Advertisement

சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி ; கருணாநிதி எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்படும் என சென்னையில் நடந்த திருமண விழாவில் கருணாநிதி பேசுகையில் குறிப்பிட்டார்.

திமுக மருத்துவ அணி செயலாளர் பூங்கோதை இல்ல திருமண விழாவில் பங்கேற்று திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்தி பேசியதாவது : தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்படும்

தமிழ் சிறந்த மொழியாக இருக்கும் போது பிற மொழிகளை திணிப்போர் இருக்கத்தான் செய்கின்றனர். தமிழகத்தில் வட மொழியை திணிக்க நினைத்தால் தமிழர்கள் ஒவ்வொருவரும் சவுக்கை எடுத்து கிளர்ந்து எழ வேண்டும். கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக கிளர்ச்சி எழுந்ததோ அது போல் எழ சமஸ்கிருதம் இருந்த விட கூடாது. கிளர்ச்சி உருவாக யாரும் காரணமாக இருந்து விடக்கூடாது.

ஆளும் கட்சியின் ஆசியோடு சமஸ்கிருதம் பரப்ப முயற்சி நடக்கிறது. இழித்துரைக்கப்பட்ட இந்த மொழிக்கு தமிழகத்தில் ஆதிக்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தங்கள் மொழியை காப்பாற்ற, இந்த முயற்சியை நிறுத்த வேண்டும். வட மொழி ஆதிக்கம் இருந்தால் சவுக்கடி கொடுத்து விரட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (218)

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  காளிதாசன் போற ஒப்பற்ற கவிஞன் சமஸ்க்ரிதத்திலே அளித்த படைப்புகளையே ரசிக்கத்தெரியாத கலைஞன் எப்படி டாக்டர் கலைஞன் ஆக முடியும்?

 • Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ

  இடையனூரில் வாழும் இரக்கச் செல்வம் அவர்களின் உறவினர்கள் சிலர் பெயர்களை உங்கள் முன் வைக்கிறேன்.... , ஆறுமுக அழகம்மையார், தாமரைச்செல்வி, அறத்தாய், வள்ளல் அன்னை, எழுச்சிச்செல்வம், கலைச்செல்வம், கொற்கை, ஆதவன் ... அது வேறு யாருமில்ல சார் கோபாலபுரத்தில் வாழும் கருணாநிதி யின் உறவினர்களான ஷண்முக சுந்தராம்பாள், பத்மாவதி, தர்மாம்பாள், தயாளு, உதய நிதி, கலாநிதி, துர்கா, ஆதித்யா.. போன்ற சம்ஸ்கிருத பெயர்களின் தமிழாக்கம்... உலகிலேயே, மண் பாரத நாட்டில் மட்டுமே, இப்படி ஒரு புராதன மொழிக்கு அரசியல்(வியா)திகளின் வெறுப்பு, வெறி..

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  இங்கு பலர் எப்படி சமஸ்கிருதத்திற்கு வக்காலத்து .. வாங்குவது தமிழை இழிப்பது,குறை கூறுவது போன்றல்லவா .

 • Rathinakumar KN - Madurai,இந்தியா

  இப்படி பேசி பேசி இரண்டு தலைமுறை தமிழக மக்களின் அறிவு வளர்சிகளை அழித்தது போதாதா ? உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் முழுக்க முழுக்க தமிழ் வழியில் மட்டும் கல்வி கற்றவர்களின் பட்டியல் போட்டு கூற முடியுமா? இந்த திணிப்புக்கு உங்கள் உயிரை கூட விட அஞ்ச மாட்டிர்கள் என தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் . குறை கூறட்டும் .தமிழுக்கும் தமிழ் மண்ணிற்கும் மற்ற இந்திய மொழிகளை காட்டிலும் மற்ற மாநிலத்தவரிடம் கேட்டுபாருங்கள் தமிழின் தரத்தை இன்னும் எப்படி உங்களால் கட்டுகோப்பாக காப்பாற்ற முடிகின்றது என்று பிரமிகின்றனர் . இருந்தும் ஹிந்தி தெரியவில்லை என்ற கவலை இருக்கத்தான் செய்கின்றது அதனால் நாம் அவமானம் படுவது உண்மைதான் .இங்கு இருபவர்களிடம் ஒன்றை மட்டும் கேட்கின்றேன் .நாம் எவ்வளவு அவமானப்பட்டாலும் நம் தாய் மொழியையும் அதன்மண்ணையும் காப்பாற்றும் கடமை இருக்கிறது என்பதை ஒத்துகொள்ள வேண்டும் .வேண்டும் என்றால் அரசியல் சட்டம் இயற்றாமல் படித்து விட்டு போகட்டும் தேவை படுவோர் .திராவிட மொழிகளில் நமக்குதான் முதன்மை என்பதை அனிவரும் அறிவர் .

 • RP Iyer - Bengaluru,இந்தியா

  உங்கள் குறுகிய, சுயநல மனப்பான்மை காரணமாக எங்கள் தலைமுறை தமிழ் நாட்டைத்தவிர எங்கும் பிழைப்பு தேடமுடியதநிலை இருந்தது. இந்த தலைமுறையாவது விட்டுவிடுங்கள் ......

 • mohan - chennai,இந்தியா

  திருட்டு பயலுவ

 • Body soda - Bishan,சிங்கப்பூர்

  3 தலைமுறையாய் நம்மளை ஹிந்தி கற்க விடாமல் செய்த பாக்கியம் இந்த ஆளைசாரும், மற்ற மாநிலத்து காரன் ( ஆந்திரா, கேரளா & கர்நாடக) இவர்கள் எல்லாம் ஹிந்தி கற்று வேலை மற்றும் வர்த்தகம் வட மாநிலங்கள் இடைய செய்து வருங்கின்றனர் அவர்கள் மொழிகள் எல்லாம் மறைந்து விட்டனவா என்ன ? எனக்கு தனிப்பட்ட ஏற்பட்ட அனுபவம் இங்கே கூறுகிறேன். சீனர்கள் வேறுஒரு சீனரிடம் பேசும் போது மாண்டரின் மொழியில் பேசுகின்றனர். நான் எனது வட நாட்டு நண்பருடன் ஆங்கிலத்தில் பேசுவதை ஒரு சீன நண்பர் பார்த்திவிட்டு நீங்கள் இருவரும் ஒரே நாட்டை சேர்ந்தவர்கள் ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறிர்கள் என்று கேட்ட போது எனக்கு இந்த மஞ்ச துண்டு நமது சமுதாயத்துக்கு செய்த துரோகம் தான் நினைவில் வந்தது.

 • parthiban - coimbatore,இந்தியா

  உலகிலேய 6 செம்மொழிகளில் 2 இந்தியாவில் ( தமிழ், சமஸ்கிருதம் ) உள்ளது, மூன்றாவது மொழி ஜெர்மன் மொழி இருக்கலாம்.ஆனால் சமஸ்கிருதம் இருக்ககூடாதா ?? தமிழுடன் சமஸ்கிருதத்தையும் சேர்க்க வேண்டும் என்று கேளுங்கள் அது தவறில்லை , இந்திய மொழி சமஸ்கிருதமே வேண்டாம் என்று கூற வேண்டாம் ...

 • guruprasath - Bangalore,இந்தியா

  கல்யாணத்துக்கு போனோமா சாப்புட்டு வந்தோமா நு இல்லாம, அங்க போயி சொற்பொழிவு நடத்திருக்க .

 • subailangovan - muscat,ஓமன்

  ஒரு நாட்டில் 70 சதம் பேர் பேசும் ஒரு மொழியை கற்பதால் என்ன தவறு? ரயில்வே,மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாடு அல்லாத மாநிலங்களில் நமக்கு வேலை வாய்ப்பில்லை..காரணம் இந்தி தெரியாது..மலையாளிகளை பாருங்கள் ரயில்வேயில் அதிகம் பணியில் இருக்கின்றனர்..காரணம் இந்தி எழுத பேச தெரியும்..உலகின் எந்த மூலைக்குப்போனாலும் அந்த மொழி பேசும்போது மலையாளி உள்ளூர் காரன் ஆகிவிடுகிறான். நாமோ மொழி அறியாதத

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  இவன் பொண்ணு பேரன் பேத்தி கொள்ளு பேரன் கொள்ளு பேத்தி எள்ளு பேரன் எள்ளு பேத்தி (குடும்பம் ரொம்ப பெர்சு... சுமாரா 1700 பேர் தேறும்... ) படிக்கலாம் மத்தவன் படிச்சா பெருசுக்கு பாதிக்கும் ... என்னடா நியாயம் ?

 • குண்டலகேசி - chennai,இந்தியா

  சமஸ்கிருதம்னா ஏதோ பஞ்சாமிருதம்னு நினைச்சுகிட்டாறு...விடுங்க சரியாயிரும்..

 • Jit Onet - New York,யூ.எஸ்.ஏ

  கருணாநிதி யார் சம்ஸ்க்ரிதத்தை பற்றி பேச? இது திணிப்பல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் உள்ள இந்து மக்களின் ஆவல் இது. தமிழ் எவ்வளவு முக்கியியாமோ அவ்வளுவும் அதற்கு மேலும் இதி முக்கியமாகும். ஒவ்வொரு இந்தியனின் சரித்திரமும் எதிர்காலமும் சம்ஸ்க்ரிததினால் மேற்படும். உள்ளகுழப்பங்கள் தெளிய அது மிகவும் அவசியம். கருணாநிதி போன்ற கொள்ளைக்கார கும்பல்கள் ஒழியட்டும்

 • Vaishnavi.Ne - Chennai,இந்தியா

  சமஸ்கிருதம் அல்லது சங்கதம் என்பது இந்தியாவின் மிகப்பழைய மொழிகளுள் ஒன்று. இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இது தற்போது பெரும்பாலும் பொது பேச்சு வழக்கில் இல்லாத மொழியாகும்.இந்தியாவில், உத்தராகண்ட் மாநிலம் சமஸ்கிருதத்தை இரண்டாம் அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது. தற்போது கர்நாடகா மாநிலத்தில் சிமோகா அருகே இரண்டு ஊர்களில் அலுவல் மொழியாக உள்ளது.எனினும் இந்து சமயத்தின் நான்கு வேதங்கள், பல சமய நூல்கள் உட்பட ஏராளமான தொன்மையான இந்திய இலக்கியங்கள் இம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இந்தியாவின் அலுவல் மொழிகள் பதினைந்தில் இதுவும் ஒன்றாகும். இந்தி, வங்காளி, குஜராத்தி, மராட்டி, காஷ்மீரி, அரியான்வி, நேபாளி, ஒரியா, கொங்கணி, மைத்திலி, சிந்தி, பஞ்சாபி, உருது முதலிய நவீன வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதுவே மூல மொழியாகக் கருதப்படுகின்றது. தென் இந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவற்றிலும் சமஸ்கிருத வார்த்தைகள் இருப்பதைக் காணலாம். சமஸ்கிருதம் என்பதன் பொருள் இலட்சணம்/இலக்கணம். ஸம்ஸ்க்ர்த பாரதி அமைப்பு,பரந்த அளவில் பேச்சு வழக்கில் எளிய சமஸ்கிருதத்தை மீண்டும் பயன்படுத்த மக்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றது. வேதகால சமஸ்கிருதம் ஈரானின் அவெஸ்தன் மொழியை ஒத்தது. இதன் இலக்கணமும் சொல்லாக்கமும் உறுதியான பின்னர், இது ஒரு அழகியல் ஒழுங்கமைவுக்கு உட்பட்ட மொழியானதுடன், நாடகம், மருத்துவம், அரசியல், வானியல், கணிதம் முதலியவை சார்ந்த இலக்கியங்களும் உருவாயின.மிகப் பழைய வேதமான இருக்கு வேதம் கி.மு இரண்டாவது ஆயிரவாண்டின் மத்தியில் இயற்றப்பட்டது. வேதகால வடிவம் கி.மு முதலாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை வழக்கிலிருந்தது. ஏறத்தாழ இக் காலப்பகுதியில் சமஸ்கிருதம், சமயம் மற்றும் கல்வியைப் பொறுத்தவரை தனது முதல் நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்கு இறங்கியது.கீழ் மட்ட சமஸ்கிருதமே பிராகிருதமாகவும் (ஆரம்ப கால பௌத்த நூல்கள் இம் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன), நவீன இந்திய மொழிகளாகவும் வளர்ச்சியடைந்தி ருக்கக்கூடும். சமஸ்கிருதத்துக்கும் தென்னிந்தியாவின் தமிழ் உட்பட திராவிட மொழிகளுக்கிடையேயும்கூட இருவழிச் செல்வாக்கு இருந்துள்ளது. இந்த வரலாறெல்லாம் தெரியாமல் கருணாநிதியும், வைகோவும் சமஸ்கிருதத்தை எதிர்கிறார்கள்

 • xavier - thoothukudi,இந்தியா

  கலைஞர் அவர்களே, பழகப் பழகப் பாலும் புளிக்கும் நீங்கள் நீண்ட நெடுங்காலமாக மையப்புள்ளியாக இருக்கிறீர்கள்இதன் காரணமாக இனி நீங்கள் சொல்வதை நியாயமாக இருந்தாலும் தொலைநோக்கு உள்ளதாக இருந்தாலும் ஏற்க மாட்டார்கள்பட்டால்தான் தெரியும்

 • Gnanam - Nagercoil,இந்தியா

  வட இந்திய மொழிகளை பயில்வதால் தாய்மொழி தேய்ந்துவிடாது. மாறாக தமிழனுக்கு ஆற்றல்தான் அதிகரிக்கும். ஹிந்தி மொழியை இப்படித்தான் படிக்கவிடாமல் செய்து, வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் தமிழர்கள் படும்பாடு அவர்களுக்குதான் தெரியும். தமது பிள்ளைகளையும் குடும்ப நபர்களையும் பிற மொழிகளை படித்து முன்னேற வைப்பார்கள் இந்த தலைவர்கள். மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களை நம்பவேண்டாம். சமஸ்க்ரிதம் கொஞ்சம் தெரிந்திருந்தால் நமக்கும் வட நாட்டில் சென்றாலும் சரளமாக அங்குள்ள மக்களோடு பழகலாம். அது தமிழனுக்கு பெருமைதான். தமிழ் தாய்மொழி அதனால் தேய்ந்துவிடாது. - வாழ்த்துக்கள். - ஞானம்

 • Vaishnavi.Ne - Chennai,இந்தியா

  எப்போதுமே இந்த அனைத்து திராவிட கட்சியினரும் தேவையில்லாமல் கல்யாண வீட்டில் பேசுவது அதிகரித்திருக்கிறது கல்யாணவீட்டிற்கு போனால் மணமக்களை வாழ்த்தி விட்டு வராமல், தேவை இல்லாமல் அரசியல் பேசிவிட்டு வருவது அங்குள்ளவர்களை முகம் சுளிக்க வைக்கிறது உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஹிந்தி, ஆங்கிலம் ஏற்க்கனவே கற்றுகொடுக்கபடுகிறது. இப்போது பிரச்சனை மூன்றாவது மொழியை பற்றி சமஸ்க்ருதமா? அல்லது ஜெர்மனா? என்பது தான் இதில் மொழி திணிப்பு எங்கிருந்து வருகிறது ? ஜெர்மன் மொழிக்கு பதிலாக சமஸ்கிருதம் போதிக்க பட இருக்கிறது அதுவும் கூட மத்திய அரசின் பள்ளிகளில் தானே இதில் இவருக்கு எங்கே வலிக்கிறது வயதான காலத்தில் வீட்டிலும், கட்சியிலும் மதிப்பில்லை. சும்மாவும் இருக்க முடிய வில்லை. அதனால் தினசரி தனது பெயர் பத்திரிகைகளில் வரவேண்டும், ஊடகங்களில் வரவேண்டும் என்று தினமும் ஒரு அறிக்கை வெளியிட்டுகொண்டிருக்கிராரோ?

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  எனக்கு ஆர்வம் இருந்தால் பல மொழிகளை கற்பேன் என் தாய் மொழி தமிழ் தவிர - இது என் மொழி உரிமை. மற்ற மொழிகள் திணிக்கப்படுகின்றன என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. இவருக்கு வேண்டாமென்றால் இவரும் இவரை சார்ந்தவர்களும் கற்காமல் இருக்கட்டும். முடிகிறதா. இல்லையே - பேரன் பேத்திகள் தமிழ் மட்டும் கற்கிறார்களா. இல்லையே.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  எனக்கு தெரிந்து கொல்கத்தா மற்றும் சில மாநிலங்களிலும் தமிழை ஒரு மொழியாக அங்கீகரித்து அதை ஆப்சனல் பாடமாக உள்ளாக்கி உள்ளார்கள். அங்கு தமிழ் திணிக்கப்படுகிறதா என்ன. இப்படி மற்ற மொழிகள் எல்லாவற்றையும் திணிக்கப்படுகிறது என்று சொன்னால் தமிழை காப்பாற்ற பாடுபட்ட அனைவரின் முயற்சிகளும் வீண். அது போகட்டும் - இவர்கள் தேர்தல் மீடிங்களில் பேசுவது சுத்த தமிழா - அப்படியே சுத்த தமிழில் பேசினால் யாருக்கு புரியும். தமிழில் "நாஸ்தா" என்ற வார்த்தை, பிரியாணி தமிழ் சொல்லா, பஸ்-ரயில் என்பது தமிழ் சொற்களா, டிபன் என்பது என்ன. இவர் பெயரில் கருணா நிதி என்ற சொற்கள் சுத்த தமிழ் சொற்களா - இரக்க செல்வம் என்றல்லவா இருக்க வேண்டும். ஒரு மொழி தானாக வளரவேண்டும் மேலும் மேலுமாக, மற்ற மொழிகளை அழித்து அல்ல. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்தபோது ஆங்கிலம் கற்கசொன்னார்கள் புரிதலுக்காக. மற்ற மொழிகளை வேண்டாமென்று சொல்லவில்லை.

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  வெட்டி ஆபிசரே, உருது/அராபி என்ன தமிழக மொழியா, எதுக்காக உருது பள்ளிகள்?

 • Prem Kumar - Bangalore,இந்தியா

  திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேச வேண்டிய இடத்தில், தேவையற்ற வகையில் மொழி போராட்டத்தை கையில் எடுத்து கொண்டு கருணாநிதி அவர்கள் பேசியுள்ளார். அது தி.மு.க. மகாநாடு அல்ல என்பதை அந்த முதுபெரும் தலைவர் மறந்து விட்டார் சோனியா காந்தி உள்பட மற்ற மொழி பேசும் தலைவர்கள் தமிழ்நாட்டில் பொது கூட்டங்களில் பேச தொடங்கும் முன் வணக்கம் என்று சொன்னால் கை தட்டும் இந்த தமிழக தலைவர்கள் நமக்கு ஒரு மொழி புரியவில்லை என்பதற்காக அதை எதிர்ப்பது என்றால், தமிழ் மொழியை கூட மற்ற மாநிலங்கள் எதிர்க்கும் நிலையை அது உருவாக்கி விடும் என்பதை மறந்துவிட கூடாது.. தமிழ் நாட்டில் வேறு நாட்டு மொழிகளை கூட கல்லுரரிகளும் பல்கலைகழகங்களும் கற்பிப்பதும் அதை கற்றுக்கொள்ள மாணவர்கள் ஆர்வமுடன் இருப்பதை கருணாநிதி அறிந்திருப்பார். நாட்டின் பல பாகங்களில் சமஸ்கிருத பல்கலைகழகங்கள் திறம்பட நடந்து வருகிறது. 2000 அண்டு பழமை வாய்ந்த சமஸ்கிரத மொழி உத்ரகாண்ட் மாநிலத்தில் இரண்டாவது மாநில மொழியாக ஆக்கப்பட்டுள்ளது . தமிழுக்காக - தமிழ் வளர்ச்சிக்காக தமிழக அரசியவாதிகள் போராடுகிறோம் என்று சொல்லி மற்ற மொழிகளை., வட இந்தியா- தென் இந்தியா என வேறுபடுத்தி இழிவு படுத்துவது மனதிற்கு வேதனையாக உள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை இதே அரசியல்வாதிகள் பல இடங்களில் கூறியுள்ளதையும் நான் நினைத்து பார்க்கிறேன்.

 • Siva Subramaniam - Coimbatore,இந்தியா

  கருணாநிதி மீண்டும் மொழியை உபயோகப்படுத்தி இந்த தலை முறையும் அழிந்து போகவேண்டும் என்று ஆரம்பித்திருக்கிறார். இளம் தலை முறையினர் யோசிக்க வேண்டும். எல்லா மொழிகளும் கருத்து பரிமாற்றத்துக்கு மட்டுமே அல்லது வெறி ஐ தூண்டுவதற்காக அல்ல.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இப்போ தமிழ் நாட்டிலே தமிழைத்தான் திணிக்க வேண்டியுள்ளது.நல்ல தமிழை எவென் பேசுதான்?ஆமா இவிங்களோடே தலைவன் தானே தமிழை "காட்டு மிராண்டி பாஷை"இன்னு சொன்னான்?

 • Tamilselvan - Chennai,இந்தியா

  எப்படி திணித்தார்கள் தாத்தா ? வாய் வழியாகவா ? விளக்கமாக சொல்லுங்கள் தாத்தா. பேசி பேசியே வாழ்கையை ஒட்டுங்கள் . அடுத்தவனை உசுப்பு ஏத்தியே,நீங்கள் பதவியில் குளிர் காயுங்கள். உங்கள் பழைய டுபாக்கூர் தனம் இனி மக்களிடம் எடுபடாது.

 • m.viswanathan - chennai,இந்தியா

  மறுபடியும் பராசக்தியிலிருந்தா ஆரம்பிக்கிறீர்

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  மத்திய கல்வி முறையில் சமஸ்க்ரிதம் மூன்றாவது மொழியாக 50 வருடங்களாக இருந்தது. நாட்டை தாக்கிய பத்து வருட போலி மதச்சார்பின்மை தீவிரவாதம் காரணமாக 2005இல் சமஸ்க்ரிதம் பதிலாக ஜெர்மன் எதிர்ப்பை மீறி மூன்றாவது மொழியாக கொண்டு வரப்பட்டது. அதையே இப்போது மறுபடியும் மாற்றி உள்ளனர்.

 • Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ

  இடையனூரில் வாழும் இரக்கச் செல்வம் அவர்களின் உறவினர்கள் சிலர் பெயர்களை உங்கள் முன் வைக்கிறேன்.... , ஆறுமுக அழகம்மையார், தாமரைச்செல்வி, அறத்தாய், வள்ளல் அன்னை, எழுச்சிச்செல்வம், கலைச்செல்வம், கொற்கை, ஆதவன் ... அது வேறு யாருமில்ல சார் கோபாலபுரத்தில் வாழும் கருணாநிதி யின் உறவினர்களான ஷண்முக சுந்தராம்பாள், பத்மாவதி, தர்மாம்பாள், தயாளு, உதய நிதி, கலாநிதி, துர்கா, ஆதித்யா.. போன்ற சம்ஸ்கிருத பெயர்களின் தமிழாக்கம்... உலகிலேயே, மண் பாரத நாட்டில் மட்டுமே, இப்படி ஒரு புராதன மொழிக்கு அரசியல்(வியா)திகளின் வெறுப்பு, வெறி..

 • jagan - Chennai,இந்தியா

  கருணா, நிதி, உதய சூரியன், கலா நிதி, தயா நிதி, ராஜா(த்தி), ராசா , உதய நிதி, சபரீஷ் எல்லாம்?

 • SINGA RAJA - MADURAI,இந்தியா

  தற்போதைய தமிழ் சினிமாவில் பாடல்களின் வரிகளும், இசையும்கூட, மேற்கத்திய பாணியில் தொனி மாறிபோயவிட்டன. ஒய் திஸ் கொலைவெறி எந்த மொழி? வேர் இஸ் த பார்ட்டி? இதெல்லாம் தமிழ்ப்பாடல்களா? தமிழ்ப்படம் என்று பெயருக்கு தமிழ் மொழியில் கெத்தாகப் பெயர் வைத்துவிட்டு, படம் முழுக்க ஆங்கிலம் வசனம் பேசி நடிக்கும் நடிகர்கள், அதற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கோருவது மகா அபத்தம். அன்றாடம் இன்று நாம் புழங்குகின்ற பல்வேறு வார்த்தைகளும் தமிழ் மொழியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. தமிழின் பழைய வார்த்தைகளின் புழக்கம் இன்று நடைமுறை வழக்கில் குறைந்திருப்பதே நிதர்சனம். இது காலம் காலமாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், எல்லாவற்றையும் தன்னுள் வாங்கி, ஜீரணித்து, புதுப் புதுவடிவம் பெறுகின்ற, புதுப்பொலிவோடு விளங்குகின்ற நம் தமிழ் மொழி, இளமையும் அழகும் மிளிர, இங்கே என்றென்றும் தினமும் வலம் வந்துகொண்டிருக்கிறது. ( நாம வேஷ்டியில் இருந்து ஜீன்சுக்கு மாறிவிட்ட மாதிரி ) இருப்பினும், கார், பஸ், பெட்ரோல், செல்போன் என்று நாம் பிறமொழிகள் எல்லாவற்றையும் எளிதாக தமிழிலேயே அடுக்கிக்கொண்டு பேச ஆரம்பித்துவிட்டோம். ஹன்சிகா வந்தாலும் சரி, எமி ஜாக்சன் வந்தாலும் சரி, அவர்களுக்கு இங்கே, நம்மவர்கள் திலகமிட்டு, தமிழ்ப் பெயர் சூட்டி, தமிழ் உடை உடுத்தி அழகு பார்த்து அமர்க்களப் படுத்திவிடுவார்கள். எந்தமாநில மொழி பேசுகின்ற மக்களும், நம் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டால், அவர்களையும் வசீகரித்து தன்னுள் அடைக்கலப் படுத்துகின்ற ஆற்றல் நம் தமிழ் மொழிக்கே உரிய தனியான சிறப்பு. வந்தாரை வாழவைக்கும் தமிழ்த்திருநாடு அல்லவா? வேறு மாநிலத்தவர்களும் இங்கே, தமிழ்க் கலாச்சாரத்தை மேற்கொள்ள, மிகவும் ஆசைப்படுவதை நாம் இதன்மூலம் அறியலாம். அட, சமஸ்கிருதமும் நம் தமிழ்மொழியும் ஒரு காலத்தில், காதலோடு குமரிக்கண்டத்தில் வலம் வந்ததை மறக்க முடியுமா? நம் தமிழ்க்கலாச்சாரமும், மொழி ஆளுமையும், தமிழர்களின் குருதியுடன் கலந்திருப்பது. அது தமிழ்த்தாய் தனது பிள்ளைகளுக்கு வழங்கியுள்ள அமுதம் அல்லவா? தமிழே, தமிழர்களின் உயிர். அந்த உணர்வு தமிழர்களுக்கு ஒருபோதும் மாறாது. ஆயினும், இன்று இந்தியா முழுமைக்குமான ஒருமித்த கலாச்சாரப் பகிர்தலை நாம் அனைவரும் மேற்கொள்ளவிருக்கிறோம். கடந்த காலங்களில், நம்மிலிருந்து துடைத்தெறியப்பட்டு, நம்மை அன்னியமாக்கிய கயவர்களின் சூழ்ச்சியால், மறைந்துபோன பல அற்புதங்களை நாம் கண்டுணர வேண்டும். நமது தொன்மைமிகுந்த கலாச்சாரங்களை, பாரம்பரியங்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். அதன் மூலம் நாம் நமது சுயத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியும். நமது தேசத்தின், மக்களின் வலிமையை கட்டமைக்க முடியும். நமது ஆளுமைகளை மேம்படுத்திக்கொள்ள முடியும். இதனால், நமது தேசத்தின் ஒருமைப்பாடும், அளப்பரிய சக்தியும் இந்த உலகிற்கு எடுத்தியம்பப்படும். எனவே, அயலான் மொழியை( ஆங்கிலம் ) நாம் தொழிற்பாடு கருதி, விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கும் அதே சமயத்தில், நமது சகோதர மொழியான சம்ஸ்கிருத மொழியை உரிமையோடும், அன்போடும் கற்றுக்கொள்ள முன்வர வேண்டும். சமஸ்கிருதம் ஒருபோதும் தமிழுக்கோ, தமிழனுக்கோ எதிரான மொழி அல்ல. ஆகவே, தமிழர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு சமஸ்கிருதம் பயில்வோம். இங்கே, காலை விடியும் முன்பாகவே எழுந்து உட்கார்ந்துகொண்டு, பேனாவும், பேப்பரையும் கைகளில் வைத்துக்கொண்டு, தினமும் யாரிடமாவது வம்புசெய்யக் காத்திருக்கும், பழைய கதையர்களின் உருப்படியில்லாத பேச்சுக்களை எல்லாம், தமிழர்கள் இனியும் கேட்காமல் விட்டுவிடுவதே நல்லது.

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  எங்கிருத்து காணா போயிடுச்சி.

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  உலகின் மிகப்பெரிய ஜனநாயக இந்தியாவில் யாரும் எதையும் கட்டாயப்படுத்த திணிக்க முடியாது. கேரளா, ஆந்திரம், கர்நாடகத்தில் அவர்கள் மொழி என்ன அழிந்தா விட்டது. இவரின் இந்தி எதிர்ப்பு அரசியலால் மூன்று தலைமுறையாக பொருளாதார, வியாபார, சுற்றுலா, வேலை காரணங்களுக்காக தமிழகம் விட்டுவெளியே செல்ல நினைப்பவர்கள் மிகவும் கஷ்டப்படும் நிலையில் உள்ளோம்.

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  தமிழன் சமஸ்க்ரிதம் படித்தால் ஆரிய படையெடுப்பு ஆரிய திராவிடம் பிரிவினை அனைத்தும் கட்டுக்கதை ஆங்கிலேயர்கள் பரப்பிய பொய்யே என்று விளங்கி விடும். ஆரியம் திராவிடம் என்பது இன வேறுபாடு இல்லை வெறும் பூகோள வடக்கு, தெற்கு மட்டுமே என்பது புரிந்து விடும். இவர்கள் நடத்தும் திராவிட அரசியலின் அடிப்படைக்கே ஆப்பு வந்து விடும். இவர்கள் சமஸ்க்ரிதம் எதிர்ப்பதன் முக்கிய நோக்கம் அதுவே.

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  இந்த செய்தியை தின மலர் வாசகர்கள் படிக்கவும் - கே.வி.எஸ்., என அழைக்கப்படும், கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பின், ஆளுனர்கள் குழும (போர்டு ஆப் கவர்னர்ஸ்) கூட்டம், நவம்பர் மாதம் 27ம் தேதி,2014 நடைபெற்றது. அப்போது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது மொழிப்பாடமாக, ஜெர்மனி மொழி போதிப்பதை கைவிடுவது என்றும், அதற்குப் பதிலாக, சமஸ்கிருதத்தை போதிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.வேண்டுமானால், ஜெர்மன் மொழியை, மாணவர்கள் கூடுதல் பாடமாக கற்றுக் கொள்ளலாம் என, முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவால், நாடு முழுவதும் உள்ள 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், மூன்றாவது மொழிப்பாடமாக, ஜெர்மன் மொழிக்குப் பதிலாக, சமஸ்கிருத மொழி கற்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சமஸ்கிருதம் 3வது மொழியாக தான் இருக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.இப்போது இதை எதிர்க்கும் கருணாநிதிக்கு 10 கேள்விகள் - 1) அந்நிய மொழி - ஜெர்மன் மொழி படிக்க ஆதரவு தெரிவிக்கும் இவர் இந்திய மொழியான சமஸ்கிருதத்தை எதிர்ப்பதேன் ? 2) கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஹிந்தி, ஆங்கிலம் ஏற்க்கனவே கற்றுகொடுக்கபடுகிறது. இப்போது பிரச்சனை மூன்றாவது மொழியை பற்றி சமஸ்க்ருதமா? அல்லது ஜெர்மனா? என்பது தான் இதில் மொழி திணிப்பு எங்கிருந்து வருகிறது ? 3) ஒரு பேச்சுக்கு இப்போது CBSE பள்ளிகளில் சமஸ்க்ருதம் மொழியை கட்டாயமாக வைத்துவிட்டால் கருணாநிதி அவர்களே உங்கள் வீட்டு பிள்ளைகளை தமிழ் மீடியம் பள்ளியில் சேர்ப்பீர்களா? அதுவும் அரசு பள்ளியில் ? 4) ஹிந்து துவேசம் என் சுவாசம் என வாழும் கருணாநிதி ஹிந்துக்களை திருடன் என கூறி ஏளனம் செய்தவர் ஒரு வேளை சமஸ்கிருதம் திருடர்களின் மொழி என முடிவு கட்டி விட்டாரோ ? 5) திமுக உறுப்பினர்களின் மகன்கள் /மகள்கள் மற்றும் பேரன் பேத்திகள் யாவருமே ஆம் ஒருவர் கூட இப்போது 2016 இல் ஹிந்தி மொழி படிக்கவில்லை என்று கருணாநிதி உறுதியாக கூறமுடியுமா ? ஏனன்றால் இவர் ஹிந்தி திணிப்பை எதிர்த்ததால் தமிழ் நாட்டில் இப்போது ஹிந்தி இல்லை என்றாகி விட்டதா ? 6) கருணாநிதியின் மனசாட்சி என அழைக்கப்பட்ட முரசொலி மாறனின் மகனான தயாநிதி மாறனுக்கு ஹிந்தி தெரியும் என்பது கருணாநிதிக்கு தெரியுமா ? 7) ஹிந்தி மொழி போராட்ட தியாகிகளுக்கு தாங்கள் வழங்கும் பென்ஷன் பணம் போன்று சம்ஸ்கிருத போராட்ட தியாகிகளாக மாற துடிக்கும் திமுக கழக உளுந்தம்பருப்புகளுக்கு sorry உடன்பிறப்புகளுக்கு வழங்கப்படுமா ? 8) ஹிந்தி திணிப்பு என்று கூறி மாணவர் போராட்டங்கள் மூலம் ஆட்சிக்கு வந்த போது கருணாநிதி அவர்களே உங்கள் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு ? இன்றைய 2016 இல் சொத்து மதிப்பு எவ்வளவு ? - 2 G ஊழலையும் சேர்த்து தான் 9)இப்போது சம்ஸ்கிருத எதிர்ப்பு மூலம் சுருட்ட விரும்பும் தொகை தோராயமாக எவ்வளவு ? - அதனை கணக்கிட எத்தனை பணம் எண்ணும் machinkal தேவைப்படும் உங்களுக்கு ? 10 ) கடேசியாக கருணாநிதி அவர்களே உங்கள் கைவண்ணத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ராமானுஜர் தொடரில் வரும் ராமானுஜருக்கு சமஸ்கிருதம் தெரியுமா ? தெரியாதா ? பதில் தெரிந்தால் கூறவும் .

 • Sundararaman Ramanathan - tiruchi,இந்தியா

  திருப்பதி கூட்டம் வந்து காதினில் ஓதியது தீன் தமிழா ?

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  முட்டாள் தனமா சம்ஸ்ருததை எதுக்க முடியுமா? ஹிந்திய வச்சு பல லட்சம் கோடி சுருட்ட முடிந்தது. அதெல்லாம் வேலைக்கு ஆகாது.

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  சமஸ்கிரதம் பேச்சு மொழி அல்ல.எந்த மாநிலத்திலும் பேசப்படுவதில்லை.

 • subhashini - chennai,இந்தியா

  கல்யாணத்துக்கு போனோமோ/ வாழ்த்தினோமா /நல்லதாக நாலு வார்த்தை அங்கு வந்தவர்களுடன் பேசினோமா/சாப்பிட்டோமா / வந்தோமோ என்று இல்லாமல் அங்கேயும் போய் வீண் லொள்ளு பேச்சு பேசியிருக்கிறார் ..என்ன செய்வது பொழுது போகவில்லை ஆட்சியும் கிடைக்கவில்லை ...மக்கள் நம்மளை ஓரம் கட்டி விடுவார்களோ கட்சியினர் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கி விடுவார்களோ என்று பயம் வேறு வந்து விட்டது ..யாரும் எதையும் திணிப்பு செய்யவில்லை .தமிழை ஒரேடியாக தூக்கி எறிந்து விட்டு இதையெலாம் செய்ய சொல்ல வில்லை ..தமிழ் மட்டுமே படிக்க விரும்பவர்கள் அப்படியே அதற்கேற்ற பள்ளிகளில் சேர்ந்து பயிலலாம் மேலும் இது தனி மனித சுதந்திரம் ..அவர் .அவர்கள் விருப்பபடி உலகத்தின் எந்த மொழிகளை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் ..இதில் அரசியலை கொண்டு வருவது மிகவும் தவறு ..பல முறை இங்கு பெரும்பான்மையானவர்கள் இதை பற்றிய விளக்கமும் ..மேலும்இதில் திணிப்பே இல்லை என்னும் போது தேவை இல்லாமல் தலையிட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாட கூடாது என்று இப்படி கீழ் தரமாக அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என்றும் ஏற்கனவே கருத்து தெரிவித்து விட்டனர் ஆனால் அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைத்து பிழைப்பை ஓட்டி இதை பற்றியே பேசி தினசரி செய்தியில் வருமாறு பார்த்து கொள்கிறார் போலும் ...தினமலர் வேறு இந்த அர்த்தமற்ற பேச்சுக்களை தினமும் போட்டு அவருக்கு விசுவாசத்தை காட்டுகிறது .போலு..உருப்படியான வேலைகள் எதுவும் இல்லாதவர்கள் விவரம் ஒழுங்காக தெரியாதவர்கள் வேண்டுமானால் அவர் திரித்து சொல்வதை கேட்டு கொதித்து தேவையற்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடலாம் ..மற்றவர்கள் தங்கள் வேலையை பார்த்தால் அதுவே நாட்டுக்கும் வீட்டுக்கும் நலம்

 • G.Loganathan - Coimbatore,இந்தியா

  எதை, யாரை, எங்கே விரட்டபோறீங்க?. முதலில் தமிழனை பிச்சை (இலவசம்) வாங்காதே, தன் மானத்துடன் வாழ், உழைத்து வாழவேண்டும் என்பதை எல்லாம் சொல்லி கொடுங்கள். ஏனெனில் தற்போது வட இந்தியர்கள் தமிழகத்தில் வேலை செய்யாவிட்டால் எந்த ஒரு காரியமும் நடக்காது என்ற நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் கேரள மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எத்தனை தமிழனுக்கு கேரள வங்கிகளில் வேலை தரப்பட்டுள்ளது?. தமிழனுக்கு தகுதியில்லையா?. இல்லை - எப்படி? தமிழ், ஆங்கிலம் தவிற வேறெந்த மொழியும் தெரியாது. மற்ற மாநிலத்தவர் தமிழை சரளமாக கற்றுவிட்டனர். நீங்கள் ஓட ஓட விரட்ட நினைப்பது மற்ற மொழியை அல்ல தமிழர்களை இடுகாடு நோக்கித்தான். இந்தி, சம்ஸ்கிருதம் கற்க தமிழன் எவ்வளவு பணம் செலவழிக்கிறான் தெரியுமா?. உங்கள் பேரக்குழந்தைகள் எத்தனை மொழிகள் கற்கிறார்கள்? கொஞ்சம் உண்மையை தமிழர்களுக்கு சொல்லுங்களேண். நான் தமிழன் சஸ்கிருதம் படிக்க விரும்புகிறேன் என்னை ஓட ஓட விரட்டுவீர்களா? வயதாகிவிட்டால் இப்படித்தான் பேசுவார்களா?.

 • kuppuswamykesavan - chennai,இந்தியா

  பட்டம் பெற்றும், வெளிநாடு பிற தேசங்களில் வேலை பெறவேண்டுமானால், தகுந்த அந்நிய தேச மொழி ஒன்று படித்தால், இது கூடுதல் தகுதியினை ஏற்படுத்துமே.இங்கு டாச்க்மாகை (மது) சுற்றி வருவதால் வாழ்வில் பெரும் முன்னேற்றம்தான் என்ன?.

 • Kumar Saranathan Parthasarathy - Chennai,இந்தியா

  கல்யாண மண்டபத்துல என்னையா மொழி ஆராய்ச்சி ? நீ போனது கொட்டிக்க. அத துன்னுப்புட்டு சி ஐ தி நகர்ல வந்து படுக்கறதை விட்டுப்புட்டு

 • mohankumar - Trichy,இந்தியா

  ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் உருது மொழி பாடமாக்க முயற்சி செய்வோம் என்ற கூவி திரிந்தார். அது வாக்கு வங்கிக்காக . அவருடைய பேரங்கள், மக்கள் ,மருமகன்கள் எல்லாரும சமஸ்கிரிதம் படித்து கொண்டிருப்பார்கள் எதற்கும் தேவைப்படும் அல்லவா . மந்த்ரி ஆகவோ ,அல்லது MP ஆனாலோ தேவைப்படும் . நாம் படித்து முன்னேரகூடாது . நாம் இப்படியே மாக்கானாக இருந்து கொண்டிருப்போம் .

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  எந்த மொழியையும் படிக்க தடை இருக்கக்கூடாது. அதே சமயம் மத்தியில் இந்தி மட்டும் ( ஒரு மொழி மட்டும் ) ஆட்சி மொழியாக இருக்ககூடாது. ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். மாநிலத்தில் மாநில மொழியும் ஆங்கிலமும் ஆட்சி மொழிகளாக இருக்க வேண்டும். அப்போது தான் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் தொடர்பு கொள்ள முடியும். இந்தியினால் தமிழுக்கு ஆபத்து இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. உதாரணம் இந்தி மொழி மராத்திய மொழியை கிட்டத்தட்ட ஒழித்து விட்டது. தமிழர்களின் இந்தி எதிர்ப்பினால் தான் மற்ற மொழிகளும் ஓரளவு தப்பின. ஆங்கிலத்தினாலும் தமிழ் நாசமாகத்தான் போய் விட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக நம் தமிழ் மக்கள் தமிழை நேசிக்கிறோமா? குட் மார்னிங் சொல்வதை விட்டு வணக்கம் சொல்ல வேண்டும். ஆங்கிலம் கலக்காமல் ( 10% பரவாயில்லை) நாம் பேச வேண்டும். தமிழ் சொற்கள் வழக்கொழிந்து ஆங்கில சொற்கள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன.சின்ன வயதில் கொன்றை வேந்தன், மூதுரை எல்லாம் ஆரம்ப பள்ளியில் படித்தோம். இன்று ஆத்தி சூடியை கேவலப்படுத்தி பாட்டு பாடுகிறார்கள். கிராமத்தில் எங்க பாட்டி தொரவால்( திறவுகோல்) கொண்டு வா என்பார். எங்க அம்மா சாவி என்றார். நாம் கீ எங்கே என்று கேட்கிறோம். 75% ஆங்கிலம் 25% தமிழ் ( உதாரணம்: ஓகே ஈவினிங் மீட் பண்ணுவோமா) இது தான் நம் பேச்சு.. எல்லாம் கெடுத்தது பாழாய் போன தொலைக்காட்சிகள் தான். அதிகப்பங்கு நம்ம கட்டு மரத்தின் "சன்" தொலைக்காட்சிக்கு தான். உண்மையில் மக்கள் தொலைகாட்சி தான் தமிழை சிதைக்காமல் நிகழ்ச்சிகளை கொடுக்கிறது. தமிழை காப்போம், எல்லா மொழிகளையும் படிப்போம், மொழி திணிப்பை எதிர்போம். எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல தமிழில் பேசுவோம்

 • tadj.C - Paris,பிரான்ஸ்

  தமிழ் மொழியில் சமஸ்க்ரிதம் பல நூற்றாண்டுகளுக்கு முன் கலந்து ஐக்கியம் ஆயிடுத்து சமஸ்க்ரிதம் வார்த்தைகள் இல்லாமல் தமிழ் மொழி பேசுவதோ எழுதுவதோ மிகவும் கடினம் , இனிமேல் வள்ளுவர் போல் யாரும் பேசபோவதில்லை தங்கம் மற்ற உலோகங்களை சேர்க்கப்படும் போது தான் ஆபரணங்களாகும், இல்லையேல் தங்கம் ஒரு மூலையில் தூங்க வேண்டியதுதான் . பின்குறிப்பு : இந்த நான்கு வரிகள் கொண்ட வாசகத்தில் எத்தனை சமஸ்க்ரித வார்த்தைகள் எனவே இதனால் தமிழ் தேய போவதில்லை .

 • rmr - chennai,இந்தியா

  மூன்றாவது மொழியாக ஜெர்மன் அல்லது பிரெஞ்சு அல்லது சமஸ்கிருதம் ஏன் ஜெர்மன் வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே ? படிப்பது அவர் அவர் விருப்பம் எக்ஸ்ட்ரா ஒரு ஆப்ஷன் இருந்தா என்ன இவருக்கு ? தமிழ் தமிழ் என்று ஏமாத்தும் தெலுங்கர் தான இவர்

 • Ootai Vaayan - Kovai,இந்தியா

  இப்படியே போனால் JAVA கூடாது.. C , C ++ ஆகாது.. HTML / CSS வேண்டாம்.. என்று கூட சொல்லுவார்.. காதுகளை தயாராக வைத்திருங்கள்.. உங்கள் காதுகளில் பூ சுற்ற கருணாநிதி ரெடி.

 • Ootai Vaayan - Kovai,இந்தியா

  கல்யாணவீட்டுக்கு போய் கலகம் ஊட்ட முனைகிறார் கருணாநிதி.. சமஸ்க்ருதம் ஆதிக்க மொழி அல்ல. செந்தமிழ் போல் அதுவும் பாரம்பரியமான மூத்த மொழி. தமிழை வைத்து ஏமாற்றி பிழைக்கும் இவருக்கு என்ன தெரியபோகிறது..

 • pachaitamilan1972 - hosur,இந்தியா

  இந்த தாத்தா பாட்டுக்கு அந்த மொழி வேணாம் இந்த மொழி வேணாமுன்னு சொல்லிட்டு ,அவரு குடும்ப ஆட்கள் மட்டும் எல்லாம் மொழியையும் கத்துக்கட்டும் வெளி நாட்டுக்கெல்லாம் அனுப்பி வைப்பாரு,தமிழ் நாட்டு மக்கள் மட்டும் இளிச்ச வயனுகள .

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  சரிதான் ஐயா அப்படியே செய்கிறோம். நீங்க எப்ப தமிழ்நாட்டை விட்டு கிளம்புறீங்க? ஏன்னா , 'கருணா' என்பதும் 'நிதி' என்பதும் சுத்த அக்மார்க் சமஸ்கிரித வார்த்தைகள். கருணா= கருணை நிதி = செல்வம். அது என்ன உங்கள் சின்னம்? உதய சூரியன்? அதுவும் கண்ணா சமஸ்கிரித வார்த்தைகள் தான். உதய= உதிக்கும் சூரியன் = கதிரவன். நீயே சமஸ்கிரிதத்தின் தயவில் தான் வாழ்கிறாய் என்பதை மறந்து பேசுகிறாய். நீ ஒரு பித்தலாட்டக்காரன் என்பது இன்னுமா இந்த தமிழர்களுக்கு புரிய வில்லை?

 • Tamilnesan - Muscat,ஓமன்

  ஆமா தமிழை தவிர எந்த மொழியையும் அனுமதிக்க மாட்டோம். என் பெயர் தக்ஷிணாமூர்த்தி என்கிற சமஸ்க்ரித பெயரை மாற்றி கருணாநிதி என்கிற இன்னொரு சமஸ்க்ரித பெயரை வைப்பேன். மகனுக்கு ஸ்டாலின் என்கிற ஆங்கில பெயரை வைப்பேன். வாரிசுகள் அனைவரது பெயரும் "நிதி" என்கிற சமஸ்க்ரித வார்த்தை முடிவது போல வைப்பேன். வாரிசுகள் நடத்தும் நிறுவனங்களுக்கு "க்லௌட் நயன்" போன்ற ஆங்கில வார்த்தைகள் ஆக்கிரமிக்கும். பேராண்டி தயாநிதியை மட்டும் இந்தி கற்றுக்கொள்ள அனுமதித்து அவர் மட்டும் டெல்லியில் அரசியல் களத்தில் இறங்க அனுமதிப்பேன்......ஹா......ஹா.......தமிழ் யாரை வாழ வைத்ததோ இல்லையோ......கருணாவின் குடும்பத்தை நன்றாக வாழ வைத்துள்ளது. ஜெய் ஹிந்த்

 • அசோகா - Dindigul, Tamilnadu, India

  கருணாநிதியின் வாய்ஜாலம் மற்றும் கலகம் தமிழ்நாட்டில் செல்லாது

 • ganapathy - khartoum,சூடான்

  சமஸ்க்ரித்த மூலத்தை தழுவி எழுதப்பட்டது கம்ப ராமாயணம், வில்லி பாரதம். பகவத் கீதை எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.. சாணக்கிய நீதியும் அவ்வாறே. அதையும் விட காமசூத்ரா (அல்லது காம சாஸ்த்ரா) சமஸ்க்ரிதத்தில் இருந்து பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுவிட்டது. அதற்க்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவே இல்லை... சென்றிடுவீர் எட்டு திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்பது தான் பாரதியின் வாக்கியம். ஜெர்மனியில் தமிழில் அறிவிப்பு பலகையுடன் பேருந்து செல்கிறதை சில நாட்களுக்கு முன்னர் தான் தினமலர் செய்தியாக வந்தது... அறம் செய்ய விரும்பு என்னும் ஆத்தி சூடி...இவரு குடும்பத்தில் எவனுக்கும் தெரியுமா...(ஸ்டாலின், உடைய நிதி, அறிவு நிதி...ஆதித்யா....என்று....கேட்டு பாருங்க...ஒருத்தனுக்கும் தெரியாது...)

 • Damu - Coimbatore

  இதை ஒரு விருப்ப பாடமாகதான் கொண்டுவருகிறார்கள். சமச்கிருதத்தை தெரிந்து கொள்வதால் தமிழ் அழிந்து விடாது. தமிழுக்கு கதி என்று சொல்லப்படும் கம்பராமயாணம் சமச்கிருத ராமாயணத்தைத் தளுவி எளுதப்பட்டதுதான். மேலும் தமிழுக்கு வளம் சேர்க்கும் ஆழ்வார்களின் பாசுரங்கள் வில்லி பாரதம் இன்னும் எவ்வளவோ நுல்கள் சமச்கிருத மூல நுல்களில் இருந்து கருத்துகளை எடுத்து இருக்கின்றன. தமிழ் மிகப்பழமையான நல்ல இலக்கணம் மற்றும் இலக்கியங்கள் கொண்ட அழகான மொழி. ஆனால் எதும் வளர வேண்டும் வளராத காலத்துக்கேற்படி மாறாத எதுவும் அதன் ஆற்றலை இழந்துவிடும். அதனால் பலமொழிகளையும் கற்று அதிலுள்ள நல்ல கருத்துகளை மற்றும் புதிய சொல்வளத்தை தமிழில் சேற்க வேண்டும் இதுபோன்ற ஒரு இருக்கமற்ற நிலை நிலவுவதாலேயே ஆஙகிலம் இன்று பரவலாக ஏற்றுககொள்ளப் பட்டுள்ளது ஆங்கிலத்தின் பல வார்தைகள் பல மொழிகளிலிருந்தும் வந்தவை இனனும் வந்தவண்ணம் உள்ளன அதுதவிர சமச்கிருதம் ஒரு most structured language என்று மொழி விஞ்ஞானிகள் சொல்கிரார்கள் இது அமரிக்கா செர்மனி போன்ற பலநாடுகளிலும் பல பல்களைக்களகங்களிலும் பயிற்றுவிக்கப்படுகிறது சமச்கிருதத்தை அறிவதால் தமிழ் இனனும் வழம் பெரும் தமிழால் ஆதாயம் கண்டவர்கள் சின்ன குழந்தைகளுக்கு பூசசாண்டி வருது என்று பயமுருத்துவது போல சொல்லி பயனடைய பார்கிரார்கள் இதை அறிந்தவர்கள் மற்றும் பண்பாளர்கள் கண்டுகொள்ளாக் கூடாது

 • arunachalam - Tirunelveli,இந்தியா

  கருணாவும் குடும்பமும் மட்டும் முன்னேறி விட்டார்கள். ஒரு தமிழனும் மேலேரி வரக்கூடாது என்கிற எண்ணத்தில் பிற மொழிகளை வெறுக்கச் சொல்கிறார். என்ன செய்ய? என்று புரிந்து கொள்வார்கள் இந்த தமிழக தமிழர்கள்?

 • Abu Faheem - Riyadh,சவுதி அரேபியா

  சமஸ்கிரதம் மட்டுமல்ல ஆர் எஸ் எஸ் அஜெண்டா அனைத்தையுமே செயல்படுத்த பி ஜே பி அரசு முயல்கிறது. இதைனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதற்கு மதசார்பற்ற அரசியல் மற்றும் பொது சக்திகள் ஒன்று திரள வேண்டும்

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  இவருகிட்ட டைம் மெஷின் இருக்கு. அடிக்கடி ரிவர்ஸ்ல வைச்சு நம்மளை படுத்துறாரு....

 • Seitheee - San Jose,யூ.எஸ்.ஏ

  தமிழ் நட்டு மக்கள் நிராகரித்தும் கருணாநிதி திருந்தவில்லை. இவரை யாரும் கேட்கவில்லை. சமஸ்கிரதம் படிப்பது இல்லை படிக்காமல் இருபது தமிழனின் உரிமை. கருணாநிதி ஒன்றும் சொல்ல வேண்டாம். கட்சி சின்னத்தை sankrit இல் வைத்து விட்டு இவருக்கு பேச நாதி சீ.

 • g k - chennai

  கருணாவின் அறிக்கை தினமும் தினமலரால் திணிக்கப்படுகிறது.இப்படியே தொடர்ந்தால் தினமலரின் ரசிக மன்றம் கலைக்கப்படுமென்று தெரிவித்துக்கொள்கிறேன்

 • muthusamy - Coimbatore

  அட மங்கூஸ் மண்டையா, திணிப்பு ன்னா கட்டாயமாக்கும். இது கட்டாயமில்லை. விருப்ப பாடம்...

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  நாளைய முழக்கம் வெள்ளையனே வெளியேறு....நாளைய போராட்டம் - கழகத்தின் சார்பில் மெரினாவில் உப்பு காய்ச்சும் போராட்டம்..இதெல்லாம் கூட இனிமே எதிர்பார்க்கலாம்..

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  மொழி பெயரை சொல்லி மக்களை முட்டாளாக்கியது போதும். ஹிந்தி, சமஸ்கிரித மொழிகளை யாரும் திணிக்கவில்லை. படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தான் சொல்லபட்டிருக்கிறது. இனிமேல் இந்த குப்பை அறிக்கைகளை படிப்பவர்கள் இல்லை.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  வயதாகிவிட்டால் அடங்கமுடியாத உளரல் இருக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை, இது வருவது insecurity feeling னால். ஆகவே இவர் சொல்வதை புறம் தள்ளிவிட்டு நம் வேலையைப்பார்ப்போம். ஏதோ இருக்கிரவரை பினாத்திவிட்டு போகட்டும்.

 • Malar Mannan - Chennai,இந்தியா

  சமஸ்கிருதம் படிச்சிட்டு கோவில் ல மந்திரம் சொல்றதுக்கு தான் பயன்படும்...

 • Anand Rao.v - Chennai,இந்தியா

  கற்பனை செய்து பாட நினைச்சால் எல்லாம் பழசா போச்சே.

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  நாங்கள் தீர வேண்டும் என்று கருணாவின் செய்திகளை வெளியிடுவதும் ஒரு திணிப்பு தானே. அப்துல் கலாம்,வினோபா ,விவேகானந்தர் ,நல்லகண்ணு போன்ற பலருடைய கருத்துயும் போடலாமே.அதேபோல்தான் தற்போது "சம்ஸ்க்ருதம்" தொடர்பான செய்தி.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  அவரவர் விருப்பப்படும் மொழிகளில் படிக்கலாம். எதுவும் கட்டாயம் வேண்டாம்.

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  மத்த மொழி பற்றாளர்கள் தமிழை விருப்ப மொழியா எடுத்து படிக்கலாம்...ஆனால் தமிழர்கள் மற்ற மொழியை விருப்ப பாடமாக படிக்க கூடாது ? யோவ்...வாயில ஏதாவது வந்திர போவுது....

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  வர வர திருவாளர் 93 ன் செய்திகள் விளங்குவதே இல்லை. இவர் போனதோ கல்யாண வீடு. மொய்( பெற்றோமா அல்லது ) எழுதினோமா, மணமக்களை வாழ்த்திவிட்டு வந்தோமா,விருந்து சாப்பிட்டோமா என்றில்லாமல் அங்கு ஏன் வெறுப்பு பிரச்சாரம். இது என்ன "மந்திரி குமரி"யோ அல்லது மனோகரா காலமா?'சவுக்கடி கொடுப்போம் என்று தூண்டி விடுகிறார். "சவுக்கை எடுத்து கிளர்ந்தெழ வேண்டும் "என்கிறார்.யார் கிளர்ந்தெழ வேண்டும்? ."கிளர்ச்சி உருவாக யாரும் காரணமாய் இருந்துவிடக்கூடாது "யாரும் காரணியாக இல்லாவிட்டால் சிப்பாய் கலகம் கூட வந்திருக்காதே.இது தான் நோகாமல் நோன்பு கும்பிடுவதோ? "இழித்துரைக்கப்பட்ட இந்த மொழி.."யாரால்.எப்போது இழித்துரைக்கபட்டது? "சவுக்கடி கொடுத்து விரட்டவேண்டும்" என்கிறாரே ,யாரை?

 • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

  சமஸ்கிருதம் படிப்பவர்களுக்கு தேவை பாகுபாடற்ற கவனிப்பும் அரவணைப்பும்தான். அதை பெற்றுக்கொடுக்க கருணா இறங்குவது நல்லது. நாளை படித்து முடித்து தயாரானால் எங்களுக்கு மட்டுமல்ல கருணாவின் சந்தேகங்களை கூட போக்க உதவுவார்களே. அடுத்து கருணா பையன் ஆட்சியில் புதிய அர்ச்சகர்களை நியமிக்கலாமே. வாய்ப்பை கெடுக்க வேண்டாம்

 • Partha - Trichy

  பொழுது போகல இவருக்கு!

 • Sam - kanyakumari,இந்தியா

  இன்னுமா சுய நலம். திருந்தவே மாட்டே. அடுத்தவன கெடுத்து வாழ நினைக்காத.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  சமஸ்க்ரிதம் என்றதுமே உடனே அது படித்தால் வேலை கிடைக்குமா? வயிற்ரை கழுவ முடியுமா என்று கேட்க ஆரம்பிப்பது முட்டாள்தனம். உண்மையான அறிவு என்பது எந்த மொழியிலும் கிடைக்கலாம். அப்பேற்பட்ட மொழிகளில் ஒன்றே சமஸ்க்ரிதம். தனி மனிதன் ஒருவனை நன்கு உயர்த்தும் கருத்துக்கள் அம்மொழியில் நிறையவே உள்ளன.மிக உயர்ந்த காவியங்களும் மன உயர்வைத்தரும் மேலான கருத்துக்களையும் அம்மொழியில் உள்ள நூல்கள் தருகின்றன.அந்த நூல்களை வைத்தே அதன் உயர்வு உள்ளது.அதை படிக்காமலேயே "இது என் வாயில் நுழையாது.நான் தோற்று விடுவேன்" என்னும் மனோ பாவந்தான் இவ்வாறு பேசவைக்கிறது.பாரதியாரும் yam அறிந்த மொழிகளிலே என்றுதான் பாடி யுள்ளார்.அதனால் ஒரு மொழியை படிக்காமலேயே அதை எதிர்ப்பது அல்வாவை தின்னாதவன் அதை காரம் என்று கூறுவது போல.தமிழர்களே மட மொழிகளை படியுங்கள் முன்னேறுங்கள்.கிணற்று தவளை ஆக ஆகி விடக்கூடாது.அரபு நாடுகளுக்கு உ வேலைக்கு சென்று அங்கே போய் அயல் மொழியை கற்பதை விட சம்ச்க்ரிதம் ஹிந்தி ஆகிய நம் நாட்டு மொழிகளை கறப்பது எவ்வளவோ மேல்.

 • Vijay - Coimbatore,இந்தியா

  அது கிடக்கட்டும் விடுங்கள். இந்த சிலை கடத்தல் கும்பலுக்கும் உங்கள் கட்சிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்களே உண்மையா??

 • kaalechickne - Mumbai,இந்தியா

  ஓடி விளையாடு தாத்தா. நீ ஓய்ந்திருக்கலாகாது தாத்தா. காலை எழுந்தவுடன் அறிக்கை. பின்பு கனிவு கொடுக்கும் அறிக்கை.மாலை முழுவதும் உளறி விளையாட்டு. என பழக்கபடுதிகொள்ளு தாத்தா.

 • g k - chennai

  உன் பேச்சை உன் வாரிசுகளே கேட்கத்தயாரில்லை. ஏன் தினமும் ஏதாவது புலம்பிக்கொண்டிருக்கிறாய். பாவம் வயது மட்டும் வளர்ந்து பக்குவம் வளர வில்லை என்றால் இது போல் புலம்பும் நிலை ஏற்படத்தான் செய்யும்

 • Raj - bangalore,இந்தியா

  தினமும் கருணாவை பற்றியும் முதியவர் ஸ்டாலின் பற்றியும் செய்தி இல்லாத நாள் இல்லை.அவ்வப்போது அம்மாவையும் குறைசொல்வதை நிறுத்தவில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது தினமலர் நல்ல தொகையை திமுகவிடம் பெற்றுள்ளது என நினைக்க தோன்றுகிறது,

 • kumar - chennai,இந்தியா

  தி.மு.க ஆட்சிக்கு வந்தால், உருது கட்டாயமாக்கப்படும் என்றார்கள்.. இது என்னா திணிப்பு ??.

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த மொழி பருப்பெல்லாம் இனி தமிழ்நாட்டில் வேகாது, வேறு ஏதாவது வியாபாரம் இருந்தால் தொடங்குங்கள் இல்லையேல் அடங்குங்கள்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்களே பிழைக்க வழியில்லாமல் கஷ்ட்டப்படவில்லையா? ஹிந்தி தெரிந்த வேலை கிடைத்து பணக்கார வாழக்கை வாழ்கிறார்களா? ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்ட எத்தனை என்ஜினீயர்கள் வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள் தெரியுமா? தமிழன் ஹிந்தி கத்துகிட்டு அவர்களுடன் போட்டி போடணுமா? அப்படி செய்ய விரும்புபவர்கள் படிப்பதை இங்கே யாரும் தடுக்கலயே. படிச்சு தான் ஆகணும் என்று கட்டாயப்படுத்துவஹ்டு ஏன் என்று தான் கேட்கிறார். ஹிந்தியில் பெயிலானால் டிக்ரீ சர்டிபிகேட் கிடைக்காமல் சாவனுமா?

 • rk nataraj - madurai,இந்தியா

  அந்த மொழி வேண்டாம் இந்த மொழி வேண்டாம் என்று சொல்வதற்கு உங்களுக்கு தனி மனிதனாக உரிமை இருக்கிறது. எங்களுக்கு மக்களுக்கு மாணவர்களுக்கு வேலை இல்லா பட்டதாரிகளுக்கு எல்லா மொழிகளும் வேண்டும். தமிழ், ஹிந்தி, இங்கிலீஷ்,ஜப்பான்,ஜெர்மனி,அரபி எல்லா மொழிகளும் படிப்போம், குழந்தைகளுக்கும் சொல்லி கொடுப்போம்.

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  இவரு எப்படி சம்ஸ்கிருத ஆதிக்கத்தை தடுப்பார்ணா, எப்படி ஹிந்தியை தன் குடும்பத்தார்கள் மட்டும் படிக்கவிட்டு மற்ற தமிழர்கள் படிக்க விடாமல் தடுத்தாரோ, அப்படியே சமஸ்கிருதத்தையும் தன் பேரன்கள் பேத்திகளை மட்டும் படிக்கவிட்டு மொழி ஆதிக்கம் கொண்டு சமஸ்கிருதத்தை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுப்பார்........அப்படியே பிராமண பெண்களை தன் குடும்பத்திற்குள் கொண்டு வருவார்........வெளியே போயி பிராமிணர்கள் திராவிடத்தின் எதிரிகள், ஹிந்தி ஒரு அரக்கன், சமஸ்கிருதம் தமிழர்களின் எதிரி இப்படியா பினாத்திகிட்டு , அரேபியர்களின் பாலைவன மொழிக்கு மொழி இலக்கிய விருதும், அதனை படிக்க கோடி கணக்கில் நிதி ஒதுக்கீடும் செய்வார்............ கருணாநிதியை எல்லாம் தலைவராக பயித்தியக்காரர்கள் இல்லை கொள்ளையர்கள் மட்டுமே ஏற்று கொள்வார்கள்.........

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  வயதாகி விட்டது அதான் உளறுகிறார், மக்கள் நல்ல தீர்ப்பு அளித்தும் திருந்த வில்லை, மாநிலத்தில் பல ப்றேசெனை இருக்கும் பொது உளுத்து போன இந்தி எதிர்ப்பு செல்லாது,.

 • Shanmuga Sundaram - Bangalore,இந்தியா

  "ஹிந்தி சமஸ்க்ரிதம் படிச்சா வட இந்தியாவில் வேலை" - இது மாயை இது IAS , IPS, army போன்ற நிலைகளில் வட இந்திய மாநிலங்களில் வேலை செய்ய உதவும். வட இந்திய தனியார் துறையில் தமிழன் ஹிந்தி சமஸ்க்ரிதம் படிக்க அவசியமே இல்லை . அங்கே தனியார் துறையில் ஆங்கிலம் இருந்தால் மிக சிறப்பாக முன்னேறலாம். வட இந்திய மக்கள் ஆங்கில மட்டுமே தனியார் துறையில் முன்னிருத்துகிறார்கள். அவர்களிடையே ஆங்கிலம் பேசி வேலை செய்பவர்கள் தங்களுக்கு சரியான போட்டியாக கருதுகிறார்கள் - ஹிந்தி சமஸ்க்ரிதம் புலமை தனியார் துறையில் செயல் படவில்லை. IAS , IPS, army போன்ற நிலைகளில் வட இந்தியர் ஆங்கிலம் பேசி நிலையை தக்கவைத்து கொள்கின்றனர். முதலில் வட இந்திய நகர் சென்று பணி செய்து பிறகு கருத்துக்களை எழுதுக. ஹிந்தி சமஸ்க்ரிதம் படிச்சா வட இந்தியாவில் வேலை" என்று சொல்பவர்கள் தமிழ் நாட்டில் பல இடங்களில் "பானி -பூரி விற்பவர்கள், ஹோட்டலில் வேலை செய்பவர்கள் வட இந்திய மக்கள் என்று உங்களால் காண முடியவில்லை ?

 • pradeban - goodge street ,யுனைடெட் கிங்டம்

  தமிழர்கள் யாரும் மற்ற மொழிகளை படித்து விடாதீர்கள் ,நீங்களெல்லாம் படித்து விட்டால் பிறகு நாங்கள் எப்படி பேரனுக்கு இந்தி தெரியும் என்கிற காரணத்தை வைத்து ,மந்திரி பதவி வாங்குவது ,எங்கள் வியாபாரங்களை எல்லா மாநிலங்களிலும் செய்வது ?.எனவே எல்லோரும் தமிழ் மட்டும் படித்து இங்கேயே கிடந்து நாசமா போங்கள்

 • Baskar - Salem

  உம்மை போலவே வீரமாமுனிவர் நினைத்தி்ருந்தாரானால் நாம் ஓரு நல்ல தமிழறிஞரை மேற்கத்தி்ய நாட்டிலிருந்து பெற்றிருப்போமா?

 • கார்த்திக் சித்தன் - சிவலோகம் ,இந்தியா

  இவ்வளவு பேசும் கருணாநிதியினால் உருதுவிற்கு எதிராக போராட முடியுமா? கோவில்களில் சமஸ்கிருதத்தை எதிர்ப்பவர், மசூதிகளில் உபயோகிகப்படும் அயல்நாட்டு மொழிகளை எதிர்க்க முடியுமா? இத்தனைக்கும் சமஸ்க்ருதம் இந்திய மொழி. பின்னது அயல்நாட்டு மொழி.

 • Shake-sphere - India,இந்தியா

  எந்த ஒரு மொழியையும் கற்றுக்கொள்வது என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட உரிமை. நீ இதை கற்றுக்கொள் அல்லது கற்றுக்கொள்ளதே என்று நிர்பந்தபடுத்துவதற்கு எந்த மனித விலங்கிற்கும் அருகதை இல்லை.குறிப்பாக இந்திய தேசத்தில் இருந்து கொண்டு இந்திய மக்களின் செல்வத்தையும் இந்திய மக்களின் உழைப்பையும் மோசடி செய்து சுரண்டி தின்ற இந்த கேவல ஜீவனுக்கு இதை சொல்ல எள்ளளவும் தகுதி இல்லை. இந்திய மண்ணில் இருந்து கொண்டு இந்த நாட்டின் ஒரு மொழிக்கு எதிராக கருத்தை சொல்லும் இது போன்ற தேச விரோத விஷ கிருமியினை இந்த நட்டு மக்கள் ஏற்கனவே உணர்ந்துள்ளார்கள். மக்கள் இது போன்ற நீசர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.

 • Arivu Nambi - madurai,இந்தியா

  ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் படிப்பதால் ஒரு எலவு பயனும் இல்லை ?

 • SHANMUGASUNDARAM - Chennai

  தோல்வி தோல்வி தோல்வி ஓடினான் ஓடினான் வாழ்க்கை இறுதிவரை ஓடினான் தமிழன் குண்டுமழை பொழிந்தது தமிழினம் அழிக்கப்படுகிறது என் கனிமொழி வெளிவர எந்தமொழியையும் அழிக்கலாம் தமிழ்நாட்டில் ஒருகூட்டம இருக்கிறது எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மீண்டும் ஓட்டுபோடுவார்கள் எனநினைக்கிறார் இது அம்மா ஆட்சி, தமிழ் ஆங்கிலம் சம்ஸ்க்ருதம் இந்தி என பலமொழிகள் தமிழகத்தில் எல்லோருக்கும் கற்பிக்கபடும் இன்றய இளைஞர்கள் பகுத்தறிவாளர்கள் இனி உங்க பாசாங்கு எடுபடாது அமைதியாக இருந்தால் எதிர்கட்சி, இல்லையேல் அடுத்தமுறை பாஜக தான், வயதாகியும் பக்குவம் வரவில்லை, இனிவராது, இவர்களை விரட்ட சிபிஐ வருகிறது, சம்ஸ்க்ருதத்தை இவர்கள் விரட்ட போகிறாராம் முதல்ல எழுந்து நிக்கட்டும் அப்பறம் நடக்கலாம் விரட்டி ஓடலாம்

 • கார்த்திக் சித்தன் - சிவலோகம் ,இந்தியா

  வெளிநாட்டுக்காரன் எல்லாம் நமது சமஸ்கிருதத்தின் அருமையை உணர்ந்திருக்கிறான். ஆனால் கருணாநிதி போன்ற தேச துரோகிகள் நாட்டின் ஒருமைப்பாட்டை கெடுப்பதிர்கென்றெ இது போன்ற பிரிவினைவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

 • Bala - chennai,இந்தியா

  திரு கருணாநிதி அவர்களே முதலில் நீங்கள் எழுதும் ராமானுஜர் தொடரில் சமஸ்க்ரிதம் இல்லவேயில்லை என்று அடித்து சொல்ல முடியுமா உங்களால்? உங்கள் தொலைகாட்சியில் தமிழ் மொழியைத்தவிர வேறு மொழிகளே பேசபடுவதில்லை என்று சொல்லமுடியுமா? உங்கள் குடும்பத்தார்களுக்கு தமிழ் பெயர் தான் வைக்கப்பட்டுள்ளன என்று உங்களால் கூறமுடியுமா? நீங்கள் சொல்வதெல்லாம் ஊரை ஏமாற்றுவதற்கு. உங்கள் காலம் மலையேறி விட்டது. படித்த நடுத்தர மக்கள் ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். உங்கள் பிள்ளையிடம் கற்றுகொள்ளுங்கள். எங்களுக்கு இந்தியாவில் தமிழ் வளரவேண்டும் என்றால் புராதன மொழிகள் அனைத்தையும் கற்பது அவசியம். இந்த உண்மை ஸ்டாலின் அவர்களுக்கு நன்றாக தெரியும். ஒரு புராதன மொழியான தமிழுடன் இந்தியாவின் இன்னொரு புராதன மொழியான சமஸ்க்ரிதம் கற்பதை வரவேற்பார்.

 • Sri Ra - Chennnai,இந்தியா

  இந்த கொசு தொல்லை தாங்கலை அப்பா

 • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

  நீங்க பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஜெ.தான் முதலமைச்சர். நீங்கள் விடாமுயற்சியுடையவர் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் இவ்வளவு விடாமுயற்சி செய்விர்கள் என எதிர்பார்த்ததில்லை.

 • Maran - chennai,இந்தியா

  நம்ம தமிழ்நாடுல தமிழ் மட்டும் பேசினா போதும், நம்ம தமிழ் மக்கள் ஹிந்தி பேச தெரியலானாலும் வட மாநிலங்களில் மிக சிறப்பா தான் வேல பாக்குறாங்க, தமிழன் சீனா போயி வர்த்தகம் பண்ணியிருக்கான் , சீனா மொழி தெரிஞ்சா வர்த்தகம் பண்ணினா? தமிழனுக்கு நெறைய திறமைகள் இருக்கு, காங்கிரஸ் தமிழ் இனத்தை அழிச்ச மாதிரி தமிழ் மொழிய அழிய விடக் கூடாது

 • SSP - Ramnad,இந்தியா

  தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடக்குதுனு எங்களுக்கெல்லாம் தெரியலையே? உங்களுக்கு மட்டும் அது எப்படி தெரியுது தலைவா? சும்மா இருக்காமை எதாவது நோண்டிகிட்டே இருப்பீரோ?

 • Arbhas Khan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சமஸ்கிருதம் வழக்கொழிந்த மொழியாக இருக்கலாம்..ஆனால் அதை சீரழிந்த மொழி என்று கூறுவது தவறு. ஒரு மொழியை கற்பதும், கற்காததும் ஒருவரின் சொந்த பிரச்னை. உருது மொழி நான் கற்கிறேன்.. அதையே எல்லாரும் செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறு.

 • Sivagiri - chennai,இந்தியா

  ரெகுலரா பேப்பர் காரங்களுக்கு ஒரு அரைப் பக்க fill -up கிடைச்சுருது . . . இன்னும் அஞ்சு வருஷத்துக்கு தினமும் அரை பக்கம் / கால் பக்கம் அறிக்கை ரெடி பண்ற வேலை இருக்கு . . . அத நாங்க படிச்சுத் தொலைக்க வேண்டியிருக்கு . . . பேப்பராவது பரவாயில்லை - சிம்பிளா ரெடிமேடா கம்ப்யுட்டர்ல செட் பண்ணி போட்ட்ருவாங்க - நாங்களும் சிம்பிள கிழிச்சி கீழே போட்ருவோம் . . . டிவி- காரங்க அதுக்கு ஒரு நல்ல அழகான நியுஸ் ரீடர் ரெடி பண்ணி மேக்-அப் போட்டு - ட்ரெஸ் பண்ணி - பல சிரமங்களை அனுபவிச்சு மக்களுக்கு காட்ட வேண்டியிருக்கு பாவம் - நாங்க சிம்பிள ரிமோட்டால மாத்திருவோம் இந்த ஆல்இண்டியா ரேடியோகாரங்க பாடு சோ-சிம்பிள் :- ஒரு மணி நேரத்துக்கு ஒருதரம் - ஒரு அஞ்சு நிமிஷம் மோடி இதை சொன்னார் - சோனியா அதை சொன்னார் - ஜெ கடிதம் போட்டார் - கருணாநிதி அறிக்கை வெளியிட்டார் - பாமக ராமதாஸ் அதை சொன்னார் - வாசன் சொன்னார் - திருமா சொன்னார் - வைகோ சொன்னார் - மழை வந்தாலும் வரும் - வெயிலும் அடிக்கும் ஓட்ட ரெகார்ட் மாதிரி இதே நியுஸ் தான் பல வருஷமா நாங்க தெரிஞ்சிக்க வேண்டி நாட்ல வேற நியுஸே இல்லையா .. . . ? ? ? ? ?

 • Jayasankar Sundararaman - Chennai,இந்தியா

  பத்திரிகை காரர்கள் மு.க விடம் செல்வதை நிறுத்தவேண்டும் . .தமிழ் மக்களே இனியும் முட்டாள் ஆகவேண்டாம்

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  இப்படி தினசரி ஒரு அறிக்கை விடுவது அவரது பொழுது போக்கு ஆகிவிட்டது. முதலில் உமது குடும்பத்தில் உள்ளவர்களது பெயரை மாற்றி வையும். எதுவுமே தமிழ் மொழி அல்ல. ஹிந்தி கற்க விடாமல் ஒரு ஜெனெரஷனை உருப்படாமல் செய்தது போதும்.

 • kumar - chennai,இந்தியா

  நாங்க எல்லா மொழியும் படிக்க விரும்புகிறோம். நீங்கள் போத்திகிட்டு கிடங்க

 • சூத்திரன் - Madurai,இந்தியா

  கருணாநிதி தவறானவர் தான்.. அனால் இந்த கருத்தில் உண்மை இருக்கிறது.. ஹிந்தி படித்தால் வேற மாநிலத்தில் வேலைக்கு போகலாம் சரி, அதே போல் தமிழ் நாட்டில் ஹிந்தி வந்து விட்டால், அவன் இங்கே வந்து என் மக்களுக்கான வேலையை எடுத்து கொள்ள மாட்டானா? தென் மாநிலங்களில் தான் ஹிந்தி பேசுபவர்கள் குறைவு, தென்மாநிலங்களையும் ஹிந்தி பேசும் மாநிலங்களையும் ஒப்பிட்டு பாருங்கள் யார் பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் என்று?.. பிறகு ஆங்கிலம் மட்டும் ஏன் பயில்கிறோம் என்று கூறும் காவி டவுசர்களுக்கு, ஏன் புரியவில்லை Japan China France German Spain நாட்டுகாரர்கள் தங்கள் தாய் மொழியில் தான் பயில்கிறார்கள் என்று, பெரும்பாலான மக்களுக்கு ஆங்கிலம் கூட தெரியாது அனால் பொருளாதாரத்தில் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஆங்கிலம் கற்பது தவறா என்றால் தவறு தான், நான் ஆங்கிலத்தில் செய்யும் Coding வெள்ளையன் பயன்படுத்தலாம், என் உழைப்பை அவன் பயன்படுத்துவான்.. சீனாவின் Huawei ZTE telecom போன்ற நிறுவனங்களின் மென்பொருள்களை Hack செய்வது கடினம், ஏன் என்றால் அவர்கள் தாய் மொழில் தான் coding எழுதுகிறார்கள், சீனா மொழி தெரியாமல் அதை தொட முடியாது, அவன் உழைப்பு அவனுக்குரியதாகிறது, வேறு எவனும் சுரண்ட முடியாது.. இவர்கள் சொல்வது, இன்னிக்கு சோறு கிடைத்தால் போதும் நாளைய தலைமுறை இதே போல் அடிமையாய் இருந்து விட்டு போகட்டுமே என்கிறார்கள்.. ஆங்கிலத்தில் இளைத்த தவறை, மீண்டும் இப்போது ஹிந்தியிலும் செய்ய துடிக்கிறார்கள்..

 • Blue Print - Chennai,இந்தியா

  யோவ்.. இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இதையே சொல்லிகிட்டு இருப்பீர்? உம் காலத்தில் இருந்தவங்க எல்லாம் முட்டாள் பசங்க. உம் பேச்சை கேட்டுகிட்டு இப்போ குண்டு சட்டிகுள்ளையே குதிரை ஓட்டிக்கிட்டு இருக்காங்க. இப்போ இருக்கிற தலைமுறைகளுக்கு அவர்கள் முன்னேர என்ன படிக்கணும், செய்யணும்னு தெரியும். உம்மோட பேச்சையெல்லாம் கேக்க மாட்டாங்க. தமிழ் மொழியுடன் எல்லா மொழியும் கத்துக்கணும். அப்போதான் தலைமுறையும் முன்னேறும், நாடும் முன்னேறும்.

 • thiru - Chennai,இந்தியா

  இப்படிதான் ஹிந்தி ஒழிப்பு ஆரம்பிச்சு தமிழன வடமாநிலம் போக விடாம தடுதாறு... இப்ப சம்ஸ்கிருத பிரச்சனையா ??? வெளங்கிடும்.. அம்மா நகராட்சி ஊழியர்களுக்கு உத்திரவிடுங்கள்... சென்னையில் கொசு தொல்லை தாங்க முடியல..

 • karuppan - clementi,சிங்கப்பூர்

  இவருக்கு அரசியல் பிழைப்பு ஆட்டம்கானும்போதெல்லாம் இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, பூணூல் அறுப்பு, தாலி அறுப்பு என்று ஸ்டன்ட் அடித்துக்கொண்டு இருப்பார்.

 • rengarajan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  This guy has spoilt us buy not making us know other languages. People has given him slashes from which he has never learnt lessons.

 • HSR - Chennai,இந்தியா

  போயா பொடிடப்பா இந்த உலகம் பெருசப்பா ..ஆதித்யா பேரு தமிழ் பேரா ?உதயநிதி ,தயாநிதி கலாநிதி .மொதல்ல அழகிரி தமிழ் பேரா ?எவனும் வாயால் சிரிக்க மாட்டார்கள் ...கருணாநிதி அல்லது தெட்சிணாமூர்த்தி தமிழ் பேரா ?எந்த திமுக சொம்பாவது விளக்கம் தர முடியுமா? ஹஹஹா இத நா வாயால சிரிக்கல உங்கள பார்த்து ..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement