Advertisement

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை: திருவண்ணாமலையை சேர்ந்தவர் ராஜசேகர், 24; திருப்பூர் அருகே, குள்ளேகவுண்டம் பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்தார். சில

நாட்களாக உடல்நலமின்றி அவதிப்பட்டு வந்தார்; இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், முன்னேற்றம் ஏற்படவில்லை. மனமுடைந்த அவர், குளக்கரை அருகே உள்ள மரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்ட்ரல் போலீசார், சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.
தாக்குதல்; 3 பேர் கைது: திருப்பூர் - பல்லடம் ரோடு, கரைத்தோட்டத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 33. பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும், வாய்த்தகராறு எழுந்தது. இதில், விஜயகுமார் தாக்கப்பட்டார்; அவருக்கு, மிரட்டலும் விடுக்கப்பட்டது. சென்ட்ரல் போலீசார் வழக்கு பதிந்து, தகராறில் ஈடுபட்ட அருண், 19; பாலாஜி, 25 மற்றும் தனபால், 27 ஆகியோரை கைது செய்தனர்.
போதையில் அரிவாள் வெட்டு: கொடுவாய், எஸ்.வி.புரத்தை சேர்ந்தவர் பரமசிவம், 38. பக்கத்து வீட்டில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜா, 45, என்பவர் வசிக்கிறார். இருவர் இடையே முன்விரோதம் உள்ளது. மது அருந்தி விட்டு போதையில் வந்த ராஜா, பரமசிவம் வீட்டுக்கு முன் நின்று, தகாத வார்த்தை பேசியுள்ளார். அவரை, அங்கிருந்து அமைதியாக செல்லுமாறு, பரமசிவம் கூறியுள்ளார். ஆவேசமடைந்த ராஜா, அரிவாளால் வெட்டிக் காயப்படுத்தி, மிரட்டல் விடுத்தார். காயமடைந்த பரமசிவம், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபருக்கு அரிவாள் வெட்டு: ஆண்டிபாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன், 22; இவரது தம்பி ராஜேஸ்வரன், 20. சுல்தான்பேட்டையை சேர்ந்த பாரத், 21 என்பவர், ராஜேஸ்வரனுடன் தகராறு செய்துள்ளார். இதை அறிந்த ஈஸ்வரன், பாரத்திடம் சென்று கேட்டார். ஆவேசமடைந்த அவர், தன்னிடமிருந்த அரிவாளால், ஈஸ்வரனை சரமாரியாக வெட்டி காயப்படுத்தினார். ஈஸ்வரன், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement