Advertisement

ரூ.1.14 லட்சம் கோடி: தேர்தல் அறிக்கையில்சலுகை மழை

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை, முன்னறிவிப்பின்றி வெளியிடப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடந்த, அ.தி.மு.க., பிரசார பொதுக்கூட்டத்தில், 2016 சட்டசபைதேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இலவச மின்சாரம், ஸ்கூட்டர் மானியம், விவசாய கடன் தள்ளுபடி என, 1.14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சலுகை மழை பொழியும் அந்த அறிக்கையில், பெண்களை கவரும் அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதால், அனைத்து எதிர்க்கட்சிகளும் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளன.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்* கூட்டுறவு வங்கிகளுக்கு, சிறு, குறு
விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர் கடன், நடுத்தர காலக்கடன், நீண்ட காலக்கடன் அனைத்தும் தள்ளுபடி.
* 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி, இலவச இணையதள வசதி.
* ஐந்து புதிய மருத்துவக் கல்லுாரிகள்.
* கருவுற்ற தாய்மார்களுக்கான நிதியுதவி, 12 ஆயிரம் ரூபாயில் இருந்து, 18 ஆயிரம்
ரூபாயாகஉயர்வு.
* 100 யூனிட் மின்சாரம், கட்டணம் எதுவுமில்லாமல் அனைத்து வீடுகளுக்கும் இலவசம்.
* பொங்கல் திருநாளுக்கு கோ - ஆப்டெக்ஸ் துணிகள் வாங்க, அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும், 500 ரூபாய்க்கான பரிசு கூப்பன்.
* அரசு கேபிள் இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு, இலவச 'செட்டாப் பாக்ஸ்'
* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலவச மொபைல் போன்.
* தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு, காலை சிற்றுண்டி; வைட்டமின் ஏ, வைட்டமின் டி
இலவச மாத்திரைகள்.
* ஆவின் பால், ஒரு லிட்டர், 25 ரூபாய்.
* திருமண உதவி திட்டத்தில் வழங்கப்படும், நான்கு கிராம் தங்கம், எட்டு கிராமாக உயர்வு.
*வீட்டுக்கு ஒருவருக்கு வேலை.
* வேலை கிடைக்காதவர் கல்வி கடனை, அரசே செலுத்தும்.
* மகளிர்களுக்கு, இரு சக்கர வாகனங்கள் வாங்க, 50 சதவீதம் மானியம்.

இது தவிர, படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

என்ன செய்வார்கள்?:இதுவரை மற்ற கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் இவ்வளவு சலுகைகளும் இலவசங்களும் இல்லை. அ.தி.மு.க., அறிக்கையில் உள்ள சலுகைகள் இளம் பெண்களை கவரும் விதத்தில் இருப்பதாக அனைத்து கட்சியினரும் கருதுகின்றனர். இதனால், அடுத்த சில நாட்களில், மற்ற கட்சிகளும், தங்கள் அறிக்கைகளில் உள்ளவற்றுக்கு மேலாக
சலுகைகளை அறிவிப்பார்களா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

அ.தி.மு.க., அறிக்கையை தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட வேறு கட்சி தலைவர்கள் உடனடியாக விமர்சிக்காதது, இந்த கேள்விக்கு வலு சேர்த்து உள்ளது.
நமது சிறப்பு நிருபர் -
Advertisement
 

வாசகர் கருத்து (370)

 • s. shanmuga kumar - coimbatore,இந்தியா

  இலவசங்கள் வேண்டாம் என்று எப்பொழுது தமிழன் நினைகிறானோ அப்பொழுதுதான் தமிழகம் வளம் பெறும். இலவசங்களால் இந்த நாடு நாசமாக போவது மட்டும் உறுதி.

 • mahendran - OOTY,இந்தியா

  என்னதான் நடந்தாலும் தி.மு.க என்ற சாத்தான் ஆட்சிக்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்..niciya vattri aiadmk

 • karpagam - karur,இந்தியா

  வீட்டுக்கு ஒருவருக்கு வேலை.'' இது ஓன்று மட்டும் போதும் , வேறு ஒன்றும் வேண்டாம் . தமிழன் தன்மானத்தோடு தமிழனாக வாழ்வான் . இதை விடுத்து வேறு எது கொடுத்தாலும் பிச்சைதான் .

 • md yasar - ilayangudi,இந்தியா

  நல்லது பண்ணுணா போதும்

 • md yasar - ilayangudi,இந்தியா

  வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கிடைத்தால் போதும் வேற எதுவும் வேண்டாம்

 • YOURS - Chennai,இந்தியா

  நடைமுறை படுத்த முடியாது, எப்படியும் வெற்றி பெரும் நோக்கம் தான் .ஆனால், முடியாது தோல்வி நிச்சயம்.

 • Sathish Kumar - chennai,இந்தியா

  வீட்டுக்கு ஒருவருக்கு வேலை.'' இது ஒன்று மட்டும் போதும் , வேறு ஒன்றும் வேண்டாம் . தமிழன் தன்மானத்தோடு தமிழனாக வாழ்வான் . இதை விடுத்து வேறு எது கொடுத்தாலும் பிச்சைதான் .

 • K.Kannan - Aruppukkottai,இந்தியா

  வீட்டுக்கு ஒருவருக்கு வேலை.'' இது ஓன்று மனத்தும் போதும் , வேறு ஒன்றும் வேண்டாம் . தமிழன் தன்மானத்தோடு தமிழனாக வாழ்வான் . இதை விடுத்து வேறு எது கொடுத்தாலும் பிச்சைதான் .

 • Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ

  என்னதான் நடந்தாலும் தி.மு.க என்ற சாத்தான் ஆட்சிக்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்..

 • Jayaraman Pichumani - Coimbatore,இந்தியா

  தமிழகத்தை முற்றிலும் சீரழிப்பதில் தலைசிறந்தவர் கருணாவா அல்லது ஜெ-வா என்ற போட்டியில் தான் வென்றேயாக வேண்டும் என்ற வெறியில் ஜெ வெளியிட்டிருப்பதுதான் இத்தேர்தலறிக்கை. ஏற்கெனவே மின்வாரியம் நஷ்டத்தில் சிக்கித் தவிக்க, மேற்கொண்டு மாதம் 100 யூனிட் இலவசம் என்பது ஜெ மின்வாரியத்திற்கு சங்கு ஊதி பாடைகட்டத் தயாராகிவிட்டார் என்பதை உணர்த்துகிறது. இக்காலத்தில் பிச்சைக்காரன் கூட செல்போன் வைத்திருக்க, எதற்கு இந்தம்மா இலவசமா தரணும்? ஒருவேளை சில மாதங்களுக்கு முன் ரூ.251/-க்கு செல்போன் தருவதாக ஒரு நிறுவனம் டுபாக்கூர் விட்டதே, அந்த நிறுவனத்தோடு இந்தம்மா ஏதேனும் அன்கோ போட்டுட்டாங்களா? ஏற்கெனவே ரோட்டில வாகன நெரிசல், இந்த லட்சணத்தில் இந்தம்மா 50% மானியத்தில் பெண்களுக்கு ஸ்கூட்டர்-னு அளந்துவிட்டிருக்காங்க. எந்த ஸ்கூட்டர்? சென்னை வெள்ளத்துல பாதிக்கப்பட்டு, ஸ்கிராப்பான ஸ்கூட்டர்களா? கோ-ஆப்டெக்ஸ்-ன் விற்பனையை அதிகரிப்பதற்காகவே (அதிலும் குறிப்பாக, விற்காமல் தேங்கிக் கிடக்கும் சரக்குகளை விற்பதற்காகவே) இந்த அம்மையார் கொண்டு வரப்போகும் திட்டம், ரூ.500/-க்கு தள்ளுபடி கூப்பன். மொத்தத்தில், தமிழகத்தின் கடன் சுமையை ரூ.4.75 லட்சம் கோடியிலிருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்துவதே ஜெ-வின் அடுத்த ஐந்தாண்டு இலக்கு. இலவசங்களுக்காகவே நாக்கை நாய் மாதிரி தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் பொதுமக்கள், ஜெ-வின் இந்த அறிக்கையைப் படித்துவிட்டு, வழக்கம் போல அதிமுகவையே தேர்ந்தெடுப்பார்கள்.

 • Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ

  எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுசெல்வது கடன் மட்டுமே... 1967 ல் பிடித்தது தமிழகத்தை இன்னும் விடவில்லை..

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  ///வீட்டுக்கு ஒருவருக்கு வேலை./// அடிமைங்க கும்பிடு போடற மாதிரி மாசத்துக்கு ரெண்டு தடவை கும்பிடு போடறது தான் வேலை....அதுக்கு பென்ஷன்,மற்றும் அனைத்து சலுகைகளும் கெடைக்கும்...

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  ///ஐந்து புதிய மருத்துவக் கல்லூரிகள்///. 2011 தேர்தலுக்கு பிறகு தாக்கல் செய்யபட்ட நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டது அப்படியே ரிப்பீட்டு....சூப்பரு ..சூப்பரோ சூப்பரு... வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் மாதிரி நல்லா இருக்கு....

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  மணலுக்கு மாற்று வழி கண்டுபிடிக்க இயலாத வக்கில்லாத அரசு, தாது மணலை அரசே எடுத்து நடத்துமாம்...அடுத்த ரெண்டு வருஷத்தில அதையும் சுத்தமா வழிச்சி காலி பண்ணிட்டால் சுற்று சூழல் தமிழ்நாட்டுல சும்மா சூப்பரா இருக்கும்...

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  1.25 லட்சம் கோடியில 45 % கமிஷன் சூப்பரோ சூப்பர்...இனிமேல் பல்லுவலி புகழ் சசிகலா கூட ஹெலிகாப்படருல தான் ஊரை மேயும்...

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  இவிங்க திரும்பவும் ஆட்சிக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பால் ஊற்றி பாடை கட்டிடுவாங்க...

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  இருக்காதா பின்னே...ஒவ்வொரு இடத்திலும் அடிமை வேட்பாளர்களை மக்கள் துரத்துவதால் வேற வழியின்றி இந்த இழவை அறிவித்து இருக்காங்க...

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  அம்மே ஒவ்வொருத்தர் தலையிலும் 2 லட்சம் ரூபாய் கடன் சுமையை ஏத்திட்டாங்க....அடிமைங்க நமக்கும் சேர்த்து நம்ம பாரத்தை ஏத்துகிட்டா தேவல.....அடிமைங்க செய்யுமா?

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  நிம்மதியா உக்காந்து பயணம் செய்வதற்கு பேருந்துகள் இல்லை .. எத்தன பேரு ஓடும் பேருந்தில் இருந்து கீழ விழுந்தத பாத்தோம் ... .. இவங்க மானிய பைக் தருவாங்களாம் .. குழந்தைங்க வச்சு விளையாட செப்பு சாமான் மாதிரி இருக்குமா இருக்கும்

 • P Kaleeswaran - sivakasi,இந்தியா

  இன்னும் ஏன் இலவச திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிக்கின்றார்கள். மின்சாரம் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை இல்லை. ஆந்திரா மாநிலம் போன்று தமிழக நதிகளை இணைக்க எந்த அறிவிப்பும் இல்லை. உயர் கல்வி மேம்பாடு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. தமிழகத்தின் தொன்மை சின்னங்களைக் காக்க எந்த அறிவிப்பும் இல்லை. சுற்றுலா மேம்பாடு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இன்று உள்ள சமுதாயத்தில் இளைஞர் வாக்குகள் உள்ளது என்பதை அரசியல் கட்சிகள் நினைவில் கொள்ள வேண்டும். 18 வயது முதல் 50 வயது வரை உள்ள பலர் இன்று சமூக வலைதளங்களில் உள்ளனர். அவர்களுக்கு எங்கு என்ன நடக்கிறது என்று பலரும் தெரிந்து வைத்து உள்ளனர். ஆக ஊழல் பற்றி எல்லோரும் அறிந்து உள்ளனர். ஊழல் சில அரசியல் கட்சிகள் செய்யவில்லை என்று வெளியே சொல்லலாம். அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கினாலும் அது அந்த அரசின் பொறுப்பு தான். 10 ஆம் வகுப்பு மாணவனுக்கு சாதி சான்றிதழ் வாங்கும் போதே அதிகாரிகள் வாங்கும் லஞ்சம் அவர்கள் மனதில் பதியாமல் இல்லை. அவர்கள் அதன் விளைவை தங்கள் வாக்குகளில் காட்டுவார்கள். அரசியல்வாதி செய்யும் மிகபெரிய ஊழலும் அதிகாரிகள் கையெழுத்து போடுவதற்கு வாங்கும் லஞ்சமும் அரசின் பின்னடைவே. அந்த லஞ்சம் ஊழல் ஒழிப்பு பற்றி எந்த கட்சியும் வாய் திறக்கவில்லை. சில அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கை எந்த அரசும் கண்டு கொள்வது இல்லை. எல்லாம் வெற்று அறிக்கைகளாகவே உள்ளன. ரயில் போக்குவரத்து மத்திய அரசு வசம் என்றாலும் தமிழகத்துக்கு அதிக ரயில்கள் கொண்டு வர எந்த முயற்சியும் எடுப்பது பற்றி அறிவிப்பு இல்லை. பல பணிகள் முடியாத ரயில் தண்டவாளப் பணிகளை மேற்கொள்ள எந்த அறிவிப்பும் இல்லை. தமிழகத்தின் பல திருக்கோவில்கள் சிதைந்த நிலையில் உள்ளன. அதற்கான அறிவிப்பு இல்லை. குளங்கள் தூர் வாரப் படாமல் உள்ளன. சங்கிலி போன்ற குளங்கள் காணமல் போய் விட்டன. ஆறுகள் ஏரிகள் நிலைகள் மோசம். இதற்கு அறிவிப்பு இல்லை

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  இது தேர்தல் அறிக்கையா இல்ல 110 விதியின் கீழ் அறிவுப்புகளா ??? பாவம் அவங்களே கன்பியுஸ் ஆயிட்டாங்க போல

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  இது ஒரு கடன் மிகை மாநிலம். ஒரு கடன்கார அரசு மக்கள் வரிப்பணத்தில் இப்படி வாரி இறைக்காமல் தங்களது சொந்த பணத்திலோ அல்லது கட்சிப்பணத்திலோ கொடுத்தால் பாராட்டலாம். இதை எப்படி தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது அதுவும் தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு அறிக்கை விட முடியுமா? இது ஜெயிப்பதற்கான ஒரு தந்திரமாக கூட இருக்கலாமே.

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  சுமார் 7000 ( 2014 ஆம் ஆண்டு கணக்கு படி ) அரசு பள்ளிகளில் பெண்கள் கழிப்பிட வசதியே இல்லையாம் .. அவங்களுக்கு நம்ம அம்மாஜி பைக் குடுக்குதாம்

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  யாரும் பதறாதீங்க ... 110 விதியின் கீழ் கின்னஸ் சாதனை படைத்த அம்மே அதுல உள்ள மிச்சம் மீதிய தான் விட்ருக்காங்க .. இது தேர்தல் அறிக்கை இல்ல ...

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  ஆவின் பால் விலை குறைப்பு ... வீட்டில் ஒருவருக்கு வேலை .. பைக் கார் .. இதெல்லாம் 5 வருஷம் ஆட்சியில இருந்தப்ப தோணலையா .. நேத்திக்கு .......... உக்காந்து இருக்கும் போது உதித்த திட்டங்களா ??

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///B Rajasekar - Bradford,யுனைடெட் கிங்டம்///அல்லக்கை ராஜசேகர் அண்ணே, நீங்கள் ஆயாவால் கூலிக்கு மாரடிக்க வைக்கப்பட்ட ஆள்தானே, அடித்துவிட்டு போங்க அண்ணே அதுகெல்லாம் நான் கவலைப்படவில்லை, உன்னை போல நிறைய ஆட்களை ஆயா இங்கே தேர்தல் ஸ்பெஷல் இறக்கி விட்டிருக்கு, அதில் நீயும் ஒரு அல்லக்கை, ஆனால் நீ அடிமையில்லை, கொடுக்கும் வேலைக்கு காசு வாங்கும் ஆள், நீயெல்லாம் மழைக்காலத்தில் முழிக்கும் ஈசல் போன்ற ஆள், தேர்தல் முடிந்தால் ஆயுசு காலி. அதுவரை எழுதும் ஒரு கருத்துக்கும், ஒரு 200 முதல் 500 வரைவாங்கி கொண்டு ஓடும் கூட்டம், இப்போ சம்பாதிக்கவில்லை என்றால் எப்போது சம்பாதிப்பது. நடக்கட்டும், கூலிகாரானே, நடக்கட்டும்.

 • Gnanam - Nagercoil,இந்தியா

  சலுகைகள் உறுதியளிக்கும்போது, எப்போது, எப்படி என்பதை சற்று விளக்கி சொல்லவேண்டும். மொத்தத்தில் தமிழ்நாடு கடனில் மூழ்கியிருக்கிறது. மேன்மேலும் நமது பிள்ளைகளை கடத்தில் மூழ்கடிக்காமல், இலவசங்களுக்காக கையேந்தாமல், தன்னம்பிக்கையோடும், சுயமரியாதையோடும் வாழ வழிவகுக்கும் திட்டங்களை தீட்டி செயல்படுத்தவேண்டும். தகுதி அடிப்படையில் வேலை - தரகர்களில்லாம., லஞ்சம் கொடுக்காமல் வேலைகளில் சேர வாய்ப்பு, தடங்கலில்லா குடிநீர் வசதி, மின்சாரம் போன்றவை தற்போதைய அடிப்படை தேவைகள். இலவச கல்வி, மாணவ மாணவியர்களுக்கு சுமூகமான போக்குவரத்து வசதி, மேற்படிப்பிற்கு குறைந்தவட்டியில் தவணைமுறையில் திரும்பபெறும் கடன் வசதி, விவசாயிகளின் தேவைகளை அறிந்து, போராட்டங்களுக்கு முன்னரே தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்றவற்றை அதிக விளம்பரமில்லாமல் மேற்கொள்ளவேண்டும். மேலும், வழிப்பறி, திருட்டு, கொலை கொள்ளை என்ற செய்திகளில்லாத நாளோ, நாளேடுகளோ இல்லை. ஏன், எதனால் இப்படிப்பட்ட தொல்லைகளால் மக்கள் நாளும் அவதியுறுகிறார்கள் என்பதை அறிந்து, ஆவன செய்யவேண்டும். "சொல்லுதல் யாருக்கும் எளிய, அரியதாம் சொல்லியவண்ணம் செயல்" என்பது குறள். இருப்பினும், முயற்சி திருவினையாக்கும் என்னும் முதுமொழிக்கேற்ப முயற்சி செய்யலாமே - ஞானம்

 • Krishnan - Chennai,இந்தியா

  நீங்க ரெண்டு கழகமும் ஆணியே புடுங்க வேண்டாம். அதுவே தமிழ்நாட்டுக்கு நல்லது

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  எப்படி இருந்தாலும் அம்மாவுக்குத்தான் வெற்றி. அம்மையார் எதுக்கு இவ்வளவு பொய் சொல்லணும்னு தெரியல..

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  மக்களே, இந்த தேர்தல் அறிக்கை மக்களுக்காக போடப்பட்ட, தீட்டபட்டதல்ல திட்டமல்ல, மக்கள் நலன் சிறிதுமில்லை,கட்சிகாரர்களுக்காக. மாற்று கட்சியினரே நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இன்ன இன்ன இலவச திட்டங்கள் போடுவோம், மொத்தம் கிட்டத்தட்ட 5 லட்சம் கோடிகளுக்கு, அதில் ஏற்கனவே போடப்பட்ட திட்டங்களுக்கு 45% கமிசன், இனி அது 60% என்று கணக்கிட்டால், எவ்வளவு வரும் என்று கனக்கிட்டுகொல்லுங்கள், ஆகவே நீங்கள் எங்கள் கட்சியில் சேருங்கள், சேர்ந்து ஆட்சியில் அமரவைத்தாள் வரும் கமிசனில் உங்களுக்கும் பங்குண்டு, ஆகவே சிந்தித்து செயப்பாட்டு, எங்களை ஆட்சியில் ஒக்கரவையுங்கள் என்கிறார் அமையார், மக்களே இப்போ நீங்கள்தான் சிந்திக்க வேண்டும், செயல்படவேண்டும்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  தாலிக்கு தங்கம் தேவையில்லை, மஞ்சள் கிழங்கில் கட்டினாலும் தாலி கழுத்தில் இருந்தால் போதும் - சாராயகடகளை மூடுங்கள்... கல்விகடன்களை ரத்து செய்ய தேவையில்லை, படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தாருங்கள்... இலவச மின்சாரம் தேவையில்லை, தடையில்லாத மின்சாரத்தை தந்து எங்கள் தொழில்வளங்களை பெருக்க உதவுங்கள்... எங்கள் பெண்களுக்கு ஸ்கூட்டருக்கு 50% மானியம் தேவையில்லை... உண்மையில் மீதி 50% கொடுக்க கூட எங்களுக்கு வக்கில்லை... ஆதலால் நாங்கள் தினமும் செல்லும் பேருந்துகளை நல்லமுறையில் மாற்றி தாருங்கள்... எங்கள் தேவைகளுக்கு ஏற்ப அதிக படுத்துங்கள். மதிய சத்துணவுடன் காலை உணவும் தந்து எங்கள் குழந்தைகள் வயிற்றை நிறைக்கிறீர்கள் நன்றி. ஆனால் இந்த பள்ளிகளின் கல்வி தரத்தை எப்போது உயர்த்த போகிறீர்கள். மீனவர்களுக்கு உதவி தொகை வழங்கிவிட்டீர்கள் அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் எப்போது வழங்க போகிறீர்கள்... மொத்தத்தில் எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம் எங்கள் வாழ்க்கையை நாங்களே நிர்ணயித்துகொள்ள தேவையான கல்வி, தொழில் வளங்கள் பெருக உட்கட்டமைப்பு வசதி, விவாசய துறையை நவீன படுத்த ஆராய்ச்சி மையங்கள், தடையில்லா மின்சாரம், விலையில்லா தண்ணீர், சிறப்பான போக்குவரத்து வசதிகள் போதும்

 • Snake Babu - Salem,இந்தியா

  தேர்தல் அறிக்கையை பார்க்கும் பொது ஆயாவோட தேர்தல் தோல்வி பயம் நன்றாகவே தெரிகிறது.இலவசம் என்கிற மாயை விட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சம் மாக விலகி வருகிறார்கள். பொதுவாகவே ஆளும் கட்சிக்கு தேர்தலை சமாளிப்பது என்பது சற்று சிரமம். ஏனென்றால் நடந்துகொண்டிருக்கும் ஆட்சியை பார்த்து வாக்களிப்பார்கள். நடப்பு ஆட்சியில் ஆயா வின் நிர்வாக திறமை விட்ட விளிச்சமாக தெரிந்து விட்டது. எப்படியும் கொடநாடோ அல்லது சிறையோ செல்ல போகிறீர்கள். நடக்க முடியல, எங்கயும் வெளியேயும் போக முடியல, மக்களையும் சந்திக்க போறதில்லை. பத்திரிக்கையாளர்களையும் சந்திக்க போவதில்லை. மொத்தத்தில் இந்த தேர்தல் அறிக்கை வெறும் ஏமாற்றுவதற்கே. ஏற்கனவே கடனில் இயங்குகிறது. இவ்வளவு இலவசத்தை கொடுப்பதற்கு என்கிர்ந்து வருமானம் வரும். அதற்கு வழி கூறி இருந்தால் பரவாஇல்லை. அதுவும் இல்லை. மக்களை அவ்வளவு இளித்தவாயர்கள் என்று நினைக்குறாங்க போல. பாப்போம். நன்றி வாழ்க வளமுடன்.

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  தமிழ் மக்களே - இது இலவசங்கள் அல்ல நம் தங்க தலைவியின் இதயம் தமிழ் வசம் ஆகி தமிழ் மக்கள் நல் பேணும் வாச மலர் அஞ்சலிகள். தமிழ் மக்கள் வாழ்ந்தார்கள் - என்று செல்வி ஜே ஜே வின் ஆட்சி பற்றி சாசனம் எழுதப்படும் சரித்திர அறிவிப்புக்கள். 234 சீட்டுகளும் நம் வெற்றி செல்வி ஜே ஜே நம் தமிழ் நாடு அரசு ஆட்சி மன்ற வளாகம் கட்ட வேண்டும். அது தமிழ் இனம், தமிழ் மனம், தமிழ் மானம்,, தமிழ் பெருமை, தமிழ் உரிமை உலகுக்கு, எடுத்து காட்டும் சீர் மிகு அரசு ஆட்சி மன்ற வாளகமமாக அமைய போகும் வரலாறு செல்வி ஜே ஜே வின் ஆட்சியில் நிகழும்

 • நானும் ௮ரசியல்வாதிதான்... - அம்பை - வீகேபுரம்,இந்தியா

  எல்லா ௧ட்சி௧ளும் ஏறதால தேர்தல் அறிக்கை மொத்த செலவு = ஒரு லட்சத்து14,000 ஆயிரம்௧ோடி, CM ௧மிஷன் = 50,000 ஆயிரம்௧ோடி, ௮மைச்சர் ௧மிஷன் = 5000 ஆயிரம்௧ோடி,MLA ௧மிஷன் =2500 ஆயிரம்௧ோடி, ௧ட்சி நிதி = 5000 ஆயிரம்௧ோடி,மற்ற ௧ொள்ளை ( வார்டு உறுப்பினர், ந௧ர செயலாளர், மாவட்டச்செயலாளர்) = 500 ஆயிரம்௧ோடி, டெண்டர் ௧ம்பெனி = 37000ஆயிரம்௧ோடி, செலவு = 14000

 • M.iruthayaraj - Thiruppanandal(tanjore dt)

  அஇஅதிமுக வெற்றி உறுதி

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  ஆவின் பால் விலை குறைக்கப்படுமாம் .. கூட்டுனதே நீங்க தானே .. இதுக்கு எதுக்கு டா வெள்ளையும் சொள்ளையுமா

 • Yesveeorr - chennai ,இந்தியா

  பெருந்துறையில் அம்மா அடித்த சிக்சர் தான் வின்னிங் ரன். எதிரிகள் பெருமூச்சு விடுவது தவிர வேறு வழியில்லை.

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  இவங்க என்ன பண்ணலும் தனி மெஜாரிட்டி கிடைப்பது கடினமே . இவர்கள் அறிக்கையை பார்த்தால் இரண்டுபேரும் சளைத்தவர்கள் இல்லை . ஓட்டுக்காக தமிழனின் தன்மானம் காற்றில் பறக்கின்றது இழுபறி வர வேண்டும் +கூட்டணி ஆட்சி அமையவேண்டும் . அம்மா அவர்கள் இதையெல்லாம் 2020 இல் செய்வார்களா? இல்லை அடுத்த மாதமா?

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  சரி இனிமேல் வீட்டுக்கு வீடு சோலார் பவர் தான், புதிய மின் திட்டங்களும் இல்லை. பழைய அனல் மின் நிலையங்களும் மூடு விழாவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. இதில் தற்பொழுது 100 யூனிட் மின்சாரம் இலவசம். கொடுக்கலாம் கொடுக்கலாம் அதுதான் தமிழ்நாடு மிகைமின் மாநிலமாக ஊடகத்திலும், பத்திரிக்கையிலும் இருக்கிறதே பிறகு என்ன. கவலை. கோவிந்தா, கோவிந்தா நீதாம்பா எங்களை எல்லாம் காப்பாத்தணும்.

 • k.pandian - trichy

  பெரிய விவசாயி எங்க போய் சாகிறது?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அனைத்துக் கட்சிகளும் இலவசங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய் யும் வேளையில் இவரது அறிவிப்பு தனக்குத்தானே வைத்துக்கொள்ளும் ஆப்பு.

 • இளங்கோ - chennai,இந்தியா

  எந்த ஆட்சி வந்தாலும் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மின் பற்றாக்குறை அதிகரிக்க போவது உறுதி.புதிய தொழில்கள் இல்லாததால் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பதும் நிச்சயம். அப்போது இந்த இலவசங்கள் எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். கடமையை செய்யாதவர்கள் அளிக்கும் லஞ்சமே இந்த இலவசங்கள்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  எந்ததொலைநோக்குத் திட்டங்களும், தொழில் வளர்ச்சித் திட்டங்களும் இல்லாமல் அனைவருக்கும் வேலை எப்படி சாத்தியமாகும் ?

 • Nehruraj - chennai,இந்தியா

  கவர்மெண்ட் முதலில் இந்த இலவசங்களுக்கு என்ன பண ஆதாரம் உள்ளது என தெளிவாக தெரியபடுத்த வேண்டும். மாநில அரசு மீண்டும் மீண்டும் கடன் வாங்கி மக்களுக்கு கொடுப்பதில் ஓர் பிரயோஜனமும் இல்லை. மேலும் இது மக்கள் மீது கடன் சுமை தான் அதிகரிக்கும். காலபோக்கில் ஐரோப்பாவில் நடந்தது போலதான் முடியும்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  ஆயுளுக்கும் பிச்சை எடுப்பதற்கு தயார் செய்துவருகின்றார்.

 • sudharshana - Aukland ,நியூ சிலாந்து

  வளமையாக இருக்கும் அனேக சலுகைகள் உள்ள ஸ்வீடனில் கூட இப்படி கொடுக்கவில்லை. . மக்கள் மீதுதான் தவறு . தங்கள்/ அரசாங்கம் இரண்டிற்குமே உள்ள தகுதிக்கு மீறி எதிர்பார்க்கிறார்கள்... லஞ்சத்திற்கு இவர்களே ரோடு போடுகிறார்கள். மிக ஏமாற்றமே

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  4 கோடி லட்சம் கடன் 15 லட்சம் கோடி கடனாக மாறிவிடும்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ஆறுகள் ஆக்கிரமிக்கப்பட்டதால்தான் சென்னைக்குள் வெள்ளம் வந்தது. கடலுக்கு நீர் போய்ச் சேரமுடியவில்லை. இந்த ஆக்கிரமிப்புக்களை முழுமையாக அகற்றுவோம் வெள்ளம்வராமல் காப்பாற்றுவோம் என்று இரு திராவிடக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. இலவசங்களைவிட இது முக்கியமில்லையா? அல்லது ஆக்கிரமிப்புக்ளே இவர்களுடையதுதானா? சந்தேகமேயில்லை

 • sudharshana - Aukland ,நியூ சிலாந்து

  நெல்லை பாபு இவ்வளவு சொன்னீங்க நல்லதுதான். ஆனா ஒன்னு முக்யமா விட்டு விட்டீங்ககளே, அதான் பொது கழிப்பிடமும் அதை பராமரித்தலும். அதுபற்றிய விழிப்புணர்வும்.

 • RAMAN - Chennai,இந்தியா

  எது எப்படியோ, திமுக இத் தேர்தலில் தோர்க்க வேடும். அதுதான் தமிழகத்துக்கு நல்லது. இல்லையேல், கருணாநிதி செய்த தவறை ஸ்டாலின் செய்யமாட்டார். அவர் உடனே தன் மகனை அரசியலில் ஈடுபடுத்தி விடுவார். அது கழக ஆட்சி தொடர வழிவகுக்கும். ஆதலால் திமுக தோற்பது அவசியம், ஆதற்கு ஜெயா ஜெயிக்க வேண்டும். பின் அடுத்த 5 ஆண்டுக்குள் இவர் நிலையும் மாறும் - ஜெயில் அல்லது உடல் நல குறைவு. இவர் சென்றபின், இரண்டும் கழகங்களும் ஒழிந்து விடும். பின் நல்லாட்சி தமிரை போல் மலரும், கண்டிப்பாக அடுத்த தேர்தலுக்குள்.

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  அதிமுக மகத்தான வெற்றி பெறும் .இரண்டு கெட்ட சக்திகளுக்கு பெரிய வேட்டு வைப்பார் ஜெயா . 1-scv கேபிள் கூட்டம்.2-வைகுண்டராஜன் granite கூட்டம்.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///11, 12-ம் வகுப்பு மாணவர் களுக்கு மடிக் கணினியுடன், கட்டணமில்லா இணையதள இணைப்பு வசதி வழங்கப்படும்.///11,12 மாணவர்களுக்கு லேப்டாப் என்பது மிக தவறானது, +2 மாணவர்கள் தேர்ச்சி அடைந்து கல்லூரிகளில் சேரும் பொது வழங்குவதே சரி, +2 வில் என்பது தவறான பாதைக்கு வழிவகுக்கும். மீண்டும் மீண்டும் தவறான பாதைக்கு இட்டு செல்லாதீர்கள், அதுவும் இணையதள வசதிகளுடன் என்பது மிகவும் தவறு.

 • Panneer - Puduchery,இந்தியா

  செயல்படுத்த முடியாத அத்தியாவசியமில்லாத இனாம்களை உள்ளடக்கி தேர்தல் அறிக்கைகளை வெளியிடும் கட்சிகள் உடனடியாக தடை செய்ய தேர்தல் ஆணையம் முன்வரவேண்டும். நாளைக்கு வெளிநாட்டுகாரன நாட்டையே விற்க துணிந்த தேச துரோக கட்சி மூலம் தலைக்கு மாதா மாதம் பத்தாயிரம் கொடுக்கிறேன் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டால் தேர்தல் ஆணையம் அனுமதிக்குமா? அரசமைப்பு சட்டத்தில் நலிந்த பிரிவினருக்கு உதவ வழி காட்டு நடைமுறைகள் உள்ளனவே?தேர்தலை தலிபோடுவது தான் தற்போதைய சூழ் நிலைக்கு ஏற்றது..

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக் கப்படும். தமிழ்நாட்டில் முகாம் களிலும், முகாம்களுக்கு வெளியே யும் உள்ள இலங்கைத் தமிழர் களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.///இந்த ஐந்து வருடத்தில் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், எத்தனை கடிதம் எழுதினீர்கள், எத்தனை முறை நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தீர்கள், பிரதமரை சந்தித்தீர்கள், இப்போ மட்டும் நாடகம் ஏன்?

 • Appu - Madurai,இந்தியா

  இந்த 1.14 கோடி பணத்த மக்களின் பொது வாழ்கை முன்னேற்றத்திற்கு தேவையான சில பல காரியங்களை செய்தால் மக்களும் தமிழகமும் முன்னேறும்....இது போன்ற அர்த்தமற்ற பல தனிநபர் தேவைகளுக்காக வாரிவழங்க அறிக்கைவிடுப்பது ஆரோகியமான விஷயம் அல்ல..இதனால் தமிழகத்தின் தரம் மேலும் தாழ்ந்துமட்டும் தான் போகும்...தமிழக மக்கள் இதற்கு துணை போகாமல் இவர்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டிய அவசியம் உள்ளது...மக்கள் உணர்ந்து தேர்தலில் குறிப்பிட்ட அரசியல்வியாதிகளுக்கு உரைக்கவைப்பார்களா???

 • Ramvi - Salem,இந்தியா

  இவை அனைத்தும் நடக்கும் என்று எண்ணி வாக்களிக்கும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற தேர்தல் அறிக்கைகள் தொடரும்.

 • தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்

  .தமிழக கடனை குறைப்பேன்....110 விதி திட்டங்களை நிறைவேற்றுவேன்...விஷன் 2023 திட்டத்தை முடித்து காட்டுவேன்..இது அம்மையார் சொன்னது...கடந்த ஐந்து ஆண்டில் செய்து முடித்தாரா ? அதற்குள் மீண்டும் 1.14 லட்சம் கோடிக்கு இலவச அறிவிப்புகள் ....இந்த முறை இலவசம் மக்களை வசப்படுத்தாது...மாறாக....இலவசத்தை அறிவித்த அம்மையாரை கொடநாடு எனும் வனவாசத்திற்கு அனுப்பி வைக்கும்....

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  நம்மை நாமே மிதித்தும் அடிமை பட்டவனாய் இருந்து கொண்டிருபதற்கு இது சாட்சி

 • தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்

  நான்கு லட்சம் கோடி அரசு கடன்...வட்டி மட்டும் 30,000 கோடி...110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட மொத்த திட்டங்களை நிறைவேற்ற ஒன்றரை லட்சம் கோடி பற்றாக்குறை ...இது போக 15 லட்சம் கோடி மதிப்புடைய விஷன் 2023....இந்த நிலையில்....1.14 லட்சம் கோடிக்கு இலவச அறிவிப்புகள்...தூதூதூ....இது ஒரு கட்சி...அதுக்கு ஒரு தேர்தல் அறிக்கை...இதில் சொன்னதை செய்வேன்....சொல்லாததையும் செய்வேன் என்ற வசனம் வேறு...கருமம் கருமம்

 • Raj - Chennai,இந்தியா

  முடியை கட்டி இழு, வந்தால் மலை , இல்லையேல் ..............வெற்றி பெறுவதானால் தானே கருத்தோடு நடக்குமா என சிந்தித்து சொல்லவேண்டும் 6 கட்சி கூட்டணி, நாம் தமிழர் கட்சி இவையெல்லாம் கூடத்தான் வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளனர்

 • Panneer - Puduchery,இந்தியா

  இலவசத்தினை தேர்தல் அறிக்கையில் சொல்லி ஆட்சியை பிடிப்பது பின்னர் ஆட்சிக்கு வந்தவுடன் ஒட்டுமொத்தமா ஊழல் செய்து கோடி கோடியாக கொள்ளையடிப்பது,,கொள்ளையடித்த பணத்தை கொண்டு அனைத்து அதிகாரம் பெற்ற நீதி துறை,தேர்தல் கமிஷன்,கணக்கு துறை தலைவர் ஊழல் கண்காணிப்பு அமைப்புகளை சரிகட்டுவது போன்ற ஜனநாயக படுகொலைகள் தமிழ் நாட்டில் ஆளும்& ஆண்ட கட்சிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது.. தமிழ் நாட்டில் உள்ளது போல ஒரு மோசமான ஆட்சியை உலகில் வேறெந்த நாட்டிலும் காண முடியாது..நீதி மன்றத்தால் தண்டிக்க பட்டவர் விடுதலை பெற்றது விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு நிலுவையில் இருக்கும்போதே தேர்தலில் நிற்க அனுமத்த தேர்தல் கமிஷன் ,மற்றும் உச்ச நீதிமன்றம் இரண்டுமே தடுமாறி தள்ளாடிவிட்டது..தற்போது அடுக்கடுக்காக மக்களை ஏமாற்றும் சலுகைகளை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளதை நம்பி மக்கள் ஏமாறுவது திண்ணம்..எவனாவது அரசமைப்பு சட்டத்தில் உள்ள வழி காட்டு நெறிமுறைகளில் குடியை தடுப்பது அரசின் கடமை என்பதை தமிழக ஆளும் கட்சிக்கு எடுத்து சொல்ல முன்வந்து செயல் பட முடியுமா? மத்தியில் ஆளும் கட்சி பெரும் தலைவர்களே தமிழ் நாட்டில் ஆட்சி செய்யும் தலைமையின் ஊழல்களை கண்டு வானளாவ வியக்கின்றனர்..உச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலுக்கு முன் வரப்போவதில்லை..வாதாடிய வக்கீலே இப்போ உச்சநீத்மன்றத்தில் நீதிபதி ? என்ன ஒரு நேர்மை நீதி துறையில்? அள்ளி விட்ட வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஆளும் கட்சியை 230க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்படி வாக்களிப்பார்கள்.இந்த சூழ் நிலையில் தேர்தல் நடத்துவது வீண்? தேர்தலை நடத்தாமலே சட்ட மன்றத்தினை ஒப்படைத்து விடலாம்.. புகழ் பாடுவதற்கும் தாளத்தோடு கைதட்டவும் தவிர வேறொன்றும் அறியாத MLA க்கள் அமைச்சர்கள் வேறென்ன சாதிக்க போகிறார்கள் ? தேர்தல் கமிஷன் அப்பாவி வணிகர்களிடமிருந்து வழிப்பறி செய்தது லாபம் தானே.?

 • Vasanth Kumar - Chennai,இந்தியா

  பணம் கட்டும் போதே மின்சாரம் ஒழுங்கா கிடைக்கல இதுல இலவச மின்சாரமா ? ஆட தெரியாதவ ரோடு கோணம் சொன்ன மாதிரி ,மக்களே தயவு செய்து சிந்தித்து வோட்டு போடுங்க ,தோத்திடுவோம் என்ற பயத்துல அறிவிப்ப அள்ளி விடுது இந்த மகராசி

 • தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்

  கண்ணிற்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை...234 தொகுதிகளும் நமதே...என முழங்கிய அம்மையார்....இன்று எதற்கு இலவசங்களை அள்ளி வீசுகிறார் ? பால் விலையை ஏற்றிய போது...அதனை நியாயபடுத்திய அம்மையார் இன்று பால் விலை குறைக்கப்படும் என சொல்ல வேண்டிய அவசியம் என்ன ? மதுவிலக்கு சாத்தியமே இல்லை என கொக்கரித்த அம்மையார்....இன்று படிப்படியாக மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என சொல்ல வேண்டிய அவசியம் என்ன ? விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டங்கள் நடத்திய போது...மௌனமாக இருந்த அம்மையார்...இன்று விவசாய கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன ? இதற்க்கு காரணம் "பயம்" என்ற ஒற்றை சொல் தான் ...தோல்வி தெரிந்து விட்டது....முடிவு நெருங்கி விட்டது....இறுதி முயற்சியாக ICU வில் வைத்து இலவசம் எனும் ஜிகுனா வேலையை கொண்டு உயிர்தெழ அம்மையார் முயற்சி செய்கிறார்...அதுவே அம்மையார் வெளியிட்ட இந்த தேர்தல் அறிக்கை

 • Jayaraman Duraisamy - Trichy,இந்தியா

  என்ஜின் ஜாம் ஆன வண்டிக்கு பெட்ரோல் போட்டால் என்ன? போடவில்லை என்றால் என்ன? அது காயலான் கடைக்கு போக வேண்டியதுதான் (கொடநாடு).

 • chinnamanibalan - Thoothukudi,இந்தியா

  தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் கடன் தொகை இரண்டு லட்சம் கோடிகள் ஆகும். மீண்டும் அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் பத்து லட்சம் கோடிகளாக கடன் தொகை உயர்ந்து, தமிழகம் திவாலாகி விடும்.அதன் பின்னர் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற இயலாது என்பதே உண்மை.

 • tamil mohamed - najran,சவுதி அரேபியா

  சகோதரர்களே கடந்த 50 ஆண்டுகளாக கழக கட்சிகளுக்கு வோட்டு போட்டு தமிழ்நாட்டை பாதி சுடுகாடாய் மாற்றி விட்டோம் , மீண்டும் அதே தவறை செய்து முழு சுடுகாடாய் மாற்றிவிடாதீர்கள், வரும் தலைமுறைக்காவது நல்ல சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், ஆகையால் திராவிட கட்சிகளை புறகணிப்போம், தற்போது தமிழக அரசியலில் ஆரோகியமான சூழ்நிலை (மாற்றத்திற்கான வழி, 5 முதலமைச்சர் வேட்பாளர்கள்) இதை நாம் சரியாக பயன் படுத்தி கொள்ள வேண்டும், இல்லையேல் நம் வருங்கால தலைமுறையினருக்கும் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு கேள்வி குறியே.... தற்சமயம் சீமான் மற்றும் அன்புமணி மட்டுமே அதற்கான வழிகளையும் செயல்முறைகளையும் முன் வைக்கிறார்கள், ஆனால் இவர்களின் செயல்களில் நம்பக தன்மையும் , நிலை தன்மையும் , பரிசோதிக்க வேண்டிய நிலையில் நாம் இருப்பதால் இவர்களுக்கு அடுத்த தேர்தலில் வாக்களிப்போம்... தற்போது திராவிட கட்சிகளுக்கு அடுத்து அனுபவம் வாய்ந்த ம.ந.கூட்டனிகு வோட்டுகளை சிதறவிடாமல் ஒரு(மாற்றத்தை) வாயுப்பு அளிப்போம்,, 5 வருட ஆட்சியில் அவர்களின் செயல் பாடுகளை அறிந்து கொண்டு தொடர் வெற்றி கொடுப்போம்,,, இல்லையெனில் இவர்களையும் அடுத்த தேர்தலில் திராவிட கட்சிகளை போல் விரட்டி அடிப்போம் .... பின் அந்த 5 வருடத்தில் நம் தேவைகள் மற்றும் முன்னேற்றத்தை முன்னிறுத்தும் சீமான் அல்லது அன்புமணியின் நம்பகத்தன்மையை அறிந்து 2021 ல் வாக்களிப்போம்... இதுவே சரியான சந்தர்ப்பம் நம்மை ஏமாற்றும் கட்சிகளை ஒழிக்கவும், நமக்கான அரசியல் தலைவனை அடையாளம் காணவும்.... சகோதரர்களே தயவு செய்து தற்சமயம் நிகழும் மாற்றத்திற்கான வழியை தவறவிட்டு விட்டு மீண்டும் திராவிட கட்சிகளை அரியணை ஏற்றதீர்கள்..... கடன் தள்ளுபடிகளையும், இலவச அறிக்கைகளையும் நம்பி ஏமாறாதீர்கள்... பால், பஸ் கட்டணம் , மின்சாரம் என நம் அத்திவாசிய தேவைகளின் விலைகளை உயர்த்தியும் எப்படி தமிழக கடன் 4 இலட்சம் கோடி வந்தது எல்லாம் இந்த பாழாபோன இலவசமே....

 • rmr - chennai,இந்தியா

  இத யாரும் நம்ப போறது இல்ல இந்த உருப்படாத கழகங்கள் ஒழிந்தால் தான் தமிழகம் வளரும் . தேவை மாற்றம் முன்னேற்றம்

 • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

  இதை எல்லாம் செய்யுறதுக்கு நிதி எங்க இருந்து வரும்? மாநில அரசுக்கு வருவாய் வரி மூலம் தான் வருகிறது. அந்த வரி மக்கள் பணம் தான். வரி கட்டுபவனை எப்படி பிழிந்து எடுத்து அல்லது நடுவண் அரசிடம் பணம் வாங்கித்தான் இதை செய்ய முடியும். சில லட்சம் கோடி பற்றாக்குறை உள்ள தமிழக நிதி நிலைமை ஏற்கனவே மோசமாகத்தான் உள்ளது. இதை மேலும் செய்தால் மாநில அரசு திவாலாகிவிடும். அல்லது நல்ல திட்டங்களுக்கு அரசிடம் பணம் இருக்காது. சுடுகாட்டுக்கு அல்ல நரகத்துக்கே வழி வகுக்கும் இந்த தேர்தல் அறிக்கை.

 • D.RAMIAH - RAIPUR,இந்தியா

  எல்லாமே எங்களுக்கு இலவசமாக கொடுத்து விட்டால், நாங்கள் ஏன் வேலைக்கு போகவேண்டும் - மேலும் ஒரு கோரிக்கை - மதியானம் சாப்படும் - இரவு சாப்படு - காலை காப்பி - டூ வாரத்திற்கு ஒருமுறை பிரிய்யானி இலவசமாக சப்ளை செய்யுங்கள் போதும் எப்போதும் அம்மாதான் ஜெயிப்பார்கள்

 • Govalu - chennai,இந்தியா

  தமிழகம் தப்புமா எதிர்பார்கிறோம்.... தமிழக மக்கள் சரியான மரண அடி கொடுக்க வேண்டும்... திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.....

 • L.N.Ramesh - madurai,இந்தியா

  இலவசங்கள் அறிவிச்சாச்சு.இனி அதிமுக வில் ஜெயலலிதா சசிகலா கூட்டணி அடுத்த கொள்ளை அடிப்பதற்கு தயார். இனி எதிலெல்லாம் கைவைக்க போகிறார்களோ .இவர்கள் ஜெயித்தால் இனி தமிழ் நாட்டில் யாரும் வாயை திறந்து பேசுவதற்கு ஜெயலலிதா அம்மையாரிடம் கேட்டுத்தான் பேசமுடியும் என்ற நிலைமை உருவாகிவிடும். நிச்சயம் உறுதியாக நடக்கும்.வாழ்க தமிழ்நாடு. வாழ்க தமிழ் மக்கள்

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  ஏற்கனவே 110விதியின் மூலம் எங்களுக்கு 111 போட்டீங்க இவ்வளவு கடன் சுமையிலும் இலவசங்கள் இனி அவசியமா மக்கள் இனி உங்களை நம்ப தயாரில்லை ஜெயாவே மீண்டும் இந்த முறை அவர் தொகுதியில் தோற்பது உறுதி

 • Franklin Kumar - Chennai,இந்தியா

  இலவசத்தை நம்பி ஏமாறவேண்டாம் சொன்ன எதையும் அவர்கள் செய்ய போவது கிடையாது அ தி மு க வுக்கு வோட்டு போடுவது தற்கொலைக்கு சமம் மக்களே உஷார்

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  16671 கிராமங்கள் 5 சிறு தொழில் =83355 சிறு தொழில்சாலைகள் 8335525(55) நபர் = 2083875 குடும்பம் நிரந்தர வருமானத்துடன் சந்தோசபட்டலும் நான் சற்றே மகிழ்வேன் என் தமிழனின் நிலை கண்டு . தி மு க ,அ தி மு க மற்றும் சில கட்சிகள் தமிழனை தலை நிமர வைப்பது கடினமே .மக்களுக்கு என்ன தேவை என்று இன்னும் இவர்களுக்கு தெரியவில்லையா ? இவர்கள் எம் மக்களை, நாம் உருவாக்கிய அரசை நமக்கான தேவைகளை செய்வதற்கு நாம் அனுமதிப்போம் மாறாக அவர்களிடம் நம்மை பிச்சை கேக்க வைப்பது போல் அல்லவா இருக்கிறது . விவசாயி களுக்கும் விவசாயத்திற்கும் ஒன்றும் அதிகம் செய்ய வேண்டாம் . நீர்நிலைகளை மற்றும் நீர் வழித்தடங்களை சரி செய்தால் போதும் . பெண்களுக்கு என்ன தேவை என்று முடிவு செய்வது யார் ? எங்கோ ஒரு தமிழ்நாட்டின் முடிக்கில் இருக்கும் தமிழ் பெண்ணிடம் கேளுங்கள் சொல்லுவாள் ..'' எம் மக்களுக்கு மேல் மக்களுக்கு இணையான கல்வி என்று ''-இதை யார் செய்வார்கள் ? நல்ல மிக நல்ல அரசு மக்கள் தேவை என்ன என்பது தெளிவாக தெரிந்தும் மாற்ற முடியாத அரசியல் சுழல் இங்கு இருகின்றது ஊடகங்கள் சொல்லியும் ஆகிவிட்டது . பணத்தை வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைக்கும் பச்சை தமிழர்களிடம்(அரசியல் தலைகளிடம் ) நான் கேட்கிறேன் ,உங்களால் அடுத்த தலைமுறைக்கு நல்ல நீர் ,காற்று ,மண் விட்டு வைத்து போக முடிய வில்லை என்று என்று நீங்கள் கண்ணீர் விடுகின்ரீரோ அன்று தமிழனின் நிலை மாறும். ஏன் என் ஒரு ஓட்டில் ஒரு பெரிய மாற்றம் நிகழ போவதிலை. என்னால் என் ஊரை மாற்ற முடியும் .

 • ravi - coimbatore,இந்தியா

  இந்த அறிக்கை எல்லாம் நடைமுறைக்கு வரவே வராது.. இது தான் உண்மை... புளுகு மூட்டை மீண்டும் மிக பெரிய புளுகு முட்டையை அவிழ்த்து விட்டு இருக்கு ....

 • Govalu - chennai,இந்தியா

  எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ஒங்களோட இந்த தேர்தல் அறிக்கையில் சத்தசபையை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யும் அறிவிப்பு இருக்கிறதா, அதற்க்கு கையால் ஆகுமா உங்களால், அதற்கு வக்கிருக்கிறதா ?

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ஓடினார் ஓடினார் விரக்தியின் எல்லைக்கே ஓடினார், எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில், எப்பாடு பட்டாவது, அந்த நாற்காலியை விட்டுவிடக்கூடாது என்று முடிவு செய்து, கனவிலும் நினைத்து பார்க்க முடியாத திட்டங்களை அறிவித்து ஏமாற்றுகிறார். இதற்க்கு எப்படி நிதி வரும், ஏற்கனவே அரசின் மொத்த கடன் சுமார் 5 லட்சம் கோடிகள் அதன் வட்டி மட்டுமே அரசுக்கு ஆண்டுக்கு 35000 கோடிகள் வரும், இந்நிலையில் படிப்படியாக மதுவிலக்கு என்று அறிவித்து விட்டு, அதன் வருமானத்தை இழந்து, இந்த இலவசங்களை கொடுப்பது எவ்வாறு சாத்தியம். உதாரணத்திற்கு ஸ்கூட்டர் வாங்க 50% மான்யம் என்றால். மொத்த மக்கள் தொகையில் ஆண்டுக்கு குறைந்த பட்சம் 5 லட்சம் மகளிருக்கு வழங்கபட்டால் கூட, ஒரு வருக்கு ரூ 30000 மான்யம் என்றால் 15000 கோடிகள் வேண்டும், மற்ற அனைத்து இலவசஞளையும் நிறைவேற்ற எப்படியும் ஆண்டுக்கு 50000 கோடிகள் வேண்டும், இது எங்கிருந்து பெறப்படும். இவ்வளவு கடனை வைத்து கொண்டு, மேலும் கடன்பெற யார் தருவார்கள், 2.50 லட்சம் கோடி கடனுக்கே சத்தசபையில் OPS இது 80% கடனே, மேலும் நம்மால் 20% கடன் பெற முடியும் என்றார், அப்போ இந்த மொத்த கடனும் 20% க்குள் வருமா? விளக்குவார்களா?

 • ANAND - Chengalpattu,இந்தியா

  நீங்கள் சொல்வது புளுகு மூட்டையாகவே மக்கள் பார்கிறார்கள் .,மிக்சி கிரைண்டர் பேன் கொடுத்ததாக சொல்கிறீர்கள் எங்கள் குடும்பத்தில் நான் என் அண்ணன் என் தம்பி யாருமே வாங்கவில்லை / கிடைக்கவில்லை காரணம் என் அண்ணன் சீனிக்கான கார்டு (வைட் கார்டு) என் தம்பி மூன்று ஆண்டுகளுக்கு முன் என் தந்தையார் கார்டில் இருந்து பிரிந்து புது கார்டு வாங்கினார் , நான் மூன்று ஆண்டுகளுக்கு முன் வேறு ஊருக்கு மாற்றம் செய்து வந்தேன் என்னைபோல கோடிக்கணக்கானவர்களுக்கு இலவசங்கள் கிடைக்க வில்லை , அனைவர்க்கும் கொடுத்தேன் என்று பொய் சொன்னால் அ தி மு க அரசு மீது வழக்கு தொடுப்பேன் என்று எச்சரிக்கிறேன் ...

 • Robinson Robinson - Tuticorin,இந்தியா

  இதுவும் 110 விதி அறிவிப்புகளின் தொடர்ச்சி ...

 • rhaj - chennai,இந்தியா

  கடந்த முறை ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களே நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் பால் விலை, பஸ் கட்டணம், மின் கட்டணம் உயர்த்த வேண்டிய அவசியம். எனவே நாட்டு நலன் கருதி மக்கள் பொறுத்துகொள்ள வேண்டும் என்றார். இன்று தேர்தல் காரணமாக பால் விலை குறைக்கிறேன் இலவச மின்சாரம் தருகிறேன் என்கிறார்.

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  110 விதிய கூட மறந்துரலாம் .. "தமிழ்நாடு விஷன் 2023" னு ஒரு புக்கு வெளியிட்டீன்களே .. அத நெனைக்கும் போது தான் ஆத்திரம் அதிகமாகுது .. அதுல இருக்குற ஒன்னாவது செஞ்சீங்களா ?? அந்த புக்கு மொத்தமா எத்தன பிரதி எடுத்தீங்க .. தூ

 • ANAND - Chengalpattu,இந்தியா

  உங்களை கேட்டு கேட்டுத்தான் ஒவ்வொரு செயலையும் செய்யவேண்டும் என்று இருப்பதால்தான் சென்னையில் மக்கள் செத்து ஒழிய நேர்ந்தது .,

 • ANAND - Chengalpattu,இந்தியா

  கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வது எதற்கும் உதவாது., மக்கள் எளிதில் அணுகும் தலைவர்கள் தான் தேவை .,

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  மின்சார உற்பத்தி பண்ணுறதுக்கு எந்த திட்டமும் இல்ல.. இதுல அத வேற இலவசமா தருவாங்களாம் .. ஏன்டா இப்படி மக்களை ஏமாத்துறீங்க

 • krishnamoorthy - chennai,இந்தியா

  இவ்வளவு இலவசங்களை தருவதற்க்கு பதில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் உற்பத்தியாகும் எந்த ஒரு பொருளுக்கும் வரியே கிடையாது, பெட்ரோல், டீசல் வரி முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தால் தொழில், மற்றும் சேவை நிறுவனங்கள் லஞ்சத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும். வேலைவாய்ப்பு இருக்கும்.

 • S THIRUPUGAZH ARASU - Pudukkottai

  மக்களை பிச்சைகாரர்களாக பாவிக்கின்றது இந்த வெற்று தேர்தல் அறிக்கை

 • krishnamoorthy - chennai,இந்தியா

  இதற்க்கு கருத்து தெரிவிக்கும் பலரும் தங்கள் விலாசம் மேலை நாடு என்று காட்டுவது உண்மையானால், இவர்கள் அனைவரும் கபடதாரிகளே. உழைக்காமல் இவர்கள் வேலைசெய்யும் நாடுகளில் இலவசமாக என்ன கொடுக்கிறார்கள். அரபு நாடுகளில் அவர்களுக்கு இயற்கை கொடுத்தகொடையை நம்பி குடிமக்களை அமைதிபடுத்தவே இலவசம். அதாவது இந்த அரபு நாட்டு அதிபதிகளின் எதேச்சதிகாரம் செல்லுபடியாகவே, மேலை நாட்டினரால் இது நடக்கிறது. அட இந்த மகாராணியாவது கிரானைட், மற்றும் கனிமவள கொள்ளையில் தான் மக்களுக்கு இலவசம் என்று வெளிப்படையாக அறிவிக்கலாமே.? டாஸ்மாக் மேலும் ஒரு உபரி வருமானம். ஆக "அம்மா" ஒரு குட்டி ஷேக். சசிகலா பரிவாரம் இவரது அரண்மனை சுகவாசிகள்.

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  மாநிலத்தில் உள்ள நதிகளை சுத்தபடுத்த .. ஏரி குளங்களை தூர் வார .. உட்கட்டமைப்பு மேம்பட ... தொழில் வளம் பெருக.. இப்படி எந்த ஒரு முன்னேற்றத்திற்கான அறிவிப்பும் இல்ல ... இத படிச்சிட்டு குப்பையில விசுனா அது கூட காரி துப்பிரும் .. வந்துட்டானுக ஓட்டு கேட்டு கிட்டு ..

 • Robinson Robinson - Tuticorin,இந்தியா

  விதி 110 அறிவிப்புகள் தொடர்கிறது ...... தொடர்கிறது........

 • Palani Baba Thani Oruvan - Vyasarpadi, Chennai,இந்தியா

  சுமார்

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  வேலை கிடைக்காதவர் கல்வி கடனை, அரசே செலுத்தும் .. வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேல ... ஏம்பா நான் சரியாய் பேசுறேனா ??

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  100 யூனிட் இலவச மின்சாரம் 78 லட்சம் குடும்பங்களுக்கு என்பது தான் இந்த தேர்தலின் HIGH LIGHT ...இதன் மூலம் கருணா குடும்பத்துக்கு மிக பெரிய ஆப்பு உள்ளது... ஏனென்றால் 78 லட்சம் குடும்பம் என்றால், ஒரு குடும்பத்தில் 4 பேர் என்றாலும் ரெண்டே கால் கோடி அடித்தட்டு மக்கள் பயன் அடைவார்கள்... இவர்களில் ஒன்னரை கோடி மக்கள் அதிமுகவுக்கு ஓட்டுபோட்டால் கூட அதிமுக ஸ்வீப் ஆகிவிடும்..திமுக சிலிப் ஆகிவிடும்... இது ஒரு வாக்காளர் எண்ணிக்கை கணக்கு.. இதனை விட பெரிய PSYCHOLOGICAL மனக்கணக்கு ஒன்றை இதில் ஜெ, கருணா மற்றும் சுடாலின் குடும்பத்துக்கு வைத்துள்ளார்... அதாவது கருணா மற்றும் சுடாலின் ஆகிய இருவரும் மக்களிடம் சென்று, இந்த அம்மையாரால் , எப்படி இலவசம் மின்சாரம் கொடுக்கமுடியும் என்று கேட்டால் , மக்கள் என்ன பதிலடி கொடுப்பார்கள், " உனது ஆட்சியில் தான் மின்சாரமே 10 மணி நேரம் இல்லையே...இந்தம்மா ஆட்சியில் மின்வெட்டு இல்லை..மின்வெட்டை வெட்டிய இந்தம்மாவால் இலவச மின்சாரம் கொடுக்க முடியாதா? " என்று எடக்குமடக்கா கேட்பார்கள்... அதாவது, இவர்கள் இலவச மின்சாரம் சாத்தியமா ? என்று பேச பேச. இவர்களது ஆட்சியின் மின்வெட்டை மக்களுக்கு இவர்களே ஞாபக படுத்து வதுபோல ஆகும்... இது தான் சதுரங்கத்தில் வைக்கப்பட்ட PSYCHOLOGICAL செக்... .திறமையற்ற மின்வெட்டு ஆட்சி நடத்திவிட்டு, இன்று நல்ல புள்ள வேஷம் போடும் கருணா மற்றும் சுடாலின் க்கு ஜெ " நறுக் : ன்னு வைத்துள்ள கொட்டு...

 • Vandhiyan - SanDiego,யூ.எஸ்.ஏ

  கபடவேடதாரிக்கு உதறல் எடுத்து இருக்கும் இந்தநேரம். அந்த உதறல் நிற்பதற்குள் தேர்தல் முடிவுகள் வந்து அடுத்த இடி விழும். அப்போ, தலீவருக்கு ஒரே ஆறுதல் புதிய சொந்தம் உரைகல் மட்டுமே.

 • Arunachalam Des - tirupur,இந்தியா

  எல்லாம் இருக்கறவங்களுக்கு அது இலவசம் ,இல்லாதவங்களுக்கு அது பெரிய விஷயம் .இது தான் உண்மை ..இலவசம் வேணாம் சொல்லறவங்க தான் முதல்ல வாங்குவாங்க.(டிவி,பேன்,மிக்சி ,ect).யாரும் இலவசம் வாங்காதீங்க அப்றோம் எப்படி குடுப்பாங்க ...............

 • Prakash JP - Chennai,இந்தியா

  ஓரிரு வரியில் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்... திமுக :- செயல்படுத்தக்க, ஆக்கபூர்வமான அறிவிப்புகள். தமிழக வளர்ச்சியை சாத்தியமாக்கும் வகையில், மாவட்டவாரியாக திட்டங்கள்.. முந்தைய ஆட்சி காலங்களில் அறிவித்த திட்டங்களில் ஏறக்குறைய 90% சதவீத திட்டங்களை நிறைவேற்றி முடித்து காட்டிய நம்பகத்தன்மை உள்ளவர்கள்.. அதிமுக :- செயல்படுத்தமுடியாத பொய்யான வாக்குறுதிகள். தேவையற்ற தரமில்லா பொருட்களை இலவசம் என்ற பெயரில் வீணடித்து, தமிழக கடனை மேலும் பல லட்சம் கோடிக்கு உயர்த்தும் திட்டங்கள். கொடுத்த வாக்குறுதிகளை, அறிவிப்புகளை நிறைவேற்றுவதில் நம்பகத்தன்மை இல்லாதவர்கள். சென்ற 2011 தேர்தலில் அதிமுக கொடுத்த வாக்குறுதிகள், மற்றும் இந்த ஐந்தாண்டுகளில் 110 விதியின் கீழே சட்டசபையில் ஜெயா வெளியிட்ட முன்னூறுக்கும் மேற்ப்பட்ட அறிவிப்புகளில் 15% சதவீத திட்டங்களை கூட நிறைவேற்றிகாட்ட வக்கில்லாதவர்கள். மநகூ, கேநகூ, பாமக நாம் தமிழர், பிஜேபி : ஆட்சிக்கே வரமுடியாதவுங்க ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம்.... ஆனா செய்யறதுக்கு??? அதுக்கு முதல்ல ஜெயிக்கனும்... அப்புறம் ஆட்சிய புடிக்கணும்... அதுவும் நாலு அஞ்சி தொகுதியில ஜெயிக்கிறது இல்ல... 120 சீட்டுகளுக்கு மேலே ஜெயிச்சி ஆட்சிய புடிக்கணும்.. இப்படி ஜெயித்து, அவற்றை செய்வதற்கு, நிறைவேற்றுவதற்கு திறமையும்.. திராணியும் வேணும்.. அது கலைஞருக்கும், திமுகவுக்கும் மட்டுமே இருக்கு... முந்தய ஆட்சிகளில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஏறக்குறைய 90% சதவீதம் நிறைவேற்றி நிரூபித்த தகுதியும் திமுகவுக்கு மட்டுமே இருக்கு.. இப்போதும் வெளியிடப்பட்டுள்ள திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளை, ஆட்சிக்கு வந்தவுடன், திமுக கண்டிப்பாக நிறைவேற்றியே தீரும்.. அதிமுக ஜெயாவைபோல, வெறும் பத்து சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சியல்ல திமுக.. கொடுத்த எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் கட்சிதான் திமுக..

 • babu - Nellai,இந்தியா

  என் மற்றும் என் மக்களின் ஒட்டு வேண்டும் என்றால் நாங்கள் எதிர்பார்க்கும் வேண்டுகோள் வேட்பாளரிடம் இருந்து ................ 1) ஓட்டிற்காக லஞ்சம் கொடுக்க கூடாது. 2) குழந்தைகள் படிக்கும் பள்ளியில் திறமையை அதிகரிக்க வேண்டுமே தவிர அவர்களின் சுமையை அதிகரிக்க கூடாது. 3) குழந்தைகளின் கல்வி முறையில் உள்ள வேறுபாடுகள்(CBSE , ICS , State Board , Metric ) நீக்கப்பட்டு ஒரே முறையில் கல்வி நடத்த அனுமதிக்க வேண்டும். 4) கல்வி கட்டணத்தை அனைத்து குழந்தைகளுக்கும், அனைத்து பள்ளிகளிலும் சீராக்க வேண்டும். ஏனென்றால் இது கண்டிப்பாக குழந்தையின் திறமைகளை வெளி படுத்த செய்யும். 5) அரசு, தனியார் என்று எந்த துறை ஊழியராக இருந்தாலும் வேலையில் சரியாக நடந்து கொள்ள வேண்டும். மீறினால் தகுந்த நடவடிக்கை பாரபட்சமின்றி எடுக்க வேண்டும். 6) இலவசம் என்று எங்களுக்கு எதுவும் வேண்டாம், இறைவன் கொடுத்த அழகான இரு கை, கால் உள்ளன. அதனை பயன் படுத்தி படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை அல்லது சுயமாக வேலை துவங்க கடன் கொடுத்தாலே போதும். 7) ஊனமுற்றோர்களுக்கு அவர்களுக்கு தகுந்த வேலை மற்றும் வசதிகளை வழங்க வேண்டும். 8) தங்கள் கட்சி கொடிகளை காரில் கட்டி கொண்டு மக்களை பயமுறுத்தும் எந்த ஒரு தொண்டனையும் அனுமதிக்க கூடாது. 9) அரசு மருத்துவ மனைகளில், அலுவலகங்களில் ஏழை மக்களை கேவலமாக பார்ப்பது மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும், சேவை செய்ய மறுக்கும் எந்த ஒரு அரசு ஊழியனும் (டாக்டர் முதல் தரை துடைப்பவர் வரை) உடனே தண்டிக்க பட வேண்டும். 10) நீர் நிலைகளை சுத்த படுத்த வேண்டும், அசுத்தங்களை அகற்ற வேண்டும், சாலைகளை சீராக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், என்ற பல கோரிக்கைகளை வெறும் வாய் அளவிற்கு மட்டும் பேசாமல் செயலில் இறங்கி சாதிக்க வேண்டும். 11) விவசாய மக்களுக்கு அவர்கள் மேல் உள்ள அழுக்கை, வியர்வை நாற்றத்தை பார்க்காமல், நுண் தொழில் நுட்பங்களை அறிய வைக்க வேண்டும், பருவ நிலைகளுக்கு ஏற்ப உள்ள மகசூல் லாபத்தை உண்டாக்கும் முறையை அறிய வைக்க வேண்டும். விவசாயி சிரித்தால் விவசாயம் செழிக்கும், விவசாயம் செழித்தால் நாடு விளங்கும்......... 12) எந்த ஒரு தொழிலும் ஏழை மக்களை சுரண்டும் இடை தரகர்களை ஒழிக்க வேண்டும். 13) அத்தியாவசிய பொருட்களை விலை ஏற்றத்தை கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும். 14) அனைத்து வசதிகளும் மக்களுக்கு தரமாக வழங்க வேண்டும், உதாரணம் ரேசனில் பொருட்கள் வாங்கும் போது தரமானதாக, சரியான எடை, ரேசன் ஊழியர் மக்களிடம் பழகும் முறை என்று அனைத்தும் நன்கு இருக்குமாறு அரசு அமைக்க வேண்டும். இதே போல் அனைத்து துறையும் (அரசு வங்கி, நகராட்சி, தாலுகா அலுவலகம்) 15) இலவசமாக பயணம் செய்யும் பள்ளி குழந்தைகள், முதியவர்கள் இவர்களிடம் அரசு முக்கிய அக்கறை காட்ட வேண்டும். 16) பாலிதீன் உபயோக படுத்துவதன் மூலம் ஏற்படும் தீமைகளை கடைநிலை மக்கள் வரை பொறுமையாக அவர்கள் உணரும் வரை உணர்த்த வேண்டும். கருத்தை பார்த்து சிரிக்க வேண்டாம், இதனால் பாதிக்க பட்டது என் குடும்பம் மட்டும் தனியாக அல்ல, நம் அனைவரின் குடும்பங்களும் தான்..... .... சிரித்து, சிரித்து நம்மை நாமே அசிங்க படுத்தி கொண்டு தானே இருக்கின்றோம் இன்னும். கொஞ்சம் சிந்தியுங்கள், நாம் பட்ட, படுகின்ற கஷ்டம் நம் குழந்தைளை பாதிக்ககூடாது என்பதில் நாம் மன உறுதியுடன் இருக்க வேண்டும், சிறந்து உழைக்க வேண்டும்.............. இலவசங்களை கொடுக்க வேண்டாம் இளிச்ச வாயனாக மாற்ற வேண்டாம்........ .............நன்றி .................

 • Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா

  இது தேர்தல் அறிக்கை இல்லை இந்த அம்மா ஆளும்போது நிறைவேற்றாத பணிகளை அடுத்த ஐந்தாண்டு நீங்கள் கொடுத்தால் முயற்சிக்கிறேன்னு சொல்றாங்க... ஒருவேளை தீர்ப்பு வந்துட்டுனா 15 வருஷம் காத்திருக்கணுமா?

 • Mohan Babu.L - Trichy,இந்தியா

  எல்லாம் இலவசமா குடுத்து மக்களை சோம்பேரி ஆக்கிடாங்களே...

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  வீட்டுல ஒருத்தருக்கு ஆத்தா வேல தருதாம் . ஏண்டா கேக்குறவன் கேணயனா இருந்தா ......... ....

 • Arvind Bharadwaj - Coimbatore,யூ.எஸ்.ஏ

  அடுத்த அஞ்சு வருஷத்துக்கான உறுதிமொழிகளை படிக்கறதை விட போன அஞ்சு வருஷத்துல அதிமுக என்ன கிழிச்சுதுன்னு தெரிஞ்சிக்கறது இந்தக் கட்சியோட தராதரம் & நிர்வாக லட்சணத்தை நல்லாவே புரிஞ்சுக்க உதவும். 2011 தேர்தல்ல பெரிய்ய ஆதரவோட ஆட்சியமைச்ச உடனே பால் விலையில 50% உயர்வு (ஆட்சிக்கு முன்பு லிட்டர் ரூ. 16. ஆட்சிக்குப் பின் லிட்டர் ரூ. 23), பேருந்துக் கட்டணம் 50% உயர்வு (ஆட்சிக்கு முன்பு 33 பைசா/கிலோ மீட்டர். ஆட்சிக்கு வந்த பின் 50 பைசா/மிலோ மீட்டர்), ஓட்டை உடைசலான அரசுப் பேருந்துகள் பெரும்பாலானவற்றை விரைவுப் பேருந்தாக மாற்றிவிட்டு கூடுதல் கட்டணமாக ரூ. 10 வசூலிப்பது அதிமுகவின் மற்றுமொரு சாதனை, அம்மையாரின் ஜோதிடர் இவருக்கு பச்சை நிறம் ராசி என்று கூறிவிட்ட ஒரே காரணத்தால் தமிழகத்தில் ஓடும் பெரும்பாலான பேருந்துகள் பச்சை நிறம் அடிக்கப்பட்டு அசிங்கத்தின் அவதாரமாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பதும் இன்னொரு சாதனை, ஓட்டை உடைசலான பேருந்துகள் உடைந்து சக்கரத்தின் அடியில் சிக்கி குழந்தைகள் உட்பட மரணித்தது இமாலய சாதனை, மின்சாரக் கட்டணம் அதிரடியாக 50% உயர்த்தி மக்களுக்கு ஷாக் கொடுத்தது (ஆட்சிக்கு முன் ரூ. 3 /யூனிட் ஆட்சியமைத்தபின் ரூ. 4.50/யூனிட்) என்று அதிமுக ஆட்சியின் அவலங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் ஈடுகொடுப்பதர்காக வேண்டி மக்களுக்கு டாஸ்மாக் சரக்கை தனது மிடாஸ் நிறுவனம் மூலம் ஊற்றிக் கொடுத்த புண்ணியவதி இந்த சீரங்கத்து சீமாட்டி. மோசடிகளிலும், அயோக்கியத்தனங்கள் புரிவதில் தான் திமுகவுக்குச் சற்றும் சளைத்தவரில்லை என்று பட்டவர்த்தனமாகக் காட்டியது அதிமுக.

 • Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா

  இந்த தேர்தல் அறிக்கை மே 19 வரை மட்டுமே செல்லும். அதுக்கப்புறம் உங்களுக்கும் ப ப உங்க அப்பனுக்கும் ப ப....

 • Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா

  இந்த தேர்தல் அறிக்கையில் எல்லாமே அடுத்த ஐந்தாண்டுகளில் அடுத்த ஐந்தாண்டுகளில் என்று எல்லா அறிக்கையும் விட்டுருக்கிறார்கள் அப்போ ஆளும்போது என்ன பண்ணினார்கள். அவர்கள் மனசாட்சி அவர்களையே உறுத்துக்கின்றன...

 • gggggg - llllll

  last time they said we are going to give you this and that finally they said this is only for below poverty line. Now they are doing the same vote for no vote

 • Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா

  த்தூ.....

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ஸ்கூட்டர் TVS தானே, இங்கே எல்லோருக்கும் தெரிஞ்சிடுத்தூ டீல் ஓகே வா, வேணு ஸ்ரீனி ஹாப்பி அண்ணாச்சி.

 • annaidhesam - karur,இந்தியா

  இலவசங்களுக்காக ஓட்டுபோட்டு ..ஓட்டாண்டியாக போகும் நம் மக்கள் திருந்துவார்களா.. நாம் தமிழர் கட்சி எவ்வளவோ தேவலாம்..

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  இன்று விஜய் தன் ரசிகர்களுக்கு திமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்கும் படி சொல்லி விட்டார் கமல் ரசிகர்களும் அதே போன்ற முடிவில் இருக்கிறார்கள்.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///தமிழகத்தில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி கிடையாது///இது நடைமுறைக்காகாது. சாத்தியமில்லாதது.

 • Jagadeesan V - chennai,இந்தியா

  தினமலர் அவர்களே,உங்கள் பட்டாசு கார்டூன். புச்வானமாகி விட்டதா, இல்லை குருவி வெடியா அல்லது ஆட்டம் பாமா. எதுவும் இல்லை. எதிர்பாராத சுனாமி ஆகி விட்டது. நீரே கூறி உள்ளீர், எதிர்பாராத அறிக்கை என்று. அம்மா 160+ கட்டாயம்.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  //தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்///ரொம்ப நலல் விஷயம் பேஷா செய்யுங்கோ. ஆனால் இதை கடந்த 2011 தேர்தல் அறிக்கையிலும் இருந்ததாக சொல்கிறார்களே நீங்கள் என்ன சொல்கிறீர்கள், இருந்ததா இல்லையா? அப்போ 2021 தேர்தல் அறிக்கையிலும் இருக்குமோ?

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///15 லட்சம் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்///நல்ல விஷயம் செய்யுங்கள், ஆனால் அதற்க்கு முன்னால், தங்கள் முன்னால், தங்களை பார்த்தவுடனே நெடுஞ்சான் கிடையாக தங்கள் வண்டியை வண்டி டயரை தொட்டு கும்பிடும் அடிமைகளை, கூன்களை நிமிர்த்திடுங்கள், அவர்களை அவர்கள் திறனை வளர்க்க ஏற்பாடு செய்யுங்கள். அவைகள் குடும்பம் போற்றும்.

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  கருத்து கணிப்புகள் வேறு ஜெயாவிற்கு பாதகமாக இருக்கிறது. எப்படியும் தோற்க போகிறோம் என்று தெரியும் ஆகவே மீண்டும் இலவசங்களை அள்ளி வீசி விட்டார்கள். முதலில் RK நகர் தொகுதியில் ஜெயிக்கிறாரா என பார்ப்போம்.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  // மதுவிலக்கு படிப்படியாக அமைக்கப்பட்டு பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்// நல்ல விஷயம் தான் செய்யுங்கள் பாராட்டுவோம். ஆனால் நேற்று கூட இதைசொன்ன மக்களை, மக்கள் கூடும் இடங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட சொன்ன மக்களை இரத்தம் சொட்ட சொட்ட தாக்கி அவர்களை இழுத்துபோய் கைது செய்ததேன்? ஏன் இந்த முரண்பாடு, ஏற்கனவே மிடாசின் காய்ச்சி வச்சிருக்கும் சரக்கு வீணாகிவிட கூடாதே என்ற எண்ணத்தில், பயத்தில் தான் இந்த நடவடிக்கையா ? சொல்லுங்க தாயீ சொல்லுங்க.

 • Prakash JP - Chennai,இந்தியா

  பால் விலை குறைப்போம் சரி, லிட்டர் 40 ரூபாய்ன்னு ஏற்றியது யாரு??? ஜெயாதானே... பேருந்து கட்டணம் குறைப்போம் பஸ் டிக்கெட் விலையை டபுள் மடங்கு உயர்த்தியது யாரு??? ஜெயாதானே... அதே போல மின்கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது யாரு??? அதுவும் ஜெயாதானே... இப்படி, இந்த அஞ்சி வருஷத்துல எல்லா விலையையும் பல மடங்கு உயர்த்தி, மக்களை கஷ்டப்படுத்திட்டு, இப்போ தேர்தல் வரும்போது, குறைப்போம்ன்னு நாடகம் ஆடுவாங்களாம் இந்த அதிமுக ஆட்கள்...

 • Prakash JP - Chennai,இந்தியா

  அதிமுக தேர்தல் அறிக்கையும் ஜெயா அரசும்.... சட்டசபை நிகழ்சிகளை நேரடியாக லைவ் ரிலே செய்ய அரசிடம் பணம் இல்லை - சென்ற ஆண்டு உயர்நீதிமன்றத்தில் ஜெயா அரசு அறிவிப்பு.. வெறும் 10 கோடிக்கே வழியில்லை என்பவர்கள் எப்படி பல்லாயிரம் கோடி இலவச திட்டங்களை நிறைவேற்றுவார்கள்??? இந்த ஐந்து ஆண்டுகளில், ரேஷன் கார்டைகூட புதிதாக கொடுக்கமுடியாமல், வருடாவருடம் வெறும் உள்தாள் ஒட்டி ஒட்டியே ஒப்பேற்றிய அரசு தான் ஜெயா அரசு... தேவையற்ற இலவச திட்டங்கள் தொடர்ந்தால், எப்படி மதுவிலக்கு வரும்?? மது விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் தானே இந்த இலவசங்கள் கொடுக்கபடுகின்றன.. அப்படியானால், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு கொண்டுவருவோம் என்று ஜெயா சொல்வதும் பொய்தானே... ஏற்கனவே 4 லட்சம் கோடி கடனில் தமிழ்நாடே மூழ்கிடுச்சி....இதில் இன்னும் இலவசமாம்..... அப்படியானால் தமிழ்நாட்டு மக்களை இன்னும் பல லட்சம் கோடிகளுக்கு கடனாளிகளாக திட்டம்மா??? 2011 ஆண்டைய தேர்தலில் கொடுத்த தேர்தல் அறிக்கையில் வெறும் 20% சதம் மட்டுமே நிறைவேறியுள்ளது அதிமுக அரசு.. அதிலும், இருபது லிட்டர் குடிநீர், முதியோர் பஸ் பாஸ் எல்லாம், ஆட்சிமுடிய சில மாதங்கள் உள்ள நிலையில், சென்னையில் மட்டும் சில பேருக்கு பெயரளவில் அளிக்கப்பட்டது... இந்த ஐந்தாண்டுகளில் ஏறக்குறைய 80 ஆயிரம் கோடிகளுக்கு, சுமார் 300 க்கும் மேற்பட்ட அறிவிப்புக்களை 110 விதியின் கீழே சட்டசபையில் ஜெயா வெளியிட்டுள்ளார். ஆனால், இதில் ஒரு 15% சதவீத திட்டங்கள் கூட நிறைவேற்ற வக்கில்லை இந்த அதிமுக ஜெயா அரசுக்கு.

 • Prakash JP - Chennai,இந்தியா

  ஏற்கனவே 4 லட்சம் கோடி கடனில் தமிழ்நாடே மூழ்கிடுச்சி....இதில் இன்னும் இலவசமாம்..... அதிமுக தேர்தல் அறிக்கை பொய்களின் மூட்டை... 110 விதியை பயன்படுத்தி ஜெயா பல வெத்து அறிவிப்புகளை அள்ளிவிட்டதுபோல், இந்த அறிக்கையிலும் சொல்கிறார்... எப்படி 110 அறிவிப்புகள் எல்லாம் புஸ்வானம் ஆனதோ அதே கதிதான் இந்த தேர்தல் அறிக்கைக்கும்.... கடந்த ஐந்து வருடத்தில் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டு இப்போது வந்து வானத்தை வளைக்கப்போகிறேன் என்று கதைவிடுவதை மக்கள் நம்பமாட்டார்கள்...

 • p.srinivasan - chennai,இந்தியா

  100 % DMK WIN 170 SEAT AMMA GO TO HOUSE 19.05.2016 FREE ARE GOING TO DUSTPIN CENTAL GOVT. GIVEN TO 251 CELL PHONE

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  // ஆவின் பால் ஒரு லிட்டர் ரூ.25 என்ற விலையில் வழங்கப்படும்///ரொம்ப அருமையா சொன்னீங்க நீங்க, ஆமாம் 2011 ல் நீங்க ஆட்சிக்கு வரும்போது எவ்வளவுக்கு வித்தது, இப்போ எவ்வளவுக்கு விக்குது. ஏன் இடையில் பல தடவை எத்திநீங்க, இப்போ ஏன் குறைக்குறீங்க. அப்பிடி என்ன தமிழக அரசின் நிதிநிலைமை ரொம்ப சூப்பராயிடிச்சி. மீண்டும் குறைப்பதற்கு.

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  நம்ம ஊரு உருபடுற வழி கண்ணுக்கு எட்டுன தூரம் வரை தெரியல

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  இவ்ளோ தானா ??? எல்லாருக்கும் ஒரு பங்களா .. செவ்வாய் கிரகத்துல ரெண்டு ஏக்கர் நிலம் .. நிலவுக்கு பிளைட் டிக்கெட் னு நிறைய எதிர்பாத்தோம்.. இது புஸ்ஸுன்னு போயிருச்சு

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இலவசங்களால் இந்த முறை ஆதிமுக ஆட்சிக்கு ஆப்பு உறுதி தோல்வியின் வெளிப்பாடே இந்த அறிவிப்புகள் .

 • Narayanan Arunachalam - New Delhi,இந்தியா

  கடந்த 5 ஆண்டுகளில் ஒழுங்காக ஆட்சி செய்திருந்தால் இந்த மாதிரி இலவசங்களை நம்ப வேண்டி இருந்திருக்காது...... புதைகுழியில் முழுக்க இறங்கியாயிற்று.. தமிழக மக்களையும் இழுத்துக்கொண்டு.... அந்த வழக்கு தீர்ப்பிலாவது தமிழக மக்களுக்கு நல்லது நடக்கிறதா என்று பாப்போம்...

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  படிச்சிட்டு ஏற்கனவே 1 கோடி பேரு இருக்காங்க வேல இல்லாம .. இதுல வீட்டுக்கு ஒரு வேலைனா .. சுமார் 8 கோடி வேலை .. எங்க கொடநாடு தோட்டதுலையா ??

 • Rama Subbu - thiruvarur,இந்தியா

  அண்ணா தி மு கவின் பெரும்பாலான ஆதரவாளர்கள் பெண்கள் ...இவர்கள் உங்கள் கருத்து கணிப்புக்கு வாக்களிக்க மறுத்து ஒதுங்கியதில் இருந்தே உண்மை நிலவரத்தை தினமலர் புரிந்து கொண்டு இருக்கணும் ...கருத்து கணிப்பு வெளியிட்டு சிலரை திருப்தி படுத்துவதால் தினமலர் இழக்க போவது நிறைய இருக்கு . அதில் முக்கியமானது மக்களின் நம்பிக்கை .பலவருட நற்பெயரை குழி தோண்டி புதைதுள்ளீர்கள் .இதனை வருட உழைப்பும் வீண் செய்துள்ளீர்கள் .என்னை போல் பலரும் உங்களுக்கு கண்டனத்தை தெரிவித்து இருப்பார்கள் என்று நம்புகிறேன் .காலையில் எப்ப தினமலர் வெளியாகும் என்று பரபரப்புடன் கோப்பீயுடன் உட்கார்ந்து படித்து கொண்டு இருந்த அந்த இனிய நினைவுகளை இழந்து விடுவேனோ என்று உண்மையாகவே வருத்தமா இருக்கிறது .

 • Hm Join - Chennai,இந்தியா

  மறுபடியும் 5 வருசமா நினைச்சாவே கண்ண கட்டுதே....

 • Nesarajan Natarajan - erode,இந்தியா

  இலவசம் வேண்டாம், மக்களுக்கு வாங்கும் சக்திய அதிக படுத்துங்க...

 • Arvind Bharadwaj - Coimbatore,யூ.எஸ்.ஏ

  திமுக & அதிமுகவுக்கு விழும் ஓட்டுக்கள் அனைத்துமே அனேகமாக பிச்சைக்காரர்களின் ஓட்டுக்களாகவே இருக்கும் என்பது என் எண்ணம். காரணம், கையில் காசின்றி, பிறரிடம் ஒசிகளை எதிர்பார்த்து, இலவசங்களுக்கு மயங்கி கையேந்தும் பழக்கம் பிச்சைக்காரர்களுக்கு மட்டுமே உண்டான குணம். இவர்கள் தரித்திர தேவியின் தலைச்சன் பிள்ளைகள். கையில் காசிருந்து, வாழ்க்கையில் கண்ணியத்தைக் கடைபிடிப்பவன் இலவசங்களுக்கு மயங்காமல், தான் உழைத்து ஈட்டிய பொருளைக் கொண்டு கண்ணியமான வாழ்வு வாழ்வான். இப்ப சொல்லுங்க மக்களே.... யார் யாரெல்லாம் திமுக & அதிமுகவுக்கு ஓட்டுப் போடப் போறீங்க.

 • Arvind Bharadwaj - Coimbatore,யூ.எஸ்.ஏ

  ஏற்கனவே இலவசங்கள் மூலம் மாநிலத்தையும், மக்களையும் நிர்மூலமாக்கியது போதாது என்று இப்போது புதிய சலுகை மழைகளை ஜெயலலிதா அள்ளி விடத் தொடங்கியிருக்கிறார். ஒருவேளை இந்தக் கட்சி வெற்றி பெற்று இந்த இலவசங்கள் நிஜமாகவே அளிக்கப்பட்டால் அதனால் பலனடையப் போவது அவரது கட்சியினர் தான் என்பது சிறு குழந்தையும் அறியும். ஒப்புக்கு ஒரு சிலருக்கு இலவசங்கள் அளிக்கப்பட்டு, புகைப்படம் எடுத்து பத்திரிகையில் வெளியிடப்பட்டவுடன் இந்த இலவசங்கள் விநியோகத்துக்கு முழுக்குப் போடப்படும். அதன் பிறகு இந்த இலவசத் திட்டங்கள் பெயரில் மாபெரும் கொள்ளை நடத்தப்படும். இதைத்தான் திமுகவும், அதிமுகவும் மாறி மாறிச் செய்து வந்துள்ளன. அம்மையாரின் பெயரில் செயல்படுத்தப்பட்ட இலவச சைக்கிள், கம்ப்யூட்டர், செருப்பு போன்றவையின் கதி இப்போது என்னவானது என்று யாருக்குமே தெரியாது. அதே போல அம்மையாரின் பெயரில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட சஞ்சீவனி பொக்கிஷம் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற கணக்கு எங்கு தேடினாலும் கிடைக்காது. ஆனால் மேற்கூறிய திட்டங்களின் பெயரில் ஆண்டுக்கு ரூ. 299-300 கோடி மட்டும் செலவு செய்யப்படுவது உண்மை. இது போன்ற அக்கிரமங்களையும், கொள்ளைகளையும் தொடங்கி வைத்தது திமுக.

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  கருணா தேர்தல் அறிக்கையில் அவரது குடும்பத்தினர் விருத்தி அடைய தான் திட்டங்கள் போட்டுள்ளார்.. ஆனால் ஜெ தேர்தல் அறிக்கையில் விவசாயத்துக்கு, குடிநீருக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்.. ஆக ஜெ தேர்தல் அறிக்கை தான் தமிழகத்தை முன்னேற்றும்...

 • Raj Kumar - chennai,இந்தியா

  இலவசங்கள் தேவை இல்லை... இலவசங்களை பெறுவதற்கு நாம் பிச்சைகாரர்கள் இல்லை....மீடியாகள் வீண் விளம்பரம் தேவை இல்லை

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  ஜெ திட்டம் யாவும் முன்னேற்றதிற்கான திட்டம்.. அடித்தட்டு மக்களை UPLIFT பண்ணகூடிய திட்டம்.... படிப்படியாக தான் மது விலக்கை அமுல் படுத்த முடியும்..,,கருணா காலத்தில் லாட்டரி உச்சத்தில் இருந்தது... மக்கள் லாட்டரி வாங்கி சம்பளத்தில் பாதியை காலி பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.. இதுல கருணா குடும்ப நண்பர் மார்டினின் போலி லாட்டரி வேறு..மார்டின் தான் கருணா திரைகதை வசனம் எழுதிய பெண் சிங்கம் மற்றும் உளியின் ஓசை ஆகிய படங்களை தயாரித்தவர்,... ஆனால் ஜெ ஆட்சிக்கு வந்தவுடன் அதிரடியாக லாட்டரியை ஒழித்தார்... அதுபோல, இப்போதும் மதுவிலக்கை கொண்டுவர ஜெ ஒருவரால் தான் முடியும்...

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  100 யூனிட் மின்சாரம் FREE என்பதால், 78 லட்சம் குடும்பம் இலவச மின்சாரம் பெறுவார்கள்.. இது வரலாற்று சாதனை .. மக்களே சிந்தியுங்கள்..

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  இலவச மொபைல் போன் என்பது கிராமப்புற பெண்களுக்கு வரபிரசாதம்.. வீட்டில் அனைவராலும் செல்போன் வாங்க வசதி இருக்காது... வீட்டில் உள்ள பெண்களுக்கு செல்போன் அவசியமாகிறது... ஆக இந்த திட்டமும் நல்ல திட்டம் தான்.. மக்களே சிந்தியுங்கள்...

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  திட்டங்களில் 45%, இலவசங்களில் 50% - அம்மேக்கு இலவசத்தால் 57 ஆயிரம் கோடி லம்ப்பாக.. கிடைக்கும். மற்றதில் என்றும் போல பல லட்சம் கோடிகள் கொள்ளை. மொத்தத்தில் தமிழ்நாடு அழிந்து போகும்... கையாலாகாத புள்ளேன்னு அல்லக்கை ஒருத்தன் சொன்னானே 'தமிழ்நாடு இருந்ததுன்னு சரித்திரப் பாடத்தில் தெரிந்து கொள்வோமுன்னு அதுக்கு அவசியமிருக்காது.. கண்ணு முன்னாலே அழிஞ்சி போறதை அவன் கண்ணாரப் பாத்து சந்தோஷப்படலாம்..

 • Thiyagarajan Srimbhs - Coimbatore,இந்தியா

  இது என்ன அதிசயம். ரேசன் சாமான் எல்லாம் வீட்டுக்கு varumendrareay விஜயகாந்த்

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  பெண்களுக்கு மொபெட் வாங்க 50 % மானியம் என்பது வரபிரசாதம்.. பெண்கள் வாங்கினால் அதனை பெண்கள் மட்டுமா ஓட்டபோகிறார்கள்.. அந்த வீட்டு ஆண்களும் தான் ஓட்டபோகிறார்கள்... இதன் மூலம் உங்களுக்கு EMI மிக குறையும்.... மக்களே யோசித்து முடிவு எடுங்கள்...

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  ஜெ அறிவித்துள்ள அரசு கேபிள் TV , மற்றும் இலவச WIFI ஆகியவையே ஜெ யின் பொதுநல நோக்கை பறை சாற்றுகிறது... திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் SCV வரும்.. இவர்கள் வைத்தது தான் சட்டம்... அரசு கேபிள் 100 க்குள் வழங்கபடுகிறது... ஆனால் SCV வந்தால், 250 கட்டணம் வசூலிப்பார்கள்.. கருணா குடும்ப தொழில் தான் விருத்தி அடையும் ..மக்களே முடிவு பண்ணிகொள்ளுங்கள்....

 • பொலம்பஸ் - CHENNAI,இந்தியா

  இலவசம் கொடுக்காமல் வோட்டு வாங்க தனி திறமை வேண்டும். இவருக்கு அது இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. டயர் நக்கி அடிமைகள் இருக்கும் வரை சைத்தான் ஆட்சி ஓயாது. புதிய இலவசங்கள் கிடக்கட்டும். முன்பு 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களில் எதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிறைவேற்றி விட்டது போல காட்டியது போக மற்ற திட்டங்களின் விதி என்ன? அம்பேல் தானோ?

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  கடைசியா இதையும் சேத்துகோங்க... எல்லாரு தலையிலும் இன்னொரு 2 லட்சம் கடன்

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  தமிழ் நாட்டை அம்மா நாடு என்று மாற்றுவோம் என்று சொல்லியிருந்தால் ஜெயம் 100% அம்மாவுக்குதான். எந்த ஞானசுன்யங்ககள் தயாரித்தோ இந்த தேரதல் அறிக்கையை, இந்த முட்டாள்களுக்கு, macro economy, finanace மற்றும் இவைகளை மூலம் வருவாய் செலவு திட்டங்கள் பற்றி ஒரு மண்ணும் தெரியாது என்றுதான் தோன்றுகிறது. படித்த முட்டாள்கள், அரசியல் வாதிக்கு (ADMK வுக்கு ) கொடுத்திருக்கும் தேர்தல் அறிக்கை, அந்த கட்சிக்கு வோட்டுக்கு பதில் வேட்டாக அமைய போகிறது. புரியல ADMK ஆட்சிக்கு சங்கு ஊதுவது நிச்சயம் நடக்கும்.

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  தமிழ் நாட்டில் உள்ள குடும்பம் அவரவர்கள் வீட்டில் "தனி அறை உடன் ஏ சி யுடன் கூடிய பார் ., மற்றும் மது குழாய் வழியா தங்கு தடையின்றி, விஸ்கி , பிராந்தி, பீர் போன்றவை இலவசமாக அடுத்து வரும் அம்மா ஆட்சியில் செய்து தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் இடம் பெறாதது வேதனையிலும் வேதனை.

 • Indian - chennai,இந்தியா

  கடந்த 5 ஆண்டுகளில் இவைகளை செய்யாமல் இப்போது அறிவித்திருக்கிற காரணம் என்னவோ ....?ஒரு யூனிட் மின்சாரம் கூட புதிதாக உற்பத்தி செய்யாமல் 100 யூனிட் தலா தருவேன் என்கிறாரே ....அதை இதற்கு முன் ஏன் தரவில்லை...? எந்த வருமானத்தை வைத்து இந்த தேர்தல் அறிக்கையில் அறிவித்த எல்லாவற்றையும் செய்வார்...?தமிழ்நாட்டில் இப்போ இருக்கிற பல லட்சம் கோடி கடனை எப்படி திரும்ப அடைப்பார்கள் என்ற ஒரு வாக்கியமும் இல்லை...? அப்போ இன்னும் கடனை தூக்கி சுமந்து இந்த இலவசங்களை கொடுக்க திட்டமா...? இல்லை இந்த போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி மறுபடியும் முதல்வர் இருக்கையில் இருந்து கொண்டு இந்த தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை மக்கள்,எதிர்கட்சிகள் திரும்ப கேட்டால் அடக்குமுறை,போலீஸ் அராஜகம் செய்து ஒடுக்கி அடுத்த 5 வருடம் ஓட்ட திட்டமா...? போன முறை அறிவித்ததில் சிலவற்றை அளித்தும் அவைகள் குப்பை மற்றும் காயிலான்கடைக்கு 5 வருடத்திற்குள் போனது என்ன ஆச்சு...? நம்பி, தப்பி தவறி ஒரு ஓட்டுகள் போட்டு விடாதீர்கள் அதுவே நீங்கள் செய்யும் பாவம் ஆகிவிடும்....இப்போது இருக்கும் நிலையில் அடுத்தவர் காலில் மண்டியிட்டு ஆட்சியை புடிக்க பார்ப்பார் ...அடுத்து அதே காலால் மிதித்து தள்ளுவார்...இவர் சினிமாவில் மட்டும் வேச காரி இல்லை நிஜத்திலும்தான் நான் சொல்வது 200 தொகுதிகளில் டெபொசிட் தானும் கிடைக்க போவதில்லை அனால் இந்த மாயையில் சிக்கி நீங்கள் போடும் ஒரு ஓட்டு கூட டெபொசிட் கிடைக்க செய்துவிடும்.....

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  இத எல்லாத்தையும் குடுக்குறதுக்கு அம்மே கொடநாட்டையும் சிருதாவூரையும் விக்க போகுதா ??

 • abu lukmaan - trichy,இந்தியா

  இந்த இலவசங்கள் மது இன்னும் ரெண்டு வருடங்களுக்கு படிப்படியாக குறைத்து விற்பதன் மூலம் நிறைவேற்ற போகிரார்கள் .தி .மு.க உடனே டாஸ்மாக் மூடுவதன் மூலம் இலவசங்கள் இல்லை . மற்ற படி தி .மு .க வின் தேர்தல் அறிக்கையின் நகல் தான் அம்மாவின் தேர்தல் அறிக்கை . ரெண்டு கச்சியிலும் புத்திசாலிகள் யாரும் இல்லை . ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தின் போது போது மக்கள் கொடுத்த ஐடியா தான் தி . மு .க தேர்தல் அறிக்கை . உடனே ஸ்டாலின் தி .மு க வினர் நடத்தும் மது ஆலைகளை மூட வேண்டும் . தேர்தலுக்காக மூடி விட்டனர் என எதிர் கட்சியினர் சொன்னாலும் தீமையை முதலில் நிறுத்தி விட்டோம் என வரலாறு சொல்லும் .

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  வேட்பாளர்களை போல தேர்தல் அறிக்கையை மாற்றாமல் இருந்தால் நல்லது

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  இலவசங்களை தவிர்த்து இருக்கலாம் குறைந்தது மெஜாரிட்டி கிடைத்தால் போதும் என அம்மே நினைத்து விட்டார்கள்

 • SEETHARAMAN - chennai,இந்தியா

  திமுக தொண்டன் எந்த நாளும் வேறு கட்சிக்கு ஓட்டுப் போடமாட்டான் ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கைக்குப் பின் , திமுக தொண்டனின் குடும்ப ஓட்டுக்கள் கூட அதிமுக விற்குத்தான் என்பது உறுதியாகி விட்டது . ஆங்காங்கே மாவட்டங்களில் உள்ள திமுக குறுநில மன்னர்கள் இதை முன்னரே ஊகித்துவிட்ட புத்திசாலிகள் அதனால்தான் அவர்கள் தேர்தலில் களப்பணியும் செய்யவில்லை , காசையும் வெளியே எடுக்கவில்லை பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுப்பதோடு சரி ......

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  இப்படி ஜெயா எதற்கு இலவசங்கள் கொடுக்கிறார்..?.மக்களுக்காக நான்.. தவவாழ்க்கை வாழ்கிறேன்....அப்டி இப்படி ஏன் புளுகிரார்..?. ஜெயாவின் இலவசங்கள் எப்படி இருக்கிறது என்றால் ...ரயிலில் பயணம் செய்யும் போது திருடர்கள் உதவி செய்கிறேன் என்று மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டுக்களை ரொம்ப வாஞ்சையுடன் கொடுப்பார்கள்..மக்களுக்கு இந்த திருடர்களின் உள் நோக்கத்தை தெரியாமல் பிஸ்கட்டை சுவைத்து மயங்கி விழுவார்கள்.. இந்த சமயத்தில் திருடர்கள் பயணிகளின் உடைமைகளை உடுத்து , ஓடிவிடுவார்கள்..மயக்கம் தெளிந்து கண்முழித்து பார்த்தால் எல்லா பொருளும் திருட்டு போய் இருக்கும்...ஜெயாவின் ஆட்சி இப்படிதான்..ஜெயா எதற்கு இப்படி இலவசங்களை அள்ளி வீசுகிறார்..?.லட்சம் லட்சமாக கொள்ளை அடித்து சில கோடி மக்களுக்கு இலவசமாக கொடுத்து நல்ல பெயர் வாங்குவார்.. திமுகவில் முகவின் 200 குடும்ப நபர்களே கொள்ளை அடித்தார்கள்.. ஆனால் ஜெயா ஆட்சியில் அதிமுக அரசியல் வாதிகள் .பல லட்சம் அதிமுக அரசியல் வாதிகள் கொள்ளை அடித்தார்கள்..போதாதற்கு ஜெயா சுழல் முறையில் எல்லோருக்கும் பதவி கொடுப்பார்..எதற்கு கொள்ளை அடிக்க எனென்றால் இவர்கள் யாருக்கும் எந்த திறைமையும் இல்லை.. இவர்களின் திறமையே ஜெயா காலில் விழுவது தான்.. இவர்களை வைத்து எப்படி ஒரு நாட்டை முன்னேற்ற முடியும்...ஜெயா உடம்பு நிலை மிக மோசமாக உள்ளது..தேர்தல் பிரச்சாரம் ஒழுங்கா செய்ய முடிய இல்லை.. எங்கு சென்றாலும் மாலையில் போயஸ் கார்டனுக்கு வந்து விடவேண்டும்.. எதற்கு.?. மருத்துவ சிகிச்சை செய்ய..என்ன மருத்துவசிகிச்சை..?. யாருக்கும் என்ன என்று தெரியாது...ஆனால் அவர் உடல் நிலை இப்போ சொல்லும் படி இல்லை..கைத்தாங்கலாக அவரை அழைத்து செல்கிறார்கள்.. இப்படி பட்ட உடல் நிலையில் இருக்கும் போது ஜெயா எதக்கு அரசியலில் உள்ளார் ?...எல்லாம் பதவி சுகத்திற்க்காக... சாதாரணமாக ஆட்சி செய்வது கடினம் முள்ளின் மேல் இருப்பது போல் இருக்கும்..ஆனால் தமிழகத்தை ஆட்சி செய்வது அப்படி இல்லை.. ஏனென்றால் அடிமைகள் எபோதும் அதிகாரத்தில் உள்ளவர்களை காலில் விழுந்து கும்பிடு போடுவார்கள்..அவர்கள் எப்படி எதிர்க்கமுடியும் . அதனால் ஆட்சி செய்பவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..எப்படியும் வாழலாம்.முக, ஜெயா இந்த தள்ளாத வயதில் எதற்கு சி.எம் ஆக தேர்தலில் போட்டிடீ இடுகிறார்கள் .பதவிக்கு வர..இவர்கள் பதவிக்கு வந்தால் இவர்களால் ஒன்னும் செய்ய முடியாது..ஏனென்றால் உடல் நிலை ஒத்துக்காது..அதனால் இவர்களின் பெயரை சொல்லி மற்றவர்கள் ஆளுவார்கள்..அவர்களின் நோக்கம் வேண்டும் அளவில் கொள்ளை அடிப்பது தான்..இது தான் திமுக, அதிமுக ஆட்சியில் நடக்கிறது...அதனால் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மக்கள் ஓட்டு போட கூடாது..இவர்கள் இரண்டு பேரும் துரத்த பட வேண்டியவர்கள்..செய்வார்களா..?.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  2014 ல் பெற்ற வெற்றி கண்ணை மறைத்ததன் விளைவு இன்று , வாசன், காம்ரேடுகள், போன்றோரையும் துரத்திவிட்டு 234 ம் தனியே என்ற இருமாப்பில், அடிக்கப்பட்ட சம்மட்டியடி தான் இலவச அறிப்பு. பயம் கண்ணில் தெரிகிறது , உங்களின் எதிரி கட்சிகளல்ல, பொது மக்கள், அவர்களை அலட்சியபடுத்தியதன் விளைவு. ஹா..ஹா..ஹா.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ஏம்மா, யாருமே இல்லைன்னா, எதுக்கும்மா, டீ ஆத்தனும், இல்லாத எதிரிய வீழ்த்த எதுக்கு இவ்வளவு இலவசம்.

 • Kumar - Madurai,இந்தியா

  மக்களை எப்படி மூளை சலவை (பிரைன் வாஷ்) செய்வது என்று ஜெயலலிதா தெரிந்து வைத்திருக்கிறார். நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் எந்த திட்டமும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் அ.தி.மு.க. அரசு மக்களுக்கு இலவசமாக கொடுத்த தரமற்ற பொருட்களான பேன், மிக்சி, கிரைண்டர் அனைத்துமே மக்களின் வரிப் பணமே. மக்கள் அதை புரிந்து கொண்டு அ.தி.மு.க. வாரி வழங்க இருக்கும் இலவசங்களை இம்முறை உறுதியுடன் தவிர்க்க வேண்டும். தமிழக மக்கள் அனைவரும் மே 16 அன்று விழிப்புடன் செயல்பட்டு வாக்களிக்க வேண்டும்.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளை காணோமென்றிருந்த அம்மையார், எதிரிகள் தன்னை தாண்டி முந்தி கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்க ஆரம்பித்து விட்டார் போல, கண்ணில் பயம் தெரிய ஆரம்பித்து விட்டது.

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  கருத்தது கணிப்பிலும் கள்ள வோட்டு போட்டாங்க போல.....தினமலர் கூட்டணிக்கு கொள்ளை கொள்ளையா வாக்கு விழுந்திருக்கு....

 • sbatch - sg ,சிங்கப்பூர்

  ஜெயலலிதா மாநிலத்தை ஆளும் தகுதி இருப்பவராக தெரியவில்லை. வரி கட்டும் வாக்களர்கள் admk க்கு ஓட்டு போட மாட்டார்கள்.

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  ஒரு நல்ல திட்டம் இருக்கு....சிறு குறு கிராமங்களை ஒன்றிணைத்து வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்படும்...இது, ராஜஸ்தான் மாநிலத்தில் இப்போது சக்கைப் போடு போடும் திட்டம்....அங்கு பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள திட்டம்....

 • zahir hussain - madurai,இந்தியா

  சட்டசபை நிகழ்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசுக்கு போதுமான நிதி இல்லை - தமிழக அரசு 2015

 • nallavan - chennai,இந்தியா

  இனிமேல் இங்கே கருத்து பதிவு செய்ய இருக்குற தி.மு.க குடும்ப 'whisper' களிடம் ஒரே ஒரு கேள்வி, 5 முறை ஆட்சி செய்தீர்களே, உங்க ஆட்சில தமிழ் நாட்ல என்ன பாலாரும் தேனாறுமா ஓடுச்சி, நீங்க எப்படி இருந்தாலும் ஆட்சிக்கு வந்த அங்கங்கே இருக்கிற குடும்ப சொம்புகள தான் ரொப்பிக போறீங்க, ஏன் அ.தி.மு.க வந்து தான் மேல் சொன்ன எல்லாம் தரட்டுமே

 • zahir hussain - madurai,இந்தியா

  ஐந்து வருசமா நிதி இல்லன்னு ரேஷன் கார்டு ல உள் தாள் ஒட்டியக் கோஷ்டி தானடா நீங்க

 • nallavan - chennai,இந்தியா

  இனிமேல்

 • uday - ramnad

  Oru poiyai thirumpa thirumpa sonnal athu unmai aagi vidum enbathai uruthiyaga nampubavar jayalalitha avargal..,,,

 • spr - chennai,இந்தியா

  "ஒருவனிடமிருந்து ஒன்றைத் திருட வேண்டுமென்றால், (அவனை ஏமாற்ற வேண்டுமென்றால்) அவனிடம் கருணையை எதிர்பார்க்ககூடாது அவனது ஆசையைத் தூண்டிவிட வேண்டும்" இது அண்மையில் வெளிவந்த ஒரு திரைப்பட வசனம் இந்தத் தேர்தல் அறிக்கைகளுக்கு முற்றிலும் பொருத்தமே இவ்வளவு இலவசங்களை அள்ளிவீசும் எவரும் இலவசக் கழிப்பிடங்களைக் கட்டிக் கொடுப்போம் என்று சொல்லவே இல்லையே இந்த அறிக்கைகள் எல்லாம் உணர்த்தும் ஒரு உண்மை, மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, உறைவிடம் தமிழகத்தில் இன்னமும் 65 விழுக்காடு இதனையே எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள் மீதமுள்ள பணம், புகழ்,பதவி, சாதிக்க வேண்டுமென்ற வெறி இவை அரசியல்வியாதிகளிடமும் ஒரு சில வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மனத்திலும் இருக்கிறது மக்களுக்குச் சேவை செய்தல் மனித நேயம் இவை மிகச் சிலரிடமே இருக்கிறதோ இல்லை அவர்கள் மறைந்து விட்டார்களோ

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  சூப்பர் ஸ்டார் படம் அட்டர் பிளாப் ஆனா மாதிரீ ஆயிருச்சி, அதிமுக தேர்தல் அறிக்கை. எதோ 110 அறிவிப்புகள் போல பல குப்பைகள். ஏற்கனவே 110 களை கேட்டு கேட்டு மரத்துப்போன தமிழக மக்களுக்கு இதுவும் ஒரு செய்தி ஆகிப் போய்விட்டது. எதையோ பார்த்து தனக்கே சூடு வைத்துக் கொண்டிருக்கிறது அம்மே கட்சி.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  கட்டுமரம் அடித்த 197600000000000 ஐ ஜப்தி பண்ணுங்க அத வெச்சு இதுவும் செய்யலாம் இன்னமும் செய்யலாம் (அப்படியே உங்க மணல் கிரானைட் கொள்ளையையும் ஒப்படைங்க)

 • அம்பை சுதர்சனன் - கொடைக்கானல் ,இந்தியா

  இந்த தூண்டிலுக்கு எந்த மீனும் சிக்காது.

 • Nava Mayam - New Delhi,இந்தியா

  செம்பரம்பாக்கம் ஏரியை தப்பான நேரத்தில் திறந்து விட்டு சென்னை அழிஞ்ச மாதிரி , இந்த தேர்தல் அறிக்கையால் தமிழகம் கடனில் மூழ்கி அழிய போகுது...

 • ராம.ராசு - கரூர்,இந்தியா

  ஒரு ஆளும் கட்சியாக 2011 தேர்தல் வாக்குறுதியை பட்டியலிட்டு, இவையெல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் முந்தைய வாக்குருதியில் கொடுக்கப்பட்ட "ஸ்மார்ட் கார்ட்" குடும்ப அட்டை, அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளில் சூரிய மின்சக்தி பயன்பாடு, ஏழை எளியவர்களுக்கு இருபது லிட்டர் தூய்மையான குடிநீர் போன்ற, நிறைவேற்ற சாத்தியமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டனவா என்று தெரியவில்லை. அதேபோல விலைவாசி குறைப்பு என்பதும் நடக்கவில்லை. மாறாக பால், பேருந்து கட்டணம் மின்சார கட்டணம் போன்றன மிகக் கடுமையாக ஏற்றப்பட்டது. அது கடந்த தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்படவில்லை. இப்போது பால் ரூபாய் 25 க்கு கொடுக்கப்படும் சொல்லப்படும் வாக்குறுதி குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்னதாகவாவது அறிவித்து இருக்கலாம். எரிபொருளைக் காரணம் காட்டி ஏற்றப்பட்ட பேருந்துக் கட்டணத்தைக் குறைத்து இருக்கலாம். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச மொபைல் என்பதும், நூறு யூனிட் வரையில் இலவச மின்சாரம் என்பது மிகச் சாதாரண, பொது மக்களுக்கு பயன்படும் விதத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற பொத்தாம் பொதுவான வாக்குறுதியைவிட விட, மிக அதிக முக்கியத்துவம் உள்ள, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு இருக்குமேயானால் சிறப்பானதாக இருக்கும். மொத்தத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மிகச் சாதாரணமாக மக்களுக்குச் செய்ய வேண்டிய திட்டங்கள் மட்டுமே வாக்குறுதியாகத் தரப்பட்டுள்ளது. தொலை நோக்குப் பார்வை இல்லாத, இளைய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு ஏதுவான திட்டங்கள் எதுவும் இல்லை. வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால்.... மீண்டும் பால்.. பேருந்து.. மின்சாரக் கட்டணம் ஏற்றப்படாமல் இருதாலே போதுமானது.

 • Nava Mayam - New Delhi,இந்தியா

  மீண்டும் இலவசம்.. மீண்டும் கடன் சுமை ...தமிழகம் முன்னேருமுன்னு மக்கள் காத்துகிட்டு இருக்கிறது இலவு காத்த கிளி கதைதான் ...

 • Mariadoss E - Trichy,இந்தியா

  புதுசா தொலை நோக்கு பார்வையுடைய திட்டங்கள் ஒன்றும் இல்லை ....வேற என்ன சொல்ல.....

 • MN. மாதவன் - Leeds,யுனைடெட் கிங்டம்

  வடிவேல்: கேள்றா.. கேளு,, அண்ணன்கிட்ட தானே கேக்குறே.. கேளு.. இதுக்கு போய் கூச்ச பட்டுகிட்டு.. எவ்ளோ வேணும் கேளு........... தம்பி: அண்ணே ஒரு 100 ரூபா.............. வடிவேல்: டே ஆத்தாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போற சரி.. அப்புறம் இந்த மருந்து மாத்திரை, போற வர செலவுக்கு என்ன பண்ணுவ.. கேள்றா.. இன்னும் கேளு.. டே.. அண்ணனுக்கு ஒரு டீ சொல்லு.. அப்படியே ரெண்டு சிகரெட் சொல்லு................. தம்பி: சொல்லிட்டேன்னே.. அண்ணே ஒரு 500 ரூபா................... வடிவேல்: ஆஹா அப்படி கேள்றா. அப்படி கேளு.. (டீகாரனை பார்த்து) ஒரு டீக்கு, ஒரு சிகரெட்டுக்கு.. ப்பூ.. (டீ காரன் கடுப்பாக).. டேய் தம்பி.. எங்கியோ போயிட்டடா எங்கியோ போயிட்ட.. என்னையும் மதிச்சு 1 ரூபா 2 ரூபா இல்லடா.. 500 ரூபா கேட்ட பாத்தியா? பெருமையா இருக்குடா.. ரொம்ப பெருமையா இருக்கு.. ஆனா.. 500 ரூபா கேட்ட உனக்கு, இந்த அண்ணனால ஒரு 5 பைசா கூட குடுக்க முடியலைன்னு நினைக்கும் போதுடா தம்பி.............. தம்பி: ஆஆ.. என்னது.. புடிடா இதை..க்வாவ்..க்வாவ்.. த்தூ....

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  ஜெயா, தமிழக மக்கள் அனைவரும் அப்படியே துபாய் சிங்கபூர் டூர் செல்வதற்கு இலவச டிக்கெட்டும் கொடுப்பார். பிறகு, தமிழர்கள் அனைவருக்கும் வேலைக்கே போகாமல் அனைவருக்கும் ரூபாய் ஐந்தாயிரம் மாதந்தோறும் சம்பளம் கொடுப்பார். மாதத்திற்கு ரெண்டு சினிமாவிற்கு இலவச டிக்கெட் மேலும் வாரத்திற்கு ஒரு கோழி பிரியாணி கொடுப்பார் என்றும் கூட இலவசங்களை அறிவித்து இருக்கலாம். தமிழகத்தில் எல்லாம் கிடைக்கும். ஆனால், வேலை கிடைக்காது, பொது கல்வி கிடைக்காது, பொது மருத்துவம் கிடைக்காது. போதிய பாதுகாப்பு கிடைக்காது. மேலை நாடுகள் போன்ற பென்ஷன் திட்டம் கிடைக்காது. ரோடுகள் காற்றில் போடப்படும். ஆற்றில் உள்ள மணல் திருடப்படும். கிரானைட், இரும்பு தாது, மீதேன், காடு, மலை ஆகியன திருடப்படும். அதற்கு பதில், நமக்கு டாஸ்மாக் கடை நேரம் படிப்படியாக குறைக்கப்பட்டு இரவு பத்து மணிக்கு மூடுவதற்கு பதில் ஒன்பது 55 க்கே கடையை மூடிவிடுவார்கள். கவலை வேண்டாம்.

 • maanasthan - madras,இந்தியா

  போங்க தொளபதி போயி ஒங்க தொகுதிய பாருங்க (கொளத்தூரை) இல்லை என்றால் JCB அசுரபலத்துடன் தள்ளிகிட்டு போயிடுவாரு, புரியுதா

 • Sadique - Tiruvarur,இந்தியா

  இலவசங்கள் கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான அளவில் இடம் பெற்று வருகிறது .ஆட்சிக்கு வந்த உடன் பொருட்கள் கொடுக்கவே அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் மக்களை சந்திக வருகிறார்கள் .லஞ்சம் இல்லாமல் எத்த ஆட்சியும் இலவசகளை கொடுக்க வில்லை என்பது தான் உண்மை .

 • MN. மாதவன் - Leeds,யுனைடெட் கிங்டம்

  படிப்படியா பூரண மதுவிலக்கு.. ஆமா.. இதனால சகல குடிகாரர்களுக்கும் 'டாஸ்மாக்-அம்மா' கேட்டு கொள்வது என்னன்னா.. 2017 வரைக்கும் FULL அடிச்சிக்கலாம்.. தப்பில்லை.. ஆனா அதுக்கப்புறம் 2018 வரைக்கும் HALF தான் அடிக்கணும்.. அதுக்கப்புறம் 2019 வரைக்கும் QUARTER, அதுக்கப்புறம் 2020 வரைக்கும் CUTTING மட்டுமே அடிக்கணும்.. இப்படியே படி படியா போய் 2021 தேர்தல் வரும் போது பூரண மது விலக்கு வந்துடும்.. எவனாவது சொல்லப்பட்ட அளவுக்கு கம்மியா அடிச்சேங்க.. சாரி சொல்லப்பட்ட அளவை தாண்டி அடிச்சீங்க அவ்ளோ தான்.. காலி பண்ணிடுவாங்க 'டாஸ்மாக்-அம்மா'.. புரியுதா?

 • MN. மாதவன் - Leeds,யுனைடெட் கிங்டம்

  ஏற்கனவே இந்த ஐந்தாண்டுகள் ஆட்சியில, மையப்படுத்தப்பட்ட ஊழலம்மா, அமல் படுத்திய CENTRALIZED CORRUPTION & ROBBERY திட்டம் மூலம், மாநிலத்தோட கடன் ரூ. 2.11 லட்சம் கோடியை தாண்டி போயிடுச்சி.. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்ல ஊழலம்மா ஏற்படுத்திய ஊழல் கொள்ளை மற்றும் நஷ்டத்தால மாநில மொத்த கடன் ரூ. 4.5 லட்சம் கோடியை தாண்டிடுச்சி.. அத கணக்கு போட்டாலே ஒவ்வொருத்தன் தலையிலும் ஏறக்குறைய 50,000 ரூபாய் கடனை இந்த ஐந்தாண்டுகள்ல மட்டும் கட்டி விட்டுட்டாங்க.. போதாதுக்கு வருஷத்துக்கு ரூ. 18000 கோடி வட்டியும் கட்டிக்கிட்டு இருக்காங்க... ஆனாலும் இன்னும் திருந்தலை.. அந்த 50,000த்தை, 1 லட்சமா ஆக்க புதுசா திட்டம் போட்டுருக்காங்க கையாலாகாத வெத்துவேட்டு ஸ்டிக்கரம்மா.. இலவசம்ன்ர பேருல வீட்டுக்கு 11000 குடுத்துட்டு 90,000த்தை கடனற பேருல சுமத்த பாக்குறாங்க ஊழலம்மா.. அதுக்கு ஒரு திட்டம், தேர்தல் அறிக்கை..ப்ப்ஊ..

 • MN. மாதவன் - Leeds,யுனைடெட் கிங்டம்

  க்ஹ்ஹா க்ஹ்ஹா க்ஹா ஹஹா.. அடப்பாவிகளா இதுக்காய்யா அவ்ளோ அலம்பல் பண்ணிக்கிட்டு இருந்தீங்க? என்னாய்யா இது என்னமோ 'புலி வருது.. புலி வருது' அந்த கூவு கூவி கதறிகிட்டு இருந்தீங்க.. கடைசியில, 'மியாவ்.. மியாவ்னு' ஒரு பூனையை எடுத்து விட்டுட்டு போயிட்டாங்க டாஸ்மாக்-அம்மா............... என்னமோ ஒரு யானை வெடி இல்ல ஒரு லட்சுமி வெடி வைக்க போறாங்கன்னு பார்த்தா, கடைசியில சத்தமில்லாம ஒரு ஊசி வெடியை கொளுத்தி போட்டுட்டு போயிட்டாங்க ஊழலம்மா.. இதுக்காய்யா அந்த உதாரு விட்டீங்க?............ இதை விட அதிகமா விதி 110-போலி திட்டத்துலையே பார்த்துட்டோமேய்யா ஊழலம்மா கைவரிசையை............ஆனா கூட ஊழலம்மாவுக்குள்ள தூங்கிகிட்டிருந்த அந்த மிருகம் புலியில்லை, ஒரு 'மியாவ் மியாவ்' பூனைன்னு நல்லா தெரிஞ்சதுக்கப்புறமும், அடிமைங்க என்னமா நடிக்குதுக.. ஒரு பூனையை பார்த்து 'அய்யயோ புலி.. அய்யயோ புலின்னு.'. இன்னமும் கூவிக்கிட்டு இருக்கானுங்க.. பாருங்க அது தான் டாப்பு.. ரொம்ப திறமைசாலிகள்னு ஊழலம்மா பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே சொன்னது சரியா தான் இருக்கு....

 • தமிழன் - தமிழகம் அல்ல,இந்தியா

  ஆ.தி.மு.க இணைய தள மூடர் கூட அல்லகைகள் கடந்த வருடங்களில் இலவசத்தை எப்படி எதிர்த்து கருத்து எழுதினார்கள் என்று எல்லோருக்கும் தெரியும், இன்று முகத்தை எங்கே கொண்டு வைப்பார்கள்? அதோடு கடந்த இரண்டு நாட்களாக மலரின் உண்மையான கருது கணிப்பு தங்களுக்கு சாதகமாக இல்லை என்று ஒரு 150 ஆ.தி.மு.க இணைய தள மூடர் கூட அல்லகைகள் குய்யோ முறையோ என்று கத்தின. ஆவின் பால் 32 ருபாய் என்றால் தி.மு.க 7 ருபாய் குறைப்பதாக சொன்னது, இப்போ ஆயா 25 ரூபாய் என்கிறது. ஐ.எ.எஸ், மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை வைத்து தயாரித்த தேர்தல் அறிக்கை நாற்றம் எடுக்குது. ஆனால் இந்த ஆ.தி.மு.க இணைய தள மூடர் கூட அல்லகைகள் இப்போ இந்த தி,மு.க தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ள அறிக்கையை பார்த்து ஆரவாரம் செய்கிறது, இவ்வளவு ஏன் நம் ஆ.தி.மு.க இணைய தள மூடர் கூட அல்ல கைகள் தலைவரான சேகர் உண்மை நிலவரம் காணவும், ஓட்டு போடவும் ஊர் சென்று அங்கே ஆ.தி.மு.க எதிர்ப்பு அலையை பார்த்து ஒரு வாரமாக அடங்கி போய் கருத்து எதுவும் எழுதுவதில்லை. மேலும் 10 ஆம் தேதி வேலூரிலும் 12 ஆம் தேதி பாளையம் கோட்டையிலும் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ள ஆயாவின் கணக்கு என்ன என்ற அறிவு கூட ஆ.தி.மு.க இணைய தள மூடர் கூட அல்ல கைகளுக்கு இல்லை.

 • sam - Mumbai

  இந்தம்மா தன் சுய நலத்துக்காக நம் நாட்டை பாலைவனமாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது, இவர் அறிக்கையில் வருமானத்திற்கு வழி காணோம்

 • suresh - omaha,யூ.எஸ்.ஏ

  மயிலைப் பாத்து டான்ஸ் ஆடிச்சாம் வான்கோழி. அது மாதிரிதான் இருக்கு அ தி மு க தேர்தல் அறிக்கை.

 • suresh - omaha,யூ.எஸ்.ஏ

  வாக்குறுதியா? அதுவும் ஜெயலலிதா வாயிலிருந்தா? போதுமடா சாமி. இன்னமும் ஏமாற மக்கள் தயாரா?

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  ////அ.தி.மு.க., அறிக்கையை தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட வேறு கட்சி தலைவர்கள் உடனடியாக விமர்சிக்காதது, இந்த கேள்விக்கு இலவசத்துக்கு வலு சேர்த்து உள்ளது.////.... அப்படி நான் நினைக்கவில்லை???... காரணம் தினமலர் போன்ற நடுநிலையான நாளிதழின் கருத்துக்கணிப்பே திமுக வெற்றிபெறும் என்று சொல்லியதன் அதீத நம்பிக்கையாக கூட இருக்கலாம் அவருக்கு அல்(ல)வா???....

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  மற்றக் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் சில அம்சங்களை மீண்டும் சேர்த்தால், இவர்களும் மீண்டும் சில தேர்தல் அறிக்கையை சேர்த்து படித்து விட்டு அறிக்கை விடப்போகிறார்கள்???.... இது என்ன பெரிய விசயம்???....

 • gunasekar - trichy,இந்தியா

  தமிழக மக்கள் இன்னும் இலவச அறிவிப்புகளை கண்டு மயங்குவார்களா? காலம் பதில் சொல்லும்...இந்த அறிவிப்புகள் மக்களின் தேவைகளை அலசிப்பார்த்து தரப்பட்டதாக தெரியவில்லை... வெறும் போட்டி அறிவிப்புகள் போல இருக்கிறது

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  ///அ.தி.மு.க., அறிக்கையை தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட வேறு கட்சி தலைவர்கள் உடனடியாக விமர்சிக்காதது, இந்த கேள்விக்கு வலு சேர்த்து உள்ளது.////... அப்படி என்றால் 2006-ஆம் ஆண்டு தேர்தலில் நிலம் இல்லா ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார்கள்???... அதையும் அப்படியே இந்த தேர்தல் அறிக்கையில் சேர்த்து கொள்ளட்டும் அவர்கள்???....

 • gunasekar - trichy,இந்தியா

  பால் லிட்டருக்கு 25 ரூபா .......இப்போதே அப்படி தந்திருக்கலாமே....

 • Thangaraj_Cs - coimbatore,இந்தியா

  /// வேலை கிடைக்காதவர் கல்வி கடனை, அரசே செலுத்தும். /// வேலைக்கு எதாவது வழி உண்டா?

 • gunasekar - trichy,இந்தியா

  101 வது யூனிட்டிலிருந்து 1 யூனிட்டுக்கு 15 ரூபா என்று பின்னர் அறிவிக்கப்படும்

 • Nava Mayam - New Delhi,இந்தியா

  ஒரு குடிசை ...மகளும் மகனும் உள்ளே வருகிறார்கள் ..அப்போ அம்மா ஏ பிள்ளைகளா அம்மா எலவச போன் தரபோறாங்கலாம் என்று சொல்ல , இரண்டு பேரும் கொதித்து விட்டார்கள் ...கலைஞர் ஆட்சியில் படித்த நம் கிராமத்து மாணவர்கள் எல்லாம் வேலை கிடைத்து இப்போ கை நிறைய சம்பளம் வாங்குறாங்க... அவுங்க சொந்தமா வீடு காருன்னு வாங்கி வசதியா இருக்காங்க... நாங்க இரண்டுபேரும் படிப்பை முடிச்சு மூணு வருசமா வீட்டில் சும்மா உட்கார்திருக்கோம்...அம்மா பேனில் இன்னும் காத்து வாங்கிகிட்டு இருக்கோம் ..கருணாநிதி காலத்தில் படிச்சவங்க இன்று சொந்தமா ஏசி வாங்கி அனுபவிக்கிறான்...கலைஞர் காலத்தில் பல் தொழிற்சாலைகள் வர வழிவகுத்தாரு , டைடல் பார்க் கொண்டுவந்து வேலைவாய்ப்பை பெருக்கினாறு ..ஆனா இப்போ ஆடு மாடு கொடுத்து எங்களையும் மேய்க்க சொல்லுவாங்க உங்க அம்மா ன்னு கத்த உண்மையான அம்மா வாயடைச்சு போயிட்டாங்க...

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  ஆவின் பால் 25 ரூபாய்க்கு தரப்படும்னு மம்மி சொல்றாங்க....என்னை கேட்டா அது 5 ரூபாய்க்கு தான் வொர்த்து.. இவங்க ஆளுங்களே பாலை பூரா உறிஞ்சி வித்துபுட்டு சோயா பவுடரையும் தண்ணியையும் கலந்து வித்தது போன வருசமே குட்டு உடைஞ்சு போச்சு..........ஆளுங்களும் மாட்டிகிட்டாங்க..........அனைத்து அட்டை தாரர்களுக்கும் இலவச போன்? இதுல எத்தனை கோடி வீண்? தமிழகத்தின் மக்கள் தொகை 6 கோடி பேர் ஆனால் 8 கோடி போன்கள் ஏற்கனவே தமிழகத்தில் இருக்கிறது..........இந்த தண்ட செலவு மக்கள் பணம் வீண்.............பெண்களுக்கு ஸ்கூட்டி வாங்க குறைந்தது 15000 கொடுத்தால் கூட, சுமார் மூன்று கோடி பெண்களுக்கு 15000 என்று போட்டு கால்குலேட் பண்ணி பாருங்கள்...எவன் தலையில் இது வரியாக வந்து விடிவது? இவர்கள் ஓட்டு வாங்கி ஜெயிக்க அந்த பணத்தை உலக வங்கியில் கடன் வாங்குவார்கள், அதற்கு வரியாக திரும்ப பேருந்து கட்டணம் டபுள், மின்சார கட்டணம் மூன்று மடங்கு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, எல்லா பொருட்களிலும் வரியை உயர்த்துவார்கள்...இந்த முட்டாள் மக்களும் இலவசத்தை வாங்கி கொண்டு வரியாக தினசரி அதிக விலை கொடுத்து எல்லாத்தையும் வாங்குவார்கள்..................

 • Nava Mayam - New Delhi,இந்தியா

  இலவசத்துக்கு எதிராக மக்கள் கருத்துக்கள் மாறி எதிர்ப்பு அலை உருவாகி இருக்கும் போது இந்த இலவச வாக்குறுதிகள் அதிமுகவுக்கு எதிராகவே இருக்கும்..

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  எல்லாம் உயர்த்தப்படும் உயர்த்தப்படும்னு சொன்னீங்களே, தமிழகத்தின் கடன் தொகை எவ்வளவு உயர்த்த படும்னு சொன்னீங்களா மம்மி?

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  மகளிருக்கு 50% மானியம் ஸ்கூட்டர் வாங்க? அப்போ ஆம்பிளைங்க ஓட்டு வேண்டாமா? பொம்பளைங்களும் ஆம்பளைக்கு சமம்னு சொன்னதுக்கு அப்புறம் எதுக்கு அவங்களுக்கு மட்டும் தனியா மானியம்? // அது இருக்கட்டும் எவன் வீட்டு பணம் அதுக்கு போகுது? எல்லா ரேசன் கார்டுக்கும் இலவச மொபைல்? இன்னைக்கு சோறு இல்லாம கூட இருக்கானுங்க ஆனா போன் இல்லாம யாரும் இல்லை.... அப்போ அத்தனை கோடியும் வீண்? ஜெயலலிதா ஒட்டு வாங்குவதற்காக மேலும் 1000 கோடி உலக வங்கியில் கடன்?

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  இந்த அறிக்கையில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களை சேர்த்து சில இலவச அறிவிப்புகளை சேர்த்து அறிவித்து உள்ளனர்..........இந்த அறிக்கையில் சில நல்ல விஷயங்கள் உள்ளன...பாராட்டலாம்..குறிப்பாக பயிர்கடன்கள் தள்ளுபடி.. பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி (இது ஏற்கனவே தேமுதிக அறிக்கையில் இருக்கிறது). வீட்டுக்கு ஒருவருக்கு வேலை (இது நடைமுறை சாத்தியம் கொஞ்சம் சந்தேகம் தான். இருந்தாலும் இதுவும் தேமுதிக அறிக்கையில் இருக்கிறது).நதி நீர் இணைப்பு. (இதுவும் தேமுதிக தேர்தல் அறிக்கை தான்...அதிமுக இந்த முறை தூங்கி வழிந்து 30% சதவீத பணிகளை மட்டுமே நிறைவேற்றி உள்ளது. இருந்தாலும் திமுகவை விட அதிமுக தான் நதி நீர் இணைப்பில் அக்கறை கொண்டது). வேலை கிடைக்காதவர் கல்வி கடனை அரசே செலுத்தும். (இது கொஞ்சம் சர்ச்சைக்கு உரிய விஷயம் தான் .இருந்தாலும் வரவேற்கலாம்). 5 புதிய மருத்துவ கல்லூரிகள்.. நிச்சயம் வரவேற்கலாம்..

 • Nava Mayam - New Delhi,இந்தியா

  இப்பவே கடன் ஐந்து லச்சம் கோடியை நெருங்கி கிட்டு இருக்கு...இந்த இலவசத்தால் மேலும் 1.1 லட்சம் கோடி , அடுத்து மின்வாரியத்தில் 1 லட்சம் கோடி , போக்கு வரத்து துறையில் மேலும் 1 லட்சம் ன்னு கூடி அடுத்த தேர்தல் அப்ப 10 லட்சம் கோடி கடன் ஆயிடும்...தமிழக அரசு ஊழியர்களுக்கு கூட சம்பளம் போட பணம் இருக்காது...ஆனா அம்மா அடுத்த தேர்தல்ல குடும்ப அட்டைதாரர்களுக்கு எல்லாம் அம்மா கார் இலவசமா கொடுப்பேன்னு சொல்லுவாங்க... அதுக்கும் ஓட்டு விழும்...

 • Thangaraj_Cs - coimbatore,இந்தியா

  /// 100 யூனிட் இலவச மின்சாரம்/// மின்சார துறை ஒரு லட்சம் கோடி கடனில் உள்ளது ,மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக விவசாயத்திருக்கு ஒரு மின் இணைப்பு கூட வழங்கப்படவில்லை . 100 யூனிட் இலவச மின்சாரம் எப்படி சாத்தியம்?? " அப்படியானால் மின் கட்டணம் எத்தனை மடங்கு உயர்த்தப்படும் ??? 110 % அல்லது 200 % அல்லது அதற்கும் மேல??

 • Nava Mayam - New Delhi,இந்தியா

  தமிழக மக்கள் ஓட்டுக்களால் நான் , தமிழக மக்கள் ஓட்டுக்காகவே நான்... தமிழக எதிகாலம் எல்லாம் மண்...

 • Nava Mayam - New Delhi,இந்தியா

  இது பிரம்மாஸ்திரம் என்று அதிமுகவினர் குதூகலிக்கலாம்... ஆனால் இது தமிழக வளர்ச்சிக்கு , தமிழக எதிர்காலத்துக்கு , தமிழக இளைஞர்களுக்கு , தமிழக பொருளாதாரத்துக்கு எதிராக அம்மா ஏவும் பிரம்மாஸ்திரம் என்பதுதான் உண்மை...

 • Nava Mayam - New Delhi,இந்தியா

  தமிழக கடன்களுக்கும் அம்மா கடன் என்று அம்மா பெயர் வைப்பாரா...

 • Pannadai Pandian - wuxi,சீனா

  இந்த அமௌண்ட் கருணாநிதி 2 G இல ஆட்டைய போட்டத விட பாதி தான். மக்களுக்கு போவுது, போவட்டும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  வாவ்... உலக வங்கியை வாழவைத்த தெய்வம் அம்மாஜி என்று சொன்னால் அது மிகையாகாது... இலவசங்களை ஒழிக்கவில்லை என்றால் நாட்டை அடமானம் வைக்க ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது...

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  தேர்தல் அறிக்கை மிக வரவேற்கத்தக்கது.மக்களுக்காக அம்மா ,அம்மாவுக்காக மக்கள். .

 • K.Sugavanam - Salem,இந்தியா

  தினமலருக்கு பீதி உண்டாயிடிச்சி போல...ஹா..ஹா..அந்த க க டீமே மேர்சலாயிட்டு போல..அந்துமணிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..லென்சு மாமா என்ன சொல்றாரு?

 • bejar payyan - doha,கத்தார்

  தேர்தல் முடிந்ததும் மக்களுக்கு மிஞ்சும் சலுகை 111 (நாமம்) மட்டும் தான்

 • Baskar - Paris,பிரான்ஸ்

  செம்பரம்பாக்கம் ஸ்டாலினுக்கு மயக்கமே வந்து இருக்கும்.நாம் எப்படி எல்லாம் திட்டம் போட்டு இந்த நமக்கு நாமே என்று அலைந்து திரிந்தோமே இப்போது அம்மா அறிவித்த திட்டங்களினால் எல்லாம் பாழாகி விட்டதே என்று வருத்த பட போகிறார்.வீட்டுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம், இன்டர்நெட் வசதி, தாலிக்கு தங்கம் 8 கிராம், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, பெண்களின் நலன் என்று பட்டையை கிளப்பி விட்டார்கள். இனி கருணாநிதியும் காங்கிரசும் என்ன செய்ய போகிறது.அம்மா என்றால் சும்மா இல்லை.சொன்னதை செய்வார்கள் சொல்லாதவற்றையும் செய்வார்கள் என்பதை தி.மு.க காரங்கள் நினைக்க வேண்டும்.இனி அம்மா தயிரியமாக 234 இடங்களிலும் வெற்றி வெற்றி தான்.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை முன்னறிவிப்பின்றி வெளியிடப்பட்டது. படித்தவுடன் கிழித்து விடவும்

 • Baskar - Paris,பிரான்ஸ்

  இந்த தேர்தல் அறிக்கையை பா

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  தேர்தல் நெருங்க நெருங்க அம்மாவுக்கு 234 ம் வெற்றி என்ற நம்பிக்கை குறைந்து சாதாரண மெஜாரிட்டி கிடைத்தாலே போதும் என்ற திகில் நிலைக்கு வந்ததையே இது காட்டுகிறது.1.14 லட்சம் கோடி இலவசம் என்ற கணக்கில் தன்னிடமிருந்த பிரமாச்திரத்தையும் பயன் படுத்தி விட்டார்.

 • rasa - Apeldoorn,நெதர்லாந்து

  நாம் தமிழர் கட்சி சொல்வதுபோல் குடிநீர், கல்வி, மருத்துவம் போன்ற முக்கிய திட்டம் இல்லை. கட்சி வளர்சிக்கான கவர்ச்சி திட்டங்கள் மட்டும் தான் இது. எதிர்கால வளர்ச்சி காண திட்டங்கள் இல்லை.

 • rasa - Apeldoorn,நெதர்லாந்து

  இந்த தேர்தல் அறிக்கை வெறும் ஓட்டுக்கான கவர்ச்சி. இதில் ஒரு வளர்ச்சியும் இல்லை. நாம் தமிழர் கட்சி சொல்வதுபோல் கல்வி, குடிநீர், மருத்துவம் இல்லை. சிந்திக்கும் வாக்காளர்கள் ஒட்டு யாருக்கு.

 • ranjith kumar - tuticorin,இந்தியா

  234 தொகுதியிலும் வெற்றி பெற ஜெ போட்ட திட்ட அறிக்கை. பால் விலையை 7 ரூ. கருணா குறைத்தால், ஜெ 15 ரூ.குறைக்கிறார். ஓசி மொபைல், ஓசி செட்டப் பாக்ஸ், அ.தி.மு.கவை ஜெயிப்பது தி.மு.கவால் முடியாது.மீண்டும் முக்காடு போட்டு மூலையில் உட்கார வேண்டியதுதான்.

 • Vela - Kanchipuram,இந்தியா

  புண்ணாக்கு, இலவசம் கொடுத்து கொடுத்து நாட்டையும் மக்களையும் அழித்தார்கள்.

 • Kandaswamy - Coimbatore,இந்தியா

  சும்மா கிழி கிழின்னு கிழிசிட்டிங்கம்மா

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  இதில் இலவசத்துடன் நிறைய வளர்ச்சி திட்டங்களும் உள்ளது. நேற்று இதற்கு எங்கிருந்து பணம் வரும், நம் தலையில் தான் கடன் விழும், வரி விழும் என்று புலம்பி தள்ளினார்கள் திமுக காரர்கள். இந்த தேர்தல் அறிக்கையில் அரசின் வருவாயை பெருக்க வழிகள் கூறப்பட்டுள்ளது. அதாவது இது வரை தாது மணல்களை வெட்டி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, இந்த வழக்குகளை விரைந்து முடித்து, அவற்றை அரசே விற்கும். அதாவது செம்மண், bauxite அலுமினியம் தாது, hematite இரும்பு தாது, titanium தாது, போன்ற பல கனிம வளங்களை அரசுடமை ஆக்கி விற்றால் ஆண்டிற்கு பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். உதாரணத்திற்கு சேலம் மாவட்டத்தில் அலுமினியம், titanium போன்ற தாது மணல்கள் அதிகம் உள்ளன, தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் அதிகம் உள்ளன. அலுமினியம் மற்றும் titanium விமானம் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பனிகளுக்கு ஏற்றுமதி செய்தால் பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். தாது மணல் அந்நிய சந்தைக்கு நேரடி தொடர்புள்ளதால், அரசிற்கு ஆண்டிற்கு பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும், மேலும் granite கொள்கைகள் வகுப்பது போன்றவற்றை செய்வதால் பல ஆயிரம் கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும், அதே போல பல கனிம வளங்கள் சந்தையை அதிமுக டார்கட் செய்யும், இதன் மூலம் அரசின் கடன்களை அடைத்து, பல வளர்ச்சி திட்டங்களும் மேற்கொள்ளப்படும். இதற்கு மேல் திமுக தேர்தல் அறிக்கை விட முடியாது, அல்லது கூடுதலாக சேர்த்து சொல்ல முடியாது, சொன்னால் ரொம்ப அசிங்கம், காரி காரி துப்புவார்கள். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏன் இதை செய்யவில்லை என்று பல திமுக சொம்புகள் கூறினார்கள். ஐந்து ஆண்டுகளில் செய்ய முடிந்ததை தான் செய்ய முடியும். வயிறு பிடிக்கும் அளவிற்கு தான் சாப்பிட முடியும் என்ற அறிவு கூட கிடையாதா? மேலும் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட தயாரிக்கவில்லை என்கிறார்கள். அதிமுக பதவியேற்று முதல் மூன்று வருடம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி புரிந்தது, அதிமுக நிறுவிய பல அனல் மின் நிலையங்கள், திமுகவின் நெருக்கடியால் சுற்று சூழல் அனுமதி வழங்காமல் அனுமதி மறுத்தது. மேலும் இப்போது பல அனல் மின் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வர போகிறது, அதன் மூலம் 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்க போகிறது. மேலும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குகிறார்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள், இதனால் மின் வாரியத்திற்கு நஷ்டம் என்கிறார்கள். மின்சாரம் தடை இன்றி கொடுத்தாலும் தவறு, மின்வெட்டு இருந்தாலும் தவறு. அதிமுக ஆட்சி பொறுப்பேற்று பல மின் வழி தடங்கள், மின் கடத்திகள், துணை மின் நிலையங்கள், மின் இழப்பு ஏற்படாத கடத்திகள் ஏற்படுத்தப்பட்டது, இதன் காரணமாக மற்ற மாநிலத்தில் இருந்து இங்கு மின்சாரத்தை அதிமுக வால் கொண்டுவர முடிகிறது. ஏன் அதிக விலை கொடுத்து கூட திமுகவால் மின் கொள்முதல் செய்ய முடியவில்லை? ஏன் 16 மணி நேரம் மின்வெட்டு இருந்தது? திமுக தோற்றால் அது மின்வெட்டு தான் காரணம் என்று ஏன் ஆர்க்காடு முழங்கினார்? இப்போது மின்வெட்டே இல்லை என்ற நிலைமையில் உள்ளோம். மேலும் பாசக அரசு தான் அடுத்த மூன்று வருடத்திற்கு இருக்க போகிறது, பாஜக அரசுடன் இணக்கமாக இருக்கும் அதிமுக அரசு மீண்டும் அமைந்தால் தான் நமக்கு தடை இல்லாமல் பல திட்டங்கள் நிறைவேற்ற முடியும். நிச்சயம் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும். மேலும் திமுக இன்னொரு தேர்தல் அறிக்கை விடவேண்டும் என்று தினமலரே எடுத்து கொடுக்கிறது. இன்று கருத்து கணிப்பு எடுங்கள், நிலைமை தலைகீழ் இருப்பதை உணரலாம். பல இடங்களில் அதிமுக தேர்தல் அறிக்கை பற்றி தான் பேச்சு, விவாதங்கள். 100 யூனிட் மின்சாரம், கடன்கள் தள்ளுபடி, மானியவிலையில் ஸ்கூட்டி, இலவச கைபேசி தான் இன்று மக்கள் பேசும் பேச்சு. திமுக தேர்தல் அறிக்கை புஸ் ஆகிவிட்டது. ஐயா நிருபரே திமுக தேர்தல் அறிக்கைக்கு சபாஷ் போட்ட நீங்கள், இதற்கு சபாஷ் போடவில்லையே ஏன்? இங்கு வேலூரில் கார்த்திக் என்கிற திமுக வேட்பாளருக்கு வாக்களிக்கபோவதாக கூறிவந்த ஒரு திமுக தொண்டனே அதிமுகவிற்கு வாக்களிக்கலாம் தவறு இல்லை என்கிற நிலைமைக்கு வந்துள்ளான், நாம் தமிழர் கட்சி வாக்களிக்கலாம் என்று இருந்த ஒரு நண்பர், தேர்தல் அறிக்கைக்கு பிறகு அதிமுகவிற்கு வாக்களிப்பேன் என்றார். ஆக இந்த தேர்தல் அறிக்கை மக்களிடயே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தான் இன்றைய ஐலைட். இப்படி தான் 2011 தேர்தல் பரப்புரையில், அதிமுக தேர்தல் அறிக்கை விட்ட பிறகு, தயாநிதி மாறன், அதிமுக திமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துவிட்டது, கலைஞர் சொல்லாத பிரிட்ஜ் கூட கொடுப்பார் என்றார், ஆனால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தேர்தல் அறிக்கை என்பது ஒரு முறை தான் மரியாதை, பல முறை விட்டால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  கருத்து கணிப்பு வந்தப்போவெல்லாம் துள்ளி குதிச்ச கொத்தடிமை பசங்க எல்லாம் கியூ கட்டி வரிசைல நிக்கிறானுக பொது கழிப்பிடத்துக்கு முந்தி. வழக்கம் போல நம்ம ஆளுங்க மூணு பேரு பிசியா டோக்கன் போட்டுக்கிட்டு இருக்கானுவ. ஐயோ ஐஸா.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  என்னை இப்புடி புலம்ப விட்டுட்டியே தினமலரே. என்னால இன்னும் அந்த அதிர்ச்சில இருந்து மீள முடில. என்ன பாத்துட்டு போயி நூறு பொண்ணுங்க ரிஜக்ட் பண்ணுனப்போ கூட நான் இவ்வளவு அதிர்ச்சி ஆனதில்ல. ஆனா நீயி? உம்மேல எவ்வளவு லவ்வு வெச்சு இருந்தன் உரைகல்லே, கடசில தலைல உளுந்திடிச்சே அந்த கல்லு. ம்ம் சொல்லு, நீ இப்புடி பண்ணி இருக்கலாமா? எவ்வளவு பேரு தும்பம் கொடுத்தாலும் நிமிந்து நிப்பேன்னு நெனச்சேனே, கடசில எனக்கு இப்புடி ஒரு துரோகத்த பண்ணிட்டியே மலரே. நீ இனி என்னதான் சமாதானம் சொன்னாலும் நான் எப்புடி இன்னிய நம்புவேன். உன்னிய பாக்கிரப்பொவெல்லாம் கம்பிளி பூச்சி ஊற மாறி இருக்கே, நான் என்ன பண்ணுவேன். சொல்லு, எதாச்சும் சமாதானம் சொல்லு எனக்கு.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  கருணா கூடாரம் கடும் அதிர்ச்சியில் இருக்கு. சும்மா சலசலன்னு பேசுன தொளபதி இந்த முறையும் தோல்வியான்னு ஒரஞ்சு போயி படுத்துட்டாப்ள. இப்போ பாருங்க கருணா க்ரூப் உடனே நாங்களும் இத கொடுக்கிறோம் அத கொடுக்கிரோம்ன்னு போங்கு புடிச்சு அறிவிப்பாங்க. அம்மாஜியோட ஆட்சியால் முடியாததை, அம்மஜியோட அடிமை அமைச்சர்கள் MLA க்கள் செய்ய முடியாததை இந்த ஒரே ஒரு தேர்தல் அறிக்கை செய்ஞ்சு முடிக்கும். சரியான பிரம்மாஸ்த்திரம் ஏவி இருக்கு அம்மாஜி. கொத்தடிமை கூடாரம் சில்லு சில்லா செதறி ஓடி போச்சு. கண்ணுக்கெட்டுன தூரம் வரை கொத்தடிமை பய ஒருத்தனியும் காணோம்.

 • sundeli siththar - Cary, USA

  இலவசங்களை அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இலவசங்கள் ஒழிக்கப்பட வேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement