Advertisement

'தெறி பேபி' திவ்யா

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்... இளசுகளின் விழிகளில் விருந்தாய் ஏன் விழுந்தாய், மேகங்களுக்குள் மழையாய் நீ மறைந்தாய், கோடைக்குள் குளிராய் நீ புகுந்தாய், புண்ணாகிப் போன பூமிக்கு மருந்தாய் நீ நடந்தாய், ஆழ்கடலின் அலையாய் நீ அசைந்தாய்... என, 'கிலோ பைட்' வார்த்தைகளால் 'ஜிகா பைட்' கவிதைகள் எழுத தூண்டும் அழகான 'தெறி பேபி' நடிகை திவ்யா மனம் திறந்த மயக்கும் நிமிடங்கள்...
* உங்களை பற்றி...
பிறந்து, வளர்ந்தது எல்லாம் சென்னை. பி.சி.ஏ., படித்திருக்கிறேன். ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில் சினிமா துறைக்கு வந்துவிட்டேன்.
* முதல் படம்...
அப்புக்குட்டி நடித்த 'மன்னாரு' படத்தில் ஒரு சின்ன கேரக்டர் பண்ணினேன். இது தான் என் முதல் நடிப்பு அனுபவம்.
* அது என்ன 'சமையல் மந்திரம்'
'டிவி' ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளர் தேவை என கேள்விப்பட்டு, 'ஆடிஷன்' சென்றேன், செலக்ட் ஆனேன். அதற்கு பின் தான் தெரிந்தது பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டுமென்று. முதலில் பேச தயக்கமாக தான் இருந்தது, பின்பு துணிந்து பேச ஆரம்பித்துவிட்டேன்.
* பெற்றோர் என்ன சொன்னார்கள்
இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு போக வேண்டாம்னு தான் சொன்னாங்க. அப்புறம் இதுவும் ஒரு சமூக சேவை மாதிரி தானேன்னு 'கிரீன் சிக்னல்' காட்டிவிட்டார்கள்.
* 'டிவி' ஓ.கே., சினிமா என்னாச்சு?
நீங்க வேற இந்த நிகழ்ச்சியை நடிகர் சந்தானம் பார்த்துட்டு, அவரோட 'இனிமே இப்படித்தான்' படத்துல நிகழ்ச்சி தொகுப்பாளராகவே நடிக்க வைச்சாரு.
* ரசிகர்கள் ரசிக்கிறார்களா
என்னோட போல்டான பேச்சு, அழகான கண்கள், பாடி லாங்குவேஜ்... இப்படி 'ஒன் பை ஒன்னா' என்னை ரசிக்காத ரசிகர்களே இல்லை... சவுத் இந்தியன் 'சன்னி லியோன்'னு கூட பட்டம் கொடுத்திருக்காங்க.
* பொது இடங்களில்...
மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். ஒரு சில சினிமாக்காரங்களே தப்பா பேசுறது தான் வருத்தமா இருக்கு. சினிமாவுல 'ஐயிட்டம் டான்ஸ்' ஆடுறாங்களே அதை மட்டும் ஏத்துகிறாங்க. அதை விட இந்த நிகழ்ச்சி ஒன்னும் மோசம் இல்லை வெறும் 'டாக் ஷோ' தானே.
* பிரபலங்களின் பாராட்டு...
தேசிய விருது பெற்ற ஒரு பிரபல நடிகரின் மனைவி, எனக்கு போன் செய்து என்னை பாராட்டினாங்க. இப்பவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவங்க என் கூட பேசுவாங்க. யாருன்னு கேட்காதீங்க அது சஸ்பென்ஸ்...
* யாருடன் நடிக்க ஆசை ?
கட்டம் கட்டி கலக்குற சிம்பு கூட ஒரு படமாவது நடிச்சுடனும். ஹீரோயின்களில் சிம்ரன் கூட நடிக்கனும்.
* உங்கள் பொழுது போக்கு
டான்ஸ், பாட்டு, யோகா எல்லாம் நமக்கு கை வந்த கலை தான்ங்க. பேஸ் புக், டுவிட்டர்ல பிரண்ட்ஸ்களோடு 'சாட்டிங்' பண்றது ரொம்ப பிடிக்கும்.
* பெண்களுக்கு உங்கள் அறிவுரை
ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் பெண்கள் சாதிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தைரியம் இழக்க கூடாது. காதல் வலையில் விழும் முன் பல முறை யோசிச்சு புத்திசாலித்தனமா முடிவு எடுக்கனும்.
* அடுத்த படம்...
அடுத்து மூன்று படங்களில் நடிக்கிறேன். ஒரு படத்தில் வில்லாதி வில்லியாக நடிக்கிறேன்.
facebook.com/divyammm
Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement