள் , போன்றவை புகுத்தப்பட்டு கல்வி ஒரு மாயாஜால பொக்கிஷமாக அதை அடைவதற்கு , அலாவுதீனும் , அவர் மந்திரமும் கட்டாயத் தேவை போல தோற்றம் கொடுக்கப்படுகிறது. பணம் படைத்தவர்க்கு, நடுத்தர வர்க்கத்திற்கு , மற்றும் உயர்மட்டத்தவருக்கு என சந்தை படுத்தப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது. மனிதனுக்காக , மனித மேம்பாட்டிற்காக தமிழகத்தில் கல்வி வடிவமைக்கப்படவில்லை. போட்டியும் , முந்தும் முறையும் , முந்துபவர்களுக்கு இதர மாணவர்களை பின் தள்ளும் முறையும் , முட்டாளாக்கும் முறையும் வடிவமைக்கப்பட்டு அதை செயல்படுத்தும் கல்வி நிறுவனங்கள் சிறந்த கல்வி நிறுவனங்கள் என முத்திரை குத்தப்படுகிறது. மாணவர்களும் பெற்றோர்களும் , இந்த மாய அலாவுதீன் குகையை தேடி அலைகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க , மாணவர்கள், பெற்றோர்கள் மனநிலையை புரிந்த கல்வி வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் பல கல்வி தந்தைகளை பார்த்து வருகிறது இன்றய டாஸ்மாக் தமிழகம். பல திடீர் கல்வி தந்தையர்கள் தற்போது தமிழகத்தில் , மருத்துவ கல்வி , பொறியியல் கல்வி, கலை கல்லூரிகளை நடத்தி, கூட்டாக சேர்ந்து விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். தமிழகத்தில் தற்போது இவர்களால் MBBS படிப்பு 40 லட்சம் முதல் ஒரு கோடி வரையும் , மருத்துவ மேல் படிப்புக்கு 1 கோடியில் இருந்து 2 கோடி வரை , பொறியியல் படிப்புக்கு 4 லட்சம் முதல் - 10 லட்சமும் வரையில் , கலை கல்லூரிகளில் , 40 ஆயிரம் 1 லட்சம் வரை நன்கொடை/ விலைபேசப்படுகிறது. மழலை பள்ளி LKG , UKG சேர்க்க 1 லட்சம் முதல் 2 லட்சம் வரையும் , பள்ளி படிப்பு தொடர்வதற்கு 5 முதல் 10 லட்சம் வரை நன்கொடை வசூல் செய்யப்படுகிறது. இதில் LKG படிப்பிற்கு ஆளுநர் வரை சிபாரிசு கேட்க்கும் பள்ளி நிர்வாகம் பல உள்ளன தமிழகத்தில் .மட்டுமின்றி உணவு கட்டணம், கல்வி கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம், டியூசன் கட்டணம், புத்தக கட்டணம் , என்றும் எகிறும். செல்வந்தர் வீட்டு மாணவர்கள் தவித்து , தத்தளித்து பள்ளி படிப்பை முடித்து, தொழில்நுட்ப்ப , மருத்துவ , பொறியியல் கல்வியை விலைக்கு வாங்கி மேல் படிப்பை தொடர முடிவதும் , மிகச் சிறந்த அறிவாளி ஏழை மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பை தொடர முடியாமல் போவதும் அவல நிலை. தற்போது தமிழகத்தில் சுமார் 1, 50, 0000/- மாணவர்களும், மாணவிகளும் இந்த கல்வி வியாபாரத்தில் மாட்டிக்கொண்டுள்ளனர் . தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறிவுக்கான தேடல் , அதுவும் பள்ளி கல்லூரி மூலம் தரமான கல்வி தேடல் அதிகரித்துள்ளது. தமிழக மாணவர்களும் , பெற்றோர்களும் தரமான கல்விக்கு செலவு செய்திடவும் தயங்குவதில்லை. இந்த தேடலை புரிந்து கொண்ட கல்வி வியாபாரிகள் மயில் என்று கூவி வான்கோழிகளைவிற்பனை செய்து வருகிறார்கள். இவர்களை கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கும் கல்வி அதிகாரிகள் இந்த சூழலை பயன்படுத்தி கொண்டு , பள்ளிகள் , கல்லூரிகள் அங்கீகாரத்தில் தொடங்கி , கண்காணிப்பு வரை பணம் பார்த்து வருகிறார்கள். கல்வித் துறையில் லஞ்சமும் , ஊழலும் தலை விரித்து ஆடுகிறது. இன்றுள்ள தமிழக கல்வி கூடங்கள் மாணவர்களையும், பெற்றோர்களையும் தாங்கள் எலிப்பொறி யுக்தியை பயன் படுத்தி, ஒரு முறை மாட்டிக் கொண்டால் தொடர்ந்து கல்வி சிறையில் சிறைப்படுத்தி விடுகிறார்கள். தமிழக கல்வி கூடங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களை செதுக்கும் , சீரமைக்கும் , புத்தி தீட்டும் , தகுந்த கற்பிக்கும் சூழல் இல்லாமல் தவித்து வருகிறார்கள். பெருவாரியான கல்வி தந்தையர்கள் பள்ளி படிப்பை முடிக்காதவர்களாகவும் , இவர்களிடம் பணிபுரியும் ஆசிரியர்கள் அறிஞர்களாகவும் இருப்பதால் மூடத்தனத்திற்கும் , அறிவுக்கும் தினம் மோதல் நடந்து, மூடத்தனம் ஆள்வதால் அறிவு வறுமையால் மூடத்தனத்திற்கு முன்னால் பதுங்கி விடுகிறது. இதனால் மாணவர்களுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க சொல்லி தர வேண்டிய ஆசிரியர்கள் , அடிமை விலங்குடன் மாணவர்கள் முன் வெந்து நிற்கிறார்கள். போதிமர புத்தர்கள் ஒரு வேளை உணவுக்காக ஒதுங்கி நிற்கிறார்கள். இப்படி தனியார் கல்வி தந்தையர்களிடம் பெருங்கூட்டமான ஆசிரியர்கள் தவிக்கும் சூழலில் , அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் வேலை வாங்க கல்வி துறை அதிகாரிகள் , இடைத்தரகர்கள் அமைச்சர்களுக்கு 10 லட்சமும் , ஒரு பணியிடத்தில் இருந்து தான் சொந்த ஊருக்கு அருகில் மாற்றம் வேண்டினால் 4 லட்சமும் தர வேண்டிய அவலம் இருந்து வருகிறது. மட்டுமில்லாமல் கற்பிக்கவே முடியாத பெரும் அவல சூழல் , கழிப்பிடம் , எழுது பலகை , போதிய கட்டிடம் , மைதானம் , வகுப்பறை , தண்ணீர் வசதி இன்று எந்த வசதியும் இல்லாமல் வெட்டவெயிலில் கற்பித்து, காலை முதல் மாலை வரை இயற்கை உபாதைகளை அடக்கிக் கொண்டு நலிந்த மாணவர்களை, வறுமையில் வாடும் வருங்காலச்செல்வங்களை வழிநடத்த முடியாமல் தத்தளிக்கிறார்கள். பெரும்பாலான அரசு பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் கொத்தவால்சாவடி கூலித்தொழிலாளி போல் தோற்றம் அளிக்கிறார்கள் தமிழகத்தில் . வாங்கும் சம்பளத்தை வேலைக்கும், இடமாறுதலுக்கு, நெடுந்தூர பிரயாணத்திற்கும் , வாரம் சொந்தஊர் பயணத்திற்கும் கடனாக பெற்ற தொகைக்கு வட்டி கட்டி வதங்கி விடுகிறார்கள். மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி , கணினி, மதிய உணவு கொடுக்கு அரசு, அரசு நடத்து பள்ளி , கல்லூரி ஆசிரியர்களை பணம் காய்க்கும் மரமாக கருதி கறந்து விடுகிறார்கள். மாணவர்கள் முன்னால் நடந்து முட்டு தேய்வது தான் மிச்சம். மாதம் மாதம் சம்பளம் பெற்றாலும் , அரசு ஆசிரியர்களை பொறுத்தவரைவரை வறுமையில் அடிபட்ட ஒரு தோற்றம் தெரிகிறது. தமிழகத்தில் ஆங்காங்கே பல கல்வி கூடங்கள் , தனியார்களால் நடத்த படுகிறது. இங்கு பணி புரியும் ஆசிரியர்கள் அரசு ஊதியம் பெற்றாலும் இவர்கள் தனியார் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கற்பிப்பார்கள். வள்ளல்கள் , புரவலர்கள் , இயக்கத்தின் தலைவர்கள் , சாதி சங்கங்கள், பொதுவாக இந்த கல்வி கூடங்களை நடத்தி வருகின்றன. கற்களில் நன்கொடை கொடுப்பவர்கள் பேர் பதிவு செய்யப்பட்டு , எல்லோருக்கும் தெரியும் விதத்தில் நிறுத்திவைப்பதால் இப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு , செல்வந்தர்கள் , பெரும் தொழிலதிபர்கள் , வாரி வழங்குவதால் கட்டிடங்கள் , உபகரணங்கள் , வசதிகள் , அமைந்துள்ளன.கற்பிக்கும் சூழலும் , மறைமுக லாப நோக்கில் , மாணவர்கள் கொடுக்கும் தன்மை கருதி , ஆசிரியர்கள் சார்ந்து இருப்பதால் இங்கு கொஞ்சம் கூட்ட நெரிசல் சமீபத்தில் தெரிகிறது. ஆனால் இந்த நிர்வாகத்தினால் கல்விக்கும் எந்த அளவு பங்களிப்புள்ளது என்பது அலச பட வேண்டிய ஒன்று என்பதை சமீபத்தில் ஆசிரியரை திருமணம் செய்து கொண்ட மாணவன் , மாணவனை கூட்டிக்கொண்டு ஓடிய ஆசிரியர் , மாணவிகளிடம் தகாத முறையில் நடந்த ஆசிரியர், தனியார் டியூசனுக்கு வர வற்புறுத்தும் ஆசிரியர், மாணவர்கள் துன்புறுத்தப்டும் பள்ளிகள் போன்ற செய்திகளால் நாறி போகிறது. பெரு வாரியாக இப்படி பட்ட நிர்வாகத்தில் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோருடன் ஒரு நிரந்தர உறவு வைத்திருப்பார்கள், இதற்கு காரணம் முந்திக்கொண்டால் அதிக மாணவர்களை டியூசன் சேர்க்கலாம், அவர்கள் நடத்து டியூசன்மையம் மூலம் காசு பார்க்கலாம் என்ற தொழில் யுக்திதான் . நாமக்கல் போன்ற பகுதிகளில் இது போன்ற நிர்வாகம் நடத்தும் கல்வி கூடம்களில், விடுதிகள் , உணவு விடுதிகள் சேர்த்து நடத்துவார்கள். இது ஒரு முறையான கல்வி வியாபாரமா இல்லை கற்பிக்கும் சிறப்பா என்பது அலச படவேண்டிய ஒன்று. இப்படிப்பட்ட நிர்வாகத்தில் படிக்கும் மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வில் , மிக அதிக மதிப்பெண் எடுப்பதும் மேல் படிப்பில் அரசு மருத்துவம் , மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் பிடிப்பதும் சாத்தியமாகிறது.இந்த மாணவர்கள் மேற்படிப்பில் தாக்கு பிடிக்க முடியாமல் துவண்டு விழுவதும், தற்கொலை செய்து கொள்வதும் அரங்கேறி வருகிறது. இங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் முழு வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல் தேர்வு முடிவை , குறிகோளாக கொண்டு, கற்பித்தல் கருணை மறந்து காரியம் ஆற்றுகிறார்கள். பெரும்பாலும் கல்வியின் குறிக்கோள் இங்கு செத்து விடுவதையே காட்டுகிறது. ஊதியமும் , பக்கவாட்டு வருமானமும் இவர்களை பொருளாதார உட்சத்த்தில் கொண்டு செல்கிறது. அனால் மாணவர்களின் நலன் மறக்கப்படுகிறது, மறுக்கவும் படுகிறது. அரசு நிதி பெற்று சிறுபான்மையினர் நடத்தி வரும் பள்ளிகளில் ஆசிரியர்கள், நிர்வாகத்தினரால் நியமிக்கப்படுவார்கள், அரசிடம் ஊதியம் பெறுவார்கள். இங்கு வேலை பெற மிக அதிக போட்டிகள் உண்டு . பிற நிர்வாகம் போல ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டாம் . தகுதியும் வேண்டாம் . இதனால் வேலைக்கு விலை கொஞ்சம் அதிகம். டயோசீசன் நிர்வாகம் விலை நிர்ணயிக்கும் அல்லது சிறுபான்மை போர்வையில் கல்விசாலை நடத்தும் சிறு கூட்டம் விலை நிர்ணயம் செய்திடும் . இவர்களுக்கு அரசியல் சாசன சட்டம் பிரிவு 210 சட்ட பாதுகாப்பையும் , இங்கு வந்த மிஷினரிகள் கட்டிடம் பிற வசதியும் செய்து கொடுத்திருப்பதால் , நிர்வாக செல்வு குறைவு . வருமானம் வானத்தை பிச்சி கிட்டு கொட்டும் . இவர்கள் ஒரு சிறு சமஸ்தானம்கள் . இங்கு வேலைக்கு ரூ 3 லெட்ச்சம் முதல் 5 லெட்ச்சம் வரை வசூல் செய்து விடுகிறார்கள் ஆசிரியர்களிடமிருந்து . பெரும்பான்மை ஆசிரியர்கள் பாதிரிகள் . சம்பளம் வாங்கி நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டு குமுறி கொண்டிருப்பார்கள் .இங்கு மத போதகர்கள் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கும். மத போதகர்கள் உறவு , நட்பு, சொந்தம் , பந்தம், தூரத்து சொந்தம், பந்தம், ஆகியோர்கள் பொதுவாக ஆசிரியர் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். இவர்கள் யாரும் கிடைக்காவிடில் மத தலைவர்களுக்கு கூஜா தூக்குபவர்களின் , உறவு, நட்பு ஆகியோர்கள் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்வார்கள். ஆசிரியருக்கான பொதுத் தேர்வு இங்கு நடத்தப்படுவத்தில்லை. தொலை தூர கல்வி மூலம் பட்டம் பெற்றவர்களின் ஆதிக்கம் இங்கு கொடி கட்டி பறக்கும். பட்டம் விலைக்கு வாங்கியவர்கள் ஆதிக்கமும் இருக்கும். அரசு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கினாலும் , இவர்களுக்கு சிறுபான்மை பாதுகாப்பை சட்டம் வழங்குகிறது. இதனால் நிர்வாகத்திற்கு நெருக்கமான உறவுகள் பெரும்பாலும் தலைமை ஆசிரியர் , தாளாளர் , பொறுப்பாளர் என பள்ளி கூடத்தை ஆக்கிரமித்து விடுவார்கள். அரசு பள்ளி கூடங்களை போல தகுதி, திறமை, இங்கு பதவி உயர்வுக்கு அளவு கோல்களாக வைப்பதில்லை. இதனால் தொலைதூர கல்வியில் பட்டம் வாங்கி , தகுதி பெற்றவர்களும் , முறையான கல்வி தகுதி இல்லாதவர்களும் , திறமையற்றவர்களால் , மாணவர்கள் சூழப்படுகிறார்கள். தகுதியான , திறமையான ஆசிரியர்கள் இங்கு வேதனையுடன் பணி புரிந்து வருகிறார்கள். பெருவாரியான நீதிமன்ற வழக்குகள் இந்த சிறுபான்மை கல்வி கூட்டங்களை சுற்றியே உள்ளது. ஆசிரியர்கள் மாத சம்பளத்தில் ஒரு தொகை மத போதகர்களும் போய் சேரும். மத போதகர் வீட்டு திருமணங்கள் , மேற்படிப்பு, பதவி ஏற்பு, பதவி விடுப்பு , எது வந்தாலும் ஆசிரியர்களின் மாத சம்பளம் குறையும். நிர்வாகத்தை முறைத்து கொள்ளும் ஆசிரியர்கள் அடிக்கடி தண்டிக்கப்படுவார்கள். ஒதுக்கி வைக்கப்படுவார்கள் . ஆசிரியர்கள் மூணு முணுத்தாலோ, எதிர்ப்பு காட்டினாலோ , சிலுவை சுமக்க மறுத்தாலோ , இவர்கள் மீது நடவடிக்கை பாயும்.வகுப்பறையில் ஆசிரியர்கள் கண்காணிக்க மாணவர்களை உளவு பார்க்க வைப்பதும் , அருகில் உள்ள காவல் துறை மின் வாரிய அலுவலர்கள் , அரசியல்வாதிகள் , உயர் அதிகாரிகள் நட்பை பெற அடிக்கடி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து, மேற்குறிய அதிகார வர்கத்தை சிறப்பு விருந்தினராக அழைத்து குளிர்விப்பார்கள். இதிலும் பல சிறந்த நிறுவனங்கள், தற்போது நிர்வாகிக்கஏற்படுத்தப்பட்ட குழுக்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு,சிறுபான்மை போர்வையில் அரசு நிதியுடன் நடத்தப்பட்டு வருகிறது . இங்கு பணி புரியும் ஆசிரியர்கள் படும் பாடு , அவஸ்தை தின சிலுவை தான். இங்கு அரசு சட்டங்கள் நுழையாமல் , பார்த்து கொள்வார்கள். உதாரணமாக அரசு விபத்தை தவிர்க்க பேருந்துகளை தரபடுத்தி தகுதி படுத்த சொன்னால், பேருந்துகளை விற்று விட்டு அதில் வரும் பணத்தில் தலைமை ஆசிரியர்க்கு சொந்த உபயோகத்திற்கு கார் வாங்குபவர்கள். மாணவர்கள் போக்குவரத்து வசதியின்றி தாமதமாக வந்தால் தண்டனை தொகை , தனி அறையில் அடைத்து வைத்தல் , பள்ளியில் இருந்து நீக்க படுத்தல் என்று , என்று எலி தத்துவம் செயல்படுத்துவார்கள். இங்கு எது மறந்தாலும் தினம் ஆண்டவனை கூப்பிட மறக்கமாட்டார்கள் இன்னும் சில சத்துக்களில் , பொந்துக்களில் நீங்கள் பள்ளிகள் கல்லூரிகள் பார்த்திருப்பீர்கள் . இது கல்வி வியாபாரிகள் நிழல் பட்டு தானும் கல்வி விற்பதாக கங்கணம் கட்டிக்கொண்டு சில “வரும் ஆனால் வராது” கூட்டம் நடத்தும் கல்வி கூட்ம்கள். இங்கு முடிந்த வரை மாணவர்களிடம் கறப்பார்கள். மாணவர்கள் கொடுப்பதை எடுத்துக்கொண்டு , ஆசிரியர்களுக்கு மிக குறைந்த ஊதியம் வழங்குவார்கள் . இங்கு ஆசிரியர்க்கு தகுதி எல்லாம் கிடையாது . பிற மாநிலம் சென்று ஆசிரியர் அழைத்துவருவார்கள் . புதிதாக CBSC பள்ளிகளின் மீது உள்ள மோகம் , இந்த மாய விளக்கில் விட்டில்களாக பெத்தவர்களை இழுத்து எரிக்கிறது . ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் ஆரம்பகல்வியில் சேரும் ஒரு மாணவன் தனக்கென்று ஒரு தீர்க்கம் கொண்டு தான் அதை வடிமைக்கும் சூழல் பெற முடிவதில்லை. மூக்கை நுழைக்கும் அரசு, கல்வி விற்கும் நிர்வாகம் , ஊழல் பெருக்கெடுத்து ஓடும் கல்வி துறை , கொடுங்கோல் தன்மை கொண்ட நிர்வாகம் , லாப நோக்கில் கல்வியை கடைக்கு எடுத்து செல்லும் முறை , மனித மதிப்பீட்டை மறந்து போகும் சூழல் , சீரழிந்துபோன , மனஉளைச்சல் கொடுக்கும் கற்பிக்கும் சூழல், பணம் , விற்றல் வாங்கல் என கல்விக்கு எதிராக திருப்பப்படுத்தல். ஆசிரியர், குருக்கள் மீது தொடுக்கப்படும் அதிகார துஸ்பிரயோகம் , எங்கும் , எதிலும் லஞ்ச லாவண்யம் , இலவச குவியல் , எல்லாம் சேர்ந்து தமிழக மாணவனை உலக அறிவு அரங்கில் இருந்து வீழ்த்தி விடுகிறது. சமுதாய உச்சத்தில் இருந்து மண்ணுக்குள் தள்ளி புதைத்து விடுகிறது. இதன் வெளிப்பாடு வன்முறை, வேலையின்மை, சுயம் மரத்தால் , தரமின்மை , என்று விரிந்த மாணவர்களின் எதிர்காலத்தை மட்டுமின்றி சமுதாயத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. ஒரு மாணவன் தோலை நோக்கை உள்ளத்தில் ஏந்திகொண்டு, அதை அடைந்திட தட்டிக்கொடுக்கும் குரு இல்லாமல் , தோள்கொடுக்க கல்வி அமைப்பு முறை இல்லாமல் , கல்வியை கடை எடுத்து செல்கிறது டாஸ்மாக் தமிழகம் . இதில் தவிக்கும் , கல்வி தொலைக்கும் மாணவர்கள் . இன்னும் , இன்னும் நல்ல கல்வி சாலை தேடும் பெத்தவர்கள் .

 • என்னமோ போ - chennai,இந்தியா

  இந்த விஷயத்தை யாருமே புரிந்துகொள்ள விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. விருப்பு வேறு திணிப்பு வேறு. தமிழக அரசு நடத்தும் பள்ளிகளில்தான் இந்தி, சமஸ்கிருதம் இல்லை. தனியார் பள்ளிகள் அவர்கள் விருப்பம்போல எந்த மொழியையும் கற்பிக்கலாம். தடை எதுவும் இல்லை.விருப்பமுள்ளவர்கள் தனியாகவும் படித்துக்கொள்ளலாம். தனியார் பள்ளி மாணவர்கள் பிரெஞ்சு படிக்கவில்லையா என்ன? ஆனாலும், அரசு நடத்தும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்றுகூட இந்தி, பிரெஞ்சு, உருது போன்ற மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன. தடை எதுவும் இல்லை. ஸ்டாலின் வாரிசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளியில் இந்தி உண்டு. வாசகர்கள் பலரும் இந்தியைத் தேசிய மொழி என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். அது வெறும் அலுவல் மொழிதான். இந்தியில் பலவகை உண்டு. எந்த இந்தியைப் படிக்கவேண்டும்? பீகாரிகள்கூடத் தங்கள் தாய்மொழியை இழந்து இந்தியைக் கற்க விரும்புவதில்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? வடக்கே போனால் இந்தி உதவும் என்பதால் படிக்க வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். எட்டுக் கோடி தமிழர்களும் அங்கே புலம்பெயர்ந்து போகப் போகின்றனரா? மூன்று மாதம் அங்கேயே இருந்தால் போதும். தானாகவே இந்தியைப் புரிந்துகொண்டு பேசிவிடலாம். அங்குப் போய் எத்தனையோ பேர் இந்தியைக் கற்றுக்கொண்டு பேசுகின்றனர். இங்கே வரும் வடநாட்டுத் தொழிலாளர்கள் ஒரு மாதத்தில் தமிழைக் கற்கின்றனர். ஒரு மொழி அழிகிறதென்றால் ஒரு பண்பாடு அழிகிறது என்று பொருள். கன்னடர்களும் தெலுங்கர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே என்கிறார்கள். சரி, அவர்கள் இந்தி கற்றுக் கொண்டதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடடதா? முதலில் தாய்மொழியை ஒழுங்காகக் கற்றுக் கொள்வோம்.

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  அண்ணாவின் பெயரை வைத்துக்கொள்ளுங்கள் .அம்மையாருக்கு வாழ்த்துக்கள் . அமைச்சர் நன்றாக பேசியுள்ளார்.இந்த கேள்விக்கு பதில் சொல்லுவதற்கு தைரியம் வேண்டும்.

 • adithyan - chennai,இந்தியா

  இனி தமிழ் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து மற்ற மொழிகளை சேர்ந்த வார்த்தைகளை ஒழித்து புதிய கலப்பில்லாத தமிழ் வார்த்தைகளை எழுதவேண்டும்.வழக்கு தமிழை ஒழிக்க வேண்டும். தூய பழந்தமிழை பேச வேண்டும். அகத்தியர் ஹிமாலயத்தை சேர்ந்த அகஸ்தியர் என்ற இடத்தை சேர்ந்தவர். அவர் பொதிகைக்கு பறந்து வந்து தொல்காப்பியர் மூலம் தமிழை பரப்பியதாக சொல்லப்படுகிறது. சங்க காலத்து இலக்கியங்களிலேயே வடமொழியின் தாக்கம் இருக்கிறது.இந்த மாதிரி கட்டுக்கதைகளை ஒழிக்க வேண்டும்.கலைஞர் மற்றும் மற்ற ட்ராவிடத்தலைவர்கள், தூய தமிழை பரப்ப முயற்சிப்பார்களா. இல்லை ஈ அடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்களா, வெட்டி பேச்சு பேசிக்கொண்டு,

 • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

  திராவிட மாயைலிருந்து தமிழக மக்களை விடுவிக்க மத்திய அரசு எடுக்கும் சதியை மொத்த அரசியல் ஆதரவோடு மக்கள் வரிப்பணத்திலே முறியடிப்போம்..""கையிலே காசு வாயிலே தோசை,, கொடுப்போம் சில்லறை போடுவாங்க முத்திரை"" இதுதான் தமிழக ஜனநாயகம் இந்த ஜனநாயகம் ஒழிந்தால் மட்டுமே அசல்தமிழனுக்கு உயர்வு

 • rramjee - chennai,இந்தியா

  நம்ம தலைவர்ஹல் பையன்க ஹிந்தி படிப்பாங்க.நம்ப படிக்கச் கூடாது...

 • spr - chennai,இந்தியா

  ஒரு மொழியைக் கறக்க வேண்டுமா வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் சார்ந்த விஷயம் மொழி என்பது ஒருவரின் கருத்தை மறறொருவருக்கு அறியப்படுத்த உதவும் ஒரு கருவி ஆட்சி மொழியாக தமிழகத்தில் தமிழ் இருக்க வேண்டும் எனச் சொல்வது சரியாக இருக்கலாம் ஆனால் சட்ட மன்றத்திலே ஒரு அமைச்சரே சில சொற்களை ஆங்கிலத்தில் கூறுவதே சரியான பொருள் தரும் என்று சொன்னால் அப்படி சரியான பொருள் தர இயலாத ஒரு மொழி எப்படி ஆட்சி மொழியாக இருக்க முடியும் தமிழைவிட ஆங்கிலத்தில் என்னால் சரளமாகப் பேச முடியும் என்றால் அந்தத் தமிழன் தமிழ் மொழிக்கு என்ன பெருமை சேர்க்க முடியும் தமிழக எல்லையைத்தாண்டினால் தமிழ் உதவாது என்று அறியாதவர்களா நம் அரசியல்வியாதிகள் கனிமொழிக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியும் தெரியும் அதனால் டெல்லியில் அரசியல் தலைவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள இயலும் என்பதுதானே கலைஞரின் எண்ணம் அப்படியாயின் நம் தமிழக இளைஞன் உருப்பட வேண்டாமா ஏற்கனவே தமிழக இளைஞனின் வேலை வாய்ப்புகள் தமிழகத்திலேயே வடநாட்டவரால் பறிக்கப்படுகிறது அவன் இன்னொரு மாநிலம் நோக்கி ஓடவேண்டிய நிலை தயவு செய்து அதனையும் கெடுக்காதீர்கள் அம்மா "தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் எந்த வகையிலும் அனுமதிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் அனுமதிக்கப்பட மாட்டாது. இதற்கு எந்த வகையிலும் உதவி செய்யப்படாது." என்று சொல்வதும் "தலித்களின் தோழன்" என்ற அவதாரத்தை மோடி எடுப்பதும் ஆட்டின் தோல் போர்த்திய புலிகளாக மாறும் கதையே

 • Seitheee - San Jose,யூ.எஸ்.ஏ

  நாடு உருப்படாது. ஹிந்தி அல்லது சம்ஸ்க்ருதம் படிக்க அரசு என்ன அனுமதிப்பது ? எவனுக்கும் நான் ஹிந்தி சமஸ்க்ருதம் படிக்க கூடாது என்று சொல்ல உரிமை இல்லை. கோர்ட்க்கு போனால் இந்த சட்டம் செல்லுபடியாகாது.

 • Rakesh Kumar - Tirunelveli,இந்தியா

  ஹிந்தி படித்தால் வாழ்க்கையில் முன்னேறிவிடலாம், அப்படி இருந்து விடலாம் இப்படி இருந்து விடலாம் என்று கூறும் அறிவு மேதாவிகளுக்கு, தாய்மொழி பற்றிய அறிவு இல்லாமல் ஹிந்தி படித்து என்ன சாதிக்க போறீங்க. ஹிந்தி படித்தால் அரசு வேலை என்று சொல்கிறீர்கள், அப்படியானால், ஆங்கிலம் தெரிந்த நம்மில் எதனை பேர் வேலை சிக்கிறீர்கள். வளைகுடா நாடுகளில் ஹிந்தி தெரியாமல் கூனி குறுகும் அன்பு சகோதரர்களே, ஹிந்தி பேச்சு வழக்கில் காத்துக்கொள்ள எவ்வளவு நாள் ஆகும்? இருக்குற எல்லா வருஷமும் கவலை படுவீங்களா ? அரபிக் கத்துக்கோங்க, உங்கள தெய்வமா பாப்பாங்க. ஹிந்தி பேச 2 மாதம் ஆகும், ஹிந்தி வாசிக்க 6 மாதம் ஆகும், ஆனா நீங்க இருக்குற எல்லா வருஷமும் இதேதான் சொல்விங்க. ஹிந்தி படித்தால் வேலைநா சி, சி++ என்ன ஹிந்திலய இருக்கு? இப்போ அதுக்குத்தான் வேலை. சும்மா ஹிந்தி சன்ஸ்க்ரிட் கல்வி னு படம் போடுறாங்க, வடக்கே ஒரு MBA கல்லூரி காலையில் யோகா, சாப்பாட்டில் வெங்காயம் பூண்டு கிடையாது, கரணம் சந்நியாசியா MBA கத்துக்கணுமாம். நம்ம பாரம்பரியத்தை அழிச்சிக்கிடாதுங்க. அரிசி முறுக்கு, அதிரசம், சீடை எல்லாம் போச்சு, மோர், பதநீர், சாமை சோறு, வரகு காஞ்சி, எல்லாம் இப்போ டயட் சாப்பாடு ஆயிட்டு. போங்க பாஸ்

 • HSR - Chennai,இந்தியா

  அட நாதாரிகளா .. யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றான் பாரதி,, ஏன் நீ சொல்லமுடியலை? உங்கொய்யால யோசிடா தமிழா யோசி .. ஏன்னா உனக்கு தமிழ விட்டா வேற ஒரு மொழியும் உருப்படியா தெரியாது ,, ஏன் உனக்கு தமிழே முழுதுமாகத்தெரியாது.. 12 வரும் பள்ளியில் படிக்கிறாய்.. இன்னும் இரண்டு வருடம் கலைக்கல்லூரியில் படிக்கிறாய்,, ஆக இந்த 14 ஆண்டுகளில் நீ தமிழ் நன்றாக படித்தால் அப்புறம் ஏண்டா உனக்கு ஒரு திருக்குறளுக்கு அர்த்தம் தெரியல? இன்னொரு மொழி படித்தால் இரண்டு மனிதனுக்குச்சமம் என்று ஒரு ஞானி கூறியுள்ளார் தெரியுமா? அவர் யார் என்றாவது உன்னால் சொல்லமுடியுமா? இத்தனைக்கும் அவர் ஒரு தமிழர் ,,, புண்ணாக்குங்களா,, எல்லா மொழிகளையும் படிங்கடா

 • yaaro - chennai,இந்தியா

  என்ன அனுமதிக்க முடியாது ...சென்னைல ஏற்கனவே காவாசி பேர் இந்தி தான் பேசறாங்க போலருக்கு .. கட்டிட வேளைகளில் தெலுங்கு, பீகார் , சேவை வேளைகளில் வடகிழக்கு , IT வேளைகளில் வடக்கு என இந்த தொழிலில் இருக்கும் அனைவரும் இந்தி பேசறாங்க. இவங்க கூட தொடர்பில் உள்ளவர்களும் இந்தி பிக்கப் பண்ணிக்கறாங்க ..அப்புறம் என்ன "இந்தி அனுமதிக்கமாட்டோம் "

 • V Gopalan - Bangalore ,இந்தியா

  It's absolutely wrong to say that the languages Hindi/Sanskrit should not be allowed in Tamilnadu. This will be a handicap for the younger generations who complete their study and search for an employment in other States will face very much difficulties. Why so, MPs of Tamilnadu is not in a position to understand what the other MPs speack in Parliament. Just look at Kerala, the Malayaless wherever they go first learn the regional languages. The so called politicians will admit their children/grandchildren outside the Tamilnadu and why not admit in State syllabus of Tamilnadu. Hence, The general public in the interest of their children they should not listen to politicians. Let them give their children more and more learning of languages which will be an asset. One of the MLA of Tamilnadu has recently said that their AMMA knew many languages of Kannada, Hindi, Telugu et all but why the same is denied to younger generation? What is wrong in learning more languages or at least let the younger generation choose their interest why politicians should interfere?

 • பிரபு - மதுரை,இந்தியா

  தமிழகத்தை தவிர மற்ற அண்டை மாநிலங்கள் அனைத்திலும் இந்தி கற்பிக்கப்படுகிறது. அதனால் அவர்கள் சுலபமாக வடமாநிலத்தில் போய் வேலைசெய்யவும் சம்பாதிக்கவும் மற்ற மாநிலத்தவருடன் பழகவும் முடிகிறது. அரபு நாடுகளில் கூட இந்தி தெரிந்தால்தான் வாழ்க்கை நடத்த முடியும். நமது தமிழர்கள் இந்தி தெரியாமல் அரபு நாடுகளில் படும் கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. அதனால் பல இடங்களில் அவமான படவேண்டியிருக்கிறது. இந்தி ஒரு மொழியே, அதை ஏன் நமது அரசு கற்றுக்கொடுக்க மறுக்கிறது? தமிழக மக்களுக்கு இந்தி தெரிந்து விட்டால் மத்திய கட்சிகள் இங்கே வந்து பிரச்சாரம் செய்து மக்களை தங்கள் பக்கம் இழுத்துவிடுவார்கள் என்கிற பயமா?

 • ideamani - vridhachalam,இந்தியா

  இவர்களும் தீமுகாவை போலவே நடந்துகொள்கிறார்கள் . அவர்களால் ஒரு தலைமுறையே ஹிந்தி தெரியாமல் , படிக்காமல் போனார்கள் , ஒரு மொழியை படிப்பது தெரிந்துகொள்வது என்பது தனிப்பட்ட ஒருவரின் உரிமை அதில் யாரும் தலையிட கூடாது . அதேபோல் மொழி திணிப்பும் கூடாது .

 • Ram Prasath - Chennai,இந்தியா

  கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் கேரளத்திலும் ஹிந்தி ஒரு பாட மொழி அதனால் அந்த மொழிகள் அழியவில்லை அனால் அவர்கள் ஓற்றுமையாய் இருக்கிறார்கள் அனால் நாம் தான் தமிழ் தமிழ் என்று தனித்து விடப்படுகிறோம் இன்று நாம் கல்லூரிகளில் பல மாநிலத்தவர்கள் வந்து படிக்கிறார்கள் அவர்கள் எல்லாம் ஓற்றுமையாய் தான் இருக்கிறார்கள் அவர்களின் பொது மொழி ஹிந்தி அதன் மூலம் நட்பு வளர்கிறது ஆனால் வீனா போன அரசியல் வியாதிகளால் தான் பிற மொழிகளை கற்கும் வாய்ப்பு நமக்கு இல்லாமல் போகிறது எனக்கு தெரிந்து கன்னடமோ தெலுங்கோ மலையாளமோ ஹிந்தியால் அழியவில்லை அதை கற்பதால் எந்த தீமையும் இல்லை

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  எல்லோரும் சமஸ்கிருதம் படித்து புத்தி வந்துவிட்டால் அடுத்து எவனும் இவர்களுக்கு ஓட்டுப்போட மாட்டானே... அந்தால்த்தான் இப்படி ஒரு எதிர்ப்பு...

 • Sharvintej - madurai,இந்தியா

  மொழி தேர்வு அவரவர் விருப்பம் .இதில் எந்த அரசும் தலையிட கூடாது.

 • Shankar - Hawally,குவைத்

  அப்போ அரபி, உருதுக்கு அனுமதி இருக்குதா மாண்புமிகு அமைச்சர் அவர்களே? நாசமா போங்க.

 • baski - Chennai,இந்தியா

  தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் அனுமதிக்கப்பட மாட்டாது....ஆம் மணல்கடத்தல், களிமவனம் கொள்ளை, ஏரி ஆக்கிறமிப்பு, வனத்துறை அத்துமீறல் மற்றும் கமிஷன் இதுக்கெல்லாம் உடனே அனுமதிக்கப்படும்...

 • Bairava Subramanian - Chennai,இந்தியா

  தமிழக மக்களை முன்னேற விடமாட்டார்கள். அனால் டாஸ்மாக் ஊத்தி கொடுத்து ஆழிக்காமல் விடமாட்டர்கள்

 • abu lukmaan - trichy,இந்தியா

  அமெரிக்கன் , பிரிட்டிஷ் காரர்களை விட நமக்கு ரெண்டு மொழி தெரியும் .அவர்களுக்கு ஆங்கிலத்தை தவிர வேறு மொழி தெரியாது .

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  யார் சொன்னது சமஸ்கிருதம் கட்டாயப்பாடம் என்று?. . சமஸ்கிருதம் விருப்பப் பாடம் அவ்வளவுதான்... விருப்பம் இருந்தால் இதனை படிக்கலாம், இல்லை என்றால் வேறு ஒரு மொழியை விருப்பாடமாக எடுத்து படிக்க வேண்டியதுதானே யார் இவர்களை வேண்டாம் என்று சொன்னது?...

 • Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்

  தமிழ் நாட்டில் தமிழை ஒழுங்காக பேசும் , அரசியல் வாதி , மீடியாக்கள் , சினிமா , சின்னத்திரையில் , அரசு நிர்வாகத்தில் , அரசு நிறுவனங்களில் , இப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள் ,, திராவிட கட்சிகள் சொல்ல முடியுமா ,,,???? தமிழ் பேசாத தமிழன் ?? அடுத்தவன் மொழியை கற்க ஆசை படும் அளவுக்கு ? நம் நாட்டில் உள்ள பிற மொழிகளை வெறுப்பது ஏன் ???? திருந்த மாட்டோம் ..

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  மலையாளிகள் இங்கே வந்த படிக்கிறார்கள். அவர்களிடம் கேட்டால் எங்கள் மாநிலத்தில் கல்லூரிகள் அதிகம் இல்லை, குறிப்பாக தனியார் கல்லூரிகள் அதிகம் இல்லை என்று சொல்லுவார்கள். உண்மையாலுமே அங்கு அதிகம் கல்லூரிகள் இருந்தாலும் அங்கு அவர்கள் படிக்க மாட்டார்கள். அதனால்தான் அங்கு கல்லூரிகள் இல்லை. காரணம் பள்ளி படிப்பை முடித்தவுடன் அவர்கள் அண்டை மாநிலங்களான தமிழ் நாடு போன்ற இடங்களுக்கு வந்து விடுவார்கள். இங்கு ஒரு 5 ஆண்டுகள் பள்ளி படிப்பை முடித்தவுடன் அந்த 5 ஆண்டுகளில் தமிழை நன்றாக கற்றுக்கொண்டு விடுவார்கள். பின்பு இங்கேயே வேலை கிடைத்து இங்கேயே நிரந்தரமாக இருந்து விடுவார்கள். இதனால் இங்குள்ள கல்லூரி நடத்துபவர்களுக்கு வேண்டுமானால் நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால் இவர்கள் தமிழ் நாட்டு மாணவர்களின் வேலை வாய்ப்பை தட்டி பறிக்கிறார்கள். பின்பு இவர்கள் ஒவ்வொருவராக பிற மலையாளிகளை இங்கே கொண்டு வந்து திணிப்பார்கள். இதுதான் காலகாலமாக நடந்து கொண்டு இருக்கிறது. மலையாளிகளாகிய நாங்கள் ஏன் தமிழை கற்க வேண்டும் ஏன்னு நினைந்து இருந்தால் அவர்கள் எப்படி தமிழ் நாட்டில் இருக்க முடியும். மலையாளி உலகம் முழுவதும் வேலை மற்றும் வியாபாரம் செய்கிறார்களே அது அவர்களால் மட்டும் எப்படி முடியுது. வந்தோரை வாழ வைக்கிறோம் என்று சொல்லி சொல்லி உலகத்தியே ஆண்ட தமிழன் இன்று தமிழகத்திக்குள் அடைபட்டு கிடக்கிறான்.... சேர நாடு அன்று மலையாளிகள் நாடாகி இன்று மார்கதவர்களின் நாடாகி விட்டது. அப்படி என்றால் உருது பேசும் மக்கள் எங்கு இருந்து வந்தார்கள்?... அங்கு தமிழ் மட்டுமே பேசிய எம் மக்கள் எங்கே?....

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  அரசியல் தலைவர்கள் தீர்க்க தரிசிகளாக இருக்க வேண்டும். நம் தலைவிதி அவர்கள் அப்படி இல்லை. சென்னையின் கூடுவாஞ்சேரிக்கு அப்பால் யோசிப்பதில்லை. சீன மொழியும் அரபி மொழியும் எழுதப் பேச வர்த்தகத் தொடர்புக்கு ஏற்ற வகையில் அனைவருக்கும் சொல்லித் தரப்பட வேண்டும். ஹிந்தி மொழி சரளமாக உரையாடும் வகையிலும் அதில் கட்டுரை கவிதை புனையும் அளவுக்கும் சொல்லித் தரப்படவேண்டும். அது தவிர வேறு சில வெளி நாட்டு மொழிகளும் பயில வாய்ப்புகள் தரப்படவேண்டும். ஆணிகலத்தையும் தமிழையும் வைத்துக் கொண்டு பெரியளவில் சாதிக்க முடியவில்லை. அரபி தேசத்தில் பெரும்பாலோனோருக்கு வாட்டர் என்றால் என்ன என்று கூட தெரியாது. மோயா என்றால் தான் தண்ணீர். அது போன்ற மக்களுடனும் நாம் வியாபாரம் செய்ய நமக்கு தோதாக இருக்கும். உலகில் வியாபாரத்தில் நாம் kolochcha வேண்டாமா. அவர்கள் மாற மொழிகளை அறிந்து கொண்டு முன்னேறும் முன் நாம் அவர்களை விட முன்னணியில் இருக்க வேண்டும். இயந்திர பொறியியல் மாணவர்களுக்கு ஜேர்மன் மொழியும் ஜப்பான் மொழியும் புகட்ட வேண்டும். இவர்கள் ஒன்றை சிந்திக்கட்டும். அரசால் நிர்வகிக்கக் கூடிய பல்கலையின் உறுப்புக்கு கல்லூரிகளில் பொறியியல் தமிழ் வழி படிப்புக்கு என்ன மரியாதை மக்களிடம் இருக்கிறது என்று. பல்கலையின் கையாலாகாத தானம் அவர்கள் நாங்கள் ஆங்கிலம் கலந்து தான் தமிழ் வலிக்க கல்விக்கும் போதிக்கிறோம் என்கிறார்கள். மேலும் அண்ணா பல்கலையின் பட்டத்தில் எங்கும் தமிழ் வழி படிப்பு என்று குறிப்பிட மாட்டோம் ஆகையால் மாணவர்கள் தைரியமாக தமிழ் வழி படிக்கலாம் என்கிறார்கள். 4 வயது குழந்தை 4 மொழிகளை தெள்ளத் தெளிவாக பேசும் திறன் உடையது. தாய் மொழி உச்சரிப்பை போலவே 4 மொழிகளையும் பேசும். நிரூபிக்கப் பட்ட உண்மை. மணிமேகலையில் வரும் சாதுவன் கதையை நம் தலைவர்கள் சுடாலின் உட்பட கிழவனார் முதற்கொண்டு யாரும் படிக்க வில்லையா? மக்கள் முன்னேற்றம் பெரிது. அரசியல் என்பது மக்களுக்கு நல்லது செய்ய. அவ்வாறு முடியவில்லை என்றால் அல்லது செய்யற்க.

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  இந்த விடயத்தில் பெரும்பாலோர் இந்தி, சமஸ்கிரத்தை ஆதரித்து எழுதி உள்ளார்கள்.. ஒரு மனிதனின் சிந்தனை திறனை மொழி நிர்ணயிக்கிறது... அதாவது வளர்ந்த மொழி மேற்பட்டசிந்தைனை வளர உதவுகிறது..வளராத , வளம் இல்லா மொழி சிந்திக்கும் திறன் இல்லாதவர்களை உண்டு பண்ணுகிறது.. இதற்க்கு உதாரணம் இந்தி..இந்தி அடிமைகளின் மொழி..இந்தியாவின் பொற்காலமான குப்தா, ஹர்ஷவர்தன் காலத்திலிருந்த மொழி பிராகிருத இந்தி அல்ல..இந்தி இஸ்லாமியார்களால் இந்தியர்களை அடிமைகளாக ஆள ஏற்படுத்த மொழி..இந்தியைவைத்து விமானம் அணு மின் நிலையம் காட்டமுடியுமா... இந்தி அடிமைகளின் மொழி..அடிமை புத்தியை தான் வளர்க்கும்..இப்போ தமிழகத்தில் கடின வேலைக்கு யார் வருகிறார்கள்..கட்டுமானப்பணி, ஹோட்டல், சாலை போடுதல். .இவள்கள் எல்லாமிப்போ வட இந்தியர்களே செய்கிறார்கள்..தமிழர்கள் இந்தி படித்தால் இந்த வேலை செய்யத்தான் லாயக்கு. திக, திமுகவால் தமிழகம் இந்தியில் இருந்து காக்கப்பட்டு இப்போ தமிழர்கள் ஐ.டி யில் கோலோய்ஸ்சுகிறார்கள்..தமிழர்கள் தாய் மொழி தவிர மாற மொழி கற்க வேண்டும்..ஆங்கிலம் இருக்கும் பொது எதற்கு இந்தி படிக்க வேண்டும்.. இந்தியால பயன் உண்டு என்றால் படிக்கலாம்..இந்தியால என்ன பயன்..?. வளம் இல்லமொழியால் எந்த பயனும் இல்லை...இந்தியாவில் இந்தி பேசுபவர்கள் பெரும்பான்மை என்றால் எல்லோரும் இந்தி கற்க வேண்டுமா..? எதற்கு..?. அதோடு இந்தியாவில் 52 % மேல் இந்தி பேசாதவர்கள் இப்படி இருக்கும் பொது எதற்கு அரசாங்கம் இந்தியை திணிக்க வேண்டும்..?..சமஸ்கிரதம், வேதம், உபநிஷத், ..இவைகள் எல்லாம் காலாவதியானவைகள்... இதில் நலக்கருத்துக்கள் இருந்து இருந்தால் இந்திய சமூகம் இப்படி இருக்குமா...?. சதி , பெண்களை சமமாக மதக்காமலிருப்பது, சாதி, சூத்திரன்,,,பிறக்கும் பொது சாதிமுதிரைக்கொடுத்து தீண்டத்தகாதவன் ஆக்குவது....இது தான் இவைகள் சொல்லுகிறது..இது தேவையா.?. சங்க காலத்தில் சாதி என்று ஒன்று இல்லை..கிபி 1200 வரை தமிழில் சூத்திரன் என்ற வார்த்தையே கிடையாது.. இந்தசமூலாக விரோத எண்ணம் வேதம், உபநிஷத், , புராணங்கள், சமஸ்கிரத்தால் வந்தது..தமிழ் சமூகம் வளர இவைகளை ஆதரிக்க கூடாது.. இந்தி , சம்க்ஸ்கிரதம் வேண்டுபவர்கள்படிக்கலாம்,,ஆனால் அதை திணிக்க கூடாது..

 • Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா

  தமிழ் நாட்டை இவ்வளவு நாள் சீரழித்ததுடன் இன்னும் இந்த சீரழித்து நம் மக்களை அடிமையாக வைத்திருந்தால் இலவசம் என்ற பேரில் மக்கள் எதை கொடுத்தாலும் வாங்க தயாராகி விட்டார்கள் மக்களை பல மொழி படிக்க விட்டால் சிந்தித்து விடுவார்கள் திராவிட கட்சிக்கு மூடுவிழா நடித்து விடுவார்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு ஆண்டு ஹிந்தியை தடுத்து தமிழ் மொழி வளர்ந்த விதம் நாடே சிரிக்கிறது 10 ஆண்டு போதும் ஹிந்தி பயில.ஆனால் திராவிட கட்சிக்கு மூடுவிழா கண்டிப்பாக நடக்கும்.அறிவு சார்ந்த சான்றோரால் மட்டுமே.

 • Sudarsanr - Muscat,ஓமன்

  அவர்கள் வீட்டு பிள்ளைகள் ஆங்கிலம் சமஸ்க்ருதம் எல்லாம் படிக்கலாம். காரணம் அவர்கள் அரசியல்வாதிகள் (வியாதிகள்). இங்கே ஆள்பவருக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டம். கேட்டல் நங்கள் உங்களுக்காக அங்கே சென்று குரல் கொடுப்போம் என்கின்றனர். அனால் செய்வது நல்ல பசையுள்ள அமைச்சகத்தை கேட்டு பெறுவது ஒன்றே குறிக்கோளாக இருக்கிறார்கள். தயவுசெய்து ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள் மக்களே. பரந்த உலகத்தை காண ஆங்கிலம் தேவை. அகண்ட பாரதத்தை காண ஹிந்தி வேண்டும்.

 • rajen.tnl - tirunelveli,இந்தியா

  கருணாநிதியை போல் கொஞ்சம் , கொஞ்சமாக மாறி வரும் அம்மாவை பார்

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடதவர்களை எல்லாம் தமிழ் நாட்டில் ஆளவிட்டால் இப்படித்தான் எதாவது தேவை இல்லாத வேலையெல்லாம் செய்வார்கள்.... கூட்டுக்களவாணிகள்....

 • manasu - thanjai,இந்தியா

  இந்தி நமது தேசிய மொழி.... இதனை அரசியல் பண்ணாதே ,,,,,,,, ஏ அரசியல் பண்ணியே ..... நீ இந்தியன் என்றல் நமது நாட்டின் தாய் மொழியை கற்றுக்கொள்ளு...... இல்லையென்றால் பொத்திக்கிட்டுஇரு ..... நான் இந்தி தெரியாமல் எவ்வளவு கஷ்ட்ட பாட்டன் என்று உனக்கு தெரியுமா ......தினமலர் வாசகருக்களே ஏன் தேசத்தின் மாணவர் மாணவி எல்லாரும் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்....அது நமது தேசிய மொழி ......ப்ளீஸ் மக்களை வாழவிடு அரசியல் பண்ணாதே

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் அனுமதிக்கப்பட மாட்டாது என்று சொல்லுவதற்கு இவர்கள் யாராம். என் குழந்தைகள் என்ன மொழி படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது நான்தான். இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என் குழந்தை இதை மட்டும்தான் படிக்க வேண்டும் என்று இவர்கள் சொல்லுவதற்கு?...

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொன்னால் தமிழ் மொழி அழிந்து விடும். ஆனால், மசூதிகளில் அரபியில் மந்திரம் சொன்னால் தமிழ் அழியாது. சர்ச்சுகளில் ஹிந்தியில் திருப்பலி நடத்தினாலும் தமிழ் அழியாது. அப்படித்தானே?....

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  2016-ல் நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானில் பேசும் உருது மொழியை ஆட்சி மொழியாக கொண்டு வருவீர்கள் என்று தேர்தலின்போது சொன்னீர்களே, அதை நிறைவேற்ற சொல்லி கேட்கலாமே ஆளும் கட்சியை?. அது சரி எப்பொழுது ஆனது URDU மொழி திராவிடர்களின் மொழிதான் என்று உங்கள் திராவிடர்களின் ஆட்சியிலா?...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  "தமிழகத்தின் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில்" - திருடி முன்னேறுவதுதான் நம் கலாச்சாரம்...

 • Raj - bangalore,இந்தியா

  தமிழ்லகத்தில் உருதுவும் வெளியேற்ற படவேண்டும். இது அந்நிய மொழி.

 • Kabali - Madurai,இந்தியா

  2017-ல் நீட் வருமா வராதா ?

 • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

  சில பெரு ஹிந்தி தெரிஞ்சா இந்தியா முழுசும் போகலாம் ன்னு சொல்றாங்க எதுக்கு ஊரு சுத்தவா? உள்ள இங்கிலிஷ்,தமிழ் நல்லா படித்தால் போதும். வேறொண்ணுமே வேண்டாம்.

 • இளங்கோ - chennai,இந்தியா

  சமஸ்க்ருதம் ஹிந்தி திணிப்பை எதிர்க்கலாம்.எதிர்க்க வேண்டும். ஆனால் அனுமதி கிடையாது என்று யாரும் சொல்ல முடியாது.

 • christopher - Bangalore

  எதுக்கு இந்த வெட்டி பேச்சு,

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  Government policy is absolutely wrong. Students have the liberty to learn the language of their choice. There should not be any compulsion to impose a language on students. But facilities in government schools must be available to learn many indian languages. By eliminating hindi completely from government schools many poor people will loose their opportunities for their career development.

 • சூத்திரன் - Madurai,இந்தியா

  காவி டவுசர்கள் வளர்ச்சி வளர்ச்சி னு இங்கே இப்போது கூப்பாடு போடுவார்கள், civil service தேர்வுகளில் தமிழர்கள் தேர்வாக முடியவில்லை என்று புலம்புவார்கள், அனால் Group I TNPSC தேர்வுகளில் ஏன் CBSE மாணவர்கள் தேறுவது இல்லை என கேளுங்கள் பதில் இருக்காது.

 • Snake Babu - Salem,இந்தியா

  //தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் எந்த வகையிலும் அனுமதிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் அனுமதிக்கப்பட மாட்டாது. இதற்கு எந்த வகையிலும் உதவி செய்யப்படாது. புதிய கல்வி கொள்கை வரைவின் சில உள்ளீடுகளை மட்டுமே மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதற்கு விரைவில் பதில் அனுப்பப்படும். மாநில அரசின் நலன், கல்வி,, கலாசாரம், உரிமைகள் பாதிக்காத வகையில் மத்திய அரசுக்கு பதில் அனுப்பப்படும்.// சூப்பர்..... அருமை. இந்த விஷயத்தில் ஆளும்கட்சி எதிர்க்கட்சி இரண்டும் ஒரே எண்ணத்தில் இருப்பது நல்ல செய்தி. ஒரு விஷயம் ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன். விருப்பம் இருப்பவர்கள் எந்த மொழியை வேண்டும்மென்றாலும் கற்றுக்கொள்ளலாம். அதற்கு யாரும் தடை செய்ய வில்லை. அதை திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். உண்மையில் ஸ்மஸ்கிருத மொழியில் அதிக மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. ஆனால் திணிப்பை எவ்விதத்திலும் ஆதரிக்க முடியாது. நன்றி வாழ்க வளமுடன்.

 • Murugan Sankaralingam - Madurai,இந்தியா

  வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் வந்து வேலை செயகிறார்கள். தமிழர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று வேலை சுலபமாக செய்ய இயலாது. அரசியல்வாதி பிள்ளைகள் ஹிந்தி படித்துக்கொள்வார்கள் தமிழர்களே விழித்து கொள்ளுங்கள் . பிழைக்கின்ற வழியை பாருங்கள் . இந்த அரசியல் வாதிகள் வேலை வாய்ப்பை பற்றி பேச மாட்டார்கள் . .கேரளாக்காரன் , கர்நாடக காரன் , ஆந்திராகாரன் எல்லாம் பிழைக்க தெரிந்தவர்கள் .அரசியல் வாதிகளே தயவுசெயது மாறுங்கள் .

 • Mannan - chennai,இந்தியா

  பிற மொழி கற்பதை தடுக்க கூடாது தமிழ் மொழி வளர என்ன தேவையோ அதை செய்ய வேண்டும் ,அதை விடுத்தது இது இது வர கூடாது என்று செயல் படுவது சரியானதாக இருக்க வாய்ப்பு இல்லை ....மேலும் மத்திய அரசு choice இல் கொடுப்பதாக சொல்லுகிறார்கள் அதற்கு அப்பறமும் என்னமோ மத்திய அரசு திணிப்பு என்று பலர் பேசுவது சரியானதாக பட வில்லை மக்கள் அனைத்தியும் ஆராய்ந்து சிந்தித்து பார்க்க வேண்டும்

 • nimmi - Dindigul,இந்தியா

  அரசியல் ஒரு புறம் இருக்கட்டும். செம்மொழியாக தமிழ் மொழி இங்கு இருக்கும்போது, வேறொரு மொழியை கட்டாயமாக கற்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. ஆங்கிலம் வந்தது, நல்ல தமிழை சாகடித்து விட்டது. ஆங்கில கலப்பில்லாமல் படிப்பறிவில்லாதவர்கள் கூட தமிழ் பேச முடியவில்லை. இதுதான் இன்றய நிலை. ஆங்கிலம் தமிழின் வளர்ச்சியை மாணவர்களிடையே சீரழித்தது என்றால், தெரிந்தே நாம் ஏன் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் ஏனைய பிற மொழிகளையும் ஏன் அனுமதிக்கவேண்டும். அமெரிக்காவிற்கு ஈடாக நவீன விஞ்ஞான தொழில் நுட்பங்களையும் மருத்துவத்தையும் ரஷ்யா போன்ற நாடுகள் தங்கள் மொழிகளை வைத்தே சிறப்பாக கற்றுணர்ந்து கொண்டுள்ளபோது, தமிழால் முடியும் என்ற வைராக்கியத்தோடு நடைபோடுவோமாக.

 • prakash - chennai,இந்தியா

  ஹிந்தி அனுமதிக்கபடமாட்டாது எனும் கருத்து தற்போது உள்ள சூழ்நிலையில் எடுபடாது தமிழர்களின் வளர்ச்சிக்கு இது பெரும் முட்டுக்கட்டை. தமிழகத்தில் உள்ள படித்த இளைஞர்கள் தமிழ்நாட்டிற்கு வெளியே வேலை செய்யமுடியாத நிலையே உருவாகும். இந்த மாதிரியான அரசியல் கொள்கையால் தமிழக இளைஞர்கள் பலர் பாதிக்கபடுகின்றனர். நாம் வெளிநாட்டில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் பொது பாக்கிஸ்தான், வங்கதேசம் மற்றும் பலநாட்டினர் கிண்டல் செய்யும் நிலையே தொடரும். இந்த புத்தி கேட்ட அரசியல் இன்னும் தொடர்ந்தால் நாம் வளரமுடியாத நிலையே ஏற்படும். தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் எத்தனை பேருக்கு தமிழ் பேச, படிக்க, எழுத தெரியும். தமிழை வளருங்கள் தமிழனையும் வளரவிடுங்கள். கொள்கை மாற்றம் தேவை என்பதே என் கருத்து - இப்படிக்கு ஹிந்தி பேச தெரியாமல் எகிப்து, பாக்கிஸ்தான், வங்கதேசம் மற்றும் அரபு நாடுகாரர்களிடம் அசிங்கப்பட்ட தமிழன் (இந்தியன்). நீ இந்தியன்தானா ஹிந்தி தெரியாதானு கேவலப்படுத்துறாங்க வேற நாட்டுக்கறாங்க.மாறுங்கள் மாற்றுங்கள்.

 • ganapathy - khartoum,சூடான்

  கம்ப ராமாயணம் தமிழில் எவ்வாறு இயற்ற்றப்பட்டது. சமஸ்க்ரித மூலத்தை கம்பன் படிக்க வாய்ப்பு இருந்தது.... யுவான்சுவாங் என்னும் சீன யாத்திரிகர் தன்னுடைய 28vathu வயதில் கடுமையான பயணம் மேற்கொண்டு சமஸ்க்ரிதம் கற்றுக்கொண்டு இந்தியாவின் அரசு முறை வாழ்க்கை முறைகளை ஹர்சரின் ஆட்சிக்காலத்தில் பதிவு செய்து இருக்கிறார். சென்றிடுவீர் எட்டு திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்த்திங்கு சேர்ப்பீர் என்று பாரதி பாடினான். இப்படி ஹிந்தி வேண்டாம் சமஸ்க்ரிதம் வேண்டாம் என்று சொல்லி குண்டு சட்டியில் குதிரை ஓட்டினால், மலையாளத்தவர்கள் எல்லாம் ஐ.ஏ எஸ். படித்து மத்திய அரசில் முக்கிய பணியில் சேருகின்றனர். பின்னர் முக்கிய ரயில்பாலங்கள் விமான நிலையம், புதிய ரயில்கள், மத்திய மருத்துவமனை எல்லாம் அடுத்த மாநிலங்களுக்கு போகிறது. தண்ணீர் தாவாவை தீர்க்கவும் நதிநீர் இணைப்பை பேசவும் ஆள் இல்லை. தமிழன் பிழைப்புக்கு வழி இல்லாமல் கூலி வேலைக்கு பக்கத்துக்கு மாநிலம் போகிறான் இல்லை கடல் கடந்து மீன்பிடித்து சாகிறான்...எதுக்குடா முன்னேற விடாமல் தடுக்கறீங்க.

 • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

  உருது அனுமதிக்க படுவது எப்படி ? அதற்கு என்ன பதில் தர போகிறது இந்த அரசாங்கம் ? அவர்கள் தமிழர்களா ? அல்லது அவர்கள் இங்கே வாழ்பவர்கள் என்றால் சௌராஷ்டிரர்களும் இங்கே வாழ்வோர் தானே ? மேலும் நான் ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று விரும்பினால் என்ன செய்வது ? அதை மறுப்பது எனது ஜன நாயக உரிமையை மறுப்பது போலத்தானே ? இதற்கு யார் என்ன பதில் சொல்ல போகின்றனர் ? இங்கே தெலுங்கு பேசும் மக்கள் தங்களின் தாய் மொழியை படிக்கும் வாய்ப்பை இழந்தது இப்படி தானே ? பல கேள்விகளுக்கு பதில் இல்லை இருக்காது ஏனெனில் இதெல்லாம் வோட்டுப்பிச்சை க்காக நடத்த படும் நாடகமே ..

 • vasu - chennai,இந்தியா

  ஜெயலலிதா.... இந்த வார்த்தையில் வரும் முதல் எழுத்தே சமஸ்கிரத வார்த்தை தான்னு உங்களுக்கு தெரியுமா....அமைச்சரே.....நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது.... இந்த சப்பை பிரச்னைனால யாருக்காவது பலன் இருக்க? இல்ல நாலு குடும்பம் தான் வாழப்போகுதா? ஜெய் ஹிந்த்

 • Rajarajan - Thanjavur,இந்தியா

  ஒரு திறமையை / கல்வியை கற்று, அதில் தேர்ந்தவர் ஆவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் மற்றும் திறமையை பொறுத்ததே. இதில் ஜாதிக்கு எந்த இடமும் இல்லை. ஒதுக்கீடு இல்லாத முற்படுத்தப்பட்டவர்கள் மட்டும் எப்படி பல மொழிகளை கற்று, வேலை மற்றும் கல்வியில் போட்டி சவாலை ஏற்று, தங்கள் வாழ்க்கையில் போராடி முன்னேறுகின்றனர் ?? தாழ்த்தப்பட்டவர் / பிற்படுத்தப்பட்டவர் மட்டும் முயற்சி செய்தால் மட்டும் எப்படி முன்னேறாமல் இருக்க முடியும் / கற்காமல் இருக்க முடியும் ?? அப்படி இருக்க, நாடு முழுவதும் ஒரே கல்வி கொள்கை கொண்டுவந்து, குப்பன் முதல் சுப்பன் வரை, முன்னேறிய பிரிவினர் முதல் தாழ்த்தப்பட்டவர் வரை, அனைவரையும் சமமாக தானே இது கற்றுக்கொடுத்து முன்னேற்றும் ?? அப்படியானால், அரசியல்வாதிகள் ஏன் எதிர்க்கின்றனர் ?? இது ஒன்றும், பரம ரகசியம் இல்லை. தாழ்த்தப்பட்டவர் / பிற்பட்டவரை அப்படி சொல்லி சொல்லியே மட்டம் தட்டினால் தான், அவர்கள் மனதில் இது ஊறிப்போகும். இதைவைத்து எளிதாக அவர்களை மனோவசியம் செய்து, அரசியல் செய்யலாம். அதுசரி, பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்ட வகுப்பில் முன்னேறியவர்கள் மற்றும் அரசியல்வாதிகள், தங்களுக்கு இடவொதுக்கீடு வேண்டாம், நாங்கள் 3 தலைமுறை முன்னேறிவிட்டோம், என்று ஏன் சொல்வதில்லை ?? இவர்கள் பிரிவில் மற்றவரை ஏன் விரைவாக கை தூக்கி விட முயல்வதில்லை ?? பின்தங்கிய / மிகவும் பின்தங்கிய பிரிவினர் ஏன் தாழ்த்தப்பட்ட பிரிவினரில் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை ?? அப்புறம், என்னத்துக்கு இந்த பிரிவினருக்கு வக்காலத்து வாங்குவதாக பகல் வேஷம் போட வேண்டும் ?? ஆகமொத்தம், தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், முற்படுத்தப்பட்ட பிரிவினருடன் போட்டிபோட தங்கள் தகுதி / திறமையை வளர்த்துக்கொள்ள விட கூடாது என்ற குயுக்தி தான். தனியாரிலும் இடவொதுக்கீடு என்று அவர்களுக்காக வக்காலத்து வாங்குவதாக கூறி,அவர்களை மேலும் மேலும் தகுதியற்றவர் என்று மறைமுகமாக கேவலப்படுத்தும் அரசியல் புத்தி. அதுசரி, திராவிட தொண்டர்களே / தோழர்களே, உங்கள் தலைவரின் அறிவுரையை மற்றும் போராட்டத்தை கேட்டு, உங்கள் வாரிசுகளை அரசு பள்ளியில், குறிப்பாக தமிழ் வழி கல்வியில் சேர்த்துவிட்டீர்களா ?? எங்களுக்கு தெரியாதா உங்கள் வீரமும் விவேகமும் மறந்தும் இதைப்பற்றி உங்கள் குடும்ப தலைவியிடம் பேச மாட்டீர்களே ??? எங்கே, நெஞ்சில் மாஞ்சா சோறு இருந்தால் உங்கள் குடும்ப தலைவியிடம் சொல்லி பாருங்கள் பார்க்கலாம் ?? பிறகு உங்கள் படுக்கை வாசலில் தான், சோற்றுக்கு லாட்டரி தான். உள்குத்து தர்ம அடி தான். நீங்கள் உங்கள் தலைவர் பேச்சை கேட்டு ரசித்து, கை தட்டி விசில் அடித்து, குவாட்டர் அடித்து, பிரியாணி ருசித்து, குப்பற படுப்பது தான், வழக்கம்போல சிறந்த வழி. ஊருக்கு உபதேசம் வேறு, தனக்கு உபதேசம் வேறு. சந்தேகம் இருக்கும் உடன்பிறப்புக்கள், எங்கே உங்கள் தலைவரை பார்த்து கேளுங்கள் பாப்போம் தைரியமாக ?? இந்தி கூடாது என்று போராடிய நீங்கள், உங்கள் மகள், பேரன், பேத்திக்கு ஏன் இந்தி கற்பித்தீர்கள் என்று ?? அப்போது சொல்லலாம், நீங்கள் எல்லாம் திராவிட இன உணர்வு உள்ளவர்கள் என்று. பணம் மற்றும் பதவிக்காக தானே, உங்கள் தலைவர் பின்னால் கோஷம் விடுகிறீர்கள். சரிதானே சரி சரி. திராவிட இனமான தோழர்களே, உங்கள் வாரிசுகளை தனியார் பள்ளிகளில் இருந்து அழைத்துவர உங்கள் குடும்ப தலைவி செல்போனில் உங்களை அழைப்பார். புறப்படுங்கள் உங்கள் தலைவரின் பேச்சையும், போராட்ட அறிவிப்பையும் பின்னால் பார்த்துக் கொள்ளாலாம். ஆடு நனைகிறதே என்று, ஓநாய் அழுத்ததாம். நல்ல நகைச்சுவை.

 • Anvardeen - chennai,இந்தியா

  தமிழ்நாட்டில் ஹிந்தி வந்து 10 வருசத்துக்கு மேல் ஆகி விட்டது இனி என்ன அனுமதி இல்லை என்று சொல்லறது . கடந்த 40 வருசமாக ஹிந்தி எதிர்பால் தமிழ் என்ன பயன் பெற்றது என்று கருணாநிதி குடும்பம் சொல்ல முடியுமா . சத்தியமாக என் குடும்ப உறுப்பினர்களோ தனது கட்சி MLA MP கள் யாரும் ஹிந்தி கதுக்கவே இல்லை அவர்கள் படித்தது எல்லாம் தமிழ் மட்டுமே என்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல் வியாதிகள் சொல்ல முடியுமா இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படியே சொல்லி அரசியயல் செய்வீர்கள் நாங்கள் எல்லா மொழிகளும் தெரிந்து கொள்ள விருப்ப படுகிறோம் நாளைய தலைமுறைக்கு எல்லா மொழிகளும் கண்டிப்பாக வேண்டும் கிராமத்தில் உள்ள மாணவர்கள் மேம்பட வேண்டும் என்ன இவர்கள் நினைத்தால் அரசு மாணவர்கள் விருப்ப பட்ட மொழிகளை தேர்ந்து எடுக்க அனுமதிக்க வேண்டும். நம்மை விட அழகாகவும் தெளிவாகவும் தமிழ் பேசும் அண்டை மாநிலமான கேரளாவில் ஹிந்தி ஒரு பாடம் தான் அங்கு அவர்கள் தமிழ் பேசுவது இல்லையா மலையாளம் பேசுவது இல்லையா ?அரசியல் வியாதிக்கேளே போதும் இதோடு நிறுத்துங்கள்

 • Murali - Ariyalur,இந்தியா

  போங்கடா படிக்காத புத்திசாலிகளா...தமிழ்நாட்டுல எவனையும் முன்னேற விடாதீங்க ..

 • S A Sarma - Hyderabad,இந்தியா

  தமிழ்நாடு மக்களை படிக்க விடமாட்டார்கள் . திராவிட கட்சி இருக்கும் வரை , மக்களுக்கு மோக்ஷம் கிடையாது . இவர்கள் மட்டும் அவர்கள் பேரன்களை வெளிநாட்டில் படிக்க வைப்பார்கள். அவர்களுக்கு பதவி வேண்டும். பணம் வேண்டும். மக்களை ஆளவேண்டும். மக்கள் ஏமாற வேண்டும். படிக்க கூடாது. அடிமைகளாக இருக்க வேண்டும். தமிழ் , சமஸ்க்ரிதம் , தமிழ்நாட்டின் இரண்டு கண்கள். இதை அறியாதார் முட்டாள்கள். மற்ற மொழி படித்தால் , நாம் தமிழ் மொழியை மற்ற மாநிலத்தி பரப்ப முடியும். தமிழர்களை அடிமை செய்தால் , திராவிட கட்சிகளுக்கு சுதந்திரம். அவர்களே பதவியை அனுபவிக்கலாம். யாரும் படிக்க கூடாது. படித்தால் , அரசியல் வாதிகளின் முகமூடி கிழிந்து விடும். இவர்களின் அராஜக வெறி, சாதி மடமை அரசியல் நாடகம் . இவர்கள் யார், மக்களின் படிப்பை பற்றி நிர்ணயணம் செய்வது ? இவர்கள் படித்தவர்களா ? இவர்கள் தமிழ் மூலம் கல்வி பயின்றவர்களா ? தமிழ், தமிழ் என்று பிதற்றும் அரசியல்வாதிகள், தமிழ் மூலம் படித்தவர்களுக்கு மட்டும் அரசியல் டிக்கெட் தருவார்களா ? தமிழ் மட்டும் படித்து விட்டு தமிழ் நாட்டில் இருக்க வேண்டியது தானே ? இவர்கள் அரசியல் நாடகம் தமிழ் மக்களை சீர்குலைய செய்து விடும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இந்த அடிமைகளுக்கு எவ்வளவுதான் பட்டாலும் புத்தி வராது...

 • rajan. - kerala,இந்தியா

  கன்னியக்கா பாராளுமன்றத்தில தமிழிலேயே பேசறது தானே. எதுக்கு ஆங்கிலத்தில் பேசி தலய உருட்டணும்?

 • Devi Kripa - bangalore,இந்தியா

  நாசமா போச்சு .....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement