Advertisement

சசிகலா புஷ்பா விவகாரம்: அ.தி.மு.க.,வுக்கு இது புதுசு!

அ.தி.மு.க.,வில், ஜெயலலிதா உத்தரவு தான் வேதவாக்கு. அதை மீறும் தைரியம் யாருக்கும் இல்லை. அமைச்சர்கள் உட்பட எத்தனையோ பேர், அவரது உத்தரவுக்கு கட்டுப்பட்டு, சந்தடி இல்லாமல், பதவி விலகிய வரலாறு உண்டு.
அப்படிப்பட்ட கட்சியில், அவரது உத்தரவை மதிக்காமல், அவருக்கு எதிராகவே, கட்சியில் இருந்து கொண்டே கொடி துாக்கிய முதல் சம்பவம், சசிகலா புஷ்பா விவகாரமாகத் தான் இருக்கும் என்கின்றனர், அரசியல் ஆய்வாளர்கள்.இதுகுறித்து அவர்கள்
கூறியதாவது:கிட்டத்தட்ட, 15 ஆண்டுகள் முதல்வராக இருந்து விட்டார் ஜெயலலிதா. அவர், ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வின் பொதுச் செயலரான பின், அவரதுஅதிருப்திக்கு ஆளாகி, பலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்; பலர் கண்டிக்கப்பட்டுள்ளனர். சிலர் கடும் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டதும் உண்டு.
ஆனால், அவர்களில் யாருமே ஜெயலலிதாவை, சசிகலா புஷ்பா எதிர்த்த அளவுக்கு எதிர்த்ததில்லை. கட்சியை விட்டு வெளியேறிய பின், எதிர்த்தவர்கள் இருக்கின்றனர். கட்சியில் நீடிக்கும் ஒருவர், ஜெயலலிதாவுக்கு பிடிக்கவில்லை என்றால், எந்தப்பொறுப்பில் இருந்தாலும், ராஜினாமா செய்து விட்டு அமைதியாகி விடுவது தான் வாடிக்கை.
தன் பதவியை காப்பாற்றவும், அரசியல் சுயநலத்துக்காகவும், ஜெயலலிதா எதிர்ப்பு நிலைப்பாட்டை, சசிகலா புஷ்பா எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், அந்த தைரியம், இதற்கு முன் யாருக்கும் வந்ததில்லை என்பது தான், ஆளும் கட்சியினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அ.தி.மு.க.,வில் செல்வாக்கு இன்றி ஓரங்கட்டப்பட்டவர்களும், கட்சியை விட்டு வெளியேறி அரசியல் துறவறம் பூண்டவர்களும், சசிகலா புஷ்பாவை பாராட்டும் தகவல் வெளியாகி வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (179)

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  கொத்தடிமைகளாக இருக்க விரும்பினால், எசமாட்டியின் சொல்லை கேட்கத்தானே வேண்டும்.

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  நடத்துறது அடிமைக் கோமாளிகளின் கேவலமான ஆட்டம். மையப்படுத்தப்பட்ட ஊழல் கொள்ளைக்கு கூடாரம். அதுக்கு பேரு கடைசி, தலைமை.. இந்தம்மாவை பத்தி கூவும் புத்திசாலிகளுக்கு.. இதுவும், இதை போல டெல்லிக்கு 40 ம், தமிழ்நாட்டில் இன்னும் நூற்றுக்கணக்கில் "தேர்ந்தெடுத்து" கொள்ளைக் கூட்டத்தை நடத்தும் கோமளவல்லியைப் பற்றியும் கூறுங்கள். தனது கைப்பட ஒவ்வொரு அடிமையையும் தேர்ந்தெடுத்து அனுப்பிய புத்திசிகாமணி இந்த தலைவி தானே? இந்த பிரச்சினையில் ஆயாம்மா சட்டப்படி ஒரு கூந்தலும் பிடுங்க முடியாது. ஆயாம்மா எப்பவும் செயறது போல கஞ்சா வைத்து வேண்டுமானால் பிடிக்கலாம், இல்லை பின்னால் லாரியை விட்டு மோதி கொல்லலாம், வாக்கிங் போகும் போது கொல்லலாம், ஆசிட் ஊத்தி கொல்லப் பார்க்கலாம். வீட்டிலே இருக்கிறவர்களை கடத்தி வழிக்கு கொண்டு வர பார்க்கலாம்.. பேயாட்டம் ஆடினாலும், என்ன செஞ்சாலும் இப்போ சசிகலா புஷ்பாவுக்கு என்ன நடந்தாலும் ஆயாம்மா தான் அதற்கு காரணம் என்று உலகுக்குத் தெரியும்.

 • S Sam - Kuala Lumpur

  இந்த "அம்மா" நிற்கவோ நடக்கவோ முடியாத நிலையில் இவர் அறைந்தாரா அல்லது உட்கார்ந்து கொண்டே ரூலரால் அடித்தாரா என்ற கேள்விகள் மனதில் எழுகின்றன. அடி வாங்கிய அம்மா விமான நிலையத்தில் மானத்தை வாங்கியது மட்டுமின்றி, பாராளு மன்றத்திலும் மறு ஒலிபரப்பு செய்து......சே.....

 • zakir hassan - doha,கத்தார்

  சோவியத் யூனியன் சுக்கு நூறான மாதிரி அம்மையார் திமுக விரைவில் பல பிரிவுகளாகி விடும் சசிகலா புஷ்பா தொடங்கியுள்ளார் படிப்படியாக பலரும் பொங்கி எழுந்து பிரித்து விடுவார் அம்மையார் நிரந்தரமாக கொடநாட்டில் ஓய்வெடுப்பார்கள்

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  ஜெயலலிதா அவர்கள் ஒரு தேர்ந்த முதிர் அறிவு பெற்ற சிறந்த அரசியல்வாதி. அவர் அறைந்தார் என்று சொல்வது முற்றிலும் பொய். மேலும் யாரிடமோ கைக்கூலி பெற்று கொண்டு ஜெயலலிதாவிற்கு அவப் பெயர் ஏற்படுத்துவதுதான் புஷ்பாவின் நோக்கமாகும். இவருடைய கூற்றை கலைஞர் அவர்களே ஏற்று கொள்ள மாட்டார்.

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  தப்பி தவறி திமுக தலைமை இந்த புஷ்பாவிற்கு ஆதரவு கரம் நீட்டி, தமது கட்சிக்குள் சேர்க்குமானால், அது திமுகவிற்கு மிக பெரிய அவமானத்தையும் சறுக்களையும் தரும். இனி சாதாரண திமுக தொண்டன் கட்சியை கட்சி தலைமையை மதிக்க மாட்டான். இந்த விஷயத்தில் திமுக பொறுமையையே கையாளும் என தோன்றுகிறது.

 • பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ

  இதுதான் ஆரம்பம் இனி இருக்குது ஆயாவிற்கு அதிர்வேட்டு

 • மணிமேகலை - paris ,பிரான்ஸ்

  அ தி மு க வில் ஒரே வீரமுள்ள ஆண்மகள் சசிகலா புஷ்பா மட்டுமே இவர் சேலை கட்டிய ஆண் மற்றவர்களெல்லாம் வேட்டி கட்டிய பெண்கள் .............வாழ்க சன நாயகம் .

 • ganapathy - khartoum,சூடான்

  இந்த புஷ்பா யாரு...கொள்ளை அடித்து பினாமி பெயரில் சொத்து சேர்த்து, எதிர் கட்சி காரனோட கூடி குலாவியவர்... செருப்பாலையும் அடித்து வெளியேற்றலாம்...

 • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

  எந்த ஒரு கட்சியிலும் சர்வாதிகாரம் இருக்கக்கூடாது கட்சியில் உள்ளவர்களுக்கு கருத்து சுதந்திரம் மற்றும் முழு சுதந்திரம் இருக்கவேண்டும் அது கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடு ஒன்றி இருப்பது மிகவும் அவசியம்

 • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

  பூனையும் இல்லை மணியும் இல்லை. யாரோ கொடுக்குற தைரியத்துல இந்த பொம்பள ஆடுது. கூடிய சீக்கிரமே இருக்குது பெரிய ஆப்பு. அம்மான்னா சும்மா இல்ல.

 • spr - chennai,இந்தியா

  பலரும் அறிய அடி வாங்கியவர் எதுவும் பேசவில்லை ஊடகங்கள் அதனை உலகறிய செய்துவிட்டது அவரது கட்சியினர் தங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர் தாக்கப்பட்டது குறித்து எதிர்ப்பு எதுவும் எழுப்பவில்லை அவரது கட்சியினரும், இதர எதிர்க்கட்சியினரும் அதனை ஜெயலலிதாவுக்கு எதிரான வாய்ப்பாகக் கருதி ராஜ்ஜிய சபையில் திருச்சி சிவாவின் மானத்தைக் கப்பலேற்றி விட்டனர் ஆனால் இந்தப் பெண்மணியை தமிழக முதல்வரும் கட்சித்தலைமையுமான ஜெயலலிதா அடித்ததாக, அவரால் மட்டுமே சொல்லப்படுகிறது இந்தப்பெண்மணி திருச்சி சிவாவுடன் இருப்பதாகக் காட்டப்படும் படங்கள் எவரோ அவர்கள் அறிய போட்டோ எடுத்திருப்பது உறுதியாகத் தெரிகிறது. நல்லா "போஸ்" கொடுத்திருக்கிறார்கள் இவர் பேரில் இன்னும் பல குற்றச்சாட்டுகளும் இருப்பதாக செய்தித்தாள்கள் சொல்கின்றன சட்டம் ஒழுங்கு மாநில சமாச்சாரம் ஆனால் ராஜ்ஜிய சபையில் இந்தக் காரணம் காட்டியாவது பணி நடக்கவிடாமல் செய்ய வாய்ப்பை எதிர்பாத்திருந்த எதிர்க்கட்சிகளுக்கு இது நல்ல வாய்ப்பு ஆனால் திமுக தலைமை இதனை விளம்பரப்படுத்தி திருச்சி சிவாவை அவமானப்படுத்துவது ஏனென்று தெரியவில்லை ஆங்கிலப் பத்திரிகைகளின்படி இந்த அம்மையார் பயணம் செய்யும் அதே விமானத்தில் பயணம் செய்வதனை திருச்சி சிவா விரும்பவில்லை அதனால் திரும்பிச் செல்லுகையில் இவரால் தாக்கப்பட்டார் என்று சொல்கின்றன இப்பொழுது சட்டம் ஒழுங்கு டெல்லியில் அல்லவா கெட்டுப் போய்விட்டது ஒரு ஆண்மகன் துணிந்து நடக்க முடியாமல் அடிக்கப்பட்டிருக்கிறாரே ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத கட்சித்தலைமையின் விருப்பத்தின் பேரில் ராஜ்ஜிய சபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அக்கட்சிக்கு அவரது நடத்தை பிடிக்கவில்லையென்று அவரைக் கட்சி நீக்கம் செய்தால் அந்தப்பதவியில் எப்படி நீடிக்க முடியும்? இங்கு சட்டம் என்ன சொல்கிறது யாரேனும் சொல்வார்களா

 • ideamani - vridhachalam,இந்தியா

  இது தீமுக்காவால் திட்டமிட்ட செயல் . தனது கட்சி எம்பீ அடிவாங்கியதை பற்றி யாரும் அறிக்கை விடவில்லை , கூப்பாடு போடவில்லை ஏன் தனது குடும்ப தொலைக்காட்சிலயும் அதிகம் kaattaavo, விமர்சிக்கவோ illai. இவர்கள் மீது தப்பு இல்லையென்றால் police, கோர்ட் எல்லாம் வழக்கு paoda vendiyathuthaane. எதற்கெடுத்தாலும் வெற்று அறிக்கை விடும் பெரிய கிழம் அதை வளைமொழியும் china கெல்லாம் ஏன் எதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை .இதிலிருந்தே இவர்களின் சாதி மற்றும் முகமூடி கிழிந்து விட்டது .இதன் பின்னணியில் ஒரு கொள்ளைக்காரியும் ஒரு கொள்ளைக்காரனும் இருக்கிறார்கள் .இது தெரியாமல் அந்த சதிகாரி விரித்த வலையில் இவர் விழுந்து விட்டார் . பாவம் இவர் அரசியலுக்கு புதுசு .அதான் இப்படி பக்குவம் இல்லாமல் நடந்துகொண்டார் . மற்றபடி இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை .ஆனால் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க கட்டுமரம் @ கோ முயற்சி செய்கிறது . ஜெயா இனிமேல் இது போன்ற புல்லுருவிகளை நம்பாமல் கட்சி விசுவாசிகளை வளரவிடவேண்டும் .கட்சியில் உங்கள் பிடி தளர்கிறதோ இல்லை உளவுத்துறையில் கருப்பு ஆடுகள் ullathaa, விலை போய் விட்டார்களா , உஷாரா இருங்க மேடம் .

 • raja - Kanchipuram,இந்தியா

  இவரை எதிர்த்தால் என்ன செய்ய முடியும். அந்த வகையில் அடிமை கூட்டத்தில் இருந்து இப்படி பேசுவது வரவேற்க தக்கது. இனிமேலாவது அவரை பார்த்தவுடன் பம்முவது நிறுத்தப்படவேண்டும். ஜெயலலிதா சாதாரண மக்கள் போல் இருக்க முற்பட வேண்டும். அப்படி நடிக்கவாது முயற்சிக்க வேண்டும்.

 • இளங்கோ - chennai,இந்தியா

  கட்சி கட்டுப்பாடு என்பது கட்சி அபிமானம் மற்றும் கொள்கை சார்ந்து இருக்கும் வரை தான் ஜனநாயகம். பதவி, அதிகாரம் ஆகியவை தான் முக்கியம் என்று ஆகி விடும் போது அடக்கு முறை மேலோங்கி விடுகிறது. அந்த அடக்குமுறை ஒரு உச்சத்தை எட்டிய பிறகு சரிவை சந்தித்து தான் ஆக வேண்டும்.

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  இருமினால் தும்மினாலும் அறிக்கை விடுபவர் பெண் எம்பி கன்னத்தில் அறைந்த விவகாரம் குறித்து இதுவரை எந்த அறிக்கையும் விடாது மவுனம் சாதிப்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.. யார் சூத்ரதாரி என்று.

 • rajasekar - abbasiya,குவைத்

  அதிமுக வின் எதிர்கால தலைவரானாலும் ஆவார்

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அ.தி.மு.க.,வுக்கு இது புதுசு தவறு. பாட்டி தான் கொ.ப.செ. கொடுக்க வேண்டும் என்று என்ன ரகளை? என்ன எதிர்ப்பு எம்.ஜியாரிடம். ஆகவே பாட்டி தான் ஆரம்பித்தது, பிறகு வீரப்பன் கொஞ்சம், பன்னீர் கொஞ்சம் இப்போ சஷிகலா புஸ்பா

 • tony vel - georgetown,கயானா

  பூனைக்கு மணி கட்டுவது யாரு என்பதில் எல்லோரும் ஆர்வமாக இருந்தார்கள் அதிருப்தி admk ஆட்கள் , இப்போது மணி கட்டியாச்சு . இதில் எலி பெரிசா என்பது முக்கியமில்லை . count down ஸ்டார்ட்ஸ். .

 • A. Sivakumar. - Chennai,இந்தியா

  முன்கூட்டியே திட்டமிட்ட நாடகத்தின் ஒவ்வொரு எபிஸோடாக நிறைவேற்றுகிறார்கள். கொல்றாங்களே கொல்றாங்களே என்று ட்ராமா போட்ட தலைவரிடம் சீக்கிரமே தஞ்சம் அடைவார் என்று நினைக்கத் தோணுது.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  பெண் புத்தி பின் புத்தி என்பார்கள் அது இரு பெண்மணிகளுக்கு பொருந்தும் உணர்ச்சிக்கு அதிகம் முக்கியம் அழித்து விட்டார்கள். ஒருவர் மன்னிப்பு கேட்டு விட்டார் மறப்போம் மன்னிப்போம். இப்போது அவருடைய உயிர் பிரச்சனை. பாதுகாப்பு கொடுக்கவேண்டியது அரசின் பொறுப்பு.

 • Balaji - Khaithan,குவைத்

  எனக்கு ஒரு சந்தேகம்...... எனது சந்தேகத்துக்கு இந்த சம்பவத்திற்கும் சம்மந்தம் இல்லை (பொதுவாக தெரிந்துகொள்ளவே கேட்கிறேன்.... நான் எந்த கட்சியையும் சாராதவன் என்பதை நினைவில் கொள்ளவும்)..... ராஜ்யசபா MP பதவி கட்சியால் போட்டியிட்டு கட்சியினரால் தேர்தெடுக்கப்படுவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை...... அப்படியிருக்க அக்கட்சி தேர்ந்தெடுத்த உறுப்பினரை கட்சியை விட்டு நீக்கிவிட்டால் அந்த பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்ததாகத்தானே அர்த்தம்..... நான் திரும்ப சொல்லுகிறேன், எனது சந்தேகம் வெறும் விவாதத்திற்காக மட்டும் தான் கேட்கிறேன்..... ஆரோக்கியமாக பதிலளிப்பவர்கள் மட்டும் தங்களின் கருத்தை பதியவும்..... அடிமை அது இது என்பவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டியதில்லை......

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  தன்னை தாக்கிய பெண் எம்பீ மீது புகார் கொடுப்பாரா திருச்சி சிவா ??? புகார் கொடுத்தால் உண்மையான ஆம்பிள்ளை இல்லை என்றால் ????

 • bairava - madurai,இந்தியா

  ஆமாம் புதுசு ..கண்ணா ..புதுசு .....அம்மாவுக்கு ..புதுசு ....இந்தியாவிற்கே இந்த எம் .பி ....புதுசு ..இந்த எம் .பி ...குடுச்சுட்டு கூத்தாடுச்சுது ...புதுசு ....ஒரு தமிழ் பெண் எம் .பி விமான நிலையத்தில் ஒரு தமிழ் ஆண் எம் .பி யை அடித்தது ..புதுசு ....குடுச்சுட்டு கூத்தடிக்குறதுக்கும் ..கள்ளத்தனம் பண்ணுறதுக்கும் ..மத்திய அரசு பாதுகாப்பு கொடுப்பது ...புதுசு ....ராஜ்ய சபாவில் மக்கள் பிரச்சினையை பேசாமல் கள்ளத்தொடர்பையும் உள்கட்சி பிரச்சினையும் பேசுவது ..புதுசு ....இந்த அயோக்கியத்தனையும் ஆதரிக்கும் எதிர்க்கட்சிகள் ...புதுசு ....கட்சியின் தலைமையின் கட்டளைகளை மீறி ராஜ்யசபாவில் ..குற்றம் சொல்லுவது ...புதுசு ........இதெயெல்லாம் தமிழ் மக்கள் பார்ப்பதும் கேட்பதும் கேவலமான..... புதுசு....இதுதான் இனி வரும் காலத்தின் அரசியல் மாற்றமோ ...? தெரியவில்லை ...ஆக மொத்தம் ...இங்கே நடப்பது மக்கள் ஆட்சியில் ..அரசியல் சுயநலவாதிகள் கூடாரம் இந்தியா அரசியல் .....இதுவும் .புதுசு

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  தமிழக அரசியல் மற்றவர்கள் எள்ளி நகையாடும் அளவில் அமைந்தது வருந்தத் தக்கது.

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  பேரறிஞர் அண்ணாவிற்குப் பிறகு தமிழகத்தில் ஆரோக்கியமான நல்ல அரசியலில்லை. அப்படி நல்லது நடந்திருந்தால், காவிரியையும் பறிக் கொடுத்திருக்க மாட்டோம். கச்சத் தீவையும் இழந்திருக்கமாட்டோம். தமிழக மீனவப் பிரச்சனைகளும் எழுந்திருக்காது. முல்லை பெரியாறு அணை விவகாரத்திலும் கைவைத்திருக்கமாட்டார்கள். இன்று நம் கண் முன்னே நடந்த ஈழத் தமிழர் இனப்படுகொலையுமில்லை. கடைசியாக பாலாற்றில் அணை கட்டியிருக்கவும் மாட்டார்கள். இன்று சாராயமும் ஆறாய் தமிழகத்தில் ஓடியிருக்காது. இனிமேலாவது மக்கள் தங்களின் சுயநலன்களை மறந்து தமிழினம் மொழியென்ற உணர்வோடு விழித்துக் கொண்டு பொறுப்புணர்வோடு நல்ல அரசியலுக்கு மதிப்பளிப்பார்களா?

 • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

  ஜெ. அவர்கள் புஷ்பாவை ஏனோதானோ என்று நீக்கிவிடவில்லை. பொது இடத்தில் சட்டம் ஒழுங்கை பின்பற்றி மக்களுக்கு சட்டத்தை மதிக்க கற்றுக்கொடுக்கவேண்டிய பாராளுமன்ற உறுப்பினர், பாதுகாக்கப்பட்ட இடமாக கருதப்படும் விமான நிலையத்தில் மாண்புமிகு என்ற தகுதியை இழந்து பேட்டை ரவுடிபோல நடந்துகொண்டு தான் சார்ந்த கட்சிக்கு அசிங்கத்தை ஏற்படுத்திய ஒரு நபருக்குத்தான் தண்டனை அளித்துள்ளார். மேலும் அவர் mp ஆக நியமனம் செய்யப்பட்டதே ஜெ.வின் சொந்த விருப்பத்தில்தான் ஆதலால் இதுகுறித்து ஜெ.அவர்கள் மற்ற யாரையும் குறைகூற இயலாத நிலையில் இதற்கான முழுப்பொறுப்பும் தான் தான் எனக்கருதிய ஜெ.கோபத்தின் உச்சிக்கே சென்றதால் அறைந்து விட்டார். ஆனாலும் புஷ்பாவை mp என்ற கவுரவுத்துடனே சென்று ராஜினாமா அளிக்க வாய்ப்பும் கொடுத்தார். நாயை நடுவீட்டில் ஏசி அறையில் வைத்தாலும் அது நாற்றமெடுக்கும் உணவைத்தான் விரும்பும் என்பது பழமொழி. ஆனால் டில்லி வந்துவிட்டோம் இனி ஜெ.மிரட்டுவதெற்கெல்லாம் ராஜினாமா செய்யத்தேவையில்லை எனக்கருதி தன சுயரூபத்தை காட்டிவிட்டார். ஜெ.நேரடியாக நியமித்த mp ஆக இருக்கும்போதே இவ்வளவு தெனாவட்டுடன் நடந்துகொள்வது, புஷ்பா அழிவைத்தேடி அசுரவேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

 • ramesh china - Guangzhou

  நன்றி வணக்கம்

 • Stalin - Kovilpatti,இந்தியா

  கருமமே நிலையடா அட சை

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  சசிகலா புஷ்பா விவகாரம் நல்ல ஆரம்பம் தமிழக அரசியலில் நல்ல விடியலுக்கு இதுவொரு நல்ல ஆரம்பமாகயிருக்கட்டும். மக்களாட்சியில் தலைவர்களுக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் செயல்படுவது தவறில்லை இது இந்திய மக்களாட்சிக்கு எதிரானதென்று எவராவது சொல்ல முடியுமா? ஏன் முன்பு எம்ஜிஆர் இப்படி செயல்படவில்லையா? பாதிக்கப் பட்ட இந்த அம்மையார் வேதனைப் பட்டு புலம்புவதுப் போல், அறைவதும் தாக்குவதும் எந்த விதத்தில் நியாயம்? இவர் சொல்வது தவறென்றால் இவரை சட்டத்தின் முன் நிறுத்தலாமே

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  சசிகலா சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்த அளவு உயர காரணம் என்ன? பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் இருக்கும் போது 33 வயதில் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்து மேயர், mp ஆக முடியுமா? ஒரு பெரிய ஆள் சப்போர்ட்டால் இது நடந்தது. அந்த ஆள் யாரு என்று விகடன் இல் போடப்பட்டிருக்கிறது. அந்த பின் புலத்தினால் தான் அம்மாவை எதிர்க்க துணிந்தது. சசிகலா puspha வை ஒன்றும் செய்யமுடியாது.

 • Balaji - Khaithan,குவைத்

  திருச்சி சிவாவை அறைந்த போது என் கட்சி தலைவியை தவறாக பேசினார், அதனால் தான் அடித்தேன் என்று சொல்லிவிட்டு 2 தினங்களுக்கு பிறகு கட்சி தலைவியையே கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது வியப்பாக இருக்கிறது..... நடந்த அனைத்துமே ஜோடிக்கப்பட்டது போலத்தான் இருக்கிறது.... இதன் பின்னால் திமுகவின் தூண்டுதல் கண்டிப்பாக இருக்கும் என்பதும் அறைந்ததற்கு பெரிதாக யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமலும் அறைந்தவருக்கே வாக்காலத்து வாங்குவதாலும் தெளிவாகிறது..... அதிமுக தலைமை கட்சியினரை தன் கட்டுப்பாட்டில் வைப்பதில் ஏதோ சறுக்கலை சந்திக்கிறது போல.... முன்னர் பழ.கருப்பையா இப்போது இவர்...... இனி அக்கட்சி முழித்துக்கொண்டால் கலைஞர் குறிப்பிட்டது போல (18 MLA கள் தான் கூடுதல் பெற்றுள்ளனர்) அவர்களை பாதுகாத்து ஆட்சியை முழுமையாக செய்ய முடியும்..... இல்லையென்றால் கலைஞர் சொன்னதை செய்து காட்டிவிட்டு திரும்ப சொல்லுவார் "நான் தான் அப்போதே சொன்னேனே" என்று.........

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  தவறுகள் செய்தால் தண்டிக்கும் உள்ள ஒரே கட்சி உள்ள தலைவர் ஜெயலலிதா அவர்கள் . அடி வாங்கி வெட்கம் இல்லாமல் தலையை தொங்க போட்டு கொண்டு சென்ற சிவா வை பற்றி மஞ்ச துண்டு ஏதாவது சொல்கிறதா . இதில் பெண் சுதந்திரம் பற்றி சின்ன தாத்தா சுடாலின் வெட்டி அறிக்கை விடுகிறது . இதில் ஜாதி அரசியல் செய்கிறார் கனிமொழி. இப்படிப்பட்ட கேடுகெட்ட அரசியல் நடத்துவது மஞ்ச துண்டின் கட்சி தான் . ஒரு கட்சி எம் பி யை வைத்து அவமான அரசியல் செய்து தலைநகரத்தில் தமிழனின் பெயரை கெடுத்த மஞ்ச துண்டை பற்றி என்ன சொல்வது

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  கூன் பாண்டியர்களுக்கு இப்போதாவது தைரியம் வரட்டும், தைரியம் புருஷ லட்சணம், நன்றாக யோசியுங்கள் யானைக்கு வாலாக இருப்பதை விட எறும்புக்கு தலையாக இருப்பது மேல்

 • Sundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்

  இவர் பாராளுமன்றத்திலேயே குற்றம் சாட்டி பேசி அவையையே கிடுகிடுக்க வைத்து விட்டார். இது நிச்சயம் ஜெயலலிதாவிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இனி மேற்கொண்டு சிலரும் இதை உதாரணமாக எடுத்துக்கொண்டு அவரை எதிர்க்க துணியும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை. அராஜக அகங்காரத்துக்கு முடிவு கட்ட பிறந்த ஜான்சி ராணி சசிகலா புஷ்பா. பூனைக்கு மணி கட்டியுள்ளார். யானைக்கும் அடி சறுக்கும். ஆளுங்கட்சியா இருந்தும் எதிர்க்க ஒரு ஆள். இது ஜஸ்ட் பிகினிங் தான். போக போக புதுசு எல்லாம் பழசாகி, முலாம் பூசிய பாத்திரம் பல்லிளிக்க ஆரம்பிக்கும். என்னதான் ஜெயலலிதாவுக்காகத்தான் மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கிறார் என்றாலும் அதிமுகவில் ஜெயலலிதா அவர்களின் பிடி தளர்ந்து வருகிறதென்பது என்னவோ உண்மைதான். Now she is a roll model of all women.

 • karthik - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  எதற்காகவோ ஒரு நாடகம்

 • sachin - madurai,இந்தியா

  இனி அப்படி தான் நடக்கும் அதிமுக வில் ............இது தொடரும் என்று நினைக்கிறேன்.........இனி யாரையும் அடிக்காமல் துன்புறுத்தாமல் கட்சி நடத்துவது நல்லது ........இல்லை என்றால் ஒரு நிமிடத்தில் இந்தியா முழுவது ஜெயா பேசப்பட்டது போல மீண்டும் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் ...........

 • sachin - madurai,இந்தியா

  சேகரா ..ஆந்திர அரசு பாலாற்றில் 12 அடி உயரத்துக்கு அணை கட்டிய போதே தூங்கிய அரசு ......சென்னை வெள்ளத்தால் தத்தளித்த போது தூங்கிய அரசு .......ஆகவே இது தூங்கும் அரசு என்று மக்களுக்கு தெரியும் சேகரா.... சர்வாதிகாரம் என்றும் நிலைத்து இல்லை .....தான் சொல்வது வேதவாக்கு தன்னை யாரும் எதிர்க்க கூடாது என்று இறுமாப்பு இது எல்லாம் ஒருதத்தரை நேரம் வரும் போது அழித்து விடும் ....ஹிட்லர் வாழ்க்கை " ............இனி அதிமுக வில் இது போன்ற சத்தம் அதிகமாக ஒலிக்கும் ....பூனைக்கு மணி கட்டுவது யாரு என்று பார்த்தால் அது சசிகலா புஷ்பா தான் இனி எல்லாரும் கட்டுவார்கள் .......ஜெயா அவர் கட்சி ரீதியாக செய்தது சரி தான் ஆனால் அடித்து துன்புறுத்தி இருக்க கூடாது ...........

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  நாளைக்கு இதைப்போல் எத்தனை பேர் கிளம்புவார்களோ என்று அம்மாவுக்கு வயிற்றைக் கலக்கும்

 • Shan Sasikaran - Madras,இந்தியா

  தலைவி எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியே? புரட்சித்தலைவி, எந்த விடயத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் புரட்சி செய்து சாதித்தார்? எல்லாம் உள்ளதை உலக்கையை வைத்து விதம் - விதமான கோணத்தில் வைத்து கிடைப்பதைக் குத்துகின்றார்கள் தவிர, புதுமை எதையையும் குத்தவும் இல்லை - குத்துவதற்கு புது வியூகம் வாக்குத்தத்தம் இல்லை.

 • christ - chennai,இந்தியா

  முன்பு கட்சி தலைவி சட்டசபையில் தன் சேலைய உருவினார் என புகார் கூறினார் . இன்றோ தனக்கு கொலை மிரட்டல் விடுகிறார் என தன் தலைவி மீதே பாராளுமன்றத்தில் புகார் கூறி இருக்கிறார் ஒரு உறுப்பினர் இதுதான் காலத்தின் கட்டாயம் ..

 • kumar - chennai

  இந்த கதையெல்லாம் பத்திரிகைகாரர்கள் திணிப்பது தான்.அப்படியே ஒருவேளை தன்னிசையாக நடந்துகொண்டாலும் 3 வருடம் கழித்து அவர்கள் எதிர்காலம் என்னவாகும்.

 • 23m Pulikesi - Chennai,இந்தியா

  எத்தனையோ பேரை பார்த்த ஜெவுக்கு இந்த புஷ்பா எந்த மூலை. எந்த கட்சியில் இருந்தாலும் இனிமேல் அரசியல் பண்ணுவது கடினம். ஆமாம் இந்த புஷ்பா புருஷன் யாருங்க. சொல்லுங்க ப்ளீஸ்.

 • Visu Iyer - chennai,இந்தியா

  எப்போ உடையும்

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  இந்த கலாச்சாரம் எம்.ஜி.யாரால் கொண்டுவர பட்டது..எம்ஜியார் எல்லா எம்.எல். ஏ களிடம் சொல்லுவாராம் 'நீங்கள் எம்.எல். ஏ ஆனது எனது பெயரால்.. அதனால் எல்லோரும் நான் சொன்ன படி கேட்டு நடந்தால் நல்லது. இல்லை காட்ச்சியை விட்டு விலகி வைக்க படுவார்கள் '...அது அவர் காலத்தில் இது சாத்தியமானது, ஏனென்றால் பெரும்பாலான எம்.எல். ஏ க்கள் எம்ஜியாரின் ரசிகர் மன்ற தலைவர்கள்.. அதாவது இந்த விசிலடித்தான் கூட்டம் கும்பலாக அரசியலுக்கு எம்ஜியார் காலத்தில் வந்ததது.. இதோடு எம்ஜியார் இந்த எம்.எல்.ஏ க்களை போலிசை கண்காணிக்க சொல்வாராம்.. யாராவது எம்ஜியாருக்கு பிடிக்காததை செய்தால் ராமாவரத்தில் அடி உதை தான்.. அதாவது எம்ஜியார் சர்வாதியாக ஆட்சி செய்தார்..யாரும் எதிர்க்க கூடாது.. இதனால் தான் விகடன் ஆசிரியர் ஜெயிலில் போடப்பட்டார்..அதே சமயம் டெல்லியில் யார் ஆட்சி செய்தாலும் அவர்களோடு அனுசரித்து ஆட்சி செய்தார்...இதையே ஜெயா தொடர்ந்தார்.. ஆனால் என்ன எம்ஜியார் மக்களுக்காக வாழ்ந்தார்.. அதனால் அவரை யாரும் எதிர்க்க முடியவில்லை.. ஆனால் ஜெயா எம்ஜியார் பேர் சொல்லி பல அட்டகாசங்கள் சொத்து வாங்குவது.- (கொட நாடு , சிறுதாவூயூர்.லண்டன் ஹோட்டல் ...இப்படி பலசொத்துக்கள் வாங்கினார்),.. சசிகலா இன்னொரு அதிகார மையம் ஆகச்செயல் படுவது,, கொள்ளை எல்லாவற்றிலும் கொள்ளை , எல்லோரும் காலில் விழ வைப்பது ,.இப்படி ஆளுமை இல்லாமல் தான்தோன்றி தனமாக செயல் பட்டார்..இது அதிக நாள் தொடர முடியவில்லை.. இப்போ மாட்டி கொண்டார்.. அதிமுக என்ற கட்சியே கொள்ளை அடிக்க என்ற சித்தாந்தத்தில் செயல் பட ஆரம்பித்தது..அப்படி இருந்தும் மக்கள் அதிமுகவைத்தேர்ந்து எடுத்தார்கள் ஏனென்றால் திமுக, முக இவர்களை விட பெரும் கொள்ளைக்காரர்.. அதனால் ஜெயா ஆட்சிக்கு வந்தார்..இப்போ அதிமுகவில் எல்லா அரசியல்வாதிகளும் தங்களுக்கு எப்போ சான்ஸ் வரும் என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்..அதனால் பதவிக்கு வந்ததது எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொள்ளை அடித்து விடுகிறார்கள்..ஏனென்றால் அவர்களுக்கு மீண்டும் பதவி கிடைக்காது..ஜெயாவும் இதை ஆதரித்தார் ஏனென்றால் கொள்ளையில் ஒரு பகுதி அம்மாவிற்கு கப்பம் கட்டினார்கள்..ஆனால் இப்போ கொள்ளை அடித்தவர்கள் கப்பம் கட்ட மறுக்கிறார்கள். ஏனென்றால் மீண்டும் அவர்களுக்கு பதவி கிடைக்காது... அதிமுக என்ற கடசியே எல்லோரும் சமயம் வரும்போது கொள்ளை அடிக்க என்றாகி விட்டது..இதில் சமூக சேவை. நாட்டு முன்னேற்றம் ..இதெல்லாம் கிடையாது..இதோடு இந்த தடவை அதிமுக பெரும்பான்மை குறைவு... இப்போ அதிமுகவில் யாராவது 20 எம்.எல் ஏ வை வைத்து இருந்தால் ஜெயாவை தண்ணி காட்டலாம்..அதனால் ஜெயா தன்னிசையாக செயல் பட முடியவில்லை..இந்த புஷ்பா சசிகலா நிகழ்வு தொடக்கமே..அதிமுக அதிருப்தி அரசியல்வாதிகள் ஒன்று சேர்வதற்கு இது ஒரு தொடக்கம்..ஜெயா ஒன்னும் செய்ய முடியாது..போலீசை விட்டு மிரட்டினால் இன்னும் அதிருப்தி கூடும்..ஜெயா ..காலில் விழ இனி போட்டி இருக்காது..

 • Madhu - Trichy,இந்தியா

  திருமதி சசிகலா புஷ்பா அவர்கள் நாடாளு மன்ற மேல் சபையில் வெளிப்படையாகத் தனது கட்சித் தலைவரைப் பற்றிக் கூறியதை வழக்கம்போல 'அவதூறுகள்' பட்டியலில் சேர்க்க முடியாது. ஏனெனில் பாதிக்கப் பட்ட பெண்மணி முதலில் தனது முந்தைய‌ நடத்தைக்காக வெளிப்படையாக அவையில் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பிறகே'போயஸ் கார்டனி'ல் என்ன நடந்தது என்பதைத் தெரிவித்திருக்கிறார். அவரது கூற்றுப்படி அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதை அவைத் தலைவர் ஏன் பதிவு செய்யாமல் விட்டார் என்பது புரியவில்லை. நாடாளுமன்ற மேல் அவையில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய பின்னரும், நடை முறைகளைக் காரணம் காட்டி, தட்டிக் கழிப்பது மோசமான முன் உதாரணத்தைத்தான் ஏற்படுத்தும். திருமதி சசிகலா புஷ்பாவுக்கு இரண்டு கழகங்களிடமிருந்தும் பாதுகாப்பு தேவை என்றுதான் இச்சம்பவத்தைக் கவனிக்கும்போது தோன்றுகிறது. அவர் அஞ்சியபடியே அவருடைய பாதுகாப்பு கேள்விக் குறியாகும்போது இரு கழகங்களும்தான் முதலில் ஒன்றையொன்று விரல் நீட்டிக் குற்றம் சுமத்திக் கொள்ளும் பாருங்கள்

 • Varun Ramesh - Chennai,இந்தியா

  சசிகலா புஷ்பா என்ன ஓ.பீ.எஸ்ஸா, செந்தில் பாலாஜியா அல்லது நத்தம் விஸ்வநாதனா மண்டியிட்டு அடிபணிய. சசிகலா பெண் மற்றொரு சக்தி.

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  எவ்வளவு சம்பாதிச்சாலும் வாயில மட்டும்தான் சாப்பிட முடியும் வேற எந்த வழியவும் சாப்பிட முடியாது.அப்புறம் அவ்வளவுதான் காலம் பூரா பயந்தே சாவ வேண்டியதுதான்.

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  செஞ்ச வேலைக்கு கூலின்னு ஒன்னு இருக்கும் போது, அதே மாதிரி செஞ்ச பாவத்துக்கும் கூலின்னு ஒன்னு இருக்குமில்ல. ஊர் சாபம் சும்மா விடுமா?இல்ல நிம்மாதியா வாழதான் விடுமா?

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  அரசியல்ல பழி வாங்க பட்டவங்களும், ஓரங்கட்ட பட்டவங்களும் % இத கட்ட முடியாதவங்களும், எப்போவும் நேரம் பாத்துகிட்டுதான் இருப்பாங்க இதுதான் அரசியலுங்கறது.

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  அடிபட்ட நாயும் அடிபட்ட பாம்பும் கடிக்கதான் செய்யும் . இதெல்லாம் பாத்தா அரசியல் பண்ண முடியுமா?

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  ஆனா ஒண்ணு மட்டும் தெளீவா தெரியுது அம்மாவுக்கு எதிரா ஏதோ சதி நடக்குது.

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  ஏன் அம்மாஜியை எதுக்க கூடாதா? ஹிட்லர் போன இடம் எங்கே? முசோலினி போன இடம் எங்கே? மாவீரன் அலெக்ஸ்சாண்டர் போன இடம் எங்கே? சதாம் ஊசேன் போன இடம் எங்கே. அப்புறம் என்ன தேவை இல்லாம ஆராய்ச்சி வேண்டி கிடக்கு

 • Tamil - Trichy,இந்தியா

  அட்ரா சக்க அம்மாவுக்கே ஆப்பு வைக்கிற அளவுக்கு இந்த சசிகலாவுக்கு தைரியமா?? மூத்த ஆம்பள அடிமைகள் வெட்கப்படுவார்கள். சீ... இந்த பொம்பளைக்கு இருக்குற தைரியம் நமக்கு இல்லியே. சேம் சேம் பப்பி சேம்.... இருந்தாலும் அம்மாவின் நடவடிக்கை சரியானதே.

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  உடுங்கப்பா யானைக்கு ஒருகாலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வராதா?

 • ramesh - chennai,இந்தியா

  இதை பார்த்த பிறகாவது அடிமையாய் இருப்பவர்களுக்கு துணிச்சல் வந்தால் சரி.இல்லையென்றால் வேஸ்ட்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  திமுக அஸ்தமிக்கத் துவங்கியுள்ளது .... அதே கதி அதிமுகவுக்கும் ஏற்பட்டுள்ளது ..... இரண்டு கழகங்களும் இத்துடன் அழிந்து விட்டால் தமிழகம் முன்னேற்றப்பாதையில் (இது வரை கழகங்களின் பெயரில்தான் முன்னேற்றம்) அடியெடுத்து வைக்கும் .....

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ஒரே ஒரு (கன்னத்தில்) அறையைத் தாங்கி மவுனம் காத்தால் ஒரு ராஜ்யசபா எம்பி செலவில்லாமல் கிடைப்பார் என்றால் திமுக அதற்கும் தயார் அது கடமை கண்ணியம்காட்டுப்பாட்டின் அறிகுறி அடிவாங்கிய கன்னம்தான் அணைக்கும் திமுக அரவணைக்கும் . எனவே மீதி உள்ள திமுக உறுப்பினர்களும் அதனை வாங்கியாவது கழகத்தை வளர்க்கலாம்

 • K.Palanivelu - Toronto,கனடா

  சசிகலா புஷ்பாவின் தனிப்பட்ட செயல்பாடுகள் எப்படியிருப்பினும் தன்னிகரில்லா தலைவி ஜெயலலிதா இத்தனை ஆண்டுகளாக கேள்விகேட்க ஆளில்லாத சர்வாதிகாரியாக இருந்து சாட்டையை சுழற்றி தனது கட்சியினரை பெட்டிப்பாம்பாக அடக்கி வைத்திருந்தார். அப்பேர்பட்டவரை இவர் பாராளுமன்றத்திலேயே குற்றம் சாட்டி பேசி அவையையே கிடுகிடுக்க வைத்து விட்டார்.இது நிச்சயம் ஜெயலலிதாவிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.இனி மேற்கொண்டு சிலரும் இதை உதாரணமாக எடுத்துக்கொண்டு அவரை எதிர்க்க துணியும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை.

 • Jawahar Manickam - Melbourne,ஆஸ்திரேலியா

  இதில் கருத்து சொல்பவர்களும் ,தி மு க வும் ஒன்றை புரிய மறுக்கின்றார்கள்,சசிகலா செய்தது முற்றிலும் தவறான செயல் ,தி மு க மூத்த எம் பி ஒருவரை 1000 பேர் முன்னிலையில் அறைவது என்பது தி மு க விற்கு சாதாரண செயலாக தெரிகிறது போலும் ,இது அவர்களின் கேவலமான அரசியலை தெளிவுபடுகிறது ,ஏன் என்றால் ஸ்டாலின் அவர்கள் பெண் சுதந்தரம் பற்றி பேசுகிறார் ,இதில் சசிகலா செய்த தவறுக்கு அதி மு க தலைமை எடுத்த முடிவு சரியானதே இதில் எங்கேயாய் பெண் சுதந்திரம் இழிவுபடுத்தப்பட்டதூ,அடி வாங்கியது தி மு க எம் பி ,தி மு க என்ன செய்தது அதை பற்றி ஒரு நியூஸும் வரவில்லை , இதில் காங்கரஸ் வேற சப்போர்ட் ,அடித்தது பெண் அடி வாங்கியது ஆண் ,இதில் பெண் சுதந்திரம் ???????????????? புல்ஷிட்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  இது பெண்களுக்கே உரிய குணம். ஆண்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஜெயலலிதாவும் இதே லிஸ்ட் தான்.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  S

 • kuppuswamykesavan - chennai,இந்தியா

  60 வயது ஒருவருக்கு நெருங்கும்போது, அவருக்கு பல உடல் உபாதைகள் வந்துவிடும். இது இயற்க்கை. அதிலும் அவர் அதிக உடல் எடையுடன் இருந்தால், உடல் உபாதைகள் இரட்டிப்பாகும். இதற்க்கு உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி, மனா அமைதி, தேவையான பச்சை மூலிகை நாட்டு வைத்தியம் சிறந்த பலன் தரும். எந்த மூலிகையும் 48 நாள் சாப்பிடணும். உப்பு சர்க்கரை கட்டுப்பாடு இருக்கணும். இது i ருந்தால் சராசாரி வாழ்க்கை வாழிய முடியும்.

 • Damu - Coimbatore

  தவரிளைத்த ஒருவருக்கு தண்டனை வழங்கப்படுகிறது தண்டனை பெற்றவர் தண்டனை வழங்கியவரை எதிர்கிறார் இங்கு ஏற்றுக்கொள்ளமுடியாத அனாகரிகமான தவரு நடந்துள்ளது நடுநிலையில் இருந்து பார்பவர்களுக்கு தண்டனை சரியானதுதான் என்பது புறியும் அந்த செயல் சரியா தவரா என்பதுதான் பார்க்கப்பட வேண்டும் தண்டிக்ப்ட்ட வரின் வீரதீரத்தை புகள்வது இதுபோன்ற கேவலமான அசிங்கமான நடவடக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தையிரியமளிப்தாகவும் அமையும் ஆதில் தண்டனை கொடுத்தவருடைய முந்தைய செயலபாடுகளையோ அல்லது அவரை சுற்றி இருப்பவர்களின் நடைமுறைகளையோ இணைத்து ஆதாயம்தேட முயற்சிப்பது நாட்டுக்கு நல்லதல்ல

 • Raj - Chennai,இந்தியா

  மீறும் தைரியம் வேஷ்டி கட்டிய பெண்கள் யாருக்கும் இல்லை என்று சொல்லுங்கள்

 • Pannadai Pandian - wuxi,சீனா

  இவளுக்கு பின்னால் தீய சக்திகள் இருக்கின்றன அரசியலிலும் தனி மனித ஒழுக்கத்திலும் முறை தவறி நடக்கும் இந்த பொம்பளைய ஆட்டி வைப்பது திமுக. கள்ள உறவு, பண வெறி கொண்டவர்களுக்கு திமுகாவில் பட்டு கம்பளம் அதிமுகவில் கழுத்தை பிடித்து வெளியே தள்ளல். இது தான் நடந்தேறுகிறது.

 • G.VIJAYABASKAR - Tiruchchirappalli,இந்தியா

  இந்த 'ஜகஜ்ஜால' எம்.பி யின் பெயரில் 'சசிகலா' என்பது இருப்பதால்... 'அம்மா'வுக்கு அதிகமாக பிடித்து விட்டது போல. ஒவ்வொரு பதவியாக கொடுத்து உயர.... உயர.... மேல ஏற்றி உச்சானிக் கொம்பில் உட்காரவைத்து அழகு பார்த்தார் இந்த அண்டங் காக்கையை ..... காக்கை இப்பொழுது உயரத்திலிருந்து ஜெயலலிதா தலையிலேயே 'எச்சம்' இடுகிறது. பாவம் ஜெயலலிதா. அந்த கட்சியில் ஆம்பிளைகள் கூட மறு பேச்சு பேசமாட்டார்கள்.... ஆனால் இந்த பெண் எம்.பி. இந்த அளவுக்கு நாடாளுமன்றத்தில் கூவி கூப்பாடு போடுகிறார் என்றால்.... இந்த அம்மணியின் 'பின்புலத்தை' ஆராய வேண்டியது அ. தி.மு.க. வின் கடமை.

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  இதில என்ன ஆச்சரியம்? எப்படி சந்திரகுமார் தலைமையில் திடீர்னு தேமுதிகவை பிளவு படுத்தினர்? யாருடைய பின்புலத்தில் தைரியமாக செய்தனர் என்பது நிரூபணம் ஆனது........அதே தான் இப்போதும் நடக்கிறது...கூடிய சீக்கிரம் அடித்தவர்/அடி வாங்கியவர் அணைப்பார்....பெரியவர் ஆசீர்வதிப்பார்...சிறியவர் அன்பு பரிசளிப்பார்.....

 • s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா

  என்னதான் ஜெயலலிதாவுக்காகத்தான் மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கிறார் என்றாலும் அதிமுகவில் ஜெயலலிதா அவர்களின் பிடி தளர்ந்து வருகிறதென்பது என்னவோ உண்மைதான்...

 • suresh - chennai,இந்தியா

  இது ஜஸ்ட் பிகினிங்தான். போக போக புதுசு எல்லாம் பழசாகி, முலாம் பூசிய பாத்திரம் பல்லிளிக்க ஆரம்பிக்கும்.

 • Rayen - Singapore,சிங்கப்பூர்

  அராஜக அகங்காரத்துக்கு முடிவு கட்ட பிறந்த ஜான்சி ராணி சசிகலா புஷ்பா.. ஜெயக்குமார் போல சபா நாயகர் பதவியில் இருந்து தூக்கி விட்டால் கடைசி நாற்காலியில் உட்கார அம்மா அடிமை கூன் பாண்டி இல்லை.. எங்க ஊர் வீர மங்கை.. அம்மாவின் காலடியில் கிடைக்க பன்னீரா என்ன..

 • Thiyagarajan Srimbhs - Coimbatore,இந்தியா

  இதுவரைஎதிர்ப்பு வந்தால் அதை கடுமையாக தணடனை கொடுப்பார்.பதவி, பரித்தல்,காலில்விழவைத்தல்,கஞ்சா கேஸ் போட்டு உள்ளேதள்ளுதல் போன்றவேலைகள் நடக்கும். தனக்கு,பிடித்தவர்களுக்கு மந்திரிபதவி கொடுத்து அழகு பார்ப்பார்.ஆனால் புஸ்பா டச் பண்ணமாட்டாா்.

 • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

  இது முழுக்க முழுக்க திமுகவின் சதிவலை என்பதை உணராதவறியது அதிமுக என்பதே உண்மை. இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருந்தே இந்த பெண்ணின் நடவடிக்கை சற்றும் பொருத்தமின்றி இருந்ததை சமாளித்து வந்தார் இந்த பெண். முழுமையாக நம்பியது தலைமை இவரை..ஆனால் தனது தன்மானம் பறிபோன நிலையில் திருச்சி சிவா அமைதி காப்பதும்..எதுக்கு எடுத்தாலும் குய்யோ முய்யோ என்று கதறும் திமுக..இந்த முறை மயான அமைதி காப்பது அரசியல் கட்சிகளிடையே ஒருவித அருவருப்பையே வரவைத்துவிட்டது. அதிமுக உடனே அவரை பதவியை ராஜினாமா செய்ய சொல்லிவிட்டது..தவறு என்று தெரிந்தும்..அடிவாங்கியது எதிர்க்கட்சி எம் பி என்றும் தெரிந்தும் கூட திமுக அதே நிலையில் இருந்திருந்தால்..பாராட்டி இருக்கும்...வாழ்த்து தெரிவித்திருக்கும்..பெண் சிங்கமே நீதான் புயல்..தன்மானம் காக்கவந்த புயல் என்று பாராட்டி வாழ்த்துமாலை பொழிந்திருக்கும்..ஆனால் அம்மா அவர்கள் உடனே நடவடிக்கையை எடுத்தார் என்றால்..அதுதான் கட்சியின் தலைமைக்கு உரிய பண்பு..அசாதாரண தலைமை..நாடே போற்றியது..ஆனால் அந்த பெண்..அடித்தவரிடமும் அவர் கட்சி தலைமையிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு ஓ என்று அலறியது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையே இந்த இந்தியாவில் என்று..பார்த்தவர்கள் இந்த பெண்ணை வசைபாடினார்கள்..பெண்களுக்கே உரிய அடக்கத்தை தொலைத்துவிட்டு..இப்படி பேசினால் எவருக்குமே கோபம் வரத்தானே செய்யும்..திமுக தலைமை திட்டமிட்டு செய்தது என்பது உலகறிந்த விஷயமாகிவிட்டது..தனது குடும்பம் பற்றிய சிந்தனையை கொண்டிருந்தால் இந்த பெண் இப்படி நடந்திருப்பாரா? குழந்தைகளின் எதிர்காலம் கருதி கணவனோடு சேர்ந்து வாழவே ஆசைப்பட்டிருப்பார் என்றால்..இந்நேரம் முன்னர் வந்த புகைப்படங்கள்..வாட்சப்பில் வந்த கிளுகிளு செய்திகள் அனைத்துமே பொய் என்று சொல்லி ராஜினாமா செய்து குடுமப கவுரவத்தை காப்பாற்ற துணிந்திருப்பார்..ஆனால் இப்போதோ..முழுக்க நனைந்தாச்ச்சு..இனி முக்காடு எதுக்கு..நமது கலாச்சாரத்துக்கு திமுக கட்சிதான் பொருத்தமானது என்று முடிவு செய்திருப்பார்..அதுதான் இந்த மாதிரியான அவரது நடவடிக்கை அமைந்துவிட்டது...அதனைப்போய் பெரிதாக பேசவேண்டியதே கிடையாது..முற்றிய கத்திரிக்காய் வீதிக்கு வந்துவிட்டது..இனி ஒவ்வோர் வியாபாரிகளிடமும் அது விலை போகும்..அவ்ளோதான் அன்றி ..பெருமை பேசிட ஏதுமில்லை..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  "சசிகலா" - பெயரில் இருக்கிறது ரகசியம்...

 • Lawrence Corera - Tuticorin,இந்தியா

  அம்மாவுக்கு இதுயெல்லாம் வெறும் சூச்சிபி

 • Vijayakumar Srinivasan - Chennai,இந்தியா

  சசிகலா புஷ்பாவும் திருச்சி சிவாவும் அடிச்ச லூட்டி youtube ல சந்தி சிரிச்சதே....அப்பவே ADMK இவங்க மேல நடவடிக்கை எடுத்துட்டாங்க...இது எல்லாம் சிவாவும் அந்தம்மாவும் சேர்ந்து செய்யற நாடகம்... அதான் கட்டுமரம் சும்மா ஒக்காந்து வேடிக்கை பாக்குது.சசிகலா புஷ்பா, சிவாவோட சேந்து தி மு க வில் ஒரு வளம் வர இது ஒரு செட் அப்.. ADMK ல இருக்கணும்ன்னா அந்தம்மா இப்படி எல்லாம் பண்ண முடியுமா?? எதிர் வீட்ல பந்தி ரெடியா இருக்கு.. இந்தம்மா அதுக்கு குளிர் காயுது...

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  அ தி மு க வில் இருக்கும் எல்லோரும் சசிகலா புஷ்பா போல் அடிமையை சங்கிலியை அறுத்து எறிந்து புரட்சி செய்யவேண்டும். அடிமையாய் இருப்பது வீரத்தமிழர்க்கு அழகல்ல. அ தி மு க வை வழிநடத்தும் அத்தனை தகுதிகளும் சசிகலா புஷ்பாக்கு இருக்கிறது. சசிகலா புஷ்பா வின் வழிநடத்துதலின் பேரில்தான் ஹிலாரி கிளிண்டன் அமெரிக்கா தேர்தலில் நிற்கிறார்.

 • Baskar - Paris,பிரான்ஸ்

  இவளை எல்லாம் பார்த்து பயப்படுபவர் ஜெயா அல்ல.எங்கு தட்டினால் எங்கு போய் விழும் என்று தெரியாதபடி இருக்கும். என்ன இவளுக்கு பின்னால் இருந்து தூண்டி விடுபவர் அந்த 1.76 ஆயிரம் கோடி கொள்ளை அடித்தாரேஅந்த கனிமொழி தான்.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  துரத்தப்படுபவர்கள் மாற்று முகாமிற்கு சென்று சவுண்டு விடுவது, பின்னர் வாய்ப்பு கிடைக்கும் போது பம்மியபடி திரும்பி வருவது (வே) வாடிக்கையாக நடப்பதுதான்.... கருப்பையாவிலிருந்து கருப்பசாமி பாண்டியன் வரை பல உதாரணங்கள் உண்டு.....

 • Karuppiah Sathiyaseelan - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  தி மு க கூட , அவர்கள் எம் பி தாக்கப்பட்டதற்கு , மாநிலங்கள் அவையில் , நீதி கேட்க வில்லை. எதற்கும் அறிக்கை விடும் , மு க , இந்த நிகழ்ச்சியைப் பற்றி ,வை முடி ,மௌனம் கார்க்கிறார்.

 • Karuppiah Sathiyaseelan - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  ஒரு எம் பி ,விமான நிலையத்தில் , 4 அறை , வாங்கிய செய்தி , நாடு முழுவதும் ,பரவியது. மாநிலங்கள் அவை தலைவர் , விமானநிலைய CCTV காட்சிகளை , வாங்கி ,நீதி வழங்க வில்லை .

 • Karuppiah Sathiyaseelan - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  புஷ்பாவிற்கு அரசியல் எதிர்காலம் இல்லை.

 • VSK - CARY,யூ.எஸ்.ஏ

  நீங்க மன்னார்குடின்னா , நாங்க திருப்பாசி :)

 • Sicario - La Jolla,யூ.எஸ்.ஏ

  வல்லவனுக்கு வல்லான் இப் பூவுலகில் உண்டு.

 • raja kannan - Newyork,யூ.எஸ்.ஏ

  எல்லாம் இது வரை இருந்த சர்வாதிகாரம் தான். பூனைக்கு மணி காட்டியுள்ளார்.

 • Mr.Zero - Tirunelveli,இந்தியா

  யானைக்கும் அடி சறுக்கும். ஆளுங்கட்சியா இருந்தும் எதிர்க்க ஒரு ஆள்

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  அம்மாவை உடல் நிலை மிகவும் பலவீனமாக உள்ளது அடிமைகள் அறிந்ததே (சிங்கப்பூர் உட்பட). அடுத்த நாடளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதனால் அடிமைகள் உஷார் ஆக தொண்டன்கி விட்டார்கள். இது தொடக்கம்தான். விரைவில் 20 எம் எல் ஏக்கள் வெளியேறும் நிலைமை உருவாக இருக்கிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement