Advertisement

சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி:கருணாநிதி கண்டனம்

சென்னை:'சமஸ்கிருதத்தை திணிக்க, மத்திய அரசு மீண்டும் முயற்சிக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது நேற்றைய அறிக்கை:

விஜயவாடாவில் உள்ள தனியார் கல்லுாரி விழா ஒன்றில் பேசிய, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 'பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிப்பதற்காக, வேதங்களுக்கு என, 'வேதிக் போர்டு' என்ற தனிப் பிரிவு,
வரும், 16ல் துவக்கப்படும்.

'நம் கலாசாரம் என்பது, வேதங்களில் ஊறியுள்ளது. வேதங்களைப் பயிலாமல், கலாசாரத்தை நாம் முன்னிறுத்த முடியாது. ஆகவே, மத்திய அரசுப் பள்ளிகளில், இந்த ஆண்டு முதல், வேதபாடங்கள் பயில, சிறப்பு வேத பாடப் போதனைப் பிரிவு (வேதிக் போர்டு) ஒன்று உருவாக்கப்படும். இந்த வேத பாடப் போதனைப் பிரிவுக்கு வேதாஞ்சலி என்ற பெயர் வைக்கப்படும்' என, தெரிவித்து இருக்கிறார்.

பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், மதங்களைக் கொண்ட மக்கள் வாழும் நம் நாட்டில், அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளும் சமமாகக்கருதப்பட வேண்டும்; அனைத்து மொழிகளுக்கும் சமமான மதிப்பு வழங்க வேண்டும். அப்போது தான், நாட்டின் கூட்டாட்சி வலுப்பெற்று, அனைவருக்குமான குடியரசு என்பது உறுதி பெறும்.

தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளையும்,
அதாவது, அரசியல் சட்டத்தின், ௮வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள, 22 மொழிகளையும், மத்தியில் ஆட்சி மொழிகளாக அறிவிக்க வேண்டும் என்பதை அலட்சியப்படுத்தி வரும் மத்திய அரசு, இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குவது தான் சம நீதியா?இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Advertisement
 

வாசகர் கருத்து (200)

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  தலைவர் கலைஞர் அவர்களுக்கு தாழ்மையுடன் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், ஹிந்தியை எல்லா மாநிலங்களிலும் கட்டாய ஆட்சிமொழி ஆக்கிய போது அதை தடுத்து நிறுத்தி வட நாட்டான் நம்மை அடிமைப்படுத்துவதில் இருந்து காத்தீர்கள். நன்றி. ஆனால் விரும்பி வடமொழியை வேலை நிமித்தம் கத்துக்கொள்ள விரும்புபவர்கள் கற்று கொள்ளட்டும். அதை தடை செய்ய வேண்டாம். ஆனால் சமஸ்கிருதமும் ஹிந்தியும் step sisters மொழிகள். இதை மத்திய அரசு நடைமுறைப்படுத்துவது படிக்கும் ஹிந்தி பிள்ளைகளுக்கு பளுவை மட்டும் குறைக்க செய்யுமே தவிர அறிவை வளர்க்க பயன் படப்போவதில்லை. மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக சமஸ்கிரிதம் சொல்லித்தருவது ஒரு ஏமாற்று வேலை. மூன்றாவது மொழியா ஏதாவது ஒரு ஸ்டேட் மொழியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் எல்லோருக்கும் சம முக்கியத்துவம் தந்ததாக இருக்கும். அதற்க்கு போராடுங்கள்.

 • vayalum vazhvum-saravanakumar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  சரி வேலூர் நமக்கு நாமே கூட்டத்தில் உருது மொழியை கொண்டுவருவோம் என ஸ்டாலின் சொன்னாரே அதுக்கு என்ன பதில் கொலைஞரே உனக்கு வோட்டு வேண்டும் என்றால் எப்படி வேண்டும் என்றாலும் பிச்சை எடுக்கலாம் அப்படிதானே, உண்மையிலயே நீங்க பெரியார் கொள்கையை கடைபிடிப்பவராக இருந்தால் இந்துக்கள் யாரும் எனக்கு வோட்டு போடவேணாம் என சொல்லும், இந்துக்கள் எல்லாரும் திமுகவை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லுங்கள்.............

 • Malayam Annamalai - Tirutani,இந்தியா

  மாணவர்களை சீரழித்த பெருமை இரண்டு திராவிட கட்சிகளையே சாரும்.இவர்கள் குழந்தைகள் மட்டும் பன்முக புலமை பெற்றவர்களாக விளங்க வேண்டும் மற்றவர்கள் முன்னேறுவதை பொறுக்க மாட்டார் .இவர்கடவுள் இல்லை என்று இந்துக்களை மட்டும் மனம் நோகடிப்பார். கிருத்துவர்கள் முஸ்லீம்கள் பண்டிகைகளில் மட்டும் கலந்துகொள்வார்,மொழிகளை கற்றுக்கொள்ளும் உரிமை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் உரிமை இல்லையா?இதை பற்றி இவர் கூறித்தான் மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா? இது மற்றவர்கள்க சுதந்திரத்தில் தலை இடுவதாகாதா?மக்களை சிந்திக்க விடுங்கள்.அனைவரின் மனதை வெற்றி கொள்ளப்பாருங்கள்.

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  தமிழன் சமஸ்க்ரிதம் படித்தால் ஆரிய படையெடுப்பு ஆரிய திராவிடம் பிரிவினை அனைத்தும் கட்டுக்கதை ஆங்கிலேயர்கள் பரப்பிய பொய்யே என்று விளங்கி விடும். ஆரியம் திராவிடம் என்பது இன வேறுபாடு இல்லை வெறும் பூகோள வடக்கு, தெற்கு மட்டுமே என்பது புரிந்து விடும். இவர்கள் நடத்தும் திராவிட அரசியலின் அடிப்படைக்கே ஆப்பு வந்து விடும். இவர்கள் சமஸ்க்ரிதம் எதிர்ப்பதன் முக்கிய நோக்கம் அதுவே.

 • Arun Ramakani - chennai,இந்தியா

  கருணா நீதி இரண்டும் சமஸ்க்ரிதம் . உதய சூரியனும் இரண்டும் சமஸ்க்ரிதம்

 • SRIVIRAJA - SRVILLIPUTTUR,இந்தியா

  1965 ல சத்தியமில்ல (சாமி) என்ற கூட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டம் பண்ணி இளைஞர் சமுதயத்தின் எதிர்காலத்தை கெடுத்தாங்க இவரு குடும்பத்துல எத்தனை பேருக்கு ஹிந்தி தெரியாது .. எல்லாபய புள்ளைக்கும் தெரியும் ஆனா மக்கள் மட்டும் படிக்ககூடதுன்னு சொல்லுவாங்க .. .. அந்த காலத்துல தமிழ் மன்னவர்கள் அரபி படிச்சி அங்கு வர்த்தகம் செஞ்ச்சிருக்காங்க அடுத்த மொழி படிச்சாதான் அந்த நாட்டுல தொழில் வர்த்தகம் செய்து தமிழ் நாட்டுக்கு வளம் கொண்டு வரலாம் - ஆனா இந்த கழக கூட்டங்கள் அதை தடுக்குனும்ன்னு கங்கணம் கட்டி கெடுகிறாங்க .. கேவலம்

 • rajaram avadhani - Tiruchy,இந்தியா

  என்ன செய்யறது? எலக்ஷன்ல தோத்தாச்சு. ஆட்சிய புடிக்க முடியல. ஆனா, தான் இருக்கோம்னு காட்டிக்கனும் இல்ல? எதையாவது சொல்லி தன்னோட போட்டோ தினமும் செய்தி தாளில் வரும்படி செய்யணும். அதான். முதலில், தமிழுக்கு உருப்படியா என்ன செய்தீங்கனு பட்டியல் போடுங்க. தமிழ்நாடுன்னு பேரு வெக்க சொல்லி போராடுனவரு சங்கரலிங்கம் என்ற பெரியவர். யாருக்காவது தெரியுமா? இவங்க கட்சியில இருக்கிறவனுங்களுக்கு தமிழில் ல, ழ,ள ஒழுங்கா உச்சரிக்க தெரியுமா. தெலுங்கனுடன் பேசி பாருங்கள். சாதாரணமாக பேசும் போது கூட ஒருமை பன்மைக்கு, உயர்திணை அக்ரினைக்கு சரியான முறையில் பேசுவான். "முது வந்திருக்கு", "லட்சுமி போயிருச்சு" என்றெல்லாம் பேச மாட்டான். ஒழுங்கா தமிழே தெரியல, சம்ஸ்க்ருதம் பத்தி பேச வந்துட்டாங்க. அய்யம்பெருமாள் கோனார் என்றொரு தமிழறிஞர் திருச்சியில் பேராசிரியராக இருந்தார். அவர், பத்தாம் வகுப்பு முதல், முதுகலை தமிழ் பட்ட படிப்பு வரையில் உண்டான அனைத்து பாடங்களுக்கும், உரைநடை, செய்யுள், மற்றும் இலக்கியங்களுக்கு மாணவர் நலம் கருதி, அற்புதமான விளக்க நூல்களை வெளியிட்டார். அதுபோல ஒரு தொண்டு தமிழுக்கு செய்ததாக இவர்கள் காட்டட்டும் பார்க்கலாம். உருது அரபிக் பற்றி பேசினால் சங்கு அறுத்துடுவான். எந்த மொழி படித்தாலும் அது சம்மதம். சம்ஸ்க்ருதம், பார்பான் மொழி, அதானே? உங்களுக்கென்னவோ ஆகாதது மாதிரி அதைப்பற்றி ஒரு எழவும் தெரியாது. அப்புறம் என்ன ..கூப்பாடு?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  மும்மொழிக் கொள்கை (தாய் மொழி, ஆங்கிலம், தேசிய மொழி அல்லது அண்டை மாநிலத்து மொழி - ஆகிய மூன்றும் கட்டாயமாக்கப்படவேண்டும்... இது போன்ற கேவலங்களை நாடுகடத்த வேண்டும்...

 • காரியவாதி - Salem,இந்தியா

  யாராவது கொசு மருந்து இருந்தால் கொண்டு வாங்க பா. கொசு தொல்லை தாங்க முடியலை.

 • swega - Dindigul,இந்தியா

  Sanskrit does not have own alphabet. It needs to be written through the alphabets of other languages. I doubt whether Tamil Language suits for it

 • M.Guna Sekaran - Madurai,இந்தியா

  ஏற்கனவே ஹிந்தி ஓழிப்பு போராட்டம் பண்ணி தமிழனை தமிழ் நாட்டை விட்டு வெளியே போக முடியாமை செய்தது , ஏன் கோவில்களில் ஆனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கூறும் இவர் 'சமஸ்கிருதத்தை மட்டும் ஏன் எதிர்கிறார் , ஹிந்துகள் அனைவரும் விரும்பினால் விருப்ப பாடமாய் எடுத்து படிக்கட்டுமே அனைத்து சாதிகளும் மிருகமாக கலப்பு திருமணம் செய்து நாட்டை அழித்து விட்டீர்

 • antony raj - tirunelveli,இந்தியா

  முதலில் மாறனிடம் சொல்லி சன் டைரக்டில் தமிழ் மொழியை மட்டும் வைக்கச்சொல்லும்.

 • g k - chennai

  பாவம் வயதானாலே ஏதேனும் தொணப்பிக் கொண்டுதான் இருப்பார்கள் இதற்க்கு ஏன் இத்தனை பேர் பதிலுக்கு வாதம் செய்கிறீர்கள்

 • jagan - Chennai,இந்தியா

  இவர் வீட்டில் ஹிந்தி படிக்கிறார்களே என்று பலரும் கேட்கிறார்கள்...பதில் - "நன் சொல்வதை செய் ..நான் செய்வதை செய்யாதே" அப்பிடின்னு இவாளோட குரு நாயக்கர்வாள் சொல்லிருக்கா....

 • antony raj - tirunelveli,இந்தியா

  இவர் ஸ்டாலினை வளர விடமாட்டார் போல தெரிகின்றது. சமஸ்கிருதத்தை படித்தால் பிராமணர்களை பற்றியும் அவர்கள் ஓதும் மந்திரங்களில் உள்ள தப்புகளை பற்றியும் தெரிய வரும். பொதுவாக எல்லாம் வெட்ட வெளிச்சமாகும். எல்லாரும் ஓதக்கூடிய தன்மையும் ஓதும் போது கூடச்சேர்ந்து ஓதக்கூடிய தன்மையும் எல்லோருக்கும் கிடைக்கும். எல்லோர்க்கும் பொது சொத்தாக மாறும். நல்லது நடக்கட்டும்.

 • M Radhakrishnan - Bangalore,இந்தியா

  உங்க பேர் மட்டும் சமஸ்க்ருதத்துலே இருக்கலாமா ? கருணா என்பதே சமஸ்க்ரிதம்தான் . அதை மாற்றவும்.. பேரை மாத்திட்டு அறிக்கை விடவும்

 • Pandian - Boston,யூ.எஸ்.ஏ

  அய்யா இந்த காலத்துக்கு உங்க பருப்பு வேகாது . பெற்றவர்களுக்கு தெரியும் குழந்தைகளுக்கு என்ன படிக்க வேண்டும் , உங்க பிள்ளைகள் அழகிரி முத்து போல வேண்டாம்

 • சூத்திரன் - Madurai,இந்தியா

  சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழர் நூலின் கலாசார நாயகன் மாமுனி மாயன் (ராவணன் மாமா, மண்டோதரி அப்பா) சம்ஸ்கிருத வரலாற்று காப்பியங்களில் என்ன பெயர் அவர்களுக்கு என்று தமிழ் நாட்டில் நிறைய பேருக்கு தெரியாதோ?

 • சூத்திரன் - Madurai,இந்தியா

  பக்கத்து வீட்டுகாரர் கலரா இருந்தா குழந்தையும் கலரா பிறக்கும், அதற்காக நம் வீட்டுக்குள் விட முடியுமா?

 • Krishnan - Chennai,இந்தியா

  யாருப்பா அது இந்த வயசுல அவர சம்ஸ்கிருத புக்க குடுத்து படி படின்னு தொல்ல பண்றது

 • சூத்திரன் - Madurai,இந்தியா

  என் வீட்டில் எனது ராஜாங்கம் நடப்பதே பெருமை, காசு கிடைக்கிறது என்பதற்காக அடுத்தவரையா என் வீட்டில் ஆள விட முடியும்?

 • சூத்திரன் - Madurai,இந்தியா

  கருணா தவறானவராக இருக்கலாம், ஆனால் இந்த கருத்தில் உண்மை இருக்கிறது... வெள்ளையனுக்கு முன்பு ஹிந்திக்கும் தமிழ் நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? பல்லயிராம் ஆண்டுகள் நம் முன்னோர்கள் கட்டி காப்பாற்றிய தமிழ் பாரம்பரியத்தை விட்டு கொடுக்க இப்போது சில காவி டவுசர்கள் அழிக்க நினைக்கிறார்கள்.. என் மனைவியை நான் நேசிப்பதே நலம், பக்கத்துக்கு வீடு காரார் மனைவி நன்றாக இருக்கிறார் அதனால் அவரை நேசிப்பதில் தவிறில்லை என்பது போல் உள்ளது, ஹிந்தியும் சமஸ்கிருதத்தையும் நேசிக்க சொல்வது...

 • SINGA RAJA - MADURAI,இந்தியா

  இனிவரும் காலங்களில், தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தை அவசியம் கற்பிக்க வேண்டும். நாம், மொழிகளின் ஆளுமையைக் கடந்துவிட்டோம். தற்போது விஷய ஞான அடிப்படையில் நமது தேசத்தின் மற்றுமொரு முக்கிய மொழியைக் கற்றுக்கொள்வதால், நமது பண்டைய கலாச்சாரங்களை நாம் எளிதில் அறிந்துகொள்ள முடியும். இந்திய தேசத்தின் ஒட்டமொத்த தனித்துவத்தை நாம் உலகிற்கு எடுத்தியம்புகின்ற வேலை தற்போது வந்துவிட்டது. ஆகவே, மொழி குறித்தான அச்சங்களை அரசியல் தலைவர்கள் இனியும் மக்களிடையே பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இந்தியாவின் தலைச்சிறந்த மொழிகளுள் ஒன்றான வேத கால மொழியை, இந்தியர்கள் அனைவரும் கற்பதில் பெருமிதம் கொள்வோம்.

 • Arunachalam Des - tirupur,இந்தியா

  ஆரம்பிச்சிடறாருஅப்ப germen மொழி கூட கத்துக்கலாம் ஆனா சமஸ்கிருதம்,இந்தி படிக்ககூடது ,,,அட அட என்ன ஒரு மொழி வெறி.....மொழி படிப்பு அவரவர் விருப்பம்.........தலைவரே இது 1960-70 இல்ல 2016..........

 • karan - bengaluru,இந்தியா

  இன்றைக்கு தமிழ் நட்டு மாணவர் சமுதாயத்தின் எதிர்கலதியே அழித்தவர் கருணாநிதி.அவருக்கு" எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பதறிவு " என்ற குரலுக்கு பதில் " மற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று கூறிய தர்ம சீலர் இவர்.இவருக்கு உண்மை பேச தெரியாது.இன்றைக்கு அமெரிக்க வின் வெளி கழகம் நாசா தனது ஆராய்ச்சிக்கு சமஸ்க்ரித்த மொழியி உபாயோகபடுதுகிறது.அனால் தனக்கு தெர்யாது,புரியாது என்ற காரணத்திற்காக இளைஞர் சமுதயத்தின் மேலே பொறுப்பில்லாத முறைஎல நஞ்சை பாய்ச்ச்ஹுகிறார்.இவரை வரும் கல்லது சமுதயம் மன்னிக்காது

 • Gopal Selvam - New Delhi,இந்தியா

  திராவிட கட்சிகள் ஆரம்ப காலகட்டங்களில் ஹிந்தி ஒழிக என கோசம் இட்டபோது அது தமிழக மக்களுக்கு இன்பமாக இருந்தது. காலங்கள் மாறிவிட்டன. இதை திராவிட கட்சிகள் உணர்ந்து செயல்பட வேண்டும். மொழி என்பது ஒரு கல்வி, அரசியல் கட்சி அல்ல. புது மொழி விரும்பாதவர்கள் படிக்க வேண்டாம். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இந்தி, சமஸ்கிரதம் கற்பிக்க படுவதை திராவிட கட்சி தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.

 • kumar - chennai,இந்தியா

  நாம எல்லாம் ஒரு முடிவுக்கு சீக்கிரம் வரவேண்டும், ஆம் இந்த மனிதரை பேசாமல் தடுப்பதற்கு. பேசி பேசியே தமிழ்நாட்டை பின்னோக்கி இழுக்கின்றார். சுமார் 60-70 களில் ஹிந்தி படிக்காமல் இருந்ததற்க்கு எவ்வளவு கஷ்டம் பட்டோம் தெரியுமா

 • Visu Iyer - chennai,இந்தியா

  நாளைக்கு என்ன சொல்ல போறீங்க... இன்னமும் எத்தனை நாள் இப்படி சொல்ல .போறீங்க ...

 • narayanan iyer - chennai,இந்தியா

  உங்க வீட்டிலே மர்ற்றவர்கள் சாமி கும்பிடுவதைபற்றி கேட்டால் அது அவர்கள் உரிமை / விருப்பம் என்று சொல்கிறீர்கள் . அது மாதிரி வேறு மொழியை கற்பதும் அவரவர் விருப்பம் .இதில் உமக்கு என்ன வந்தது ? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த திருவள்ளுவர் திருக்குறள் எழுதவில்லையா.அன்றில் இருந்து தமிழ் இருந்துகொண்டுதானே இருக்கிறது . தமிழ் நீர் மறைந்த பின்பும் வளரும் . எனவே நா காக்க .

 • Vignesh - Bournemouth,யுனைடெட் கிங்டம்

  என்ன வேடிக்கை மற்ற மொழியைக் கற்றாலே தப்பு என்று சொல்லி ஊரை ஏமாத்தியவரே போதும் மொழி வளர்ப்பது என்பது பிற மொழியை இழிவு செய்வதினால் வராது. பழங்கால பொதுமொழியே சமஸ்க்ரிதம். அது இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா என்ற உணர்வு வந்திருக்காது. மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து அதற்கு அழகு சேர்த்துள்ளனர் நம் பண்டையோர். அவ்வளவு பொக்கிஷங்களைக் கொண்ட மொழி. தமிழ் வளர்க்க வேண்டும் என்று பிற மொழி கற்காதே என்பது முட்டாள்தனம். அப்படியானால் உங்கள் பேரங்களை ஆங்கிலம் படிக்க சொல்லாதீர். சமஸ்க்ரிதமாவது இந்திய மொழி. ஆங்கிலம்?

 • muthusamy - Coimbatore

  உங்களை எவ்வளவு தான் கழுவி கழுவி ஊத்துனாலும், திருந்த மாட்டீங்களா பெருசு.....

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  94 வயசிலே சமஸ்க்ருதம் கற்றுக்கொள்வது கடினம் தான், அதற்குத்தான் இந்த அலப்பறை? வாய் பொத்தி உமது வேலையைப்பாரும். இது குழந்தைகளுக்காக, உமக்காக அல்ல. குழந்தைகள் பல மொழி, பல விஷயங்கள் கற்றுக்கொண்டு அறிவுக்களஞ்சியாமாக திகழ வேண்டும்.

 • dravidan - coimbatore,இந்தியா

  தமிழ் எழுத பேச தெரிந்த பார்பன துரோகிகள் இங்கு தொடர்ந்து வடமொழி பிரசாரம் செய்கிறார்கள். தினமலர் கூட ஹிந்தி காரன் அடிமை தான்...ஏன் ஹிந்தி காரன் எல்லாம் தமிழ் படிக்க சொல்லுங்கள். தமிழ் நாடு வளர்ந்ததால் தான் ஹிந்தி காரன் இங்க வந்து லட்ச கணக்குல பஞ்சம் பிழைக்கிறான்

 • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

  இந்த மாதிரி தெனம் ஏதாவது சவுண்ட் கொடுக்கலனா, ஸ்டாலின் இவர தூக்கி வெளியில போட்டுடுவாருன்னு அரண்டு போய் இருக்குது கெழம்.

 • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

  ஆரம்பிச்சுடுச்சி. கிழத்தின் இன்றைய புலம்பல்....தெனம் தெனம் இந்த ரோதனை.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  இவரின் வாரிசுகளின் படத்தில் தமிழ் நடிகைகளா நடிக்குது. முதலில் அதை நிற்பாட்டும்.

 • T.Palani - Panruti,இந்தியா

  பிராமண எதிர்ப்பு சமஸ்கிருத எதிர்ப்பாகியிருக்கிறது .... ஒரு வேளை சமஸ்கிருதமும் இந்தியும் திராவிட மொழிகளாக இருந்தால் கலைஞர் என்ன சொல்வார்? சமஸ்கிருதம் சொல்லுவது மனதை சுத்திகரிக்கிறது ...அந்த சுத்திகரிப்பு மாணவர்களது கல்விக்கும் உதவும் என்றால் சமஸ்கிருதம் வரட்டுமே...ஆனால் அதனை மதிப்பெண் ஸ்கோர் செய்வதற்கான பட்டியலில் சேர்க்கக் கூடாது ....தனி பாடமாக வைத்து இசை சொல்லிக் கொடுப்பது போல ...இசை வகுப்பை போல எடுக்க வேண்டும்..அப்போதுதான் அதற்குண்டான மதிப்பு குறையாமலிருக்கும் ...எக்காரணம் கொண்டும் இந்த மொழியை மட்டும் மார்க் வாங்கும் பாடங்களில் ஒன்றாக ஆக்கிவிடக் கூடாது...மாணவர்கள் பிறகு இதையும் டென்ஷனோடு அணுக ஆரம்பித்து விடுவார்கள்...எல்லோரும் இந்த பாஷையை அறிந்து கொண்டால் பிராமணப் பயல்களின் கொட்டமும் ..அவர்களது மமதையும்..அகம்பாவமும் ஒழிந்துவிடும்...தனக்குத்தான் இந்த பாஷை சொந்தம் என்கிற அவர்களது இறுமாப்பு சிறிது ஆட்டம் காணும்...

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  உலகின் மிகப்பெரிய ஜனநாயக இந்தியாவில் யாரும் எதையும் கட்டாயப்படுத்த திணிக்க முடியாது. கேரளா, ஆந்திரம், கர்நாடகத்தில் அவர்கள் மொழி என்ன அழிந்தா விட்டது. இவரின் இந்தி எதிர்ப்பு அரசியலால் மூன்று தலைமுறையாக பொருளாதார, வியாபார, சுற்றுலா, வேலை காரணங்களுக்காக தமிழகம் விட்டுவெளியே செல்ல நினைப்பவர்கள் மிகவும் கஷ்டப்படும் நிலையில் உள்ளோம்.

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  22 மொழிகளில் சமஸ்கிரிதம் தான் உயர்ந்த மொழி என்று கலைஞர் எதிர்பாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள் ./ பிறகென்ன தமிழன்னை ...தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு மூச்சு தமிழ் என்று சொல்லுறீங்க ..ஹிந்தி கற்றுக்கொள்ள cbse இல் இருக்கு .. எங்கே திமுக போராட்டம் நடத்துது ? அறியாமை தமிழ் மக்கள்.

 • A. Sivakumar. - Chennai,இந்தியா

  சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தி தெரியாத நீ ஒரு இந்தியன் அல்ல என்று என்னைப் பார்த்து ஒரு வடக்கத்திய நண்பர் கடுப்பாகச் சொன்னார். நானும் பதிலுக்கு, தமிழ் தெரியாத நீங்களும் ஒரு இந்தியர் அல்ல என்று கடுப்பாகச் சொன்னேன். வீரமாகப் பேசினதாக நினைத்துக்கொண்டாலும், தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டி வெளிமாநிலத்திலோ அல்லது வெளிநாட்டிலோ வேலை செய்ய நேரும்போது, இந்தி தெரியாமல் சீரழியும்போதுதான் தெரிகிறது, தாய்மொழியைத் தாண்டிய வேறு ஒரு இந்திய மொழியின் அருமை. பொதுவாகக், கருமை நிறத்தில் நம்ம மக்கள் பெரும்பான்மையாக இருக்கும்போது, ஒரு சில பயபுள்ளைக எப்படியோ சிவப்பாகப் பிறந்து அழிச்சாட்டியம் பண்ற மாதிரி, தென்னிந்தியாவிலிருந்து வந்து, அரைகுறையா இந்தி தெரிந்த, ஓட்டை உடைசல் ரேஞ்சில் இந்தி பேசும் ஒரு சில சவுத் இந்தியப் பயபுள்ளைக பண்ற அழிச்சாட்டியம், ஒழுங்கா இந்தி தெரிந்தவன் பண்றதை விட அதிகம். இந்த கொசுத் தொல்லையை அனுபவிச்சவுங்களுக்குத்தான் புரியும் :-)

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  வர, வர கட்டு உடுற அறிக்கை, பேச்செல்லாம் பார்த்தா புரூட் லாங்குவேஜ் திகார்-ல நிரந்தரமா, முழங்காலை மடிச்சு உட்கார்ந்துக்கிட்டு தலையை அதில் புதைச்சுக்கிட்டு காலமெல்லாம் கண்ணீர் உடப் போறது நூறு சதம் சாத்தியம் போலிருக்கே

 • S Rama(samy)murthy - karaikudi,இந்தியா

  ஜனாப் கருணா , அரபி ,உருது கற்பிக்கப்படும் என்றால் பூரிப்பு அடைவார் .. ஹிந்துக்களுக்கு சற்று சொரணை குறைவு, சுபராம காரைக்குடி

 • Vaidhyanathan Sankar - chennai,இந்தியா

  கிடைத்த அவலினை மெல்லாமல் விட்டுவிடுவோமா? எமக்கு தொழில் அரசியல்.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  இவர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் செய்த போதே - நான் (நாங்கள்) கும்பகோணத்தில் - இங்கிலீஷ், தமிழ் மற்றும் சமஸ்கிருதம் பயின்றோம். இப்போது புரிகிறது (80 வயதில்) அது எவ்வளவு நல்லதாகி விட்டது என்று. எனக்கு தமிழ் நாட்டிலும் வேலை கிடைத்தது, பீகார், மும்பையிலும் வேலை கிடைத்தது. வெளி நாடும் சென்று வேலை செய்து வந்துள்ளேன். தமிழன் ரத்தத்தில் தமிழ் ஊறி உள்ளது எங்கிருந்தாலும் தாய் மொழியான தமிழை மறக்கமாட்டான். எங்கிருந்தாலும் குழந்தைகளும் தமிழ் வீட்டில் பேசத்தான் செய்வார்கள். மாற்ற மொழிகள் கற்பது ஒரு அவசியத்துக்காக. தமிழ், தமிழ் மட்டுமே என்றிருந்தால் கிணற்று தவளை போல் தான் எப்போதுதான் குளம், குட்டைகள், கடல், பார்ப்பது. இதற்கு பெயர்தான் ஹிப்போக்ரேசி - தனக்கு ஒரு சட்டம் பிறருக்கு போதனை.

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  அட... நம்ம தலிவர் இன்னும் இருக்காரா? யாரும் சொல்லவே இல்ல ??

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  சண்முக சுந்தரம் தெலுங்கன் மீது உனக்கு ஏன் காண்டு, அப்போ அணைத்து மாநிலத்தில் இருந்து தமிழனை கூப்பிட்டு வருவாயா, தமிழனை மும்பை பெங்களூரு இன்னும் பிரச்சனைக்குரிய இடத்தில் இருந்து கொண்டுவருவாயா. சீமானுக்கு கிடைத்த ஓட்டை பார்த்தாயா. தெலுங்கன் அவன் வேலைய பார்க்கிறான் தேவை இல்லாமல் சொரியதே

 • boogie - pattur

  தலிவருக்கு அறிக்கை விட தடை போட்டா செத்தே போய்டுவார் போல

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  இந்த அரை வேக்கட்டால் நாம் அடைந்த நஷ்டத்திற்கு அளவே இல்லை. உலகே அழிந்தாலும் தமிழ் அழிய வாய்ப்பே இல்லை, தமிழ் பிரமாண்டமான மொழி அதை ஒருகூட்டம் அழிந்து விட போகிறது நு சொல்லி சொல்லி கொள்ளை அடிச்சிக்கிட்டு இருக்கு. மத்திய அரசு சில வருடங்களுக்கு முன்னால் சி பி எஸ் இ பள்ளிகளை அணைத்து மாநிலத்திலும் இலவசமாக தொடங்கியது ஆனால் தமிழகத்தில் அனுமதிக்க வில்லை அதனால் இப்போதோ நாம் பிள்ளைகள் ஐ ஏ எஸ் போன்ற படிப்புகளை படிக்க திணறுகிறார்கள். இந்தியா முழுவதும் அந்த பள்ளி மாணகள் தான் திறன் வாய்ந்தவர்கள் என ஆய்வு சொல்கிறது. இது போன்ற நிறைய இழப்புகள் கட்டுமரத்தால்தான். இப்போ இதிலும் வாய் வச்சாச்சு உருப்பட்ட மாதிரிதான்

 • Tamilan - Chennai,இந்தியா

  எதையும் நீர் கூறினால் இனி எடுபடாது. எதிர் கட்சி தலைவரை பார்த்து அவரிடம் எதிர்க்க கூறுங்கள். அவர் ஒரு வேளை தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற ஏற்பாடு செய்வார். கட்டாய பாடமாக இல்லாமல் விருப்ப பாடமாக சேர்க்க ஒப்புக்கொள்வார்கள். நீர் வாய் திறந்தால் இனி அந்த விஷயத்திற்கு மரியாதை இருக்காது, தயவு செய்து ஸ்டாலினை பேச சொல்லுங்கள். தங்கள் மீதுள்ள வெறுப்பால் மக்கள் இன்று இந்தியை ஏற்றுக்கொண்டாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை.

 • CRL - Mutupet,இந்தியா

  இன்னும் நீங்கள் எல்லாம் திருந்த மாட்டிங்களா இப்படியே சொல்லி சொல்லி ஹிந்தி படிக்க முடியாம பண்ணிட்டீங்க. மக்களெல்லாம் முட்டளாவே வைக்கணும்ன்னு பாக்காதிங்க.

 • Shanu - Mumbai,இந்தியா

  கருணாநிதியின் கருத்தை அதிமுக கட்சியினரும் ஆமோதிக்க வேண்டும். இதை அலட்சிய படுத்தினால், நம் குழந்தைகள் பாதிக்க படுவார்கள். இதற்க்கு ஜெயலலிதாவும் உரிய முயற்சி எடுத்து சமஸ்கிருதத்தை துரத்தி அடிக்க வேண்டும்.

 • Mohan M R - Bangalore,இந்தியா

  Mr 95 year old, you can't live in this world if you know and learning only Tamil. Please go and visit other state, you can't live if you don't know other common language. Please keep quite and shut everything and quite. Jai Hind

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  மு.கருணாநிதி தான் தமிழ் எழுதிய ??? (தாக சொல்லிகொள்ளும்) நூல்களை சமஸ்கிரதத்தில் மொழி பெயர்க்க திணித்தார் மறுக்க சொல்லுங்கள் மு. கருணாநிதி ஒரு தீவிரவாத அரசியல்வாதி இவர் ஒரு சுயனலகார மோசடி ஆள். - எல்லா மொழிகளும் வேண்டும். ஏன் தாய் மொழி என்றும் இருக்கும் என் தாய் மொழி மட்டும் வேண்டும் என்று சொல்வது தவறு மு. கருணாநிதி - மாறன் என்ன தமிழா பேசுகிறார் இங்கிலிஷில் தானே பீட்டர் உற்றார் மு,கருணாநிதி குடும்பத்திற்கு ஒரு கொள்கை, ஏழை அப்பாவி தமிழ் மக்களுக்கும், நிலத்திலும் கூலி வேலை செய்தும் தமிழ் மக்களுக்கு ஒரு கொள்கை தமிழ் நாட்டின் உச்சகாட்ட மோசடி ஆள் மு. கருணாநிதி எதிலும் அவர் செய்வது தன் சுயநல குடும்ப சொத்து குவிப்பு, பதவி, பணம், அயல்நாடு சுக போகம் இது தான் உஷார் தமிழ் மக்களே 98 சீட்டு இதோடு போகட்டும் இன்னும் வேண்டாம் மு. கருணாநிதி இனி நம் நல்ல தமிழ் நாட்டில்

 • Kenmaikko - dharmapuri

  ram Krishna இன்னும் நாம் முட்டாள் என்கிறீரா

 • Kenmaikko - dharmapuri

  சுந்தர் தமிழ் படித்தா வேலை உண்டு திறமை இருக்கவேண்டும் இரண்டாம் ¦மொழீ ஆங்கிலம் தெரிந்தால் உலகில் எங்கும் வேலை கிடைக்கும்

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  அரசியல் தீவிரவாதி மு. கருணாநிதி திணிப்பு என்று பேச அருகதை இல்லை கல்யாண வீட்டிலும் இழவு வீட்டிலும் தானே காத நாயகன் மு. கருணாநிதி தேர்தல் ஒட்டு தனக்கே, வெற்றி தனக்கே, விஜயகாந்த் கூட்டணி தனோடு, என்று எல்லாம் திணிக்கும் மு. கருணாநிதி பேச கூடாது. மக்களே தமிழ் நல்ல மக்களே - எல்லா பாஷைகளையும் கற்றுகொள்ளுங்கள், எவ்வவளவு பாஷைகள் முடியுமே படியுங்கள் மு. கருணாநிதி ஒரு மோசடி அரசியல் வாதி மட்டும் தான் இவ்வளவு காலமும் ஏழை தமிழ் மக்களை, திராவிடம் என்று மோசடி பேசும் மு. கருணாநிதி தமிழர்களை சீரழித்து கொண்டு தான் இருந்தார். தெலுங்கர், மலையாளி, கர்நாடகக பாண்டிச்சேரி ஹிந்தி தெரியும் தமிழ் மக்கள் மட்டும் தான் இந்தியாவில் அலைகழிக்க படுவது. போதும் மக்களே இனி இந்த மோசடி மு. கருணாநிதி தமிழ் மக்களை ஏமாற்ற வழி வைக்காதீர்கள் மு. கருணாநிதியிடம் கேளுங்கள் உன் பேரன், உன் குடும்ப அயல்நாடு, ஹிந்தி, சொத்து சுகம் என்று ஏழை தமிழ் மக்கள் அப்பாவி தமிழ் மக்கள் என்ன மு. கருணாநிதியின் குடும்ப கொதடிமைகல்லா ?? தமிழ் மக்களே 98 சீட்டு கொடுத்து இன்னும் இந்த மோசடி மு. கருணாநிதியை வாழவைத்த நீங்கள் இதை எல்லாம் அனுபவிக்க தான் வேண்டும். அனால் நான் சொளிறேன் இனியும் இந்த தமிழ் மோசடி மு. கருணாநிதியை பேச விடாதீர்கள் சமஸ்கிரதம் என்ன ஹிந்தி, இங்கிலீஷ், பிரெஞ்சு, ஜெர்மனி என்று எல்லா பாஷைகளையும் படியுங்கள் எங்கேயும் அலைகழிக்கபடாமல் வாழுங்கள நம் மண் மானம் உரிமை பெருமை விளங்க உலக அரங்கில் எழுந்து வெல்லுங்கள் ஆட்சி செய்யுங்கள் மு. கருணாநிதியை இனி பேச விடாதீர்கள் 100% மோசடி ஆள் இந்த மு. கருணாநிதி மொழி நம் உரிமை - நம் தாய் மொழி நம் மொழி, உலகமொழி நம் தேவையின் மொழி படியுங்கள் உலகெங்கும் போய் பெருமையோடு வாழுங்கள்

 • மோகன் - லண்டன்,யுனைடெட் கிங்டம்

  இவருக்கு என்னதான் கழுவி கழுவி ஊத்தினாலும் ரோசமே வராது.... இவருடைய ஒரு நாள் அறிக்கைக்கு யாருமே கருத்து சொல்லாம இவரை தவிர்க்கணும். எனக்கு என்னமோ இந்த மாதிரி கழுவி ஊத்தற கருத்துகளை ரசிக்க ஆரம்பிசுட்டார்னு தோணுது. அதுக்காகவே இவரும் பிரயத்தனப்பட்டு அறிக்கை விடறாரு.

 • Ananthathandavan - TRICHY,இந்தியா

  தினம் எதாவது அறிக்கை கொடுப்பது தான் இவருடைய வேலை

 • Ananthathandavan - TRICHY,இந்தியா

  தலைவருக்கு ஒரு சட்டம் மக்களூக்கு ஒரு சட்டம் அவருடைய பேர பிள்ளைகள் இந்தி படிக்கலாம் மத்தவுக சும்மா வேடிக்கை பாக்கனும்ன்னு நினைக்கிறாரு

 • Kanna - Chennai,இந்தியா

  மராத்தி, கன்னடா, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, அஸ்ஸாமி இந்த மொழியெல்லாம் அந்த அந்த மாநிலத்துல கொஞ்சம் கொஞ்சமா காணாம போயிக்கிட்டு இருக்கு... ஹைதராபாத் ல தெலுங்க காட்டிலும் ஹிந்தி தான் அதிகமான ஆட்கள் பேசுறாங்க.... இதுக்கு காரணம் ஹிந்தி சுலபமா உள்ள போனதுனால... நம்மாளுங்க மிலிடரி, ஆர்மில சேர்ந்து கத்துக்கிடலையா? அது மாதிரி தேவைபடும் போது அத கத்துக்கலாம், 1960 to 1975 காலத்துல ஹிந்தி பாட்டுதான் ரொம்ப விரும்பி மக்கள் கேட்டாங்க, ராஜா வந்ததுக்கபுறம் தான் தமிழ் பாட்ட விரும்பி கேட்டாங்க... ஏன்னா எளிமை தமிழ்ல பாட்டு இருந்துனால...இன்னக்கி தமிழ்க்குன்னு ஒரு தனி அந்தஸ்த்து இன்னமும் இருக்குதுன்னா அதுக்கு ஹிந்தி யோட சாயல் இல்லாதது நாலதான். மொழிய வச்சு ஒரு மாநிலம் வளராது, மாநிலம் தான் மொழிய வளர்க்கணும்... கட்டுமரம் மாதிரி மொழிய வச்சு குடும்பத்த வளக்கக்கூடாது...

 • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

  சம்ஸ்க்ருதம் படித்து கல்யாணம், கருமாதி செய்யலாம். வேறு ஒன்றும் முடியாது. வடக்கத்தியானை ஏதாவது ஒரு தென்னிந்திய மொழியை கட்டாயமாக பயில செய்ய வக்கற்ற காட்டுமிராண்டி மத்திய அரசு, ஹிந்தி தவிர மற்ற மொழிவழி தேசிய இன, பண்பாடுகளை சிதைப்பதில் மும்முரம் காட்டுகிறது. நல்லவேளை, 5 கணவர், 6000 பெண்டாட்டிகள் வைத்துகொள்வது ஹிந்து தர்மம் என்று உளறி கொட்டவில்லை. வடக்த்தியான்களை முடிந்தால், சாதி பெயர் பின்னொட்டை வைத்துகொள்வதை தவிர்க்க செய்யவும். பெயரை கேட்டு கொலை செய்வது வடக்கில் மிக அதிகம். மொழி /பண்பாட்டு திணிப்பை விட பல அதிக முக்கியமான முன்னேற்ற வேலைகள் உள்ளன என்பதை என்று உணரும் இந்த பஞ்சகச்சம், பைஜாமா குர்த்தாக்களின் பாண் பராக் மெல்லுபவர்களில் அரசு..

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  யாரப்பா அங்கே ? அந்த பழைய பிரச்னையை தூசி தட்டி கொண்டுவா, இன்னைக்கு நம்ம பெயர் பத்திரிகைகளில் வரவேண்டும். கதை வசனம், பாடல்கள் கேட்டு ஒரு தயாரிப்பாளரும் வரவில்லை. அறிவுரை கேட்க்க கட்சி தொண்டர் யாரும் இல்லை, கேள்வி பதில் எழுதினால் கண்டுகொள்ள ஆள் இல்லை. உள்கட்சி பிரச்சனை வேறு தலைவலியாய் இருக்கு, வாரிசு வீட்டுக்கு வருவதே இல்லை. பொழுது போக இந்த மொழி பிரச்னையை எடுத்துக் கொள்வோம். அப்படியாவது இந்த பத்திரிக்கைகாரர்கள் நம்ம பேச்ச வெளி விடுவார்களா பார்க்கலாம்.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  வேற வேலை இருந்தால் பார்க்கவும்... உமது எதிர்ப்பை சொல்லிட்டு... உமது குடும்பத்தை இந்தி படிக்க வைத்து....சமஸ்கிருதத்தை திணிக்க, மத்திய அரசு மீண்டும் முயற்சிக்கிறது' என புதுசா ஒரு புரளியை கிளப்பி நாளையே சமஸ்கிருதம் படிக்க உமது குடும்பத்தை அனுப்பினாலும் அனுப்புவீர்கள், நிறுத்தும் உமது புலம்பலை

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  வாழ்க்கை வளம் பெற எந்த மொழி வேண்டுமோ அந்த மொழி படிக்க தடை இருக்கக்கூடாது. ஆத்மாவும் மனமும் பக்தியும் வளம்பெற சமஸ்க்ரிதம் படிக்க வேண்டும்.

 • S. RAGHURAMAN - BENGALURU ,இந்தியா

  ராமானுஜர் இல் வேதங்களின் உயர்வை வெளிப்படுத்துவது ஒரு புறம். வேதங்களுக்கான வேதிக் போர்டு ஐ சமஸ்கிருத திணிப்பு என்று எதிர்ப்பது மறு புறம். இன்னுமா இவரை மக்கள் நம்புகிறார்கள் என்று இவர் நம்புகிறார்?

 • Soorya - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இதுவரையில் தமிழர்களின் வாழ்கையை நாசமாக்கியது போதும். நீங்க இருக்கப்போவது சிறிது காலமே, சாகும் காலத்திலாவாது தமிழ்மக்களை மற்ற இந்திய மாநில மக்களோடு சமமாக வாழவிடுங்க.

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  சமஸ்க்ரிதம் சொல்லி கொடுத்தால் திணிப்பு வேண்டாம் என்பீர்கள், சொல்லி கொடுக்கலேன்னா வர்ணம் ஆஸ்ரமம் பாப்பான் என்பீர்கள். திராவிட கொள்கை என சொல்லபடுவது என்றுமே நிலையாக இருந்தது இல்லை.

 • Kumar - Kuwait City,குவைத்

  இவருக்கு வேற வேலையே இல்ல, ஆட்சி அதிகாரத்திற்காக ஜாதி வெறி, மொழி வெறி, மத வெறி என்ற எந்த ஈன செயலையும் இவர் செய்வார்.

 • Kanal - Chennai,இந்தியா

  இந்தி எந்த ரூபத்தில் வந்தாலும் திமுக அதை எதிர்க்கும். தமிழ் இந்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குவது தான் சம நீதியா? திமுக சமுக நீதிக்கு என்றும் குரல் கொடுக்கும்

 • karunchilai - vallam,இந்தியா

  மருமகனும், மகளும், பேர, கொள்ளுப்பேரப் பிள்ளைகளின் ஹிந்தி வடமொழி அறிவை புலமையை சிலாகிப்பவர், குப்பனும் ஆண்டி சுப்பனும் தமிழ்த் தவிர பிற மொழிகள் கற்கக்கூடாது.

 • karunchilai - vallam,இந்தியா

  இவர்கள் குடும்பம் நடத்தும் பள்ளிகளில் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை.

 • karunchilai - vallam,இந்தியா

  அறிக்கை விட விஷயம் கிடைக்காவிட்டால் சமஸ்கிருதத் திணிப்பு என்பார்.

 • mv murugan - coimbatore,இந்தியா

  அதுவும் ஒரு மொழி தானே கிழவா,,,,,இந்துக்களின் வேத மொழியே சமஸ்க்கிருதம் :

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அவராவது சமஷ்கிருதத்தை படிக்க சொல்லுகிறார் உமது குடும்பமும் மாறன் குடும்பமும் சன் மற்றும் கலைஞர் நெட் வொர்க் மூலம் திணிக்கும் தினசரி இடைவிடாத டிவி தொடர் மற்றும் குத்து பாட்டு நிகழ்ச்சிகளும் எந்த அளவிற்கு சமுதாய அக்கறை யோடு திணிக்க படுகின்றன இதனால் சீரழிந்து வரும் குடும்பங்கள் பற்றி உனக்கு தெரியாதா

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  இந்த பீடை என்றைக்கு ஒழிகிறதோ அன்றைக்கு தான் தமிழகம் முன்னேறும் . மக்களை ஏமாற்ற மொழியை வைத்து போராட்டம் நடத்த பார்க்கிறார் / முதலில் பாலு ,ஜெகத்ரட்சகன் மது ஆலைகளை மூடி விட்டு இவர் மக்களை பற்றி சிந்திக்கட்டும். தினமும் இவர் மஞ்ச துண்டை தினமலரின் முதல் பக்கத்தில் பார்த்தாலே அடி வயிறு பற்றி எரிகிறது . வாயை திறந்து அறிக்கை விட்டாலே சாக்கடை நாற்றத்தை விட மிக கேவலமாக உள்ளது .

 • s mani - bhavani,இந்தியா

  திரு கருணாநிதி அவர்களே தங்கள் குடும்பம் ஹிந்தி முதலிய மொழிகளை கற்றால் அது தங்கள் குடும்ப அரசியலுக்கு உதவும் என்று தங்கள் குடும்பத்தினரை மறைமுகமாக படிக்க வைக்கிறீர்கள், ஆனால் எல்லோருக்கும் எல்லா மொழியும் தெரிய வேண்டும் என்று வேறு யாரேனும் சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் அண்ட் அறிக்கை விடுகிறீர்கள் படித்து விட்டு போகட்டும் என ஏன் பெருந்தன்மையா இருப்பதில்லை. மற்றவர்கள் கற்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை. அவர்கள் உங்கள் குடும்பத்தாருடன் போட்டிக்கு வந்துவிடுவார்கள் என்றா. பயப்படாதீர்கள் யாருக்கு அவசியம் என நினைப்பார்களோ அவர்களே படிப்பார்கள் கொஞ்சம் மக்கள் முன்னேற நினைப்பதை தடுக்காதீர்கள்,

 • kuppuswamykesavan - chennai,இந்தியா

  Pira மொழி படிக்கும் விசயத்தை , ஒரு மாணவனின் சுய உரிமை வாய்ப்புக்கு விட்டுவிடனும்.

 • Nagarajan S - Chennai,இந்தியா

  மத்திய அரசு பள்ளிகளில் தானே வேதிக் போர்டு அமைப்பதாக சொல்லி இருக்கிறார்.அதில் இவருக்கு எங்கே வலிக்கிறது

 • Nagarajan S - Chennai,இந்தியா

  தமிழக மக்களை இந்தி படிக்க கூடாது என்று சொல்லி, சொல்லி, இவரின் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள் இந்தி படிக்க வைத்தார் இப்போது சமஸ்கிருதத்தை மத்திய அரசு திணிக்கிறது என்கிறார் சொந்த கட்சியில் இவரின் பேச்சை யாரும் கேட்க மாட்டேன் என்று அவர்கள் போக்கில் செல்கிறார்கள். ஆட்சியையும், அதிகாரத்தையும் பெற முடிய வில்லை. அதனால் சும்மாவும் இருக்க முடிய வில்லை. தினசரி இவரின் பெயர் ஊடகங்களில், செய்தித்தாள்களில் வந்து கொண்டே இருக்க வேண்டும். அதனால் தினசரி மத்திய மாநில அரசுகளையும் அதன் செயல்களையும் வசைபாடிக்கொண்டே இருக்க வேண்டியது இவரின் தினசரி கடமைகளில் ஒன்றாகி விட்டது

 • sundar1570 - kumbakonam,சவுதி அரேபியா

  ஐயா கட்டுமரம் அவர்களே, தங்களின் பேச்சுத் திறமையையும் , தமிழ்புலமையையும் தலை வணங்குகிறேன். தங்களின் ஆக்ரோஷ இந்தி எதிர்ப்பு கூட்டங்களில் கலந்து கொண்டு, கல் எடுத்துக்கூட எறிந்திருக்கிறேன். அரசு வேலை கிடைக்கவில்லை, ( தேர்வாகியும் கூட, காரணம் அனைவருக்கும் தெரியும் ), தனியார் நிறுவனங்களிலும் வேலை இல்லை. ஏனெனில் அதிகமான நிறுவனங்கள் இல்லை. நான் உங்களின் தமிழ் கூக்குரலை, அறைகூவலை நன்றாக தெரிந்து கொண்டேன்.எப்பொழுது நான் தமிழகத்தை நீங்கள் குறிப்பிடும் திருட்டு ரயிலில் மெட்ராசை (இன்றைய சென்னை) தாண்டும் போது தான், தமிழ் ஒன்று மட்டுமே நமக்கு இவுலகின்றி எவ்வுலகிலும், கஞ்சி வூற்றும் என்று.. வுங்களின் தமிழ் கனவை, மற்ற மொழி எதிர்ப்பை கை விட்டு விடாதீர்கள். பலரும் பல மாநிலங்களுக்கு மற்றும் பல நாடுகளுக்கு செல்வதற்கும், தங்களின் மொழி எதிர்ப்பு மிகவும் பயனுள்ளவையாக இருக்கிறது. வுங்களை சார்ந்து இருக்கும் பல முன்னணி தலைவர்களும் இந்த கொள்கை பிடிப்பை, மனதில் ஆழமாக வேரூன்ற செய்து விடுங்கள். பல நாடுகளில், மாநிலங்களில் வுள்ள தமிழர்கள் அறிந்திருப்பார்கள்/வுணர்ந்து இருப்பார்கள்.நன்றி

 • Chidambaranathan Ramaiah - usilampatti,இந்தியா

  விடுங்கப்பா 5 வருடத்திற்கு ஆட்சி இல்லன்னு ஆயிடுச்சு பொழப்புக்கு வேற வழி? இருக்கவே இருக்கு தமிழ் அத வச்சுதான இனி பொழப்ப ஓட்டனும்

 • நந்து - Karur,இந்தியா

  அதெப்புடி, வக்பு வம்ச வழில வந்தவரு அதை எதிர்த்து கண்டன அறிக்கை விடுவாரு? அப்புறம் காஞ்சி குடிக்க - வாய் இருக்காதே

 • Rengarajan Veerasamy - chennai,இந்தியா

  திராவிடம் என்றால் நான்கு மொழி தெரியனும். தெலுங்கு, கன்னடம் மலையாளம் பேசுவர், தமிழ் பேசுகின்றனர். ஆனால் தமிழ்க்காரன் மற்ற மொழி பேசமுடியுமா? அதை சரி செய்யுங்கள்.கிருதம் பேச வந்துட்டாரு.

 • Ramesh Sundram - Muscat,ஓமன்

  திருட்டு ரயிலில் வந்த பொழுது ஒரு TTE வந்து இருந்தால் இவர் கையில் இருந்து தமிழகம் தப்பித்து இருக்கும்

 • subhashini - chennai,இந்தியா

  தளபதி மகள் செந்தாமரை ஹிந்தி கற்பிக்கும் சிபிஎஸ்இ...பள்ளி நடத்தினால் அது சமூக சேவை..ஏன் குடும்பத்தை எதிர்க்கும் தைரியம் இருந்தால் கட்டுமரம் அவரை இலவசமாக தமிழ் மீடியம் ஸ்கூல் நடத்த சொல்ல வேண்டியது தானே?.. சி பி எஸ் இ பள்ளியில் சம்ஸ்க்ருதமும் கற்பிக்கபடுவது அனைவருக்கும் தெரிந்ததே...ஸ்டாலி மகள் போன்று வீட்டு பிள்ளைகள் பேரன் பேத்திகள் ஆங்கில மீடியத்தில் படித்து ஹிந்தி ஆங்கிலம் சம்ஸ்க்ருதம் என்று பிளந்து கட்டினால் மிகவும் பெருமை கொள்ளும் இவருக்கு, ஊரார் வீட்டு பிள்ளைகள் உருபட்டால் மட்டும் பொறுக்காது. பிறத்தியார் வீட்டுக்கு மட்டும் இவர் உபதேசம் செய்வாராம்....இது என்ன நியாயம்? சாதாரண தமிழன் தமிழுடன் சேர்த்து ஹிந்தி சம்ஸ்க்ருதம் ஆங்கிலம் என்று பல மொழிகளை இளம் பருவத்திலேயே கற்று அதன் மூலம் இந்திய அளவில் உலக அளவில் முன்னேறும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தி கொடுத்தால் அது திணிப்பு .....அந்த ஏழை வீட்டு/ நடுத்தர வீட்டு பிள்ளைகள் மட்டும் தமிழுடன் சேர்த்து மற்ற மாநிலங்களை போல் பிற மொழிகளை கற்க வாய்ப்பு மறுக்கப்பட்டு தமிழ் தமிழ் என்று தமிழ் நாட்டில் மட்டும் உலா வரும் கிணற்று தவளைகளாகவே இருக்க வேண்டும்.அப்போது தானே இவர் அரசு செலவில் குடும்ப செம்மொழி மாநாடு நடத்தி தமிழை வைத்து வோட்டு வாங்க முயற்ச்சி முடியும் .என்ன கெட்ட எண்ணம் இது ?இன்றைய கால கட்டத்தில் தமிழுடன் சேர்த்து மற்ற மொழிகளை கற்றால் நல்லது தான் ஏற்படும் ...முதலில் கட்டுமரம் தளபதி மகள் குடும்பத்துக்கு அறிவுரை சொல்லி இப்போது நடத்தும் சிபிஎஸ்இ பள்ளியை மூடி விட்டு தமிழ் மீடியம் மட்டுமே இருக்கும் பள்ளியை நடத்த சொல்லட்டும். பிறகு இந்த விஷயம் பற்றி கருத்து சொல்லலாம் ..

 • Ram - ottawa,கனடா

  இந்த DMK வால் முடிந்த சாதனை 70% இடவொதுக்கிடு, பொது நுழைவு தேர்வை ரத்து செய்தது, தரமான பொது பிரிவு மாணவர்களை புறந்தள்ளி தமிழகத்தையே லஞ்சத்தின் பிடியில் வைத்தது, TASMAC கை முதலில் ஆரம்பித்தது.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  மீண்டும் இரயில், பேருந்து, பார்ப்பனர்களைக் கொளுத்த கட்சித் தொண்டர்களுக்கு ஆணையிடுவாரோ? பாவம் உங்கள் காலங்களில் செய்த இந்த அலங்கோலம் மீண்டும் நடைபெறவில்லை, அமைதியாக இருக்கும் இந்த நாட்டில் நீங்கள் இருப்பது மறந்த நிலையில் உங்களுக்கு இந்த மொழி மீண்டும் ஒரு வாய்ப்பு, கதி, கம்பு, சோடா பாட்டில் , சைக்கிள் செயின் இல்லாமல் இருந்த கலாசாரம் திருக்கோவில், பக்தர்கள் என பதம் பார்க்க வருவார்களோ இவரது வீரர்கள், பொறுத்திருந்து பார்ப்போம், வந்தே மாதரம்

 • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

  தலைவர் இந்தி திணிப்பை எதிர்போம் என்றால் ..தலைவர் குடும்பத்தினர் ஹிந்தி படிக்க ஆரம்பித்து விட்டனர் என்று அர்த்தம். இப்போது சம்ஸ்கிருத திணிப்பை எதிர்ப்போம் என்கிறார் ...எனவே கருணா குடுப்பதில் யாரோ சமஸ்கிருதம் படிக்க ஆரம்பித்து இருக்கிறார் என்று அர்த்தம் ...

 • SHANMUGASUNDARAM - Chennai

  கருணாநிதி குடும்பம் இஸ்லாம் மதத்திற்க்கு மாறி பல வருடங்கள் ஆகிறது. வேறு எப்படி பேச முடியும். நல்ல விஷயம் தமிழனுக்கு கிடைக்க கூடாது ன்னு நினைப்பது தெலுங்கன். தமிழர்களை தான் சொல்ல வேண்டும் மீண்டும் எதிர்கட்சி அந்தஸ்து கொடுத்திருக்கக்கூடாது. இவர்களை தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும். இதை பெரிய விஷயமாக இனி நினைக்க கூடாது

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  உருது அகாடெமிக்கு மான்யம் நியாயம். இஸ்லாமிய உலமாக்களுக்கு அரசு ஓய்வூதியம் நியாயம். வக்பு வாரியத்துக்கு மான்யம் நியாயம். ஹஜ் குழுக்களுக்கு மானியம் நியாயம். ஆனால் ஹிந்து அறநிலையத்துறைக்கு ஆலயங்கள் கப்பம் கட்டவேண்டும். அங்கு எந்த மொழியில் பூசை என்பதை அரசுதான முடிவு செய்யும். வெளிமாநிலத்தார் வந்தாலும் சமஸ்கிருத அர்ச்சனை செய்தால் அர்ச்சகர்கள் பழி வாங்கபடுவர். எனது பேரன் இந்திப் புலமை பெற்று மத்திய மந்திரியாகலாம். ஸ்டாலின் குடும்பத்தினர் இந்தியை பாட மொழியாக வைத்து பள்ளிக்கூடங்கள் நடத்தலாம். ஆனால் சமஸ்கிருதம் படித்தால் தீட்டு. நல்ல கொள்கைக் குன்று.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  திமுக இணையதளத் திலிருந்து //இஸ்லாமிய சமுதாயத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைப்படி தமிழகத்தில் உருது அகாடெமி 15 லட்ச (அரசு) ரூபாய் முதலீட்டுடன் அமைக்கப்பட்டுள்ளது// அதாவது 90% சொற்கள் அந்நிய அரபி பாரசீக மொழியிலிருந்து கடன் வாங்கியுள்ள ஒரு மொழிக்கு நீங்கள் இந்துக்களின் வரிப்பணத்தை அளிக்கலாம். அதன் உறுப்பினர்களாக 100% முஸ்லிம்களை மட்டுமே நியமிக்கலாம். மேலும் மேலும் நிதி அளிக்கலாம். ஆனால் முழுவதும் இந்திய மொழியான சம்ஸ்கிருத்திற்கு மத்திய உதவி கூடாது ? இது நல்ல நியாயமாக இருக்கிறதே. ஆமாம் ஒரு சந்தேகம் பயங்கரவாத தொடர்புடைய இஸ்லாமிய கட்சிகளோடு கூட்டு சேர்ந்தீர்கள். சீட்டுக்களையும் வாரி வழங்கினீர்கள். ஆனால் அவ்வளவு பேரும் ஏன் தோற்றார்கள் தெரியுமா ? உங்க போலி நாடகம் ரம்ஜான் இஃப்தார் கஞ்சி குடி மயக்கத்தில் இந்துக்களையும் இந்து மதத்தையும் கேவலமாகப் பேசுவதையும் முஸ்லிம்களே ஏற்கவில்லை என்பதுதான் நிரூபிக்கபப்ட்டுள்ளது

 • muthusamy - Coimbatore

  தலீவரே, இது ஒண்ணும் 1967 இல்ல...நீ குரல் கொடுத்தா உன் பின்னால தமிழகம் வருவதற்க்கு.....2016. ஆனாலும், நீ கில்லாடிப்பா தண்டவாளத்துல தலையை வச்சு படுத்துபுட்டு மக, பேரனுக்கு இந்தி புஸ்தகம் வாங்கி குடுப்ப...நாங்கல்லாம் கேனயனுங்க நீ இந்தி எதிர்ப்புன்னு சொன்னதும் உன் பின்னாடி வந்த தமிழனுங்க..

 • rama - johor,மலேஷியா

  தமிழ் தமிழ் என்று குறி நாடகம் அடியது போதும் தலைவரே

 • Sutha - Chennai,இந்தியா

  வயதானால் வரும் உளறல்கள்தான்.இருந்ததாலும் வர வர அதிகமாகிக் கொண்டே போகிறது.

 • Indhiyan - Chennai,இந்தியா

  ஆமாம், ஆங்கிலம் வந்து தமிழை ஆட்கொண்டு அழித்தாலும் பரவாயில்லை சம்ஸ்க்ருதம் படிக்கக் கூடாது. இன்று வீட்டில் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசும் ஒரே ஒரு தமிழ் குடும்பத்தை காட்டி விடுங்கள் பார்க்கலாம் - கருணாநிதி குடும்பம் உட்பட. தமிழுக்கு இன்றைய உண்மையான எதிரி ஆங்கில கலப்புதான். யானை போவது கண்ணுக்குத் தெரியவில்லை. எலி போகிறதாம்.

 • JSS - Nassau,பெர்முடா

  உதவாக்கரை உருப்படாத உபயோகமில்லாத ஒன்றுக்கும் உதவாத வேலையற்ற தலைவர்கள் பேச்சு கலகத்தை விளைவிக்கும். இவர் பேச்சு குடிகாரன் போன்றது ஒதுக்கி தள்ளுவதுதான் மரியாதை

 • K.R.Ramakrishnan - Chennai

  தமிழர்கள் படித்து அறிவாளிகள் ஆகிவிட்டால் தன்னுடைய பித்தலாட்ட அரசியல் செல்லுபடியாகது என்பதால் பயப்படுகிறார். ஆனால் யோகாசனம் மூச்சு பயிற்சி என்று இவர் உயிர் வாழ தினமும் செய்கிறார்

 • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

  மொழி பயில்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை.. அப்படிப்பட்ட உரிமையை தடுக்க நினைப்பது ஏற்க்கத்தக்கதல்ல. ஹிந்தியை கற்க விடாமல் செய்த குள்ளநரித்தனம் இன்றைக்கும் மீண்டும் கதற ஆரம்பித்துவிட்டது. எவரையும் கட்டாயப்படுத்தவே கிடையாது என்கிறபோது..எதற்கு இந்த கேவலமான அரசியல் இங்கே தலை காட்டிடணும்? எதிலும் குற்றம் கண்டுபிடித்தே ஆகணும் என்பதே இவரது பாணி. வீட்டிலே சும்மா உட்கார்ந்திருந்தால் இப்படித்தான் சகட்டு மேனிக்கு யோசிக்க தோணும்..தலீவருக்கு வேறு வேலையே கிடையாது என்பதால் இதனை சீரியசாக நினைக்கவே வேண்டாம்..இதனை எதிர்த்து கல்லக்குடியில் ரயில் ஓடாத தண்டவாளத்திலே இவர் தலைவைத்து தற்கொலை செய்துகொள்ள போகிறாரோ என்று அந்த காலத்து அரசியல்வாதியை போன்று எவரும் இவரை தப்பாக எடைப்போட்டுவிடாதீங்க..பொழுது போகாத அரசியல் தல நம்ம தலீவரு..அதனால் வந்த வினையே இந்த அறிக்கை ஜாலம்..கண்டண்டண்டண்டனம்..

 • Govind - Delhi,இந்தியா

  மேலும் இந்தியா முழுக்க 60% பேர் குறைந்தது இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள். ஆதலால் இந்தியே பிரதானம் என்று முழங்கும் என் சக இந்தியர்களுக்கு ... உத்திர பிரதேசம், உத்திராஞ்சல், ஜார்கந்து, பீகார் மாநிலத்தின் மக்கள் தொகை மட்டுமே 34 கோடி(விடிஞ்சுது) ... அப்புறம் மத்திய பிரதேசம் , ராஜஸ்தான், இதையெல்லாம் சேர்த்த இன்னும் ஒரு 14 கோடி. இவை யாவும் இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்கள் .. இவை மட்டுமே இந்தியாவின் தலை விதியை நிர்ணயம் செய்யும் மாநிலங்கள்... இந்த மாநிலங்களில் தான் அதிக அளவில் படிப்பறிவு இல்லாத மக்களும் ஜாதி சண்டைகளும் மத சண்டைகளும் நடை பெறுகின்றன .. இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த மாநிலங்களில் உள்ளவர்கள் ஆங்கிலத்தை ஒரு எதிரியாகவே பார்கின்றனர் .. இந்தியா முழுக்க இந்தி காட்டயபடுத்த வேண்டும் என்று இவர்கள் தான் அதிகம் சத்தமும் போடுகின்றனர்

 • Ambika. K - bangalore,இந்தியா

  இவரு ஒரு தீர்மானமா இருக்காரு ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி தமிழன் உருப்பட கூடாது இவ்வளவு ஹிந்தி மேலும் சமஸ்க்ரிததின் மேலும் வெறுப்புள்ளவர் தன் மகள் கனி க்காக ஆதரவு கேட்ட போது தன் மகள் ஹிந்தியில் நல்ல புலமையுள்ளவள் ஹிந்தியில் நன்கு வாதாட கூடியவர் என்று எந்த வாயை கொண்டு ஆதரவு திரட்டினார் ஓ அது வேற வாய் இது நார வாய்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  கொஞ்சம் அசந்தாலும் செருகிட்டு போயிருவானுக........ வேனும்ங்கரவங்களுக்கு சிறப்பு பாடமா வச்சுட்டு போக வேண்டியது தானே.......சமஸ்கிருதம்பானுங்க , உருதும்பானுங்க......அப்படியே இந்தியை தலைல கட்டி சொந்த மொழியை இரண்டாம், மூன்றாந்தர மொழியாக்கிட்டு போயிருவானுக. வழக்கமா செகப்பா இருக்கிறவன் பொய்சொல்ல மாட்டான்னு நம்ம ஆளுங்களும் வெவரமில்லாம இருந்தா வெறகு, வெறகு..... நல்லா கருவேல வெறகு வெட்டத்தான் லாயக்கா இருக்க வேண்டியிருக்கும். தமிழன் தலையில நல்லா மொளகா அரைப்பாணுக.

 • Govind - Delhi,இந்தியா

  மத்திய அரசின் இந்த முடிவானது துரதிஷ்டமானது. இந்தியாவில் குறிப்பாக தென்னக மொழிகளை மத்திய அரசு ஒரு பொருட்டாக மதிப்பதாய் இல்லை.. எந்நேரமும் சமஸ்க்ரிதுதத்தை வளர்கிறேன் .. இந்தியை வளர்கிறேன் என்று வரிந்து கட்டி கொண்டு செயல்படுவது முட்டாள்தனம். யாருமே பேசாத சமக்ருததிர்க்கு கோடி கணக்கில் செலவு செய்தாலும் செய்வோம் தமிழுக்கும் மற்ற பிராந்திய மொழிகளுக்கும் எந்த வித முக்கியத்துவமும் தர மாட்டேன் எனும் மனபோக்கை வன்மையாக கண்டிக்க வேண்டும். உடனே சமக்ருத்ததின் எதிரி என்றும் தமிழ் வளர வேண்டும் என்று நினைபவர்கள் எல்லாம் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வகுப்புகளில் படிக்க அனுப்பி விட்டார்கள் என்றும் குறை சொல்பவர்களுக்கு .. இந்தியை படித்தால் வேலை நிச்சயம்.. சமக்ருதத்தை படித்தால் நோபெல் பரிசு உறுதி என்று நம்புபவர்கள் தங்கள் பிள்ளைகளை சமக்ருத்த மற்றும் இந்தி பாட திட்டமாக அதாவது இந்தி மீடியம் பள்ளிக்கொடங்களில் உங்கள் பிள்ளைகளை சேருங்கள்.. உண்மை என்ன வென்றால் வடக்கே இருப்பவர்கள் ஒரு தென்னக மொழியை கற்று கொள்ள வேண்டும் என்று ஒரு போதும் யோசித்தது கிடையாது ஆனால் உலகத்தில் இருப்பவர்கள் எல்லோரும் இந்தியில் பேச வேண்டும் என்று நினைக்கும் மனபோக்கை உடயர்வர்கள்.. தமிழ்கள் நான்கு பேர் ஒன்றாக சேர்ந்தாள் தமிழில் மட்டும் தான் பேசுவார்கள் என்று குறை சொல்லும் வடஇந்தியர்கள் ஒரு போதும் மற்ற மாநிலத்தவர் இருக்கும் போது ஆங்கிலத்தில் பேசுவது கிடையாது ... எடர்கேடுத்தாலும் அவர்கள் மொழியே பிரதானம் என்று நினைக்கும் மனபோக்கை கொண்டவர்கள் .. கருப்னவின் அரசியலை அறவே வெறுக்கும் நான் இந்த விஷயத்தில் நான் அவர் கருத்தை முழுக்க ஏற்று கொள்கிறேன்.. இன்னமும் பல இந்து கோவில்களில் தேவாரத்திற்கோ மற்ற தமிழ் பாடல்களுக்கோ (வைணவ தளங்களை தவிர்த்து ) முக்கியத்துவம் கிடையாது.

 • Siva - Johor,மலேஷியா

  உங்களுடைய மொழி அரசியலை நிறுத்துங்கள், மக்களுக்கு எது தேவையோ அதை துணை மொழியாக எடுத்து படித்துக்கொள்வார்கள்.தமிழன் இருக்கும்வரை தமிழும் இருக்கும் அதை யாராலும் அழிக்கமுடியாது.

 • YesJay - Chennai,இந்தியா

  She didnt mention that Sanskrit will be made mandatory. Kattumaram is trying milk this for his own publicity

 • vadivelu - chennai,இந்தியா

  தலைவரே, ரெஸ்ட் எடுங்க. இதயெல்லாம் உங்க மற்ற தலைவர்களும் இளங்கோவனும் பார்துப்பார்கள்.

 • jagan - Chennai,இந்தியா

  திராவிட வேதம் தமிழ் திவ்யப்ரபந்தம் சேர்த்து சொல்லிகுடுத்தால் ஓகேவா ?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  தலைவரை தேர்ந்தெடுக்காமல் போனது தமிழ்நாட்டின் துரதிஷ்டமே. தலிவரின் தலைமை இல்லாமல் தமிழகமே திக்கு தெரியாமல் தடுமாறுகிறது. ஏன் இந்தியாவே இருள் சூழ்ந்து இருண்ட கண்டம் ஆகிவிட்டது. தலைவர் இருந்தா நாடு உருப்பட்டு விடும்.

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  சிறு வயதில் இருந்தே ஆன்மீகம்,வேதங்கள்,உபநிஷத்துக்கள் போன்றவை கட்டாயம் கத்து கொடுக்க வேண்டும்....மாணவர்கள் ஒழுக்கத்துடனும், கலாச்சராத்துடணும்,இந்தியாவின் மாண்புகளை கற்றால் ஒழுக்கமான சமுதாயம் உருவெடுக்கும்.... அதெல்லாம் தெரிஞ்சிக்கிடால் இவரை யாரும் சீண்டமாட்டாங்கன்னு நெனச்சிட்டாரு போல...

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  பெரியவரே உன் பேரன் கொள்ளு பேரன்கள் கொள்ளு பேத்திகள் எல்லோரும் எல்லாவித மொழிகளையும் கற்றுகொள்கின்றனர் ,ஆனால் நாங்கள் கற்றுகொள்ள கூடாதா? போதும் உமது நாடகம் ,தமிழர்களை வஞ்சித்தது போதும் , உமது திருவாயை மூடும்

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  இதுவே ரொம்ப தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று தான்....மத்திய அரசு பள்ளிகளில் அறிமுகபடுத்தினால் இவருக்கு ஏன் வேர்க்குதுன்னு தெரியல...

 • Anandh Palani - toronto,கனடா

  அட ஆமான்யா உன் பேச்சை கேட்டு என் தலைமுறையே கெட்டு போச்சு.இந்த தலை முறையாவது நல்லா இருக்கட்டும்.வாயை பொத்திகிட்டு சும்மா இரு.செம்மொழி பேரை வச்சுக்கிட்டு .........நல்லா வாயிலை வருது.தமிழுக்கு மரியாதை கொடுத்து சும்மா இருக்கேன்

 • Kunjumani - Chennai.,இந்தியா

  நீ உருதுக்கு மட்டும் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குவது தான் சம நீதியா? எனக்கு இஷ்டம் இருந்தால் நான் சமஸ்கிருதம் படிக்கேறேன் உனக்கு ஏன் வேர்க்குது?

 • sundeli siththar - Cary, USA

  வக்பு வாரிய பள்ளிக்கூடத்துல எந்த மொழியில பயிற்றுவிக்கிராங்க தலைவா... அதுக்கு ஒரு கண்டன அறிக்கை தாங்க பாக்கலாம்... தைரியம் இருந்தால்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement