Advertisement

உளுந்து வயலில் கூடுதல் உரமிட்டதால்... வேளாண் அலுவலர்கள் வழிகாட்டுதல் இல்லாததால் பாதிப்பு

தேவதானப்பட்டி: வேளாண் அதிகாரிகளின் வழிகாட்டுதல் இல்லாததால் ஜெயமங்கலத்தில் உளுந்து வயலில் கூடுதல் மருந்து தெளித்ததால் செடிகள் காய்ந்து வருகின்றன.
பெரியகுளம் தாலுகாவில், வடுகபட்டி, மேல்மங்லம், ஜெயமங்கலம், குள்ளப்புரம், தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி கிராமங்களில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. கண்மாய், குளம் மற்றும் கிணறுகள் நீர் ஆதாரமாக உள்ளன.
வேளாண் அதிகாரிகள் களப்பணிக்கு நேரிடையாக வந்து பயிர்களின் நிலையினை அறிந்து பாதிப்பு இருந்தால் என்ன மாதிரியான உரம், பூச்சி மருந்து வழங்கலாம் என பரிந்துரை செய்வார்கள். இந்த நடவடிக்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு புயனுள்ளதாக இருக்கும்.
ஆனால் சமீப காலமாக தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் சிலர் களப்பணிக்கு வருவது இல்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.
பயிர்களில் நோய் தாக்கம்
இதனால் ஜெயமங்கலத்தில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் நெல்லில் கருகல், சங்கரமூர்த்திபட்டியில் மல்லிகை செடியில் வேர்ப்புழு, முருங்கையில் புழு தாக்குதல் இப்படி பல்வேறு நோய் தாக்குதல்களால் பயிர்கள் பாதித்துவருகின்றன.
நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான ஆலோசனைகள் விவசாயிகளுக்கு இல்லை. இதனால் விவசாயிகள் மருந்து கடைகளில் நோயின் தாக்குதலை கூறி மருந்து கடைக்காரர் கொடுக்கின்ற மருந்தை தெளித்து வருகின்றனர்.
அதிக உரமிட்டதால் பாதிப்பு
இதே போன்று ெஜயமங்கலத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பூ பிடித்து பிஞ்சு விடும் நிலையில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகள் அவர்களாகவே யூரியா கரைசலை தெளித்துள்ளனர்.
தேவைக்கு அதிகமாக கூடுதல் மருந்து தெளித்ததால் பலன் தரும் நிலையில் உளுந்து செடிகள் காய்ந்து வருகின்றன. விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க தேவையான ஆலோசனைகளை வழங்க வேளாண்மைத்துறை அதிகாரிகள் வயல்வெளிகளை நேரடியாக ஆய்வு செய்ய முன்வர வேண்டும் என விவசாயிகள் கோருகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

    இது ஒரு பெரிய விஷயமே இல்லை. மருந்து ஓவர் டோஸ். அதுதான் கருகி போயிடுச்சி. எந்த விவசாயியும் விவசாய ஆபீசுல போயி எதுவும் கேக்றதே இல்ல. இல்ல அவங்க வயலுக்கே வந்து சொன்னாலும் கேக்றது இல்ல. இதுதான் விவசாயிகளின் மன நிலை.ஆனா தனியார் பூச்சு மருந்து கடைகாரன் எதை சொன்னாலும் முட்டாள் தனமா அப்படியே செஞ்சா இப்பாடிதான் நடக்கும். இதுக்கு வேளாண்துறையை குத்தம் சொல்றது அறியாமை முட்டள் தனம். ஒண்ணு மட்டும் தெரிஞ்சிகுங்க வேளாண்மை துறை அளிக்கிற பரிந்துறையால மனிதர்களுக்கோ இல்ல கால்நடைகளுக்கோ. பயிகளூக்கோ எந்த விதமான பாதிப்பும் வரரத மாதிரி தான் மருந்து, மருந்தின் அளவு பரிந்துறைக்கப்டுகிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement