Advertisement

என்னோடு விளையாடு..! - நடிகர் கதிர்

“கோணகொண்டக்காரி குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே”ன்னு இவரோடஒரே பாட்டுல பெண்களோட மனச கொள்ளையடிச்சி, 'கிருமி'யாய் ரசிகர்களின் மனதில்புகுந்தவர். பெண்களே பொறாமைப்படும் அளவிற்கு, பெண் வேடத்தில், 'சிகை' படத்தில் நடித்துக்கொண்டிக்கும் 'மதயானைக்கூட்டம்' படத்தின் ஹீரோ கதிர், தினமலர் வாசகர்களுக்காக அளித்த பேட்டி.
* முதல் வாய்ப்பு எது?
கோவையில் பொறியியல் படிக்கும் போது 'மதயானைக்கூட்டம்' படத்துல நடிக்க முதல் வாய்ப்பு கிடைச்சுது.
* வித்தியாசமான படத்தேர்வுகள் பற்றி...
சினிமாவுக்கு என்னோட சின்ன வயசுலயே வந்துட்டதால, ரிஸ்க் எடுக்க தயாரா இருக்கேன். அதுக்கு பட தேர்வு வித்தியாசமா இருக்கணும். விறுவிறுப்பான ஆக் ஷன் படங்கள் பண்ண ஆசை.
* “என்னோடுவிளையாடு” படம் ரெடி ஆகிடுச்சா?
ரெடிஆயாச்சு. சீக்கிரமே ரிலீஸ். இந்த படத்துல நானும் பரத்தும் நடிச்சுருக்கோம்.
* படத்தோட ஒன்லைன் ப்ளீஸ்?
எனக்கு தெரியாமலேயே என்கிட்ட ஒருவிஷயத்த பத்தி பேசுற கதை. இதுதான் இந்தபடத்தோட ஒன்லைன் ஸ்டோரி. த்ரில்லர், காதல் என அனைத்தும் கலந்த கலவையாக இந்தபடம் இருக்கும்.
* அடுத்து என்ன கைவசம் இருக்கு?
அடுத்து 'சிகை'ங்கிற படத்துலநடிக்கிறேன். ஒருத்தரோட தோற்றத்தை முழுமைப்படுத்துவதில் சிகைக்கும் முக்கிய பங்குண்டு என்பதை சொல்லக்கூடிய படம் தான் சிகை.
* படத்துல உங்களோட கதாபாத்திரம் என்ன?
பெண் வேடத்தை விரும்பி நடிச்சிருக்கேன்.
* யாரோட கதையில நடிக்க ஆசை?
மணிரத்னத்தோட லவ் ஸ்டோரி பண்ண காத்துக்கிட்டுஇருக்கேன்.
* ஒரேசமயத்தில் பாலா, மணிரத்னம்அழைப்பு வந்தால்?
பாலாவோட படத்துலநடிக்கும்போது நாம வேற மாதிரியான உலகத்தில இருப்போம். அதனால யாராவது ஒருத்தரோடதான் படம் பண்ணமுடியும். முதல்ல பாலா, பிறகுமணி சார்.
* உங்களின் முதல் விமர்சகன் யாரு?
என்னுடைய குறைகளை என்னைவிட வேறு யாரும்சிறப்பா சுட்டிக் காட்டமுடியாது. என்குறைகளை நானே கண்டறிந்து அடுத்தபடத்தில் திருத்திக் கொள்வேன்.
* பட வாய்ப்புகள் பற்றி யார்கிட்ட ஆலோசனை கேட்பீங்க?
என் அப்பா லோகு, காக்காமுட்டை இயக்குனர் மணிகண்டன்,நடிகர் கலையரசன் ஆகியோரிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுப்பேன்.
* உங்களோட நீண்ட நாள் ஆசை...
நயன்தாரா, பார்வதி மேனன்கூட ஜோடி சேரணும். சூப்பர்ஸ்டார் மாதிரி சூப்பரா டப்பிங் பேசணும் . தனுஷ்,விஜய்சேதுபதி போல யதார்த்த நடிப்பை கொடுக்கணும். தென்மாவட்டங்கள் சார்ந்த படம் பண்ணணும்
* 'கதிர்'சீரியஸான பையனா?
வீட்டுக்கு ஒரே பையன். அதனால அப்பா அம்மா ரெண்டுபேருக்கும் நான்தான் செல்லம். 'நாட்டிபாய்'ன்னு காலேஜில் பெயர் வாங்கினவன். நான் சீரியஸானஆள் இல்ல...
* ரசிகர்களுக்கு ஒரு பஞ்ச் ப்ளீஸ்...
முழுவதுமாக நம்பி சினிமாவிற்கு வந்தால், அது ஒருபோதும் உங்களை கைவிடாது.
அவரை வாழ்த்த:- kathirlkvgmail.com
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement