Advertisement

'சுவாதி கொலையாளி நான் இல்லை!' : ஜாமின் கேட்டு ராம்குமார் மனு

சென்னை: மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, ராம்குமார், ஜாமின் கோரி, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் கூறியுள்ளதாவது: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், ஜூன், 24ல், மர்ம நபர் ஒருவன், சுவாதியை தாக்கியுள்ளான். இச் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படை யில் போலீசார், ஜூலை, 1ல் என்னை கைது செய்தனர். கைது செய்த போது, நுங்கம்பாக்கம் போலீசாருடன் வந்த சிலர், நான் தற் கொலைக்கு முயற்சித்தது போல, என்னை பிளேடால் தாக்கினர்.

நான் அப்பாவி : மாஜிஸ்திரேட், என்னை நீதிமன்ற காவலில் வைக்க, ஜூலை, 4ல் உத்தரவு பிறப்பித்தார். தற்போது, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள் ளேன். சுவாதி கொல்லப்படுவதற்கு, இரு வாரங் களுக்கு முன், ஒருவன், அவரை தாக்கியதாக, நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். உண்மை குற்றவாளியை பாதுகாக்க, அப்பாவியான
என்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். எந்த விதத்திலும் இந்த குற்றச்சம்பவத்தில் நான் சம்பந்தப்படவில்லை. எனக்கு எதிராக போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விசாரணைக்கு ஒத்துழைப்பு : நான் தப்பிச் செல்ல மாட்டேன்; சாட்சியை கலைக்க மாட்டேன். விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். இந்த
நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட தயாராக இருக்கிறேன். எனவே, எனக்கு ஜாமின் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரவில் கைது செய்தது ஏன்? :
ராம்குமார் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்த பின், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டி: முகநுாலில் பலருடன் சுவாதி தொடர்பில் இருந்துள்ளார். ராம்குமார் அப்பாவி. கைது செய்யச் சென்ற போலீசார் தான், கழுத்தை அறுக்கச் செய்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன், ரயில் நிலையத்தில் சுவாதியை ஒருவன் அடித்திருக்கிறான். அதை விசாரிக்காமல், அவசர அவசரமாக, சம்பந்தமில்லாமல், ராம்குமாரை கைது செய்து உள்ளனர். ராம்குமாரை பார்க்க வழக்கறிஞர்களுக்கு அனுமதியளிக்கவில்லை. ஆடு மேய்க்கும் போது,ராம்குமாரை கைது செய்திருக்கலாமே. இரவில் ஏன் கைது செய்ய வேண்டும். இந்த கொலையை அவன் செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

புழல் சிறையில் அடைப்பு :
மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார்,
புழல் சிறையில் அடைக்கப்பட் டான். ராம்குமாருக்கு, இரண்டு நாட்களாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்டது. அவனது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வரு வதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர். நேற்று அவனை பரிசோதித்த மருத்துவர்கள், 'எழுந்து நடக்கிறான்; அவனது உடல் நிலை இயல்பு நிலைக்கு திருப்பி விட்டது. கழுத்து தோல் பகுதியில் மட்டுமே லேசான காயம் உள்ளது. வேறு ஏதும் உபாதைகள் இல்லை' என, போலீசாரிடம் சான்று அளித்தனர்.

இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மாலை, 5:15 மணிக்கு, புழல் சிறைக்கு கொண்டு செல் லப்பட்ட அவனை, சிறை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பின், சிறையில் உள்ள வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளான்; போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராம்குமாரின் கழுத்தில் போடப்பட்டுள்ள, 18 தையல்கள் பிரிக்கப்பட்டதும், அவனை, காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (208)

 • Venkata Ramanan - Chennai,இந்தியா

  போலிஸ் ராம்குமாரை பிடிக்கச்சென்றபோது ஏன் காமெராவை உபயோகித்து இருக்கக்கூடாது? இப்போதெல்லாம் பேனாவில் கூட காமெராவை வைக்கும்போது சாட்சிக்கு விடீயோ காமெராவை போலீஸ் உபயோகிக்க வேண்டும்.

 • S.S .Krishnan - chennai,இந்தியா

  பணம் கிடைக்கிறது என்று எப்படி வேண்டுமானாலும் நடக்க கூடாது. இவருக்கு குடும்பம் இல்லையா? அவங்களுக்கு இப்படி நடந்தால் இவர் வாதாடுவாரா?

 • madayan - Anaheim,யூ.எஸ்.ஏ

  இந்த பையன் பலி கடா வாக இருக்கலாம். இந்த கருத்தையும் சேர்த்து வந்துள்ள கருத்துக்கள் எல்லாவற்றையும் சேர்த்தால் ஒரு பெரிய கதையே எழுதலாம். இதற்கு அனாவசிய விளம்பரம் மிகவும் அதிகமாக உள்ளது

 • Arulmanian - Chennai,இந்தியா

  கொலை குற்றம்சாட்டப்பட்டவர்:: சொன்னா நம்புங்கா நான் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் கிடையாது. கோரஸ்:: இல்லை, இவனை கல்லெறிந்து கொன்றே ஆகவேண்டும்.

 • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

  ஒரு பெரிய பங்களா முன் 50 ,60 அடியாட்கள் நின்று கொண்டிருந்தனர். அந்த பிரமுகர் ஹம்மர் காரில் வந்தார். 'தலைவா இன்னிக்கு மட்டும் சென்னையில் ஆறு கொலைகள் , ஏழு தங்க சங்கிலி பறிப்புகள், எட்டு கற்பழிப்புகள், 9 இடங்களில் கொள்ளைகள் என்று நம்ம ஆளுங்க அமர்க்களப்படுத்திட்டாங்க தலைவா " நாளை நம்ம ஊடகங்கள், நாளிதழ்கள், எல்லாம் ஆளும்கட்சியை செமையா தாக்கி எழுதவும் ஏற்பாடு செஞ்சாச்சு ' இந்த ஆட்சியில சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று 'சமூக ஆர்வலர்களையும் பேச ஏற்பாடு செஞ்சுட்டேங்க என்றான் ஒருவன். அப்போது 4 லாரிகளில் நடுத்தர வயதுடைய ஆண்கள் ,பெண்கள் ,சில கிழவிகள், என்று வந்து சேர்ந்தனர். .தலைவா இவங்கெல்லாம் சம்பவம் நடந்த இடங்களுக்கு பக்கத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி போராட ஏற்பாடு பண்ணியிருக்கோம். .இந்த டாஸ்மாக் கடையிலதான் கொலைகாரன் கொலை செய்யும் முன்னால் குடிச்சுட்டு அப்புறமா கொலையா செஞ்சான் , அதேமாதிரி தங்க சங்கிலிய பறிக்கறதுக்கு முன்னால் இந்த டாஸ்மாக் கடையில்தான் திருடன் சரக்கு அடிச்சான் ன்னும் சொல்லி இவுங்க அந்த கடையெல்லாம் மூடணும்னு போராடுவாங்க. .பாருங்க இன்னும் ரெண்டு மாசத்துல சென்னையை கலக்கிப்பிடுவோம் ' என்றான் . இந்த செய்தி நம்ம தினப்புளுகன் நிருபர் தான் உயிரை பணயம் வைத்து சேகரித்தது.

 • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

  ஏதோ கொலை கொள்ளை கற்பழிப்பு நேற்றோ இன்றோ மட்டும் நடப்பது போல் தமிழகம் கொதிக்கிறது. குறிப்பாக திருநெல்வேலியில் பூசை யை ராமன் வெட்டினால் பூசை மகன் ராமனை வெட்டுவான் .ராமன் மகன் பூசை மகனை வெட்டுவான். எட்டுக்கொலை செய்தாலும் கவலையில்லை வக்கீல் வெங்கட்ராமன் பார்த்துக்கொள்வார் என்று சொல்வார்கள். இருபது வருட நாளிதழ்கள் ,பத்திரிகைகள் படித்து பார்த்தால் எத்தனை கொலைகள், கொள்ளைகள் , கள்ளக்காதல் ,அடிதடி , செய்திகள் இருக்கும் .அப்போதைய திரைப்படங்கள் தற்போதைய படங்கள் போலன்றி நல்ல கதையம்சத்துடன் ,இனிய பாடல்கள் சமூக உணர்வுடன் எடுக்கப்பட்டன. ஆனால் இந்தளவு அப்போது ஊடகங்கள் கிடையாது. டி.வி. கைப்பேசி, கம்ப்யூட்டர் , இணையதம் ,முகநூல், எதுவும் இல்லாத காலத்திலும் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இன்று சிறிய சம்பவங்கள் கூட இணையதளம் , ஊடகங்கள், வாட்ஸாப்ப் ,மூலம் உலகமெங்கும் பரவுகிறது .முன்பிருந்த திமுக ஆட்சியில் அவர் குடும்ப ஊடகங்கள் தவிர வேறு எந்த ஊடகங்களும் இந்த அளவு வளரவிடவில்லை..ஆட்சியாளர்களே மக்களை துன்புறுத்தியும் அது இந்த அளவில் மக்களை சென்றடையவில்லை..இன்று ,தனிப்பட்ட மனிதர்களின் விரோதம் காரணமாக நடக்கும் கொலைகள் கூட அரசையும், காவல்துறையும் பாதிக்கும் அளவிற்கு ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன. இந்த வழக்கிலும் தேவையின்றி சென்னை உயர்நீதிமன்றம் செயல்பட்டது. இந்த நீதிமன்றங்கள் காவல்துறை தான் இன்னுயிரையும் பணயம் வைத்து பிடிக்கும்,குற்றவாளிகளுக்கு சுலபமாக ஜாமின் வழங்கி அவர்களை சமுதாயத்தில் உலவ விட்டு மேலும் குற்றம் செய்ய உதவுகிறது. கடுமையான குற்றம் செய்த அட்டாக் பாண்டி வழக்கு (பொட்டு சுரேசை கொன்றது ) இன்னும் இழுத்துக்கொண்டுதான் போய் கொண்டிருக்கிறது. க்ரானைடு கொள்ளை செய்தவர்கள் மீது சகாயம் மீண்டும் அறிக்கை கொடுத்தபின்னும் வழக்கு நொண்டி அடித்துக்கொண்டுதான் செல்கிறது. இப்படி நீதிமன்றங்கள் குற்றவாளிகளை தண்டிப்பதில் காலம் கடத்தும் போது உண்மையான காவல்துறை மனமொடிந்து நமக்கெதுக்கு வம்பு என்று தான் கடமையில் வழுவி குற்றங்கள் பெருகுகின்றன .

 • DAYA - Tiruttani,இந்தியா

  இவன் பிறவி கிரிமினல்..உண்மையாகவே காதலிக்க நினைத்திருந்தால் தன் முகத்தை முதலில் கண்ணாடியில் பார்த்திருப்பான்.தன் தகுதி என்னவென்று தெரிந்திருக்கும். உடனே தன் ஊரில் உள்ள உமா ,தேவி, மீனா ,ராணி இவர்களில் ஒருவரைத்தான் தேர்ந்தெடுத்து இருப்பான். ஸ்வாதியை அல்ல. அப்போதும் உட்கார்ந்து யோசித்திருப்பான். தான் இன்னும் அரியர் முடிக்காததும் ,வேலையின்றி வருமானமின்றி இருக்கிறோம் என்ற உண்மை உரைத்திருக்கும். உடனே அதை தேடிப் போயிருப்பான். காதலை அல்ல. ஆனால் இவன் காமப்பசியில் அலைந்திருக்கிறான். அதுவும் தகுதிக்கு சற்றும் பொருந்தாத ஸ்வாதியோடு. உண்மை காதல் என்றால் முதல்முறை நட்புமுறையில்தான் பழகினேன் என்று காதலை ஸ்வாதி மறுத்தபோதே ஊர்போய் சேர்ந்திருப்பான். ஆனால் இவன் காமவெறியில் வெள்ளைத்தோல் மீதல்லவா ஆசை வைத்து திரிந்திருக்கிறான். இதற்காக மறுபடி மறுபடி போய் காதல் வசனம் பேசியிருக்கிறான். ஸ்வாதி திட்டிய உடன் வெறிகொண்டு கொடுரமாக வெட்டி சாய்த்துவிட்டான்.. எந்த உண்மை காதலும் துரத்தி துரத்தி போவதால் வருவதில்லை.. இயல்பான சந்திப்புகள் மூலம் தானே வருவதுதான் காதல். இவன் பயங்கர கொடூர மிருகம் .இத்தனை வருடம் தன் மனதில் இருந்த வெறியெல்லாம் அப்பாவி ஸ்வாதி மேல் காட்டிவிட்டான். எல்லாவற்றுக்கும் காரணம் யதார்த்தம் புரியாமல் இவன்கள் கற்பனை உலகில் கட்டும் மனக்கோட்டைகள்தான். ஸ்வாதி ,வினோதினி போன்ற ஏராளமான பெண்களின் மரணத்திற்கும் இதுவேதான் காரணம். இம்மாதிரி கற்பனை உலகில் எந்த நேரமும் சஞ்சரிப்பவர்கள் மிக ஆபத்தானவர்கள். குற்றங்கள் செய்து கொண்டே இருப்பார்கள்..இவர்களை கடுமையாக தண்டித்தே ஆகவேண்டும். அது மற்றவர்களுக்கு பாடமாக இருக்கவேண்டும் . அடே அரக்கனே ,எக்கச்சக்கமான மனிதாபிமானிகளின் தூக்கத்தையும் ,நிம்மதியையும் கெடுத்திருக்கிறாய். உன்னை நாங்கள் தண்டிக்காமல் விடமாட்டோம். குழந்தை மாதிரி சிரிக்கும் அப்பாவி பெண் ஸ்வாதி இப்போது சொர்க்கத்தில் இருக்கிறார். காலமெல்லாம் இருப்பார். ஆனால் உன் இறப்பிற்கு பின் உன் ஆவி காரிருள் சூழ்ந்த கொடிய நரகத்தில் காலமெல்லாம் உழன்று கொண்டிருக்கும். இனி நீ இந்த உலகில் இருக்கும் வரையிலும் நரகம்தான், இறந்தபின்னும் உனக்கு நரகம்தான். எதிர்க்க திராணியற்ற அப்பாவி பெண்ணிடமாடா உன் வீரத்தை காட்டுவாய்........

 • subhashini - chennai,இந்தியா

  வக்கீல் கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தில் தாய் மனைவி /சகோதரிகள் / மகள் என்று எந்த உறவிலும் பெண்களே இல்லையா? இப்படி கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் கொலையாளி என்று அப்பட்டமாக தெரிந்தபின்னும் அவனுக்கு வாதாட வருகிறார் என்றால் ஒன்று ஜாதிக்காக இருக்கவேண்டும் /அல்லது பணத்துக்காக /விளம்பரம் மற்றும் புகழுக்காக இருக்க வேண்டும் என்று இது பற்றி பலர் வெளியில் பேசுகின்றனர் .... ராம்குமாரை பற்றியும்அந்த வக்கீலை பற்றியும் பேசுவது கூட மகா பாவம் என்று எதிர்காலத்தில் பலர் நினைக்க கூடும் ....ஒரு மனிதனுக்கு இறந்த பின்னும் நிலைத்து நிற்பது அவர் பெரும் நற்பெயர் தான் ..இந்த மாதிரி அவ பெயர் வக்கீலான அவருக்கு உண்மையிலேயே தேவை தானா? என்று வக்கீல் கிருஷ்ணமூர்த்தி சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் ..அல்லது அவர் மதிக்கும் நபர்கள்/ குடும்பத்து பெரியவர்கள்/ சக வக்கீல்கள் எடுத்து சொல்ல வேண்டும்

 • Nallan - Chennai,இந்தியா

  ஓர் எழுத்தாளர் ஓர் ஊடகத்தின் விவாதத்தின்போது " காதல் செய்யுங்கள் .... காதல் செய்யுங்கள்.. " என்று கொந்தளித்தவாறாக முழக்கமிட்டார். ஆனால், அவர் காதலிப்பவர் மறுத்தொதுக்கும்போதும், கைக்கிளை" போன்ற நிலையில் ஒருவர் எங்கனம் கையாளுவது என்று எந்த காலா கட்டத்திலும் அவர் வழி காட்டும் போதனைகளை அவர் எங்கும் எதிலும் கூறவும் இல்லை, எழுதியிருக்கவும் இல்லை. இவர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கின்றது. அறமும் இல்லை தரமும் இல்லை.அவர் தி மு க வில் இணைந்துவிட்டு நிறைய நாட்களாகின்றனன்

 • Balu - Ernakulam,இந்தியா

  அடிமை கட்சிகள் கூவல் இல்லாது இருக்கு...

 • Balu - Ernakulam,இந்தியா

  தலித் என்பதால் வழக்கு விசாரணை இல சலுகை கேளுங்க..

 • Balu - Ernakulam,இந்தியா

  இவர் மதம் மாறியவர் என்பதை யாரும் இங்கே சொல்லவில்லை...

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  இது போன்ற கொடூரமான வழக்கில் எந்த வக்கீலும் தாங்கள் ஆஜராக விரும்பவில்லை என்கிற நிலையை சட்டத்தில் ஏற்படுத்த வேண்டும்.....அது கூட வழக்கு விரைவாக முடிய வழி வகுக்கும்....

 • கைப்புள்ள - nj,இந்தியா

  மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க புகை படத்தை மாற்றிய தினமலருக்கு நன்றி.

 • Vamanan Nair - சான் ஹோஸே , கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  அப்போ யாருதான் கொன்னது ? CCTV பொய் சொன்னதை இப்போதான் கேட்டு (இல்லை பார்த்து) இருக்கிறேன். அதெப்படி எல்லா CCTV யும் சேர்ந்து பொய் சொல்லி இருக்கு ?.

 • DAYA - Tiruttani,இந்தியா

  நம் சமூகத்தில் ஒருவரது அந்தஸ்து என்பது அவரது தோற்றம், படிப்பு, வேலை, பொருளாதாரம், குடும்பப் பின்னணி இவை சார்ந்து அமைகிறது. ஸ்வாதி உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு ஏற்றபடி வரன் பார்த்துதான் திருமணம் செய்திருப்பார்கள். ஆண்மகன் என்ற ஒரே காரணத்திற்காக பிச்சைக்காரனுக்கும், பிளாட்பாரத்தில் வசிப்பவனுக்கும், வேலைவெட்டி இல்லாதவனுக்குமா பெண் கொடுப்பார்கள். அவர்களுக்கென்று வேறு பெண்கள் இருக்கின்றார்கள். இந்த கழிசடை அவர்களை தேடிப்போய் காதல் செய்ய வேண்டியதுதானே. இது சினிமா பார்த்து கெட்டுப் போயிருக்கிறது. செய்வதை செய்துவிட்டு இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இவன் நடிப்பைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒருவன் தன் நிலை அறியவேண்டும். யதார்த்தம் புரியவேண்டும். தன் நிலை மறந்தவன் மனிதனே அல்ல .இவன் பிறவி கிரிமினல். கல்லூரியில் படிக்கும்போதே இவன் க்ரைம் செய்திருக்க வேண்டியது. இப்போது செய்திருக்கிறான். அவ்வளவுதான் வித்தியாசம். இதற்கு காலம் காலமாய் பெண்களை போகப் பொருளாகவே காட்டிக் கொண்டிருக்கும் சினிமாவும் ஒரு காரணம்....

 • Babu - Chennai

  ராம்குமாருக்காக ஆஜர் ஆக... எந்த வக்கீலும் முன் வந்திருக்க கூடாது...

 • g.s,rajan - chennai ,இந்தியா

  அப்போ காவல்துறை இவ்வளோ பாடு பட்டது ???.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  பொதுவாக நம் நாடு மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒரு நாடு மிக மிகக் கொடிய மிருகங்கள் மட்டுமே வாழ முடியும் ,இந்த நாட்டில் இருப்பது நல்லதா ???இந்த நாட்டை விட்டு வெளியேறுவது நல்லதா ???இந்திய நாட்டைச் சுடுகாடு ஆக்காமல் ஓயமாட்டார்கள் பல கயவர்கள்,எனதருமை இந்தியா இனி முன்னேற வாய்ப்பு இருப்பது போல் தெரியவில்லை,இன்னும் பல ஆண்டுகள் பின்னே செல்ல வாய்ப்பு மிக மிகப் பிரகாசமாக உள்ளது.வந்தே மாதரம்,வந்து ஏமாத்தறம் ஏமாத்துங்க .

 • Balaji - Khaithan,குவைத்

  வழக்கை திசை திருப்பும் பணிகளை ஆரம்பித்து விட்டார்கள் வழக்கறிஞர்கள்.. இன்னும் அடுத்து ஜாதிச்சாயமும் பூசுவார்கள்.....அடுத்து அந்த பெண்மணியை கொச்சைப்படுத்தும் பணிகளையும் செய்வார்கள் இவர்கள்....இவர்களின் வீட்டு பெண்களுக்கா நடந்தது என்ற எண்ணம்.... இங்கு நமது சட்டம் அப்படி இருக்கிறது..... என்ன செய்வது??? இவ்வளவு ஏன் வழக்கை விசாரிக்கும் நீதிபதி கண் முன் சம்பவம் நடந்தாலும், சாட்சிகள் சரியாக இல்லையென்றால் அந்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவரை நிரபராதி என்றுதான் கூறவேண்டும் என்று சட்டம்.... இதில் எப்படி நிலத்தை எதிர்பார்ப்பது...... அநேகமாக இந்த வழக்கு எப்படி முடியும் என்று தெளிவாக தெரிய ஆரம்பித்து விட்டது.......

 • g.s,rajan - chennai ,இந்தியா

  இனிமே நம்ம இந்தியாவுல சட்டம் கொலை செய்யப்பட்டு உயிரை இழந்த நபரோட ஸ்வாதியின் ஆவிதான் சாட்சி சொல்ல வேண்டும் என்று எதிராளியின் வக்கீல் கூறுவது கூட நடக்கும்.கொலையை நேரில் பார்த்தாலும் அதை சாட்சியாகக் கூற எத்தனை பேருக்கு "தில் "இருக்கு?? .

 • g.s,rajan - chennai ,இந்தியா

  "நான் அவன் இல்லை".

 • shanal - tirupur,இந்தியா

  உண்மை என்னனு தெரியாம யாரையும் குற்றவாளின்னு சொல்ல கூடாது. இருந்தாலும் அவன், தான் செய்த குற்றத்தை ஒத்து கொண்ட பிறகு தான் அவனை சென்னை கொண்டு வந்ததா சொன்னாங்க. ஆன இப்போ இப்படி பல்டி அடிக்க காரணம் அவனோட பெற்றோரும் தானே. அவங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்குதுனு மறந்துட்டாங்க போல

 • A. Sivakumar. - Chennai,இந்தியா

  கோவை குழந்தைகளைக் கடத்திக் கொலை செய்தவனை நல்லா கவனிச்ச மாதிரி, பிடிச்சமா, மேல் விசாரணைக்காக மேலே அனுப்பினோமா என்றில்லாமல், படுக்க வச்சு இட்லி ஊட்டி விட்டால், இது மாதிரி கதைகள் ஆயிரம் கேட்க வேண்டியிருக்கும். சைலேந்திர பாபு ஐயாவே சரணம்.

 • Arulmanian - Chennai,இந்தியா

  தற்கொலைக்கு முயன்று கழுத்து அறுத்துகொண்டது போலவா இருக்கிறது. நல்ல "பா" வடிவில் கீழ்த்தாடையை மேலாக கீறியுள்ளனர். ஒருவர் இக்கட்டான சூழ்நிலையில் அவ்வாறு தன்னை தானே அறுத்துக்கொள்ள முடியாது. போதாக்குறைக்கு ஆரம்பத்தில் வெளியிட்ட நடந்து செல்லும் காட்சியில் நல்லா நீட்டா உள்ளார். அவ்வளவு பெரிய அருவா கொண்டு அத்துணை வெட்டு வெட்டி ஒரு சில ரத்தம் துளிகள் கூட மேலே தெறிக்காமல் இருக்கும். உடை மாற்றி இருந்ததால் கூட தெரிந்து விடுமே.

 • Arulmanian - Chennai,இந்தியா

  கொலையானவர், குற்றம் சாட்டப்பட்டவர், இருவரும் மிகவும் தன்மையானவர்கள் (said by parents, police and media) , முகநூலில் குற்றம் சாட்டப்பட்டவர் அக்கௌண்டில் வெறும் சம்பிரதாய போஸ்டுகலே உள்ளது. பல ஊடகங்கள் இதனை வெளியிட்டு உள்ளது. ஆனால் ஆரம்பத்தில் இருந்து விசாரணை காவல்துறையினர் இவர்களது காதல் முகநூலில் தான் ஆரம்பித்தது என்கிறார்கள். கொலையானவர், பிப்ரவரி மாதம் "எதிரிகள் அதிகம் ஆகிவிட்டார்கள். மறுஜென்மத்தில் பழிவாங்குவேன்" என்று தெளிவான போஸ்ட் போட்டு உள்ளார். காவல்துறை விசாரணை சொல்வது இருவருக்கும் 3 மாதங்கள் அறிமுகம் என்று. வருட கணக்கிற்கான முகநூல் தொடர்பிற்கான ஆதாரம் எங்கும் வெளியிடப்படவில்லை, கூறப்படவும் இல்லை. கொலையாளி யாரோ. நிரபராதி விடுபட்டு மறுவாழ்வு Rehab அளிக்கப்படவேண்டும்.

 • A. Sivakumar. - Chennai,இந்தியா

  வழக்கறிஞர் தொழிலை விட்டுட்டு, சினிமாவுக்குக் கதை எழுதலாம். இவர் வீட்டுப் பெண்கள் எப்படி இவரை வீட்டுக்குள் அனுமதிக்கிறார்கள்?

 • Visu Iyer - chennai,இந்தியா

  ஆளை கொல்ல அரிவாள் வேண்டும் என்று தெரிந்தவருக்கு, தன்னை கொல்ல பிளேடு போதும் என்று தோன்றியதில் இருந்தே தெரியவில்லையா குற்றவாளி யார் என்று...

 • Paranthaman - kadappa,இந்தியா

  கொலைகாரனும் கொள்ளை அடிப்பவனும் சாட்சிகளை வைத்தா செய்கிறார்கள். சாட்சிகளின் அடிப்படையில் தீர்ப்பு எழுதப்படுகிறது என்று நீதிபதி சொல்லலாம். ஒன்றுக்கொன்று முரண்பாடாக இல்லையா. கொலை என்பது சாதாரண விஷயமல்ல. கொலைகாரன் வலிய வந்து நான் தான் கொலை செய்தேன் என்று காவல் துறையிடம் கூறிய பிறகு அவன் கோர்ட் பெட்டி மேல் ஏறி நின்று சொல்லவேண்டிய வாக்குமூலத்தை கொலையே செய்யவில்லை என்று கூற இந்த கிருஷ்ணமூர்த்திக்கு எப்படி தைரியம் வந்த்து. இதை எப்படி நீதி மன்றம் அனுமதிக்கிறது. குற்றவாளிகளை தப்பிக்க உதவும் சட்டப் படிப்பையா அந்த வக்கீல் படித்துள்ளார். நீதிபதிக்கும் காவல்துறைக்கும் இடையே உள்ள வக்கீல் என்ற தரகர் வேலைக்கான சட்டப்படிப்பை முதலில் தடை செய்ய வேண்டும். ஒருவனை குற்றவாளி என்று கண்டறிந்த பின் தான் காவல் துறையினர் அவனை அரஸ்ட் செய்கிறார்கள். அதை உடனிருந்து கவனிக்கும் பத்திரிகை ஊடகங்களும் போட்டோக்களையும் செய்திகளையும் வெளியிடுவது இந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள பத்திரிகை சுதந்திரம். அதில் தலையிட்டு விமர்சிக்க எந்த கோர்டுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. தமிழக அரசின் தலை சிறந்த காவல் துறையை பாராட்ட மனமில்லாத சென்னை உயர்நீதி மன்றத்தினர் குற்றவாளியை நீதி மன்றம் கொண்டு வருமுன் குற்றவாளி தொடர்பான செய்திகளையும் போட்டோக்களையும் எப்படி வெளியிடலாம் என்று கண்டிக்கிறார்கள். நீதி மன்றம் சமைக்கும் இடம். குறிப்பிட்ட எல்லைக்குள் இயங்க வேண்டியவை. சமையலுக்கு வேண்டிய தரமான பொருட்களை சேகரித்து கொண்டு வந்து கொடுப்பது காவல் துறை என்ற உரிமையாளர் வேலை. நீதி மன்றம் அதன் எல்லைக்கு வெளியே சென்று குற்றவாளிகளை பிடிக்க முடியாது. குற்றவாளிகளை இரவு பகல் ஓய்வின்றி சுற்றி அலைந்து தேடி சரியாக கண்டறிந்து பிடித்து கோர்ட்டு முன் கொண்டு சென்று நிறுத்தும் காவல் துறையின் அரிய பணியை தரம் தாழ்த்துவது கூடாது..காவல் துறை குற்றவாளியை விரைவாக பிடிக்கவில்லை என்றால் அதில் எப்படி நீதி மன்றம் நேரில் தலையிட்டு குற்றவாளியை பிடிக்க முடியும் . ஒருவேளை காவல் துறையை நம்பாத நீதி மன்றம் தனியாரின் ரகசிய புலனாய்வு அமைப்பிடம் வழக்கை ஒப்படைத்து குற்றவாளியை பிடிக்க முடியுமா. அதற்கு சட்டம் இடம் தந்துள்ளதா. தாமும் பொதுப்பணியில் இருந்து கொண்டே இன்னொரு பொதுப்பணியினரை பயமுறுத்துவதற்கு அதிகாரம் உள்ளதா. காவல்துறையினர் மக்கள் சமுதாயத்தை சட்டத்திற்குள் நிறுத்தி ஒழுங்படுத்தும் மிகவும் கடினமான பணியை செய்பவர்கள். காவல் துறை இயங்கினால் நீதி துறை இயங்கும். இல்லையெனில் நீதி மன்றம் முடங்கிவிடும்.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  வாசகர்களின் கருத்துக்கு ஏற்ப, இருவரின் படத்தையும் அருகருகில் இருந்ததை மாற்றி குற்றவாளியின் படத்தை மட்டும் போட்டதற்கு தினமலருக்கு நன்றி..

 • Snake Babu - Salem,இந்தியா

  // கிருஷ்ணமூர்த்தி போன்ற வக்கீல்கள் நாட்டில் இருக்கும்போது நாட்டில் அநீதி மட்டுமே வெல்லும்// பொய் பேசினால் தான் வக்கீல் என்ற நிலைக்கு வந்த விட்டோம். விட்டுட்டோம்.கொஞ்ச காலம் முன்னாடி வடநாட்டில் ஒரு சாமியார் ஒரு சின்ன பொண்ணை கற்பழித்து கொன்றான்.அதுக்கு வாதாடினா நம்ம ராம் ஜெட்மலானி அந்த பெண்ணுக்கு ஆண்களை மடக்கி போடும் வியாதி இருக்கிறது என்று வாதிட்டார்.அந்த வழக்கில் ஜாமீனும் பெற்றார். இப்போது இருக்கும் கொந்தளிப்பு அப்போது இல்லை.ஏன் என்று நான் கூற தேவை இல்லை. வாய்தா வாய்தா என்று இழுக்கடித்தது 18 வருஷம். அதுக்கும் நமக்கு எந்த கொந்தளிப்பும் வரவில்லை.தெய்வம் நின்று கொல்லும் என்ற வார்த்தையும் வரவில்லை.அய்யா நான் கூற விரும்புவது. தவறு எம்போது தவறு என்று உரக்க கூறுங்கள் ஜாதி மாதம் இனம் என பிரிந்து நீதியை தனதாக்கிக்கொண்டு அதாவது தவறுகளை சரி என எண்ணத்தை மேலோங்க செய்து நீதி நியாயம் என்பதையே நீர்க்க செய்ததால் வந்த வினை. இனியும் இது போல ஆகாமல் தவறு என்பது தவறு என்று ஆணித்தரமாக கூற வேண்டும் எந்த சார்பு நிலை எடுக்காமல். அப்போது நண்பர்கள் கூறுகின்ற அநீதி என்கிற ஒன்று அழிந்து நீதி என்பது எழுச்சி பெரும். நன்றி வாழ்க வளமுடன்

 • vseenivasagaperumal - mumbai,இந்தியா

  இந்த சோக நிலைக்கு எது காரணம், மோகம். அரசு அடிப்படை பிரச்சனையை சீர் செய்யவேண்டும். மாணவர்களுக்கு செம்மையான கல்வியை தரவேண்டும். காதலுக்கும் மோகத்துக்குமுள்ள வேறுபாடுகளை கற்றுத்தர வேண்டும். உண்மையான அன்பின் நிலை எதுவென்று புரியவைக்க வேண்டும். ஒரு பொருள் தனக்கு சொந்தமானதல்ல என்றால் அதன் மீது உரிமை கொண்டாடும் மனோ பாவம் தவறு என்பதை தெளிவுபட மக்களுக்கு உணர்த்த வேண்டும். மற்றவர்களின் உடமை மீது ஆசைகொள்ளாத மன நிலையை மாணவ பருவத்திலேயே வளர்க்க வேண்டும். நல்லெண்ணங்களை தீய எண்ணங்களையும் வேறுபடுத்தி சரி எது தவறு எது என்ற தெளிவை மாணவர்களுக்கு இளமைப்பருவத்திலேயே மனதில் ஆழமாக ஊன்றி விடவேண்டும். நாம் கண்ணில் காண்பதனைத்தும் மாயை என்ற உண்மையை அவர்கள் உணரும்படி செய்யவேண்டும். இதை செய்ய யோக்கியர்கள் வேண்டுமே. தேர்தலிலே தில்லுமுல்லு, ஊழல் லஞ்சம் லாவண்யம் போன்ற தலைவர்களை அல்லவா நாம் மாலையாக சூடிக்கொண்டிருக்கிறோம். பிறகு நம் தலையில் இடி விழாமல் என்ன செய்யும். இந்த இளம் தளிரை இழந்து தமிழகம் வாடுகிறது. இறைவா அனைவருக்கும் நல்லருள் புரிவாயாக.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  நம்ம சட்டத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கிறது. அதையெல்லாம் விரைவில் அடைக்க வேண்டும். இல்லை என்றால் மக்கள் புரட்சி வரும். நாளுக்கு நாள் கொலை கொள்ளை அதிகரித்து வருகிறது .

 • mani - Kochi,இந்தியா

  அவனே ஒத்துக்கிட்டாலும் இந்த வக்கீல் பயலுக ஒதுக்க மாட்டாங்க போலிருக்கு

 • sachin - madurai,இந்தியா

  தமிழக சட்ட ஒழுங்கு பத்தி பேசுங்க முதல்வரே...நேத்து சென்னை ல மட்டும் 20 லட்சம் கொள்ளை....40 பவுன் நகை கொள்ளை....ஆசிரியை சம்பள பணம் வழிப்பறி இதுல அவங்க மரணம்...கொலை...கொள்ளை...வழிப்பறி இது பற்றி நீங்கள் டிவில தோன்றி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு சொல்லுங்க முதல்வரே...அதை விட்டு விட்டு உங்கள் கட்சி மாவட்ட தலைவர்கள் பற்றி எங்களுக்கு என்ன கவலை நீங்க மாத்துனா என்ன மாத்தாவிட்டால் போனால் என்ன....கவலை எல்லாம் தமிழகம் நாசமா போய்ட்டு ...

 • Raja Shanmugam - coimbatore,இந்தியா

  ஸ்வாதி அவர்களின் படத்தை போடுவது நிறுத்தப்பட வேண்டும். ஜெயா மீடியா தவிர அனைத்து மீடியாகளும் இப்படி தான் பணத்திற்காக செய்கிறார்கள்.

 • subhashini - chennai,இந்தியா

  நீதி துறையின் மேல் இன்றும் நிறைய மக்கள் அபார நம்பிக்கை வைத்துள்ளனர்.. அந்த நம்பிக்கை பொய்த்து விட கூடாது. எனவே ராம்குமாருக்கு உச்சபட்ச தண்டனை நிச்சயம் கிடைக்க வேண்டும்.. இரண்டு பேரின் படத்தையும் தயவு செய்து அடுத்து அடுத்து உள்ளது போல் போட வேண்டாம். இவ்வளவு நடந்த பின்னும் இப்படி போடுவது கொஞ்சமும் தர்மம் அல்ல .

 • g.s,rajan - chennai ,இந்தியா

  "இதுதாண்டா இந்தியா", இந்தியா வளரும் நாடு ....இந்தியா வளரும் நாடு ...இந்தியா வளரும் நாடு .....இந்தியா வளரும் நாடு 2 .

 • muthu Rajendran - chennai,இந்தியா

  இழந்தது ஒரு சாதுவான படித்த பெண்ணின் உயிர். அதுவும் பட்டப்பகலில் ஒரு அநியாயக்காரனால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு மனிதனின் மனதையும் பாதிக்கவைத்த நிகழ்வு. இதில் கருத்து தெரிவிப்பதில் அரசியல் , சாதி , போன்ற உள்நோக்கத்துடன் தங்கள் வசதிக்கேற்ப சொல்வது நரித்தனம் . காவல்துறை தனது கடமையை நேர்மையாக செய்யும் . இதில் சாட்சியம் சொல்பவர்கள் சத்தியமாக சொன்னார்கள் என்றாலே போதும். வாய்மை வெல்லும். இளம் பெண் மரணம் இதுவே கடைசியாக இருக்கட்டும் . அப்படி அமைய சரியான தண்டனை விரைவில் கிடைக்கட்டும்

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  ''தீர்ப்பளிக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை'' _லியோ டால்ஸ்டாய். தீர்ப்பு ஆதாரத்தை கொண்டு வாதத்தின் அடிப்படியில் தான் இருக்கும் 'தவறு செய்தது தெரிந்தும் இங்கு விசாரிக்க படவேண்டுமென்பது சட்ட நீதி' _ இது இந்த காலத்துக்கு பொருந்தாது இங்கு அறிவியலில் எவ்வளவு உயரத்தில் இருக்கின்றோம் நாம் இன்னும் பழைய ..... குற்றவாளி என்று ஒரு சில ஆதாரமே போதும் . இப்போது முடிவு செய்து விடலாம். ''பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே''-நன்னூல் _இது மொழிக்கு மட்டுமில்லை என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும் அதற்கான மாற்றத்திற்கு முன் வரவேண்டும் நாம். அப்போதுதான் இங்கு கருத்திடுபவர்களின் கருத்து உண்மையாகும் என்பது என் கருத்து.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  இந்தத் தறுதலை முகத்தையும், தங்க விக்கிரகமாக இருந்த ஸ்வாதி முகத்தையும் ஒண்ணா போட்டீங்க அப்படின்னா வாசகர்களான எங்களுக்கு ரத்தமே கொதிக்குது .

 • g.s,rajan - chennai ,இந்தியா

  இது இந்தியா, இதே அரபு நாடுகளாக இருந்தால் கொலையாளியை கல்லால் அடித்தே உடனே கொன்று இருப்பார்கள். அது போல இந்தியாவில் நடக்க இன்னும் எத்தனை ஸ்வாதிகள் கொலை செய்யப்பட உள்ளார்களோ தெரியவில்லை.

 • A shanmugam - VELLORE,இந்தியா

  ஒரு பொய்க்கு ஒன்பது போய் சொல்லி வெளியே ஜாமீனில் வந்துவிடலாம் என்னும் ராம்குமார் கொலையாளி இப்போ நான் கொலைசெய்யவில்லை என்று பல்டி அடிப்பது போலீஸ் காதில் "பூ" சுத்துகிரகனா அல்லது நெத்தியில் ஆணி அடித்து செண்டு பூ சுத்துகிரகனா என்பது மக்கள் அறியவேண்டும். இவனே ஆரம்பத்தில் நான்தான் கொலைசெய்தேன் என்று ஒப்புக்கொன்று இப்போ ஜாமீனில் வெளிவர நோக்கத்தில் சட்டத்தில் உள்ள "ஓட்டை" மற்றவர்மூலம் தெரிந்துகொண்டு பொய் பித்தலாட்டம் பேசும் இவனை தூக்கில் தொங்கவிடவேண்டும். கொலை செய்யவில்லை என்றால் கத்தி தோய்ந்த ஆடையை ஏன் பெட்டியில் மறைத்து வைக்க வேண்டும். கொலை செய்யவில்லையென்றால் ஏன் ஊரை விட்டு இரவோடு இரவாக ஓடவேண்டும். இவன் சுவாதியை 'கத்தியில்' வெட்டாமல் இவன் உடலில் "ரத்தக்கறை படியும்மா"? கொலைசெய்யப்பட்டநாளில் இவன் அணிந்திருந்த சட்டை,பாண்டும், ஊடகங்களில்,போலீஸ் பொது மக்களுக்கு வெளியிட்ட போட்டோவும் எப்படி ஒருமிதமாக ஒத்துப்போகும்? எனவே, போலீஸ் காதில் பூ சுற்றி, லவ்யேர் காதில் சங்கு ஊதி,வெளியே ஒன்றுமே செய்யாத "நிரபராதி" போல் வந்துவிடலாம் என்ற தப்பு கணக்கை நேர்மைக்கும்,நீதிக்கும் நெறிதவறாத உயர் நீதி மன்றம் "தான் மகளுக்கு இந்த கதி நெறிந்தால் என்ன தண்டனை வழங்குவீர்களோ அதே தண்டனையை, ஜாதி, மதம், இனம், மொழி என்று பாரபட்சம் இல்லாமல் "நீதியை" தமிழ் நாட்டில் நிலைநாட்டவேண்டும். அப்போதுதான் தமிழக மக்களுக்கு நீதித்துறையின் மீது ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படும்.

 • mosa kutty - cuddalore,இந்தியா

  நாட்டை ஒழுக்கமுள்ளவன் ஆள வேண்டும் ....அப்ப தான் மக்களும் ஒழுக்கமா இருப்பாங்க .......

 • kmish - trichy,இந்தியா

  தினமலர் ரெண்டு பேரும் சேர்ந்து இருக்குற மாதிரி போட்டோ போடாதீங்க , கொலை காரனை தனியாக போடவும்,

 • kumar - chennai,இந்தியா

  இந்த மாதிரி தெரிந்த குற்றவாளிக்கு வாதாடும் வக்கீல்களை எப்படி அணுக வேண்டும் என்று ஒரு தமிழ் படம் வந்துள்ளது. சினிமா நல்லதும் சொல்லும்

 • Mani Kandan - tanjore,இந்தியா

  வக்கீல் சார், எங்க அந்த நல்ல பையன், படித்த மேதாவி , அழகான பையன் மேல அநியாயமா பலி சுமத்தி தூக்குல போட்டுடுவாங்களோ என்று கவலையோடு இருந்த உலகத்தில் உள்ள அத்தனை தமிழர்கள் வயிற்றிலும் பால் வார்த்தீர்கள். அவருக்கு எப்படியாவது ஜாமீன் வாங்கி கொடுத்து உங்க மருமகனா ஆக்கி கொள்ளுங்கள்.

 • kumar - chennai,இந்தியா

  இருவரின் படத்தையும் அருகருகில் ஓட்டுவதை வன்மையாக கண்டிக்கிறோம் இது பத்திரிக்கை தர்மம் அல்ல. ஸ்வாதியின் ஆத்மா சாந்தி அடைய நாம் எல்லோரும் இன்று முதல் அவனை தேவாங்கு என்று அழைப்பதே சரி

 • jay - toronto,கனடா

  இனி ஜாதி என்ற பெயரும் அடிபடும் ,,,

 • govin - TRICHY,இந்தியா

  ஸ்வாதியின் போட்டோ படம் வெளியிட வேண்டாமே? தயவு செய்து எடுத்து விடுங்கள்.

 • Vinu Prathap - Chennai,இந்தியா

  இப்பொழுது புரிந்து இருக்கும் உண்மையிலேயே வக்கீல்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்று. அந்த கேவலமான தொழில் செய்வதற்கு இவர்களுக்கு வெட்கமே இல்லையா?

 • g.s,rajan - chennai ,இந்தியா

  இதே மாதிரி இன்னும் பல ஸ்வாதிக்களின் கொலை சர்வசாதாரணமாக நடக்கும் ,ஆனால் இனி மக்கள் சட்டத்தை தான் கையில் எடுத்துக் கொண்டு தாங்களே அந்தக் குற்றவாளியைக் கையும் களவுமாய் பிடித்துக் கொன்றுவிடும் வாய்ப்பு அதிகம் உண்டாகும்.

 • Mike Tyson - Chennai,இந்தியா

  போலீஸ் ஒரு தடயம், சாட்சி கூட விடாத எடுத்து அவனை தூக்குல தொங்க விடணும் .. இல்லேன்னா எவனுக்கும் பயம் இருக்காது.. இதில் நீதி துறையின் பங்கு மிக முக்கியம் .. நிரபராதி பாதிக்க கூடாது என்பது சரி.. ஆனால் கொடூரமான குற்றவாளி நிச்சயம் தப்பிக்க கூடாது .. அதற்கு கோர்ட் காரணமாகி விடக்கூடாது...

 • Mike Tyson - Chennai,இந்தியா

  Increase in crimes are because of these type of Advocates , slow judicial tem and not so severe punishments. I plead to all the print medias not to put the girl"s picture anymore. You are again and again damaging her which is not good at all.

 • Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா

  சல்மான்கானை விடுதலையே பண்ணிட்டாங்க, இத்தனைக்கும் எல்லா சாட்சிகளும் இருந்தும். அதை பார்க்கும்பொழுது இது சாதாரண விஷயம்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஹலோ தினமலர், மற்றவர்கள் சொன்னது போல, இது என்னையா இது இவங்க ரெண்டு பேர் போட்டோவையும் பிரேம் போட்டு மாட்டினா மாறி ஒண்ணா சேர்ந்து போடுறீங்க. இப்படி பண்ணுறீங்களே உங்களுக்கே இது நியாயமா இருக்கா? இதை அந்த பொண்ணோட ஆன்மா கூட மன்னிக்காது.

 • சத்தியநாராயணன் (சத்தி) - Bangalore,இந்தியா

  நுங்கம் பாக்கத்தில் ஸ்வாதியை வெட்டும் போது எத்தனை பெண்கள் அதை பார்த்திருக்க கூடும், ஒருவர் கூடவா வந்து சாட்சியம் அளிக்க இயலாமல் போனது, ஆண்களை மட்டுமே திட்டும் மக்கள், சாட்சி சொல்ல வராத பெண்களை ஒன்றும் கூறுவதில்லையே ஏன்? பெண்ணுக்கு மட்டும்தான் மான ஈனம் உண்டா ? ஏன் ஆண்களுக்கு இல்லையா ? இல்லை ஆண்கள் மட்டுமே எல்லா குற்றத்திருக்கும் பொறுப்பா ?

 • rajesh - coimbatore,இந்தியா

  இவன் தவறு செய்து தப்பித்தால் அதற்கு முழு காரணமும் இந்த ஊடகங்கள் தான் . அவர்கள் தான் தப்பிக்க வேண்டிய அனைத்து வழிகளையும் கண்டுபிடித்து கொடுத்துள்ளார்கள் .அவன் பிடிபட்ட அன்றே நீதிமன்றம் சென்று இருந்தால் அவனுக்கு இப்படி பேச தோன்றி இருக்காது .இந்த இடைப்பட்ட நேரத்தில் அவனுக்கு சாதகமான விஷயங்களை ஊடங்கங்கள் வெளிச்சம் போட்டு கூறியதால் இனிமேல் அவன் ஒப்புக்கொள்ளவே மாட்டான்.

 • moorth6 - singapore

  All media should stop this kind of nonsense way of displaying a killed girl photo for every hour, did the media person do this same kind of advertisement if the effected girl is from their own family... There is no difference between the brutual killer and the advocate supporting him and the media displaying the girl photo.

 • தமிழ் கண்ணு - Nellai,இந்தியா

  தினமலருக்கு ஒரு வேண்டுகோள், இனியும் இந்த இரண்டு பேரையும் ஒன்னா படம் போட வேண்டாம், பெற்றவர்கள் மட்டுமல்ல எங்களுக்கும் மனசு கஷ்டமாக இருக்கு. பொறுக்கி போட்டோ, தெய்வத்தின் பக்கத்தில் வேண்டாம்

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  ஸ்வாதியை கொலை செஞ்சது இவன் இல்ல.. இவன் பேசுறது தமிழ் இல்ல.. இவ்வளவு ஏன் இவன் ராம் குமாரே இல்ல.. போதுமா .. போங்கடா நீங்களும் உங்க சட்டமும்

 • Raj - Chicago,யூ.எஸ்.ஏ

  As said by others, please do not publish the innocent girl's picture anymore...... he has already accepted the crime and he is a criminal. To uphold the respect of the entire women community, he has to be punished life long in jail with rigorous work each day. each moment he should repent and realise how he pained that little girl and spoled her family's peace. Why not the Women's forum is not doing anything here. They should go meet the Governor and seek his intervention. The case should be heard very expeditiously, preferably a Lady Judge.

 • T.V. Natarajan - Seattle,யூ.எஸ்.ஏ

  இந்த வக்கீல் என்ன வேணும்னாலும் சொல்லலாம். Police இவன் முன்னாடி கொடுத்த வாக்குமூலங்களையெல்லாம் விடீயோ டேப்பில் பதிவு செய்து வெச்ருப்பாங்கே. இவன் எப்புடி பல்டி அடிக்கறாங்கிறது ரொம்ப easiya ப்ரூவ் பண்ணிருவாங்க. இந்த public prosecutor இவனுக்கு தண்டனையை குறைத்து வாங்கிகொடுப்பதற்கே இந்த buildup. இது ஒண்ணும் செல்லாது.

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  இவனுக லூசா இல்ல நம்பள லூசாக்குறானுகளா .. ஒண்ணுமே புரியல

 • shiu - covai,இந்தியா

  நம் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் வழியாக இவனும் வெளிவரலாம்.... வாழ்க ஜனநாயகம்....

 • Arivazhagan Nambi - Doha,கத்தார்

  ஊடகத்திற்கு ஒரு கேள்வி: ஆடி காரை போதையில் ஓட்டிவந்து ஒருவரது இறப்புக்குக் காரணமான பெண் யார்? தொழிலதிபர் எனப்படும் அவரது தந்தை யார்? ராம்குமார் பெயர், குடும்ப வரலாறை வெளியிடும் ஊடகங்கள் இவற்றை மட்டும் ஏன் வெளியிடவில்லை?

 • Krismoo - Vellore,இந்தியா

  நீ தான் கொலை செய்யலியே ,அப்புறம் நீ ஏன்டா சாட்சியை கலைக்க மாட்டேன்னு சொல்றே. ஏதோ வக்கீலுக்கு படிச்ச மாதிரி பக்கம் பக்கமா எல்லோரும் இந்த கொலைகார ........ ஆதரவாக கருத்து ஏழுத வந்துட்டானுங்க. நீங்கள் எல்லோரும் கொலை செய்யப்பட்ட குடும்பத்தில் ஒருவராக இருந்திருந்தால் இதே மாதிரி கருத்து ஏழுத வந்திருப்பீங்களா?

 • Shah Jahan - Colombo,இலங்கை

  சுவாதி கொலையில் சம்மந்தம் இல்லை: நான் ஒரு அப்பாவி: ஜாமின் கேட்டு ராம்குமார் சார்பில் மனுத்தாக்கல் இந்த செய்தியைப் படித்தவுடன் எனக்கொரு கதை நினைவிற்கு வந்தது. அமெரிக்காவில் ஒரு காதல் ஜோடி இருந்தார்களாம். அவர்கள் மிகவும் ஆச்சாரமானவர்கள். திருமணம் செய்யும் முன்பு ஒருவர் கையை ஒருவர் தொடுவது கூட பாவம் என்று நினைப்பவர்கள். (அமெரிக்காவிலும் இப்படி ஒரு ஜோடியா என்று கேட்காதீர்). இவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆயிற்று. இருவரும் ஒன்றாக ஒரு நாள் காரில் பயணம் செய்யும்போது கார் விபத்துக்குள்ளாகி அந்த இடத்திலேயே இருவரும் இறந்து விட்டார்கள். தூய்மையான இந்த ஜோடி நேரே ஒன்றாகவே சொர்க்கம் போய் விட்டார்கள். பூலோகத்தில் நாம் திருமணம் செய்ய முடியாது போயிற்று. இங்கு சொர்க்கத்தில் நாம் அதைச் செய்தால் என சிந்தித்து, சொர்க்கத்தின் பாது காவலாரான St.Peter இடம் அதனைச் சொன்னார்கள். அவர் சற்று யோசித்து 5 வருடம் பொறுக்க முடியுமா எனக் கேட்டார். இவர்கள் ஓகே சொன்னார்கள். 5 வருடம் முடிந்ததும் மீண்டும் St.Peter இடம் போனார்கள். அவரோ இன்னொரு 5 வருடம் பொறுக்கமுடியுமா என்றார். இவர்கள் சம்மத்தித்தனர். அந்த 5 வருடம் முடிந்ததும் மறுபடியும் அவரிடம் போனார்கள். இப்போது அவர் சொன்னார் "குழந்தைகளே உங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய ( to register )இங்கு எந்த வழக்கறிஞரும் இல்லை. யாராவது வருகிறார்களா என 10 வருடம் பொறுத்துப்பார்த்தோம். ஒருவரும் வரவில்லை. என்ன செய்வது?" என்றாராம். இக்கதையின் நீதி வழக்கறிஞர்கள் சொர்க்கம் போகமாட்டார்கள். வழக்கறிஞர்கள் தானே நீதிபதி ஆகிறார்கள். சமீப காலத்தில் அவர்கள் தந்த தீர்ப்புகள் அவர்களையும் சொர்க்கம் பக்கம் போக விடாது.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  நீதியின் இன்னொரு கொடூர முகம் இந்த கிருஷ்ணமூர்த்தி என்று பெயர் வைத்துள்ள வக்கீல்...

 • சத்தியநாராயணன் (சத்தி) - Bangalore,இந்தியா

  ஜெயலலிதா சசிகலா அடிக்காத பல்டியா ? அவர்கள் வாங்காத வாய்தாவா ? வீல்சேரில் வந்து நடக்காத நாடகமா ? கேஸை பல யுகம் வரை இழுத்து அடிக்காத இத்தடிப்பா ? குமாரசாமியின் கணக்கு நாமெல்லாம் எண்ணிப்பார்க்கவேய இயலாத கணக்காய் போனதே.... ஜெயா சசிக்கும் , செல்வன் ராம் குமாருக்கு மட்டும் வேறு வேறு சட்டமா , இருவருக்கும் ஒன்றுதான் . நடக்கட்டும் நாடகங்கள்

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  அது சரி அந்த பொண்ணு படத்த போட்டு ஏய்யா அந்த குடும்பத்த மேலும் மேலும் அவமான படுத்திரீங்க. இது மாதிரி ஒரு நிகழ்ச்சி ஒங்க குடும்பத்துல நடந்தா இந்த மாதிரியா செய்வீங்க மனசாட்சி இல்லாத மட ஜென்மங்கள்.

 • Balamurali - Salem,இந்தியா

  தம்பி ராம்குமார் நீ சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடலாம் ஆனால் தர்மத்தில் பிடியில் இருந்து எப்போதும் தப்ப முடியாது.

 • MAN-ROOP - TTI,இந்தியா

  கிருஷ்ணமூர்த்தி போன்ற வக்கீல்கள்நாட்டில் இருக்கும்போது நாட்டில் அநீதி மட்டுமே வெல்லும் என்னும் நிலை இருக்கும் போது நீதிமன்றகள், நீதிபதிகள், அவசியம் தேவையா? மக்கள் வரிப்பணம் வீணாக்க செலவு செய்யப்படுகிறது. கிருஷ்ணமூர்த்தி போன்ற வக்கீல்கள்நாட்டில் இருக்கும்போது ஏன் கோர்ட்களில் கோடிக்கணக்குகளில் வழக்கு தேக்கம் ஆகாது?இவரை போன்ற வக்கீல்கள் இருக்கும் வரை இது போன்ற குற்றங்கள் நடக்க தான் செய்யும். இப்படி பகிங்கரமா அப்பட்டமா பொய் சொல்லும் வக்கில்லை குற்றவாளியாக கருதி தூக்கில் போடவேண்டும்.அபபோதுதான் குற்றங்கள் குறையவளிபெறகும்

 • S.S .Krishnan - chennai,இந்தியா

  நீங்க நல்லவங்களா இல்ல கெட்டவங்களா? ஒன்னும் புரியல்ல.சென்னை மக்களை பைத்தியக்காரங்களாக ஆக்குகிறார்கள்.

 • sham - riyadh,சவுதி அரேபியா

  இதெல்லாம் நம்ம நாட்டில் சாதாரணம் .. இந்த மாதிரி வக்கீல் பொழப்புக்கு பதில் வேற கேவலமான தொழில் செய்யலாம் .. தூ தூ

 • ravi - chennai,இந்தியா

  அவன் ஏற்கனவே செத்துவிட்டான் - ஒரு சொறி நாய்கூட அவனை மதிக்காது

 • ravi - chennai,இந்தியா

  மனிதநேயம் இங்கு சமூகமுமில்லை சுமூகமுமில்லை எல்லாமே பொறுக்கி ரௌடிகளின் ஆட்டமாகத்தான் ஆகிவிட்டது - காவல் துறை இனி எதையும் விரைவாக நேர்மையாக ரகசியமாக முடியுங்கள் - ராம்குமார் மட்டும் ஜாமினில் வந்தால் - கொலைகாரர்கள் அதிகமாவார்கள் - சிறைச்சாலை பத்தாது - முதல்வர் கமிஷனரை மாற்றவேண்டும் - சில சமயங்களில் எனகொண்டேர் தான் சரியான தீர்ப்பு - தலித் என்றால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று சொல்லிக்கொண்டு ஒரு கும்பல் திரிகிறது - அவர்கள் வீட்டில் பெண்கள் இல்லையா - இருந்தால் அவர்களுக்கு காதலிக்க அனுமதியுங்கள் - என்னவேண்டுமானாலும் செய்யுங்கள் - மற்றவர்களை விட்டுவிடுங்கள் - அந்த பெண் செஞ்ச பாவம் என்ன - உருப்படுவீங்களா - ஜெய் ஹிந்த்

 • ravi - chennai,இந்தியா

  அந்த வக்கீலுக்கு தெரியுமா அவர் அப்பா தான் அவர் அப்பா என்பதற்கு எங்கு சாட்சி இருக்கு - ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் - ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது - இந்த வழக்கில் ராம்குமார் தான் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவனை பொய் சொல்ல சொல்லி வழக்கை திசை திரும்பியதால் அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் - அப்பொழுது தான் கொலைக்காரர்களுக்கு வக்கீல் வக்காலத்து வாங்கமாட்டார்கள் - நிரபராதி எதற்கு மேன்ஷன் இல் இருந்து ஓடினான் - ஜூன் 7 ஆம் தேதி என் அடித்தான் - எதற்கு காவல் துறையை பார்த்து ஓடவேண்டும் - நிற்கவேண்டியது தானே - அவனுக்கு தெரியும் துப்பறிவு நாய் வந்து அவனை அடையாளம் காண்பித்துவிடும் என்ற பயம் - அந்த நாயை கொண்டு வாருங்கள் - மருத்துவத்தில் ஆயிரம் வழிகள் இருக்கின்றன - உண்மையை கொண்டு வர - நம் நாடு வினோதமானது - அயல்நாடுகளில் குற்றவாளிகளுக்கு யாரும் துணை போகமாட்டார்கள் - நம் நாடு முழுவதுமே குற்றவாளிகளுக்கு துணை போவோர் தான் அதிகம் - அது நம் துரதிர்ஷ்டம் - இனி எல்லோருக்கும் வீட்டுக்கு ஒரு நாய் போல் வீட்டுக்கு ஒரு அடியாலும் ஒரு வக்கீலும் வைத்துக்கொள்ளவேண்டும் - ஜனநாயகம் என்ற பெயரில் முள்ளமாரி முடிச்சவிக்கிகள் அரசியல்வாதிகளாகவும் திரைத்துறை இயக்குநர்களாகவும் இருப்பதால் சமூகம் இனி சீர்கெட்டுதான் போகும் - மேலும் ஜாதி மதம் என்றவற்றை வேண்டியபோது பயன்படுத்தும் சொறி அரசியல்வாதிகள் இருக்கும்வரை இந்த மாதிரி தில்லுமுல்லு இருக்கத்தான் செய்யும் - ஜெய் ஹிந்த்

 • Ram - ottawa,கனடா

  தினமலருக்கு ஒரு வேண்டுகோள், அந்த தேவாங்கு படத்தை சுவாதி படத்துக்கு பக்கத்தில் போடவேண்டாம்,

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  இதுக்கு தான் அப்பவே அவனை போட்டு தள்ளி இருந்தா இப்படி ஒரு டுபாக்கூர் வக்கீல் வண்டு முருகன் வந்து நிப்பானா? ராம்குமார் கொலை செய்ததா வாக்குமூலம் கொடுத்ததா செய்தி வந்ததே? அதுவும் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் வாங்கியதாக செய்தி வந்ததே? அப்புறம் எப்படி இந்த டுபாக்கூர் வக்கீல் அவன் கொலை செய்யவே இல்லை என்று வாதாட முடியும்? அப்படின்னா போலீஸ் மீடியாக்கள் எல்லாம் பொய் சொல்கிறதா? அவனுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை, 7 அதிகாரிகள் தலைமையில பாதுகாப்பு, ஆம்புலன்ஸிலேயே பயணம், மல்லிகைப்பூ இட்லி , மணக்கும் சாம்பார், ஆம்பூர் பிரியாணி, எவ்வளவு செலவு? இனிமேலும் ஜாமீன் கேட்பான்...பெயில் கிடைக்கும்.....தெருவில் போகும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அவநம்பிக்கையும் அரசு, கோர்ட் மீது நம்பிக்கையற்ற நிலை உருவாகி, மக்களே சட்டத்தை கையில் எடுக்கும் நிலை உருவாகி விடும்...இதனால் தான் வட மாநிலங்களில் கோர்ட்டின் மீது நம்பிக்கை இல்லாமல் போது மக்களே திருடர்களை, கற்பழிப்பவர்களையும் தெருவிலேயே அடித்து கொன்று விடுகின்றனர்..

 • abu lukmaan - trichy,இந்தியா

  இந்த கேஸ் இல் ஜாதியையும் ,மதத்தையும் ,அரசியலையும் நுழைத்த போதே ஒன்றும் இல்லாமல் போக போகிறது . அரசு அன்று கொல்லா விட்டாலும் இறைவன் நின்று கொல்வான் .///// குரான் 16:61. மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் எந்த ப டைப்பையும் விட்டு வைக்க மாட்டான் ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  தலைவர் இந்த கேசில் இறங்கி விட்டார் ... சடகோபன் ஸ்வாதியை தன் மகள் இல்லை என்று எழுதி கொடுப்பார் பாருங்கோ .... தலைவரே உடாதீங்கோ ... சித்து வேலையை தொடருங்கோ ...

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  கிருஷ்ணமூர்த்தி மிகவும் திறமையான வக்கீல் என்று பேரெடுத்தவர் .... ஒருமுறை ராம்ஜேத்மலானியை தோக்க அடித்து வடநாடு துரதியவர் என்று தலைவரால் புகழப்பட்டவர் .... 2 G ராணியின் கேசில் வாதாடி வெற்றி பெற்றவர் ...... உலக அளவில் புகழ் பெற்றவர் .... ஐநா சபையில் பாகிஸ்தானுக்காக வாதாடி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் ... நமது அப்பாவி நண்பர் ராம்குமார் ஜாமினில் வெளியே வந்தது அவர் வாயில் கடப்பாரையை விட்டு ஆட்டுவார் ... அதில் அவர் சிறந்தவர் ... நல்ல போட்டிதான் போங்கோ ....

 • jagan - Chennai,இந்தியா

  என்னிக்கு இவன பொது செல்லுக்கு மாத்துறாங்களோ அன்னிக்கே இவன் காலி...மற்ற கைதிகள் தாக்கியதால் என்று செய்தி வரும்....போலீசுக்கு தெரியும் எவ்ளோ ப்ரஷருக்கு நடுவில் கடுமையா வேலை செய்து சரியான ஆளை பிடித்திருக்கிறார்கள், இந்த தேங்காமூடி க்ரிஷ்ணமுர்த்தி வருவாராம், பொய் சொல்லி வெளியே எடுப்பாராம், போலீஸ் வாயில் கட்டைவிரலை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பார்களாம்....இவன் உள்ள இருந்தாலும் காலி , வெளியே வந்தால் என்கவுண்டர் தான்....இனிமேலாவது ரௌடி ஹீரோ சினிமா வந்தால் பார்ப்பதை தவிருங்கள், பண நஷ்டத்தை தவிர வேற எந்த பாடமும் அந்த சினிமா எடுக்கும் உதவாக்கரைகளுக்கு புரியாது....

 • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

  இது எதிர்பார்த்த ஒன்றுதான். எந்த வக்கீலும் இவனுக்கு ஆஜர் ஆகிட கூடாது என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த திமுக ஆதரவு வழக்கறிஞரின் செயல் கீழ்தரமானது. சிந்தித்திருக்கவேண்டும்...இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆஜர் ஆனால் இதுபோன்றே தனது மகளுக்கும் கூட இவன் போன்ற குற்றவாளிகளால் பங்கம் வரலாம் என்று சமூக அக்கறையோடு சிந்தித்திருக்க வேண்டும். இவனுக்கு இந்த துணிச்சல் வந்தது இந்த தேங்கா மூடி வழக்கறிஞர் போன்றோரால்தான். சொல்லப்போனால் திமுக மூத்த எம் பி தா கிருஷ்ணனின் கொலை வழக்கு போன்றேதான் பயணிக்கின்றது இந்த வழக்கும்..என்ன அந்த தா கி வழக்கில் அரசியல் செல்வாக்கும்..அப்பாவின் அரசியல் அனுபவமும்தான் சீக்கிரமாக வெளியே வந்ததுமட்டுமில்லாமல்..வழக்கே நீர்த்தும் போயிற்று..அதே பாணி..அதே கட்சி வழக்கறிஞர்..ஒருவேளை மேலிட உத்தரவோ..ஏன் என்றால் இந்த குற்றவாளியின் வீட்டு சுவற்றில் திமுக ஆதரவு விளம்பரம் காணப்பட்டதாலும், மேலும் தாழ்த்தப்பட்ட குடும்பம் என்பதாலும் கூட இந்த வழக்கறிஞரை ஆஜராக சொல்லி...தா கி வழக்கை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு வாதாட வேண்டும் என்று உத்தரவு வந்துவிட்டதோ? வழக்காடு மன்றத்தில் தப்பித்தாலும் கூட மக்களின் கோபத்திற்கு ஆளாவதை எந்த சக்தியாலும் இவனை காப்பாற்றிடவே முடியாது..இதோடு முடியாது..இதோ ஒன்றிரண்டு அரசியல் சாதி கட்சிகளின் தலையீடும் இனி தொடர்ந்து வரும் பாருங்களேன்..திருமா அல்லது கிருஷ்ணசாமி போன்றோர் காத்திருக்கின்றார்கள்..சமயம் பார்த்து இவன்தான் செய்தான் என்று உறுதியாக சொல்ல முடியாத பட்சத்தில் ஓர் அப்பாவி தண்டிக்கப்பட கூடாது என்று அறிக்கைகள் மெல்ல மெல்ல பூனைக்குட்டி போன்று வெளியே வரத்தான் போகிறது..ஒரு குற்றத்தை நீதிமன்றம் தண்டிக்காமல் விடப்போக..அதே தாகி பாணியிலே இன்னோர் வழக்கும் முளைத்துவிட்டது..இப்போதெல்லாம் நீதியை சொல்வதை விட சில மூத்த அரசியல்தலைகளின் குரலாக ஆட்சிக்கு போலீசுக்கு அட்வைஸ் செய்வதையே நீதிபதிகள் தவறாமல் செய்கின்றார்கள்..என்ன நீதியோ..என்ன மன்றங்களோ..என்ன தீர்ப்போ..மக்களின் தீர்ப்புதான் இனி செல்லுபடியாகும்போல..

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  தினமலருக்கு ஒரு வேண்டுகோள், இனியும் இந்த இரண்டு பேரையும் ஒன்னா படம் போட வேண்டாம், பெற்றவர்கள் மட்டுமல்ல எங்களுக்கும் மனசு கஷ்டமாக இருக்கு.

 • Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்

  என்னமோ நடக்குது மர்மமா இருக்குது ,ஒண்ணுமே புரியலே உலகத்ததுலே , வக்கீல்களுக்கு காசுதான் முக்கியம் அதுக்கு கொலைகாரனை இளையவன் என்று கூறி விடுதலை செய்ய வாதாடட்டுமே , கொலையே செய்யலே நேக்கு அந்தப்பொண்ணு யாருன்னே தெரியாது என்று சொல்லவைக்கும் இவனை முதல்லே தூக்குலே போடணும்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  அப்படியா....சங்கதி.

 • Blue Print - Chennai,இந்தியா

  ஆரம்பிச்சுட்டானுங்கய்யா எங்கட இவனுங்கள காணோமேன்னு நெனச்சேன். வந்துட்டானுங்க.கிருஷ்ணமூர்த்திக்கு இப்போ ஏழரை ஆரம்பிச்சிடுச்சு.இப்படியெல்லாம் இவரு தன்னோட தொழிலுக்கு விளம்பரம் தேடறாரு போல. கேவலம்.

 • Govind - Delhi,இந்தியா

  இந்த வழக்கில் இது மாதிரியான திருப்பங்கள் வரும் என்பது எதிர்பார்த்தது தான். இனிமேல் ஜாதி சங்க தலைவர்கள் வருவார்கள். ஒவ்வொருவராக இந்த ராம்குமாரை சந்தித்துவிட்டு சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொல்வார்கள்... அவன் ஒரு தலித் அதனாலேயே அவனுக்கு இந்த அநீதி இழைக்கப்பட்டது என்று பேசுவார்கள்... இந்த வழக்கில் சொல்லப்படும் அந்த ரெண்டு வார சம்பவம் என்பது எவ்வளவுதூரம் உண்மை என்பதை எல்லோரும் ஆராயவேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடை பெற்றது என்று எந்த ஆதாரமும் இல்லை. அதை பார்த்ததாக சொல்லும் ஒருவர் அது சம்பந்தமாக எந்த ஒரு ஆதாரத்தையும் காட்டவில்லை. இது நமக்கே எற்படும் ஒரு குழப்பம் நம் உள்ளுணர்வு சொன்னதாக சிலநேரம் நாம் நினைக்கிறோம் . ஏதாவது ஒரு இடத்தை பார்த்துவிட்டு அந்த இடத்திற்கு நாம் ஏற்கனவே சென்று வந்தது போன்ற ஒரு உணர்வு.. மேலும் இந்த வழக்கை திசை திருப்ப நான் கூட ஒரு பொய் சொல்லலாம் ..அதாவது அந்த பெண்ணை சினிமா துறையை சேர்ந்த ஒரு நபர் காதலித்து வந்தார். அதை பிடிக்காத அந்த நபரின் தந்தை இதை செய்து விட்டார் ...(எப்படி ஒரு நல்ல குடும்ப பெண்ணின் பெயரை கெடுக்கலாம் என்பதற்கு இந்த மாதிரி கதை ஒரு எடுத்துக்காட்டு ).. இந்த கதையை ஏதாவதொரு சமூக தளத்தில் நாமே பரப்பிவிடலாம்.. அதிலும் இந்த செய்தியை 10 நொடிகளுக்குள் SHARE பண்ணாதவர்களுக்கு நான்கு நாட்கள் பேதி எடுப்பார்கள் என்று சொன்னாலும் துளி கூட யோசிக்காமல் அந்த புரளியை பரப்பி புளகாங்கிதம் அடைவான் நம் பகுத்தறிவு தமிழன். பிறகு எல்லோரும் ஒவொரு நடிகரின் பெயரை சொல்லி அவனா இவனா என்று நேரத்தை வீணடித்து கொண்டு இருப்பார்கள் .. இது தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  பெண்ணை பெற்றவர்கள் அனைவரும் காலாகாலத்தில் பெண்ணிற்கு திருமணம் செய்யுங்கள். திருமணம் செய்வதால் சாதிக்க முடியாது, சம்பாதிக்க முடியாது என்றெல்லாம் இல்லை. இன்னும் இன்னும் நல்ல வரன் அமையும் என்று நினைத்து காலத்தை கடத்தாதீர்கள். பெண்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்வது, இன்னும் இதைப்போன்ற அதிக பிரச்சனைகளை தான் உருவாக்கும். புரியவில்லை என்றால், பட்டு தெரிந்துகொள்வீர்கள்..

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  எதற்கெடுத்தாலும் மேல்ஜாதி ஹிந்துக்களின் அடக்குமுறை என்று கூறும் பல தாழ்த்தப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் பதில் கூறுங்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடுவதாக கூறும் யாராவது ஒருவர், தங்கள் வீட்டு கழிவுநீர் தொட்டியை தாங்களே சுத்தம் செய்கிறீர்களா ? அல்லது நீங்கள் கூறும் ஆதிக்கவர்கத்தினரை போல, ஏழை தாழ்த்தப்பட்டவர்களை வைத்து சுத்தம் செய்கிறீர்களா ? தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராடுவதா கூறும் திருமாவளவன் முதல் விடுதலை சிறுத்தைகள் கிருஷ்ணசாமி வரை, யாராவது ஒருவர் தங்கள் வீட்டு கழிவுநீர் தொட்டியை தாங்களே சுத்தம் செய்து பார்த்துள்ளீர்களா ? குறைந்தபட்சம், அவர்களுக்கு தேவையான கருவிகளை கண்டுபிடிக்க சொல்லியோ அல்லது புதிய கருவிகளை வாங்கியோ கொடுத்துள்ளார்களா ? சாக்கடையை சுத்தம் செய்யும் எந்த ஏழை தொழிலாளியின் குழந்தைகள் பட்டப்படிப்பு படிக்கிறார்கள் ? அல்லது எந்த போராளி, தன் வீட்டு குழந்தைகளுக்கு சேரியில் உள்ளவர்களுடன் சம்பந்தம் வைத்துக்கொண்டு இருக்கிறான் ? பிறர் சொன்னால் அது ஆதிக்கவர்கம், இதுவே பணக்கார தாழ்த்தப்பட்டோர் கூறினால், அது அவர்களின் விருப்பம் என்பீர்கள். ஏழை தாழ்த்தப்பட்டோர் ஏழைகளாகவே இருந்தால் தான், அதில் இருக்கும் பணக்கார வர்கம் இடவொதுக்கீடு சலுகைகள் என்றும் அனுபவிக்க முடியும். இந்த பெண்ணிற்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்கப்போவதில்லை. என்ன, குறைந்தபட்சம் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடும் பிற பெண்களுக்கு விழிப்புணர்வாவது கிடைக்கும்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஒரு ஆட்டு புழுக்கை பொறுக்குற பைய்யனுக்கு ஆதரவா வாலண்ட்டியாரா வந்து ஆஜராகிற கிருஷ்ணமூர்த்தியை கொண்டு போயி நொண்டி நொங்கெடுத்து அவரோட கிளையண்ட் பாணியிலேயே வாயிலேயே உட்டு ஆட்டுனா இதுக்கு பின்னாடி யாரு இருக்காங்கன்னு தெரிஞ்சு போய்டும். கிருஷ்ணமூர்த்திக்கு தெரியணும் வாய்க்குள்ள அருவாள உட்டு ஆட்டுனா எப்படி இருக்கும்ன்னு, வாயி கிழிஞ்சு, தாடை தொங்கி, பல்லு எல்லாம் உளுந்து, ஓஒ ஓஒ ஊ உவ ஆனர் பெ பெ சோறு திங்க முடில பேச முடிலேன்னு கதரனும். அப்போதான் கிருஷ்ணமூர்த்தி மாரியான ஆட்கள் கொஞ்சமாச்சும் பயப்படுவாங்க. குற்றவாளிகளுக்கு கொஞ்சமாச்சும் தண்டனை கிடைக்கும். . என்ன சொல்லறீங்க?

 • Baskar - Paris,பிரான்ஸ்

  ராம்குமார் பேசுவதெல்லாம் அந்த வக்கீல் சொல்லி கொடுத்து தான் பேசுகிறான்.முதலில் ஒத்து கொண்டவன் இப்போது மறுப்பதில் பின்னணி அந்த வக்கீல் கிருலண மூர்த்தி தான். விளம்பரத்திற்காக இதை அவர் செய்கிறார் என தோன்றுகிறது.இவரை போன்ற வக்கீல்கள் இருக்கும் வரை இது போன்ற குற்றங்கள் நடக்க தான் செய்யும்.

 • Ratan K - Chennai,இந்தியா

  இதைவிடக் கொடூரமாகக் கொலை செய்த ஜான் டேவிடையே மன்னித்துவிட்ட பரம்பரை நாம.. இதெல்லாம் எம்மாத்திரம்..

 • Shanu - Mumbai,இந்தியா

  ரௌடிகள் வக்கீல் ஆகி பின்னர் நீதிபதி ஆகி இருந்தா, இவன் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு வரும்,. ஸ்வாதியை யாரும் அடிக்கவில்லை. வேறு ஒரு பெண்ணை ஸ்வாதி என்று சொல்லி ஒருவர் சொல்லி விட்டார். அதை இவர்கள் பிடித்து கொண்டார்கள். போலீஸ் ஆதாரங்களை கொடுத்து , இந்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.

 • Raj - Chicago,யூ.எஸ்.ஏ

  Deepest condolences to Sister Swathi's family. If he gets bail, all laws in India should be abolished and all the courts should be dissolved. No need to have justice tem if criminals do not get justice. If he let out, anyone can imagine what all will he do. The God that Swathi believed in will come to her rescue, at least after her sad demise.

 • Rajaram Kandalu - Madurai,இந்தியா

  கேஸை ஜவ்வு மாதிரி இழுக்க ஏற்பாடுகள் ஆரம்பம் ஆகி விட்டது. இனி சட்டம் வழக்கம் போல் தான் கடமையை செய்து சுமார் 5 வருடங்கள் ஆவது கேஸை இழுத்து சந்தேகத்தின் பலனை அளித்து விடுதலை செய்யும் என்று நம்பலாம். நம்ம நாடு ரொம்ப ரொம்ப நல்ல நாடு. வேற என்னத்த சொல்ல?

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ஜாமீன் எதுக்கு ராசா.....ஒன் லிஸ்ட்டுல வேற எதுனா அப்பாவி பொண்ணுக விட்டுப்போச்சா?.....

 • Jayaraman Pichumani - Coimbatore,இந்தியா

  இப்படி மாத்தி மாத்தி பல்டி அடிக்கறதுக்கு பதில் அவனை வெளியே விட்டுவிடலாம். அநீதி இழைப்பது என்று முடிவாகிவிட்டபின் எதற்கு காலம் தாழ்த்த வேண்டும்? காமவெறியில் கொலைசெய்துவிட்டு பின் நான் அவனில்லை என்று சொல்ல வைக்கவும் நாட்டில் வக்கீல்கள் இருக்கும்போது நாட்டில் அநீதி மட்டுமே வெல்லும் என்னும் நிலை உள்ளபோது எதற்காக இன்னும் தாமதம்? அந்த "அப்பாவியை" உடனே விடுதலை பண்ணுங்க.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  சுவாதி நான் தேவாங்கு மாதிரி இருக்கேன்னு சொன்னதால வாய்யிலையே வெட்டுனதா சொன்னானே ?ம்ம் இதுக்கே வெட்றதுன்னா தீய சக்தி கட்டுமரம் மஞ்ச துண்டு முத்தமிழ் வித்தவர் இப்படி சொல்றவங்கள வெட்ட ஆரம்பிச்சா தமிழ்நாட்டுல பாதி பேருக்கு வாய் கிழிஞ்சு தொங்கீட்டு பாக்குறதுக்கே அசிங்கமா இருக்கும் வெளிமாநிலத்தவர்கள் வெளிநாட்டுக்காரங்க அருவருப்பு போட்டுட்டு தமிழ்நாட்டுக்கு யாருமே வரமாட்டாங்க

 • ayub - albeida,லிபியா

  அட ஆமாப்பா ஆமா . இவன் நிரபராதீங்கோவ். அவங்க அம்மா ஆட்டுக்கு வேப்ப இலை வெட்ட சென்னையில் நல்ல அருவாளை வாங்கச்சொல்லி இவன் வாங்கி நுங்கம்பாக்கம் வந்து இருக்காங்கோவ்.இவனை கொலை கேசில் மாட்ட வைத்து விட்டாங்கோ . என்ன நீதி , என்ன சட்டமப்பா , இந்தியாவில் , நாலு பெரு சேர்ந்து ஒரு பெண்ணை சின்ன பின்னம் படுத்திய பிறகு அந்த பெண் இவன் தான் என்று சாவதற்கு முன் சாட்சி சொல்லியே அவனை வெளியே விட்டுவிட்டார்கள் இதெல்லாம் எம்மாத்திரம் .வாழ்க ஜனநாயகம், வாழ்க இந்தியா, ஜெய் ஹிந்தி .

 • Nanda - Dallas,யூ.எஸ்.ஏ

  தயவு செய்து இரண்டு போட்டோவியும் பக்கத்துப்பக்கத்தில் பிரசுரம் செய்வதை தவிருங்கள் பாஸ் .... தாங்க முடியல ....

 • Arivukkarasu - Trichy,இந்தியா

  இனி அந்த பெண் போட்டோவை தயவு செய்து போடாதீர்கள். அதுவும் அந்த பொறுக்கி பக்கத்தில் போடவே போடாதீர்கள்

 • sundar1570 - kumbakonam,சவுதி அரேபியா

  முக நூலில் பலருடன் தொடர்பில் இருப்பது குற்றமா இல்லை இறப்பது தர்மமா (நம்மிடம்தான் கொலை என்பதே இல்லையே) முக நூலில் அனைத்து அரசியல் மற்றும் அனைவரும் உள்ளனரே பிரதமர் வரை. முக நூலின் குற்றமா?. இனி நீங்கள் அந்த இறந்த பெண்ணை அசிங்கப்படுத்துவீர்கள். உங்களுக்கு தேவை அவன் உயிரோடு வேண்டும் அவ்வளவுதானே . இனி அசிங்கப்படுவதற்கு பதில், அவனுக்கு இதில் சமபந்தம் இல்லை, அவன் சத்யவான் என்று கூறிவிடுகிறோம்.. விட்டுவிடுங்கள். அவனுக்கு பெருமையாக அரசு பதவி வழங்கி கவரவிப்போம் .

 • கைப்புள்ள - nj,இந்தியா

  கேக்க கேக்க ரத்தம் கொதிச்சாலும் நம்மனால ஒன்னும் பண்ண முடியாது. நீதிபதி முன்பே ஒரு கொலை செஞ்சாலும் அதை கூட இல்லை என்று மறுத்து வாதிட்டு வெளியில் வருமளவுக்கு நமது சட்டங்களும் சமூக அமைப்பும் இருக்கிறது. என்ன பண்ண முடியும்? இவ்வளவு தைரியமா ஒரு வக்கீலு நம்மளையெல்லாம் முட்டாள் ஆக்குறான்னா, நம்ம போலீஸோட ரெப்பியூட்டேஷன் அந்த லெவல்ல இருக்கு, அதுக்கப்புறம் நம்ம சட்ட திட்டம் அப்படி இருக்கு. இப்படி பகிங்கரமா அப்பட்டமா பொய் சொல்லும் வக்கீலுக்கு குற்றவாளியை போலவே சமமான தண்டனைன்னு ஒரு சட்டம் கொண்டு வரணும். அப்பொழுதுதான் மனசாட்சியை விற்று வாயால் வயிறு வளர்க்கும் இது போன்ற வக்கீல்களின் கூட்டம் அடங்கும்.

 • Raju - Chennai,கத்தார்

  அவனை பிடிக்கும் போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டுவிட்டு இப்போது நான் செய்யவில்லை என்றால் மீண்டும் ஒரு ஏமாற்றும் வேலை.. குற்றத்தை விரைவில் நிரூபித்து தண்டனை கொடுக்க வேண்டும்..பணத்திற்காக விலை போன வக்கீல் மிகவும் கேவலமான பிறப்பு.

 • Rajan - chennai,இந்தியா

  ஐயா அவரது வக்கீல் பெயர் வெளிடமுடியுமா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement