Advertisement

விஜயை 'ஆட்டுவிக்க ஆசை' -சுண்டகஞ்சி சுஜாதா

வந்தனம்மா... வந்தனம் ... என தமிழ் ரசிகர்களை கலங்க வைத்தவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழி ஹீரோக்களையும் ஆட்டுவிப்பவர்...வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பில் வெளுத்து வாங்கும் நடன இயக்குனர் சுஜாதா பேசிய நடன நயனங்கள்...

* நடன ஆர்வம் ...
சிறு வயது முதலே நடனம் மீது அப்படி ஒரு காதல். பள்ளிகளில் எல்லா விழாக்களிலும் என் நடனம் இடம் பெற்றுவிடும். வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் பத்மினியும் - வைஜெயந்திமாலாவும் ஒன்பது நிமிடங்கள் ஆடிய 'சாதுர்யம் பேசாதடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி' என்ற பாடலுக்கு நான் ஆடிய ஆடலுக்கு, பள்ளியின் ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரும் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். அதுவே நடனத்தில் மேலும் என்னைச் சாதிக்க துாண்டியது.
* சினிமாவில் முதல் பயணம்
கமல் சார் நடனத்தை பார்த்து வளர்ந்ததால், நடனம் மூலமாக ஜெயிக்க சினிமா தான் சரியான பாதை என தோன்றியது. சென்னை வடபழனியில் இருந்ததால் சினிமா நண்பர்கள் மூலம் எளிதாக ரகுராம் மாஸ்டர் டான்ஸ் குரூப்பில் இடம் கிடைத்தது. அதன்பின் சினிமாவில் என் நடன வாழ்க்கை துவங்கியது.
* தமிழ் சினிமாவில் ஆடிய முதல் பாடல் ...
கமல் நடித்த 'சட்டம்' எனும் படத்தில் 'நான் தான் ராஜா...நீ தான் ரோஜா' என்ற சில்க் ஸ்மிதா ஆடிய பாடலில் நடனம் ஆடினேன். அதன்பின் தெலுங்கு டான்ஸ் மாஸ்டர் தாரா உடன் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தேன். சுந்தரம், ராஜூசுந்தரம், பிரபுதேவா என எல்லோரிடமும் பணியாற்றி உள்ளேன்.
* நடன இயக்குனராக அறிமுகம்
தெலுங்கில் தான் முதல் படம் பண்ணினேன். 'காதல் தேசம்' படத்தில் 'முஸ்தபா முஸ்தபா...' என்ற பாடலுக்கு தமிழில் நடனம் அமைத்தேன்.
* நடனத்தில் ஹீரோக்களில் 'பெஸ்ட்'
விஜய்தான்.எந்த மாஸ்டரோடு வேலை பார்த்தாலும் அவர்கள் நினைப்பதை விட பல மடங்கு நடனத்தில் அசத்துவார். அவரை ஆட்டுவிக்க வேண்டும் என்பது பல நாள் கனவாகவே உள்ளது. அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்.
* பிடித்த நடன இயக்குனர்
அமெரிக்கன் மைக்கேல் ஜாக்சன் தன்னை தானே ஆட செய்து உலகளவில் புகழ் அடைந்தார். அவர், 'கிங் ஆப் டான்ஸ்'. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் ஆன பிரபுதேவா,அவரும் ஆடி, எல்லாரையும் ஆட வைப்பவர். இவரது நடனத்தை விரும்பாதவர் இந்தியாவில் எவரும் இல்லை.
* நடிப்பு அனுபவம்...
20 ஆண்டுகளாக ஹீரோக்களை ஆட வைத்துக் கொண்டிருந்த என்னை, ஒரு பட விழாவில் பார்த்த இயக்குனர் தரணி, கில்லி படத்தில்' திரிஷா' அம்மாவாக நடிக்க வைத்தார். அதன்பின் ,நான் அவன் இல்லை பார்ட் 2 , திலகர், பாலாவின் 'தாரை தப்பட்டை', சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' என பரபரப்பாக நடித்து கொண்டிருக்கிறேன்.
* சினிமாவில் புகழ் தந்தது...
வந்தனம்மா...வந்தனம் பாடல் மூலம் தான் ஒரே நாள் இரவில் உலகம் முழுவதும் பிரபலமானேன்.எங்கு பார்த்தாலும் 'சுண்டக்கஞ்சி சுஜாதா அக்கா'ன்னு பாசமாக அழைக்கும் ரசிகர்கள், இந்த பாடல் மூலமே கிடைத்தார்கள். இதற்கு முன் 50 க்கு மேற்பட்ட தமிழ் படங்கள், 200 க்கு மேற்பட்ட தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்திருந்தாலும், இந்த பாடல்தான் என் வாழ்க்கையையே புரட்டி போட்டது.
* நடிக்கும் படங்கள் ...
மலையாள படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளேன்.இதுபோல் விரைவில் வெளிவரவுள்ள 'விழித்திரு' என்ற தமிழ் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளேன். இரண்டு படங்களிலும் நானே பாடலுக்கு நடனமும் அமைத்துள்ளேன். நடனத்தோடு, வித்தியாசமான கேரக்டர்களில் என் நடிப்பு பயணமும் தொடரும்...
eesansujagmail.com

Advertisement

வாசகர் கருத்து (3)

  • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

    மிக்க நன்றி தினமலர்..

  • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

    ராக்கம்மா கைய தட்டு. சூப்பர் சாங் இந்த சூப்பர் டான்சர். சுஜாதா.

  • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

    தினமலர்க்கு என் நன்றிகள் பல. என் பள்ளி பருவ நட்பு புரம் எல்கேஜி டு 5 ம் வகுப்பு.சுஜாதா. பல வருடங்கலாய் என் நட்பும் சினி டான்சரும் ஆன சுஜாதா வை சந்தித்து வாழ்த்து கூற பலமுறை முயற்சித்துப்பாலனளிக்கவில்லை. பல வருடங்கலாஜ் நட்பை தேடி கிடைக்காதே ஓவர் ஏக்கம். இன்று தினமலரில் கண்டதும் பெரும் மகிழ்ச்சிஅடைந்தேன். என் நாள் வாழ்த்துக்கள் என் நாட்டுப் சுஜாதா டான்ஸ் அவர்களுக்கு. நலமுடன் நீண்ட ஆயுளுடன் வஸ்ஜ் பல்லாண்டேக்கு. கோட் ப்ளேசஸ் ஹேர் . மீண்டு ஓவர் முறை நன்றி தினா மலர் .ஆல் தி பெஸ்ட்.சேவை . தங்க கோட்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement