Advertisement

'பெண்ணியம்' கண்டுபிடித்தவர் யார் : கொதிக்கிறார் நடிகை ரோகினி

இளமை காலங்களில்' அறிமுகமாகி, தாயாகி, தாலாட்டு பாடி, பவுனுக்கு பவுனாக இருந்து, தமிழ் சினிமாவில் மறுபடியும், 'விருமாண்டி'யில் தன் வித்தியாசமான கதாபாத்திரங்களின் வாயிலாக கோலிவுட்டை வலம் வந்தவர் நடிகை ரோகினி. கலைக்காக தன் வாழ்கையை அர்ப்பணித்திருக்கும், ரோகினியை கலைமாமணி விருது தேடி வந்தது. 130க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர் சமூக சேவைகளிலும் முத்திரையை பதித்து வருகிறார்.
பெண்ணியம், சினிமா பற்றி மதுரையில் மனம் திறந்தார் ரோகினி.
பெண்ணியம் பற்றி...
ஒரு பெண்ணை கடவுள் என்று சொல்லுவோர், பிசாசு எனவும் தயங்காது சொல்கிறார்கள். ஒரு நாணயத்திற்கு இருக்கும் இருபக்கம் போன்றவள் பெண். பெண்ணியம் என்ற வார்த்தையே, ஆண்களை அடிமைப்படுத்துவோர் பயன்படுத்தும் வார்த்தையென மாறி விட்டது. பெண்களின் பேராசையே, பெண்ணியம் என்ற ஓர் கண்ணோட்டமும் உள்ளது. தற்போதைய சூழலிலும் பெண்ணியம் பற்றி பேசவேண்டியுள்ளது. காரணம் அவளுக்கான படிப்பு எது.? யாரை மணந்து கொள்வது? சொத்துரிமை என அவர்களுக்கான உதவி, உரிமை பற்றி இன்றளவும் பேசவேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம். பெண்ணை வெறும் காட்சிப்பொருளாகவும், சந்ததி விருத்திக்கு பயன்படும் கருவியாகவும் பார்க்கும் எண்ணத்தை தவிர்த்து அவளிடம் உள்ள திறமை, அறிவைச் சார்ந்த அவளை பார்க்கும் மனோபாவம் என இன்னும் பல மாற்றங்களை நாம் சந்திக்க வேண்டி உள்ளது.
அடுத்து சினிமா பற்றி ரோகினி...
நடிப்பு, இயக்கம், பாடலாசிரியர், டப்பிங் ஆர்டிஸ்ட் எனஎல்லாமே செய்ய முடிந்தாலும்,
அதற்காக நம் திறமையும் வளர்த்து கொள்வது வேண்டும். எதை செய்தாலும் தீவிரமாகவும், கவனமாகவும் செய்ய வேண்டும். ஒரு சொல்லுக்கு மாற்று வார்த்தையாக தமிழில் பல சொற்கள் உண்டு. பவுனுக்கு பவுனுதான், ஆசை, மறுபடியும், மகளிர் மட்டும் என எல்லாமே எனக்கு பிடிச்ச கேரக்டர் தான். முக்கியமாக விருமாண்டி படத்தில் எனது கேரக்டர் அதிகமாக பேசப்பட்டது. அதிலும் விருமாண்டியில் டப்பிங் வாய்ஸ் கொடுக்கப்படவில்லை லைவ் சவுண்டில் பண்ணப்பட்ட படம். பாகுபலி, எனது கேரியரில் ரொம்பவே முக்கியமான படம்.
இவ்வாறு நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ரோகினி.
vijio5gmail.com
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement